Wednesday, 30 June 2010

பதிவுலக சந்தேகங்களும் அதற்க்கு உண்டான பதில்களும்

"படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்." இவர் விவாதங்களே வேண்டாம் என்கிறார் விவாதங்களை குப்பத்தொட்டி என்கிறார் . இது தான் திமிர் பிடித்த கருத்து , உங்களுக்கு ஒரு கருத்து பிடிக்கவில்லையா விவாதம் செய்யுங்கள்
விவாதம் செய்ய முடியாமல் குப்பை தொட்டி என்று சொல்கிறீர்கள் ...............சரி விவாதம் இல்லாமல் , மணிரத்தனம் சிறந்தவர் , பார்பனர்கள் நல்லவர்கள் , பெண்கள் அடங்கி தான் இருக்கவேண்டும் . முதலாளிக்கு அடங்கி போக வேண்டும் , கடவுள் இருக்கிறார் , இது எல்லாம் நீங்கள் சொல்ல வரும் கருத்து இதன் பெயரே பார்பனீயம்பாலா


புலிகேசியின் பதிவு படித்தேன் அதில் பால பக்கங்கள் என்பவர் தன் மனக்குமுறலை தெரிவித்து உள்ளார் . சரி அவருக்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .
1 "ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா?" நண்பரே ஆண்கள் தண்ணி அடிக்கும் பொழுது ஏன் பெண்கள் தண்ணி அடிக்கக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார் . பெண்களுக்கு வசதியான உடையை உடுத்துகிறார்கள் ....அதை உடுத்த கூடாது என்றுசொல்வது ஆணாதிக்கம் தானே ,உங்கள் ஆடையை பெண்ணா தெரிவு செய்கிறாள் நீங்கள் தானே தெரிவு செய்கிறீர்கள் நண்பரே .அப்பொழுது பெண்களுக்கும் அவர்களுக்கு பிடித்த உடையை தேர்வு செய்ய முடியும்


























2 " இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? "
பெண்கள் படிப்பை மறுக்கிறீர்களா ......... அது என்ன படித்த பின்பா வேலைக்கு போன பின்பா ................... எத்தனையோ உழைக்கும் பெண்கள் அப்பா அம்மாக்கு சோறுபோடுவது
எனக்கு தெரியும் ......... நீங்கள் தவறை சுட்டிக்காட்டுவது தவறில்லை .........ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே .........

3 பார்பனீயம் ஏன் கண்டிப்பாய் எதிர்க்க படவேண்டும் . இவர் இவர் இந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்று பார்பனீயம் சொல்கிறது . உலகத்தில் எந்தமதத்திலும் தன் மதத்தை சேர்ந்தவர்களை தொடக்கூடாது என்று இல்லை , ஆனால் பார்பனீயம் சொல்கிறது தீண்டாமை. அருந்ததி இன மக்கள் தான் இன்றும் மலங்களை எடுக்கிறார்கள் அது ஏன் என்று விளக்கம் சொல்லுங்கள் , பார்பனர்கள் தான் இந்த அமைப்பை கொண்டு வந்ததே . நாங்கள் மட்டுமே இறை தூதர்கள் நீங்கள் எல்லாம் தீண்ட தகாதவர்கள் என்று சொன்னவர்கள் பார்பனர்கள் . தலித் மக்கள் துன்புறும் பொழுது கோபம் கொள்ளாத நீங்கள் , பார்பனரை திட்டும் பொழுது மட்டும் கோபம் கொள்வது கூட பார்பனீயம் பார்பனர்கள் என்றால் ஏன் திட்டுகிறார்கள் என்று நான் விளக்கம் சொல்கிறேன் .

4 ///ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா? "மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி." என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா? "நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் /////

ஐயா பாலா அவர்களே மணிரத்னம் சம்பாதிப்பதும் , சாதாரண தொழிலாளி முதலாளியிடம் சம்பாதிப்பதும் ஒண்ணா ???????? சாதாரண தொழிலாளி தன் வாழ்க்கை ஓட்ட முதலாளியிடம் வேலை செய்கிறான் . ஆனால் மணிரத்னம் போல நூறு கோடி சம்பாதிக்க , தாக்ரே அவர்கட்க்கு கூல கும்பிடு போட்டு , வரலாற்றை திரித்து சொல்பவர்கள் இல்லை நாங்கள் . அம்பானி அவர்களால் இறந்த சிறு முதலீட்டளர்கள் உண்டு , முதலாளி அயோக்யனே , அம்பானி அவர்களை பணத்திற்காக திருட்டுதனைத்தை ஹீரோ போல நாங்கள் காட்ட வில்லை . மணிரத்னம் காட்டுகிறார் . நூறு கோடி சம்பாதிப்பதையும் , வேறு வழி இல்லாமல் மாதம் ஐந்து முதல் பத்தாராயம் சம்பாதிப்பதும் ஒன்று அல்ல .

