Wednesday, 23 November 2011

தல அமெரிக்காவின் கை கூலியா - நண்பர் பாலவுக்கு எதிர்வினை

"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."

"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."

"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"


இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .

எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .

அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .

நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .

MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .

அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .

அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .

பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .

சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangal
vinavu

Sunday, 20 November 2011

பஸ் பால் விலை ஏற்றம் குறித்து கார்ல் மார்க்ஸ்

இன்று விலைவாசி ஏறி இருக்கிறது . பேருந்துகளில் போக இரண்டு ரூபாய் வர இரண்டு ரூபாய் என்ற காலம் மலை ஏறி விட்டது . குறைந்தது இருபது ரூபாய் இல்லாமல் நாம் பேருந்தில் பயணம் செய்வதை நினைத்து கூட பார்க்க முடியாது . நான் மதுரையில் இருந்த நாட்களில் கூடையில் பழம் காய்கறி விற்கும் கிழவிகள் , LSS பஸ் ரேட் ஐம்பது பைசா கூட என்பதற்காய் , வெள்ளை போர்டு பேருந்துகளுக்கு கால் கடுக்க காத்திருப்பார்கள் .அப்படி இருந்த மதுரையில் இன்று இருப்பது வெறும் கதவு போட்ட வண்டிகளே . வெள்ளை போர்டு வண்டிகள் பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு எப்பொழுதாவது ஒரு பேருந்து வரும் . அடுத்த நிறுத்தத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் குறைந்த பஸ் கட்டணம் ஐந்து ரூபாய் என்ற நிலைமைக்கு வந்தாயிற்று .

என் தம்பி ஒருவன் வேலை தேடிக்கொண்டிருக்கிறான் , மாதம் 6௦௦ ரூபாய் பாஸ் வைத்துக்கொண்டு , சென்னையை சுற்றிவருவான் . அவனுக்காவது இங்கே வீடு உள்ளது . ஆனால் இங்கே தங்கி வேலை தேடும் எண்ணற்ற கீழ் நடுத்தர குடும்பத்தை
சேர்ந்தவர்கள் , பொருளாதார பின்னணி இல்லாதவர்கள் எப்படி மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ் எடுப்பார்கள் . ஒரு அனுபவதிற்காய் சென்னையில் பட்டினபாக்கத்தை சுற்றி திருந்தேன் , வீடுகள் எல்லாம் குடிசைகள் ,நடுதரகுடும்பங்கள் கோமான்கள் அங்கே சென்று பார்த்தால் உண்மையான வாழ்க்கை புரியவரும் , இந்த பக்கம் மரினா கடற்கரை அங்கு ஒரு விதமான வாழ்க்கை , அப்படியே கொஞ்சம் காலாற நடந்து போனால் வேறு ஒரு உலகம் . அப்படி இருக்கும் பின்னணியில் ஒருவன் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செலவாகிவிடுகிறது .


சரி ரூமில் இருக்கும் நண்பர்கள் இவ்விடயத்தை பற்றி விவாதிக்கும் பொழுது , அம்மா ரசிகர்கள் ஆகிய அவர்களால் அம்மாவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . "மக்கள் கொந்தளிக்கிறார்கள் " என்று கலைஞர் டிவி சொன்ன உடன் , "அப்படி ஒன்னும் வெளில தெரியல , இவங்களா அடிச்சு விடுறாங்க " என்று
சொன்னான் வருடம் லட்சகணக்கில் வாங்கும் கார் வைத்து இருக்கிற நண்பன் . அவன் பேருந்துகளில் செல்வதில்லை .வேறு மாநிலங்களில் விலை ஏற்றி இருக்கிறார்கள் , அவர்களும் அரசை நடத்த வேண்டாமா என்று சொன்னான் மாதம்
அறுபதாயிரம் வாங்கும் நண்பன் . இன்னொரு நண்பர் வருஷத்துக்கு BONUS கேட்கிறீங்க அப்ப போக்குவரத்து துறை நட்டத்தில் தான் போகும் , முதல்ல அதெல்லாம் கட் செய்ய வேண்டும் . என்று அரசியல் விளக்கம் கொடுத்தார் .

