Monday, 28 June 2010
படங்களை பார்க்கும் பொழுது ஏன் விமர்சனப்பார்வை தேவை
"பம்பாய்" படம் விமர்சனம் குறித்து நண்பர்கள் விமர்சனம் சொன்னார்கள் , அதில் நிறைய பேரினுடைய பொது புத்தி ஒரே போலவே உள்ளது .அதாவது எங்களுக்கு படம் முற்போக்காய் தான் பட்டது என்கிறார்கள் . மேலும் ஹிந்து மதம் முஸ்லிம்களின் ஒற்றுமையை தான் படம் காட்டுகிறது என்கிறார்கள் .நான் சொல்லுகின்ற விளக்கங்களை ஏற்றுக்கொண்டாலும் , ஒரு பாமரனுக்கு படம் இப்படி தான் புரிகிறது என்கிறார்கள் . அவர்களுக்கு வரலாற்று திருபுவாதம் புரியவில்லை . சரி அப்படி என்றால் ரசனை முறையில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் . யாரும் முற்போக்கு என்ற பெயரிலே அவர்களை ஏமாற்றி விடலாம் என்பது தானே உண்மை .
"உன்னை போல் ஒருவன்" "பம்பாய் " "ரோஜா " போன்ற படங்களை முற்போக்கு என்று கருதுகிறான் ரசிகன் . சரி இறந்த ரசனை சார்ந்த விமர்சனம் தேவையா என்றால் தேவை ????? ஒரு தப்பான விடயத்தை முற்போக்கு என்று என்னும் மனிதன் தான் வாக்களிக்கிறான் ,நாட்டின் முதல்வர் , பிரதமமந்திரி போன்றவர்களை நிர்ணயம் செய்கிறான். பிற்போக்கான விடயங்களை முற்போக்கு என்று நினைக்கும் மனப்பான்மை , அங்கும் வெளிப்படும் . என் மனது இப்பொழுதெல்லாம் பேரரசு விஜய் படங்களை ஏற்றுக்கொள்கிறது , மணிரத்னம் மற்றும் கமல் போன்ற போலி முற்ப்போக்கு வாதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .
ஒரு நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா , அது வேறு எங்கும் இல்லை அந்த சூழலில் இருக்கும் கலை இலக்கியங்களை தெரிந்து கொண்டாலே போதும் . எப்படி ஒரு ரசனை முறை அல்லது கலை இருக்கிறதோ , அது அந்த நாட்டின் மக்களின் மனதை பிரதிபலிக்கும் . வணிக ரீதியான மசாலா படங்களை குப்பைகள் என்று சொல்லும் மக்கள் , மணிரத்னம் கமல் போன்றவர்களை தலையில் தூக்கி கொண்டாடுகின்றன . மேட்டுக்குடி மக்களின்
சிந்தனை முறை பாமரனுக்கும் திணிக்கப்படுக்கிறது, அவன் படம் பிடிக்கவில்லை என்றாலும் ஏதோ பெருசா சொல்றாங்க பா நமக்கு தான் புரியல என்ற பிம்பத்தை வளர்த்துக்கொள்கிறான் , ஊடகங்களும் வளர்த்து விடுகின்றன.
ராவணன் படம் வந்த பொழுது ஊடகங்கள் எப்படி திசைதிருப்புகின்றன , "சீதையை கொச்சை படுத்தி விட்டார்கள் தமிழ் இயக்கங்கள் கோபம் ",என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது . சீதை என்ன தமிழ் பெண்ணா , ஒரு ஹிந்துத்துவா முகத்திரையை தமிழர்கள் என்ற பெயரிலே செய்கிறார்கள் . மேலும் மைய்ய பிரச்சனையான தண்டகாரண்யா பிரச்னையை ஒரு பிரச்சனையாக கருதாமல் , சீதை என்னும் பிரச்னையை பெரும் பிரச்சனையாக எடுத்து மைய்ய பிரச்னையை மறைக்கும் எட்டப்பன் வேலையை பார்க்கின்றனர் .
