Sunday 2 May 2010

உழைப்பாளர்கள் தின பேரணி வினவு தோழர்களுடன்


















மே தினம் அன்று வினவு தோழர்களுடன் புதுச்சேரி பேரணிக்கு சென்றேன். நான்கு மணிக்கு பேரணி என்று சொல்லி இருந்தார்கள் . பு ஜ தொ மு சார்பாக பேரணி அறிவித்து இருந்தார்கள்.தோழர்கள் வினவு தோழர் மேலும் மூன்று தோழர்களுடன் ஒரு அணியாய் சென்றோம் . பேரணிக்கு அனுமைதி மறுக்கப்பட்டு இருந்தது. CITU சங்கத்திற்கு அனுமதி வழங்கிய அரசு பு ஜ தோ மு சங்கத்திற்கு வழங்க வில்லை ஏன் என்றால் அவர்களுக்கே தெரிந்து உள்ளது யார் உண்மையாய் மக்களுக்காய் குரல் கொடுப்பார்கள் என்று தெரிகிறது .
ஒரு மே தின பேரணிக்கு தொழிலாளி வர்க்க தோழர்களுக்கு அனுமதி மறுக்கபடுகிறது என்றால் எந்த அளவு ஜனநாயக தேசத்தில் உள்ளோம்.

தோழர்கள் பேருந்து நிலையத்தில் மறியல் செய்தனர் 2000 தோழர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் செங்கொடி பறந்து கொண்டே இருந்தது. தோழர்களின் குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தைகள் கூட குரல் கொடுத்தது மிகுந்த எழுச்சியாய் இருந்தது. சிறிது நேரம் போக போக எழுச்சி அதிகரித்து கொண்டே இருந்தது . தாரை தப்பட்டை வைத்து தோழர்கள் போட்ட தாளம் உற்சாகமாய் இருந்தது. விண்ணை தாண்டி உற்சாக குரல்கள் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. மேலும் கிராஸ் செய்யப்படும் பாலம் மேலே தோழர்கள் பெரிய செங்கொடி வைத்து கொண்டிருந்தனர் .கீழே இருந்து பார்ப்பதற்கு மிகவும் எழுச்சிகரமாய் இருந்தது.

என்ன எனக்கு ஆச்சர்யம் அளித்தது என்றால் சிறு பிள்ளைகள் கூட போராட்டத்திலே களத்திலே இருக்கிறார்கள். போலீஸ் வாகனங்கள் வந்தது அனைவரையும் ஏற்றி கொண்டு சென்றனர் , குழந்தைகள் வயதிற்கு வந்த பெண்கள் அனைவரும் வீரத்துடன் ஏறினர் போராட்டம் அவர்கள் குருதியில் கலந்து இருக்கிறது என்றே சொல்வேன்.

பொதுவுடைமை அவர்களின் வாழ்க்கை தேவை. நம் நடுத்தர வர்க்கமோ அல்லது மேட்டுக்குடி வர்க்கம் போல அவர்கள் வாழ்க்கை சொகுசாய் இல்லை. நாமெல்லாம் பதிவுலகில் சவடால் பேசுவோம் களத்தில் இறங்க சொன்னால் வேலை இருக்கிறது என்போம். ஈழம் பற்றி எழுதுவோம் தெருவில் இறங்கி போரடுவோமானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த உழைக்கும் வர்க்க தோழர்களின் வாழ்கையே போரட்டாமாய் உள்ளது போராட்டம் என்பது அவர்கள் இயல்பு அவர்கள் வெகு இயல்பாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சரி நடுத்தரவர்க்கம் சொகுசாய் இருப்பது போல் மாயை இருந்தாலும் உண்மையில் அப்படி தான் இருக்கிறதா. மென் பொருள் வேலை செய்யும் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் பதிமூணு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட மணி நேரங்கள் உழைத்து அவர்கள் வாழ்க்கையே மிகுந்த மன நெருக்கடி உள்ளான வாழ்க்கை ஆகிறது. சரி மன அழுத்தத்தை குறைக்க I T துறையினர் டிஸ்கோதே பார்கள் செல்கின்றனர் மன நலன் உடல் நலன் பாதிக்க ஒருவிதத்தில் தான் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலேயே சுரண்டப்படும் வர்க்கம் நடுத்தர வர்க்கம் .

