Saturday, 13 March 2010

நீதிக்கு தண்டனை



















ஜாதிகள் எல்லாம் ஒழிந்து விட்டது என்று நாம் பெயரளவில் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் உண்மையிலேயே ஒழிந்ததா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லத்தோன்றும். உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பே இதற்க்கு சான்று. சுஷ்மா திவாரி ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் பிரபு நொச்சில் என்பவரை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறார் . பிரபு நொச்சில் கேரளாவை சேர்ந்த எழவா என்னும் பழங்குடியை சேர்ந்தவர்.

தங்கை காதலித்தாள் கல்யாணம் செய்தாள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை அவள் அண்ணன் கொன்றுள்ளான், இரண்டு பேரை காயபடுத்தயுள்ளான். அந்த நேரத்தில் மாசமாய் இருந்த சுஷ்மா திவாரி வெளியே
போயிருந்ததால் தப்பித்து உள்ளார். இது நடந்தது 2004.அந்த அண்ணன் கொலைகாரன் பெயர் திலிப் திவாரி. மும்பை உயர் நீதி மன்றம் திலிப் திவாரிக்கு மரண தண்டனை
வழங்கியது ஆனால் உச்ச நீதி மன்றம் 2009 தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது . அவர்கள் கொடுத்த தீர்ப்பு ஆச்சர்யம் அளித்தது.

“It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

அதாவது திலிப் திவாரி ஒரு அண்ணன் என்ற முறையில் கலப்புத்திருமணம் நடக்கும் பொழுது செய்தது சரியே என்கிற பாணியில் அதை நியாயபடுத்தியது. ஜாதி பார்ப்பதே தவறு அதுவும் அதை நியாய படுத்துகிறது உச்ச நீதி மன்றம். அதை எதிர்த்து சுஷ்மா போராடிக்கொண்டிருக்கிறார் . இது நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்கிறார். (Prevention of Atrocities) Act, 1989 சட்டம் படி இது எல்லாம் தவறு என்று சொல்கிறார் சுஷ்மா.

சரி நான்கு கொலை செய்திருக்கிறார் திலிப் திவாரி அவர் செய்ததை நியாபடுத்துகிறது உச்ச நீதி மன்றம். சரி மனு தர்மம் என்ன சொல்கிறது ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் நாடு மட்டுமே கடத்த படுவான் தண்டனை மிக குறைவு . இதே போல் மற்றவர்கள் கொலை செய்தால் கொடுக்க படும் தண்டனையே வேறு. மனு தர்மத்தை வழிமொழிகிறதா உச்ச நீதி மன்றம்.

சரி நம் மக்கள் ஏன் இதற்காய் குரல் கொடுக்கவில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. நித்தியானந்தன் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகம் இந்த செய்தியை ஏன் கண்டுகொள்ளவில்லை. இது தலித்தை பற்றி செய்தி என்பதாலா
இதை எல்லாம் போட்டால் யார் பத்திரிகை வாங்குவார் என்பதாலா. தினமும் குமுதம் பத்தரிகையில் இருந்து எனக்கு குறுந்தகவல் வந்து கொண்டிருக்கிறது நித்தியானந்தன் புது வீடியோ பார்க்க சொல்லி என்ன சொல்ல இந்த ஊடகங்களை .

ஏன் மக்கள் இந்த தீர்ப்புக்கு எதிராய் குரல் கொடுக்கவில்லை இன்னும் மக்கள் மனுதர்மத்தை நம்புகிறார்களா இல்லை IPL என்னும் இந்திய தேசப்பற்றில் ஊறி கிடக்கிறார்களா.நான்கு பேரை கொன்றிருக்கிறான் மரண தண்டனை கொடுக்க வேண்டியது தானே. ஒரு விவசாயி ஒரு இளம் பெண்ணை கற்பழித்து இருக்கிறார் மரண தண்டனை அது நியாயம் சரி, அதை போல் இந்த திலீப் திவாரிக்கும் மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டுமே.
ஏன் மக்கள் கூட கேள்வி எழுப்பவில்லை நமக்குள் supreme கோர்ட் ஒளிதிருக்கிறதா இல்லை நாம் மனுதர்மத்தை நம்புகிறோமா இல்லை நமக்கு இதெல்லாம் முக்கியம் இல்லையா????யார் சொன்னது சாதிகள் இல்லை என்று.

