Sunday, 16 May 2010

கடவுளிடம் இருக்கும் உலக அரசியல்

















தனிநபர் தீர்விலே மக்கள் அதிகம் போகும் இடம் கடவுள் மற்றும் மதங்கள் . ஒவ்வொரு மதமும் கடவுள்களும் மனிதனிடம் நீர்த்து போகும் செயலை செய்துகொண்டே இருக்கின்றன. அதன் வாசகத்திலேயே அரசியல் பதுங்கி இருக்கும். வெறும் கடவுள் என்றால் மூடநம்பிக்கை என்று சொல்வதை விட ஏன் மூடநம்பிக்கை என்று பார்ப்போம் .உதாரணமாய் நாம் பலஇடங்களில் பகவத் கீதை சாரம் என்று கீதா சாரத்தை பார்த்து இருப்போம் அது என்ன சொல்கிறது கூர்ந்து கவனியுங்கள் "எது நடந்ததோ அது நன்றாகவேநடந்தது எது நடக்க இருக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும் ,எதை நீ கொண்டுவந்தாய் கொண்டு செல்ல , ....." இப்படி போகிறது வாசகம் .அதவாது இது மறைமுகமாய் விதி என்று இருக்கிறது என்று உணர்த்துகிறது , அதவாது இங்கு நடப்பது எல்லாமே ஏற்க்கனவே முடிவு செய்யப்பட்டது என்பது போல் கருத்தை சொல்கிறது. ஒரு அரசியல்வாதியோ ஒரு முதலாளியோ சுரண்டினால் கூட நடப்பது மட்டுமே நடக்கும் என்ற எண்ணத்தை விதைக்கிறது , மனிதனின் மாதை நீர்த்துப்போக செய்கிறது .

சரி இந்தகொள்கையால் சுரண்டுபவனுக்கு பாதிப்பு இல்லை , சுரண்டப்படுபவன் பாதிக்கபடுகிறான் . சரி இப்பொழுது ஒரு அரசியல்வாதி சுரண்டிக்கொண்டிருக்கிறான் என்றால் "எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கிறது" என்றால் அதை அதாரிப்பது போல் உள்ளதே . மதங்களை கடவுளை தீவிரமாய் நம்பும் பக்தகோடிகள் இதை கடைப்பிடிப்பதால் தான் சுரண்டப்பட்டாலும் நடப்பது தான் நடக்கும் கடவுள் பார்த்து கொண்டிரிருக்கிறார் என்ற மனநிலை வருகிறது . மக்களிடம் இயல்பாய் வெளிப்படும் கோபம் கூட வீபுதி அடித்து நீர்த்துப்போக செய்யப்படுகிறது .

நம் ஊரெங்கும் கோவில்கள் அதிகமாக அதிகமாக ஊழல்களும் அராஜகமும் அதிகமாகிக்கொண்டே போகிறது . உலகில் உள்ள அனைத்து மதங்களும் அதிகாரம் செய்பவனை அதே இடத்தில வைத்து அழகு பார்க்கிறது அடிமையை போரடவிடாமல் செய்யும் வேலையை நன்றாக பார்க்கிறது என்றே சொல்லவேண்டும் . " ஊசி முனையில் ஒட்டகம் கூட நுழையலாம் , பணக்காரன் சொர்கத்திற்கு செல்ல மாட்டான் " இது பைபிள் வாசகம் . பார்பதற்கு சாதரணமாய் தோன்றினாலும் அதன் உள்ளே ஒரு அரசியல் இருக்கிறது . சொர்க்கம் என்ற ஒன்று பணக்காரனுக்கு இல்லை என்று சொல்கிறது . ஒருவன் சுரண்டப்படும் பொழுது இவ்வாக்கியத்தை சொன்னால் அவன் போராடவே மாட்டான் . சுரண்டப்படும் பொழுது மனதிலே நினைத்துக்கொள்வான் உனக்கு நரகம் எனக்கு சொர்க்கம் என்று.

மறுமை என்று இருப்பதை போல் ஒரு மாயையை மதங்கள் செய்கின்றன. மறுமையில் சொர்க்கம் நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் என்று சாதாரண பாமர மக்கள் நினைத்துக்கொள்வான் , இது சுரண்டுபவனுக்கு வசதியாய் இருக்கும். கடவுள் என்று ஒன்றை நினைத்துக்கொண்டு அதனிடம் புலம்புவதால் மனஅழுத்தம் மட்டுமே குறையும் அதை கடவுள் தான் மனமைதியை கொடுக்கிறார் என்ற ரீதியில் புரிந்துகொள்கிறான் பாமரன் . அதனால் எவன் கடவுளை கும்பிடுகிரனோ அவன் சக மனிதனுக்கு தீங்கு நேர்ந்தால் குரல் கொடுப்பதில்லை , எல்லாமே விதி நாம் எதற்கு குரல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறான் . கடவுள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறாரே நாம் தீர்வு சொல்லமுடியாது என்று நினைக்கிறான் . இந்த கோவிலுக்கு போ அந்த கோவிலுக்கு போ என்று மற்றவனை திருத்தும் வேலையை செய்கிறான்.

