Friday, 25 June 2010

பார்த்திருந்தால் ரசித்திருப்பேன்






















பானா காத்தடிக்கும்
அதை பிடித்துக்கொண்டிருப்பவனுக்கும்
உண்டான உறவு காதலுக்கும்
எனக்கும் .........!
காத்தாடி உயரப்பறந்தாலும்
அதன் நூற்கள் நம் கைக்குள்ளே ...........!!!!
காதல் விட்டுசென்றாலும்
பூமராங் போல திரும்ப வந்து ஒட்டிக்கொள்கிறது .........!!!!
எதிர் திசையில் இருக்கும் காந்தம்
போல ஈர்த்துக்கொண்டு வருகிறது ............!!!!!!!
நான் மறக்க நினைக்கும் பொழுது
கண்டிப்பாய் வருகிறாள் ............வேறு நாட்டில் இருந்து ........,
நான் உயிரோடு தான் இருக்கேன் என்று நியாபகப்படுத்துக்கிறாள் ................!!!
சங்கடப்படுவாள் என்று
அவள் வந்த மாதம் சந்துப்பக்கம் அதிகம்
போகவில்லை ..........!!!
"அவ எல்லாம் வாழ்க்கைல இல்ல டா" என்று நண்பர்களிடம்
வீராப்பு பேசிக்கொண்டிருந்தேன் .....................
எனக்கும் அவளுக்கும் தெரிந்த
சிறு பெண்ணிடம்
கேட்டேன் ................!!! "அமெரிகாக்காரங்க போயட்டங்கலானு"
" போய் ஒருவாரம் ஆச்சு நா " என்றாள்
சிறிதாய் வலித்தது ...............
இருக்கும் வரை பார்க்கக்கூடாது என்ற எண்ணம்
போன பிறகு பார்த்திருக்கலாமோ
என்றது

Thursday, 24 June 2010

ஈழத்தின் செந்நீரிலே எழுதப்பட்ட செம்மொழி






















ஈழ சாகோதரி
சேலைகள் கிழிக்கப்பட்டு
தோரணம் கட்டினர் ........!!!!
முள்வேலிக்குள் தமிழர் இருக்க ....
அதை கொண்டாட மாநாடாம்
மாநாடு நடத்துகிறார்
"மானாட மயிலாட " பெயர் வைத்தவர் ....!
"பெண் சிங்கம்"
சோனியா என்று கர்ஜிக்கிறார்
"செம்மொழி கண்டான் "
ஈழத்தமிழரின்
செந்நீரிலே எழுதப்பட்ட மொழி
கண்ணீரிலே எழுதப்பட்ட மொழி
செம்மொழி

Wednesday, 23 June 2010

சிவராமனின் விமர்சனமும் சில பின்னூட்டங்களும்

பைத்தியக்காரன் ராவணன் விமர்சனம் படித்தேன் , விமர்சனம் அற்புதமாய் இருந்தது என்றே நினைக்கிறேன் . ஆனால் அதில் பின்னூட்டங்கள் மிகவும் பாதித்தது ,பதிவர்கள் அவர் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் என்ற வண்ணத்தில் பின்னூட்டம் செய்திருந்தார்கள் . வால் பையன் கூட இஸ்லாமிற்கு சொம்பு தூக்குகிறார் என்கிறார் பாம்பே பற்றி குறிப்பிடும் பொழுது .சரி அப்படி என்றால் பாம்பே படத்தின் வரும் காட்சிகளை வால் ஒத்துக்கொள்கிறாரா ???????அந்த பாபர் மசூதி விடயம் மறைக்கப்பட்டு , வெறும் முஸ்லிம் தீவிரவாதம் போல் காட்டி உள்ளாரே மணி சார் . அப்பொழுது வால் மணி சார் அவர்களுக்கு சொம்பு தூக்குகிறாரா.சும்மா சொம்பு தூக்குகிறார் என்பதை சொல்வதை விட்டுவிட்டு சிவராமன் சொல்வதில் என்ன நியாயம் என்பதை பார்க்க வேண்டும் . பம்பாய் படத்தில் முஸ்லிம் மக்களே தீவிரவாதத்தை ஆரம்பிப்பது போல் காட்சி துடங்குகிறது, ஆனால் உண்மை என்ன பாபர் மசூதி இடிக்கப்பட்டது தான் பிரச்சனையின் மையப்புள்ளி மணி சார் எந்தகாட்சியை முதலில் காண்பித்திருக்க வேண்டும் .

