Wednesday, 7 July 2010

பல்க(கொ)லை கழகம்

கல்வி தனியார்மயமானால் என்ன ஆகும் ,எவ்வளவு தரம் தாழும் என்பதற்கு உதாரணமாய் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் கொடூரமாய் கொலை செய்யப்பட்டுள்ளார் அவர் பெயர் நிர்பேஷ் குமார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் . முன்பெல்லாம் கூட மாணவர்களிடையே கொலைகள் நடக்கும் , ஆனால் அது பெண்ணிற்க்காக நடக்கும் இல்லை ஈகோ தகராறு போன்றவை இருக்கும் . ஆனால் இப்பொழுது நடந்த கொலையை விட அது நடந்ததற்கு உண்டான நோக்கத்தை பாருங்கள் , வெறும் பணம் பணம் பணம் .பணத்திற்காக ஒரு கொலையை செய்யக்கூடிய நோக்கம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய வேண்டும் , கொலைகளுக்கு அவர்கள் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது , அவர்களை பணம் தான் பிரதானம் என்று சிந்திக்க வைத்த தனியார் கல்லூரிகளையே அது சாரும் .

எம் ஜி ஆர் பல்கலையில் படிக்கும் மாணவர் நிர்பேஷ் குமார். கல்லூரியில் தத்தம் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கமிசன் கிடைக்கும் . கொலைக்கு உண்டான ஆணி வேர் எங்கு இருக்கிறது என்று தெரிகிறதா ???? படிக்க வந்த மாணவனை வியாபாரி ஆக்கியது யார் . இந்த கமிசன் இந்த கல்லூரி மட்டும் தருவதில்லை பக்கத்தில் இருக்கும் சத்யபாமா கல்லூரி மற்றும் சில கல்லூரிகளும் இதே வேலையை செய்கின்றன . அதில் ஏற்ப்பட்ட போட்டியே பிரதான காரணம்.

அவர் மாநிலத்தில் சேர்ந்த ஒருவனை தன் பல்கலையில் சேர்க்க முடிவு செய்துள்ளார் நிர்பேஷ் குமார் .சத்யபாமா கல்லூரியை சேர்ந்த இன்னொரு வட மாநில பையன் முந்தி கொண்டார் .இது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது .இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இரு கல்லூரியிலும் கமிசன் கொடுக்கிறார்கள் என்று .அப்பொழுது யார் தண்டிக்கப்பட வேண்டும்.

நம் சட்டம் கூட என்ன சொல்கிறது "கொலை செய்தவனை விட கொலைக்கு தூண்டியவனே " முதல் குற்றவாளி என்று . இப்பொழுது யார் குற்றவாளி ????? இது கல்வி தனியார்மயம் ஆவதால் ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் பண விடயத்தில் மோதல் வரும் , அங்கே இருந்து நாளைய தூண்களான மாணவர்கள் எதை கற்றுக்கொள்ள முடியும் கொலை செய்வதையா ???????

கல்வி , மருத்துவம் போன்றவற்றை தனியாருக்கு விட்டால் இது தான் கதி . சரி இந்தியா போன்ற விவசாய நாட்டில் விவசாய கல்லூரிகள் தானே அதிகம் இருக்க வேண்டும் . ஏன் பொறியியல் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது , மருத்துவக் கல்லூரிகள் கூட குறைவு தான் ஏன் தெரியுமா . இங்கு கல்வி என்பது முதலாளிகளுக்கு வேலைக்கு ஆள் தயார் படுத்தவே அமெரிக்காவில் மென் பொருள் என்றால் , இங்கே பல லட்சக்கணக்கான மென் பொருள் பொறியாளர்கள் உருவாக்க படுகிறார்கள் . இந்தியாவில் உற்பத்தி என்பதே அவர்களுக்கு என்ன தேவையோ அதை இங்கே , மானுட சொத்தை எழுதி வாங்குகிறார்கள் . அடுத்து தண்ணீர் தனியார் மாயம் ஆகிக்கொண்டே இருக்கிறது இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை .

இதற்க்கு நடுவில் காவல்துறை ஒரு நகைச்சுவை செய்துள்ளது .வட இந்திய மாணவர்களை கண்காணிக்க போகிறார்களாம் . கண்காணிக்க வேண்டியது அவர்களையா?????