அவர்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை ,போக்குவரத்து கழகம் நட்டத்தில் செல்லவில்லை , விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகும் மாணவர்களே அதற்கு சாட்சி .அதே போல் SEZ சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் இருக்கும் தொழிற்சாலைகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது ,அதுவும்
அடிமாட்டு விலையில் (எவ்வளவு என்ற புள்ளி விவரம் தெரியாது ) . நோக்கியா FOXCONN அந்த பிளான்டின் மொத்த செலவு 600 கோடி ரூபாய் , அதற்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் 750 கோடிகள். சாதாரண மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுக்கப்படவில்லை ஆனால் இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது மின்சாரமும் தடையின்றி கிடைக்கிறது . இம்முரணை புரிந்து கொண்டால் , அரசு ஏன் இப்படி செய்ய முடிகறது என்பது புரியும் . லாபக்கணக்கை பன்னாட்டு முதலாளிகளிடம் கட்டும் அரசு நட்டக்கணக்கை மக்களின் தலையில் எழுதுகிறது .

சரி ரூம் நண்பர்கள் ஏன் அப்படி சிந்திக்கிறார்கள் , அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் இதை எல்லாம் சமாளித்து விடலாம் அதனால் அவர்களால் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை . ஆனால் காலச்சுழற்சியில் நம் நடுத்தர குடும்பங்களும் , ஏழைகள் ஆகும் ,சுரண்டல் அதிகமாய் இருக்கும் ,அடக்குமுறை அதிகமாய் இருக்கும் இன்று பத்தாயிரம் ,இருபது ஆயிரம் வாங்குபவர்களை கூட ஏழை ஆக்கும் அரசு , நாளை அறுபது ஆயிரம்
வாங்குபவனை ஆக்கும் பொழுது , இவர்களால் இதே கருத்தை சொல்ல முடியாது . அமெரிக்காவில் WALL ஸ்ட்ரீட் மக்கள் இறங்கி போராடுகிறார்கள் . இது எப்படி சாத்தியம் ஆயிற்று . புத்தகங்கள் சொல்லிக்கொடுக்காத அரசியலை புறநிலை எதார்த்தம் சொல்லிக்கொடுக்கும் . அதுவே அங்கு நடந்தது .

சரி இம்மாதிரி அனுபவங்கள் நமக்கு சூழல் கற்றுக்கொடுக்கிறது , ஆனால் இதே விடயங்களை ௧௮௪௮
வந்த ஒரு அரசியல் புத்தகம் சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அந்த புத்தகத்தின் பெயர்
மார்க்ஸ் எங்கெல்ஸ் அளித்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை " . அந்த புத்தகத்தில் இருந்து சில வரிகள்

* வரலாற்றில் முந்திய சாகப்தங்களில் அநேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைவு இருக்க காண்கிறோம் (இந்த பன்மடிப்படிநிலை இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பு ,கிராம வாழ்கையில் இருக்கும் அந்தஸ்து , அனைவருக்கும்
மேலே நிலப்பிரபு .முதலில் பார்ப்பனர்கள் ,அதற்கு அடுத்த நிலை ஆதிக்க சாதியினர் , அதற்கு அடுத்த நிலை பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் ,


கிராம வாழ்க்கையிலிருந்து முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறும் பொழுது .
இங்கு சென்னையிலே சாதி என்பதை பார்க்காமல் அனைவரும் ஒரே தொழிற்சாலையில்
வேலை செய்ய வேண்டும் ,சாதியால் பிளவு படும் வர்க்க அமைப்பு , தொழில் முறையால் வாழ்க்கை முறையால் ஒன்று படுகிறது . இன்று அம்மா தனி தனியாய் சாதி பார்த்து வேலை ஏற்றம் செய்ய முடியாது , நாளுக்கு நாளாய் வாழ்க்கை தரம் குறைய குறைய , தொழிலாளி உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் ஒரே விதமான சிக்கல் வருகிறது , விஞ்ஞான ரீதியாகவே அவர்கள் ஒன்று கூடுகிறார்கள் .