ஆனால் வரலாற்றை திரிக்கும் வேலையை பால் தாக்கரே ஆசியுடன் செய்கிறார் மணி சார் . முதலில் முஸ்லிம்கள் வன்முறையை ஆரம்பிப்பது போல் காட்டுகிறார் , பின்பு முஸ்லிம்களுக்கு close UP காட்சிகள் , அவர்கள் வன்முறையாளர்கள் என்று மனதில் பதிய வேண்டும் , ஹிந்துக்களுக்கு wide அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை .அப்புறம் ஒரு பேரன் ஹிந்து தாத்தாவின் விபூதியை அழிப்பான் , ஏன் என்றால் முஸ்லிம் மக்கள் ஹிந்து விபூதியை கூட ஏற்க மாட்டார்கள் , ஆனால் ஒரு ஹிந்து தாத்தா வீட்டை எரிக்கும் பொழுது , உள்ளே புகுந்து இஸ்லாமின் புனித நூலான குரானை காப்பாற்றுவார் , என்பது போல காட்சி அமைப்பு . இது என்ன ஹிந்து வெறியா , இதை சிவராமன் சொன்னால் சொம்பு தூக்குவது என்று சொல்வதா ??? வரலாறு ஒன்று சொல்லும் , மணி சார் ஒன்றை சொல்வார் அதை விமர்சனம் செய்யாமல் ஒரு CORPERATE முதலாளிகளுக்கும் , மத வெறியர்களுக்கும் சொம்பு தூக்கும் மணி சார் அவர்க்களுக்கு சொம்பு தூக்க வேண்டுமா .

அப்பொழுது பாபர் மாசூதி பிரச்சனை அதை திசை திருப்பும் எட்டப்பன் வேலையை பார்த்தார் மணி , இப்பொழுது "OPERATION GREEN HUNT "பசுமை வேட்டை , கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதி தண்டக்காரண்யா , அதன் மீது பண முதலைக்களுக்கு ஒரு கண் , வேதாந்தா நிறுவனத்திற்கு மலையை விற்பதற்கு பூர்விக மக்களை துரத்தப்பார்க்கிறார் சிதம்பரம் , அவரும் அந்த நிறுவனத்தின் வேலை செய்து இருக்கிறார் . இப்பொழுது மக்களை
துரத்தப்பார்க்கிறார் .அங்கே போராளிகள் என்பவர் வேறு யாரும் அல்ல அந்த உழைக்கும் மக்கள் . அந்த வடக்கிழக்கு ஏழு மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடப்பதே இல்லை . அங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் , சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம் , பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள் . அங்கு மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே தவிர தனிமனித விருப்பு வெறுப்புகளால் அல்ல ,ஆனால் இப்பொழுது பசுமை வேட்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது , இப்படி ஒரு படம் எடுத்தால் அது எட்டப்பன் வேலை , அதாவது ஒரு போராளி என்பவன் தனிப்பட்ட கோபத்தால் நாயகியை கடத்துகிறான் , அதுவும் காதல் கொள்கிறான் .


ஒரு இனம் அடிக்கப்படும் பொழுது , தன் மக்கள் துன்பப்படும் பொழுது , பெண்கள் கற்பழிக்க படும் பொழுது , எப்படி அந்த மேட்டுக்குடி பெண்ணை காதலிக்க முடியும் . அதை விட தையிரியாமான பெண்கள் போராடும் மக்களிடம் அல்லவா இருப்பார்கள் . எதோ ஒரு SOFTWARE ENGINEER காதல் செய்வதை போல "உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே " என்று காதல் செய்வானா ஒரு போராளி , மசுரைப்போல்
இருந்தது அந்த காட்சி . எதனால் அவன் இப்படி ஆனான் என்ற சமூக விளக்கத்தை தந்திரமாய் தவிர்த்து அவன் காதல் தாபம் போன்றவைகளை பிரதானப்படுத்தி போராளிகளை அசிங்கப்படுத்துகிறார் இந்த CORPERATE அறிவாளி . அதுவும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப படம் செய்கிறார் , அவர் எந்த காலத்தில் அந்த படத்தை எடுத்தார் என்பது கட்டாயம் விவாததிற்கு உட்பட்டது. அவருடைய கொள்கைகளை அவர் காட்சி அமைப்பை வைத்தே விமர்சனம் செய்யலாம். இதற்கும் பின்லேடனுக்கும் சம்பந்தம் இல்லை , ஆனால் மணி சார் படத்திற்கு கட்டாயம் தாக்ரே , வேதந்தா , சிதம்பரம் , அம்பானி போன்றவர்களின் ஆசி உள்ளது . "குரு" எடுத்தார் என்று தானே அவைக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது , உண்மை தானே ???