எல்லா மதங்களும் இம்மை மறுமை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு மனிதனை நீர்த்து போக செய்கின்றன. எந்த கடவுளும் மனிதனின் தற்காலிக பிரச்சனைக்கு தீர்வு சொல்வதாய் இல்லை, மறுமையில் நீ நன்றாக இருப்பாய் என்று சொல்கிறது. இல்லாத மறுமையை நோக்கி பாமரன் செலுத்த படுகிறான்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வெறும் விவாத பொருள் அல்ல , அதையும் தாண்டி அதன் அரசியலிலே தான் உலகம் இயங்குகிறது.எனக்கு இன்று
கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் ஒரு காலத்தில் பிள்ளையார் என்றால் பிடிக்கும் சிறு நாட்களுக்கு முன்னர் என்றால் சாய்பாபா பிடிக்கும் . பாபாஜி என்றே நண்பர்கள் அழைப்பார்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நானே விஞ்ஞான பூர்வமாய் உணர்ந்தேன் என்பதே உண்மை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல ??? அது எந்த அளவு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது என்பதே பிரச்சனை. கடவுள் என்ற போர்வையில் உலக அரசியல் ஒளிந்துகொள்கிறது. கடவுள் என்ற நம்பிக்கையே சுரண்டுபவனுக்கு சாமரம் வீசுகிறது. ஆதிக்கம் செய்பவன் ஆதிக்கம் செய்துகொண்டே இருப்பான் அடிமை அடிமையாகவே இருப்பான் என்ற வேலையே கடவுள் செய்கிறது. அதனால் இதை வெட்டி விவாதமாய் எடுத்துக்கொள்ள வேண்டாம், கடவுளிடம் தான் உலக அரசியலுக்கு உண்டான சாவி இருக்கிறது. அந்த சாவியை திறந்துப்பார்த்தால் உலகத்திற்கு உண்டான வாசல் திறந்துகிடக்கும் . கடவுளிடம் இருந்து சாவியை பிடுங்குங்கள் மனிதன் மண்ணிலே வாழட்டும்.

Friday, 14 May 2010

தனிநபர் தீர்வு பகுதி இரண்டு

ஒரு பிரச்சனைக்கு தனிமனித தீர்வு சாத்தியமா என்பதை பற்றி பார்த்தோம் , நிறைய நண்பர்கள் விவாதம் செய்தனர் தனி மனித ஒழுக்கம் முக்கியம் என்று சொன்னார்கள். இங்கே பிரச்சனை தனிமனித ஒழுக்கம் அல்ல தனிநபர் தீர்வு. அதாவது ஒரு தீர்வை வைக்கும் பொழுது அதன் பலன் பற்றி யோசிக்க வேண்டும் . உதாரணமாய் தண்ணி அடிப்பபவர்களை பற்றி பேசும் பொழுது தனிநபர் ஒழுக்கம் வந்தது , நான் நண்பர்களிடம் தனிநபர் ஒழுக்கத்தால் இந்த பிரச்சனை தீராது ஒட்டு மொத்த சமூகம் எழுந்திருக்கும் பொழுது தான் தீரும் என்றேன் , என் நண்பர்கள் இல்லை இல்லை ஒரு சமூகம் என்பது தனி தனி
மனிதர்களை சார்ந்தது ஒவ்வொருவரும் தன் பிரச்னையை தீர்த்தால் சமூகம் நன்றாய் இருக்கும் என்கின்றனர்.