Friday, 12 March 2010

திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்














வகுப்பறையில் அமர்ந்திருந்தேன்
ஒரு பெண் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்
வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் .........
ஒரு வாரமாக பார்த்துக்கொண்டிருந்தேன் .......................
எழுந்து என்னை நோக்கி வந்தாள்.........................
மனசு படபட என்று அடித்தது ...........
என் பெஞ்ச் தாண்டி பின் பெஞ்சில் அமர்ந்திருந்த
இன்னொரு பையனிடம் சாக்லேட் கொடுத்தாள் .........
நேற்று தான் அவன் காதலை சொன்னானாம்........!
உன்னை ஒரு பெண் பார்த்தால் திரும்பி பார் ..........
வேறு ஒரு பையன் இருக்கிறானா என்று .........!

Thursday, 11 March 2010

தலையில் ஒரு கவசம்















விபச்சாரிகள் விற்பனைக்கு...........
எந்த அழகி விலை போவாள் ................
எந்த மாடு சிறந்த மாடு .............
போல் ஏலம் விடப்பட்டனர் வீரர்கள்
என்று சொல்லிக்கொள்கிறவர்கள்
ரெண்டு கோடி மூணு கோடி என்று
விலை போயினர் தேசப்பற்று என்று சொல்லிக்கொள்ளும்
வீரர்கள் .................
பேட்டில் MRF நெஞ்சில் அடிடாஸ்...........
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விளம்பரம்
செய்யும் தேசப்பற்று வீரன் தலை ஹெல்மெட்
கவசத்தில் மட்டும் இந்திய கொடியை வைத்து இருந்தான்....!
விளம்பரத்திற்கு விலைபோகிறாயே...............
என்று கல் எரிபவர்களை சமாளிக்க ......
இந்திய கொடி போட்ட கவசத்தை தலையில் அணிந்து
கொண்டான்..................!
ரிலையன்ஸ் போன்ற முதலாளிகளுக்கு
விற்பனை செய்ய உதவியது விளையாட்டு ........!
ஊடகங்கள் டோனி லக்ஷ்மிராய்
படுக்கை அறை வரை சென்றது ............!
ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ய
அழகிகள் குத்தாட்டம் போட்டனர் ...........!
இவர்களுக்கு தேசப்பற்று
என்பது தலையில் அடிவிழமால் இருக்க ஒரு
கவசம்..!

பார்வை தீக்குச்சி


"அப்படி பார்க்காதே
தீ குச்சி எல்லாம் பற்றி விட
போகிறது " என்றேன் .....!
கல கல என்று சிரித்தாய் .....
"என்ன மழை பெய்கிறதா??"
என்று கேட்டேன் ....!
அடிக்க வந்தாய் .............
"அணைக்க வரலாமே" என்றேன் ...!
"உனக்கு எப்பவுமே கிண்டல் தானா ???" என்றாய்
நான் உண்மையை சொல்லும்
போதெல்லாம் ஒன்று கிண்டல் என்கிறாய்
இல்லை கவிதை என்கிறாய் ....
நான் கிண்டல் செய்யவில்லை
கவிதையையும் எழுதவில்லை
உன்னை பற்றிய உண்மையை
கொஞ்சம் குறைவாய் சொல்கிறேன் ....!

Wednesday, 10 March 2010

மேட்ச்(கிரிக்கெட் பெண்)
















120 கிலோமீட்டர் வேகத்தில் போட பட்ட பந்து தினேஷ்சின் ஹெல்மெட்டை உரசி சென்றது. அடுத்த பந்து outswinger இவன் மட்டையில் edge வாங்கி முதல் ஸ்லிப் நோக்கி சென்றது ஸ்லிப் கைக்குள் எளிதாய் அமர்ந்து அவனுக்கான university டீம் வாய்ப்பை தட்டிப்பறித்து . அவன் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பெவிலியன் திரும்பினான் .

ஆம் இது final மதுரை கல்லூரிகளுக்குள் நடக்கப்படும் tournament . இதில் நன்றாய் விளையாடுபவன் university ஆட்டத்திலே சேர்த்து கொள்ள படுவான். madura காலேஜ் கிரௌண்ட் , madura காலேஜ் மற்றும் சௌராஷ்டிர கல்லூரி எப்பொழுதுமே final வருவார்கள். சௌராஷ்டிர காலேஜ் சார்பாக ஒன் டௌன் இறங்கினான் கார்த்திக்,அவனுக்கு university வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது, அவன் ஒரு madura காலேஜ்
பெண்ணையும் காதலித்துக்கொண்டிருந்தான். அதே பெண்ணை எதிர் அணியில் இருப்பவனும் காதலித்துக்கொண்டிருந்தான். அவன் அதே கல்லூரி வேறு, அவன் பெயர் ஜோதி. அவனுக்கும் கார்த்திக்கும் university டீம் முதல் பெண் வரை போட்டி.