ஆசாத் என்றால் விடுலை

மாவோயிஸ்ட்கள் மீது அரசியல் முரண்பாடுகள் உண்டு , ஆனால் அதை தாண்டி சில விடயங்களை பேச வேண்டியது அவசியம் ஜூலை இரண்டு ,தோழர் ஆசாத் மற்றும் தோழர் ஹேம் சந்திர பண்டே இருவரையும் போலீஸ் ENCOUNTER என்ற முறையில் கொன்றுள்ளது .ஆசாத் மாவோயிஸ்ட் (CPI )(ML ) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் , செய்தித்தொடர்பாளர் , பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளார் , வந்த இடத்தில் அவரை கொன்று இருக்கிறார்கள் .அதுவும் நாக்பூர் வந்தவரை ஆந்திராவிற்கு அழைத்து சென்று கொன்றுள்ளனர் . ஆசாத் தான் செய்தித்தொடர்பளார் என்று அனைவருக்கும் தெரியும் . சண்டை போடா வருபவர்கள் வெறும் இரண்டு பேர் மட்டும் வந்து சண்டை போடுவார்காளா என்ன . போலிஸ் சொல்கிறது கடுமையான சண்டைக்கு பின்பே கொன்றோம் என்று ,எப்படி நாக்பூருக்கு வந்தவர் ஆந்திராவில் கொல்லப்பட்டார் . மதிய அரசு என்னமோ இவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போல் அழைத்து அவர்கள் வரவில்லை அதனால் " பச்சை வேட்டை " என்ற பெயரிலே மக்களை வேட்டையாடுகிறது . ஆனால் இங்கே ஜனநாயக முறையில் பேச வந்தவர்களின் கதி என்ன ஆயிற்று. ஜனநாயகம் என்பதெல்லாம் அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே .

யார் இந்த ஆசாத் , ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள் பகத் சிங்கை வழிநடத்தியது கூட ஆசாத் என்பவரே ஆசாத் என்ற பெயர் எழுச்சிகரமானதோ என்பது அவர் வாழ்க்கையை பார்த்தோமானால் தெரியும் , அவர் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் நல்ல மாணவர் , வாரங்கள் பகுதியில் உள்ள REC கல்லூரியில் M TeCh படிக்கிறார் .REC என்றாலே
அவர் படிப்பின் தரம் தெரிகிறது .அவர் நினைத்து இருந்தால் இன்று நன்றாய் சம்பாதித்து இருக்க முடியும் ,ஆனால் மக்கள் சுரண்டப்படுவதை பார்க்கிறார் அமைப்பிற்கு வருகிறார் , அமைப்பு அவரை விசாகப்பட்டினம் போக சொல்கிறது , அங்கே போகிறார் . அங்கே AP Radical Students Union இரண்டாம் ப்ரெசிடென்ட் ஆகிறார் . நாடு முழுக்க பயணம் செய்கிறார் , பல செமினார்களை நடத்துகிறார் . ஆந்திராவிலே நடந்த முக்கிய போரட்டங்களுக்கு காரணமாய் இருக்கிறார் , பல மக்கள் போராட்டங்கள் , மாணவர் போராட்டங்களில் ஆசாத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

1995 முதல் கட்சியின் தொடர்பாளராய் இருக்கிறார் , நன்கு அறியப்பட்ட ஊடக தொடர்பாளர் , பேச்சுவார்த்தைக்கு வரும் பொழுது கொலை செய்தது எப்படி ஜனநாயகம் . சரி இதில் இருந்து என்ன சொல்ல வருக்கிறார்கள் தண்டகாரண்யா இடம் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தம் , மக்கள் கட்டாயம் விரட்டப்படுவார்கள் , பேச்சு வார்த்தைக்கு எல்லாம் அரசு தயாராய் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா பா சிதம்பரம் . இல்லை அருந்ததி ராய் போன்ற அறிவுத் தளத்தில் உள்ளவர்கள் காட்டிற்குள் செல்கிறார்கள் உண்மையை சொல்கிறார்கள் , அதனால் இந்திய நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் புரிகிறது விடயம் .அருந்ததி ராய் போன்றவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையா . பா சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் உலக வங்கியிலே வேலை செய்தவர்கள் , சிதம்பரத்திற்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் தொடர்பு உண்டு . அப்படி இருக்க அப்படி தானே செயல்பட முடியும் .இங்கே உலக வங்கியின் ஆட்சியையும் , முதலாளிகளின் ஆட்சியையும் நடந்து கொண்டிருக்கிறது .

