Tuesday, 9 March 2010

கவிதைக்கு ஒரு புத்தன்


















கவிதை தொகுப்பு
என்று உன்னிடம் ஒரு நோட்டை
எடுத்துக்கொடுத்தேன் ...!
முதல் பக்கம்
திருப்பினாய் ..............!
நர நர என்று மண்.................
என்ன என்று கேட்டாய் .........
"நீ மிதித்த மண்" என்றேன் .....
"முதன் முதலில் காலில் எழுதிய கவிஞர் நீ தான்" என்றேன் ....

அடுத்த பக்கம் திருப்பினாய்
வாடிய பூ இருந்தது ...............
"என்ன கவிதைகள் அவ்வளவு தானா என்றாய் ............
மேலும் ஒரு கவிதை இருக்கிறது
என்றேன் ....!
பிய்ந்த செருப்பை எடுத்துவிட்டு காண்பித்தேன் .....
சிரித்தாய் .........!
நீ உன் காலில் உதறிய செருப்பை
தலையணையாய் வைத்து தூங்குகிறேன் என்றேன் ...!

நீ பார்த்த முதல் பார்வையை பதிவு செய்ய முடியவில்லை
நீ பேசிய வார்த்தைகள் காற்றில் கவிதையாய் உலாவி கொண்டிருக்கிறது
என்றேன் .....!
புத்தகங்கள் பத்தாது
கவிதைக்கு ஒரு புத்தன் வேண்டுமென்றேன்...!

Monday, 8 March 2010

நகரத்து மக்கள் நடிகர்கள்















சொக்கா போட்டு
கொழாய் போட்டு .....
அரிதாரம் பூசி நடிகன் போலவே
இருக்கிறான் என்றாள் கிராமத்து கிழவி .......
என்னை பார்த்து ...!
அவளுக்கு என்ன தெரியும்
நகரத்து மக்கள் நடிகர்கள் என்று ...!

Sunday, 7 March 2010

உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்






















இன்று
உலக உழைக்கும் மகளிர் தினம். உருவாக்குவது கடவுள் என்றால் நம் கடவுள் நம் அன்னையே. பெண்கள் எப்பொழுதுமே உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் வெளியில் வேலை பார்க்காத பெண்கள் கூட வீட்டில் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது வேலைக்கு போகிறார்கள் படிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லி விட முடியாது.

பெண் எப்பொழுதுமே ஆண் சார்ந்தவளாகவே இருக்கிறாள். ஒரு ஆண் சம்பாதித்து தன் பணத்தை தன் தாயிடன் கொடுக்கலாம் ஆனால் ஒரு பெண் சம்பாதித்து தன் தாயிடன் கொடுக்க முடியுமா ஏன் ஒரு 1000 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றாலும் 1000 காரணம் சொல்லி ஆக வேண்டும். பெண்ணின் உழைப்பு எப்பொழுதுமே சுரண்டப்பட்டுகொண்டிருக்கிறது. இது சித்தாள் வேலை செய்யும் பெண் முதல் மென்பொருள் வேலை செய்யும் பெண் வரை பொருந்தும்.

ஒரு ஆட்டோகிராப் படம் எடுத்து ஒரு ஆண் நான்கு காதலிகளை காதலிக்கலாம் படம் வெற்றி பெரும். ஒரு பெண் அப்படி செய்ததை எடுத்தால் வெற்றி பெறுமா. ஏன் பெண் நான்கு ஆண்களை காதலிக்க கூடாதா ஏன் அவளுக்கும் சூழ்நிலை இல்லையா?????? இது வெறும் படம் என்று சொல்லவில்லை நம் சமூகம் அப்படி இருக்கிறது நம் சமூகத்தை படம் பிரதிபலிக்கிறது.

படங்களில் பெண்களை கேலி செய்யும் காட்சிகள் அல்லது அவர்களுக்கு எதிரான வசனங்கள் உள்ள காட்சிகள் மிகுந்த கை தட்டு வாங்கும் ஏன் கை தட்டு வாங்குகிறது ஆண் ஆதிக்க சமூகம். சரி எங்க ஊரிலே பாட்டாய அம்மா என்று ஒரு பாட்டி இருந்தாள் சாகும் வரை உழைத்தாள். காலையில் கூடையை எடுத்துக்கொண்டு காய்கறி விற்க செல்வாள் இத்தனைக்கும் பாட்டிக்கு சொத்துக்கள் அதிகம் காது பாரதிராஜா படத்தில் வருவது போல தொங்கட்டம் தொங்கும். தொங்கிய காது, ஏதாவது இழவு வீடு என்றால் அந்த அம்மாவை தான் ஒப்பாரி பாடல் பாட கூப்பிடுவார்கள். சாகும் வரை உழைத்தாள்.