Tuesday, 22 June 2010

ராவணன் என்னை கவர்ந்த விமர்சனங்கள்

















ராவணன் பற்றி விமர்சனம் எழுதி இருந்தேன் , நெருங்கிய நண்பர் சக பதிவர் திரைத்துறை சார்ந்தவர் எனக்கு போன் செய்து இருந்தார் , இந்திய தணிக்கை துறையை பற்றி விளக்கினார் . இந்த அளவே காட்டியதே பெரிது என்று சொன்னார் ,"காற்றுக்கு என்ன வேலி" என்ற சிறந்த படம் வரவே இல்லை என்று ஆதங்கப்பட்டார் . சரி அப்பொழுது திரைப்படம் என்பது இந்திய சூழலில் சரியான திரைவடிவமாய் இல்லை என்று தானே பொருள் . அப்படி
இருக்கும் பொழுது , படம் எடுப்பது எல்லாம் ஒரு பிழைப்பிற்க்கான பிழைப்புவாதம் மட்டுமே என்பது உண்மை சரியா. தெரு கூத்து, வீதி நாடகங்கள் போடலாமே . சினிமா என்பது கலையின் வடிவம் , ஆனால் சினிமா மட்டுமே கலை ஆகாது , ஏன் வேறு வடிவத்திற்கு அந்த மணிரத்னம் போன்றோர் செல்வதில்லை , ஏன் என்றால் சினிமா என்ற வடிவத்திலே மட்டுமே பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதே உண்மை . ஒரு கலைஞன் தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்றால் என்ன கலை வடிவம் அது ??? அது முதலாளித்துவத்தின் கைப்பாவை என்பதை தவிர அந்த கலையில் என்ன இருக்கிறது . அப்படி உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞன் இந்த கலைவடிவத்தை தேர்ந்து எடுப்பானா ??????தணிக்கை இருக்கிறது , தணிக்கை யாருக்கு சாதகமாய் இருக்கும் அரசிற்கும் முதலாளிகளுக்கும் ???? உண்மையான கலைஞன் என்றால் தன்னை வெளிப்படுத்த வீதி நாடகம் போதும் என்றே நினைக்கிறேன் .

ஒரு விமர்சனம் படித்தேன் ராவணன் பற்றி மிக அற்புதமாய் இருந்தது , படத்தில் உள்ள காட்சிகளை அரசியல் பார்வையுடன் அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேய்ந்து இருந்தது விமர்சனம் என்றால் இது அல்லவா விமர்சனம் என்று சொல்வது போல் இருந்தது
http://tamilkatturaigal.blogspot.com/2010/06/blog-post_22.html

மேலும் சில கட்டுரைகளும் என்னை ஈர்த்தன
http://naayakan.blogspot.com/2010/06/master-piece-of-money.html
புதிதாய் இப்பொழுது படித்த அண்ணன் பைத்தியக்காரன் கட்டுரை மார்க்சிய பார்வை உள்ள கட்டுரை


http://skaamaraj.blogspot.com/2010/06/blog-post_20.html


http://pulavanpulikesi.blogspot.com/2010/06/blog-post_19.html



http://agnipaarvai.blogspot.com/2010/06/blog-post_20.html

பதிவுலகம் உலக அரசியலை புரிந்து கொண்டு எழுந்து கொண்டிருக்கிறது என்பது ஆறுதலான விடயம் .ஆனால் நான் வருந்தும் சம்பவம் ஒன்று நடந்தது , பதிவர் கதிர் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கிறார் .அதற்க்கு பாராட்டுகளும் வணக்கங்களும் செய்கின்றனர் . கதிர் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார் ,உங்களுக்கு தெரியாதா மாநாடு எந்த ஈழத்தின் குருதியில் நடக்கிறது என்று , வேதையான விடயம் , நான் என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்.

