
இந்திய ஜனநாயக நாடு , ஆனால் தீவிரவாதிகள் தான் நாட்டின் அமைதி இழப்பிற்கு காரணமாய் இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன .ஊடகங்கள் அதிகார வர்க்கத்தை காப்பாற்றுகின்றன , மாறாக அதிகார வர்க்கமும் ஊடகத்தை காப்பாற்றுகிறது . நடுத்தர வர்க்கம் இதை போல செய்திகளை படித்துவிட்டு தீவிரவாதிகளை கொல்ல வேண்டும் என்று சொல்கின்றன . சரி தண்டகாரண்யா என்னும் இடத்தில் baxasite கனிம வளம் உள்ளது அதை வேந்தாந்த என்னும் பணமுதலைக்கு விற்பனை செய்ய , அங்கு உள்ள பூர்வ குடி மக்களை விரட்டுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர் . அவர்கள் மறுபடியும் போராடினால் தீவிரவாதி என்று செய்தி பரப்புவது , அவர்களை கொலை செய்வது போன்ற விடயங்களை திறம்பட செய்கிறது ஆளும் வர்க்கம் . பேச்சு வார்த்தைக்கு தயார் என்கிறார்கள் , ஆனால் பேச வந்த ஆசாத்தை ENCOUNTER முறையில் கொலை செய்தார்கள் , அவர் செய்திதொடர்பாளர் என்பது ஊரறிந்த விடயம் , அவருக்கே இந்த கதி என்றால் ....... பாமரனுக்கு இதே நேரத்தில் அருந்ததி ராய் போன்ற அறிவுத்தளத்தில் இருப்பவர்கள் வருகிறார்கள் , மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்கிறார்கள் . ஆனால் ஆசாத் போன்ற ENCOUNTER அவர்களை மிரட்டும் , யாரும் ஜனநாயகம் பற்றி பேசக்கூடாது என்று ஆசாத் போலவே இன்னொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது .
லிங்கரம் கடோபி மாவோயிஸ்ட் இல்லை என்றாலும் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்பவர்.
அவர் போலிசாரால் துன்பப்பட்டுள்ளார் . அவரை மாவோயிஸ்ட் என்று போலிஸ் துன்பப்படுத்துகிறது . கேட்டால் அவருக்கு அருந்ததி ராயுடன் தொடர்பு உள்ளது , மேத்தா பட்கருடன் தொடர்பு உள்ளது என்கிறது . இதன் மூலம் அருந்ததி ராய் , மேத்தா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்களை தீவிரவாதியாய் சித்தரிக்கிறது , மேலும் யாரவது வாயை திறந்தால் அவ்வளவு தான் என்னும் எச்சரிக்கை மணியை அடிக்கிறது ஆளும் வர்க்கம் .ஆறு மாதத்தில் கடோபி தீவிரவாதிகளிடம் இருந்து பயிற்சி பெற்றார் என்று காவல்துறை சொல்கிறது .அவர் தான் ஆசாத்துக்கு அடுத்த செயத்திதொடர்பாளர் என்று காவல்துறை சொல்கிறது . ஆனால் லிங்கரம் என்ன சொல்கிறார் " போலிஸ் என்னை துன்பப்படுத்துகிறது , எனக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் சம்பந்தம் இல்லை " என்கிறார் .
சரி இதன் பெயர் தான் ஜனநாயகமா ??? அதவாது இதன் மூலம் மக்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன " வாயை மூடி கொள் " என்பதே.சரியான விடயம் என்று தைரியமாய் பேசினால் , இந்திய இறையாண்மை என்று ஒரு வார்த்தை வைத்து இருக்கிறார்கள் , அமைதியை கெடுத்து விட்டீர்கள் , நீங்கள் தீவிரவாதிகள் என்று காவல்த்துறை கொன்று விடும் . இங்கு உண்மையை உறக்கச்சொல்வது குற்றம் . சுரண்டுபவனுக்கு முதுகு சொரிய வேண்டும் , அதற்க்கு எதிராய் குரல் கொடுத்தால் நீ தீவிரவாதி . இங்கு தீவிரவாதி என்பவன் ஆளும் வர்கத்திற்க்கு எதிராய் குரல் கொடுப்பவன் . தற்பொழுது துறை முருகன் பேசினாரே "யாரவது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது போல் பேசினால் கடுமையான தண்டனை விதிக்க படும் , சட்டம் எதுவும் இல்லை என்றாலும் இயற்றப்படும் என்று" இது வேறு ஒரு பிரச்சனைக்காக அவர் சொன்னாலும் பேசாதே வாயை மூடிக்கொள் என்பது மட்டுமே பொருள் . அரசியல் சாசனத்தில் சோசியலிசம் என்ற சொல் எதற்கு என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் , டேய் முட்டாள்களா இந்தியா முதலில் ஜனநாயக நாடே இல்லை அப்புறம் என்ன சோசியலிசம் , என்று மண்டையில் அடித்து சொல்கிறது இந்த லிங்கரம் மற்றும் ஆசாத் விடயங்கள் .
