Tuesday, 8 December 2009

இறந்த பின்பு ஆவிகளாக ......!
















நான் பேசிய
வார்த்தை அவள் வார்த்தையோடு
முத்தமிட்டுக்கொண்டது காற்றில் ....!
நான் பார்த்த முதல் பார்வை நொடி ...
எங்கோ என் கவிதையில் பதிவு செய்யப்பட்டு இருந்தது....!
நொடிக்கு நொடி அவள் வீட்டுத் தெருவில்
நடந்த கால்கள் காலடிகளை விட்டுச் சென்றன ....!
சுவடுகள் உயிரோடு இருக்கின்றன.....
உதடுகள் உயிரோடு இல்லை வார்த்தைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன...!
ஏய் காதலியே .....
என்றாவது ஒரு நாள் சந்திக்க வேண்டும் அதே தெருவில் ....
இறந்த பின்பு ஆவிகளாக ......!

பின் குறிப்பு:
இது ஐம்பதாவது பதிவு

Monday, 7 December 2009

நீரோ மன்னனும், இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசியும்



















நீரோ மன்னன் ரோம் பற்றி எரிந்த போது வயலின் வாசித்துக் கொண்டிருந்தவன்.கலைஞர் விழா நடுத்துவது தனக்கு தானே விருதுகள் கொடுப்பது அதைப் போலவே உள்ளன.நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சாரம் நான்கு மணி நேரம் கிடையாது.ஆனால் கலைஞர் பிறந்தநாளோ அழகிரி பிறந்த நாளோ என்றால் மின்னொளி போட்டி. அதை நடத்துவது கலைஞர் பேரன் துரை தயாநிதி.மதுரையில் உள்ள முக்கிய ஆட்டக்கார்கள் அவர் அணியில் ஆடுவார்கள்,ஜெயிப்பது அவர்கள் அணியே .

மின்சாரம் இல்லையாம் மின்னொளி போட்டி தேவையா. அதே நேரத்தில் சென்னையில் நடந்த போட்டியிலும் கலைஞர் பேரனே ஜெயிப்பார். சரி பேருந்து பிரச்சனைக்கு வருவோம்,நான் மதுரை எங்க ஊர் கிழவிகள் 50 பைசா கூட இருந்தாலே அரை மணி நேரம் காத்து இருந்து போபவர்கள். மதுரை சுற்றி சொகுசு பேருந்து மட்டுமே ஓடுகிறது. பணக்காரன் மட்டும் தான் பேருந்தில் செல்ல வேண்டுமா என்ன????

என்ன கொடுமை?????பாவம் எங்க ஊரு கிழவிகள்.காலை காய்கறிகளை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு செல்லும் கிழவிக்கு கிடைப்பது சொற்பமே அதையும் பிடுங்கி விடுகிறார்கள்.மக்கள் வரிப் பணம் யாருக்கு போகிறது. கமலஹாசன் ஏதோ சினிமா சம்பந்தமான விழா எடுப்பாராம்,அதற்கு ஐம்பது லட்சம் தருவாராம்,ஏன் கமலிடம் காசு இல்லையா.கமல் வருமான வரி கூட கட்ட மாட்டாராம்.....கேள்வி.சினிமா எடுப்பவர்கள் ஏழையா எதற்கு வருமான வரி. புதிதாக மகள் பிறக்கிறது ஒருவனுக்கு அவன் தமிழிலே பெயர் வைக்கிறான் அவனுக்கு வருமான வரி விளக்கு தருவாரா? "மானாட மயிலாட' இவர் தமிழிலே பெயர் வைத்தது,நமீதா எவ்வளவு அழகாய் தமிழ் பேசுகிறார் பார்த்தோமே. அதைப் போல ஆட்ட நிகழ்ச்சிகள் தமிழிலே கலாச்சார படுகொலை செய்கின்றன.

சரி தமிழ் அறிஞர் என்று சொல்கிறார்.தமிழ் நன்றாய் தெரிந்தவர் தான் ஆனால் அவர் தான் தமிழ் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் லியாகத் அலி கான் கூட தான் நன்றாய் வசனம் எழுதுகிறார். புத்தக கண்காட்சியில் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும் ,அண்ணா அறிவாலயம் ஸ்டால் கூட்டமே இல்லாமல் இருக்கும்.சில புத்தகங்கள் எழுதியதாலேயே அவர் தான் தமிழ் என்று சொல்ல முடியாது. புத்தகம் அதிகம் படிப்பவர்கள் கூட கலைஞர் கண்டால் ஓடுகிறார்கள்.

