Sunday, 13 June 2010

பிரபா அண்ணாவிற்கு

நேற்று இரவு நண்பன் புலிகேசியுடன் பேசிக்கொண்டிருந்தேன் , அப்பொழுது அவன் ஒரு அதிர்ச்சியான விடயத்தை சொன்னான் , பிரபாகர் அண்ணனின் தம்பிதிவாகர் இறந்து விட்டார் என்று கலங்கி போய்விட்டேன் . பிரபாகர் அண்ணா பதிவுலகில் பல பேருடன் நெருக்கமாய் இருப்பவர் . எனக்கு முன்பெல்லாம் அடிக்கடி போன்செய்து
பேசுபவர், தம்பி அப்படி எழுதாத இப்படி எழுது என்று கையை பிடித்து சொல்லிக்கொடுப்பவர் . கடைசியாய் நான் சச்சின் பதிவு போட்டபொழுது கண்டித்துவிட்டு சென்றார் மறுபடியும் நான் ஒரு எதிர்வினை செய்தேன் , அன்று முதல் நானும் அவரும் பேசுவதில்லை . ஆனால் நேற்று இச்செய்தியை கேட்டு அதிர்ந்து தான் போனேன் . எத்தனையோசோகங்கள் இருக்க மரணம் மட்டும் ஏன் இவ்வளவு வலியை கொடுக்கிறது , ஏன் உலகம் இத்தனை சோகங்களை புதைத்து கொண்டுள்ளது . எப்படியும் ஒரு நாள் அனைவரும் போகக்கூடியவரே ,
ஆனால் மரணம் என்று வரும்பொழுது இனிமேல் அந்த நபரை நம்மால் பார்க்கவே முடியாது என்பது மிகப்பெரிய வேதனை .அவரை நம்மால் பார்க்க முடியாது , அவரால் நம்மைபற்றி நினைக்க முடியாது "HE IS NO MORE " என்பது எவ்வளவு வேதனை . அண்ணா உங்கள் வருத்தம் புரிகிறது , நான் இதற்க்கு முன்னால் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் .உங்கள் தம்பியின் இழப்பை ஈடு செய்ய முடியாத தம்பிகளாய் இருக்கிறோம் , ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.

Saturday, 12 June 2010

தண்டவாளம் தகர்ப்பும் சில அரசியல் சூழ்ச்சிகளும்

தமிழகத்தில் நேற்று விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட குண்டு வைத்தார்கள் , ரயில் அதிர்ஷ்ட வசமாய் தப்பியது.சரி குண்டு வைத்தது , ராஜபக்க்ஷே வருவதை எதிர்ப்பு தெரிவிக்க , ஈழம் விரும்பும் ஏதோ ஒரு தமிழர் இயக்கம் தான் செய்திருக்க வேண்டும் , என்று செய்திகள் கசிகிறது . ஊடகங்களும் செய்திதாள்களும் ஆதிக்க வர்க்கம் , மற்றும் ஆளும் வர்க்கத்தின் குரல் என்பதை மறந்து விடக்கூடாது .இந்த மாதிரி செய்திகள் வருவதால் யாருக்கு லாபம் , கொஞ்சம் யோசித்து பாருங்கள் . இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழர் இயக்கங்கள் இதை செய்யுமா ??? என்பது தான் கேள்வி . அவர்களுக்கு இங்கு பொதுமக்கள் உபயோகபடுத்தும் தண்டவாளத்தை தகர்ப்பதால் யாருக்கு லாபம் , இது அவர்களுக்கு தெரியாதா??? அப்படியே குண்டு வைக்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கு பொது மக்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் எதிரிகள் இந்தியாவை ஆளும் , தமிழகத்தை ஆளும் மற்றும் வாக்கிற்காக ஈழத்தை ஆதரித்து பேசினாலும் ஈழத்திற்கு எதிரான கட்சிகள் ,
இவர்கள் தான் இவர்களது இலக்காய் இருக்க முடியும்.


