Saturday, 28 November 2009

அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?


















அழகர்
"அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.ஆனால் காதலைச் சொன்னால் ஏற்பாளா,இல்லை நட்பாய் தான் பழகி இருப்பாளா.." என்று யோசித்துக்கொண்டிருந்தான் அழகர். "நாளைக்கு எப்படியாவது காதலை சொல்லி விட வேண்டும்" என்று முடிவு எடுத்துக்கொண்டான்.மறுநாள் காலை அவனுக்கு மட்டும் நான்கு மணிக்கே விடிந்தது.பல் விளக்கும் நேரம் முதல் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.கழிவறையில் கூட
கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
கல்லூரி சென்றான், சுடிதார் போட்டவர்கள் எல்லாமே அவளைப் போலவே தெரிந்தார்கள்.அனிச்சையாய் பார்த்தான் உண்மையிலேயே இப்பொழுது சுடிதாருக்குள் இருப்பது அவளே, பக்கத்தில் அவள் தந்தை அவன் வருங்கால மாமனார்.அவளைப் பெற்றதற்கு மனதார அவரிடம் நன்றி சொன்னான்.பக்கத்தில் சென்றான், கூடவே அவன் நண்பர்களும் சென்றார்கள். அவள் பொதுவாக எல்லாரையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்.இவனுக்கு சுருக்கென்று இருந்தது.அனைத்து நண்பர்களும் "வாங்கப்பா" என்று சொல்ல ....இவனுக்கு மனம் இல்லை என்றாலும் கிளியை போல் "வாங்கப்பா" என்றான்,மனதிற்குள் அழுது கொண்டே.......!பெண்கள் பார்வை புரியவில்லை அவனுக்கு.
ஆம் அவள் பெயர் ஸ்வேதா.

ஸ்வேதா

ஸ்வேதா தொலைக்காட்சியில் "கண்கள் இரண்டால்" பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.அந்தப் பாடலின் கதாநாயகன் பெயர் அழகர் என்பது முக்கியக் காரணம். ஆம் இவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
அவனைப் பார்க்கும் போது இவளுக்கும் வேதியியல் மாற்றங்கள்.அவள் தங்கை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர் அப்பா அலறிக்கொண்டு வந்து தங்கையை அடித்தார் "எவன் போட்டோ டீ அது" என்று அறைந்தார்.இவள் உறைந்து போய் நின்றாள்."இருபது வருஷமா வளர்த்திருகோம்,வலிக்குது டீ என்றார்" கோபத்தில் தொலைக்காட்சியை எடுத்து உடைத்தார் இவள் காதல் உடைந்து போனது .............
"அப்பா பீஸ்" என்றாள்...."நீயும் ஏதாவது காதல் கீதல்" என்றார் "இல்லை" என்றாள்..."சரி நாளைக்கு நானே வரேன்" என்றார். "சரி பா" என்றாள்.
அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அழகர் தன் நண்பர்களுடன் வந்தான். இவள் அவனை கண்ணோடு கண் வைத்து பார்கவில்லை. பொதுவாக இவர்கள் எல்லாம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.
எல்லாரும் "வாங்கப்பா" என்றார்கள் .அழகரும் சொன்னதை கவனித்தாள்.அவர் அப்பாவுக்கு சந்தோஷமாய் இருந்தது "அப்பா" என்று கூப்பிட்டது.காதல் பிரச்சனை,ஒரு காதலால் இன்னொரு காதல் உடைந்தது.அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?

Friday, 27 November 2009

மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா .
















மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ...
நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்
அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்...

நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிருந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா.....ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை
encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????










முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.
கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் "வன்முறைக்கு வன்முறை தீர்வு " என்று குரல் கொடுப்பார்...................ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ...............மத்ததெல்லாம் ...........?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் ..............மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ....இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????
ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ..........
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக
உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது .எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ....என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ....!

Wednesday, 25 November 2009

உயிர்த்து எழுவாயா பிரபாகரா....!















மௌனமாய் அழவில்லை .....
மண்ணுக்குள் புதைத்தான்
கழக கலக பெருச்சாளி அல்ல....
களப்போராளி........அவன்...!

ஒரு மகனுக்கு மத்திய அரசு ...
ஒரு மகனுக்கு மாநில அரசு ....
என் தலைவனின் மகன்களோ
மண்ணுக்குள்ளே மண்ணுக்காக...!

மூன்று நான்கு மனைவிகள்
இல்லை .....!
ஒரு மனைவி என் அண்ணி
எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை ..!

தமிழ் இனத்தலைவன் என்று சொல்லவில்லை ....
மகளை கவிஞர் என்று சொல்லவில்லை .....
இங்கே தலைவன் மானாட மயிலாட மார்பாட்டதிற்கு பேர் சூட்டும் போது....
என் தலைவன் மார்பை நிமிர்த்திக்கொண்டு சிங்களனின் துப்பாக்கி முன்பு உருமிக்கொண்டிருந்தான் ..!