எங்கள் வீட்டிற்க்கு முருங்கக்காய் பாட்டி ஒருவர் வாருவார், பாட்டிக்கு 75 வயது தொடும். பாட்டி முருங்கைக்காய் பறித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு மட்டும் வருவாள் . காசு எதுவும் வாங்க மாட்டாள் நன்றாக எங்கள் வீட்டில் அந்த பாட்டி சாப்பிட்டு விட்டு போவாள். இங்கே சென்னையில் பழைய ரூம் இருக்கும் இடத்தில் ஒரு பால் போடும் பாட்டி இருப்பாள் வேளச்சேரியில் இருந்து வருவாள் நான்கு மணிக்கு பால் போடுவாள் பின்பு பத்து பாத்திரம் தேய்ப்பாள் பாட்டிக்கு 70 வயது இருக்கும்.

பெண்கள் எங்கு பார்த்தாலும் உழைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். பெண் சுதந்திரத்தை ஆண் நிர்ணயம் செய்யக்கூடாது. பெண்கள் உழைப்பை நாம் அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கவில்லை என்றாலும் சுரண்டாமல் இருக்க முயற்சி செய்வோம்.

பெண்கள் பற்றி ஒரு தளம் யாரவது பதிவர் எழுதினால் அறிமுகப்படுத்துகிறது http://www.penniyam.com/
அந்தத் தளத்தில் நான் எழுதிய நூறாவது பதிவு வெளிவந்தது http://www.penniyam.com/2010/02/blog-post_14.html

எங்காவது பெண்ணிற்கான கட்டுரை வந்தால் இந்த பெண்ணியம் தளம் அதை வெளியிடுகிறது. பெண்கள் பற்றிய தெளிவான பார்வை இந்த தளத்திலே கிடைக்கிறது. படிப்பதற்கு பயனுள்ள தளம் உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

விண்ணைத் தாண்டிய பிறந்த நாள் வாழ்த்து















மார்ச் 8 உலக மகளிர் தினம் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. மார்ச் 8 2001 என் கல்லூரி ஆண்டு விழாவில் நான் நிரூபித்த நாள் நான் எதவாது செய்தால் பத்து பேர் எனக்கு கை தட்டுவார்கள் என்று நிரூபித்த நாள். வெறும் ஒரே நாள் regursal பார்த்துவிட்டு அடுத்த நாள் போட்ட நிகழ்ச்சி மிக பெரிய வெற்றி பெற்றது என்னால் அந்த நாளை மறக்கவே முடியாது .அன்று என் நண்பன் ஒருவனுக்கும் என் தோழி ஒருத்திக்கும் பிறந்த நாள் வேறு . அன்றில் இருந்து அந்த நாள் வந்தால் என்னால் மறக்கவே முடியாது.















எனக்கும் அந்த தினத்திற்கும் தொடர்புகள் அதிகம் உண்டு. ஆண்டு 2005 பிறகு ஒரு பெண் என் வாழ்கையில் வந்தாள் அவளின் பிறந்த நாள் கூட அதே நாள் தான்.மகளிர் தினம் எனக்கு மட்டும் காதலர் தினமாய் இருந்தது. தெருவை விட்டு வெளியே வராத நாட்கள் .
இப்பொழுது அமெரிக்காவில் இருப்பாள் படித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.