எதோ ஒரு நிறுவனம் சார்பாக முதலாளிகள் சார்பாக அரசு நிற்கிறது .உண்மையில் நாட்டு மக்கள் சார்பாக தானே அரசு நிற்க வேண்டும் .அப்படி இருக்க இந்த பச்சை வேட்டை என்பது உலக முதலாளிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உண்டான போர் .இன்று தண்டகாரண்யாவில் நடக்கலாம் நாளை அவர்களுக்கு மரினா கடற்க்கரை மூலம் ஒரு தேவை என்றால் சென்னையை சேர்ந்த மக்கள் துரத்த படலாம் , இல்லை ஊட்டி மலை பிடித்து இருக்கிறது என்றால் விலைக்கு கேட்பான் மக்கள் மறுபடியும் அடித்து விரட்டப்படுவார்கள் . இது யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்றே நினைக்கிறேன் .

சரி அவருடன் கொல்லப்பட்ட ஹேம் சந்திர பண்டே யார் ???? அவர் பத்திரிகையாளாராம்.....அவர் FREELANCER அதனால் ஒன்றும் செய்ய முடியாது அவருக்கு என்று கைவிரிக்கிறது அவர் வேலை செய்து வந்த பத்திரிகை , சரி FREELANCER என்றால் அவர் உயிருக்கு மதிப்பு இல்லையா .இன்று ஆனந்த விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கூட பாதி பேர் FREELANCER தான் அதற்காய் உயிருக்கு மதிப்பு கொடுக்க
வேண்டாமா ????? சரி தனி மனித சுதந்திரம் எழுத்திற்கு சுதந்திரம் தேவை என்று தனிமனித அரிப்பிற்காக சண்டை போட்ட பத்திரிகையாளர்கள் கூட பதிவுலகத்திலே எதிர்ப்பை பதிவு செய்ய வில்லை . இருந்தாலும் அவர்களுக்கு நடப்பது நாளை நம் தமிழகத்தில் கூட நடக்கலாம் .தோழர்களுக்கு வீர வணக்கங்கள் ,ஆசாத் என்றால் விடுலை என்று பொருள் கவலை படாதே தோழரே மக்கள் விடுதலை அடைவார்கள் தோழர்களின் தியாகத்தால் .

Monday, 5 July 2010

வாழ்க ஜனநாயகம்

1.மின் இயந்திரங்கள் சிறப்பாய் செயல்படுகிறது (பா சிதம்பரம் வெற்றியே சான்று) நவீன் குப்தா

தமிழகத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.மேலும் தமிழ் நாட்டில் இயந்திர வாக்கு பதிவு தமிழகத்தில் திருப்தியாய் இருக்கிறது என்று கூறியுள்ளார். சரி உள்துறை அமைச்சர் பா சிதம்பரம் எப்படி ஜெயித்தார் என்று ஊருக்கே தெரியும் . இதன் பெயர் ஜனநாயகமா, மக்கள் என்ன தான் வாக்களித்தாலும் முடிவு செய்யப்போவது இயந்திரம் . ஜனநாயக தேசத்தில் பேசுவதற்கு உரிமைஇருக்கும் ஒரு தேனீர் கடையில் உட்க்கார்ந்து நாம் பா சிதம்பரத்தை திட்ட முடியும் , ப்ளாக் போன்ற இடங்களில் எழுத முடியும் . ஆனால் செயல் உண்மையான ஜனநாயகம் பணம் படைத்தவனுக்கே , எப்படி மக்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு , ஆனால் அந்த இயந்திரம் மட்டுமே முடிவுகளை முடிவு செய்ய முடியும். மக்கள் பா சிதம்பரத்திற்கு எதிராய் வாக்களிக்கலாம் ஆனால்
இயந்திரம் பணம் படைத்தவனுக்கு தானே சாதகமாய் இருக்கும் , இது வெளியில் ஜனநாயகம் போலவும் உள்ளே மக்களை ஒடுக்கவும் முடிகிறது . மன்னராட்சியை விட ஜனானயகத்தில் தான் தவறுகளும் செய்து கொண்டு , ஜனநாயக முறையில் இருப்பதை போன்ற விடயங்களை செய்ய முடியும் .