வாழ்க்கை முறை மாறும்பொழுது , நடுத்தர வர்க்கம் கூட ஏழை ஆகிறது , ஒரு தொழிலாளி வாழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . பணம் ஒரு பக்கமே குவிகிறது ,அதனால் UPPER MIDDLE CLASS MIDDLE CLASS ஆகிறது middlE CLASS ஏழைகள் ஆகின்றனர் . இப்படி நடக்க நடக்க , அனைவரும் ஒரு சமநிலைக்கு வருகின்றனர் .இதையே தான் மார்க்ஸ்

"ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவெனில் வர்கப்பகமைகளை இது சுருக்கி எளிமையாக்கி உள்ளது .சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாய் ,எதிரும் புதிருமான இரு வர்கங்களாய்- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாய் -பிளவுண்டு வருகிறது "



ஒரு நேரத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் , அனைவரும் ஏழை ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் சாதிகள் ஒழிக்கப்பட்டு ,அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வார்கள் .

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முத்திரையை கிழிதெறிந்து ,குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுற செய்தது .


எவ்வளவு ஆத்ரசமான வரிகள் . இப்படி அந்தப்புத்தகத்தை சொல்லிக்கொண்டே போகலாம் . கழிசடை புத்தகங்கள் எல்லாம் அதிக விலையில் விற்கும் பொழுது இதன் விலை பதினைந்து ரூபாய் தான் . சென்னையில் கீழை காற்று மட்டும் NCBH இல் கிடைக்கிறது . வரிக்கு வரி இக்கால சூழலோடு பொருத்தி பார்த்து சொல்ல முடிகறது , அது தான் மார்க்ஸ் அவர்களின் பலம் , மார்க்சியத்தின் பலமும் அதுவே .

Saturday, 25 June 2011

சாரு ( CHA ரூ )

சாரு இலக்கிய சாரு , சாருவின் அடுத்த அடியாள் என்று எழுதிய நான் அதற்காக வெட்கப்படும் தருணம் இது .ப்ளாக் படிக்கவந்த புதிதில் இலக்கியமே தெரியாத புதிதில் , யாருமே வாசிக்காத புதிதில் ,நான் படித்தது அவர் மட்டுமே .பேருந்தில் நம் வீட்டு பெண்கள் யாரவது இடிபட்டால் , அவர்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் சொல்ல தயங்கி , சொல்லாமல்
இருப்பதால் ,ஐந்து நிமடத்திற்கு பிறகு சொல்லியவுடன் , நாம் நம் வீட்டு பெண்களிடம் " ஏன் தாமதமாய் சொன்னீர்கள் "என்று சொல்வோமா ? இல்லை உடனடியாக அந்த பொறுக்கியை அரைய பார்ப்போமா ? ஆனால் இணையத்தில் ஒரு இலக்கிய பொறுக்கி என்ன வேண்டுமானாலும் செய்வார் , ஆதாரத்துடன் பிடிபட்டுவிட்டார் .என்ன செய்ய முடியும்
அவர் சரி என்று சொல்ல முடியாத சூழல் , அடுத்து என்ன நடக்கும் அவரது ஆதரவாளர்கள் அந்த பெண்ணே அப்படி தான் என்று திசை திருப்புகிறார்கள் . இப்படி பேருந்தில் நம் வீட்டு பெண்களிடம் நடந்தால் நாம் திசை திருப்புவோமா .இல்லை அவர்களுக்கு தான்
சொம்பு தூக்குவோமா ?