இதை வெறும் செய்தியாய் மட்டும் பார்க்காமல் ஆய்வு செய்து பாருங்கள். ஈழம் ஓரளவு தமிழகத்திலே அலையை ஏற்படுத்துகிறது , சீமான் போன்றோர் 'நம் தமிழர்' இயக்கம் என்ற பெயரிலே இயக்கங்கள் ஆதரிக்க படுகிறது .அவர்கள் செய்யும் வேலைகளில் என் அரசியல் நிலைப்பாடு வேறு. ஆனால் இங்கே இவர்களை போன்ற ஏதோ ஒரு இயக்கமே தண்டவாளத்தை தகர்த்து இருக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது . ஏன் என்றால் மக்களை நேசிக்கும் இயக்கங்கள் ,அரசியல் ரீதியான தவறான முடிவுகள் எடுத்தாலும் , இதை போல வேலைகள் செய்யமாட்டார்கள் என்பதே என் கருத்து .

சரி அப்பொழுது இந்த விடயங்களை யார் செய்திருக்க முடியும். ராஜபக்க்ஷே வந்துள்ளார் , AIRTEL நிறுவனம் IIFA விழாவிற்கு sponser செய்தது என்று அங்கங்கே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது . கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துகிறார் , ஈழம் பிணவறையில் இருக்கும் பொழுது , ஏன் சோனியா காந்தியை காட்டாயம் அழைப்பார் , சோனியா இத்தாலியின் வேலுநாச்சியார் என்று கூட அடுக்கு தொடரிலே பேசுவார் . மக்கள் இதை பார்த்து எரிச்சல் அடைய வாய்ப்பு இருக்கிறது . இந்த நேரத்தில் தமிழர் இயக்கங்கள் எழுச்சி அடையவும் இது ஒரு வாய்ப்பாய் இருக்கும் . பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டும் , இந்த தமிழர் இயக்கங்களையும் மக்களையும் அந்நிய படுத்தவேண்டும் . மக்களுக்கு இவர்கள் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படவேண்டும் . இல்லை என்றால் அரசியல் ரீதியாய் அவர்கள் வளர ஒரு வாய்ப்பு உண்டு .

அதனால் இது நடந்த அரசியல் சூழலை பார்க்கும் பொழுது யார் செய்து இருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது . மக்களுக்கான போராடும் இயக்கங்களை ஒடுக்க , மக்களையே எதிராய் ஆக்கும் வேலையை அதிகாரம் செய்தவர்கள் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள் . மக்கள் கிளிப்பிள்ளை போல ஊடகம் யாரை எல்லாம் தீவிரவாதி என்று சொல்கிறதோ அவர்களை பற்றி ஆராயாமல் , கட்டாயம் இவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு கிரிக்கெட் பார்க்க செல்கிறது நடுத்தரவர்க்கம் . வட இந்தியாவில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது கூட இதை ஒட்டி தான் என்பது அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு புரியும் . என்றுமே போராளிக்களுக்கு மக்கள் எதிரி அல்ல , மக்களை கொல்வதால் எதிர்ப்பு தான் வரும் என்ற புரிதல் அவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் . அவர்கள் அப்படி குண்டு வைக்க வேண்டுமென்றாலும்
அவர்களுக்கு எதிராய் இருப்பவரை தான் கொள்ளவேண்டும் என்று நினைப்பார்களே தவிர மக்களை அல்ல . அவர்களை தீவிரவாதியை சித்தரித்து மக்களிடம் இருந்து தனிமைபடுத்த வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது .


பின்குறிப்பு:

பிச்சைக்காரன் என்ற பதிவரின் பதிவுகளை படித்தேன் நன்றாய் எழுதிகொண்டிருக்கிறார் .
ஆனால் தமிழ்மணத்திலே அவர் வாக்கை கூட செலுத்தாமல் இருக்கிறார் . பாராட்டுபவர்கள் கூட அவருக்கு வாக்கு அளிக்க வில்லை என்பது வேதனை. krp செந்தில் என்பவரும் மிகச்சிறப்பாய் எழுதிகிறார் . இருவருமே சமூகப்ரச்சனைகளை நன்றாய் எழுதுகிறார்கள் , சில விடயங்களில்
அரசியல் மாற்றுக்கருத்து இருந்தாலும் , சமூக அக்கறையான பதிவர்கள் , அவர்கள்
பார்வை விசாலமாய் இருக்கிறது என்று நினைக்கிறான் படித்துவிட்டு சொல்லுங்கள்

KRP செந்தில்
பிச்சைக்காரன்

Wednesday, 9 June 2010

பார்த்துப்போ


அவளை பார்த்துக்கொண்டே
போனேன் ..........
"பார்த்துப்போ "
அம்மா சொல்லி இருக்கிறாளே ...........!

பார்த்து போகும் பொழுதே
கல் தடுக்கி விழுந்தேன்
"பார்த்து போ பா "
பெயர் தெரியாத பெரியவர் சொன்னார்......!

என்ன செய்ய அவளை பார்த்துக்கொண்டே
போகும் பொழுது ....எதையும் பார்த்து போக
முடியவில்லை ......!

Tuesday, 8 June 2010

தனிமையின் இசை






















வாழ்க்கை முழுவதும் தனிமை கவ்விக்கொண்டிருக்கிறது , ஏதேதோ சொல்ல முடியாத வலிகள் ரணங்கள் . மார்க்ஸ் சொன்ன இயக்கவியல் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு ,இறந்த மனிதன் எங்கே செல்வான். நாம் இறந்தவர்களை எல்லாம் சந்திக்கவே முடியாதா????? எத்தனை காதல்களை இந்த உலகம் பதிவு செய்திருக்கும் , எத்தனை பார்வை
பரிமாற்றங்களை பதிவு செய்திருக்கும். இருந்தும் ஒரு நேரத்தில் இறந்து தானே ஆக வேண்டும் , இல்லை நமக்கு பிடித்தவர் நம்மை விட்டு இறந்து தானே ஆக வேண்டும்என்பது மனதின் ஆழமான துயரத்தை ஏற்ப்படுதிக்கொண்டே இருக்கிறது . இதை எல்லாம் நினைத்து நினைத்து இரவு கவ்வி கொள்ளும் வேளையில் , விளக்கிற்கு வேலை இல்லாத
வேலையில் குலுங்கி குலுங்கி அழுததுண்டு . நான் மரணங்கள் ஏற்ப்படும் பொழுது அழுவதில்லை , அழுது புலம்பும் மற்ற நண்பர்கள் , உறவினர்களை தேற்றும் வேலையே செய்து கொண்டே இருப்பேன் , ஆனால் இறந்த அந்த நபரை என்னால் மறக்க முடியாது , தொடர்ச்சியாய் பல நாட்கள் நினைத்து நினைத்து அழுவேன் , இதை எல்லாம்நினைக்கும்
பொழுது என்ன வாழ்க்கை என்ன காதல் , என்ன குடும்பம் என்று தோன்றுகிறது . தனிமையின் இசை கொடூரமாய் இருக்கிறது , நீ தனியானவன் என்று ஆணித்தனமாய் சொல்கிறது . எந்த இசை கோர்வை உடன் சேராத இசையை வாசித்துக்கொண்டிருக்கிறது . ஒரு நேரத்தில் அந்த ஒற்றை இசை கூட காற்றில் கலந்து விடுகிறது , பேரமைதி மட்டும் இருக்கிறது . அப்பேரமைதியில் ஒரு அமைதி இல்லாத அமைதி இருக்கிறது . இறந்தவர்கள் எங்கே போய் இருப்பார்கள் , அந்த மன நிலையில் ஒரே ஒரு பாடலை மட்டும் கேட்பேன் , புதுப்பேட்டையில் வரும் " ஒரு நாளில் வாழ்கை " என்ற பாடல் . " தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை" " இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் " ....போன்ற வரிகள் , தனிமையின் இசை கொடூரமானது , நாம் எங்கெங்கோ ஓடி கொண்டிருக்கிறோம் , கடைசியில் பார்த்தால் ஒன்னுமிள்ளததர்க்கு ஓடிக்கொண்டிருப்பது போல் உள்ளது , துக்கம் பீரிட்டு வருகிறது எதற்கு இந்த உலகம் . சில நேரம் மார்க்ஸ் போல இருக்க வேண்டும் என்று இயக்கவியல் மற்றும் மனிதர்களை கூர்ந்து படிக்க வேண்டும் , போராட வேண்டும் என்று சொல்லும் மனம் , பல நேரம் dostovesky போல தனிமைக்கு தாவுகிறது , அது அர்ப்பவாதமே ஆனால் அதை நோக்கியே மனம் போகிறது .