2. ஏன் கலைஞர் தன் பேரன் படத்திற்கு வசனம் எழுதவதில்லை

கலைஞர் வீட்டில் இருந்து இன்னொரு பேரன் சினிமாவில் நடிக்க வருக்கிறார் , அருள்நிதி , படம் பெயர் வம்சம் . கலைஞர் பேரன் விழாவே தாத்தவே பாடல்களை வெளியிட்டார் , இந்த மானம் கெட்ட விஜய் சூர்யா ரிலீஸ் செய்தார்கள் . அதற்க்கு கலைஞர் "வம்சம் " என்பதற்கு விளக்கம் கொடுத்தார் "விஜய் சூர்யா எந்த வம்சத்தில் இருந்து வந்தார்கள் என்று தெரியும் " என்பது போல பேசி உள்ளார் . அதாவது கலைஞரின் பேரனாம் அதனால் நடிப்பு வருமாம்,ஏன் என்றால் வம்சமாம் . கலைஞர் பேரன் என்ற அடையலாம் இல்லை என்றால் அந்த அருள் நிதியால் ஒரு நகைச்சுவை நடிகறாய் கூட ஆகி இருக்க முடியாது என்பதே உண்மை . பேரன் கண் கலங்கியதை பத்திரிகைகள் ஏதோ ஒரு பெரிய விடயம் போல காட்டுகின்றன . ஏன் அப்பா ஈழத்தில் ஒரு இனம் அழிந்த பொழுது அழாத பத்திரிகை இப்பொழுது அழுகிறது .இந்த காட்சியும் ஜனநாயகத்தில் தான் முடியும் . ஏன் கலைஞர் தன் பேரனுக்கு வசனம் எழுதவில்லை , தன் பேரன் தயாரிக்கும் RED GIANT அல்லது CLOUD NINE இல்லை சன் pictures படங்களுக்கு வசனம் எழுதலாமே , ஏன் செய்யவில்லை , கமல் கலைஞர் தான் சிறந்த திரைக்கதை வசனம் எழுதுவார் என்பாரே , கமல் ஏன் நடிக்கவில்லை . தன் பேரன் என்று வரும்பொழுது சிறந்த இயக்குனர் தேவை படுக்கிறார் . இந்த கொடுமை எல்லாம் ஜனநாயகத்தில் மட்டுமே நடக்கக்கூடியது . முடியாட்சி போல , சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் வாரிசுகளே தான் ,தகுதி எல்லாம் தேவை இல்லை . இது எல்லாமே ஜனநாயகத்தில் தான் சாத்தியம் .


3 கடவுள் இருக்கிறார் ஜனநாயகத்தை காப்பாற்ற
கல்லூரி விடயத்தில் பங்காரு அடிகளார் மாட்டி உள்ளார் , நித்யா நிலைமை கொஞ்சம் மோசம் . ஜெயந்திரர் மத நாடு என்பதால் ,தப்பிக்கொண்டு இருக்கிறார் , பார்பனீயம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல .....ஆனால் இன்றும் ஆன்மீக வாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது . அரசியல் வாதிகள் மதங்களை கடவுள் நம்பிக்கயை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள் , மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்ப ஒரு அபின் போன்ற போதை தேவை , கடவுளோ சாமியாரோ ஒரு அபின் போல மனிதனுக்கு இருக்கிறான் .மனிதனின் சோகம் மறக்க தேவைப்படுக்கிறார் கடவுள் . ஒரு ஜனநாயக நாட்டிலே ஜனநாயகம் என்னும் அமைப்பை காப்பாற்ற கடவுள் தேவை .

4 . சமீபத்தில் கடையில் தொங்க விடப்பட்ட பேப்பர் பார்த்தேன் . "விஜய் ஜாதகம் எப்படி உள்ளது " போன்ற ஆராய்ச்சி . நாட்டிற்க்கு ரொம்ப முக்கியம் .

டிஸ்கி :
அருள் நிதி போன்றவர்கள் நடிகர்கள் ஆவதும் . பணக்காரர்களின் ஆளும் வர்க்கத்தின் குடும்ப பாசம் அவர்களின் குலப்பெருமை பற்றி பெருமையாய் பேசுவதும் .நடிகர்கள் கலைஞரை பாராட்டுவதும் , அது சன் அல்லது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப படுவதும் ஒரு விடுமுறை நாளை அதற்காய்
துலைத்து அந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழும் மனநிலையும் ஜனநாயகத்திலே மட்டுமே சாத்தியம் .

