Saturday, 26 June 2010

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் கைது

செம்மொழி மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது , நீதிமன்றத்தில் தமிழ் இல்லை , ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் இன்னும் முள்வேலியில் தமிழர்கள் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் மாநாடு தேவையா ???வழக்காடும் மொழியாக கூட தமிழை கொண்டு வரமுடியவில்லை . மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்றால்
தள்ளாத வயதிலும் easy chair வைத்துக்கொண்டு போகிறாரே பெரியவர் அவர் தமிழ் பற்றை என்ன சொல்வது . சரி இவ்வளவு இருந்தும் எதிர்ப்புகள் மனப்புகைச்சலாய் இருந்தாலும் , யாரும் தைரியமாய் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . பதிவர்கள் கூட சில பேர் பல் இளித்துக்கொண்டு மாநாட்டிற்கு சென்றனர் . ஆனால் உண்மையில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது, எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்தனர் மா கா இ க தோழர்கள் , "அவர் தான் கலைஞர்" என்ற பெயரில் செம்மொழி மாநாடு
தேவையா என்பது போல் போஸ்டர் இருந்தது , போலீசார் தோழர்களை போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள் என்ற முறையில் கைது செய்து உள்ளனர் , என்ன ஜனநாயகவாதி கலைஞர் ??????????சில தோழர்கள் தாக்கப்பட்டுள்ளனர் ..........இந்த உள்ளடி
அரசியல் எல்லாம் தெரியாமல் தன் புகழ் மட்டுமே பிரதானம் என்று பதிவர்கள் செம்மொழி மானதிற்கு போவது வெட்கமாய் உள்ளது ,. தமிழிலே அதிகமாய் கோர்வையாய் எழுத தெரிந்து என்ன பயன் , கலைஞர் கூட தமிழை நன்றாகத்தான் எழுதுவார் ,
ஆனால் அவர் ஜனநாயகம் . அஞ்சா நெஞ்சர் இருக்கும் மதுரையில் யாரும் இந்த கருத்துக்கள் கொண்ட போஸ்டரை பிரிண்ட் செய்யவில்லை என்பது கொடுமை . ஏன் அஞ்சா நெஞ்சர் என்பது உண்மையானால் எதிர்ப்புகள் வந்தால் சந்தித்து தக்க பதில் சொல்ல வேண்டியது தானே . எதிர்க்கும் தோழர்கள் தாக்கப்படுவது கொடுமை , இங்கே மன்னராட்சி நடக்கிறது ????
மன்னரை மாநாட்டிலே பாராட்டும் "பானபத்திர ஓணாண்டி" புலவர் செல்வந்தராக மாறுவார் இதைதவிர மாநாடு என்ன சாதித்து இருக்கிறது.....ஜனநாயக எதிர்ப்பு கூட சொல்ல முடியாமல் பார்த்துக்கொள்ளும் அரசிற்கு ஆழ்ந்த கண்டனங்கள் . வினவு தோழர்கள் தளத்தில் எந்த எந்த இடத்தில் தோழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் இருக்கிறது
படித்து பாருங்கள்

http://www.vinavu.com/2010/06/26/semmozhi-maanadu-prison/#comment-25419

4 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:-(

வெண்ணிற இரவுகள்....! said...

அரசிற்கு கண்டனங்கள்

புலவன் புலிகேசி said...

இதுவல்லவோ ஜனநாய(ய்)க நாடு. இவரல்லவோ தமிழினத் தலைவன். இவ்விழா எப்படி நடந்தாலும் உண்மை மக்களுக்கு புலப்பட வேண்டும். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை தமிழனுக்கு இருக்கிறது.

Anbu said...

11 தோழர்கள் சட்ட விரோத காவல். வீடுகளில் சோதனை. 01/07/10 மாலை, விழுப்புரத்தில் கண்டன பொதுக்கூட்டம் உரை... பழ. நெடுமாறன் , வை.கோ. , நல்லகண்ணு , மா. நடராசன், அவசியம் வாங்க.

-- தமிழ் வேங்கை . ஐந்தினை பாதுகாப்பு இயக்கம்