Wednesday, 26 May 2010
பெப்சி குடிக்கும் சிங்கம்
சமீபாத்தில் வினவு தளத்தில் பெப்சி கோக் பற்றி எழுதி இருந்தார்கள் . ஆனால் நாம்
செய்யும் பிரச்சாரத்தை விட ஊடகங்கள் பத்து மடங்கு செயல் படுகிறது . சூர்யா போன்ற நடிகர்கள் எந்த விளம்பரம் கூப்பிட்டாலும் நடிக்கிறார்கள் காசு வாங்குகிறார்கள்??? " அரசியல் இல்லாமல் நன்மை செய்ய முடியும் என்று NGO வேலை பார்க்கிறார்கள் " . முதலில் சமூக அக்கறை இருந்தால் பெப்சி போன்ற விளம்பரங்களில் வருவதை தவிர்க்கலாமே . அமீர் கான் மேத்தா பட்கரின் ஒரு போராட்டத்திற்கு சென்று இருக்கிறார் . அது விவசாயிகள் போராட்டம் , அமிரை பார்த்தவுடன் "முதலில் நீ விளம்பரத்தில் வருவதை நிறுத்து அப்புறம் போராட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளலாம் " என்று அமீர் கானை மக்கள் விரட்டிவிட்டார்கள் .
சரி நமக்கு எல்லாம் இந்த நடிகர்கள் தெரியும் , விவசாயிகள் தெரியுமா . சரி பெப்சி கோக் எதிர்ப்பதால் விவசாயம் முன்னேறுமா என்று கேட்கலாம் . பெப்சி கோக் நிலத்தடி நீரை உருஞ்சுகிறது . பிளாச்சிமடா என்னும் ஊரையே நிர்மூலம் ஆக்கி இருக்கிறது . இங்கு உள்ள சிறுமுதலாளிகளை அழித்து இருக்கிறது .விவசாயத்தை
அழித்து இருக்கிறது . பிளாச்சிமடா என்னும் ஊர் தண்ணீர் பிரசித்தி ஒரு காலத்தில் , இதை கணக்கு பண்ணிய கோக் அங்கு கூடாரத்தை ஏற்படுத்தியது .அங்கு உள்ளசுற்றுசுழலை பாதிப்பு ஏற்ப்பட செய்தது . அந்த தண்ணீர் இப்பொழுதெல்லாம் விடம் போல் உள்ளதாம் , அங்கு பிறக்கும் குழந்தை உடல் நலக்குரைவாய் பிறக்கிறதாம் . யாரோ சிலர் பின்னூட்டம் செய்து இருந்தார்கள் bovanto சுற்றுசுழலை பாதிக்க செய்ய வில்லையா என்று ?????? கட்டாயம் சொல்லலாம் இந்த அளவு ஒரு ஊரேபாழலடிக்கும் அளவு செய்ய வில்லை என்று .
ஊரிர்க்கே தண்ணீர் கிடைக்காத பொழுது இவர்கள் mineral வாட்டர் தயார் செய்ய எங்கே தண்ணீர் கிடைக்கிறது . இயற்க்கை வளத்தை சுரண்டி எப்படி அவர்கள் சொந்தம் கொண்டாட முடியும் . ஆனால் அது இங்கே நடந்து கொண்டிருக்கிறது , " அரசியல் வராமல் கூட நன்மை செய்யலாம் " என்று சொல்லும் சூர்யா விவசாயிகளுக்கு செய்யும் நன்மை இது தானா ??? சூர்யாவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம் ???? சூர்யா அமீர் விஜய் போன்றவர்கள்விளம்பரத்தில் நடிக்கிறார்கள் . இவர்கள் சொன்னால் செய்வதை கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது . அதுவும் படித்தவர்கள் அறிவாளிகள் என்று நினைத்து கொள்பர்வர்கள் சூர்யாபடம் பார்க்கிறார்கள் . இவர்களுக்கு எல்லாம் விதர்ப்பா விவசாயி பற்றி அறிவார்களா என்ன ??????
விதர்பா என்னும் ஊரில் விவசாயம் அழிந்ததே அதை பற்றி தெரியுமா????? விதர்பா என்னும் ஊர் அழியும் பொழுது, சூர்யா குடிக்கிறார் என்பதற்காய் சத்யம் திரையரங்கில் வாங்கி குடிப்பானே படித்த பாமர தமிழன் . அவனுக்கு எங்கே தெரியும் ஒரு லட்சம் மேல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் விதர்பாவில் என்று . இந்த நடிகருக்கெல்லாம் ECR ரோட்டில் ஒரு பங்களா இருக்கும் கட்டாயம் அதில் நீச்சல் குளம் இருக்கும் . ECR ரோடு நீச்சல் குளம் உள்ள வீடுகளை ஒழித்தாலே மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்று நினைக்கிறேன் .
சரி இந்த பெப்சி கோக் அனைத்து கடைகளிலும் தன்னுடைய fridge கொடுத்து தன் பொருள் மட்டும் விற்க வேண்டும் என்று சொல்கிறது .இவை இரண்டும் ஏக போக முதலாளியை ஆக பார்க்கிறார்கள் , ஊடகம் நடிகர்கள் அரசு என்று அனைத்தையும் தன் பாக்கெட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள் . மக்கள் ஒன்று பட்டு எழுந்தால் மட்டுமே இவர்களை எதிர்க்க முடியும். விதர்பா பற்றி பேசும் பொழுது எதற்கு சச்சின் சூர்யா போன்றவர்களை இழுக்கிறாய் என்று சொல்லலாம் ?????????அவர்கள் இந்த விளம்பரங்களில் வருவதால் கட்டாயம் குற்றவாளி கூண்டில் ஏற்றபடுவார்கள் இந்த விளம்பரங்கள் விவசாயிக்கு எதிர்ப்புறமாய் இருக்கிறது , அதனால் அவர்கள் மக்கள் விரோதிகள் , அதனால் தான் இந்த கேள்வி எல்லாமே வருகிறது.