Monday, 7 June 2010

விடத்தை கக்கிய சட்டம் போபால்
















இன்று காலையில் தேனீர் கடையில் செய்தித்தாளை புரட்டியவுடன் எனக்கு பேரதிர்ச்சி என்று சொன்னால் அது மிகை , நான் என்ன தீர்ப்பு வரும் என்று நினைத்தேனோ அதைபோலவே போபால் விடவாயு வழக்கில் நம் சட்டம் நடந்து கொண்டிருக்கிறது . நமக்கு சரி தவறு என்று விமர்சனம் செய்ய தகுதி இல்லை என்று வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்டஅந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன என்பது கண்கூடாய் தெரிகிறது . அதிலும் ஏழு பேருக்கு மட்டுமே தண்டனை இரண்டு ஆண்டுகள் , முதாலாளி வாரேன் அன்டேர்சன் சொகுசாய் உள்ளார் . அதுவும் அந்த தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொகை இருபத்தி ஐயாரிரம் கட்டிவிட்டு ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார்களாம் . என்ன கொடுமை???? தீர்ப்பே இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து தான் என்றால் , என்ன கொடுமை . இந்திய அரசு, அமெரிக்கா அண்டேர்சென்னை விசாரணைக்கு அனுமதிக்க வில்லை என்று சப்பை கட்டுகட்டுகிறது . ஆனால் காசாப் கூட பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் , அவன் வழக்கு என்றால் ஒரு ஆண்டில் தீர்ப்பு வரும் , தூக்கில் போடப்படுவான் ஏன் என்றால் அங்கு அவன் கலகம் செய்த இடம் முதலாளிகளின் கூடாரம் தாஜ் ஹோட்டல் ஓபராய் ஹோட்டல் போன்ற இடங்கள் . ஆனால் இங்கு போபால் விடயத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கபட்டாலும் இங்கு மாட்டிக்கொண்டது முதலாளி, சட்டம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. BSNL NETWORK வைத்து சுமார் 1500 கோடி ஏமாற்றிய அம்பானி வெறும் 90 லட்சம் அபராதம் கட்டிவிட்டு வெளியே வருவார்கள் , இதை 100 ரூபாய் திருடிய திருடன் ஐம்பது பைசா மட்டும் அபராதம் கட்டி அடிவாங்காமல் வெளியே வரமுடியுமா என்ன??? விட வாயு கொன்றதை விட , சட்டம் விடவாயுவை கக்கிகொண்டிருக்கிறது.


ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை . சரி போபால் விடயத்திற்கு வருவோம், 100 பேரை கொன்ற கசாப் தீவிரவாதி என்றால் , 1000 கணக்கில் கொன்ற இன்னும் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் போபால் போன்ற இடத்தில் எப்படி இருக்க வேண்டும் தண்டனை . வெறும் ரெண்டு ஆண்டு தண்டனையாம் அதுவும் முதலாளி அன்டேர்சன் அவருக்கு
கிடையாது , ஏன் என்றால் அவரை விசாரிக்க அமெரிக்க அனுமதிக்கவில்லையாம். அப்படி அனுமதிக்கவில்லை என்றால் உலகத்தின் முன் இந்திய ஊடகங்கள் இதை கவனத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்க வேண்டுமே . உலகமே அன்டேர்சன் எதிராய் குரல் கொடுக்க வைத்திருக்க வேண்டுமே . கசாப் விடயத்தில் வீரத்தை காட்டிய ஊடகங்கள் இதில் ஏன் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை . ஏன் என்றால் இவர்கள் நோக்கமே முதலாளியை காப்பாற்றுவது . முதலாளிக்கு ஓபராய் ஹோடேலில் தீங்கு நேர்ந்தால் உலகத்தின் முன் தீவிரவாதம் என்று கூச்சலிடு . ஆனால் போபாலில் செத்து இருப்பது வெறும் பத்தாயிரம் பேர் தானாம் அதுவும் சாமானியர்கள் , போய் சாகட்டும் , அன்டேர்சன் பாதுக்காபாய் இருக்கிறாரா என்று பாதுகாக்கிறது சட்டம் . இந்திய அரசு அவரை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காது என்பதே உண்மை ,மனித உயிர் என்பது முதலாளிகளின் எச்சமா ????? பணம் உள்ளவனே வாழ தகுதி உள்ளவனா?????

Sunday, 6 June 2010

நடுநிலை என்னும் அயோக்கியத்தனம்

ஒரு பிரச்சனை என்று வந்தால் நடுநிலையாக இருக்கிறோம் என்று சிலர் வாயை திறப்பது இல்லை , இதன் பெயர் நடுநிலையா ? இந்த விடயங்கள் தான் நம் அரசியல் சமூகத்தை நிர்ணயம் செய்கிறது என்று நினைக்கிறேன் . ஒரு பிரச்சனை என்று வந்தால் நமக்கு ஏன் வம்பு என்று போகிறவனை, இந்த சமூகம் வம்பு தும்பிர்க்கு போகாதவன் நல்ல பையன் என்கிறது ???? அதாவது ஊர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் நான் நல்ல இருந்தால் போகும் என்ற நினைப்பு . தப்பான அணியில் இருப்பவர்களை கூட ஏற்றுக்கொள்ளலாம் அவர்களிடம் கருத்து என்பது உண்டு , ஆனால் இந்த புறமும் சேர மாட்டேன் அந்த புறமும் சேர மாட்டேன் நான் நடுநிலைவாதி என்று சொல்பவனை ஏற்றுக்கொள்ளவே முடியாது .

நடுநிலை என்பது அதாவது இவர்கள் சொல்லும் நடுநிலை என்பது என்னவென்றால் யாருக்கும் குரல் கொடுக்கமால் நான் உங்களுக்கும் நல்ல பிள்ளை எங்களுக்கும் நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க நினைப்பது , இவை எல்லாமே பிழைப்புவாதம் , இந்திய நடுத்தரவர்க்கத்தின் மனநிலை . இந்த உப்பு சப்பு இல்லாதநடுத்தரவாதிகள்
ஆபத்தானவர்கள் .......!!!!!இவர்கள் நடுத்தரம் என்ற பெயரிலே தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறுகளுக்கு ஒரு விதத்தில் துணையாய் இருக்கிறது என்பதே உண்மை நிலவரம் ..............!!!!!ஏன் இதை எழுதுகிறேன் என்று குழப்பமாய் இருக்கிறதா .....கட்டாயமாய் முல்லை நரிசிம் விடயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