Saturday, 3 July 2010

விமர்சனங்கள்

இது என்னுடைய ரெட்டை சதத்திற்கு முந்திய பதிவு . நான் ஏதோ எழுத வந்தேன் , கற்பனை பண்ணி எழுத வேண்டும் , வித்யாசமாய் தெரிய வேண்டும் படித்தவர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்ற அற்பமான எண்ணங்களே மேலோங்கி இருந்தது . ஆனால் எழுதும்
போதும் நிறைய படிக்கும் பொழுது அது வேறெங்கோ இழுத்து சென்றது . எழுதுவது ஒரு நோக்கத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றியது . ஏதோ எனக்கு தெரிந்ததை வைத்து மனதில் சரி என்று படுவதை எழுதுகிறேன் . இப்படி எழுதுவதால் பல எதிரிகள்
சம்பாதித்து இருப்பேன் என்று நினைக்கிறேன் .புலவன் புலிகேசி எழுதும் பொழுது அவர் பதிவில் ஒருவர் பின்னூட்டம் இடுவார் வெண்ணிற இரவுகளுடன் சேர்ந்து நீங்கள் கெட்டு போகிறீர்கள் என்று , கட்டம் கட்டி விடுவார்கள் என்று . நான் ஒன்று மட்டும் சொல்வேன்
இந்த பதிவுலகம் மட்டும் உலகம் அல்ல இங்கே என்ன கட்டம் கட்ட போகிறார்கள் . நாம் என்ன தண்டகாரண்யாவில் போரடிக்கொண்டிருக்கிரோமா என்ன இல்லையே ???? இதில் கட்டம் கட்டினால் என்ன கட்டவிட்டால் என்ன ????????நான் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் அளவில் எதுவும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் . இன்னும் பக்குவப்பட்ட எழுத்து வரவில்லை . விடயம் தெரிந்தாலும் கோரவையாய் எழுத வரவில்லை . கோர்வையாய் எழுதினாலும் சில நேரத்தில் விடயத்தை கோட்டை விடுவது உண்டு . இன்னும் எழுத்து பிழைகள் நிறைய இருப்பது உண்டு . ஆனால் என் எழுத்தை பார்த்து ஒரு விடயம் பெருமை படுவேன் , நேர்மையாய் மனதில் பட்டதை சொல்லிவிடுவேன் . இப்பொழுது ஓரளவு நோக்கத்துடன் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி என்ன உனக்கு நல்லதே படதா ????????? இப்பொழுது என் எழுத்தை பற்றி என்ன விமர்சனம் செய்தேன் , நாம் தரக்குறைவாய் இருக்கும் பொழுது விமர்சனம் செய்தால் தான் மாற்றிக்கொள்ள
முடியும் . இது சமூகத்திற்கும் பொருந்தும் . சரியாக செய்தால் அதை பாராட்ட தேவை இல்லை , சரியாய் செய்வது கடமை தவறாய் செய்தால் விமர்சனம் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஒரு சமூகம் வளர முடியாது . நீங்களும் எப்பொழுதும் என்னை விமர்சனம் செய்யலாம் , அது தனி நபர் தாக்குதல் போல் இல்லாமல் , உண்மையிலேயே தவறாய் இருந்தால் சொல்லுங்கள் விவாதம் செய்வோம் . விவாதிப்பதன் மூலம் சரி தவறு என்று கருத்திற்கு வர முடியும் , யார் தவறோ அவர்கள் திருத்திக்கொள்ளலாம் . ஆனால் விமர்சனம் என்பதே தவறு என்று சொல்லாதீர்கள் , ஒரு சினிமா விமர்சனம் கூட முக்கியமானது அரசியல் பார்வையில் . மக்களின் ரசிப்பு தன்மை கலை தன்மை தான் அரசியலையும் முடிவு செய்கிறது என்பதே உண்மை .அதனால் விமர்சனம் தேவை இல்லை என்று மட்டும் நினைக்காதீர்கள் . விமர்சனம் வெறும் குற்றம் சொல்வது அல்ல ,ஆதாரப்பூர்வமாய் இது தான்
பிரச்சனை என்று சொல்வது அது தவறா என்ன ??????????????

Friday, 2 July 2010

உலக (மய ) நாயகன்















கமலஹாசன் ஐம்பது வருடங்களாய் திரைத்துறையில் இருக்கிறார் , அதை பாராட்டும் விதமாய் அவர் படங்களை திரையிட்டுள்ளனர் புது டெல்லியில் .இது அரசு விழாவாம், அரசு ஏன் ஒரு சினிமா வணிகனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் . அவர் சினிமாவை வணிகமாய் நினைத்து தானே சம்பாதித்தார் , அதற்க்கு விழாவாம் , அதற்க்கு நாம் கொடுக்கும் வரிப்பணத்தை தானே செலவு செய்திருப்பார்கள் . சினிமா என்பத கலை வடிவம் என்று சொல்வதை விட அது ஒரு மிகப்பெரிய வணிகம் பிசினஸ் கமலஹாசனே இதை ஒற்றுக்கொல்வார் , ஒருவர் வணிகத்தில் இருந்தார் என்பதற்காய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பாராட்டு விழாவா ????? சரி அங்கே சில படங்களை திரையிட்டுள்ளனர் . "ஹே ராம் " , " தசவதாரம்" , "தேவர் மகன் " "விருமாண்டி" "நாயகன் " "அன்பே சிவம் " . இந்த படங்களின் அணிவகுப்பை பார்க்கும் பொழுது தான் ஏன் அரசு இந்த விழாவை நடத்துகின்றது என்று தெரிகிறது .