மகளிர் என்றாலே எனக்கு மரியாதை அதிகம் உண்டு அதற்க்கு காரணம் என் அன்னை . எனக்கு சகோதரிகள் அதிகம். எனக்கு உயிர் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஐரோம் ஷர்மிளா பற்றி கேட்டப்பிறகு தனி மரியாதையே வந்தது. என்ன பெண்மணி அவர்கள். ஆண்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் ஒரு பெண் மட்டுமே தாயாக
முடியும். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். என் காதலிக்கு மட்டும் விண்ணைத் தாண்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Saturday, 6 March 2010

பிரபலத்திற்கு கை தட்டுவோம்






















சச்சின் விளம்பரத்தில் நடிப்பதில்லை
சச்சினை ஆதரித்தால் தேசப்பற்று .....................
உதிரம் கொதிக்கும் .....!
நித்யானந்தர் கதவை திற என்பது உண்மை
தான் ....எந்த கதவு என்று அவர் சொல்லவில்லையே
அவர் சாமியார் தான் அவரை பற்றி எழுதினால் தப்பு....!
2012 சிறந்த படம் ஆம் உலகம்
அழியும் நான்கு பேரு தப்பிப்பார்கள் நாங்கள் கை தட்டுவோம் ........!
ரஜினி திருட்டு cd பற்றி கேட்டால் ..........................
கை தட்டுவோம் ...ஆனால் அவர் படம் ப்ளாக்கில் பார்ப்போம் .....!
ஈழம் பிரச்சனை பேசுவோம்
அங்கே நடக்கும் கிரிக்கெட் பார்ப்போம் வேட்டைக்காரன் பார்ப்போம் ....!
" சச்சினை திட்டிய சாரு ரசிகர் " என்று எழுதியவருக்கு
நான் சாரு படிப்பதில்லை என்று தெரியும் எதற்கு சாரு பெயர் ....!
கமல் ஜாதி ரீதியாக கருத்து சொல்வார் .....
அதை திட்டினால் பிரபலத்தை திட்டிகிரோமாம் ...................!
பாம்பே படம் ஹிந்துத்துவா படம் ...............
அதை விமர்சனம் செய்தால் திட்டுவார்கள் .....!
அரசியல் விமர்சனம் இருக்கவே கூடாது ....
அவர்கள் பிரபலங்கள் நாம் அடிமைகள் ....
கை தட்டிக்கொண்டே இருப்போம் ..................!
இப்படி தான் நித்தியானந்தனும் பிரபலம் ..................
இன்று மட்டும் ஏன் அவனை திட்டுகிறீர்கள் ...
இன்றும் கை தட்டலாமே ...........

Friday, 5 March 2010

மண்ணும் மண் சார்ந்த பதிவர்களும்

















மண்ணோடு சம்பந்த பட்டவனே மனிதன். எப்படி ஒரு குழந்தைக்கு உண்டான உணவு தாய் பால் தாயிடமே இருக்கிறதோ அதைபோல் மனிதனின் உணவு உலகத்திலேயே எடுக்கப்படுகிறது. மண் ஒரு விதத்தில் மனிதனின் தாய். தாய் கூட பத்து மாதங்கள் தான் உணவளிபாள் மண் பிறந்தது முதல் நமக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.

மண் சார்ந்த பதிவர்களை தேடிக்கொண்டிருந்தேன். மண் என்றால் மண்ணை பற்றி எழுதுபவர்களை தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது மூலிகை பற்றி எழுதும் குப்புசாமி கண்ணில் பட்டார். மூலிகை என்றால் மருத்துவ குணம் உள்ளது. எனக்கு தெரிந்து சிறுவயதில் எனக்கு வயத்து வலி என்றால் வீட்டில் உள்ள ஓம செடியை பிய்த்து திண்பேன். அப்புறம் வீட்டில் துளசி இருந்தது, அம்மா துளசி கசாயம் போடுவார்கள்.எனக்கு தெரிந்த மூலிகை வைத்தியம் அவ்வளவே, ஆனால் குப்புசாமியை படிக்கும் பொழுது மூலிகை வைத்தியம் மிக விரிந்தது என்பது தெரிகிறது. மனிதர் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் எழுதி உள்ளார். படிக்கும் போதே மூலிகை விவசாயத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று தெரிகிறது.