பெப்சி கோக் குடிப்பவர்கள் ஆதரிப்பவர்கள் விதர்பா , மற்றும் பிளாச்சிமடா பற்றி படித்து விட்டு வாருங்கள் . இதை படித்து ஒருவன் பெப்சி கோக் குடிக்காமல் இருந்தால் வெற்றி அல்ல , நூறு பேர் படிக்கிறார்கள் என்றால் எல்லாருமே குடிக்காமல் இருந்தது என்றால் மட்டுமே வெற்றி . என் எழுத்துக்கள் கோர்வை இல்லாமல் இருக்கலாம் , நான் நீங்கள் நம்பும்படி எழுதாமல் இருக்கலாம் ஆனால் நான் சொல்வது உண்மை . விவசாய தேசத்தில் , விவசாயம் எப்படி இருக்கிறதுஎன்ற அறிவு இல்லாமலேயே நாட்டின் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் . சினிமா பார்ப்பது விஜய் சூர்யா போன்றவர்கள் சொல்வதால் பெப்சி குடிப்பட்து கோக்குடிப்பது என்று குழந்தைகள் வளர்வது வேதனை . அதனால் தான் என்னமோ விவசாயம் வீழ்ச்சி அடைந்து எல்லா மக்களும் நகர்ப்புறத்துக்கு புலம்பெயர்கிறார்கள். நாளை விவசாயம் என்பது சாயம் போனதாய் இருக்கும். விவசாயி என்பவன் எப்படி நாம் ஆதி மனிதனை படிக்கிறோமோ , பின் வரும் மக்கள் அப்படி படிப்பார்கள் . அமெரிக்காவில் கூலிகளாய் இருப்பார்கள் இந்தியர்கள் . இந்தியா ஒரு கூலிகளின் தேசமாய் இருக்கும் . இந்த நடிகர்கள் உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லைஎன்றாலும் ரசிகனை திசை திருப்பாமல் இருக்கலாம் ஏன் என்றால் சூர்யா போன்ற நடிகன் இந்த விளம்பரத்தில் நடிக்காததால் சாப்பிடாமல் இருக்க போவதில்லை .
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
விவாசாயி நிலை பரிதாமாய் உள்ளது என்பதே உண்மை ............... அந்த நேரத்தில் நாம் பெப்சி கோக் சாப்பிடுவது
அவர்கள் வாயில் விடத்தை ஊற்றுவது போல உள்ளது
are you interested to take part in doing service for needy people...
trust named as disha foundation
running by youths, all were working in IT but their natives are falls into deep south
simply villagers...
why can't take a step further
Sariyaga sonneergal.Athepol ippothellam hero endrale rowdy, dada, software engineer (ada enna velai panrane theriyada alavukku thaan irukranga). Vivasayi enbavan thaazndha thozil seybavan pol agivittan tamil cinemavil
பெப்சி,கோக் குடிப்பது சேற்றில் உழலும் பன்றியின் மூத்திரத்தை குடிப்பதற்கு சமம்.
உண்மையில் மூத்திரம் குடிப்பது போன்றது
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
பெப்சி,கோக் போன்றவை கழிப்பறை சுத்தம் செய்யும் மிகச் சிறந்தவை.உங்களை நீங்கள் என்னவாக மதிக்கிறீர்கள்?
ஆம் பாத்ரூம் கழுவுவதை யாரவது குடிபார்களா அதை தான் இங்கே பதிவு செய்தேன் .
அதை தவிர சிறு முதலாளிகள் மற்றும் விவசாயியின் எமன் என்றே சொல்வேன்
ஆம் பெப்சி குடிப்பது நாட்டுக்கும் கேடு உடலுக்கும் கேடு
ஆம் பெப்சி குடிப்பது நாட்டுக்கும் கேடு உடலுக்கும் கேடு
ஆம் பெப்சி குடிப்பது நாட்டுக்கும் கேடு உடலுக்கும் கேடு
இப்பிரச்சனைகளுக்கு நடிகர்களை மட்டும் கூண்டில் ஏற்றினால் போதாது பெப்சி கோக்கிற்க்கு சந்தையை திறந்துவிட்ட அரசுகளையும் கூண்டில் ஏற்ற வேண்டும் மக்களும் விழித்தெழ வேண்டும் அதுவே நிரந்தர தீர்வாக அமையும்.
ஆம் எல்லாரையும் கூண்டில் ஏற்ற தான் வேண்டும் ............அரசு அப்படி தான் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் நடிகர்கள் நல்லவர்கள் என்ற பிம்பம் உள்ளதே அதை வைத்துக்கொண்டு இந்த பானங்கள் விற்கப்படுகிறதே அது தான் சாரம் ...........
ரதி வெறும் உடல் நல கோளாறை தாண்டி சிறு முதாலாளியும் விவசாயியும் பாதிக்க படுகிறான்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
பெப்சி , கோலா போன்ற விலைஉயர்ந்த பானக்களை குடிபதிற்கு பதில் அதை விட விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் "பினாயிலை" குடிக்கலாம்
பதிவு மிக அருமை....
Post a Comment