ஆனந்த விகடனில் தலையங்கம் பார்த்தேன் "அமிதாப் மார்க் போட நான் படங்கள் இயக்கவில்லை " என்கிறார் மணி சார் ,அப்பொழுது ராவணனுக்கு பிரச்சனை என்பது திரைக்கதை சரி இல்லை , இல்லை சீதையை கொச்சை படுத்திவிட்டார்கள் , அமிதாப் சொன்னது என்று கருத்துக்களை பரப்பிவிட்டு தண்ட காரண்யா பிரச்னையை தொடாமல் மணி சார் அவருக்கு பல்லக்கு தூக்குகின்றன ஊடகங்கள் . இதை எல்லாம் உற்று கவனிக்க வேண்டாமா ???கவனித்தால் தான் தெரியும் எது முற்போக்கு என்று , விழிப்புடன் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் நம்மை ஏமாற்றலாம் .
அதனால் ஒரு படம் பார்த்து எனக்கு அப்படி தோன்றவில்லை அதனால் அது சரியான படம் என்று சொல்ல முடியாது . இது அனைத்து ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளுக்கும் பொருந்தும் . அப்பொழுது தான் முற்ப்போக்கு என்று சொல்லிக்கொண்டு நஞ்சுகளை விதைப்பவர்களை அடையலாம் காண முடியும் . ஒரு கலையின் போக்கே சமூகத்தின் போக்கு . நிறைய பேருக்கு பிடிக்கின்ற கலை சரியானதாய் இல்லாதது , சமூகம் சரியாக இல்லாததை காட்டுகிறது . அதனால் அதன் விமர்சனம் முக்கியமானது .
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
மேலான விமர்சனங்கள் வரவேற்க படுக்கின்றன
பதிவின் கடைசி இரு பத்திகள் எனக்கு புரியவில்லை .. எப்படி ராவன் போலி முற்போக்கு படம் என்பதை விளக்கமாக ,விளங்கும் படி சொல்லுங்கள் .(குற்றச்சாட்டாக சொல்லவில்லை ,புருஞ்சிக்கத்தான் கேட்கிறேன் )
//ராவணன் படம் வந்த பொழுது ஊடகங்கள் எப்படி திசைதிருப்புகின்றன , "சீதையை கொச்சை படுத்தி விட்டார்கள் தமிழ் இயக்கங்கள் கோபம் ",என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது . சீதை என்ன தமிழ் பெண்ணா , ஒரு ஹிந்துத்துவா முகத்திரையை தமிழர்கள் என்ற பெயரிலே செய்கிறார்கள் . மேலும் மைய்ய பிரச்சனையான தண்டகாரண்யா பிரச்னையை ஒரு பிரச்சனையாக கருதாமல் , சீதை என்னும் பிரச்னையை பெரும் பிரச்சனையாக எடுத்து மைய்ய பிரச்னையை மறைக்கும் எட்டப்பன் வேலையை பார்க்கின்றனர் .//
தண்டகாரன்யாவில் மக்கள் மீது அரசு தொடுத்துள்ள யுத்தத்தின் கொடூரத்தை திசை திருப்பி அந்த மக்களை இழிவுபடுத்துவதை விட்டு விட்டு சீதையை இழிவுபடுத்துவதை பேசியிருந்தால் ராவணன் படத்தை விமர்சனம் செய்பவர்களுக்கும் கூட்டம் கூடியிருக்கும்.
நீங்க விமர்சனத்த தப்பாச் செஞ்சா அதுக்கு நாங்களா பொறுப்பு...
//மணிரத்னம் மற்றும் கமல் போன்ற போலி முற்ப்போக்கு வாதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .//
திரைதுறை இல்லையென்றாலும் போலி என்ற பதத்தில் முன்னிலையில் இருக்கும் சிவராமனை விட்டுடிங்களே தோழர்!
இந்த எழவெல்லாம் நான் பாக்குறதேயில்ல!
தட் மீன்ஸ், சினிமாக்களை சொல்றேன்!
Neengal kodutha link vali ,matra vimarsana pathivugal paathen,Vithiyaasamana alasalgal.. Avatrai paditha pin,oralavu ungal pathivum purigirathu! Nanri..
//நிறைய பேருக்கு பிடிக்கின்ற கலை சரியானதாய் இல்லாதது , சமூகம் சரியாக இல்லாததை காட்டுகிறது . அதனால் அதன் விமர்சனம் முக்கியமானது . //
இது தான் நண்பா முக்கியம். பலர்த் தூற்றக் கூடும். சிலருக்காவதுப் புரியக் கூடும். தூற்றுவோர்க் கண்டு துவண்டு விடாமல் உண்மையை எழுதுவோம்.
Post a Comment