அந்த பெண் வேறு மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறாள் இருவருமே ஒரு தலை காதல். அவள் முன்னாடி வீரத்தை காட்ட வேண்டும்.இன்று ஜோதி பந்து வீச வந்தால் அடித்து நொறுக்க வேண்டும் என்று இறங்கினான் கார்த்திக். கவனம் முழுவதும் அந்த பெண் பார்கிறாலே நன்றாய் விளையாட வேண்டும் என்பதிலேயே இருந்தது. அழகாய் வந்த புல் டாஸ் பந்து அடிக்க வேண்டும் என்ற பதட்டத்திலேயே குச்சிக்குள் விட்டான் கார்த்திக். கோல்டன் duck , பில்டிங்கில் இருக்கும் ஜோதிக்கு ஒரே சந்தோஷமாய் இருந்தது. கார்த்திக் கோச்சிடம் அதிகம் திட்டு வாங்கினான், "ஒழுங்கா ஆடிருந்த மிட் விக்கெட் ல four " என்று திட்டினார்.

அடுத்து இறங்கினான் அருண் இரண்டு மேட்ச் ஆடி இருப்பன், ஒரு அளவு ஆடுவான். முதல் இருபது பந்துகள் கவனமாய் ஆடினான் , V முறையில் ஆடினான் காலில் விழும் பந்துகளை மட்டும் லாங் ஆன் லாங் ஆப் திசையில் ஆடினான், நல்ல அளவில் எழும்பும் பந்துகளை விட்டு விடுவான் குச்சிக்கு வரும் பந்து defence செய்வான்.

ஜோதி பந்து வீச வந்தான். ஜோதி ஒரு மித வேக பந்து வீச்சாளன். அவன் காதலி பார்த்துக்கொண்டிருக்கிறாள் நன்றாய் வீச வேண்டும். ஜோதியின் பலமே line length பந்து மெதுவாக வரும் ஆனால் ஆட முடியாது ஆனால் லூசாக வந்தால் அடி நொறுக்கி விடலாம் வேகம் கம்மி. ஜோதி அவன் காதலி பார்த்துக்கொண்டிருக்கிறாள் நன்றாய் போட வேண்டும் என்ற நினைப்பிலேயே முதல் பந்தை OP யாக குத்தினான் அருண் முதல் பந்தில் அடித்தது ஆறு ரன்கள். அடுத்த பந்து length குறைவான பந்து மிட் விக்கெட் திசையில் நான்கு ரன்கள். அப்புறம் இரண்டு wide என்று ஜோதி கொடுத்தது 18 ரன்கள். ஜோதி ஒரு ஓவருடன் நிறுத்தப்பட்டான். ஐம்பது ஓவரில் சௌராஷ்டிரா கல்லூரி அடித்த ரன்கள் 287 அருண்
80 ரன்களும் அணித்தலைவர் சந்தோஷ் கோபி 125 சார்லஸ் 35 ரன்களும் எடுத்தனர்.

அந்த university கப் சௌராஷ்டிர காலேஜ் எடுத்தது. அருண் university அணிக்கு தேர்வு செய்யப்பட்டான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கார்த்திக் ஜோதி இருவரும் முக்கியமான நேரத்தில் விளையாடுவதில்லை என்பதால் தேர்வு செய்யப்படவில்லை. university அணியிலும் அந்த பெயர் தெரியாத காதலியின் காதலனும் ஆனான் அருண் .

ஆடைகள் உன்னை கட்டிக்கொள்கின்றன


வெயில் அதிகாமனவுடன்
வீதியை பார்த்தேன் நீ வந்து கொண்டிருந்தாய் ....
வெயிலையே பிரகாசபடுத்தியவள் நீ ....... !


நீ
குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது
குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!


நீ ஆடைகள்
உடுத்துவதில்லை ஆடைகள்
உன்னை கட்டிக்கொள்கின்றன ....!


மழை உன்னை தொட வந்தது ....
குடை உன்னை காத்து காதலை வெளிப்படுத்தியது ...!
உனக்கு இத்தனை காதலர்களா .................
நீ யாரை காதலிக்கிறாய்?????

Tuesday, 9 March 2010

என்னோடு வா வீடு வரைக்கும்






















அவ பார்க்கவே இல்ல நான் பார்த்துக்கிட்டே இருந்தேன் . ஒரு கடை அவ ஏதோ வாங்கிகிட்டு இருந்தா. நான் உள்ள நுழைஞ்சேன் "என்ன வேணும் " அப்படி கேட்டான் கடைக்காரன் "வாட்டர் பக்கெட்" அப்படின்னு சொன்னேன்.காச மட்டும் கொடுத்துட்டு வாட்டர் பக்கெட் கூட வாங்காம அவ பின்னாடியே வந்துட்டேன்.கடைசில பார்த்தா நான் வேலை தேடரப்ப இருந்த அதே தெருவுல தான் அவ வீடாம்.