இங்கே பெண் சிங்கத்திற்கு
கதை எழுதிக்கொண்டிருக்கும் போது .....!
என் புலி
பலி ஆனான்.......!

தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவில்லை ....
தலைவன் நடந்து வந்தாலே மாநாடு .......
இன்று மாவீரர் தினம் .....
என் தலைவன் உயிர்த்து எழுவானா .........????























இனம் காத்த வீரனே கடவுள்,
முனியாண்டி, ஐயனார் வீரர்களே.........
ரத்தம் சிந்தி கடவுள் ஆனான்
ஏசு.......!
கடவுள் பிரபாகரனே உயிர்த்து எழுவாயா?????
இல்லை சிலையாக எம்மை வழி நடுத்துவாயா ........

என்னால் உன்னை உயிருடன் கொண்டுவர
வைக்க முடியாது .....
உன்னைக் கவிதையால் மீட்டு எடுக்க முயற்சி செய்கிறேன்......
அழுகை வருகிறது ..... உண்மையிலேயே நீ இறந்து இருந்தால் .....
உன் தம்பி முத்துக்குமாரை கேட்டதாக சொல் .....
இப்படிக்கு நீ உயிர்த்து எழ காத்துக்கொண்டிருக்கும்
உன் தம்பி .......!

Monday, 23 November 2009

வெட்டப்பட்ட படச்சுருள் - இளமை விகடனில் எனது இரண்டாவது படைப்பு








வெட்டப்பட்ட படச்சுருள்


நான் வசித்த இடம், கவிஞர் அறிவுமதிக்குப் பிறகு நிறைய உதவி இயக்குனர்கள், நாளைய ஒளி ஓவியர்கள், நாளைய திரைப்பட தயாரிப்பாளர்கள் போன்றோர் தங்கியிருக்கும் இடம். இவர்களைத் தவிர, திரைப்படக் கல்லூரி மாணவர்களும் அவ்வப்போது வலம் வருகின்ற சூழல் நிறைந்த பகுதி. உலக சினிமாக்கள், புத்தகங்கள், சுற்றிக் கொண்டிருக்கிற இடம். எஸ்.ராமகிருஷ்ணன், சாரு போன்றவர்களின் குரல் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நிறைய விவாதங்கள்... "இந்த லைட்டிங் சரியில்லை," என்பார் நாளைய ரத்னவேலு.
"காட்சிகள் ஜம்ப் ஆகிறது," என்பார் நாளைய பாக்யராஜ்.இதை எல்லாம் கேட்டுக் கொண்டே நான்கு ருபாய் டீ குடித்துக் கொண்டிருப்பார், நாளைய தயாரிப்பாளரான இன்றைய தயாரிப்பு நிர்வாகி.

ஆம்... திரையுலகம் கனவுத் தொழிற்சாலை, கனவுலகம்.
நட்பின் துரோகம், பணத்தின் துரோகம் ஒரு பக்கம்... ஜெயித்தால் நீ தான் ராஜா, கட்சி கூட ஆரம்பிக்கலாம், தோற்றால்!? என்னைப் பொருத்தவரை, திரையுலகை அற்புதமாய் பதிவு செய்த படம் 'வெள்ளித்திரை'. என் சினிமா நண்பர்கள் அனைவரும், அதில் வரும் பிரகாஷ்ராஜ் போலவே எனக்குத் தெரிகின்றார்கள்.சினிமாவில் இரு வகை மக்கள். ஒன்று... வெள்ளித்திரையின் பிரகாஷ்ராஜ் வகை, மற்றொன்று அதே படத்தின் பிரித்விராஜ் வகை. இருவரும் திரையுலகின் இரு வேறு குறயீடு.

இங்கே ரஜினிகாந்தாக, அஜித்குமாராக, சசிகுமராக கனவு கண்டு வருகிறவர்கள், திரைக்குப் பின்னாலையே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு.
ஆம்... திரையில் இருபது வருடமாக கூட இணை இயக்குனர்களாக இருப்பவர்கள் உண்டு. இதைப் பற்றி நீங்களும் பலச் சூழல்களில் கேள்விப்பட்டிருக்கக் கூடும். எனக்கு ஒரு சில நேரடி அனுபவம் உண்டென்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்.