Wednesday, 2 June 2010

பதிவுலக மனஉளைச்சல் மற்றும் புரிதல்











நான்கு நாட்களாய் ஒரே மன உளைச்சல் , பதிவுலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று . நிறைய பதிவர்கள் நரசிம் செய்தது ஆணாதிக்கம் ஆனால் இங்கே ஜாதி எங்கே வந்ததது என்று கேள்வி கேட்கிறார்கள் . சரி தனிமனிதன் சமூகத்தின் விலை பொருளே அன்றி அவன் சிந்தனையும் செயலும் தனிப்பட்டதல்ல . உதாரணமாய் நம்முடைய பொருளாதாரம் வைத்து , நம் ஜாதி வைத்து நாம் சாப்பிடும் ஹோட்டல் முதல் திரையரங்கு வரை மாறும் . சத்யம் திரையரங்களில் பார்க்கும் மக்கள் வேறு , சைதை ராஜ் திரையரங்கில் பார்க்கும் மக்கள் வேறு என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் சுழல் நம் மதம் நம் ஜாதி வைத்து சிந்தனைகள் மாறும் என்பதே உண்மை . சரி ஆணாதிக்கத்தின் வேர் எங்கு இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்அது பார்ப்பனீயத்தில் இருந்தே தோன்றுகிறது . ராமன் இதற்க்கு சிறந்த உதாரணம், சீதை ஏன் தீ குளிக்க வேண்டும் , பெண்ணிற்கு மட்டும் தான் கற்பு என்ற விடயம் இருக்கிறதா.???????அப்படி பார்க்கும் பொழுது ஆணாதிக்க சிந்தனை பார்ப்பனீய முறையில் தான் அதன் வேர் . இன்று மற்ற ஜாத்களில் பார்பனீயம் இருந்தாலும் , ஆணி வேர் எங்கே உள்ளது . இன்றும்கூட மாதம் மூன்று நாள் என்றால் பெண்கள் வீட்டிற்கு வெளியே செருப்புடன் செருப்பை உட்கார்ந்து இருப்பார்கள் , இந்த நவீன காலத்திலும் சென்னையில் உள்ளது இதை மறுக்க முடியுமா .அந்த பெண் IT துறையிலே வேலை பார்த்து இருப்பாள் உழைத்து கலைத்து வந்தாலும் அவள் வெளியே உட்க்கார வைக்கப்பட்டு இருப்பாள் . பார்பனர்கள் என்ன சொல்கிறார்களோ , அதையே முறை என்று மற்ற மக்கள் நம்புவது உண்டு . இன்றும் கூட கிராமத்தில் ஒரு பர்பாணன் என்றால் சாமி என்று அழைப்பார்கள்.அதனால் நாம் வளர்ப்பு முறை சுழல் , சமூக சுழல் என்ற விடயம் தான் ஒரு மனிதனின் சிந்தனையை நிர்ணயிக்கிறது.

அதனால் ஆணாதிக்கம் என்று சொல்லும் பொழுதே பார்பனீயம் வருகிறது என்பதே என் விமர்சனம். மனிதன் தனிப்பொருள் அல்ல , அவன் சமூகத்தின் உற்பத்தி ,சமூகத்தின் உள்ள தவறுகள் திருத்தி அமைக்கப்படும்போழுது தனிமனிதன் சிந்தனையால் திருந்துவான் என்றே நினைக்கிறேன் . சரி வினாவிற்கு கட்டுரைஎழுதி
கொடுத்த சிவராமன் பார்பனர் இல்லையா என்பது கேள்வி ?? பிறப்பால் இருந்தாலும் என்றாவது அவர் பதிவுகளில் ஆணாதிக்க தொனி இருக்கிறதா ..... இல்லை பெண்களைவக்கிரமாய் திட்டி இருக்கிறாரா ???? பார்பதற்கு கேவலமாய் இருப்பா டா ???? என்றெல்லாம் எழுதியது உண்டா ????இல்லை ஆதிக்க மனநிலையுடன் பேசியது உண்டா .சரி நரசிம் சொல்வதை போல் பூக்காரி எல்லாம் விலைமாதுக்கள் என்ற பார்வை இருந்ததுண்டா. தினமும் ஒரு பூக்கார கிழவியை பார்ப்பேன் , மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு , அலுவல் முடிந்து வரும்பொழுது அந்த கிழவி பூக்கள் விற்க முடியாமல் விற்று கொண்டிருப்பாள் , அந்த கிழவியின் உழைப்பு மீது மரியாதை வரும் , பூக்காரி என்றால் கேவலாமா என்ன ??????என்ன சொல்வது இதை போல ஆதிக்கமாய் யார் யோசிக்க முடியும் ஆதிக்க சாதியினரே , நரசிம் பூக்காரிகள் பற்றி கேவலாமாய் எழுதும் பொழுது ஏன் அவர் ஜாதி மட்டும்
விமர்சனம் செய்யக்கூடாது . எத்தனை பூக்காரிகளை அவருக்கு தெரியும் .

