Tuesday, 13 October 2009

இடி
















2015 தீபாவளி தமிழ் நாடு திரை அரங்குகளில் திருவிழா கோலம்.தல படம் வருகிறது சத்யம் சினிமாவில் ஒரு வாரம் டிக்கெட் இல்லை.கதை திரைக்கதை வசனம் இயக்கம் கார்த்திக்.வெடிகளுடன் முதல் காட்சி ஆரம்பம்.
முதல் காட்சி ஒரு பெரிய உள் அரங்கு இடம் நியயார்க்.ஹெலிகாப்டர் அரங்கிற்குள் வருகிறது.இரவு நேரம் அரங்கமே நிறைந்திருக்கிறது,அழகி போட்டி.
அழகி போட்டிக்கு நடுவராக நம் தல உலகிலேயே மிக பெரிய கோடீஸ்வரன்.ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வரும் போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்திருந்து வரவேற்பு கொடுக்கின்றனர்.

தல cat walk கவனிக்கிறார்.இப்பொழுது கேள்வி நேரம் ரஷ்ய அழகியிடம் கேள்வி கேட்க படுகிறது ....
1 உலகிலேயே ஆண் அழகன் யார்
a) charles son williams
b) thala
c) ronaldo
d) arnold

தல பெயரை சொல்லும் போது பெரிய தொலைக்காட்சியில் முகம் close up shot காண்பிக்க
படுகிறது...புருவத்தை உயர்த்துகிறார்....அந்த அழகி தல பெயரை சொல்கிறாள்

அந்த அழகி தலையை கையை காண்பிக்கிறாள்....எப்படி என்று நடுவர் கேட்க ....வில்லியம்ஸ் சார்லேசின் மகன் தனி அடையாளம் இல்லை.அர்னோல்ட் உடல் அளவில் அழகர்.ronaldinho ஒரு துறையில் மட்டுமே வல்லுநர்.ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்து முப்பது வயதில் உலகின் பணக்காரர்.நாம் உபயோக படுத்தும் ஜட்டியில் இருந்து பெட்ரோல் வரை அவருடையது,பல துறை வல்லுநர் ,அவரே உலக அழகன்......
இந்த பதிலுக்காக அவளுக்கு உலக அழகி பட்டம்.

பெரிய தொலைக்காட்சியில் தல close up.அந்த தொலைக்காட்சி வழியாக காட்சி உள்ளே செல்கிறது....backround மாறுகிறது தல அப்படியே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.ground அப்படியே பெட் ஆக மாறுகிறது.ஒரு 7 star hotel room no 1.ஒரு நாளைக்கு பல லக்ஷங்கள் வாடகை.

ஒரு call ding dong ....

"come in" என்கிறார் தல.......
உலக அழகி ....தல கூப்பிட்டால் வந்து தானே ஆக வேண்டும்....

எல்லாத்தையும் முடித்து விட்டு "in the eve u r miss world,but now onwards u r misses world because i am Mr,world" தல சொல்கிறார் ......முதல் பாடல் ....

ஆம் பணத்துக்காக எதையும் செய்யும் குணம் ,உலகிலேயே முதல் பணக்காரன் ஏன் இப்படி இருக்கிறான்......என்று கதை நகரும் போது ஒரு முக்கிய திருப்பம்......தல உலகிலேயே தீவிரவாத குழுவால் கொல்ல கூடிய அளவிற்கு அனைவரையும் சுரண்டும் முதலாளி.....

தீவிரவாதிகள் அவரை கொல்ல பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்........ inter pol அதன் தலைவனை தேடுகின்றது.அதன் தலைவன் யார் அவன் அவர்கள் கூட்டத்துக்கு முன்னால் தோன்றுகின்றான் .........................அவன் நோக்கம் என்ன அது யார் .......அவன் சே போல கூட்டத்தில் பேசுகிறான்....ஒரு உலக தலைவனுக்கு உண்டான கம்பீரம் .....அவன் இடி முழ்க்கம் செய்கிறான்......அவன் யார் அதுவும் தல.......அப்பொழுது இடைவெளி.....

che guvera தான் bill gates என்றால் உங்களால் நம்ப முடியுமா

ஆம் ஒரே ஆள் சே உள்ளத்தில் பில் கேட்ஸ் வெளி உலகத்தில்.....முதலாளியாக ஒரு போராளி....அவன் போராளியாக இருந்தால் கொன்று விடுவார்கள்.....அவன் மக்களோடு மக்கலாக இருந்தாலும் கண்டுபிடுத்து விடுவார்கள்.....முதலாளியாக இருந்தால் எவன் கேட்பான்....ஒரு முதலாளியை யாரும் போராளி என்று சந்தேக படுவார்களா.

che guvera மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை சாதித்து இருப்பான்......அவன் உயிர் அவன் உயிர் விலை மதிப்பற்றது..... எத்தனை சாதித்து இருப்பான் ...பில் கேட்ஸ் போராளி என்றால் நம்ப முடியுமா ...?????அதனால் சாதிக்க முதலாளி ஆனான் ......உலகில் முதல் பணக்காரன் உலகமே காரி துப்பியது, தப்பானவன் என்று .......