உளியின் ஓசை சிறந்த வசனமாம்,கொடுமை. கமல் கலைஞரை பார்த்துதான் திரைக்கதை எழுத கற்று கொண்டதாக கதை விடுகிறார். ஏன் கமல் கலைஞர் வசனத்தில் இன்னும் நடிக்கவில்லை,அரசியல் புரிகிறதா நண்பர்களே.கலைஞர் விழா எடுப்பதும் அனைவரும் புகழ்ந்து பாடுவதும் "இம்சை அரசன் 23 புலிகேசி" நியாபகப்படுத்துகிறது.சரி அதை விட கனிமொழியை கவிஞர் கவிஞர் என்று சொல்கிறார்களே.அவர் கவிதை புத்தகம் எங்கு கிடைக்கிறது.அப்படி எத்தனை புத்தகம் எழுதி விட்டார். இப்படி அரசியல் பண்ணி தான் தலைவருக்கும் கலைஞர் பட்டம் கிடைத்திருக்குமோ??????சரி கலைங்கராய் இருங்கள் எப்பொழுது முதவராய் பணியை செய்யப்போறீர்கள். சரி நீங்கள் 'பெண் சிங்கம்' வசனம் எழுதவதில் இருப்பீர்கள்.

படம் முடிந்ததும் வட்டம் மாவட்டம் எல்லாரிடம் நூறு நூறு டிக்கெட் அவர்கள் செலவிலே எடுக்க சொல்லி கொடுமை செய்வீர்கள்.'கள்ளிக்காட்டு இதிகாசம்' படித்து உச்சத்தில் இருந்த வைரமுத்து,இறங்கிக் கொண்டே இருக்கிறார்,என் மனதில்
எனக்கு உங்களை புகழும் வைரமுத்து வாலி பார்க்கும் பொழுது 23 புலிகேசி படத்தில் இருவர் புலிகேசியை பாராட்டிக்கொண்டே இருப்பார்களே அவர்கள் நியாபகம் வருகிறார்கள். நான் இப்பொழுது எல்லாம் வைரமுத்து வாலி படிப்பதில்லை.

Friday, 4 December 2009

சாரு நரசிம் அரவிந்த் நான் - சாருவின் புது அடி ஆள்
























மிக பெரிய நட்சத்திர பதிவர் நரசிம் என்னை அறிமுக படுத்தியதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்கிறேன்.முதலில் என் உயிர் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் என்னை அறிமுக படுத்தினான்.அரவிந்தும் சரி நர்சிமும் சரி சாருவின் வாரிசுகள். நரசிம் ஒரு புத்தகம் வெளியிட போகிறார் அய்யனார் கம்மா. தலைவர் சாரு போல மிகப்பெரிய ஆளுமையாக வர வாழ்த்துக்கள்.நரசிம் புத்தக வெளியீடு பற்றி பார்க்க


என்ன பெரிய விஷயம் என்றால் சாரு நரசிம் சங்க இலக்கியம் பற்றி எழுதியதை அவர் பதிவில் எழுதி இருந்தார் அன்று நரசிம் என்னைப் பற்றி எழுதி இருந்தார்.இதைப் போல் உயிர் நண்பன் அரவிந்த் யோகி பற்றி எழுதி இருந்தான். அந்த யோகி பதிவில் என் பெயர் இடம் பெற்று இருந்தது.


எனக்கு முன்பெல்லாம் சாரு என்றாலே பிடிக்காது அவருக்கு இளையராஜா பிடிக்காது அதனால் பிடிக்காமல் இருந்தது. போக போக சாரு மீது ஒரு இனம் புரியாத அன்பு. மனிதர் என்றால் நேர்மை போலி இல்லாத அன்பு அப்பா வியப்பாய் இருக்கிறது.கமல் என்றால் எல்லாரும் பாராட்டுவார்கள் சாரு திட்டுவார் வெறும் விளம்பரத்திற்கு அல்ல,கமலிடம் அவர் கேட்கும் ஒரு கேள்விக்கும் கமலால் பதில் சொல்ல முடியாது."தலைவன் இருக்கிறான்" என்ற படத் தலைப்பு "உன்னைப் போல் ஒருவன்" ஆனது .

அது தான் சாருவின் ஆளுமை. existentialism fancy baniyan புத்தகம் படித்தேன்.அது சாருவின் வாழ்க்கை வரலாறு என்று வாசகனுக்கு தெரியும்.இருந்தாலும் ஓரினச்சேர்க்கை பற்றி எழுதி இருப்பார்.