அவ தினமும் காலைல ஒரு கடைல ஏதோ வாங்குவா, நான் அவள பார்க்கிற ஆர்வத்துல என்ன வாங்கறான்னு கவனிச்சதில்லை. நானும் ஒருவா பூத்ல போன் யாருக்காவது செய்வேன். அவ என்னைய மொறச்சு பார்ப்பா. அவ வீட தாண்டி தான் வெளில போனும் நான் போறப்ப எல்லாம் அவ வீட்ல இருக்காளான்னு பார்த்திட்டு போவேன். அது அவளுக்கும் தெரியும். அவளும் அதிகமா பார்ப்பா. பார்க்கிற பொண்ணுகள தான் திருப்பி திருப்பி பார்க்க தோணும். அவ வீடு இருக்கற இடத்துல ஒரு வளைவு இருக்கும் அந்த சந்து திரும்பிய சந்து
அது என்னமோ என் வாழ்க்கைய திருப்பி போட்டுச்சு.

நான் பார்க்கிறது அவங்க அம்மா அண்ணன் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு என்ன பார்த்தாலே மொறைப்பாங்க அவங்க அம்மா. அப்புறம் நம்பர் வாங்கினேன் யாருமே இல்லை என்று தெரிந்தால் பேசுவேன். ப்ரொபோஸ் பண்ணேன் அவளும் பேசிக்கிட்டே இருந்தா. பசங்க சொன்னாங்க அவ மோசாமான பொண்ணுன்னு அவங்க சொன்ன பிறகு அவங்களோட பேசறதில்ல. ஏனோ எனக்கு அப்படி கோவம் வந்திச்சு.

அவ வீடு திருப்பத்துல சில பாச்சுலர் பசங்க இருந்தாங்க ஒருத்தன் தெருவுலே உட்கார்ந்து இருப்பான் எனக்கு அவன பார்த்த எருச்சல் வரும். உங்களுக்கு செல்வராகவன் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் நா பிரச்சனை இல்ல. எனக்கு என் காதலிய ரொம்ப பிடிக்கும் உனக்கும் பிடிக்கும் நா பிரச்சனை. அவன் ஒரு பஜாஜ் m 80 வண்டில ஏறி உக்காந்து இருப்பான். அவ வீடு முன்னாடி எனக்கா எரிச்சல் வரும்.

ஒரு நாள் குடை பிடிச்சிகிட்டு அவ வீடு முன்னாடி நிக்கற பஜாஜ் m 80 ல உட்கார்ந்து இருக்கான். நான் மழையா இருந்தாலும் நீச்சல் அடுச்சுக்கிட்டாவது அவள பார்க்க போவேன். அவனும் உட்கார்ந்து இருந்தான் கோவம் வந்திச்சு.

அப்புறம் என்னன்னாலாமோ பிரச்சனை வந்திச்சு. அவ பாட்டுக்கு சர்வ சாதாரணமா போய்டா?
அப்புறம் வேலைகிடைக்காமல் சில காலம் அப்புறம் ஒரு வேலை கிடைச்சு ஒரு வழியா வாழ்க்கையை ஓட்டுகிறேன். அவ ஏதோ அமெரிக்காவுல படிக்காறாங்க. என்ன கொடுமைனா அவ படிக்க போன நேரம் வாரணம் ஆயிரம் படம் வந்திச்சு. "அமெரிக்க இங்க தாண்ட இருக்கு" என்று சொன்னவுடனே அதற்காகவே நான் படத்த ஆறு முறை பார்த்தேன். மார்க்ஸ் பிடித்த எனக்கு அமெரிக்கா பிடிக்காது. ஆனா அந்த படம் பார்த்தவுடனே பிடிச்சிருந்தது. நான் கூட போகலாம்னு நினைச்சேன் ஆனா வாழ்கை வேற சினிமா வேற. இருந்தாலும் " அமெரிக்க இங்க தான் இருக்கு" அப்படின்னு வாரணம் ஆயிரம் படத்துல சொன்ன வசனம் என் காதுக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு.


சரி நான் யாரு அப்படின்னு கேட்குறீங்களா ................நான் தான் கார்த்திக் விண்ணை தாண்டி எல்லாம் வர வேண்டாம் வீட்டுக்கு வந்த போதும் அப்படின்னு
சொல்லிருக்கேன்.நான் அதே தெருவுல தான் இருக்கேன் கடைசியா வந்தப்ப அவ பார்த்தா நான் பார்க்கவே இல்ல....!