ஹே ராம் ஹிந்து வெறியை தூண்டும் படம் என்பது படத்தை பார்த்தாலே புரியும் . "தேவர் மகன் " பழைய நில பிரபுத்துவத்தை ஆதரிக்கும் படம் . ஒரு ஊர் தலைவர் இருப்பார் , அவர் வரும் பொழுது எல்லாரும் எழுவார்கள் . எல்லாரும் கையை கட்டிக்கொண்டு நிற்ப்பார்கள் அவர் முன்பு , போன்ற நில பிரபுத்துவ கருத்துக்களை மனதில் ஆழ விதைத்து அதன் பிம்பத்தை உயர்த்தி பிடித்த படம் தேவர் மகன் . சரி "அவ்வை சண்முகி " பார்ப்பன கலாச்சாரத்தை காட்டிய படம் . "தசவதாரம் " மீண்டும் அதே கதை தான் , பத்து அவதாரங்களை , ஹிந்து மதத்தின் ஆணி வேரை அந்த ஆணியை இன்னும் ஆழமாய் அடிக்க கமல் எடுத்த படைப்பு "தசவதாரம் ". கமல் எப்பொழுதும்
நாத்திகம் பேசுவார் ஆனால் ஆழமாய் தன் கருத்துகளை மறைமுகமாய் வைத்துவிட்டு போவார் .

உதாரணமாய் "தசாவதாரத்தில்" கடைசி காட்சி " கடவுள் இருந்திருந்தால் நல்லா இருக்கும் " என்று அசினுடன் பேசிக்கொண்டிருப்பார் . அப்பொழுது கேமரா wide ஆங்கிலிலே விரியும் அப்பொழுது அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் , எதற்கு பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் அந்த சாமி சிலை பின்பு நின்று கொண்டு நாத்திகம் பேசிக்கொண்டிருப்பார் பின்னணியில் "கல்லை மட்டும் கண்டால் " பாடலின் பின்னணி இசை ஒலிக்கும் . என்ன சொல்ல வருகிறார் இங்கே , நாத்திகன் கடுவலை பார்க்காமல் பேசிக்கொண்டிருப்பதை SYMBOLIC SHOT போல காட்டுகிறாரா ???? யாரும் கமல் பார்பனர் அதனால் நான் திட்டுகிறேன் என்று சொல்லவேண்டாம் .....அவரை விமர்சனம் செய்யவில்லை அந்த படைப்பில் என்ன சொல்கிறார் .


அன்பே சிவம் படத்தில் மாதவன் முதலாளித்துவத்தின் குறியீடாய் வருவார் , கமல் communism குறியீடாய் வருவார், ஆனால் அவர்களையும் அன்பால் வென்றுவிடலாம் , வலிக்காமல் புரியவைக்கலாம் என்ற நீர்த்து போன கருத்தை சொல்வார் . சரி முதலாளித்துவம் எத்தனை கொடூரமாய் உள்ளது போபால் விஷவாயு விடயம் என்ன ஆயிற்று , பிளாச்சிமடா என்னும் ஊர் நிர்மூலமானதே , முதலாளித்துவ கோரத்தால் . சரி தண்டகாரண்யா இடத்தை வளைக்கவேண்டும் என்று பார்க்கிறதே வேதந்தா , பழங்குடி மக்களை விரட்ட பார்க்கிறார்களே , அவர்களை அன்பாய் சொல்லி கேட்க்க வைக்க முடியும் . அன்பால் புரிய வைக்க முடியும் என்கிறார் கமல் . அன்பால் சொன்னால் வேதாந்தா நிறுவனம் தண்டகாரன்யாவை விட்டு விடுமா . இந்த அன்பு புரட்சி ஏற்ப்படாமல் நீர்த்து போகசெய்யும் அன்பு ,பொங்கி எழுகிறவனை கோபப்படாதே அன்பாய் சொன்னாலே கேட்டுக்கொள்வான் என்று சொல்லி நீர்த்து போக செய்யும் வேலையை பார்ப்பது. கமல் அன்பே சிவத்தில் ஏற்றிக்கும் பாத்திரத்திற்கு பெயர் தான் போலி Communism .