நாம் சமூகத்தின் அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல. உதாரணமாய் விளக்க வேண்டும் என்றால், தனி மனித முயற்சியை பற்றி பார்ப்போம். எனக்கு தெரிந்து IT துறைக்காக எத்தனையோ இளைஞர்கள் தெற்கில் இருந்து கிராமத்தில் இருந்து
புலம் பெயர்ந்து வருகின்றனர்.ஒரு தனிமனிதனாய் பார்க்கும் பொழுது அது சமூக வளர்ச்சி போல் தோன்றும், ஒரு சமூகமாய் பார்க்கும் பொழுது அது வீழ்ச்சி பாதையை வகுக்கும். என் மதுரைக்கார நண்பர்கள் பாதி பேர் விவசாய பின்னணியை சேர்ந்தவர்கள் , படிப்பு எழுத்து என்று வந்து IT துறையில் இருக்கின்றனர் . ஓரளவு படிப்பு குறைந்தவர்கள் ஓட்டுனர்களாக சென்னையில் வேலை செய்கின்றனர் அவர்களின் தனிநபர் முயற்சி என்ன ஆகிறது , கிராமங்களை நகர்மயம் ஆக்குகிறது . நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் அந்த தனிப்படவருடைய முயற்சி சமூகத்திற்கு தீர்வாக இருக்க வேண்டுமே இல்லையே. சரி நகர்மயமாவது விவாசாயம் இல்லாமல் போவதால் என்ன காசு சம்பாதிக்கரானே
என்று பேசலாம் , ஆனால் நம்மை கூலி ஆக்குகிறது இந்த சமூக மாற்றம் . IT துறையில் recession நேரத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் இருக்கிறார்கள்.


ஒரு அமெரிக்க மென்பொருளிலே வேலை செய்பவர் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது, recission காலத்தில் அதற்க்கு காரணம் என்ன. மாதம் பத்து லட்சம் வாங்கிவிட்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய முடியாது ????சில பேர் நன்கு திறமையாய் வேலை செய்தாலும் , PROJECT என்று ஒன்று இருந்தால் தானே காசு வரும் PROJECT இல்லாமல் இவன் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய???? அவன் முயற்சி செய்து தான் படித்து இருப்பான் , கிராமத்தில் இருந்து வந்து நகரத்தில் வேலை வாங்கி இருப்பான் . இதற்க்கு என்ன தீர்வு சொல்வீர்கள் அவன் விவாசாயம் கற்று இருக்க வேண்டும் என்று சொல்வீர்களா ???














சரி விவசாயியின் நிலைமை எப்படி உள்ளது விதர்பா போன்ற ஊர்களில் லட்சக்கணக்கில் விவசாயி சாகிறான் , அதே நேரம் IPL பார்க்கும் தேசம் இது. சரி தஞ்சையில் என்ன நடந்தது , இப்படி சமூகத்தில் விவசாயிக்கு ஆதரவு இல்லாத பொழுது தன்மகனை IT துறைக்கு அனுப்புகிறான் ஏழை கிழவன். நிலம் , ஏழை கிழவனின் உழைப்பு அதை மீறி விவாசாயம் என்றால் தவறு நீயாவது ஒழுங்க படித்து முன்னேறு என்று அனுப்புகிறான் ஏழை கிழவன் . ஒரு சமூக மாற்றமே அவனை நிர்பந்தம் செய்கிறது.






















இதில் தனிநபர் முயற்சி எவ்வளவு செய்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என்பதே உண்மை. அப்படி தனிநபர் தீர்வை காட்டுபவர்கள் பொருளாதரத்தை மட்டுமே முன்னேற்றத்தின் அளவுகோலாய் பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சரி நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து தான் மென்பொருள் பொறியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதற்காய் இந்தியா முன்னேறிவிட்டதா என்ன???
இந்தியாவில் தான் உலக கோடீஸ்வரகள் இருக்கிறார்கள் இந்தியா இன்றும் கூட முன்னேறிய நாடு அல்ல மற்றவர்க்கு ஒரு சந்தை . குறைவான வேலைக்கு குறைவான கூலிக்கு ஆட்கள் தேவை என்றால் இந்தியாவை பிடியுங்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் உலகம் நம்மை
பார்க்கிறது.

இங்கே தனிநபர் தீர்வு எப்படி சொல்வது,சமூகத்தில் மைய்ய பிரச்சனை என்று ஒன்று இருக்கும் அந்த பிரச்னையை தீர்க்க அணிதிரண்டு தீர்வு காணுவதன் மூலமே தனிமனித பிரச்சனை தீர்க்க படும் . தனிநபர் பிரச்சனை அந்த சமூக பிரச்சினையிலே புதைந்து இருக்கும் , மைய்ய புள்ளி தீர்வடையும் பொழுதே அனைத்தும் விடுதலை பெரும் என்பதே உண்மை.