பதிவு எழுதும் நான் கூட நல்லவன் என்று தான் வேஷம் போடுவேன். தன் செக்ஸ் வாழ்க்கையை பற்றி எழுத யாருக்காவது தைரியம் உண்டா.கமல் சொன்னால் அப்படியே கேட்காமல் அது தவறு என்று சுட்டிக்காட்டும் ஆளுமை உண்டா. மனுஷியா புத்திரன் என்றாலும் அவரையும் கிழிப்பார் என் சாரு. தன் புத்தகம் வெளி ஆக வேண்டும் என்று ஜால்ரா போட மாட்டார். அவருக்கு ஜால்ரா அடியாள் என்றால் நானும் சேர்ந்து கொள்வேன்.

நரசிம் பதிவு பற்றி சாரு எழுதி இருந்த போது அதில் என் அதிர்ஷ்டமாக நரசிம் எழுதிய வேறு பதிவில் நான் இருந்தேன். அதே போல் அரவிந்த் எழுதிய பதிவில் சாரு சொல்லி இருந்த பதிவில் என் பெயர் உண்டு . சாரு சொல்லித் தான் dostovesky தெரியும் வெண்ணிற இரவுகள் என்று பெயர் வைத்தேன்.சாரு பார்க்காத சாருவிடம் விடயம் கற்றுக்கொண்ட 'ஏகலைவன்'.

எவ்வளவு பெரிய எழுத்தாளர் நான் எழுதினால் அழகாய் பதில் போடுவார்,ஆனால் எனக்கு பின்னூட்டம் எழுதியவருக்கு பதில் போட கூட நேரம் இல்லை,யார் பெரிய ஆள். சாரு ஒரு ஆளுமை,அவரின் புது அடியாள் அடியேனே. ஒரு தலைக்கு வாலாக இருப்பது தப்பில்லை.
எனக்கு ராமகிருஷ்ணன் கூட பிடிக்கும் ஆனால் அவர் படிக்கும் போது மிக நல்லவர் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் சாரு ஒரு குழந்தை ஒரு காட்டாறு,சாருவை புரிந்து கொண்டாலே நீ அனைத்து இலக்கியம் படித்த மாதிரி.சாரு உலக இலக்கியத்தின் சாறு.அடியாளாக இருப்பதில் பெருமை.

சாருவை பிடிக்காதவர்கள் சாரு சொல்லும் உண்மையை ஜீரணிக்க முடியாதவர்கள் .இருந்தாலும் தினமும் அவர் வலை தளத்தை மேய்பவர்கள்.galileo வை பைத்தியம் என்று தான் சொன்னார்கள்.பாரதி அவர் சம காலத்தில் கோமாளியாகவே
பார்க்கப்பட்டார். சாரு கலியுக பாரதி. இலக்கியத்தில் அழகு என்பதை விட ஆணித்தனமான உண்மை இருக்கும்.ஒரு ஜால்ரா போட தெரியாதவனுக்கு ஜால்ரா போடுவது தப்பு இல்லை. அவரின் பெருமைக்குரிய அடி ஆள் வெண்ணிற இரவுகள் கார்த்திக்

Thursday, 3 December 2009

குளிக்க முடியாத நீர் வீழ்ச்சி


விரலோரம்
நீர் வீழ்ச்சியாய் கவிதைகள் .....!
நடமாடும் நீர்வீழ்ச்சியாக
நீ மழையில்.....!

உன்னைப் பார்த்த மேகங்கள்
பொத்துக்கொண்டு வந்தது மழையாக
தன் காதலை சொல்ல...!

உன் மேல் விழுந்த நீர்
துளிகள் தரை இறங்குவது இல்லை...
நீ தட்டி விடும் வரை .......!
கோபப்பட்ட வெய்யில் நீரை
நிர்மூலம் ஆக்கியது ...!

நீர்வீழ்ச்சி பார்த்த நான் வீழ்ச்சி ....!

உணர்வு வரையும் ஓவியம்
















பெயர் நிலவன் நிலவு சூரியனின் ஒளியை உள் வாங்கி வெளுச்சம் கொடுக்கிறது.நிலவனுக்கு ராமேஸ்வரம் பார்வையற்றோர் கல்லூரி ஒளி ஊட்டிக்கொண்டிருந்தது.ஆம் அவன் பார்த்த ஒரே நிறம் கருப்பு. நிறங்களை பார்த்ததை விட உணர்ந்ததே அதிகம். சுளீர் என்று வெய்யில் அடித்தால் மஞ்சள் நிறம் உணர்வான்.மழை அடித்தால் வானத்தின் வர்ணம் கருப்பு என்று உணர்வான்.நெல் வாசம் முகர்ந்தால் பச்சை நிறம் உணர்வான். ரத்தம் வந்தால் சிகப்பு நிறம் உணர்வான். நிறத்தை பார்த்ததை விட உணர்திருந்தான்.

