Monday, 14 December 2009

எந்த மழைத் துளியும் நனைவதில்லை





















எந்த மழைத் துளியும்
நனைவதில்லை ....!
எந்த வெயிலும் சுடுபடுவதில்லை ...!

கண் இருக்கும்
மனிதன் தன் பார்க்க முடியாது .....
பார்த்தேன் என்னை பெண் பாலாய்.....!
என் கண் மோதும் போது....
என் கண்ணே என்னை பார்த்தது ....
உன் கண்ணில் ......

மழை நனைந்தது
வெயில் சுடப்பட்டது...
என் கண் என் கண்ணை பார்த்தது ....
தன்னிலை அறிவதே ஆன்மிகம் ....!

ஒரு முறை காதலித்து விடு .....
தன்னிலை அறிய வேண்டும் ...!

Sunday, 13 December 2009

தோற்றமயக்கம்
















மணி எட்டு இந்த நொடி,
அடுத்த நொடி வரை,
தோற்ற மயக்கமாய் காலன்
நொடிக்கு நொடி வரைந்து
அழித்துக் கொண்டே இருக்கிறான்...!
திமிராய் நான் கண்ணாடி
முன் சொன்னேன் நான் உண்மை நீ பிம்பம் என்று ....!
அது எத்தனை பிம்பத்தை பார்த்திருக்கும் ...
நீயும் பிம்பமே முட்டாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டது.
மணி எட்டு இந்த நொடி,
அடுத்த நொடி வரை,
தோற்றமயக்கம் .....!

பின்குறிப்பு:
உரையாடல் போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை

Saturday, 12 December 2009

சாருவிற்கு வாழ்த்துக்கள்

















நேற்று புத்தகம் வெளியீட்டு விழா,சாருவின் புத்தகங்கள்.

1. கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும் , அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்கின்றன .

ரூ. 230/-



2. வாழ்வது எப்படி ?

வாழ்வின் எளிமையான, சுவாரசியமான சம்பவங்களை சாரு நிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன் , கனிமொழி , பீர்பால் , வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வேவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன .

ரூ. 50/-



3. கெட்ட வார்த்தை

சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.

ரூ. 150/-



4. மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய , ஆப்பிரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சார தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவியிலிருந்து ஆனந்த் அண்ணாமலை எழுதிய கடிதங்களை சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு அதற்கு பதிலும் எழுதினார். அதன் தொகுப்பே இந்த நூல் .

விலை: ரூ.140/-




5 நரகத்திலிருந்து ஒரு குரல்


சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயற்சிக்கும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைபூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.

விலை: ரூ.120/-


5.அருகில் வராதே

வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இது. இவை வினா-விடைகள் என்தைவிட சாரு தனது வாசகர்ளுடன் தொடர்ந்து நடத்திவரும் நீண்ட உரையாடலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். முகமற்ற வாசகர் களின் கேள்விகளுக்கு சொல்லப்படும் பொதுவான பதில்களிலிருந்து மாறுபட்ட இந்த நூல் ஒரு அந்தரங்கமான தொனியை உருவாக்குகிறது.

விலை: ரூ.120/-



7 அதிகாரம் அமைதி சுதந்திரம்

சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் , தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன .

விலை: ரூ.40/-




8. கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்

சாரு நிவேதிதாவின் இலக்கிய – தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்துபட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல; அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.

விலை: ரூ.115/-




9 ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்படட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.