பூக்காரியை திட்டுவதன் மூலம் ஆதிக்க ஜாதி தெரிகிறது இல்லையா ???? அப்பொழுது விமர்சனம் அதை ஒட்டி தான் இருக்கும் . நாம் தெரிந்தோ தெரியாமலோ நம் ஜாதி நம் பொருளாதாரம் சார்ந்தே நம் யோசனை முறை இருக்கும். இதற்க்கு நரசிம் மட்டும் அல்ல எல்லாருக்குமே இது பொருந்தும் , ஒரு மனிதன் தவறு செய்வது என்பது அவன் தவறல்ல அந்த சமூகத்தில் இருந்த மனிதன் அப்படி தான் பேச முடியும் . காலையில் இதை பற்றி ஒரு இடுகை படித்தேன் , பெண்ணை திட்டுவதென்றால் தேவடியா ??? ஆணை திட்டுவதென்றால் தேவடியா மகன் .எப்படி பார்த்தாலும் பெண்களுக்கே வசவு . இந்த தவறை எல்லாரும் செய்கிறார்கள் , அப்பொழுது இது தனிமனித பிரச்சனையா, எதை விமர்சனம் செய்யவேண்டும் முதலில் அதன் வேர் சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும் , அதவாது இவிடயத்தில் ஜாதியை விமர்சனம் செய்து விட்டு தான் தனிமனிதனை விமர்சனம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

சிவராமன் பதிவில் இதெல்லாம் தெரிந்ததா என்றால் தெரியவில்லை , நரசிம் பதிவில் தெரிந்தது . அவர் பூணல் போட்டுக்கொண்டிருக்கிறாரா என்பது பிரச்சனை அல்ல ???? என்ன எழுதினார் , அவர் அப்படி பார்பனீயத்தை குடை பிடித்து இருந்தால் நர்சிமை அம்பலப்படுத்தி இருப்பாரா ????? சரி சிவராமன் எழுதினார் என்ற ஒரே காரணத்திற்காக நரசிம் செய்தது சரி என்று நிருவுகிரீர்களா . உயிர் நண்பனாய் இருப்பது தனிப்பட்ட பிரச்சனை ,ஆனால் உன் உயிர் நண்பனால் சமூகத்திற்கு தீங்கு என்றால் தலையை துண்டிக்க தானே வேண்டும் . அதை தானே செய்தார் சிவராமன் . சிவராமனின் பின் புலம் வேண்டாமா என்கிறீர்கள் , நண்பர்களே அவர் எழுதும் தொனியில் பார்ப்பனர் என்பதே தெரியவில்லை என்பதே உண்மை . ஒரு மனிதன் பொது வெளியில் எப்படி இருக்கிறான் என்பதே கணக்கு.

சரி விடுங்கள் இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது , ஏதொ மனதில் பட்டதை எழுதுகிறேன். எல்லா கேள்விக்கும் என்னால் பதில் அளிக்க முடியும் ஆனால் பிரச்சனை எங்கு எங்கோ செல்வதை நான் விரும்பவில்லை . இந்த பிரச்சனையில் எனக்கு இழப்புகள் அதிகம் , என் நண்பர்களை இழந்துள்ளேன் ,அதிக மன உளைச்சல் , என் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் எதிர் திசையில் , அவனுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே நினைத்ததை பேசுவோம் ,அது என் மன உளைச்சலை அதிக படுத்துக்கிறது . மன்னித்துவிடு நண்பா இப்பொழுதும் நான் சரி என்று பட்டதையே செய்கிறேன் .