அனைவருக்கும் உணவு அவன் இலக்கு.......ஒரு பக்கம் பணம் இன்னொரு பக்கம் பிணம் ஏற்கவில்லை????
சம்பாதித்த பணத்தை இயக்கத்திற்கு கொடுத்தான்..........யாருக்கும் தெரியாது...........நினைத்ததை சாதித்தான் ..............
முதலாளி ஆகினான் சாதித்தான்................................................பணம் போராளி இயக்கங்களுக்கு
போனது .......

கிளைமாக்ஸ்:
அவன் பாதி இலக்கை அடைந்து விட்டான் ..........சென்னைக்கு வந்திருக்கிறான் கதாநாயகன்....
கார் சென்று கொண்டிருக்கிறது சிக்னல் .......கண்ணாடியை எறக்கி விடுகிறான் .......ஒரு பெரியவர் பக்கத்து வண்டியில் இருந்து உலகமே மாறிக்கொண்டிருக்கிறது இவனுக்கு சாவு வராதா???????என்கிறார் .. ......இந்த மாற்றத்திற்கு தல தான் காரணம் என்று தெரியாமலேயே ..
தல புன்முறுவலுடன் சிரித்து கொண்டே கதவை மூடுகிறார் .......................
"நல்லது செய்தால் தெரிய வேண்டுமா என்ன ?????"

A FILM BY KARTHICK


போராளி உயிர் விலை மதிபற்றது ..............அவன் உயிருடன் இருக்க வேண்டும் .தவறு செய்தாவது தன் விஷயத்தை சாதிக்க வேண்டும்


அரங்கில் வெடி சத்தத்துடன் "இந்த தீபாவளி தல தீபாவளி தல " என்கிறான் ஆல்பர்ட் முதல் மதுரை வரை .............

Monday, 12 October 2009

யார் சொன்னது கடவுள் இல்லை என்று ?



















சின்ன வயதிலிருந்து நான் நட்பால் ஆசிர்வதிக்க பட்டேன்.என்னுடைய முதல் நண்பன்

குருவஜித் ஐந்தாம் வகுப்பில் இருந்து எனக்கு தெரியும்.இப்பொழுதும் அவன் என்னுடன்

தொடர்பில் இருக்கிறான்.அஷிக் முஹம்மத் அப்புறம் கார்த்திக்.அனைவருக்கும் நான்

எவ்வளவோ கடமை பட்டிருக்கிறேன் .

என் எழுத்தை செதுக்கியது என் நண்பர்கள்.எனது B.sc நண்பர்கள் நான் எழுதிய

அரைவேக்காடுகளை எல்லாம் வைரமுத்துவுடன் ஒப்பிட்டு பேசினார்கள்.நான் என்ன தான்

கிரிக்கினாலும் அதை இலக்கியம் என்றனர் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து.

என்னுடைய வாழ்கையில் எனக்கு முக்கியமான நண்பன் லக்ஷ்மணன்.நானும் அவனும்

பேசினால் மூன்று அல்லது நான்கு மணி நேரம் பேசுவோம்.Dostoveskiyai பற்றி பேசுவோம்.

கார்க்கி பேசுவோம் ,யார் சிறந்தவர் என்று சண்டை போடுவோம்.

சினிமா பேசுவோம் கமலகாசன் உன்னை போல் ஒருவனில் இலை மறையாக

ஒளித்திருக்கும் பார்பனியம் பற்றி பேசுவோம்.கலைஞர் அரசியலில் எதிர்க்க நான் தான்

சரியான ஆள் என்பேன்.கம்யூனிசம் பற்றி பேசுவோம்.பழகும் போது நுட்பமான அரசியல்

இருந்தால் கூட என்னால் கண்டுபுடிக்க முடியும் என்றால் அவன் கற்று கொடுத்தது.

என் நண்பர்கள் என்னை ரசிக்கிறார்கள். நான் காதலில் தொலைந்த நாட்கள் உள்ளன.