விலை: ரூ.85/-


10.ரெண்டாம் ஆட்டம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ ரெண்டாம் ஆட்டம் ’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், அகஸ்தோ போவாலின் ’ கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர் ’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன் எப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை

விலை: ரூ. 50/-


சில சொந்த காரணங்களால் போக முடியவில்லை.சளைக்காமல் பத்து புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் புத்தகம் எழுதி கொண்டே இருக்கிறார் அவர் புத்தகம் பற்றி
பேசாமல் அவரை எதிர்த்து கொண்டே இருக்கின்றனர் நேற்று என் வலைப்பூவை வேறு சாரு தன் வலைத்தளத்தில் ஏற்றி இருந்தார்.இது மிக பெரிய அங்கிகாரம்.சாரு வளர்த்து வளர்ந்தவர்கள் நிறைய பேர். இதை சாருவின் அடி ஆள் என்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே.சாரு ஒரு கோமாளி என்பது அதை நீங்கள் படித்தால் நீங்கள் எவ்வளவு பெரிய கோமாளி???அதுவும் என் போன்ற ஜால்றவிற்கு ஏன் பின்னூட்டம் போடா வேண்டும்.....அப்பொழுது நீங்கள் ஜால்றவையே அங்கிகாரம் செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம். பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்.

நான் சாரு என்றால் படிப்பேன்.எனக்கு நிறைய மாற்று கருத்து உண்டு ,ஆனாலும் படிப்பேன். நீங்கள் சொல்வது எல்லாம் மாற்று கருத்தாய் தெரியவில்லை சாரு என்கிற தனிமனித எதிர்ப்பு தெரிகிறது நண்பர்களே.எதிர் கருத்து இருக்கலாம் ஆனால் ஒரு தனிமனித எதிர்ப்பு தவறு.சாருவிற்கு இளையராஜா பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கும் அதற்காக எல்லாம் சாருவை வெறுக்க முடியாது. ஏன் சாரு மேல் ஒரு சிலருக்கு அவ்வளவு ஆத்திரம்.அவர் மனதில் தோன்றுவதை சொல்கிறார் அது பிடிக்கவில்லை.

சாருவினால் நான் உளவியல் ரீதியாக நிறைய கற்றுகொண்டிருகிறேன்.நான் மேம்பட்டு இருக்கிறேன்,அது எனக்கு தெரியும்.எனக்கு உலக இலக்கியம் தெரியாது,உலக இலக்கியம் என்றால் என்ன படிக்கும் மனிதன் மனது மேம்பட வேண்டும் .எனக்கு சாருவினால்
சில உளவியல் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.என் பார்வை விசாலம் அடைந்து உள்ளது.நான் உண்மையை சொல்கிறேன். சாருவின் அடி ஆள் என்றால் ஆயிரம் பேர் பாராட்டினால் அதை விட ஐந்து மடங்கு எதிர்ப்பு வரும் என்று எனக்கு தெரியும்.அதற்காக எல்லாம் பயந்தால் முடியுமா.நான் மிகத்தெளிவானவன் என்று சொல்ல மாட்டேன். உலகில் மிகத்தெளிவானவன் என்று யாரும் இல்லை.நீங்கள் சொல்லும் இலக்கியவாதி கூட குப்பையாய் இருக்கலாம் நீங்கள் தெளிவில்லாமல் இருக்கலாமே?????நான் மேம்படிருக்கிறேன் நான் பாரதி பார்த்தது இல்லை......

எனக்கும் சாரு மீது மாற்று கருத்துக்கள் உண்டு.நிறைய கேள்விகளும் உண்டு??? இளையராஜா ஏன் பிடிக்காது.அமீரை சொன்னவர் ஏன் மிஸ்கின் நந்தலாலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என்று கேள்விகள் எழும்.நான் அல்லக்கை இல்லை????நீங்கள் சொல்கிறீர்கள் நான் அப்படி தான் என்கிறேன். சாரு தவறாக எழுதியது என் கண்ணில் பட்டது என்றால் கேட்பேன்.......ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதாலேயே அல்லக்கை என்று சொல்ல கூடாது.

ஏன் அவர் எழுத்தை பற்றி விசாரிக்காமல் அவரை மட்டும் பற்றி கவலை படுகிறீர்கள் ......நான் அவரின் வாசகன்.....நீங்கள் நினைத்தால் அடி ஆள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்.

