Tuesday, 29 June 2010
வழக்கு மொழி கொச்சையானதா சிதம்பரத்தின் மேட்டிமை திமிர்
சிதம்பரம் நேற்று கோவை செம்மொழி மாநாட்டில் பேசினார் அதில் "வட்டார வழக்கு என்பது எல்லா நடுகளிலும் இருக்கிறது. அதில் பல நல்ல சொற்கள் உள்ளன. ஆனால் வட்டார வழக்கு என்கிற பெயரில் இல்லாத சொற்களையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தினால், அது மொழியை சிதைத்து விடும். ஒரு மொழியை சிதைக்கக்கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்று வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வழக்கு மொழி இழுக்கு மொழியாகிவிடுமோ என்கிற கவலை இருக்கிறது." இந்த புள்ளியில் அவர் என்ன சொல்ல வருகிறார் வட்டார வழக்கே இருக்க கூடாது என்கிறாரா , மதுரை என்றால் ஒரு மொழி , திருநெல்வேலி என்றால் ஒரு தமிழ் , கோவை என்றால் ஒரு தமிழ் என்று வட்டாரரீதியாய் ஒரு மொழி இருக்கும் பொழுதே அம்மொழி வளரும் .
இப்பொழுது செம்மொழி என்கிறார்களே அது என்னது என்று அலசி பார்ப்போம் . அச்சு ஊடகங்கள் மட்டுமே ஒரு அளவு மொழிக்கு அத்தாட்சி . சிதம்பரம் சொல்லும் செம்மொழி என்பது அது தான் . அதாவது அச்சு ஊடங்கங்களில் தினமணி தினமலர் ஆனந்த விகடன் போன்ற ஊடகங்களில் வேலை செய்பர்வகள் மேட்டுக்குடி பார்பனர்கள் .
பழைய விகடன் எடுத்துப்பாருங்கள் அதில் அந்த வடக்கு மொழி கலப்பு இயல்பாய் தெரியும் அந்த ஊடகங்களை படிக்கும் பொழுது . அந்த காலம் முதல் அச்சு ஊடகங்களில்இருப்பது தஞ்சை பார்ப்பனீய மொழி . அதை மட்டுமே பேச சொல்கிறாரா சிதம்பரம் . வழக்கு மொழி என்றால் எல்லாம் இருக்க தான் செய்யும் , வழக்கு மொழிக்களே வளரக்கூடாது என்கிறாரா இதை ஏன் யாரும் கண்டிக்க வில்லை .
ஒரு மொழி என்பது பேசப்பேச மட்டுமே வளரும் இயல்பு உடையது . மதுரை தமிழிலே "கோளாறா போ பா " என்றால் பார்த்து போ என்று அர்த்தம் . இது எல்லாம் கொச்சையாய் இருக்கிறது என்று அந்த மக்கள் பேசும் மொழியை தூக்கி எரிய முடியாது . கலை என்பதே பயன்பாட்டை பொருத்தது , சென்னையை பொறுத்த வரை
"கலாய்த்தல்" என்பது ஒரு கலாச்சார வார்த்தை , இந்த வார்த்தை இருந்தால் தான் சென்னை , இப்படி உழைக்கும் மக்கள் இயல்பாய் பேசும் வார்த்தையை கொச்சை என்கிறார் . தூய தமிழ் என்பது எது , ஏன் வட்டார வழக்கில் இருந்து ஒரு வார்த்தை மொழியில் ஒரு இடத்தை பிடிக்க கூடாத என்ன ????? இது மேட்டிமை திமிரை காட்டுகிறது , இது தான் மொழி மதுரை என்றால் தனியாய் பேசக்கொடது , தூத்துக்குடி என்றால் தனியாய் பேசக்கூடாது , நீங்கள் எல்லாம் மேட்டுக்குடி தமிழை தான் பேச வேண்டும் என்பது ஒரு விதத்தில் பார்ப்பனீயம் அடக்கு முறை , உழைக்கும் மக்களின் மொழி எப்படி வளரலாம் என்ற பயம் .