ஒழுக்கம் என்பதெல்லாம் ஒரு அளவு கோல் மட்டுமே . உதாரணமாய் ஒரு அப்பா தன் மகன் தண்ணி அடிக்கிறான் என்று ஏற்றுக்கொள்ளும் மனது, தன் மகன் சமூகத்திற்காக இறங்கி குரல் கொடுக்கிறான் என்றால் "ஊரார் வம்பு உனக்கு எதுக்கு " என்பார் . இங்கே ஒழுக்கம் எதை சொல்லி தருகிறது அடுத்தவனை கவனிக்காதே நீ பார்த்து முன்னேறிக்கொண்டே இரு என்பதை. பின்தங்கிய ஆண் ஆதிக்க சமூகத்தில் ஆணுடன் பேசும் பெண்களை கேவலமாய் பார்க்கும் மனம் உள்ளது , இங்கே ஒழுக்கம் கெட்டவள் பெண் ????? அப்பொழுது ஒழுக்கம் எங்கு உள்ளது .ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அளவு கோள். நீங்கள் பத்து பேரை கூடிவந்து ஒழுக்கம் பற்றி கேட்டால் ஒவொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்வார்கள் என்பதே உண்மை. ஒழுக்கம் தனிமனிதனுக்கு கூட தீர்வாகாது அப்படி இருக்க எப்படி சமூகத்திற்கு தீர்வு கொடுக்கும்.


தனிமத தீர்விலே ஒழுக்கம், முயற்சி பற்றி பார்த்தோம் , இந்த விடயங்களில் அது தனிமனிதனுக்கு தீர்வாகாது . அப்துல் கலாம் M S உதையமூர்த்தி போன்றவர்கள் சுயமுனேற்ற புத்தகங்கள் எழுதி உள்ளனர் . shivkhera "YOU CAN WIN " என்ற புத்தகம் எழுதுகிறார் . இவர்கள் எல்லாம் சமூகத்தை முழு பொருளாய் பார்க்காமல் தனிதனி விடயமாய் பார்க்கின்றனர். சரி ஒட்டுமொத்த சமூக தீர்வு என்பது என்ன, அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.


எல்லா சாலைகளும் உங்கள் வீட்டில் இருந்து ஆரம்பிக்கவில்லை, உங்கள் வீடு சாலையில் உள்ளது .

Wednesday, 12 May 2010

அந்நியன் போன்ற படங்கள் சொல்லும் தனிமனித தீர்வு சாத்தியமா















நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. நாம் அந்த பிரச்னையை தனியாய் தீர்க்க முற்படுவது உண்டு , சரி அப்படி சரியாய் தீர்க்க முடியுமா . நம் பிரச்சனைகள் எங்கு இருந்து தோன்றுகின்றன என்று பார்ப்போம்??? உதாரணமாய் நான் மதுரையில் இருந்து வந்து சென்னையில் வேலை செய்கிறேன் என்றால் என் வாழ்க்கை இயந்திரமாய் போகிறது என்று வைத்துக்கொள்வோம் . இதற்க்கு என்ன தீர்வு நான் திரும்பவும் மதுரையில் போய் வேலை செய்ய முடியுமா ????? சரி அப்படி மதுரைக்கு போய் வேலை செய்தால் பொருளாதார பிரச்சனை இருக்குமே???? நீங்கள் எதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொள்ளுங்கள் இது பொருந்தும்.

ஒரு மனைவி கணவன் குடிக்கிறார் என்று சொன்னால்??? அவர்கள் நடுத்தர வர்க்கமாய் இருந்தால் கணவருக்கு வேலையில் மன அழுத்தம் இருக்கும் அதுவும் IT துறை போன்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். சரி அடித்தட்டு வர்க்கமாய் இருந்தால் என்ன பிரச்சனை ????கணவன் லாரி ஒட்டுபவனாகவோ இல்லை சித்தாள் இல்லை என்றால் மலம் அல்லுபவனாகவோ இருந்தால் வேலை பளு கட்டாயம் அவன் குடித்தே ஆக வேண்டும் . அப்படி இருக்கையில் இங்கே சமூக மாற்றம், முதலாளிகளால் சுரண்டப்படாமல் இருப்பது மூலமே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதாவது இங்கே தனி நபர் பிரச்சனை என்பது தனி நபர் பிரச்சனை அல்ல அது சமூக பிரச்சனை எப்பொழுது சமூக பிரச்சனை தீர்கிறதோ அப்பொழுதே தனி மனிதனுக்கும் தீர்வு கிடைக்கிறது.