Saturday, 19 June 2010

ராவணனும் அருந்ததி ராயும்

















நேற்று நண்பன் புலிகேசியின் ராவணன் விமர்சனம் பார்த்தேன் நன்றாய் இருந்தது , அதில் அழகிய அனானி என்று ஒருவர் பின்னூட்டம் செய்திருந்தார் ,வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்ததில் இருந்து உங்கள் போக்கு சரி இல்லை என்று . அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் புலிகேசி பதிவுலகம் வரும் முன்பே எனக்கு நண்பன் என்று , இரண்டாவது அப்படி என்ன அவர் கெட்டுப்போய்விட்டார் , இப்பொழுது அவர் எழுதும் பதிவுகள் மிக ஆழமாய் இருக்கின்றது , சரி அந்த விமர்சனத்தில் என்ன குற்றம் கண்டீர்கள் , அதை பற்றி பேசாமல் வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்து கெட்டுப்போய்விட்டார் என்று சொல்வதில் என்ன நியாயம் நண்பரே.

சரி ராவணன் கதாப்பாத்திரம் , எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் kobad ghandy என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது . அப்படி நக்சல் தலைவன் விக்ரம் என்று காட்டும் பொழுது , அவன் ஏன் அப்படி ஆனான் அவனை மக்கள் ஏன் தலைவனாய் கடுவுளாய் நினைக்கிறார்கள் என்று சொல்லி இருக்கவேண்டாமா ????? இது ஒரு பாமரனக்கு கூட தெரியும் ஆனால் மணி சார் இயல்பாகவே அதை தவிர்த்தான் உள் நோக்கம் என்ன .மணி சார் ஒன்றும் இதெல்லாம் தெரியாதவர் அல்ல ,corporate கம்பனியுடன் கூட்டணி போட்டு எப்படி உழைக்கும் மக்களுக்கான படம் எடுக்கமுடியும் நண்பரே .

சரி வடக்கிழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா ?????????? 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்..


இதை போல் இருக்கும் பொழுது என்ன நடக்கும் ஒரு பெண் அழகாய் இருந்தால், அவள் அண்ணனை உள்ளே போட்டுவிட்டு , அதிரடி படை அனுபவிப்பார்கள் . இந்த மாதிரி அடக்கு முறை நம் தமிழ்நாட்டில் உள்ளதா ???? மணி சார் போல சத்யம் திரையரங்கு மக்களுக்கு படம் எடுப்பவர்களுக்கு இது புரியாது என்றே நினைக்கிறேன் . அங்கே சட்டம் எப்படி உள்ளது , அந்த சமூகம் எவ்வளவு அடக்குமுறை உள்ளது , மக்கள் ஏன் அங்கு நக்சலாய் மாறுகின்றனர் ,என்பதை தவிர்த்து விட்டு , அது என்னமோ பழிவாங்கும் கதை
போல , நாயகன் நாயகி விக்ரம் மூவருக்குள் நடக்கும் தாப போராட்டம் போல சித்தரித்தது உள்ளடக்கத்தில் எந்த விதத்தில் நியாயம் . மணி சார் சொல்வதை போல வெறும் நாயகனின் தங்கை மட்டுமா கற்பழிக்க படுவார் . இது பிரச்னையை எளிமை படுத்துவதை போல் உள்ளது அல்லவா?????

மக்கள் பிரச்னையை பலவீன படுத்திவிட்டு , நாயகன் தங்கை கெடுக்கப்படுகிறாள் , அதனால் அவர் போராடுகிறார் என்று காட்டுவது சிறு பிள்ளைத்தனம் , இது எல்லாம் மணி சார் அவருக்கு புரியாதா ????? ஆனால் கைகோர்த்திருப்பது முதலாளிகளுடன் , எப்படி அவரால் இதை செய்ய முடியும் . சரி வடகிழக்கில் தண்டகாரண்யாவில் மலையை "வேதாந்தா" என்னும் கம்பெனி வாங்க நினைக்கிறது , அது கனிம வளம் உள்ள பகுதி , உண்மையில் மக்களை விரட்டினால் தான் அந்த இடத்தை கைப்பற்ற முடியும் என்பதே உண்மை , அதனால் மக்களை விரட்டும் பணி, "OPERATION GREEN ஹன்ட்" என்னும் பெயரில் , நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்களை வேட்டையாடுகின்றன. சரி அந்த மக்கள் ஒடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் ஏன் தீவிரவாதியாய் சித்தரிக்க படவேண்டும் , அவர்கள் மண்ணிற்காக போராடுகிறார்கள் .
இதில் என்ன தவறு , இதை எல்லாம் துளிக்கூட காத்த மணி சார் , இதை பூசி மொழுகுகிறார் , அவன் மக்கள் தலைவன் என்று எளிமையாய் மறைத்து விட்டார் .இது தான் மணி டச் முக்கியமான விடயங்களை மணி தொடுவதில்லை .

