Monday, 17 May 2010

பிரபாகரனுக்கு வீர வணக்கம்























மாவீரன் பிரபாகரன் இறந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. சிலர் அவர் உயிருடன் இருக்கார் என்று சொல்கிறார்கள் , சிலர் மறுக்கிறார்கள் . எப்படி இருந்தாலும் பிரபாகரனுக்கு வீர வணக்கம். புலிகளின் அரசியல் நிலைப்பாடை தாண்டி மக்களுக்காக அவர்கள் நின்றார்கள் என்பதில் பிரபாகரன் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு . இங்கு நடக்கும் வாக்கு சீட்டு அரசியல் போல இல்லாமல் எதிரியை நேருக்கு நேராய் நின்று போராடியவர் பிரபாகரன் அவர் ஒரு போராளி. அவர் இறந்ததை வடக்கத்தி ஊடகங்கள் கொண்டாடினா???? இலங்கைமக்கள் எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் அரசியல்வாதிகளோ பிரபாகரனை வைத்து எவ்வளவு ஆதாயம் தேட முடியுமோ அதை செய்தனர்.

ஏன் முத்துக்குமரன் இறந்ததை கூட பெரிய அலைகளை ஏற்ப்படாமல் பார்த்துக்கொண்டனர் இன்று பிரபாகரனுக்கு வீர வணக்கம் கூட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் .முத்துக்குமரன் சவத்தை வைத்து போராடி இருக்க முடியும் , ஆனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட அவர்கள் விரும்பவில்லை . பிரபாகரன் என்ற பெயரை வைத்து வாக்கு மட்டும் வேண்டும் ஆனால் அங்கே எந்த மாற்றமும் வரக்கூடாது என்பதிலே முனைப்போடு செயல்பட்டனர் செயல் வீரர்கள் . தமிழகத்திலே இரண்டு விதமான அரசியல்வாதிகள் பார்க்க முடியும் ஒன்று நேரடியாய் எதிர்ப்பவர்கள் இன்னொன்று அதரவு தருவது போல் பேசிவிட்டு ஈழ பிணங்கள் வைத்து அரசியல் ஆதாயம் தேடி , யார் ஈழ போருக்கு காரணமோ அவர்களிடமே கூட்டணி வைத்து கொண்டிருப்பவர்கள்.

இனியாவது ஈழத்து சகோதரர்கள் இவர்களை நம்பி செயலில் இறங்கக்கூடாது . பிரபாகரன் அவர்கள் மீது மதிப்பு மரியாதை உண்டு ஆனால் அவர்கள் அரசியல் பார்வையில் இருந்து வேறுபடுகிறேன் . எந்த ஒரு நாட்டின் புரட்சியோ வெறும் துப்பாக்கி ஏந்தி நடத்த முடியாது , துப்பாக்கி தூகவது முக்கியம் அல்ல , மக்களை அரசியல் படுத்தி இருக்க வேண்டும். ஈழ தமிழனும் தமிழக தமிழனும் மொழியால் ஒன்றாய் இருந்தாலும் அவனுக்கு இருக்கும் உணர்வு இங்கே வர சாத்தியம் இல்லை. பிரபாகரன் அவர்கள் அங்கு இருக்கும் மக்களை அரசியல்படுத்தி இருக்க வேண்டும் . துப்பாக்கியை மக்கள் சார்பாக இவர்கள் தூக்குவதை விட , மக்களுக்கு உண்டான புரட்சியை அவர்களே செய்ய வைக்க வேண்டும் , அதற்க்கு அவர் தலைமை தாங்கி இருக்க வேண்டும் .

எந்த ஒரு புரட்சியுமே மக்களால் முடிவு செய்யப்பட்டது . சே அவர்களால் கியூபாவில் சாதிக்க முடிந்த விடயத்தை இன்னொரு நாட்டில் செய்ய முடியவில்லை . சே என்னும் தனிமனித சாகசங்களும் கொரிலா யுத்தம் இது மட்டுமே கை கொடுக்கவில்லை கியூபாவில் மக்கள் அரசியல்படுத்த பட்டு இருக்கிறார்கள் . அங்கே புரட்சி செய்ய முடியும் , ஆனால் பொலிவியாவில் சே ஒன்னும் செய்ய முடியவில்லை . மக்களுக்கான புரட்சிக்கு மக்கள் கூட நிற்க வேண்டும், அதை விடுத்து அவர்கள் மேற்ப்பார்வையில் இவர்கள் சண்டை மட்டும் செய்வதால் பயன் இல்லை.

எந்த ஒரு புரட்சியிலும் மக்களை ஒன்று திரட்டவேண்டும் . அவர்களுக்கு அரசியல் அறிவை புகட்ட வேண்டும் . ஆயுதம் ஏந்துவது கூட தவறல்ல , ஆனால் யார் ஏந்துகிறார்கள் என்பது முக்கியம் . இங்கே மக்களுக்காக புலிகள் ஆயுதம் ஏந்தினர் , ஆனால் புலிகளும் மக்களும் ஒன்று என்ற நிலைமை வந்து அனைத்து மக்களும் போராடி இருந்தால் இப்படி பட்ட சுழல் ஏற்பட்டு இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு புரட்சி என்பதை குழுக்கள் முடிவு செய்வதில்லை மக்களே முடிவு செய்வார்கள் .

"ஈழம் தேவை - ஒரு நேர்மையான மீள் ஆய்வு" என்ற புதிய ஜனநாயகத்தின் புத்தகம் ஒன்றை படித்தேன் . ஈழம் பற்றி ஒரு ஆழமான புத்தகம் என்றே நினைக்கிறேன்.பிரபாகரனுக்கு வீர வணக்கம் , ஈழம் பிறக்க வேண்டும் என்றால் அரசியல் ரீதியான முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்றே நம்புகிறான்

2 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

வீர வணக்கம்

ரவி said...

வேறு நல்ல படம் கிடைக்கவில்லையா ? வீர வணக்கம் செய்யும்போது இந்த படம் போடுவது குரூரமாக இல்லையா ?