உலகமயமாதல் என்ன சொல்லிருக்கிறது தெரியுமா சீனாவில் . சீனா மக்கள் உயிர் வாழும் நாட்கள் சராசரி ஆயுள் காலம் மற்றவர்களை விட இரண்டு வருடம் கூட . இந்த நிலையில் உலக வங்கி சீனாவிற்கு விசேட கடன் ஒன்றை வழங்கி உள்ளது , அந்த மக்களின் ஆயுளை குறைக்கும் வழிக்காட்டும் நிபந்தனையுடன் அந்த கடன் வழங்க பட்டுள்ளது . அதாவது ஆயுளை குறைக்க வேண்டும் என்றால் என்ன உணவு உட்க்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை திணித்து நிபந்தனையுடன் கடன் வழங்கி உள்ளது . ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ வேண்டும் என்பதை முதலாளித்துவமும் , உலகமயமாதலும் நிர்ணயம் செய்கிறது,ஏழை உயிர்களுடன் விளயடுக்கிறது அவர்களிடம் அன்பாய் இருக்க சொல்கிறார் கமல் .


1992 ஆம் ஆண்டில் lawrence summers என்பவர் உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார் .அவர் உலக வங்கியின் ஊழியர்க்களுக்கு வழிக்கட்டுவதர்க்காய் ஒரு கடிதம் எழுதினார் . அதில் மாசு உள்ள தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதே அதன் சாராம்சம் . அந்த கடிதத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் .

1 மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்ப்படும்

2 மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறந்தது .
ஏன் என்றால் அங்கு வீசும் காற்று los angels கற்றை விட சிறந்தது (திமிரை பார்த்தீர்களா )

3 ஏழைகள் ஏழைகள் தான் ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லை . ஐந்து வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளின் மரணம் 200 சதவிகிதமாய் இருக்கும் போது மார்பு புற்றுநோய்க்கு ரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டார்கள் .

(நன்றி புத்தகம் "உலகமயமாதல்" ரயாகரன் )


போபாலில் என்ன நடந்தது , உயிர் கூட மயிர் என்று சொல்லும் உலகமயமாக்கலை அன்பால் திருத்திவிடலாம் என்று புரட்சி ஏற்ப்படாமல் இருக்க நீர்த்து போகும் கொள்கையை செயக்கிறார் கமல் . இந்தியா நில பிரபுத்துவமும் முதலாளித்துவமும் கலந்த நாடு , அதனால் அன்பே சிவம் , தேவர் மகன் போன்ற படங்களை அரசு அதன் பிரசார பீரங்கி போல படத்தை சிறந்த படைப்பு போல சித்தரித்து காட்டுகிறது . மேலும் தசாவதாரம் , ஹே ராம் , அவ்வை சண்முகி போன்ற படங்கள் பார்பனீயம் . இதுவும் அரசின் குரல் அதனால் திரையிட்டுள்ளனர். கமலஹாசன் என்பவர் ஆளும் வர்க்கத்தின் குரலாய் உள்ளார் அதனால் அவருக்கு பாராட்டு விழா . கலைஞர் பாராட்டு விழா கூட ஒரு தனிமனிதனின் அர்ப்பாமான எண்ணம் , ஆனால் கமல் பாராட்டு விழாவில் விஷமத்தனம் உள்ளது .

Thursday, 1 July 2010

மென் பொருள் பொறியாளர் ஏன் communism பேசக்கூடாதா

நேற்று ஒரு பதிவர் கேட்டிருந்தார் "மென்பொருள் நிறுவனத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா..." ஏன் எதிர்க்க கூடாது என்பதே என் கேள்வி . சரி பிரெஞ்சு புரட்சி நடந்த பொழுது என்ன நடந்து கொண்டிருந்தது , பிரான்ஸ் நில பிரபுத்துவத்தில் இருந்தது , தொழிற் புரட்சி வெடித்து முதலாளித்துவ நாடாய் மாறுகிறது. ஆனால் புரட்சி வெடிக்கும் முன்பாய் , புரட்சியை தோற்றுவித்தவர்கள் தோன்றியது நில பிரபுத்துவசமூகத்தில் இருந்து . ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்பதற்காய் அதில் உள்ள தவறுகளை எதிர்ப்பது , அல்லது தேவை பட்டால் அந்த அமைப்பையே தூக்கி எறிவது ஆகியவை தவறா என்ன ????? சரி இதை மட்டும் லெனின் நினைத்து இருந்தால் ரஷ்ய புரட்சி ஏற்ப்பட்டிருக்காது .இது மறைமுகமாய் எதை சொல்லவருகிறது என்றால் "ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருக்கிறாய் , உனக்கு முதலாளி தானே சோறு போடுகிறான் , அவனை எதிர்க்க கூடாது " என்று முதலாளித்துவதிர்க்கு ஆதரவு தெரிவிக்கிறது . ஆனால் உண்மை என்ன ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தான் முதல் எதிர்ப்பு குரல் வரும் இது உலக வரலாறு . ஒரு அமைப்பு இருக்கிறது , சமூக சூழலில் அந்த அமைப்பில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் , அதில் இருந்து கொண்டு தான் எதிர்ப்பை தெரிவிக்க முடியும் ,அதற்க்கு ஆதரவு தருவது தான் தவறு , எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி தவறாகும் , ஆனால் மணிரத்னம் கருத்து ரீதியாய் ஆதரவு தெரிவிக்கிறார் , முதலாளித்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் , அதனால் இவர் எதிர்க்க பட வேண்டியவர் .