நான் தற்கொலைக்கு முயன்றது உண்டு.என்னை வாழ்கையில் காப்பற்றியது நான்

இப்பொழுது இருக்கும் ஏரி கரை சாலை தோழர்கள்.


அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு புதினம் தேவை அந்த எண்ணமும்

உள்ளது.இப்பொழுது கூட என் அலுவுகத்தில் நல்ல நண்பர்கள் இம்ரான் பாஸ்கர் முருகுவேல்

சுப்பு......நான் கிழே விழும் போதெல்லாம் அவர்கள் தாங்கி பிடிகிறார்கள்

இப்பொழுது நான் வலை பூவிற்கு புதிது.....நான் எதோ கத்து குட்டி போல் எழுதி

கொண்டிருக்கிறேன்.இங்கே என்னை படித்தான் ஒரு நண்பன்,அவன் பதிவுலகிலே ஒரு முக்கிய

புள்ளி அவனுக்கு என்னை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. படித்தாலும்

அறிமுகப்படுத்த வேண்டுமே....என் நண்பன் செய்தான் ஈகோ மறந்து வலை பூவில்

குழந்தை போல் இருக்கும் என்னை அறிமுகம் செய்தான்.என் முகத்தை அவன் முகத்தில்

அறிமுகம் செய்தான் .அவன் வலை பூவிலே என்னை அறிமுகம் செய்தான்....நண்பா உன்


காலுக்கு முன்னால் என் படைப்புகள் தூசு........

http://irumbuthirai.blogspot.com/2009/10/blog-post_12.html

அரவிந்த் நீயும் எனது உயிர் நண்பன்

நான் நண்பர்களால் ஆசிர்வதிக்க பட்ட குழந்தை..................

யார் சொன்னது கடவுள் இல்லை என்று ?

Friday, 9 October 2009

காதல்(1982 a love story)

















என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!


















gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்."இளமை என்னும்
பூங்காற்று" கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக........!
"கண்ணே கலை மானே" ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது "மடை திறந்து" பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் "உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்" முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.

அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்."இதயம் ஒரு கோவில்""பூ மலையே தோள் சேரவா" "மன்றம் வந்த
தென்றலுக்கு" "என்ன சத்தம் இந்த நேரம்..."


மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்....! அவளும் காதலிக்கிறாள் .....

"ஒரு கோலமே

கோலம் போடுகிறதே.....!"


நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்."அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்".இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.

நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.


"உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே"......அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்."சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்"
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்

பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் "நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்"

Thursday, 8 October 2009

எனக்கு 5 உனக்கு 3......!

சென்னையில் ஒரு மழைக்காலம்

2.எனக்கு 5 உனக்கு 3......!





















ஐந்தில் விளையாதது
ஐம்பதில் விளையாது ............
நான் காதலிக்க ஆரம்பித்த வயது ஐந்து ....!

நாம் சிறுவயிதிலிருந்தே
ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருக்கிறோம் ....!
உன்னை கண்டுபிடித்தாலும் காட்டிக்கொடுக்காமல்
இருப்பதில் ஒளிந்து கொண்டிருந்தது என் காதல்....!

என் அம்மா நிலவை பார்த்து சோறு ஊட்டாமல்
பக்கத்து வீட்டு உன்னை பார்த்து சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள்....!
"அங்க பாரு தங்கச்சி பாப்பா" என்றால் ........
"அப்பாக்கு நீ தங்கச்சி வேணுமா மா" என்றேன்
அப்பாவியாய் ........
"அடப்பாவி" என்றால் அம்மா

காதல் வயதுக்கோளாறு .....
என்பதை நான் ஏற்றுகொள்ளமட்டேன் .......
காதலிக்க ஆரம்பித்த போது
எனக்கு 5 உனக்கு 3 .....!

ராஜா ராணி
விளையாடும் போது எனக்கு ராஜா வர
உனக்கு ராணி வர .....!
நான் உன்னை பார்த்து 32 பல் தெரிய சிரிக்க..
அந்த பற்களின் இடுக்கில் ஒளிந்திருந்தது காதல்..!

நாம் அப்ப அம்மா விளையாட்டு விளையாடுவோம் ....
"ஒழுங்கா seriela பார்க்காம சோத்த போடு டி" என்பேன் ......
"சரிங்க" என்பாய் ................
ஒரு நாள் நீ உன் மாமா பையனிடம் அப்பா அம்மா
விளையாட்டு விளையாட .........
நான் "என்னுடன் தான் விளையாட வேண்டும் "
என்று உன்னை அடித்தேன் ....................
அந்த அடியில் அதற்கடியில் காதல் ஒட்டிக்கொண்டிருந்தது .......!


























