Friday, 14 May 2010

தனிநபர் தீர்வு பகுதி இரண்டு

ஒரு பிரச்சனைக்கு தனிமனித தீர்வு சாத்தியமா என்பதை பற்றி பார்த்தோம் , நிறைய நண்பர்கள் விவாதம் செய்தனர் தனி மனித ஒழுக்கம் முக்கியம் என்று சொன்னார்கள். இங்கே பிரச்சனை தனிமனித ஒழுக்கம் அல்ல தனிநபர் தீர்வு. அதாவது ஒரு தீர்வை வைக்கும் பொழுது அதன் பலன் பற்றி யோசிக்க வேண்டும் . உதாரணமாய் தண்ணி அடிப்பபவர்களை பற்றி பேசும் பொழுது தனிநபர் ஒழுக்கம் வந்தது , நான் நண்பர்களிடம் தனிநபர் ஒழுக்கத்தால் இந்த பிரச்சனை தீராது ஒட்டு மொத்த சமூகம் எழுந்திருக்கும் பொழுது தான் தீரும் என்றேன் , என் நண்பர்கள் இல்லை இல்லை ஒரு சமூகம் என்பது தனி தனி
மனிதர்களை சார்ந்தது ஒவ்வொருவரும் தன் பிரச்னையை தீர்த்தால் சமூகம் நன்றாய் இருக்கும் என்கின்றனர்.

நாம் சமூகத்தின் அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல. உதாரணமாய் விளக்க வேண்டும் என்றால், தனி மனித முயற்சியை பற்றி பார்ப்போம். எனக்கு தெரிந்து IT துறைக்காக எத்தனையோ இளைஞர்கள் தெற்கில் இருந்து கிராமத்தில் இருந்து
புலம் பெயர்ந்து வருகின்றனர்.ஒரு தனிமனிதனாய் பார்க்கும் பொழுது அது சமூக வளர்ச்சி போல் தோன்றும், ஒரு சமூகமாய் பார்க்கும் பொழுது அது வீழ்ச்சி பாதையை வகுக்கும். என் மதுரைக்கார நண்பர்கள் பாதி பேர் விவசாய பின்னணியை சேர்ந்தவர்கள் , படிப்பு எழுத்து என்று வந்து IT துறையில் இருக்கின்றனர் . ஓரளவு படிப்பு குறைந்தவர்கள் ஓட்டுனர்களாக சென்னையில் வேலை செய்கின்றனர் அவர்களின் தனிநபர் முயற்சி என்ன ஆகிறது , கிராமங்களை நகர்மயம் ஆக்குகிறது . நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் அந்த தனிப்படவருடைய முயற்சி சமூகத்திற்கு தீர்வாக இருக்க வேண்டுமே இல்லையே. சரி நகர்மயமாவது விவாசாயம் இல்லாமல் போவதால் என்ன காசு சம்பாதிக்கரானே
என்று பேசலாம் , ஆனால் நம்மை கூலி ஆக்குகிறது இந்த சமூக மாற்றம் . IT துறையில் recession நேரத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் இருக்கிறார்கள்.


ஒரு அமெரிக்க மென்பொருளிலே வேலை செய்பவர் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது, recission காலத்தில் அதற்க்கு காரணம் என்ன. மாதம் பத்து லட்சம் வாங்கிவிட்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய முடியாது ????சில பேர் நன்கு திறமையாய் வேலை செய்தாலும் , PROJECT என்று ஒன்று இருந்தால் தானே காசு வரும் PROJECT இல்லாமல் இவன் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய???? அவன் முயற்சி செய்து தான் படித்து இருப்பான் , கிராமத்தில் இருந்து வந்து நகரத்தில் வேலை வாங்கி இருப்பான் . இதற்க்கு என்ன தீர்வு சொல்வீர்கள் அவன் விவாசாயம் கற்று இருக்க வேண்டும் என்று சொல்வீர்களா ???














சரி விவசாயியின் நிலைமை எப்படி உள்ளது விதர்பா போன்ற ஊர்களில் லட்சக்கணக்கில் விவசாயி சாகிறான் , அதே நேரம் IPL பார்க்கும் தேசம் இது. சரி தஞ்சையில் என்ன நடந்தது , இப்படி சமூகத்தில் விவசாயிக்கு ஆதரவு இல்லாத பொழுது தன்மகனை IT துறைக்கு அனுப்புகிறான் ஏழை கிழவன். நிலம் , ஏழை கிழவனின் உழைப்பு அதை மீறி விவாசாயம் என்றால் தவறு நீயாவது ஒழுங்க படித்து முன்னேறு என்று அனுப்புகிறான் ஏழை கிழவன் . ஒரு சமூக மாற்றமே அவனை நிர்பந்தம் செய்கிறது.






















இதில் தனிநபர் முயற்சி எவ்வளவு செய்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என்பதே உண்மை. அப்படி தனிநபர் தீர்வை காட்டுபவர்கள் பொருளாதரத்தை மட்டுமே முன்னேற்றத்தின் அளவுகோலாய் பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சரி நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து தான் மென்பொருள் பொறியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதற்காய் இந்தியா முன்னேறிவிட்டதா என்ன???
இந்தியாவில் தான் உலக கோடீஸ்வரகள் இருக்கிறார்கள் இந்தியா இன்றும் கூட முன்னேறிய நாடு அல்ல மற்றவர்க்கு ஒரு சந்தை . குறைவான வேலைக்கு குறைவான கூலிக்கு ஆட்கள் தேவை என்றால் இந்தியாவை பிடியுங்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் உலகம் நம்மை
பார்க்கிறது.