இத்தனை செடிகள் உள்ளதா என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது . அதுவும் இத்தனை மருத்துவ குணங்களுடன். அவரின் வலைப்பூ முகவரி


http://mooligaivazam-kuppusamy.blogspot.com/

குப்புசாமியின் சுட்டியை நான் மரவளம் என்னும் ப்ளோகில் இருந்து எடுத்தேன். இவர் கவனிக்க படவேண்டிய பதிவர். மரவளம் பற்றி எழுதுவதோடு மட்டும் அல்லாமல் நீர்வளம் நீர்மேலன்மை போன்றவற்றையும் எழுதுகிறார் . மேலும் வெட்டிவேரை எப்படி வளர்ப்பது அதன் பயன்கள் பற்றி எழுதி உள்ளார். கட்டாயம் படிக்கப்பட வேண்டிய பதிவுகள் விவசாயம் சம்பந்தமான அமைச்சகம் உதவிகள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் எழுதி உள்ளார். மரம் விவசாயம் சம்பதமான அனைத்து விடயங்களையும் எழுதி உள்ளார்.
விவசாய வலைத்தளங்கள் அறிமுகம் செய்து உள்ளார். உலக விவசாயம் பற்றிய அறிமுகம் கூட அந்த வலைதளங்களில் இருக்கும்.

http://maravalam.blogspot.com/


நாம் மண்ணிற்கு என்ன செய்து விட்டோம் குளோபல் வார்மிங்கை குறைக்க மரமாவது வைக்கலாமே. அன்னைக்கு கூட சம்பாதித்து கொடுக்கிறோம் உணவளித்த மண்ணிற்கு என்ன செய்ய போகிறோம். உண்மையிலேயே விடயம் உள்ள பதிவுகள். இந்த பதிவால் ஒரு விதை மண்ணில் பதிந்தாலும் வெற்றியே.

Thursday, 4 March 2010

நித்தியானந்தரும் கடவுளை தேடும் நாமும்


















நானும் என் நண்பனும் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டு " உழைக்காமல் உன்ன வேண்டும் என்றால் கோவில் கட்ட வேண்டும் என்று ".எனக்கு தெரிந்து மனிதனின் அவநம்பிக்கை மற்றும் சோகங்களுக்கு வடிகாலாய் இருக்கின்றன கோவில்களும் மடங்களும். மனிதனின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதாலோ மடங்கள் புற்றீசல் போல தோன்றுகின்றன. தெருவிற்க்கொரு சாமியார் தோன்றுகிறார்.

சாமியார் என்று அறிவித்து விட்டால் போதும் எத்தனை எத்தனை பக்தர்கள் பணம் கொட்ட துடங்கும். ஆனந்த விகடன் ,குமுதம் போன்றவைகள் கவர்ச்சி படங்களுடன் இணைத்து அடுத்த பக்கத்தில் ஆன்மிக கட்டுரை எழுத அழைக்கும். ஒரு நட்சத்திரம் போல் அந்த சாமியார் பார்க்கபடுவார். நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் அவர்கள் பின்னால் ஓடுவார்கள். லிங்கம் வரவைப்பார் சாமியார்,வெளி நாட்டு பக்தர்கள் அதிகம் இருப்பார்கள். ஒரு ஊரையே வளைத்து போட்டிருப்பார் சாமியார்.

இந்த மடங்கள் தோன்றுவதற்கு மனிதன் ஒரு காரணம். இவனின் அவநம்பிக்கை வாழ்கையில் போராடமுடியவில்லை உடனே கடவுளிடம் செல்கிறான் இல்லை மடத்திடம் செல்கிறான். மனதில் தியானம் என்ற பெயரில் மனதில் அந்த சாமியாருடன் மானசீகமாய் பேசுகிறான் உடனே அவன் மனது அமைதி அடைகிறது, அவன் மனது அமைதி அடைந்தவுடன் அதை அவன் சாமியார் செய்தார் என்று நினைக்கிறான். சாமியார் மீது பைத்தியமாய் இருக்கிறான்.

சிலர் தன் மனதை அடக்க வேண்டும் என்று கடவுளிடம் செல்கின்றனராம். அவர்கள் பாதி பேர் போராட தைரியம் இல்லாமல் இருப்பவர்கள். "உள் கட" என்றால் கடவுளாம். எதற்கு உள்ளே கடக்க வேண்டும். எதற்கு உறுப்புக்களை அடக்க வேண்டும். ஆண் என்றால் பெண் மீது மோகம் கொள்வான் அதுவே இயற்க்கை. உடல் உறுப்புக்களும் ஆண் என்றால் பெண் மீதும் பெண் என்றால் ஆண் மீதும் மோகம் கொள்வதை போலவே உடல் அமைப்புகளும் இருக்கின்றன அதுவே இயற்க்கை.