சரி ஒரு மொழி புது புது வடிவம் எடுத்தால் தான் வளர முடியும் . தமிழ் கண்டுபிடித்த காலத்தில் கணினி இல்லை , அதற்காய் அதை ஏற்றுக்கொலாமல் இருக்க முடியும் .கணினி என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மொழி , ஏன் வட்டார வழக்கை ஏற்றுக்கொள்ள கூடாது , இது மேட்டிமை திமிர் இல்லாமல் வேறு என்ன ??????
"கவிப்பேரரசு போன்ற ஒருவர் பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கிறோம் அல்லவா, அதுதான் இனிய தமிழ். அப்படிப் பேசி எழுதப் பழக வேண்டும்" என்று சிதம்பரம் சொல்கிறார் . கவிபேரரசு தமிழ் அழகாய் இருக்கலாம் , ஆனால் கலைஞரை துதி பாடுகிறாரே அது அருவருப்பாய் உள்ளதே .உழைக்கும் மக்கள் தமிழ் கொச்சையாய் இருக்கிறது என்கிறாரே , கவிபேரரசின் தமிழை விட நன்றாய் தான் உள்ளது என்பேன் ஏன் எனில் அதில் உண்மை இருக்கிறது ."வருடம் " என்ற வார்த்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் , அச்சு ஊடகங்களும் ஏற்றுக்கொள்கின்றன ஆனால் அது வாடா மொழி திணிப்பு , ஏன் இப்படி பல வார்த்தைகள் sanskrit வார்த்தைகள் ஊடகங்கள் திணிக்கலாம் , வழக்கு மொழி பேசினால் அழிந்து விடுமா என்ன ????????? சிதம்பரம் போன்ற மக்கள் மொழியை காப்பது இல்லை , அதை போன்ற மேட்டுக்குடி மக்கள் அயல் நாட்டிலே வேலை ,ஆங்கிலம் பேசுவது என்று எங்கெங்கோ செல்கிறார்கள் . மொழியை காப்பது வழக்கு மொழி பேசும் உழைக்கும் மக்கள் . அப்படி பேசக்கூடாது செம்மொழியில் தான் பேசவேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பின்னூட்டங்களையும் விவாதங்களையும் எதிர்ப்பார்க்கிறேன்
எல்லா மொழிகளும் ஆங்கிலம் உட்பட வட்டார வழக்கில்தான் பேசப்படுகிறது.. .. மேலும் வைரமுத்து பேசுவது மேடைத்தமிழ்..
அவரிடம் சாதரணமாக உரையாடும்போது வழக்கு தமிழில்தான் பேசுவார்..
சென்னைக்கு என்று இருக்கும் தனித்தன்மை வேறெங்கும் இல்லை.. ஏனெனில் அதில் எல்லா மொழிகளும் கலந்திருக்கும்.. பெரும்பாலும் வட சென்னைக்காரர்கள் மட்டுமே சென்னை வழக்கு மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
சிதம்பரம் எப்போது பூணல் போட்டுகொண்டார்?
அவர் சொன்னது பழைய சினிமாக்களில் பேசப்படும் செந்தமிழை அல்ல. ஓரளவுக்கு செம்மையாய் உள்ள தமிழைத்தான். இதில் பார்பனீயத்தை திணிப்பது ஒங்களுக்கே ஓவராக படவில்லை?
உங்களுடைய வலைப்பதிவை தொடர்து படித்து வருகிறேன்.
திரு. சிதம்பரம் "அந்த" அர்த்தத்தில் பேசவில்லை என்றே படுகிறது. இதில் உங்களுடைய கருத்துக்களை திணிப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
வாழ்த்துக்கள். தொடரவும்.