இங்கே தனிநபர் தீர்வு எப்படி சொல்வது,சமூகத்தில் மைய்ய பிரச்சனை என்று ஒன்று இருக்கும் அந்த பிரச்னையை தீர்க்க அணிதிரண்டு தீர்வு காணுவதன் மூலமே தனிமனித பிரச்சனை தீர்க்க படும் . தனிநபர் பிரச்சனை அந்த சமூக பிரச்சினையிலே புதைந்து இருக்கும் , மைய்ய புள்ளி தீர்வடையும் பொழுதே அனைத்தும் விடுதலை பெரும் என்பதே உண்மை.

ஒழுக்கம் என்பதெல்லாம் ஒரு அளவு கோல் மட்டுமே . உதாரணமாய் ஒரு அப்பா தன் மகன் தண்ணி அடிக்கிறான் என்று ஏற்றுக்கொள்ளும் மனது, தன் மகன் சமூகத்திற்காக இறங்கி குரல் கொடுக்கிறான் என்றால் "ஊரார் வம்பு உனக்கு எதுக்கு " என்பார் . இங்கே ஒழுக்கம் எதை சொல்லி தருகிறது அடுத்தவனை கவனிக்காதே நீ பார்த்து முன்னேறிக்கொண்டே இரு என்பதை. பின்தங்கிய ஆண் ஆதிக்க சமூகத்தில் ஆணுடன் பேசும் பெண்களை கேவலமாய் பார்க்கும் மனம் உள்ளது , இங்கே ஒழுக்கம் கெட்டவள் பெண் ????? அப்பொழுது ஒழுக்கம் எங்கு உள்ளது .ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அளவு கோள். நீங்கள் பத்து பேரை கூடிவந்து ஒழுக்கம் பற்றி கேட்டால் ஒவொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்வார்கள் என்பதே உண்மை. ஒழுக்கம் தனிமனிதனுக்கு கூட தீர்வாகாது அப்படி இருக்க எப்படி சமூகத்திற்கு தீர்வு கொடுக்கும்.


தனிமத தீர்விலே ஒழுக்கம், முயற்சி பற்றி பார்த்தோம் , இந்த விடயங்களில் அது தனிமனிதனுக்கு தீர்வாகாது . அப்துல் கலாம் M S உதையமூர்த்தி போன்றவர்கள் சுயமுனேற்ற புத்தகங்கள் எழுதி உள்ளனர் . shivkhera "YOU CAN WIN " என்ற புத்தகம் எழுதுகிறார் . இவர்கள் எல்லாம் சமூகத்தை முழு பொருளாய் பார்க்காமல் தனிதனி விடயமாய் பார்க்கின்றனர். சரி ஒட்டுமொத்த சமூக தீர்வு என்பது என்ன, அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.


எல்லா சாலைகளும் உங்கள் வீட்டில் இருந்து ஆரம்பிக்கவில்லை, உங்கள் வீடு சாலையில் உள்ளது .

2 comments:

பாலா said...

போன பதிவில் சொன்ன அதே கருத்தை சொல்கிறேன். அரசியல் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளில் தனிமனித தீர்வு என்பது சாத்தியமில்லாதது. ஒழுக்கம் என்று வரும்போதுதான் தனிமனிதன் வருகிறான்.

//நாம் சமூகத்தின் அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல

சமூகம் என்று ஒன்றே கிடையாது. ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்ததுதான் சமூகம்.
வீடுகள் இருந்தால்தான் சாலைகள். ஒரு சாலை அமைய குறைந்தது இரண்டு வீடுகளாவது வேண்டும். வீடுகளே இல்லை என்றால் சாலை கிடையாது. மனிதர்களே இல்லை என்றால் சமூகம் கிடையாது.

வெண்ணிற இரவுகள்....! said...

//போன பதிவில் சொன்ன அதே கருத்தை சொல்கிறேன். அரசியல் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளில் தனிமனித தீர்வு என்பது சாத்தியமில்லாதது. ஒழுக்கம் என்று வரும்போதுதான் தனிமனிதன் வருகிறான். //

//சமூகம் என்று ஒன்றே கிடையாது. ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்ததுதான் சமூகம்.
வீடுகள் இருந்தால்தான் சாலைகள். ஒரு சாலை அமைய குறைந்தது இரண்டு வீடுகளாவது வேண்டும். வீடுகளே இல்லை என்றால் சாலை கிடையாது. மனிதர்களே இல்லை என்றால் சமூகம் கிடையாது//

நீங்கள் சொன்ன இருபுள்ளிகள் முரண்பாடாய் இருக்கிறதே பாலா ???? அரசியல் பொருளாதாரம் என்றில்லை உங்களுக்கு காதல் பிரச்சனை
தனிமனித குடும்ப பிரச்சனை என்றாலும் சமூக ரீதியான தீர்வே சாத்தியம் நண்பா ???????