இத்தகைய மனம் உள்ளவர்கள் அதிகம் இருப்பதினாலே மடங்கள் அதிகரிக்கின்றன . மடங்களும் போலிசாமீயார்களும் உருவாக அவர்கள் மட்டும் காரணம் இல்லை, காரணம் இல்லாமல் அவர்களை ஆதரிக்கும் மக்கள். இவர்களுக்கு நம்பிக்கை இல்லை கட்டயாம் கடவுள் என்று ஒருவர் வேண்டும்.

கடவுள் என்ற ஒருவர் அரசர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். மக்கள் குறை தீர்ப்பவன் அரசன். மக்கள் குறையுடன் இருந்தால் புரட்சி வெடிக்கும். அரசனின் சொத்துக்கள் பிடுங்கப்படும். இப்பொழுது கடவுள் என்று ஒருவர் இருந்து விட்டால்,மக்கள் கடவுளிடம் முறையிடுவார்கள். புரட்சி வெடிக்காது,போராட்ட குணம் நீர்த்துப்போகும் அரசன் மக்களை நன்றாய் சுரண்டலாம்.

கடவுள் ஒருவர் இருந்துவிட்டால் அரசன் எவ்வளவு சுரண்டினாலும் மக்களுக்கு தெரிந்தாலும் "மேல ஒருத்தன் இருக்கான் பாத்துக்கிட்டே இருக்கான்" என்று மக்கள் புலம்புவார்களே தவிர, அரசினிடம் சண்டையிட மாட்டார்கள். இது அரசனுக்கு நல்லது, மக்கள் புரட்சி என்றுமே இருக்காது கோவில்கள் மடங்கள் அதிகம் இருக்கும் நாட்டில். இந்தியாவில் கோவில்கள் மடங்கள் அதிகம் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்பிவிட்டால் நாம் என்ன சொன்னாலும் நம்புவோம் நம்மை எளிதாய் ஏமாற்றிவிடலாம். கடவுள் பற்றி படம் மூட நம்பிக்கைகள் வளர்க்கும் படம் என்றால் தேசிய விருது கொடுக்கும் நாடு இது. இங்கே கஞ்சா அடித்தால் அவன் கடவுள். போதையில் அவன் உளறினால் அது வேதம்.

நித்யானந்தர்கள் உருவாக நாமும் ஒரு காரணம். இந்தியாவில் அதிக கோவில் இருப்பதால் இது புண்ணியபூமி அல்ல, உலகத்திலேயே அதிகமாய் ஏமாற்றப்பட்டவர்கள் இந்தியர்கள். கடவுள் என்ற பெயரை வைத்து சுரண்டப்பட்ட நாடு. மனதளவிலே வலிமை குறைந்ததால் மட்டுமே கடவுளிடம் செல்கிறோம்.

ஏன் இந்த நித்யானந்தர்களும் பாபாக்களும் சுனாமி என்றால் சொல்வதில்லை பூகம்பம் என்றால் சொல்வதில்லை. ஏன் புத்தன் கடவுள் தானே அவனுக்கு ஈழம் பற்றி தெரிந்துருக்கும் ஏன் அவன் தடுப்பதில்லை. ஏன் வெங்கட் தெலுங்கானா பிரச்னையை தீர்ப்பதில்லை. இமய மலை ஆன்மீக மலை என்கிறார்கள் ஏன் இமைய மலையில் இருக்கும் பாபாக்கள் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டியது தானே.

போராடத் தெரியாதவனே கடவுளிடமும் மடத்திடமும் செல்வான். இந்தியாவில் கோவில்கள் அதிகமாய் இருப்பதால் தான் ஊழல்களும் அதிகமாய் இருக்கிறது. மக்கள் என்று குறைகளுக்கு போராடாமல் கோவில்களுக்கு செல்கிறாரோ அந்த சமூகம் உருப்படாமல் போகும். எங்கு கோவில்களும் மடங்களும் உள்ளதோ அங்கு ஏமாற்றப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் , ஒரு வகையில் நித்யானந்தர் போன்ற சாமியார்கள் உருவாக நாமும் ஒரு காரணம்.