Friday, 28 May 2010
ராஜாங்கம் - செண்பகமே செண்பகமே
இசையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ,ஆனால் கேட்க்கும்பொழுது சில இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் . இசைக்கு மொழியே கிடையாது , மொழி தெரியவில்லை என்றாலும் இசையின் வடிவத்தை வைத்து இப்படி தான் உணர்ச்சி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியும் . மொழி தெரியாமலேயே இசையை ரசிக்க முடியும் . எனக்கு
bethovan mozart இவர்கள் இசை எல்லாம் கேட்டதில்லை . ஆனால் நம்ம ஊரு இளையராஜாவை கேட்டு இருக்கிறேன் .
தொண்ணுருகளின் தொடக்கத்தில் ரெஹ்மான் வந்துவிட்டார் எனக்கு அப்பொழுது வயது பத்து இருக்கும் . உலகமயமாக்கலின் தாக்கத்தில் நான் ரெஹ்மான் ரசிகனாய் இருந்தேன், ரோஜா கிழக்கு சீமையிலே திருடா திருடா மே மாதம் அத்தனை படங்களையும் ரசித்தேன் . நான் கல்லூரி வரும் வரை A R ரெஹ்மான் ரசிகராய் இருந்தேன் . என் கல்லூரிக்கு போன கால கட்டத்தில் என் நண்பன் சந்தோஷ் இளையராஜா ரசிகன் . அவன் வீட்டிக்கு போகும் பொழுது கணினியில் ராஜா பாடல்கள் போடுவான் , அப்பொழுது தான் தெரிந்தது ராஜா என்றால் யார் என்று .
பாதி பாடல்கள் சிறுவயதிலேயே என் மனதிற்குள் படிந்து இருக்கிறது என்பதை உணர முடிந்தது . எண்பது முதல் தொண்ணூறு வரை இந்த அளவு ஊடகங்கள் வளரவில்லை , ஆனாலும் இளையராஜா பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் போனது . சிறு வயதில் அவர் பாடல்களை கேட்டு இருக்கிறேன் போல , என் நண்பன் வீட்டில் மறுபடியும் கேட்கும் பொழுது எல்லா பாடல்களும் இசையுடம் நியாபகம் வந்தது.
அதிர்ந்து போனேன் நான் உள்ளுக்குள் ராஜா ரசிகனாய் இருந்து இருக்கிறேன் . அதன் பின்பு படம் எப்படி பார்க்க வேண்டும் என்ற அறிவு கொஞ்ச கொஞ்சமாய் வளர்ந்து கொண்டிருந்தது . அப்பொழுது தான் RERECORDING என்ற வார்த்தையை கேள்வி படுகிறேன் , என் நண்பன் சொன்னான் அவர் தான் RR கிங் என்று .ReRecording என்பது பின்னணி இசை கோர்வை . ஒரு காட்சியை இசையால் சொல்ல வேண்டும் . ரெஹ்மான் ஹாரிஸ் போன்றவர்கள் பாடல்களை ஹிட் செய்யலாம் பின்னணி இசையில் ராஜா ராஜா தான் . அதற்க்கு காரணம் அவர் மனப்பக்குவம் என்றே நினைக்கிறேன் , அவ்வளவு பக்குவப்பட்ட மனதாலேயே இந்த காட்சிக்கு இந்த உணர்வு வேண்டும் என்று இசையால் உணர்ந்து கொண்டு இசையால் பேச முடியும் என்று நினைக்கிறேன் , இப்பொழுது எனக்கு தெரிந்து யுவன் அர்ப்புதமாய் RR செய்கிறார் என்று நினைக்கிறேன் .
எனக்கு பிடித்த இளையராஜா பாடல்களை அது என்ன உணர்வலைகள் எனக்குள் ஏற்ப்படுத்தியது என்பதை எழுத போகிறேன் , ராஜாங்கம் என்ற தலைப்பில் . இந்த வாரம் "எங்கள் ஊரு எங்கா ஊரு பாட்டுக்காரன் " என்ற படத்தில் வரும் "செண்பகமே செண்பகமே " என்ற பாடல் . இளையாராஜா பாடல் போன்று வரிகளுக்கும் ஒலிக்கும் சம்பந்தம்
உள்ள பாடல்களை பார்க்க முடியாது . அந்த வரிகள் உணர்வை என்ன சொல்கிறதோ அதை ஒலிகள் அதே அளவில் செய்யும் மந்திரம் ராஜவுடனே இருக்கும் . அந்த பாடல் மெதுவாய் ஆரம்பிக்கும் , மனோவின் குரல் அற்புதமாய் இருக்கும் . காதலை மென்மையாய் சொல்லும் பாடல் , அது அந்த மெட்டிலேயே இருக்கும் , பொறுமையாய்
ஆரம்பிக்கும் பாடல் மனதை ஆக்ரமிக்கும். அந்த பாடலில் எனக்கு பிடித்த இடம் " உன் பாதை போகும் பாதை நானும் போக வந்தேனே , உன் மேல ஆசைப்பட்டு பாத்து காத்து நின்றேனே" , காதலை இவ்வளவு எளிமையாய் யாரும் சொல்ல முடியாது , உனக்காக காத்து கிடக்கிறேன் என்று உன் காதலியிடம் சொல்கிறீர்கள் .....அப்பொழுது இந்த "பாத்து காத்து " என்ற இடத்தில் பாத்துக்கும் காத்துக்கும் நடுவில் ஒரு சிறு கமா போடுவதை போல் ஒரு சிறு நொடி நிற்கும் அந்த இடத்தில் காதலிக்கான காத்திரக்கும் உணர்வு உண்மையிலேயே வரும், இது தான் ராஜா கவிஞர் எளிமையாய் எழுதிருந்தாலும் தன் இசை கோர்வையால் அந்த உணர்வை கொண்டுவரக்கூடியவர் ராஜா .
அதன் பின் ஒரு வரி வரும் " உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு " அந்த வரிகள் பாடும் பொழுது அந்த ஒலிகளில் ஒரு நிம்மதி இருக்கும் , பாடல்கள் என்ன பொருள் தருகிறதோ அதற்க்கேற்றார் போல் இசை மாறிக்கொண்டே போகும் , அந்த உணர்வுகளை அழகாய் எழுப்பிச்செல்லும் . ராஜா ராஜா தான் " நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நா ராஜா " உண்மை .அந்த பாடலை கேட்காதவர்கள் கூட கேட்க வேண்டுமென்பது என் ஆசை, ரெஹ்மான் ரசிகர்கள் கூட கேட்காலம் , இசை என்பது ஒலிக்கருவிகளின் கூடல் அல்ல , அது உணர்வுகளின் கூடல் அது ராஜா இசையில் சாத்தியம் .
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ராஜா ராஜா தான்
தரமான ரசனை.
"இசை என்பது ஒலிக்கருவிகளின் கூடல் அல்ல , அது உணர்வுகளின் கூடல் அது ராஜா இசையில் சாத்தியம்" - எவ்வளவு அழகான வரிகள்..
தொடரவும்..வாழ்த்துகள்..
ஆமாங்க பீத்தேவன் மொசார்ட் எல்லாம் கேக்கவேண்டியது இல்லைங்க ராஜாவே போதும் அவங்க நோட் தான தலை கொஞ்சம் நம்ம ஊரு வாத்திய கருவிகளில் கொடுத்திருக்கிறார்
நிச்சயமாக.
செண்பகமே.. செண்பகமே
மனசுக்குள் பெய்திடும் மழை.
Raja is the King, Always
Post a Comment