எனக்கு தெரிந்து தோழர்கள் MANAGER பதவி வந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை , நீங்கள் விருப்பப்பட்டால் நன் அவர்களை காண்பிக்கிறேன் , உங்கள் மணிரத்னத்தால் அதுமுடியுமா MANAGER பதிவி என்றால் முதலாளிக்கு ஜால்ரா போட வேண்டியது வரும் என்பதால் . உங்களை போல் அவர்கள் புலம்பவில்லை , களத்திலே மக்களுக்காய் இருக்கிறார்கள் . இது எப்படி தெரியுமா உள்ளது ......தண்ணீர் தனியார் மாயம் ஆகிறது என்றால் , எல்லாரும் KINLEY தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று காலச்சூழல் இருக்கிறது , நீங்கள் தண்ணீர் குடிக்கும் பாமரனையும் , KINLEY கம்பெனி இரண்டையும் ஒரே தராசில் வைப்பது எவ்வளவு அயோக்ய தனமோ அவ்வளவு அயோக்யத்தனம் உங்கள் மணிரத்னத்தையும் தன் குடும்பம் வாழ அதிகம் ஆசை படாமல் சிறு வேலைகள் பார்க்கும் தொழிலாளியையும் compare செய்வது .

5 உங்கள் கடவுள் நம்பிக்கைக்கு நாளை பதில் சொல்கிறேன் ..................
bala pakkangal

நீ பார்க்காத நிமிடம் ......



















நீ பார்த்து
நான் பார்க்காத நிமிடம் ,
நான் பார்த்து
நீ பார்க்காத நிமிடம் ......
உண்மையில் நாம் பார்த்துக்கொண்ட நிமிடங்கள் ...!!!
பேசிய நிமிடங்களை
விட பேசாத நிமிடங்களே
அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம் ......................!!!!!
காதல் திருமணத்தில் முடிய வேண்டுமாம் !!!!
முடிகிற காதலுக்கு மட்டுமே திருமணம்

Tuesday, 29 June 2010

வழக்கு மொழி கொச்சையானதா சிதம்பரத்தின் மேட்டிமை திமிர்















சிதம்பரம் நேற்று கோவை செம்மொழி மாநாட்டில் பேசினார் அதில் "வட்டார வழக்கு என்பது எல்லா நடுகளிலும் இருக்கிறது. அதில் பல நல்ல சொற்கள் உள்ளன. ஆனால் வட்டார வழக்கு என்கிற பெயரில் இல்லாத சொற்களையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தினால், அது மொழியை சிதைத்து விடும். ஒரு மொழியை சிதைக்கக்கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்று வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வழக்கு மொழி இழுக்கு மொழியாகிவிடுமோ என்கிற கவலை இருக்கிறது." இந்த புள்ளியில் அவர் என்ன சொல்ல வருகிறார் வட்டார வழக்கே இருக்க கூடாது என்கிறாரா , மதுரை என்றால் ஒரு மொழி , திருநெல்வேலி என்றால் ஒரு தமிழ் , கோவை என்றால் ஒரு தமிழ் என்று வட்டாரரீதியாய் ஒரு மொழி இருக்கும் பொழுதே அம்மொழி வளரும் .

இப்பொழுது செம்மொழி என்கிறார்களே அது என்னது என்று அலசி பார்ப்போம் . அச்சு ஊடகங்கள் மட்டுமே ஒரு அளவு மொழிக்கு அத்தாட்சி . சிதம்பரம் சொல்லும் செம்மொழி என்பது அது தான் . அதாவது அச்சு ஊடங்கங்களில் தினமணி தினமலர் ஆனந்த விகடன் போன்ற ஊடகங்களில் வேலை செய்பர்வகள் மேட்டுக்குடி பார்பனர்கள் .
பழைய விகடன் எடுத்துப்பாருங்கள் அதில் அந்த வடக்கு மொழி கலப்பு இயல்பாய் தெரியும் அந்த ஊடகங்களை படிக்கும் பொழுது . அந்த காலம் முதல் அச்சு ஊடகங்களில்இருப்பது தஞ்சை பார்ப்பனீய மொழி . அதை மட்டுமே பேச சொல்கிறாரா சிதம்பரம் . வழக்கு மொழி என்றால் எல்லாம் இருக்க தான் செய்யும் , வழக்கு மொழிக்களே வளரக்கூடாது என்கிறாரா இதை ஏன் யாரும் கண்டிக்க வில்லை .