" ஒருவர் பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கிறோம் அல்லவா, அதுதான் இனிய தமிழ். அப்படிப் பேசி எழுதப் பழக வேண்டும்"
என்னை பொறுத்தவரை, சூதானமா போயிட்டு வா ராசா என பக்கத்து வீட்டு பாட்டி , பரிவுடன் சொல்வது இனிமையாக இருக்கிறது
சிதம்பரம் என்ன பொருளில் சொன்னாரோ யான் அறியேன். ஆனால் வட்டார வழக்குகளின் தனித்த சுதந்திரம் மொழி பிரிந்து தனிமொழி உருவாக வழிவகுக்கும். அதற்கு தமிழ், மலையாளம்,தெலுங்கு , கன்னடம்,துளு,படகு,குடகு என ஒரு தாய்மொழி பல மொழிகளாக பிரிந்ததற்கு சாட்சி. வட்டார வழக்கை விட அந்நிய மொழிகலப்பு ஆபத்தானது, இது தமிழநாட்டில் அதிகம். இப்போது கூட முயற்சித்தால் தமிழையும் மலையாளத்தையும் ஒன்றாக இணைக்கலாம், ஏனெனில் இலங்கை தமிழுக்கும் மலையாளத்திற்கும் 80% சொற்கள் பொதுவாகவும், இந்திய தமிழுக்கும் மலையாளத்திறகும் 70% சொற்கள் பொதுவானதாகவும் உள்ளன. இலக்கணம் தொல்காப்பியரின் வரையறைகளிற்கு உட்பட்டதே மலையாளமும். ஒன்றிணைவதற்கு ஒன்றே ஒன்று வேண்டும், இருதரப்பிலிருந்தும் சிறிதளவு விட்டுக்கொடுப்பு மட்டுமே...
சிதம்பரம் என்ன பொருளில் சொன்னாரோ யான் அறியேன். ஆனால் வட்டார வழக்குகளின் தனித்த சுதந்திரம் மொழி பிரிந்து தனிமொழி உருவாக வழிவகுக்கும். அதற்கு தமிழ், மலையாளம்,தெலுங்கு , கன்னடம்,துளு,படகு,குடகு என ஒரு தாய்மொழி பல மொழிகளாக பிரிந்ததற்கு சாட்சி. வட்டார வழக்கை விட அந்நிய மொழிகலப்பு ஆபத்தானது, இது தமிழநாட்டில் அதிகம். இப்போது கூட முயற்சித்தால் தமிழையும் மலையாளத்தையும் ஒன்றாக இணைக்கலாம், ஏனெனில் இலங்கை தமிழுக்கும் மலையாளத்திற்கும் 80% சொற்கள் பொதுவாகவும், இந்திய தமிழுக்கும் மலையாளத்திறகும் 70% சொற்கள் பொதுவானதாகவும் உள்ளன. இலக்கணம் தொல்காப்பியரின் வரையறைகளிற்கு உட்பட்டதே மலையாளமும். ஒன்றிணைவதற்கு ஒன்றே ஒன்று வேண்டும், இருதரப்பிலிருந்தும் சிறிதளவு விட்டுக்கொடுப்பு மட்டுமே...
சிதம்பரம் சொன்னதில் பார்ப்பனீயம் எங்கிருந்து வந்தது ?
அச்சுக்கலை வருமுன் புத்தகங்கள், எழுத்து ஊடகங்கள் இல்லை; பெரும்பாலும் பேச்சு மொழியே இருந்தது; அந்த வட்டாரம் தாண்டி ஒலிக்க ஏது இல்லை. செய்தி தாள்கள் வந்தபின் வட்டார வழக்குகளில் சில தமிழ் நாடு முழுவதும் புரிந்து கொள்ளும் வண்ணம் பரவலாக ஆகிவிட்டது. பல எழுத்தில் வராமல், பேச்சிலேயே கூட ஒழிந்து இருக்கலாம். . திரைப் படங்களிலே பதிவர் சொன்னது போல் தஞ்சாவூர் பார்ப்பனீயர்கள் பங்கு குறைந்து தமிழகம் பூராவிருந்தும் கலைஞர்கள், அதிலும் வசன கர்த்தாக்கள் வரத் துவங்கிய பின், பற்பல வட்டார வழக்குகள் பிரபலம் ஆகி இருக்கின்றன. இவற்றில் சில நிலைக்கும்; பல சாகும். காலப் போக்கில் standardisation ஆவது காலத்தின் கட்டாயம். இதைத் தான் வேறு விதமாகச் சொல்லியிருக்கிறார்
Post a Comment