10 comments:
இது பண நாயக நாடு நண்பா...இங்கு போலி என்கவுண்டர்களும், கருத்து சொன்னால் சிறைப் பிடிப்பும் இருக்கிறது. காரணம் அந்த அரசியல் வியாதிகள் தப்பிக்க இவைகள் ஒரு வழி.
இல்லை புலிகேசி ஜனநாயகம் என்றாலே , அது பண நாயகத்திற்கு வழிவகுப்பது தான் அது இந்த அமைப்பிலேயே உள்ளது
முதலாளித்துவ வல்லாதிக்க இந்திய அரசியலை இல்லாதொழிப்பதென்பது தென்கிழக்காசியாவிலல் மனித நேயம்மிக்க அரசசியலை மனத நேயம்மிக்க அரசுகளை உருவாக்க முடியும்.இந்திய நடுத்தரவர்க் இளைஞர்கள் தெளிந்த அரசியலை...மக்களுக்கான அரசியலை பற்றி தெளிவுபடுத்தி கிராமப்புறங்களில் இருந்து மக்களை திரண்டி இந்த சாக்கடைகளை அரசியலைவிட்டு அகற்ற வேண்டும். இந்திய சாக்கடை மற்றும் விபச்சார அரசியல், தமிழீழ மற்றும் தமிழக மக்களுக்கு செய்த அட்டூழியத்தால்.. இந்திய முதலாளித்துவ வல்லாதிக்கம் எதிர்காலத்தில் பிராந்தியத்தில் ஒதுக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாததே.
//லிங்கரம் கடோபி மாவோயிஸ்ட் இல்லை என்றாலும் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்பவர்.
அவர் போலிசாரால் துன்பப்பட்டுள்ளார் . அவரை மாவோயிஸ்ட் என்று போலிஸ் துன்பப்படுத்துகிறது .//
இதை விடக் கூத்து, லிங்கரம் கடோபி ஒரு முன்னாள் SPO என்று சட்டீஸ்கர் டிஜிபி கூறியுள்ளார். சல்வாஜூடம் என்ற பயங்கரவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ஒரு சிறுவன்தான் அசாத்தின் இடத்தை நிரப்ப இருக்கும் நக்சல்பாரி தலைவன் என்று சட்டீஸ்கர் போலீஸு சொல்கிறது. என்ன கொடுமை சிதம்பரம் இது....
நாளைக்கு பிரெஞ்சு புரட்சி நாளாச்சே !! ஸ்பெஷல் பதிவு எதுனா வருமா
Pagirvukku NanRi.
Pagirvukku NanRi.
இரத்தம் கொதிகின்றது... என்ன செய்வது பணத்திற்காக வாக்களிக்கும் மக்களும், ஒரு குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஓடும் தொண்டர்களும் இருக்கும் வரைக்கும் ஆளும் வர்கம் இப்படிதான் நடந்துகொல்லும்...
இரத்தம் கொதிக்கின்றது... என்ன செய்வது பணத்திற்காக வாக்களிக்கும் மக்களும், குவாடருக்கும் பிரியாணிக்கும் வேலை செய்யும் தொண்டர்களும் இருக்கும்வ்ரைக்கும் இப்பாடிதான் நடக்கும்....
இந்த வாக்கு சீட்டு அரசியல் இப்படி தான் .அதனால் காசு வாங்காமல் வாக்களித்தாலும் இப்படி தான் நண்பரே
Post a Comment