ஒரு மொழி என்பது பேசப்பேச மட்டுமே வளரும் இயல்பு உடையது . மதுரை தமிழிலே "கோளாறா போ பா " என்றால் பார்த்து போ என்று அர்த்தம் . இது எல்லாம் கொச்சையாய் இருக்கிறது என்று அந்த மக்கள் பேசும் மொழியை தூக்கி எரிய முடியாது . கலை என்பதே பயன்பாட்டை பொருத்தது , சென்னையை பொறுத்த வரை
"கலாய்த்தல்" என்பது ஒரு கலாச்சார வார்த்தை , இந்த வார்த்தை இருந்தால் தான் சென்னை , இப்படி உழைக்கும் மக்கள் இயல்பாய் பேசும் வார்த்தையை கொச்சை என்கிறார் . தூய தமிழ் என்பது எது , ஏன் வட்டார வழக்கில் இருந்து ஒரு வார்த்தை மொழியில் ஒரு இடத்தை பிடிக்க கூடாத என்ன ????? இது மேட்டிமை திமிரை காட்டுகிறது , இது தான் மொழி மதுரை என்றால் தனியாய் பேசக்கொடது , தூத்துக்குடி என்றால் தனியாய் பேசக்கூடாது , நீங்கள் எல்லாம் மேட்டுக்குடி தமிழை தான் பேச வேண்டும் என்பது ஒரு விதத்தில் பார்ப்பனீயம் அடக்கு முறை , உழைக்கும் மக்களின் மொழி எப்படி வளரலாம் என்ற பயம் .

சரி ஒரு மொழி புது புது வடிவம் எடுத்தால் தான் வளர முடியும் . தமிழ் கண்டுபிடித்த காலத்தில் கணினி இல்லை , அதற்காய் அதை ஏற்றுக்கொலாமல் இருக்க முடியும் .கணினி என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மொழி , ஏன் வட்டார வழக்கை ஏற்றுக்கொள்ள கூடாது , இது மேட்டிமை திமிர் இல்லாமல் வேறு என்ன ??????
"கவிப்பேரரசு போன்ற ஒருவர் பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கிறோம் அல்லவா, அதுதான் இனிய தமிழ். அப்படிப் பேசி எழுதப் பழக வேண்டும்" என்று சிதம்பரம் சொல்கிறார் . கவிபேரரசு தமிழ் அழகாய் இருக்கலாம் , ஆனால் கலைஞரை துதி பாடுகிறாரே அது அருவருப்பாய் உள்ளதே .உழைக்கும் மக்கள் தமிழ் கொச்சையாய் இருக்கிறது என்கிறாரே , கவிபேரரசின் தமிழை விட நன்றாய் தான் உள்ளது என்பேன் ஏன் எனில் அதில் உண்மை இருக்கிறது ."வருடம் " என்ற வார்த்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் , அச்சு ஊடகங்களும் ஏற்றுக்கொள்கின்றன ஆனால் அது வாடா மொழி திணிப்பு , ஏன் இப்படி பல வார்த்தைகள் sanskrit வார்த்தைகள் ஊடகங்கள் திணிக்கலாம் , வழக்கு மொழி பேசினால் அழிந்து விடுமா என்ன ????????? சிதம்பரம் போன்ற மக்கள் மொழியை காப்பது இல்லை , அதை போன்ற மேட்டுக்குடி மக்கள் அயல் நாட்டிலே வேலை ,ஆங்கிலம் பேசுவது என்று எங்கெங்கோ செல்கிறார்கள் . மொழியை காப்பது வழக்கு மொழி பேசும் உழைக்கும் மக்கள் . அப்படி பேசக்கூடாது செம்மொழியில் தான் பேசவேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .

Monday, 28 June 2010

படங்களை பார்க்கும் பொழுது ஏன் விமர்சனப்பார்வை தேவை


"பம்பாய்" படம் விமர்சனம் குறித்து நண்பர்கள் விமர்சனம் சொன்னார்கள் , அதில் நிறைய பேரினுடைய பொது புத்தி ஒரே போலவே உள்ளது .அதாவது எங்களுக்கு படம் முற்போக்காய் தான் பட்டது என்கிறார்கள் . மேலும் ஹிந்து மதம் முஸ்லிம்களின் ஒற்றுமையை தான் படம் காட்டுகிறது என்கிறார்கள் .நான் சொல்லுகின்ற விளக்கங்களை ஏற்றுக்கொண்டாலும் , ஒரு பாமரனுக்கு படம் இப்படி தான் புரிகிறது என்கிறார்கள் . அவர்களுக்கு வரலாற்று திருபுவாதம் புரியவில்லை . சரி அப்படி என்றால் ரசனை முறையில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் . யாரும் முற்போக்கு என்ற பெயரிலே அவர்களை ஏமாற்றி விடலாம் என்பது தானே உண்மை .

"உன்னை போல் ஒருவன்" "பம்பாய் " "ரோஜா " போன்ற படங்களை முற்போக்கு என்று கருதுகிறான் ரசிகன் . சரி இறந்த ரசனை சார்ந்த விமர்சனம் தேவையா என்றால் தேவை ????? ஒரு தப்பான விடயத்தை முற்போக்கு என்று என்னும் மனிதன் தான் வாக்களிக்கிறான் ,நாட்டின் முதல்வர் , பிரதமமந்திரி போன்றவர்களை நிர்ணயம் செய்கிறான். பிற்போக்கான விடயங்களை முற்போக்கு என்று நினைக்கும் மனப்பான்மை , அங்கும் வெளிப்படும் . என் மனது இப்பொழுதெல்லாம் பேரரசு விஜய் படங்களை ஏற்றுக்கொள்கிறது , மணிரத்னம் மற்றும் கமல் போன்ற போலி முற்ப்போக்கு வாதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .

ஒரு நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா , அது வேறு எங்கும் இல்லை அந்த சூழலில் இருக்கும் கலை இலக்கியங்களை தெரிந்து கொண்டாலே போதும் . எப்படி ஒரு ரசனை முறை அல்லது கலை இருக்கிறதோ , அது அந்த நாட்டின் மக்களின் மனதை பிரதிபலிக்கும் . வணிக ரீதியான மசாலா படங்களை குப்பைகள் என்று சொல்லும் மக்கள் , மணிரத்னம் கமல் போன்றவர்களை தலையில் தூக்கி கொண்டாடுகின்றன . மேட்டுக்குடி மக்களின்
சிந்தனை முறை பாமரனுக்கும் திணிக்கப்படுக்கிறது, அவன் படம் பிடிக்கவில்லை என்றாலும் ஏதோ பெருசா சொல்றாங்க பா நமக்கு தான் புரியல என்ற பிம்பத்தை வளர்த்துக்கொள்கிறான் , ஊடகங்களும் வளர்த்து விடுகின்றன.

ராவணன் படம் வந்த பொழுது ஊடகங்கள் எப்படி திசைதிருப்புகின்றன , "சீதையை கொச்சை படுத்தி விட்டார்கள் தமிழ் இயக்கங்கள் கோபம் ",என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது . சீதை என்ன தமிழ் பெண்ணா , ஒரு ஹிந்துத்துவா முகத்திரையை தமிழர்கள் என்ற பெயரிலே செய்கிறார்கள் . மேலும் மைய்ய பிரச்சனையான தண்டகாரண்யா பிரச்னையை ஒரு பிரச்சனையாக கருதாமல் , சீதை என்னும் பிரச்னையை பெரும் பிரச்சனையாக எடுத்து மைய்ய பிரச்னையை மறைக்கும் எட்டப்பன் வேலையை பார்க்கின்றனர் .

ஆனந்த விகடனில் தலையங்கம் பார்த்தேன் "அமிதாப் மார்க் போட நான் படங்கள் இயக்கவில்லை " என்கிறார் மணி சார் ,அப்பொழுது ராவணனுக்கு பிரச்சனை என்பது திரைக்கதை சரி இல்லை , இல்லை சீதையை கொச்சை படுத்திவிட்டார்கள் , அமிதாப் சொன்னது என்று கருத்துக்களை பரப்பிவிட்டு தண்ட காரண்யா பிரச்னையை தொடாமல் மணி சார் அவருக்கு பல்லக்கு தூக்குகின்றன ஊடகங்கள் . இதை எல்லாம் உற்று கவனிக்க வேண்டாமா ???கவனித்தால் தான் தெரியும் எது முற்போக்கு என்று , விழிப்புடன் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் நம்மை ஏமாற்றலாம் .