Friday, 11 December 2009

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்

















ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந்த அறுபது வயதில் நாம் ஒரு நல்ல நடிகனை இழந்திருக்கிறோம்,ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்திருக்கிறார்.ரஜினி நடித்த படங்களில் எனக்கு பிடித்தது நடித்ததில் சிறந்தது 'ஆறிலிருந்து அறுபது வரை'.ரஜினி வசூல் ராஜாவாய் இருக்கிறார் அதை போல் இப்பொழுது அவரால் நடிக்க முடியாது. இன்று அவருக்கு அகவை அறுபது. நடிகனை இழந்திருக்கிறோம் நாம்.

ரஜினி அற்புதமாய் நடித்த படங்கள் பல.அதில் 'முள்ளும் மலரும்' மிகவும் பிடித்த படம் .தனக்கும் தங்கைக்கும் இடையில் ஒரு காதலன் வருவான் ரஜினியால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அண்ணன் தங்கை உறவை நுட்பமாய் செதுக்கிய படம். என்னைப்பொருத்தவரை 'முள்ளும் மலரும்' உலக சினிமா. ரஜினி நடித்த ஒரே காதல் படம் 'புதுக்கவிதை'.பெரிய நடிகர் என்றால் நகைச்சுவை நடிப்பில் குழந்தையை போல் மாறி விடுவார்.'தில்லு முல்லு' ஒரு சிறந்த உதாரணம்.குழந்தைகளுக்கு இன்று ரஜினியை பிடிப்பதற்கு காரணம் அவர் நகைச்சுவை பிம்பமே தவிர சூப்பர் ஸ்டார் பிம்பம் இல்லை.

என்னை பொறுத்தவரை கமலை விட ரஜினி சிறந்த நடிகர். கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார். 'தளபதி' படத்தில் சின்னத்தாயவள் பாடலில் கொஞ்சமாய் வாய் திறப்பார் அது நடிப்பின் சிறந்த உதாரணம்.ரஜினி 'ஒரு கூட்டு கிளியாக' பாடலில் தம்பியாக இருப்பார்,காண்போர் அனைவரும் தன்னை தம்பியை உணர்வார்கள்.'நாம்மை போல அண்ணன் தம்பி' என்று பிரபுவை பார்த்து பாடும் போது நாம் அண்ணனாய் உணர்வோம்.ரஜினி நடிப்பு நம் கலாச்சாரத்தோடு இணைத்து இருக்கிறது.

'பாட்ஷா' இன்றும் நான் பிரமிக்கும் படம்.'நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ...' என்று சொல்லும் போது ..அதிரும் அரங்கம்.ஆனால் இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார் கதாநாயகனாய் அனைத்தும் செய்துவிட்டார். ஒரு நடிகனாய்,ஒரு நடிகனாக.........ஒரு நடிகனை நாம் இழந்து சூப்பர் ஸ்டார் பெற்று இருக்கிறோம்.

சத்யராஜ் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் காவேரி பிரச்சனை என்றால், ஹொகேனகல் பிரச்சனை என்றால் ரஜினியை கேட்காதீர்கள் முதல்வரை கேளுங்கள்,ரஜினி ஒரு நடிகர் மட்டுமே,யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேளுங்கள்,வீணான மலிவான விளம்பரம் செய்ய வேண்டாம்.


ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எப்பவுமே உச்சம் தான்.நீங்கள் ஏன் அமிதாப் வழியில் 'பா' போன்ற படத்தில் மாதவன் போன்றவருக்கு மகனாய் நடிக்ககூடாது. மாதவன், மீனா குழந்தையாக.சூப்பர் ஸ்டாரை நல்ல நடிகரை பார்க்க ஆசை. மீனா அங்கிள் என்று கூப்பிட்டு,அவரே கதாநாயகியாய் நடித்து,அவருடனே பிள்ளையாய் நடித்த பெருமை வருமே. நான் இயக்குனர் ஆனால் கட்டாயம் 'பா' படம் நீங்கள் நடிக்க வேண்டும் வாழ்த்துக்கள்.உங்களை நல்ல நடிகனாய் பார்க்க வேண்டும்