பள்ளி செல்லும் பேருந்தில் ......
நாம் இருவரும் இடைவெளி இல்லாமல்
அமர்ந்து கொண்டிருப்போம் .....
இடைவெளி இல்லாத இடைவெளியில்
அமர்ந்து கொண்டது காதல் ...!

அப்பொழுதெல்லாம் என் காதலை
வெளிப்படுத்த ரோஜா பூ கொடுக்க தெரியாது....!
ஜவ்வு மிட்டாய் வாங்கி கொடுத்தேன்.....

பள்ளி ஆண்டு விழாவில்
நாம் நடனம் ஆடினோமே.........நியாபகம்
இருக்கிறதா .....?
நான் அஜித் நீ ஜோதிகா ....

கத்தும் speakaril நானும் கத்தினேன் ......
"ஓ சோனா i love u da"
பக்கத்தில் ஜோடியாக ஆடிய உனக்கு
கேட்டதா....?
"நன்றாக நடித்தாய்" ஆசிரியர் சொன்னார் .........
நடித்தேனா?????

அந்த வயதுலேயே இருந்திருக்கலாம் ...........
நான் நீ நமக்கு குழந்தையாக நாய் குட்டி ............
பால் உணர்வில்லா காதல் ...................
கறந்த பால்

Tuesday, 6 October 2009

சென்னையில் ஒரு மழைக்காலம்




















வறண்ட நாட்களில் சென்னையில்

எப்போதாவது பெய்யும் மழை

போல....!

என் வறண்ட வாழ்வின் ஈரமான நாட்கள்.....

"சென்னையில் ஒரு மழைக்காலம்"

கவிதை வடிவில் ஒரு புதினம் ....

புதினம் வடிவில் சில கவிதைகள்
!



1.ரங்கநாதன் தெரு மிக மிக அருகில்

"உலகின் அனைத்து பாதைகளும் என் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன"

"ஒரு புளிய மரத்தின் கதையின்" தொடக்க வரிகள்...........!

எனது அனைத்து பாதைகளும்

என் காதலியின் வீட்டை நோக்கியே

முடிகின்றன




ஆம் ரங்கநாதன் தெரு

மிக மிக அருகில் என் காதலியின்

வீடு...!

நான் அவள் வீட்டருகே நடந்ததை ...

மேல் நோக்கி நடந்திருந்தால் ....

சந்திர மண்டலம் தாண்டி இருப்பேன்...

தரையில் நடந்திருந்தால் அமெரிக்க கூட சென்று இருப்பேன்




இந்த கவிதை

எழுதிகொண்டிருக்கும் போது.....

என் காதலி வேறு தேசத்தில்....

அவளின் நினைவுகளை கவிதைகளாக

மீட்டுக்கொண்டிருகிறேன்
























அவள் பார்த்த பார்வை

இன்றும் அவள் வீட்டு ஜன்னல் அருகே

ஊர்ந்து கொண்டிருக்கின்றன .......!

அவள் ஒட்டிய வண்டி ....

தூசி படிந்து வீட்டு வாசலில் நின்று

என்னை பார்க்கும் ...........

அந்த தூசியை தட்டுவேன் அதில் ஒளிந்திருக்கிறது

என் காதல் ....!




காதலி இல்லை ....

என் காதலை அவள் வீட்டு வண்டியிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறேன் ..!

அவள் இல்லாத வீட்டை நான்

பார்த்துக்கொண்டிருப்பதை வீடும் ....!

அத்தெருவும் பார்த்து கொண்டே இருந்தன ......

சூன்யம் ஆட்கொண்டது அத்தெருவை ..!


மழை மன அழுத்தத்தில்

கதறி அழுதது ...........

சென்னையில் மழைகாலம் தான் ...................

ஆனால் மனம் ஏனோ வறண்டு கிடக்கிறது ......!


ஆம் என் வாழ்வு புதைந்த இடம் ....

நான் உயிரோடு இருந்த நாட்கள்

2005 ............

இருந்த இடம் No 111 lake view road west mambalam.......

என் காதலி இருந்த அதே தெரு........

இருந்த இடம் No 103 அதே தெரு ...........

புதினம் புதிர்களுடன் தொடரும் .......



இந்த முதல் தலைப்பு

முடியும் போது என் மனஅழுத்தம் தொடங்கி விட்டது.....


என்னுடைய வெண்ணிற இரவுகள் தூங்கா இரவுகள்

தொடரும் .....!