ஐரோம் சர்மிளா என்ற கவிஞர் பத்து வருடமாய் உண்ணா விரதம் இருக்கிறார் , அவரை பற்றி ஏற்க்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் . சாமானியன் எனக்கே அந்த விடயம் தெரியும் பொழுது மணி சார் அவருக்கு தெரியாதா .ஒரு தலைவனது தங்கை மட்டுமே கெடுக்கபடுவாளா????? ஈழத்தில் எத்தனை சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர் , ஒரு சமூக பிரச்னையை தனிமனித பிரச்சனையாக சித்தரித்து , அவர்களுக்கு ஏற்படும் கோபதாபத்தை காட்டியதில் முக்கிய
பிரச்சனைகளை மறைக்கப்பார்க்கிறார் மணி .

சில ரசிகர்களுக்கு ஒரு பொது புத்தி உண்டு பேரரசு படம் பார்த்தால் அவனை எள்ளி நகையாடுவர் , நாங்க பார்த்தா மணிரத்னம் படம் மட்டுமே பார்ப்பேன் என்கிறார்கள் . ஒருவர் புலிகேசி பதிவில் பதில் போடுகிறார் படத்தின் தொழில் நுட்ப விடயங்களை நீங்கள் பாராட்டி இருக்கலாம் . ஒரு மயானம் அழகாய் இருக்கிறது என்பதற்காக நாம் எல்லாம் பிணமாய்
படுத்துக்கொள்வோமா ........ ஒரு அழகான ஒரு அழகான கிண்ணத்தில் விடம் இருந்தால் குடிப்பீர்களா ???? என்ன .......நான் ஒரு சாமனியன் என்னிடம் வந்து மணி சார்
படம் நன்றாய் இருக்கிறது என்றால் , நான் திருப்பதி , திருப்பாச்சி பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டு கலாய்ப்பது உண்டு . குளிர் சாதன அறையில் உட்க்கார்ந்து கொண்டு ஈழத்தை பற்றியும் , தண்டகாரண்யா பற்றியும் படம் எடுக்க முடியாது . அப்படி உண்மையிலேயே அப்படி அதை பற்றி கலை மக்களுக்காய் இருக்கவேண்டும் என்றால் அந்த மக்களிடம் கலக்க வேண்டும் .
அந்த மக்களிடம் பேசவேண்டும் . அவர்கள் சொல்வதில் தான் உண்மை நிலைமை தெரியும் பின்பு படம் பிடிக்கவேண்டும் நேர்மையாய் . மணி சார் ஏன் இந்த கதைக்களம் எடுத்தார் , ஏன் இதே ராமாயண புனைவை ஒரு SOFTWARE கம்பெனி வைத்துக்கொண்டு எடுக்கலாமே , ஏன் என்றால் இப்பொழுது அவர் வணிகம் அதிகம் , அதனால் இந்தி மக்களின் ஒட்டு மொத்த மக்களுக்கும் புரியும் படி ஒரு கதைக்களம் வேண்டும் , ஏன் என்றால் அப்பொழுது தான் கல்லா கட்ட முடியும் . தமிழிற்கு விக்ரம் , ஹிந்தி பச்சன் குடும்பம் , மலையாளம் பிரிதிவிராஜ்
என்று கணக்கு போடுக்கிறார் மணி , ஏன் இந்த புனைவை வேறு ஒரு கதைகளத்தில் சொல்லலாமே . இடம் திருநெல்வேலி என்கிறார் , திருநெல்வேலி இப்படி தான் இருக்கிறாதா என்ன ????? அவருக்கு தேவை இரண்டு மக்களுக்கும் புரியும் கதைக்களம் , அதனால் தான்
அவர் தேசிய பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு படம் செய்கிறார் .

