பொக்கிஷம் மற்றும் city of god ஏற்படுத்தும் ரசனை























போன பதிவு எழுதி இருந்தேன் அதற்கு கேபிள் சங்கர்,ஜெட்லி அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.அதற்காய் தனி பதிவு.முதலில் ஜெட்லி அவர்களே சினிமா பார்த்து யாரும் கெடுவதும் இல்லை திருந்துவதும் இல்லை என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு 'eek thuje keliye ' படம் தெரியுமா.அந்தப் படம் பார்த்து நூறு காதல் ஜோடிகள் இறந்து போனார்களாம். அதற்காக தான் பாலச்சந்தர் புன்னைகை மன்னன் என்னும் பதத்தை எடுத்தார்.சினிமா ஒரு ஆளுமை தலைவரே.ரஜினி பார்த்து புகைதவர்கள் அதிகம்,ரெட் படம் வந்த போது கல்லூரியில் அதே போல மொட்டை போட்டு குங்குமம் வைத்தவரை எனக்கு தெரியும்.

'சிகப்பு ரோஜாக்கள்' வந்த போது அதை போலவே ஒருவன் கொலை செய்து இருக்கிறான்,நீ ஏன் கொலை செய்த என்று கேட்டதற்கு சிகப்பு ரோஜாக்கள் பார்த்து கொலை செய்தேன் என்று சொல்லி இருக்கிறான் இது வரலாறு. முதல் படம் திரையிட்ட போது திரையிலே ஒரு ரயில் ஓடி இருக்கிறது அதை பார்த்து அனைவரும் ஓடி இருக்கின்றனர்,திரைப்படம் ஒரு ஆளுமை நண்பரே.

'அக்னி நட்சத்திரம்' பார்த்து பீர் சாப்பிட்ட பெண்கள் இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்த பெண் பீர் குடித்து மாட்டிக்கொண்டாள்என்ன என்று கண்டித்த போது முதல் நாள் படம் பார்த்திருக்கிறாள்,அதன் தாக்கம். இங்கே சினிமா கடவுளை போன்றது ,அது
ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது.இங்கே ரஜினி அஜித் விஜய் போன்றவர்கள் கடவுள் பாமரனுக்கு.அவர்கள் எதை செய்தாலும் இங்கே அதே செய்யும் கூட்டம் உண்டு.

நீங்கள் இந்த செய்தி படித்தீர்களா என்று தெரியாது .சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு. ஒரு சிறுவன் அவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்டான். அதை மறைக்க நாய் வந்தால் மோப்பம் பிடிக்கும் என்று சிறுவர்களுக்கு பயம் அதனால் மிளகாய்பொடி தூவி இருக்கிறார்கள்....சொல்லித் தந்த படம் 'கில்லி'.இது உண்மை நண்பரே கொஞ்சம் நாள் முன்னாடி வந்த செய்தி. சிறுவர்களிடம் கொலை வெறியை ஏற்றி விடுவது சினிமா என்னும் ஊடகம். அடித்தால் தான் நாயகன் என்று இளமையிலேயே அவன் மனதில் விதைக்கபடுகிறது.நடை உடை பாவனை முதற்கொண்டு நாயகன் ஒரு சிறுவனை கவர்கிறான்.