மாற்றங்கள் என்பதே ஒரு விடயத்தை எதிர்த்து , அதில் இருந்து மாறுவதே . மாற்றங்களே கூடாது இது நாள் வரை கேவலமான சூழலில் தானே வாழ்ந்தாய் உனக்கு தகுதி இல்லை என்று எப்படி சொல்ல முடியும் . எனக்கு தெரிந்து நிறைய மென்பொருள் பொறியாளர்கள் , வார விடுமுறை நாட்களில் மக்களுக்கான பணிகள் செய்யும் இயக்கங்களில் இருக்கிறார்கள் , நீங்கள் சொல்வது போல் அவர்கள் PUB போய் இருந்தால் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள்விமர்சனம் செய்ய வேண்டும் . ஆனால் அவர்கள் பேசுவது communism , அதில் நண்பர் பாலாவிற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை . முதலாளித்துவ அமைப்பில் இருக்கிறார்கள் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள் , மென்பொருள் துறையில் வேலை பதினான்கு மணி நேரம் , சில நாட்கள் இருபது மணி நேரத்தையும் தொடுகிறது , அவர்கள் சுரண்டப்படும் பொழுது இயல்பாய் எதிர்க்கிறார்கள் . கேட்டால் பாலா சொலிகிறார் முதாலாளியின் காசை தின்று விட்டு முதலாளியை எதிர்ப்பதா . ஒரு மென் பொருள் துறையில் நூறு டாலர் நம்மை வைத்து சம்பாதித்தால் ஒரு டாலர் மட்டுமே சம்பளம் வருகிறது என்பதே உண்மை .சுரண்டப்படும் அமைப்பில் இருந்து எதிர்ப்பு வரக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

தாலி
















ஊரில்
பொங்கல் வைத்தார்கள்
என்பதற்காய் நான் திருவிழாக்கள் என்று
சொல்லவில்லை .........!!!!!!
திருவிழா என்பது நான் சாமி பார்க்கும்
விழா அல்ல ......
நீ என்னை பார்க்கும் விழா ...... !!!!
நீ என்னை பார்த்த நாள் முதல்
அது திருவிழா என்று ஏற்றுக்கொண்டேன் ....!
காதல் பாடல்கள் ஒலி பெருக்கியில்
பாடிக்கொண்டிருந்த பொழுது ..............
நாம் யார் காதில் விழாமல் பேசிக்கொண்டோம் ...!
பாடல்கள் போடாத நொடிகளில்
பார்வைகளால் பேசிக்கொண்டோம் ............!!!!!
எதோ ஒரு தினத்தில் உனக்கு பரிசம்
போட்டார்கள் ...............வேறு ஒருவனுடன்
திருமண தினத்தன்று
ஒலி பெருக்கி அலறிக்கொண்டிருந்தது ...........
ஆனால் நானும் பேசவில்லை நீயும்
பேசவில்லை ............!!!!
ஏதொ வேறு சாதியாம்
தாலியாம் ..............
தாலி ஏறிவிட்டால் நீ சொத்தாம்
யாரையும் பார்க்க கூடாதாம் ....................!!!!
அன்று நம் பார்வையும் பேசவில்லை
குனிந்து கொண்டே இருந்தாய் ..................
குனிந்த சமூகத்தில்
பெண் குனிந்து தானே இருக்க முடியும் .........
ஏன் மணமகன் மெட்டி போடவில்லை
மணமகன் தாலி கட்டக்கூடதா ....................
மணமகன் நண்பர்களுடன் சேர்ந்து
சரக்கடித்தானாம் பழைய காதலியை
நினைத்து
ஏன் நீ சரக்கடிக்கவில்லையா ??????
உனக்கும் காதல் தோல்வி தானே ....
ஒ பெண்களுக்கு வலி இல்லையோ
சரக்கடித்தால் உன்னை பெண்
என்று ஒத்துக்கொள்ள மாட்டார்களோ ..........
யார் இந்த சட்டம் எல்லாம்
போட்டது ..............!!!!!