அருந்ததி ராய் எழுத்தாளர் , அவர் எழுத்துக்கள் எங்கு இருந்து வருகிறது ,அருந்ததி ராய் காட்டிற்குள் செல்கிறார் , மக்களை சந்திக்கிறார் எழுதுகிறார் , அதுவே உண்மையான கலைக்கு அழகு .மக்கள் பிரச்னையை தனிமனித கோபதாபம் என்று சிறுமை படுத்தி அப்பகுதி மக்களை கேவலப்படுத்திருக்கிறார் மணி சார் . இப்பொழுது சொல்லுங்கள் புலிகேசி என்னிடம் சேர்ந்து என்ன கேட்டுப்போயவிட்டார், சரி உங்களுடன் எல்லாம் சேர்ந்து என்ன உபயோகமாய் இருந்து விட்டார் . கட்டம் கட்டுவதெல்லாம் ஒன்றும் புதிதல்ல . நான்
இப்பொழுது பல பேருக்கு வாக்கு அளித்தால் பின்னூட்டம் போட்டால் எனக்கும் வாக்குகள் வரும் . அதில் என்ன இருக்கிறது நண்பா . நான் கட்டம் கட்ட பட்டவனாகவே இருக்கட்டும் . என்னுடைய கடைசி இருபது பதிவுகளில் , ஒன்று இரண்டு பிரபலமாயின , அதற்காய் நான் வருந்தவில்லை . இருந்தாலும் நான் நேர்மையாய் எழுதுகிறேன் என்பதில் கர்வம் உண்டு , அந்த நேர்மை புலிகேசிக்கும் வந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு பெருமை .

என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறார் .

நிர்மூலமான நிர்மலா

விழுப்புரம் அருகே ஒரு திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . மணப்பெண் காதலனை கைப்பிடிக்க, எதிர்வீட்டு பெண் மணமகள் ஆகி இருக்கிறாள் என்பதே செய்தி . அந்த எதிர்வீட்டு பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்க இல்லையா என்று கூட கேட்டு இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது .திருமணங்கள் என்னும் ஒரு சடங்குகள் , பெண்ணை சொத்து உரிமை ஆக்குகிறது . பெண்களால் தனியாக இயங்கமுடிவதில்லை . "வீட்டோட மாப்பிளை " என்றசொற்பதம் கேலி செய்வதற்காய் இருக்கிறது , எந்த சமூகத்தில் கேலி பொருளாய் இருக்கிறதோ அது ஆணாதிக்க சமூகமாய் தான் இருக்க முடியும். ஏன் "வீட்டோடு மருமகள் " இருக்கும் பொழுது வீட்டோடு மருமகன் இருக்க கூடாதா என்ன???? அதுவும் இந்த வேலைக்கு போகிற சமூகத்தில் தான் பெண்கள் அதிகமாய் சுரண்டப்படுகிறார்கள் . வீட்டிலும்வேலை வெளியிலும் வேலை , வேறொரு வீட்டில் அட்ஜஸ்ட் செய்து இருக்க வேண்டும் , என்ற நெருக்கடிகள் அவளுக்கு இயல்பாகவே இருக்கின்றன . இன்று காலை அந்த செய்தியை படித்தவுடன் எனக்கு நிர்மலா நினைப்பாகவே இருந்தது . அவளும் யாரையாவது காதலித்து இருப்பாளா??? அவளுக்கு எதிர் வீட்டு பையன் பிடித்து இருக்குமா ????????? திடீர் என்று திருமணம் என்று சொல்கிறார்களே எப்படி அவள் மனம் ஏற்றுக்கொள்ளும் ?????? பெண் என்ன சந்தை பொருளா ???????? இது இல்லை என்றால் அது என்று மாற்றிக்கொள்ள???இந்த ஊடகங்கள் நிர்மலா பற்றி எழுதாமல் ....... சினிமா பாணியில் விறுவிறுப்பாய் நடந்த திருமணம் என்று எழுதியது மனஉளைச்சலை ஏற்படுத்தியது . அடுத்தவர் வாழ்க்கை பரபரப்பான படமா என்ன ????? நிர்மலா மனதில் தற்பொழுது என்ன ஓடி கொண்டிருக்கும் .