தனிமனிதன் தீர்வை நோக்கி எங்கே போகிறான். கடவுள், மதம், மதம் சார்ந்த சாமியார்கள், மதம் சாராத சாமியார்கள் , முயற்சி, அராஜகம், பகுத்தறிவு . இது எல்லாம் தனிநபர் தீர்வு இது எல்லாம் உண்மையிலேயே தீர்வா. கடவுள் மதம் எல்லாம் என்ன சொல்கிறது கடவுள் இருக்கிறார் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறது , அதாவது நீ எதை கண்டும் கோப படக்கூடாது கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று எளிமையாய் சொல்கிறது . இந்திய போன்ற நாடுகளில் கடவுள் மதம் சாமியார்கள் அதிகம் அதனாலேயே மனிதன் நீர்த்துப்போய்சமூகம்
அவலமாய் உள்ளது. அதாவது மனிதனுக்கு கோபம் வந்தாலும் , அவன் என்ன எடுத்துக்கொள்கிறான் கடவுள் இருக்கிறார் நாம் எல்லாம் பேசக்கூடாது நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார் நமக்கு நீதி கிடைக்கும் என்று இருக்கிறான். சமூக அவலங்களை கண்டு கொதிப்பதில்லை . கடவுள் மதம் போதை போல கஷ்டங்களை மறக்கடித்து மயக்க நிலையில் வைத்துக்கொள்ளும் அதனால் கஷ்டங்களை மறக்கிறான் சாமானியன்.

மதம் சாரதா கடவுள் எல்லாம் என்ன சொல்கின்றன? என்ன சொல்கிறது ஜென் கதைகள் . நாளை பற்றி யோசிக்காதே பழசை மற, இந்த நொடி மட்டுமே உண்மைஎன்கிறது அதனால் மனிதன் போராடாமல் நீர்த்துப்போகிறான். ஆக மொத்தம் என்ன சொல்கிறது கடவுள் மதங்கள் நீர்த்து போகும் வேலையை பார்க்கின்றன ,அடி தட்டு மனிதனிடமும் , நடுத்தரவர்க்க மனிதனிடமும் கோபம் வராமல் இதுவரை கொள்ளை அடிக்கிற முதாலாளியை காப்பாற்றுகின்றன .

தனிமனித முயற்சியை எடுத்துக்கொள்வோம் , இப்பொழுது எல்லாம் நிறைய சுயமுன்னேற்ற புத்தகங்கள் வருகின்றன. ஏன் அப்துல் கலாம் கூட கனவு காண் என்கிறார் தனிமனித முயற்சியை ஈழத்திலே எடுத்துக்கொள்வோம் , அந்த சமூகம் குண்டடி படும் பொழுது எப்படி முயற்சி செய்து வாழ்கையில் வெற்றி பெறமுடியும் அந்த இடத்தில் மக்களக்கு விடுதலை கிடைப்பதை பொறுத்தே தனிநபரின் முயற்சி வெற்றி பெறுகிறது . ஒரு தத்துவம் என்றால் எல்லா இடத்திலும் பொருத்தி பார்த்தால் வெற்றி பெற வேண்டும் . சரி ஒரு தனிமனிதன் முயற்சி செய்து JAVA படிக்கிறான் என்று வைத்துக்கொண்டால் , IT துறை தோல்வி அடைகிறது என்றால் அவன் தனிமனித முயற்சி என்ன ஆகும், பொருளாதார வீழ்ச்சிக்கு அவன் என்ன செய்வான். அதனால் ஒரு தனிமனிதனுக்கு தீர்வு சமூகத்தில் இருந்து கிடைக்கிறதே அன்று அவனிடம் இருந்து தீர்வு கிடைப்பதில்லை.

சரி படங்கள் எப்படி எடுக்கிறார்கள் , உதாரணமாய் அந்நியன் என்ற படம் எடுத்துக்கொண்டால் தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுகிறது , ஒவ்வொருவரும் ஒழுக்கமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அதன் நாடி ஒரு flash back காட்சியிலே விரிகிறது, ஒரு சின்ன தவறினால் கதாநாயகன் தங்கை இறந்து விடுகிறாள் , அதற்க்கு காரணம் தனிநபர் ஒழுக்கம் என்று சொல்கிறது படம்.சரி தனிநபர் ஒழுக்கம் தான் காரணமா அந்த கவனக்குறைவிற்கு . சரி அப்படி ஒரு ஒரு மனிதனையும் தனி தனியாக திருத்த சாத்தியமா ???எவ்வளவு காலம் திருத்திக்கொண்டிருப்பார்.
ஒவொவொரு பிரச்னையும் தொடர்பு உடையது, அதை தனித்தனியாய் பிரித்து தீர்க்க முடியாது.