அடுத்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களே,உங்களுக்கு திரைக்கதை பற்றி நான் சொல்லத் தேவை இல்லை. ஏன் வேகமாய் இருந்தால் தான் நல்ல திரைக்கதை என்று ஒத்துக்கொள்வீர்களா. பொக்கிஷம் படம் சிறிது அளவாவது கதையை மீறி சென்றதா. நீங்கள் கேட்கலாம் எல்லா கடிதத்தையும் படித்துக்காட்ட வேண்டுமா என்று. இப்பொழுதெல்லாம் போன் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது,காத்திருக்கும் தவிப்பு இல்லை. ஆனால் சேரன் சொன்ன காலத்தில் காத்திருக்கிறான் கடிதம் போய் சேர்ந்ததா என்று பார்க்கிறான்.தகவல் தொடர்பு இல்லை,அவன் கடிதம் எழுதுகிறானே அது தானே பொக்கிஷம் சங்கர். கடிதம் எழுதுவது தான் கதையே. அவன் கடிதம் கொண்டு சேர்க்க எவ்வளவு சிரம பட்டான்,என்பதில் தான் கதையின் உயிர் நாடி தலைவரே. கவிதை போல ஒரு படம்,கவிதை பிடிக்கவில்லை என்றால் நல்லா இல்லை என்று அர்த்தமா. இந்தக்கால காதலை இடையிடையே காண்பிப்பார்,இந்த காதலில் தினமும் பேசுவார்கள் ஆனால் ஆழம் இருக்காது.

காத்திருப்பது தான் காதல் ...அந்த காத்திருப்பு தான் திரைக்கதை.இந்த கதை இப்படி தான் இருக்கும் தலைவரே.அவன் எவ்வளவு ரசித்து எழுதினான் கடிதத்தை என்பதை அனைத்து வரிகளையும் காட்டுகிறார்,உணர்வுகளை காட்டுகிறார்.அவன் எழுதும் போது ஏற்படும் வலி, போஸ்ட் ஆபீசில் சீல் குத்தும் போது ஏற்படும் வலி ஒரு கவிதை .சினிமா தெரிந்த நீங்கள் போய் படம் திரைக்கதை நல்லா இல்லை என்று சொல்ல முடியாது. கவிதைகள் படிக்கும் போது மெதுவாகத் தான் படிக்க வேண்டும்.நீங்கள் திரைக்கதையில் வெற்றி பெற்ற படம் என்று சொல்லும் படங்களில் தேவை இல்லாத நகைச்சுவை காட்சி, சண்டைக் காட்சி இருக்கும்.பொக்கிஷம் படத்தில் அப்படி காட்சிகள் இருந்ததா......'கவிதைகள் மெதுவாக தான் படிக்க வேண்டும்' கேபிள் சங்கர் அவர்களே.

Thursday, 10 December 2009

உங்கள் வீட்டில் கூட 'city of god ' குழந்தை இருக்கலாம்













குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி 2012 படம் பார்த்தீர்களா. அதற்கு அவர் சொன்ன பதிலில் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் ,உலகில் உள்ள அனைவரும் இறந்து கொண்டிருக்க நாம் கதாநாயகன் தப்பிக்கவேண்டும் என்று படபடக்கிறோம் இது தான் 'director touch ' என்று எழுதி இருந்தார்.இந்த ரசனை சரியா அரசு அவர்களே.இது சுயநலம் என்னும் தளத்தில் அல்லவா இருக்கின்றது.அதே படத்தின் விளம்பரத்தை தினத்தந்தியில் பார்த்தேன் "குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களாம்" என்ன கொடுமை இது.

இப்பொழுது ரேணிகுண்டா என்னும் படம் வந்திருக்கிறது.படம் முழுக்க வன்முறை,ஏன் வன்முறை செய்பவன் தான் கதாநாயகனாய் இருக்க முடியுமா.அதற்கு ஆனந்த விகடனில் கொடுத்த மதிப்பெண் 43 . அந்த சிறுவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை கூட சரியாக காட்டவில்லை.கேட்டால் 'city of god ' படத்தை உதாரணம் சொல்கிறார்கள். ஏன் சுப்ரமணியபுரம் பருத்திவீரன் படங்களில் கூட வன்முறை கலந்து இருக்கிறது. heroism கொஞ்சம் அழகாய் சொல்கிறார்கள். ஊரில் வெட்டியாக இருக்கிற கதாநாயகன் அவனுக்கு ஒரு காதல் கேட்டால் யதார்த்த சினிமா என்பது. ஏன் under world வாழ்கையை படம் பிடித்தால் தான் யதார்த்தமா. இதற்கு அஜித் விஜய் போல் பாமரனுக்கு படம் பண்ணி விடலாம்.

சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் தலையை சீவும் போது அவர் மூஞ்சியில் ரத்தம் பீச்சீ அடிக்கும் அதற்கு அனைவரும் கை தட்டுகிறோம்,நம் ரசனை கீழ் தரமாய் போகிறது. அது மேம்பட்ட ரசனை போல நினைத்துக்கொள்கிறோம். ஹீரோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அடுத்தவன் மனைவியை பார்க்கும் கலாச்சாரத்தை ஹிந்தியில் ஷாருக் கான் படத்திற்கு படம் செய்கிறார்.

இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் 'யோகி' 'ரேணிகுண்டா' 'நான் அவன் இல்லை' இதில் எந்த நாயகனாவது நல்லவனா????சொல்லுங்கள். ஏன் உலக சினிமா பார்த்து நகல் எடுக்கிறார்களே children of heaven போன்ற படங்கள் இவர்கள் கண்களுக்கு தெரியாதா .....இவர்களை சொல்லியும் குத்தம் இல்லை....நம் சேரன் பொக்கிஷம் என்ற படம் எடுத்தார் அது 'the classic ' என்ற படத்தின் தழுவல். படம் பார்த்தவர்கள் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டார்கள் ஏன் என்றால் சேரன் கத்தி தூக்க வில்லை post box நனைய கூடாது என்று குடை பிடித்தார்.ரசிகர்கள் அதற்கு பெயர் மொக்கை என்று வைத்து விட்டனர் என்ன சொல்ல????

நீங்கள் வன்முறையை ரசித்தால் உங்களுக்குள் ஒரு மன நோயாளி இருக்கலாம்,இந்த ரசனையை வளர்க்க வேண்டாம்.ரசிகர்களே இது தப்பான ரசனை உங்கள் வீட்டில் கூட 'city of god ' குழந்தை இருக்கலாம்.

Wednesday, 9 December 2009

வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன




"நீ இல்லாம இருக்க முடியாது.." எத்தனையோ

முறை சொல்லிருக்கிறேன்..?

பிறந்தவுடன் தாய் கண்களை பார்த்து,

மூன்று வயதில் பொம்மையுடன்......

இரண்டாம் வகுப்பு ஆசிரியையிடம்...,

ஈர்ப்பிலே முதல் காதலியிடம்,

உயிர் நண்பனிடம்....

உயிர்த் தங்கை திவ்யாவிடம்..........



விடம் விடம் விடம் ......!
சொல்பவனும் கேட்பவனும் உயிருடன் இல்லை ....
வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன .... !



பின் குறிப்பு:
இது போன கவிதை மாதிரியே இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.இது முதலில் எழுதப்பட்டது .....
இது ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்ட கவிதை வருமா வராதா என்று தெரியாது.....???நான் காதலியை பற்றி எழுதியதால் என் தங்கை திவ்யா கோபித்துக்கொண்டாள்.....அதனால் இது நான் எழுதிய அசல் ,இதனுடைய நகல் தான் போன கவிதை,உறவுகளுக்குள் இருப்பதை வெறும் காதலாக நகல் எடுத்திருந்தேன்....நேற்று தங்கை வீட்டில் அதாவது என் வீட்டில் internet இணைப்பு வந்தது. அரசியல் பற்றி எழுத வேண்டாம் எழுதினால் பேச மாட்டேன் என்றாள் ................இனி என் பதிவுகளில் அரசியல் சுத்தமாக இருக்காது .......................மன்னிக்கவும் நண்பர்களே .....என் தங்கை சொன்னால் பதிவுலத்தில் இருந்து கூட விடை பெறுவேன் ..............என் தங்கையை விடவா எல்லாம் முக்கியம் ....