Monday, 5 October 2009

சிங்கம் புலி














ஆண்டு 2010 கலைஞர் தலைமையில் தமிழ் மாநாடு.இங்கே மாநாடாக தமிழர்கள் முள் வேலியில்.....................!முள் வேலி,முகாம் அதிலே சோகமான முகம்கள்.கட்டைகளுக்கு சேலை கட்டினாலே தூக்கிக்கொண்டு புணர்ந்துவிடும் சிங்கள சிங்கங்கள்.கிருஷாந்தினி பார்ப்பதற்கு அழகாக வேறு இருப்பாள்,விடுவார்களா.கட்டம் போட்ட சட்டை மற்றும் பாவாடை அணிந்து கொண்டு இருந்தாள் யாழினி
.மார்பு வேறு மேடாக இருந்தது.அவளின் தாத்தா தமிழ் தந்தை செல்வநாயகம் வழியில் சென்றவர்கள்.அப்பா பிரபாகரன் வழியில் சென்றவர்.இவள் கூட சில காலம் பெண் புலியாக இருந்திருக்கிறாள்.சிங்கள வீரன் ஒருவனுக்கு இவள் மீது ரொம்ப நாளாக கண்.
ஒரு நாள் இரவு சிங்கள சிங்கம் அவளை புணர்வதற்கு தூக்கி கொண்டு இருட்டு பகுதிக்குள் சென்றான்..முதலில் check செய்கிறேன் என்று அவளது மார்பு பகுதியை தொட்டான்.நிலைமை புரிந்தது இவளுக்கு.......................!சிங்கம் என்றால் வேட்டை ஆட வேண்டுமே வேட்டைக்கு தயாரானான்....!அவள் அவனை பார்த்து நாக்கை நீட்டி செய்கை காட்டினாள்.அவன் ஒத்துழைப்பதாக நினைத்தான்.அவள் கிழே அமர்ந்து கொண்டு இருந்தாள், நாக்கையும் நீட்டி கொண்டிருந்தாள்...
அவன் சந்தோஷத்தில் நின்று கொண்டே தன் மறைவு பகுதியை ........ஆ ஆ ஆ ..................!அலறினான் சிங்கத்தின் கொட்டையை பெண் புலி கடித்து துப்பியது......சிங்கம் அலறியது புலி உறுமியது .........


உனக்கு அவலத்தை கொடுத்தவனுக்கு அதையே திருப்பி கொடு

Saturday, 3 October 2009

அம்பானியும் அம்பத்தூர் மணியும்

இந்த கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனை அல்ல.
















சென்னை காலை பொழுது மணி எட்டு,வாகனங்கள் traffic ஜாம் இல் சிக்கும் நேரம்.47A சைதாபேட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.பஸ் நிறுத்தத்தில் ஏறினான் மணி.சுற்றி முற்றி பார்த்தான்,
" ஒரு அடையார் "
"மூணு ரூபா சில்லர கொடு. பா "
அவன் கண்கள் மக்களின் பர்சுகளை ஊடுருவின...
ஒருவனது பழைய பர்ஸ் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது......
அவன் கால்களை பார்த்தான் மணி.....ரப்பர் செருப்பு
"பாவம் இவனிட ம் கை வைக்கக்கூடாது...!"மனதில் நினைத்துக்கொண்டான்....
பக்கத்துக்கு சீட்டில் அமர்த்திருந்த ஒருவன் கையிலே coke மற்றும் ஆங்கில நாளிதழ் ....
TCS ID-கார்டு.....ரீபோக் சூ......"இவனிடம் கை வைத்தால் தப்பில்லை" யோசித்தான் மணி.
பர்சில் கை வைக்கும போது மாட்டிக்கொண்டான் ................
"திருடன் திருடன் ....."தர்ம அடி வாங்கினான்...........
"police stationuku விடுங்கப்பா......."கத்தினார் சென்னை நாட்டாமை...............
காவல் நிலையத்தில் மணியின் மணியிலேயே மிதித்தனர் .................அவன் எதற்கு திருடினான் என்று யாரும் கேட்கவில்லை ............????????
அப்பொழுது ஒரு செய்தி ஓடி கொண்டிருந்தது காவல் துறை தொலைகாட்சியில் ..........
"BSNL networkai........தவறாக பயன்படுத்திய reliance குழுமத்தால் 3000 கோடி
மோசடி......Supreme court தொண்ணுறு லட்சம் அபராதம் .........."
அம்பானி அபராதம் கட்டி விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தார் ..............
வெளியில் செய்தியாளர்கள் அவரை மொய்த்தனர் .....
"பசிக்காக திருடுபவன் திருடன் ......"
மணி திருடன் .......
அம்பானி businessman .............சரிதானே