உதாரணமாய் அலுவலில் வேலை அதிகம் பார்ப்பதால் குடும்பத்தை கவனிக்க முடியாததால் மன உளைச்சலால் தான் கள்ளக்காதல் வருகிறது என்பதே உண்மை . கள்ளக்காதலை ஒழிக்க வேண்டுமானால் தனிநபரை திருத்துவதை விடுத்து , வேலை நேரம் கம்மி செய்தாலே போதும் , மன உளைச்சல் கம்மியாகும் , வேலை நேரம் குறைய வேண்டுமென்றால் என்ன வேண்டும் முதலாளித்துவம் சுரண்டலை நிறுத்த வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா????? தனிமனித ஒழுக்கம் என்பது கூட சமூக கட்டமைப்பில் வருகிறது . இப்பொழுது PUB டிஸ்கோதே போகும் IT துறையினர் எல்லாருமே பிறக்கும் பொழுது பீர் பாட்டிலுடன் பிறந்தவரா என்ன , மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி அப்படி இருந்துவந்தவர்கள் இங்கு IT வேலை மனஉளைச்சல் உடனே பார் pub ஆட்டம் கொண்டாட்டம் , இதன் வேர் எங்கு உள்ளது , அவர்களுக்கு நேரம் கம்மியாய் வேலை இருக்கவேண்டும் மனஉளைச்சல் தராத வேலையாய் இருக்க வேண்டும் என்பதை சார்ந்ததே தவிர , அது தனிமனித ஒழுக்க சமந்தப்பட்டது அல்ல .

அந்நியன் படத்திலே எச்சி துப்புபவரை கூட விக்ரம் கொள்வார், சிரிப்பாய் உள்ளது . தனி தனியாய் ஒருத்தன் ஒரு விடயத்தை தீர்க்க முடியாது . இந்த ராபின் ஹூட் வேலை எல்லாம் வேலைக்கு ஆகாது , சினிமாவில் கைதட்ட வேண்டுமென்றால் உதவும் . நாம் சமூகத்தில் ஒரு அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல. சமூக பிரச்சனைகளை தீர்ப்பது மூலமே தனிமனித பிரச்சனை தீர்க்கப்படும் என்பதே உண்மை. ஏன் என்றால் நாம்
எல்லாமே சமூகத்தின் படைப்புகள் . சமூகம் நன்றாய் இருக்கும் பொழுதும் அதன் படைப்புகளும் நன்றாய் தான் இருக்கும்.

நம் தமிழ் படங்கள் gentle man , அந்நியன், மகாநதி, பம்பாய், நான் கடவுள் , ரோஜா போன்ற படங்கள் தனிநபரிடம் இருந்து தீர்வை சொல்கின்றன ,சமூக அவலங்களை காட்டாமல் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் , அவன் வரும் கருத்து என்று போகின்றன . கதைகள் தனிநபரின் பார்வை ஓட்டத்தில் போகின்றன, அதனால் தன்னை கடுவுளாய் நினைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கின்றன. ஆனால் தனிநபர் என்பவர் அறிவாளி அல்ல , அவர் சமூகத்தின்
அங்கம் எப்பொழுது சமூக பிரச்சனை எல்லாம் கலையப்படுகிறதோ அப்பொழுது தான் தனிமனிதனுக்கு தீர்வு . ஒரு தனிமனிதன் ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றாலும் அவன் சமூகம் மாற்றம் பெறவேண்டும்.

சமூகத்தில் அந்நியனாய் அறிவாளியாய் இருந்து தீர்ப்பு சொல்ல முடியாது . சமூகத்தில் ஒரு அங்கமாய் இருந்து தீர்வுக்காக போராடலாம்

Sunday, 9 May 2010

போபால் விஷ வாயு தாக்குதல்

யார் தீவிரவாதி - பகுதி ஒன்று
















நாம் கசாபை தீவிரவாதி என்கிறோம் சரி அவனால் பல பேர் இறந்திருக்கிறார்கள் அவன் தீவிரவாதி என்றே வைத்துக்கொள்வோம் இன்னும் எத்தனையோ தீவிரவாதிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. மக்கள் ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறார்கள் அவர்களை சொல்லி குற்றம் இங்கு உள்ள ஊடகங்கள் சிந்திக்க விடாத வேலையே தொடர்ச்சியாய் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தியா என்னமோ ஜனநாயக நாடு போல ஊடகங்கள் மக்களுக்கு கட்டமைக்கின்றன. இந்தியாவை சேர்ந்த உளவு அமைப்பான ரா வை சேர்ந்தவர் சர்பஜத் சிங்க்,அவர் பாகிஸ்தானில் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்பட்ட தூக்கு தண்டனைகைதி. இதன் பெயர் தீவிரவாதம் இல்லையா?? இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் போன்ற நாடுகளில் மேலாதிக்கம் செய்கின்றது என்பதே உண்மை.