சாரு பற்றி புரியாதவர்கள் இந்த கட்டுரைகளை படியுங்கள்

vinavu

agnipaarvai

tamilachi

Thursday, 23 June 2011

ஒரு காதலி

ஒரு காதலி
எத்தனை காதல்

Sunday, 24 April 2011

கோ

சனிக்கிழமை மதியம் "கோ" படம் பார்க்க நேர்ந்தது , படம் அரசியல் ரீதியான படம் , பத்திரகையாளர்கள் கதை இவை எல்லாம் படத்தை பார்க்க தூண்டியது . படத்தில் முதல் காட்சியிலேயே வெறுத்து போனேன் , நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடிக்கிறார்கள் , அதை பறந்து பறந்து போட்டோ எடுக்கிறார் நாயகன் , எனக்கு தெரிந்து நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடித்தது போன்று தெரியவில்லை , அவர்கள் மக்களை கொள்ளை அடிக்கிற பன்னாட்டு நிறுவனங்களையும் , அரசாங்கத்தயுமே எதிர்க்கிறார்கள் , எதோ வங்கி கொள்ளை பற்றி உலக சினிமாவை பார்த்து விட்டு இயக்குனர் அந்த காட்சியை சேர்த்து இருப்பாரோ என்று எண்ண தூண்டியது .பின்வரும் காட்சிகளில் போட்டோவை எடுத்து குமிக்கிறார்நாயகன் அது அரசியலையே புரட்டி போடுகிறது என்பது தான் கதை.

இது ஆகா சிறந்த அரசியல் படம் என்று சிலர் சொல்கின்றனர் உண்மையில் அப்படி தான் உள்ளதா .
முதலில் எதிர்க்கட்சி தலைவரின் பிம்பத்தை நாயகன் உடைக்கிறார் எப்படி உடைக்கிறார் நீங்கள் ஈழத்தமிழனை
காப்பற்றவில்லை , முல்லை பெரியாறு பிரச்னையை பேசவில்லை , அலைகற்றை ஊழல் பற்றி வாய் திறக்கவில்லை ,விலைவாசி உயர்வு பற்றி பேசவில்லை என்பது போல நினைத்தால் ஏமாற்றம் வரும் .அந்த தலைவர் ஜோசியத்தை
நம்பி ஒரு சிறு பெண்ணை மணமுடிக்க செல்கிறார் , அதை போட்டோ பிடித்து அவர் பிம்பத்தை உடைக்கிராராம் .
நாயகனுக்கு அந்த தலைவரை எதிர்க்க வலுவான கொள்கை காரணங்களே இல்லை , இப்படி போகிறது மக்கள் கொண்டாடும் ஆக சிறந்த அரசியல் படம் .


சரி அடுத்து முதல்வரின் பிம்பத்தை உடைக்க நினைத்த கதாநாயகன் , என்ன செய்கிறார் ஒரு நிருபரை முதல்வர்
செருப்பால் அடிக்கிறார் , அதை மட்டுமே படம் பிடித்துவிட்டு அவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு அடிக்கிறார் நாயகன் .மற்றபடி கொள்கை கத்திரிக்காய் எல்லாம் நாயகனுக்கு ஒரு பொருட்டே அல்ல . சரி இவர்கள் சொல்லும் வணிக ரீதியானநடுநிலை நாளிதழ் எங்கே உள்ளது , அதுவும் நாயகன் என்ன படம் எடுத்தாலும் , ஆளுங்கட்சியை எதிர்கட்சியை எதிர்த்தும் கட்டுரைகள் வருகின்றன , இது தமிழக சூழலில் எப்படி சாத்தியம் .