அத்தகைய தோல்விகளைக் கண்டு மனது வலிக்கத் தான் செய்கிறது. இந்தக் கனவுத் தொழிற்சாலை பலரின் தூக்கங்களை தின்று, சிலரைக் கனவு காண வைக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர், பத்து வருடமாக உழைத்து இப்பொழுது தான் ஒரு நல்ல இயக்குனருடன் சேர்ந்திருக்கிறார், உதவி இயக்குனராக. அதற்கு அவர் கொடுத்த விலை 'காதல்'. அவரது காதலியைக் கரம் பிடிக்க முடியாதச் சூழல். இத்தனைக்கும் அந்தப் பெண், அவருடைய சொந்த அத்தை மகள்.

அப்படியே திரைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தாலும், வணிகச் சுழல் காரணமாக நினைத்ததை எடுக்க முடியாது. தேவை இல்லாத நகைச்சுவைக் காட்சி சேர்க்கச் சொல்வார் தயாரிப்பாளர். பெரிய நடிகர் என்றால் வேலை வாங்குவது சுலபம் அல்ல. படம் முடிந்தாலும் வெளி வருவது ஒரு குழந்தையின் பிரசவம் போன்றது, தாய் இறந்துகூட போகலாம்!

எனினும், மோதிப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் நாளைய பாலா. தான் வேலை பார்த்த கதாநாயகனிடம், 'உங்களுக்கு ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார்,' என்கிறான்..! புகைப்படத்துடன் சுற்றுகிறான்... கடன் வாங்கியாவது உடம்பு ஏற்றுகிறான். கதாநாயகன் என்ன தான் பிடிக்கவில்லை என்றாலும், நமக்கு வாழ்க்கை பிடித்து இருக்கிறது இல்லையா?

திரையுலகம் தூக்கங்களை நிறுத்தி விட்டு கனவு காணச் சொல்கிறது. சிலரின் வாழ்க்கை படத்தில் வரும் காட்சி போல ஜெயிக்கின்றன. சிலரின் வாழ்க்கை வெட்டப்பட்ட காட்சிகள் போல திரையில் வராமலே போகின்றன.

திரையிலும் சரி நிஜத்திலும் சரி வெட்டப்பட்ட காட்சிகளே அதிகம்.
வெட்டப்பட்ட படச்சுருள் மண்ணிலே மௌனமாய் அழுது கொண்டிருக்கின்றன!
http://youthful.vikatan.com/youth/Nyouth/venniraira21112009.asp>

Sunday, 22 November 2009

முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உண்டான சிறிய இடைவெளி

















கவிதைகள் காகிதத்தில்
புணர்ந்த பின் கவிஞனுக்குச் சொந்தமில்லை ..............!

வார்த்தைகள் காற்றுடன் மணம்
செய்து,பெற்ற வாயிடம் வருகிறேன் என்று சொல்கின்றன .....!

கால்கள் விடைப் பெற்றுக் கொள்கின்றன ....செருப்பிடம்
கழட்டும் போது....!

ஒரு வரியிடம் முற்றுப்புள்ளி வைத்து.....
மற்றொரு வரியிடம் இதோ வருகிறேன் என்று
சொல்கிறது பேனா ..............!

மரணம் ஒரு முற்றுப்புள்ளி ..........
ஒரு வரியாக இறந்து மறு வரியாக உருவெடுப்பேனோ...!

எப்பொழுதும் ஒரு பக்கத்தின் முடிவில்
இன்னொரு பக்கம் தொடங்குகிறது ............!
முற்றுபுள்ளி முடிவா தொடக்கமா .........?
முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உண்டான சிறிய
இடைவெளி......!
வெட்டப்பட்ட படச்சுருள் -விகடனில் இரண்டாவது கட்டுரை


Thursday, 19 November 2009

பார்வைக் கோர்வை























வார்த்தைக் கோர்வை
கவிதையாம்
நம் பார்வைக் கோர்வை ...!

எவ்வளவு முயன்றும்
உன் முதல் பார்வையை விட
சிறப்பாய்
ஒரு கவிதை படிக்கவில்லை...!

உன் கண்கள்
பேசிக்கொண்டே இருக்கிறது ....
என் கண்கள் கேட்டுக்கொண்டே
இருக்கிறது ...!

இருக்கையிலே நான் இருக்கையிலே ...
ஒரு கை கன்னம் தொட உட்கார்ந்து இருந்தாய்...!
கன்னமாக இருந்திருக்கலாம் நீ தொட்டுக் கொண்டிருப்பாய் ...
கையாக இருந்தால் உன் கன்னம் தொடலாம் .....!
கையாலாகாமல் இருக்கிறேனே?

கவிஞன் இல்லை நான்
மொழிபெயர்ப்பாளன் உன் விழிகளை
கவிதையாய் ....!

Wednesday, 18 November 2009

தமிழ் இனத்தலைவன்

தமிழ் இனத்தலைவன்
என்றான் ...?
தமிழ் இனம் என் குடும்பம் என்றான் மேடையில்
இனம் அழிந்து கொண்டிருக்கிறதே
தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...!