டிசம்பர் 2 இரவு 1984 போபாலின் துக்க தினம். MIC மெத்தில் ஐசோ சயனட் என்னும் விஷ வாயு கசிந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அந்த விஷ வாயு தாக்குதலின் அதிர்வு போபாலை விடுவதாய் இல்லை. இன்னும் தண்ணீர் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாய் பிறக்கிறது . இதை செய்தது Union Carbide India Limited (UCIL ) என்னும் நிறுவனம். ஆனால் அரசாங்கம் அந்த மக்களை காப்பாற்றுவதை விட அவர்களை காப்பதிலே குறியாய் இருந்தது . அரசுகம்மியான நபர்கள்பாதிக்க பட்டதாய் கணக்கு காட்டியதன் உண்மை என்ன ???இன்னும் அதன் CEO warren anderson கைது செய்யப்படவில்லை. ஏன் நஷ்ட ஈடு கூட கொடுக்கப்படவில்லை.












இதில் ஒரு விஷமத் தனம் உள்ளது தெரிகிறதா . போபால் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் செய்தது ஒரு பெரிய முதாலாளி வர்க்கம். 100 பேர் கொன்ற காசாப் தீவிரவாதி என்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற Warren Anderson இந்நேரம் தூக்கில் போட்டிருக்க வேண்டுமே ??? சரி இங்கு ஒரு முரண்பாட்டை காணலாம் , முதலாளிகள் உயிர் மலிவானதல்ல அதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் முதாலாளி காப்பாற்ற படுகிறார் காசாப் விடயத்தில் அவன் குறிவைத்தது தாஜ் ஒபேரா போன்ற முதலாளிகள் தாங்கும் இடம் அந்த உயிர் தான் மலிவானது இல்லையே அதனால் இந்த ஊடகங்கள் அதை கவர் செய்யும், மக்களும் அதை கிளிப்பிள்ளை போல நம்புவார்கள். சரி மும்பையை போபாலை விடுங்கள் சம காலத்தில் இருக்கும் விதர்பா விடயம் என்ன ஆயிற்று அங்கே தினம் தினம் விவாசாயி செத்துக்கொண்டிருக்கிறான் இந்த ஊடகம் அதை காட்டுவதாய் இல்லை. ஏன் பதிவர்கள் கூட IPL மற்றும் சுறா படத்திற்கு பேசும் பதிவர்கள் விதர்பா பற்றி பேசுவதில்லை, இதே ஊடகம் என்ன சொல்கிறதோ அதையே சொல்கின்றனர் என்பது வேதனையிலும் வேதனை. ஊடகம் தூக்கில் போட வேண்டுமென்றால் இவர்களும் அதையே வழி மொழிவார்கள் ,ஊடகங்கள் முதாலாளிக்கான ஊடகங்கள் இந்த பதிவுலகமும் அதையே பிரதிபலிக்கிறது.

கசாபை தூக்கில் போடவேண்டும் என்பவர்களுக்கு ஒரு கேள்வி நூற்று கணக்கில் மக்களை கொன்ற கசாபே தூக்கில் தொங்க வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற கொன்ற Warren Andersonஉயிரோடு இருக்கிறாரே என்ன செய்ய ????

Thursday, 6 May 2010

கசாப் மட்டும் தான் குற்றவாளியா













மும்பை தாக்குதலுக்கு கசாப் மட்டுமே காரணமா என்ற ரீதியில் வினவு கட்டுரை அமைத்து இருக்கின்றது ..........பழைய ஆறு கட்டுரைகளை மீள் பதிவு செய்துள்ளது .இப்பொழுது அலறும் லதா மங்கேஷ்கர் மற்றும் ஊடகங்கள் 92 இனக்கலவரம் பொழுது அழுக வில்லையே . ஏன் தாஜ் ஹோட்டல் என்றால் ஒரு நீதி சராசரி மக்கள் என்றால் ஊடகங்களுக்கு ஒரு நீதியா. மேலும் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஏன் தூக்கில் போடவில்லை , பாபர் மசூதி இடிப்பை செய்த அத்வானியை என்ன செய்தார்கள் அது எல்லாம் தீவிரவாதம் இல்லையா என்ற கோணத்தில் பல அரசியல் விடயங்களை முன்வைக்கிறது கட்டுரைகள் .சரி தவறு என்று ஒரு புறம் இருந்தாலும் விவாதித்தால் ஆழமாய் போனால் நமக்கே சில விடயங்கள் புரியும் என்பதே உண்மை ஆர்வமுள்ளவர்கள் வினாவில் விவாதியுங்கள் .