படத்தின் இறுதியில் நாயகன் நக்க்சல் இயக்க தலைவரிடம் "எல்லாரும் ஒன்னு வச்சுருப்பாங்க , அதே போல நீங்க எத கேட்டாலும் "ஒடுக்கப்பட்டவங்க " அப்படின்னு காரணம் சொல்வீங்க " என்பார் . இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களே இல்லையா என்ன ? சத்தீஸ்கர் தண்டகாரண்யா காஷ்மீர் வரலாறுகள் இயக்குனருக்கு தெரியாது போலும் . "எத்தன பேர உருவாகுறீங்க , காலேஜுல " என்று ஜீவா கேட்கிறார் . அதவாது மாணவர்கள் pub போவதோ , தண்ணி அடிப்பதோ பிரச்சனைகள் அல்ல , அரசியல் படிப்பது தவறு என்பதை போல காட்சி அமைந்துள்ளது . KV ஆனந்த் அவர்களே நீங்கள் சத்யம் theatre மக்களுக்காக படம் எடுப்பது தவறல்ல ,
ஆனால் நீங்கள் சம்பாதிக்க நக்சல் தான் கிடைத்தார்களா ?


சமகால அரசியல் படம் என்று ச்லகிப்பவர்கள் , அப்படி என்ன அரசியல் தான் பேசினார்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா ? ஏன் முதல்வரை எதிர்க்கும் பொழுது கூட கொள்கை ரீதியாய் எதிர்ப்பு காட்டாமல் , கிள்ளிட்டான் அடுசுட்டான் என்பது போன்ற மொக்கை காரணங்களே காட்டப்படுகின்றன . "கோ" பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்லலாம் , ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய , ஊடக பத்திரிகை சுதந்திரத்தை பற்றி கூட பேசலாம் , ஒடுக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தலாம் .

Tuesday, 29 March 2011

பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி

"எனக்கு ரொம்ப tensiona இருக்கு "
"என்ன மச்சி நாகப்பட்டினம் போயிருந்தையா மீனவங்க எல்லாம் செத்துப்போறாங்க அதுக்கா மச்சி "
"இல்ல டா "
"நம்ம பணமெல்லாம் SPECTRUM மாதிரி ஊழலுல போகுதே அதுக்கா "
" மச்சி எனக்கு அரசியல் பிடிக்காது எவன் சம்பாதிச்சா எனக்கென்ன "
" சரி இந்த இலவசம் எல்லாம் தந்து மக்களை கேவலப்படுத்தாரைங்கள அதுக்கா , இல்ல தண்டகாரன்யாலா மக்கள் அடிச்சு விரட்டப்படரான்களே
அதுக்கா , ஒஹ் நீ தான் தண்டயர்ப்பேட்டைல எதாவது நடந்தாலே கவலைப்பட மாட்ட அப்புறம் என்ன டா டென்ஷன் "
"மச்சி இந்திய பாக்கிஸ்தான் மேட்ச் மச்சி , இந்தியா ஜெயிக்கணும் ஆபீஸ்ல ஒருத்தன் பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி "

Tuesday, 22 March 2011

பகத் சிங் நினைவு நாள் -வீர வணக்கங்கள்


போலிகளுக்கு நடுவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ."சச்சின்" பிறந்தநாள் நியாபகம் வைத்துகொள்ளும் நாம் , "பகத் சிங் " நினைவு நாளை , உண்மையான களப்போராளியின் நினைவு நாளாய் மறந்து கடந்து விடுகிறோம் . இன்று பகத் தூக்கிலிடப்பட்ட நாள் , வீர வணக்கங்கள் . உலகக்கோப்பையும் , போலி ஜனநாயகம் உருவாக்கும் தேர்தலையும் நம் சிந்தனையிலே ஒதுக்கிவைத்து விட்டு , பகத்திற்கு வீர வணக்கம் செய்வோம். அரைநாள் உண்ணாவிரதமும் , கொடநாட்டில் ஓய்வும் , திருமணமண்டபம் இடிக்கப்பட்டதால் அரசியலுக்கு வந்தவரையும் ,
லட்சம் கோடிகள் அடித்தவரையும் மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டில் , இருபத்தோரு
வாயதே ஆன ஒரு போர் வீரன் தூக்கு மேடையிலே முத்தமிட்ட நாள் . வீர வணக்கங்கள் .