நிலவனுக்கு யாரவது அவனை கண் இல்லாதவன் என்று சொன்னால் பிடிக்காது. "ஐயோ பாவம் " என்ற சொல் பிடிக்காது.ஒருமுறை ஒருவர் அப்படி சொல்ல "கண் இருந்து மூலதனம் புத்தகம் படித்தாயா,ரஷ்ய இலக்கியம் தெரியுமா,எனக்கு தெரியும் " என்பான்."நான் பார்க்க மாட்டேன் உணர்வேன்,நீ உணர மாட்டாய் பார்த்து மட்டும் கொண்டிருப்பாய்" என்பான்."பார்வை இல்லாதவனுக்கு ஆயிரம் வர்ணம்" என்பான்.தத்துவங்கள் வந்து கொண்டே இருக்கும்,எழுதினால் இன்னொரு தாய் காவியம் படைக்க கூடிய திறமை அவனிடம் இருந்தது.

பார்வையற்றோருக்கான தேர்வு நாள். சூர்யா அவனுக்காக பரீட்சை எழுத வந்த பெண். ஒரு கால் ஊனம் .இலங்கை பெண்,அகதி முகாமில் இருந்து வந்த தமிழ் பெண். பெண் புலியாக சில காலம் இருந்த போது சண்டையில் அவள் கால் பரி போனது.நிலவனுக்காக பரீட்சை எழுத வந்திருந்தாள்.

பரிட்சையில் பரிச்சியம்,பின் வாரம் ஒரு முறை நிலவனை பார்க்க வருவாள். வாரம் நாட்களாக மாறின,நாட்கள் நிமிடங்களாக மாறின.நிமிடம் நொடியாய் மாறின. தினமும் நிலவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். நிலவனின் ஆளுமை அவளுக்கு பிடித்து இருந்தது. அவன் பார்வையாக மாறத் தொடங்கி இருந்தாள். அவனிடம் ஒரு நாள் " என்னைய கல்யாணம் ..." என்று ஆரம்பித்தாள். "என்னய பார்த்து பரிதாப பட்டு லவ் பண்றியா" என்றான். "இல்லை பிரமித்து தான் லவ் பண்றேன்" என்றாள்."எனக்கு பரிதாப படறது
பிடிக்காது" என்றான். "நான் பரிதாப படல லவ் பண்றேன்" என்றாள்.

இவனுக்கும் அவளை பிடித்து இருந்தது. அவளின் காலாக இவன் மாறினான், இவன் கண்ணாக அவள் மாறினாள். ஆம் நிலவிற்கு சூரியன் வெளுச்சம் கொடுத்தது.முதன் முதலாக இவன் காதல் நிறமான நீல நிறத்தை உணர்ந்தான்.அவன் உணர்வு நீலத்திலே வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தது. உணர்வு வரையும் ஓவியம் எவ்வளவு அழகானது.


பின்குறிப்பு :

இன்று "world physically challenged " நாள் அவர்களுக்கு அர்ப்பணிப்பு ....

Wednesday, 2 December 2009

நண்பன் டா மாப்ள


















'நன்றி' சொன்னேன்
'பன்றி' என்றான் .....................
'மன்னித்து விடு' என்றேன் .
'இப்படி சொன்னதை மன்னிக்கவே முடியாது' என்றான் ..............
'மரியாதையாய் தானே பேசுகிறேன்' என்றேன்................
'மரியாதையாய் பேசுவது நட்பிற்கு மரியாதையை இல்லை' என்றான் ........
'உன் பெயர் என்ன ' என்று கேட்டேன்
'நண்பன் டா மாப்ள' என்றான் .....!

