Tuesday, 25 May 2010

த(க)ண்ணீர்














ஒரு பக்கம் தண்ணீர் மக்களுக்கு கிடைப்பதில்லை இன்னொரு பக்கம் ECR ரோட்டில் நீச்சல் குளத்துடன் வீடுகள் . அந்த நீச்சல் குளம் பராமரிக்க தண்ணீர் வேண்டுமே எங்கிருந்து வருகிறது . பணம் இருப்பவனே வாழ முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் . ஐந்து நட்சத்திர ஹோடேலில் 24 மணி நேரமும் நல்ல தண்ணீர் தான் வருமாம்??????இது மின்சாரம் போன்ற எல்லா விடயத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் .


















மேல் மட்டத்தில் சுரண்ட சுரண்ட கீழ் தட்டு மக்கள் கஷ்ட்டப்பட பழக்க படுத்த படுகிறார்கள் என்பதே உண்மை . அநேகமாய் இனி காசு இருப்பவனே தண்ணீர் குடிக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் . ஏற்க்கனவே நடுத்தர மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க பழகி விட்டார்கள் .நான் மதுரையில் இருக்கும் பொழுது ஒவொவொரு கடிக்கும் வெளியே தண்ணீர் வைத்து இருப்பார்கள் , நாம் போய் குடித்தால் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் முன்பெல்லாம் .இப்பொழுது தண்ணீர் என்று கேட்டால் வாட்டர் பாக்கெட் ஒரு ருபாய் என்று சொல்கிறார்கள் . மேல் இருப்பவன் சொகுசாய் இருக்க கீழ் உள்ளவன் அதிகமாய் சுரண்டப்படுகிறான்

6 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

கலர் டிவி கொடுப்பதை விட அவசியத்தேவையான தண்ணீரை இலவசமாய் கொடுக்கலாம்

movithan said...

நல்ல விழிப்புணர்ச்சி

ஜெய் said...

Nice thought Karthik.. Keep it up..
It would be good to have a solution or a suggestion for the problem in the blog..

இராகவன் நைஜிரியா said...

// வெண்ணிற இரவுகள்....! said...
கலர் டிவி கொடுப்பதை விட அவசியத்தேவையான தண்ணீரை இலவசமாய் கொடுக்கலாம் //

கலர் டிவி கொடுத்தா ஓட்டு கிடைக்கும். குடும்ப கேபிள் டிவிக்கு பணம் கிடைக்கும். தண்ணி கொடுத்தா இரண்டும் கிடைக்குமா?

Bala said...

கலர் டிவி கொடுப்பதே கண்ணை மறைக்கத்தானே?
வாழ்த்துக்கள். விழாக்கள் நடத்தவும், மாநாடுகள் நடத்தவும் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கிறது? கேட்டால் அம்மா ஆட்சியில் நடக்கவில்லையா என்று எதிர் கேள்வி. அப்போது நடந்ததால்தானே உங்களை ஆட்சியில் அமர வைத்தோம் என்று கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ. என்ன கொடுமை சார் இது?

rajeshkannan said...

கார்த்தி மிகவும் நல்ல பதிவு - பகிர்வு