ஆனால் அடித்தட்டு மக்கள் போல் நேரடியாய் பாதிக்க படமால் இருப்பதால் போராட்டம் என்றால் நடுத்தர வர்க்கம் வருவதில்லை . ஹிந்து பேப்பர் படித்து கொண்டு இவர்களை அவர்களை குறை சொல்லிக்கொண்டு என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று ஆனதை ஆசிரமத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததை பெருமையாய் பேசிக்கொண்டிருக்கிறது நடுத்தர வர்க்கம். கேட்டால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்கிறது நடுத்தர வர்க்கம். ஒரு பிச்சைக்காரன் வருகிறான் என்று வைத்துக்கொள்வோம் இன்று நம்மிடம் காசு உள்ளது ஐந்து ரூபாய் போடுகிறோம் நாளை காசு இல்லை என்றால் அந்த பிச்சைக்காரன் வேறு ஒருவனிடம் செல்வான், அதைப்போல் தான் உள்ளது இந்த NGO அமைப்புகள் மற்றும் பிச்சைக்காரனுக்கு 2 ருபாய் கொடுக்கும் நடுத்தர வர்க்க மனநிலை.இந்த மாதிரி தன்னால் முடிந்ததை செய்கிறேன் களத்தில் இறங்கி எல்லாம் போராட முடியாது என்கிறது நடுத்தர வர்க்கம். நான் நல்லவன் தான் ஆனால் கோழை என்கிறது. தவறு நடக்கும் பொழுது போரடதது கயமை தனம் அதனால் திருடன் என்று தான் சொல்ல முடியுமே தவிர போரடதவனை நல்லவன் என்று எப்படி சொல்ல முடியும்


நடுத்தர வர்க்கமும் களத்தில் இறங்கி போராடும் நாள் வரும் .அணுகுண்டு வெளியே வெடித்து சிதறவது போல மக்கள் எழுச்சி இருக்கத்தான் போகிறது . நடுத்தரவர்க்கம் தன்னை சுயநீக்கம் செய்துகொண்டு தொழிலாளிகளோடு போராடவேண்டும். IPL வெற்றிக்கும் உலகக்கோப்பை வெற்றிக்கும் கைதட்டும் இளைஞன் விதர்பா விவசாயப்படுகொலைக்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும் களத்தில் இறங்கி போராட வேண்டும். எனக்கு ஒரு மார்க்ஸ் புத்தகம் படித்தால் ஏற்ப்படும் எழுச்சியை விட அங்கு பல ஐந்து வயது சிறுவர்கள் போராட்ட களத்திலே குரல் கொடுத்தது மார்சியத்தை எனக்கு தெளிவாய் புரிய வைத்தது. என்னை விட அந்த சிறுவனுக்கு மார்சியம் என்றால் என்ன என்று தெரியும். மார்சியம் களப்பணி, மது அறிந்திகொண்டு பேசும் இலக்கியம் அல்ல, மக்களுக்கான பணியே மக்களுக்கான இலக்கியம் .

2 comments:

Dr.Rudhran said...

என்னை விட அந்த சிறுவனுக்கு மார்சியம் என்றால் என்ன என்று தெரியும். மார்சியம் களப்பணி, மது அறிந்திகொண்டு பேசும் இலக்கியம் அல்ல, மக்களுக்கான பணியே மக்களுக்கான இலக்கியம் .
i salute and accept in shame.

தமிழ்போராளி said...

முதலில் அந்த சிறுவனின் பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். சிறுவயது முதல் தன் பிள்ளைகளை அனைத்து பெற்றோர்களும் பகுத்தறிவையும் போராடும் குணத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.