Thursday, 17 June 2010

ரத்த சரித்திரம்















நேற்று இரவு குமுதம் reporter படித்துக்கொண்டிருந்தேன் , சீமானின் பேட்டி கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது "தம்பி சூர்யவிற்க்காக விட்டுதருகிறேன்" என்று ஒரு பேட்டி , சரி உள்ளே என்ன விடயம் என்று பார்த்தால் , சூர்யாவின் "ரத்த சரித்திரம்" என்ற ஹிந்தி படம் வருகிறதாம் , அதிலே இலங்கை படவிழாவிற்கு ஆதரவு தந்த விவேக் ஓபராய் நடிக்கிறார் , அவருடன் சூர்யா நடிக்கிறார் . "அந்த படம் வந்தால் எதிர்ப்பு சொல்வீர்களா " என்று கேட்டதற்கு சீமான் அப்படி சொல்கிறார் , படத்தில் சூர்யா நடிக்கிறாராம் "அவர் தமிழ் உணர்வு மிக்கவராம் " . அதை சீமான் மதிக்கிறாராம் அதனால் இப்படத்தை மட்டும் வெளியிட தடை சொல்லப்போவதில்லயாம் . என்ன கொடுமை , சீமான் அவர்களே உங்கள் கொள்கையில் மாற்று கருத்து உண்டு , ஆனால் ஒரு நடிகரின் படம் என்பதற்காக , கொள்கைகளை நீர்த்து போக செய்யும் உங்களை போன்ற தலைமையை என்ன சொல்வது என்றே தெரியவில்லை . என் சூர்யா உங்கள் தம்பி என்பீர்கள் ,அதனால் படம் வரும் அந்த படத்தை ஒன்னும் செய்ய மாட்டோம் என்கிறீர்கள் . "அதுவும் சூர்யாவின் தமிழ் உணர்வை மதிக்கிறேன் " என்கிறீர்கள்.

அப்படி என்ன தமிழ் உணர்வை கண்டீர்கள் , "பெப்சி ,சன் குழுமம் ,ரெட் giant , cloud Nine " போன்ற ஏகதிபத்தியத்தோடு கூட்டணி போட்டு விளம்பரத்தில் நடிப்பதை விட என்ன செய்துவிட்டார் . சரி அவர் நல்ல மனிதர் என்று நீங்கள் சொல்லலாம் , அகரம் foudation வைத்து இருக்கிறார் என்று சொல்லலாம் . இது எல்லாம் NGO வேலைகள் , இரண்டாம் கட்ட தீர்வு , இது ஒரு பிரச்னையை முழுமையாய் தீர்பதில்லை நான் சொல்லவில்லை
மார்க்ஸ் சொல்லி இருக்கிறார் . சரி அப்படி பார்த்தால் நான் கூட நல்லவன் , எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு காசு விடயத்தில் உதவிகள் செய்து உள்ளேன் , சில பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறேன் . இன்று பிச்சைக்காரனுக்கு காசு போடுகிறேன் , நாளை என்னிடம் காசு இல்லை அப்பொழுது முடியாது என்று சொல்லிவிட்டு போவேன் . இது தான் எதார்த்தம் . இதன் பேர் தான் NGO வேலை , உலகத்திலே மிகப்பெரிய அரசியல் "முடிந்ததை செய்வேன்"
என்பது , அகரம் foundation என்பது கூட இதை போல செயலே . ஒரு தனிமனிதனிடம் இருந்து தீர்வு எப்பொழுதுமே வருவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் .

சரி உங்கள் கொள்கைகளை தம்பிக்காய் விட்டுகொடுப்பீர்கள் என்றால் என்ன கொடுமை . நீங்கள் இவர்களை எதிர்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று நானே சொல்லுவேன் .நீங்கள் அமிதாப் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை , ஆனால் கொண்ட கொள்கை தவறாக இருந்தாலும் உங்களிடம் ஒருநேர்மையை எதிர்ப்பார்த்தேன் , ஆனால் அது கூட இல்லை . எனக்கு தெரிந்து இதிலும் சகபதிவர்கள் வருவார்க minus வாகுகளை குத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் . ஏன் என்றால் இங்கே தமிழ் உணர்வு என்பது ஒருவருக்கு கொடிப்பிடிப்பதாய் ஆகி விட்டது என்ன செய்ய .

உங்கள் உணர்வை விட , உங்கள் தம்பியின் தொழில் தான் முக்கியாமா . இந்த படம் தமிழ் நாட்டில் ஓட வில்லை என்றால் , சூர்யா வீட்டில் அடுப்பு எரியாதா . தனி மனிதர்களுக்காய் கொள்கைகள் தகர்த்த படலமா ?????? "ரத்த சரித்திரம் " படம் பற்றி கவலை படுகிறீர்களே , ஈழத்தின் "ரத்த சரித்திரம்" தெரிந்த பின்பும் .