அதனால் ஒரு படம் பார்த்து எனக்கு அப்படி தோன்றவில்லை அதனால் அது சரியான படம் என்று சொல்ல முடியாது . இது அனைத்து ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளுக்கும் பொருந்தும் . அப்பொழுது தான் முற்ப்போக்கு என்று சொல்லிக்கொண்டு நஞ்சுகளை விதைப்பவர்களை அடையலாம் காண முடியும் . ஒரு கலையின் போக்கே சமூகத்தின் போக்கு . நிறைய பேருக்கு பிடிக்கின்ற கலை சரியானதாய் இல்லாதது , சமூகம் சரியாக இல்லாததை காட்டுகிறது . அதனால் அதன் விமர்சனம் முக்கியமானது .

Sunday, 27 June 2010

யாரோ ஒருவன் யாரோ ஒருத்திக்காக ஏதொ ஒரு தெருவில்

மழை பெய்யும்
பொழுதெல்லாம் நினைத்துக்கொள்வேன்
உன் தெருவில் நான் நீந்தி நடந்த
நாட்களை ..............
இப்பொழுதும் மழை
பெய்கிறது ...........
நீ இல்லை ............
நீந்த நான் இல்லை
யாரோ ஒருவன் யாரோ
ஒருத்திக்காக ஏதொ ஒரு தெருவில்
மழையில் நீந்திக்கொண்டே இருக்கிறான் ..............

Saturday, 26 June 2010

வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்


















தரவு என்னும் தளத்தில் பார்த்தேன் , செம்மொழி மாநாட்டின் வரலாறு இருந்தது ,செம்மொழி மாநாட்டை ஆரம்பித்தவர் தனநாயகம் என்னும் ஈழ தமிழர் . மேடையில் அவர் படமே இல்லையாம் , தமிழ் என்றால் கலைஞர் என்ற பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள் .மேலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்கிறார்கள் . சுவரொட்டி கூட ஓட்ட முடியாது என்பதே நிலை , மேலும் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு வடுக்கள் கூட இன்னும் ஆறவில்லை நிலைமை இப்படி இருக்க , பழமை பேசி அவர்களின் கட்டுரை மிகவும் எரிச்சல் ஏற்படுவதை இருந்தது ,அவர் காவலர் பணிகள் மாநாட்டிலே நல்லதாக உள்ளது , அரசிற்கு நன்றி என்கிறார் . எதற்கு நன்றி எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்து கொள்வதற்க்கா ........??????

அந்த மாநாடு கட்சி மாநாடு என்று சொல்ல கூட முடியாது , கலைஞரின் குடும்ப மாநாடு . கலைஞரை புகழ்ந்தால் மட்டுமே கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் . கனிமொழி எல்லாம் தமிழிற்கு என்ன செய்தார் என்று கேள்விக்கேட்க கூடாது , கலைஞரின் மகள் அதனால் அவர் கவிஞர் . இப்படி தான் இருக்கிறது நிலைமை , நேற்று கவியரங்கத்தில் என்ன நடந்துள்ளது , தமிழ் பற்றி பேசாமல் தமிழர்கள் பற்றி பேசாமல் இந்த ஓணாண்டி புலவர்கள் கலைஞர் மட்டும் பற்றி பேசுவது எரிச்சலாய் இருந்தது


வாலி சொல்கிறார்
விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம் பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !எய்த இடம் வேடம்போல் ஆவேன் !நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !அது ஈர்த்தது வையநோக்கு ! சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐயர் நோக்கு !காது கொடுத்து கேட்டேன் பாட்டை அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்புல்லரிக்காதா கேட்டு !இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் !அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !இதற்கு காரணம் இரு மாமிகள்!பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ? (குஷ்பூ) கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !



வைரமுத்து :-
மேற்கு மலை தொடர்ச்சி மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுங்கள். தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ ஆகாயமே உன் நட்சத்திரங்களை காணோம் என்று இரவோடு முறை இடாதே, எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடிவிட்டன. நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,யாருக்கு? முத்தமிழ் அறிஞரே, மூத்த முதல் அமைச்சரே, செம்மொழி தங்கமே, எங்கள் செல்ல சிங்கமே, தாய் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்.உங்கள் உயரத்தை நீங்கள் தாண்டுக்றீர்கள். வள்ளுவர் கோட்டம் வரைந்தீர்கள், அன்னை தமிழ்நாடே அண்ணாந்து பார்த்தது. வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அணைத்து இந்தியா அண்ணாந்து பார்த்தது.செம்மொழி மாநாடு கண்டீர்கள், அணைத்து உலகமே அண்ணாந்து பார்க்கிறது.
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் நீங்கள் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்து உள்ளீர்கள்.உங்கள் உள்ளங்கை விரிந்தால் சூரியன். குவிந்தால் கூட்டணி.கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்.
தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்.ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை. நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது ஆறு, காவிரி ஆறு. உங்கள் தந்தை முத்துவேலரை எண்ணி பார்த்தால் எழுத்துக்கள் ஆறு. முதல் எழுத்தோடு சேர்த்தால் உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு. இது வரலாறு.
வீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா?, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்


நாம் நினைத்து விடக்கூடாது இவர்கள் மட்டும் பிழைப்பு வாதிகள் , நாமெல்லாம் ஒழுங்கு என்று . இங்கே ஈழத்தில் முள் வேலி பற்றி கவிதை போட்டவர்கள் எல்லாம் மாநாட்டிற்கு முதல் ஆளாய் செல்கிறார்கள் , அதற்க்கு சில பேர் வாழ்த்து வேறு , அவர்களுக்குள்ளும் பிழைப்புவாதி இருக்கிறான் .வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் கைது

செம்மொழி மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது , நீதிமன்றத்தில் தமிழ் இல்லை , ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் இன்னும் முள்வேலியில் தமிழர்கள் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் மாநாடு தேவையா ???வழக்காடும் மொழியாக கூட தமிழை கொண்டு வரமுடியவில்லை . மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்றால்
தள்ளாத வயதிலும் easy chair வைத்துக்கொண்டு போகிறாரே பெரியவர் அவர் தமிழ் பற்றை என்ன சொல்வது . சரி இவ்வளவு இருந்தும் எதிர்ப்புகள் மனப்புகைச்சலாய் இருந்தாலும் , யாரும் தைரியமாய் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . பதிவர்கள் கூட சில பேர் பல் இளித்துக்கொண்டு மாநாட்டிற்கு சென்றனர் . ஆனால் உண்மையில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது, எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்தனர் மா கா இ க தோழர்கள் , "அவர் தான் கலைஞர்" என்ற பெயரில் செம்மொழி மாநாடு
தேவையா என்பது போல் போஸ்டர் இருந்தது , போலீசார் தோழர்களை போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள் என்ற முறையில் கைது செய்து உள்ளனர் , என்ன ஜனநாயகவாதி கலைஞர் ??????????சில தோழர்கள் தாக்கப்பட்டுள்ளனர் ..........இந்த உள்ளடி
அரசியல் எல்லாம் தெரியாமல் தன் புகழ் மட்டுமே பிரதானம் என்று பதிவர்கள் செம்மொழி மானதிற்கு போவது வெட்கமாய் உள்ளது ,. தமிழிலே அதிகமாய் கோர்வையாய் எழுத தெரிந்து என்ன பயன் , கலைஞர் கூட தமிழை நன்றாகத்தான் எழுதுவார் ,
ஆனால் அவர் ஜனநாயகம் . அஞ்சா நெஞ்சர் இருக்கும் மதுரையில் யாரும் இந்த கருத்துக்கள் கொண்ட போஸ்டரை பிரிண்ட் செய்யவில்லை என்பது கொடுமை . ஏன் அஞ்சா நெஞ்சர் என்பது உண்மையானால் எதிர்ப்புகள் வந்தால் சந்தித்து தக்க பதில் சொல்ல வேண்டியது தானே . எதிர்க்கும் தோழர்கள் தாக்கப்படுவது கொடுமை , இங்கே மன்னராட்சி நடக்கிறது ????
மன்னரை மாநாட்டிலே பாராட்டும் "பானபத்திர ஓணாண்டி" புலவர் செல்வந்தராக மாறுவார் இதைதவிர மாநாடு என்ன சாதித்து இருக்கிறது.....ஜனநாயக எதிர்ப்பு கூட சொல்ல முடியாமல் பார்த்துக்கொள்ளும் அரசிற்கு ஆழ்ந்த கண்டனங்கள் . வினவு தோழர்கள் தளத்தில் எந்த எந்த இடத்தில் தோழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் இருக்கிறது
படித்து பாருங்கள்

http://www.vinavu.com/2010/06/26/semmozhi-maanadu-prison/#comment-25419