Tuesday, 1 December 2009

நிலா சன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்























காடு அவன் வீடு.ஆம் இருள் ஒரு மலை ஜாதி வகுப்பை சேர்ந்தவன். பிறந்தது முதல் அவன் வானம் பார்த்ததை விட மேல் நோக்கி பார்த்தால் மரங்கள் பார்த்ததே அதிகம்.காட்டிலிருந்து ஒரு நாள் கூட அவன் மருத்துவனிடம் சென்றதில்லை.ஏதாவது அடி பட்டால் ஒரு இலையை பிடுங்குவான் சாரை பிழிவான்,வலி பறந்து ஓடும். ஜலதோஷம் பிடித்தால் தைல மரங்கள் இருக்கும் பகுதிக்கு செல்வான் இலையை முகர்ந்து பார்ப்பான் சரியாகி விடும். aids போன்ற பால் வினை நோய்க்கு கூட என்ன மருந்து என்று அவனால் சொல்ல முடியும்.அவனுக்கு தெரிந்த காட்டு சித்தருக்கு மூலிகைகளை ஆராய்ச்சி பண்ணுவதே வேலை . மரங்களுடன் பேசிக்கொண்டிருப்பார். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் அவரிடம் வருவார்கள்.

இருள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.இருளின் மனைவி நிலா,ஆம்
இருளுக்கும் நிலாவிற்கும் எத்தனை பொருத்தம்.மலை அவன் கடவுள்,அவன் அன்னை இவன் பிறக்கும் போது இவனை மலையிடம் ஒப்படைத்து விட்டு வான் நோக்கி சென்றால். அன்று முதல் மலை இவனை பார்த்துக்கொண்டிருந்தது.வயற்று வலி என்றால் ஓம இலை சாப்பிடுவான். முடி உதிர்ந்தால் கத்தாழை தலை மீது தேய்ப்பான்.மலையோடு சேர்ந்த மரமாக ஓட்டிக்கொண்டிருந்தான். மரம் ஒரே இடத்திலே நின்று கொண்டிருந்தது,இவன் நடந்து கொண்டிருந்தான் வித்யாசம் அவ்வளவே.

ஆம் வாழ்க்கை ஒரு கவிதையாய் சென்று கொண்டிருந்தது. அரசு சார்பாக சிலர் இருளை நோக்கி வந்தனர்.அரசு ஒரு சட்டம் போட்டிருக்கிறது,இலவச வீடு படிப்பு வேலை எல்லாம் தருகிறது,உங்கள் வாழ்க்கை தரம் உயரும் என்று சொன்னார்கள்.பக்கத்தில் உள்ள நகர் பகுதிக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள்.இவனுக்கு காட்டை விட்டு வர மனமில்லை.ஆனாலும் நிலா சொன்னாள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று,சரி என்று தலையை ஆட்டினான் .

நகர்ப்புறம் இவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரே புகை,இவனுக்கு உடம்பிற்கு ஒத்து வரவில்லை.மனிதர்களின் மனதும் புகை படிந்தே இருந்தது,அது இவன் மனதிற்கு ஒத்து வர வில்லை.மரங்கள் வளர்க்காமல் வீட்டிலே காகித பூக்கள் வளர்ப்பதை பார்த்தான் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை சுற்றி இப்போழுது மரங்கள் இல்லை,சுற்றி கட்டிடங்கள் அதற்குள் சிறை வைத்ததை போல உணர்ந்தான்.மானிடத்தின் இயற்க்கை கற்பழிப்பை மனதால்
உணர்ந்தான்.

மனிதர்கள் காலை வேலை முடித்து விட்டு அனைவரும் சிறைச்சாலைக்கு போய் ஒளிவதாக உணர்ந்தான். ஆம் அவன் சொன்ன சிறைச்சாலை பெயர் வீடு. பக்கத்தில் கொலை நடந்தால் கூட என்ன என்று கேட்காமல் வேலைக்கு செல்லும் கனவான்கள் பார்த்து வேடிக்கயாய் இருந்தது.அரசு அவனுக்கு ஆட்டோ பயிற்சி வழங்கி இலவச ஆட்டோ கொடுத்தது. இலவச வீடு, நிலா சன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.நிலாவிடம் இருளுக்கு நெருக்கம் இல்லை, இப்பொழுது எல்லாம் அவனுக்கு அம்மாவசை தான்.

இப்பொழுது எல்லாம் மருத்தவரிடம் செல்கிறான்.அவனுக்கு நோய் பல அறிமுகம் ஆகின. சிக்கன் குனியா ,swine போன்ற காய்ச்சல்களை பரப்பி விட்டு கல்லா நிரப்பிக்கொண்டிருந்தது மருத்துவத்துறை.

உடம்பு சரி இல்லை என்று நிலாவிடம் மருந்து கேட்டான். நிலா சன் டிவி பார்த்துக்கொண்டே இருந்தாள் .ஆம் இவன் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது