Saturday, 12 June 2010

தண்டவாளம் தகர்ப்பும் சில அரசியல் சூழ்ச்சிகளும்

தமிழகத்தில் நேற்று விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட குண்டு வைத்தார்கள் , ரயில் அதிர்ஷ்ட வசமாய் தப்பியது.சரி குண்டு வைத்தது , ராஜபக்க்ஷே வருவதை எதிர்ப்பு தெரிவிக்க , ஈழம் விரும்பும் ஏதோ ஒரு தமிழர் இயக்கம் தான் செய்திருக்க வேண்டும் , என்று செய்திகள் கசிகிறது . ஊடகங்களும் செய்திதாள்களும் ஆதிக்க வர்க்கம் , மற்றும் ஆளும் வர்க்கத்தின் குரல் என்பதை மறந்து விடக்கூடாது .இந்த மாதிரி செய்திகள் வருவதால் யாருக்கு லாபம் , கொஞ்சம் யோசித்து பாருங்கள் . இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழர் இயக்கங்கள் இதை செய்யுமா ??? என்பது தான் கேள்வி . அவர்களுக்கு இங்கு பொதுமக்கள் உபயோகபடுத்தும் தண்டவாளத்தை தகர்ப்பதால் யாருக்கு லாபம் , இது அவர்களுக்கு தெரியாதா??? அப்படியே குண்டு வைக்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கு பொது மக்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் எதிரிகள் இந்தியாவை ஆளும் , தமிழகத்தை ஆளும் மற்றும் வாக்கிற்காக ஈழத்தை ஆதரித்து பேசினாலும் ஈழத்திற்கு எதிரான கட்சிகள் ,
இவர்கள் தான் இவர்களது இலக்காய் இருக்க முடியும்.


இதை வெறும் செய்தியாய் மட்டும் பார்க்காமல் ஆய்வு செய்து பாருங்கள். ஈழம் ஓரளவு தமிழகத்திலே அலையை ஏற்படுத்துகிறது , சீமான் போன்றோர் 'நம் தமிழர்' இயக்கம் என்ற பெயரிலே இயக்கங்கள் ஆதரிக்க படுகிறது .அவர்கள் செய்யும் வேலைகளில் என் அரசியல் நிலைப்பாடு வேறு. ஆனால் இங்கே இவர்களை போன்ற ஏதோ ஒரு இயக்கமே தண்டவாளத்தை தகர்த்து இருக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது . ஏன் என்றால் மக்களை நேசிக்கும் இயக்கங்கள் ,அரசியல் ரீதியான தவறான முடிவுகள் எடுத்தாலும் , இதை போல வேலைகள் செய்யமாட்டார்கள் என்பதே என் கருத்து .

சரி அப்பொழுது இந்த விடயங்களை யார் செய்திருக்க முடியும். ராஜபக்க்ஷே வந்துள்ளார் , AIRTEL நிறுவனம் IIFA விழாவிற்கு sponser செய்தது என்று அங்கங்கே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது . கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துகிறார் , ஈழம் பிணவறையில் இருக்கும் பொழுது , ஏன் சோனியா காந்தியை காட்டாயம் அழைப்பார் , சோனியா இத்தாலியின் வேலுநாச்சியார் என்று கூட அடுக்கு தொடரிலே பேசுவார் . மக்கள் இதை பார்த்து எரிச்சல் அடைய வாய்ப்பு இருக்கிறது . இந்த நேரத்தில் தமிழர் இயக்கங்கள் எழுச்சி அடையவும் இது ஒரு வாய்ப்பாய் இருக்கும் . பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டும் , இந்த தமிழர் இயக்கங்களையும் மக்களையும் அந்நிய படுத்தவேண்டும் . மக்களுக்கு இவர்கள் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படவேண்டும் . இல்லை என்றால் அரசியல் ரீதியாய் அவர்கள் வளர ஒரு வாய்ப்பு உண்டு .

அதனால் இது நடந்த அரசியல் சூழலை பார்க்கும் பொழுது யார் செய்து இருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது . மக்களுக்கான போராடும் இயக்கங்களை ஒடுக்க , மக்களையே எதிராய் ஆக்கும் வேலையை அதிகாரம் செய்தவர்கள் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள் . மக்கள் கிளிப்பிள்ளை போல ஊடகம் யாரை எல்லாம் தீவிரவாதி என்று சொல்கிறதோ அவர்களை பற்றி ஆராயாமல் , கட்டாயம் இவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு கிரிக்கெட் பார்க்க செல்கிறது நடுத்தரவர்க்கம் . வட இந்தியாவில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது கூட இதை ஒட்டி தான் என்பது அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு புரியும் . என்றுமே போராளிக்களுக்கு மக்கள் எதிரி அல்ல , மக்களை கொல்வதால் எதிர்ப்பு தான் வரும் என்ற புரிதல் அவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் . அவர்கள் அப்படி குண்டு வைக்க வேண்டுமென்றாலும்
அவர்களுக்கு எதிராய் இருப்பவரை தான் கொள்ளவேண்டும் என்று நினைப்பார்களே தவிர மக்களை அல்ல . அவர்களை தீவிரவாதியை சித்தரித்து மக்களிடம் இருந்து தனிமைபடுத்த வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது .


பின்குறிப்பு:

பிச்சைக்காரன் என்ற பதிவரின் பதிவுகளை படித்தேன் நன்றாய் எழுதிகொண்டிருக்கிறார் .
ஆனால் தமிழ்மணத்திலே அவர் வாக்கை கூட செலுத்தாமல் இருக்கிறார் . பாராட்டுபவர்கள் கூட அவருக்கு வாக்கு அளிக்க வில்லை என்பது வேதனை. krp செந்தில் என்பவரும் மிகச்சிறப்பாய் எழுதிகிறார் . இருவருமே சமூகப்ரச்சனைகளை நன்றாய் எழுதுகிறார்கள் , சில விடயங்களில்
அரசியல் மாற்றுக்கருத்து இருந்தாலும் , சமூக அக்கறையான பதிவர்கள் , அவர்கள்
பார்வை விசாலமாய் இருக்கிறது என்று நினைக்கிறான் படித்துவிட்டு சொல்லுங்கள்

KRP செந்தில்
பிச்சைக்காரன்

8 comments:

Unknown said...

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு பொதுவாகவே தமிழகம் அமைதி பூமி..
இரண்டு சம்பவங்கள் கோவை குண்டு வெடிப்பு மற்றும் ராஜீவ் படுகொலை தவிர பெரிய அளவில் சதி வேலைகள் நடப்பது இல்லை.
இந்த சம்பவம் மட்டுமல்ல, நக்சல்கள் பொது மக்களை ( அப்பாவி) கொள்வது இல்லை, சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் அவர்கள் பெயரில் நடை பெறுகிறது ..

ஒரு கதை உண்டு அக்பரின் அரசவையில் குறை கேட்கும் நாளில் ஒரு பகுதியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களாக எந்தப் பிரச்சினையும் இல்லை என அந்தப் பகுதியின் தளபதி பெருமையாக சொல்ல உடனே பீர்பால் சில வீரர்களை அழைத்து அந்தப் பகுதியில் சில குடிசைகளுக்கு தீ வையுங்கள் என்றார்..
பதறிய மன்னனும், தளபதியும் பீர்பாலை பார்க்க..
அவரோ ஒரு பிரச்சினையும் மக்களுக்கு இல்லை என்றால் அவர்கள் நாம் ஏன் மன்னனுக்கு வரி கட்டவேண்டும்.. சும்மா இருந்து கொண்டு நம்மை எய்கிறார்கள் என நினைப்பார்கள், பிரச்சினை இருக்க வேண்டும் அப்போதுதான் மன்னனிடம் வருவார்கள். நாம் சிலரை கைது செய்வோம்.. அப்போதுதான் மன்னன் நமக்காகவே இருக்கிறான் என பயப்படுவார்கள் என்றார்..

எப்போதும் இதுதான் அரசியல் ...

என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி .. பொறுப்புகள் கூடுகிறது ....

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பாரே அறிமுகம் எல்லாம் செய்யும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை ....ஆனால் நீங்கள்
எழுதுவது நன்றாய் இருக்கிறது மக்களுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தேன் ..........
உண்மை தான் மக்கள் பிரச்னையை உருவாக்குவதே அரசின் வேலை .........ஆனால் இங்கே பிரச்சனை ஏன் உருவாக்கபடுகிறது மக்களுக்காய் போராடுபவரை மக்களிடம் இருந்து தனிமை படுத்த . மக்கள் வெறுப்பு அடைந்துவிட்டால் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பதே அரசியல்

pichaikaaran said...

நண்பரே.. அறிமுகம கொடுத்தற்கு நன்றி...

ஒட்டு போடுவது எப்படி என தெரியாதட்ல்தான், நானே கூட ஓட்டளிப்பதில்லை... இது குறித்து எல்லாம் , நீங்கள் தனி பதிவிட்டால் நலம்...

pichaikaaran.blogspot.com

அத்திரி said...

நீங்க சொன்ன அத்தனை சந்தேகமும் எனக்கும் உண்டு............. நல்ல பதிவு

வவ்வால் said...

Vennira iravu,

intha santhegam enakkum ezhunthathu, pulavar kaliyaperumal,lenin,rajaram ponravarkal maraivukku piragu veru theevira tamil desiyavathigal yarum munvaravillai.

Antha iyakkam seyal paattilo,seythikalio recenta varave illai.appadi irukkum pothu intha sampavam santhegathukuriyathe.

News channelil kooda police kaditham patri muthalil sollavillai pakkathil yaro point eduthu kodupar,pinnare notice patri solvar.

Bala said...

// போராளிக்களுக்கு மக்கள் எதிரி அல்ல

இது இவர்களுக்கு மட்டும் பொருந்துமா? இல்லை எல்லா தீவிரவாத இயக்கங்களும் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை அந்தந்த அரசுகள் தான் இதை செய்கின்றன என்று சொல்கிறீர்களா?

Madumitha said...

நீங்கள் சொல்வதும்
யூகங்களின் அடிப்படையில் தானே?

vasan said...

த‌ண்ட‌வாள‌ம் த‌க‌ர்ந்த‌து,
ர‌யில் ச‌ரியாய் நின்ற‌து.
விப‌த்தில் த‌ப்பிய‌தால்,
உயிர்க‌ள், சேத‌ம் த‌விர்த்த‌து.
எதிரி ச‌தியா? அர‌சு ச‌தியா?
ம‌க்க‌ள் சந்தேக‌ம்!!
இவ‌ர்க‌ள் வ‌ண்ட‌வாள‌ம்,
யாரென‌ எப்போ தெரியும்?