என்னை பொறுத்த வரை பக்கத்துக்கு ஊரான விதர்பா என்னும் ஊரில் கடந்த 20 வருடங்களாய் லட்சக்கணக்கான விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இந்த ஊடகங்கள் என்ன செய்தன . தாஜ் ஹோட்டல் என்ற ஒரே காரணம் முதலாளிகள் கூடும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு இவ்வளவு மரியாதையா ..
கசாப் மட்டுமே இதை செய்திருப்பாரா , மகேஷ் படத் மகனின் பெயர் அடிப்பட்டதே அது என்ன ஆச்சு ????? ஏன் மும்பை குண்டு வெடிப்புகளில் சஞ்சய் தத் பெயர் அடிப்பட்டதே என்ன ஆச்சு ???? கடை நிலையில் இருக்கும் தீவிரவாதி மாட்டுமே கண்ணில் படுவாரா.

சரி இந்தியா இலங்கையில் என்ன பண்ணி கொண்டிருக்கிறது அது தீவிரவாதம் இல்லையா ???? இந்தியாவிற்கு ஏன் இந்த ஜனநாயக வேடம் . சரி மும்பையில் முஸ்லிம்கள் பாதுக்காப்பாய் வாழத்தான் முடிகிறதா???? இதை எல்லாம் ஆராய்ந்து விட்டு தீவிரவாதம் என்னும் விடயத்திற்குள் செல்ல வேண்டும். உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் , அமெரிக்க ஈராக்கிலும் ஆப்கானிலும் செய்ததே அது தீவிரவாதம் இல்லையா????? ஒசாமாவை ரஷ்யாவை எதிப்பதற்க்காய் வளர்த்தது அமெரிக்க இது உலக வரலாறு...எது தீவிரவாதம் நாமெல்லாம் தேசியம் என்னும் மாயையில் இருக்கிறோமா ??? ஏன் இந்த விடயத்தை மட்டும் பற்றி எழுதும் ஊடகங்கள் விதர்பா என்னும் விடயத்தை விட்டுவிட்டார்கள் ????தாஜ் ஹோடேலில் உயிர் என்றால் அது நாட்டை உலுக்கும் பிரச்சனை என்று சித்தரிக்க படுகிறதா .....

http://www.vinavu.com/2010/05/06/kasab/

மேலும் விவாதங்களுக்கு வினவு தளத்திலே அரசியல் ரீதியாய் பல விவாதம் நடந்துகொண்டிருக்கிறது கட்டுரைகள் ஆழ அரசியல் பார்வை உள்ளன . அது சரி என்று சொல்லவில்லை தவறு என்று தோன்றினாலும் விவாதியுங்கள்.விவாதங்கள் நமக்கே பல உண்மைகளை கற்றுக்கொடுக்கும்

நிலக் கருத்தடை















ஊர் முழுக்க
நிலங்களை கருத்தடை செய்தது கோகோ கோலா.....!
கிராமத்து கிழவனுக்கு மார்க்ஸ் தெரியாது
போராட்டம் தெரியாது .............
கடையில் சென்று கோக் வாங்கினான்
கிழவன் ............
கழிவு நீரை கழிவறையில் ஊற்றி விட்டு ......
பாட்டில் நசுங்க காலில் ஏறி மிதித்து
அதன் மேல் காரி உமிழ்ந்து எதிர்ப்பை பதிவு
செய்தான் கிழவன் ...................!

Wednesday, 5 May 2010

கடற்கரையில் கடவுள்


















கடற்கரை ஓரம்
ஒரு கோவில் இருந்தது
"கடவுள் மண்ணை காப்பார்" என்று மக்கள் நம்பினார்
சுனாமி வந்தது கோவிலுக்குள்
கடவுள் இழுத்து செல்லப்பட்டார்
புதிய கடவுள் சிற்பியால் உருவாக்கப்பட்டார் .......................................
மணல் மேடுகள் உருவாக்கப்பட்டன ..............
மண்ணால் ஆனா கற்கள் கொண்டு உயர்ந்த மதில்கள் எழுப்ப பட்டன .............
"கடவுள் மண்ணை காத்தாரா ?????
மண் கடவுளை காத்ததா