Showing posts with label இயக்குனர். Show all posts
Showing posts with label இயக்குனர். Show all posts

Sunday, 20 February 2011

பிரபல இயக்குனர் மசாலா இயக்குனரான கதை

"சார் opening Scenla ஒரு காட காட்றோம் சார் , அடர்ந்த காடு அந்த காட்டுல உள்ள மக்களை விரட்டப்பாக்குறாங்க பன்னாட்டு முதலாளிக , அந்த மலைஜாதி சமூகத்துல இருந்து ஒரு இளைஞன் நம்ம ஹீரோ மக்களை திரட்டி போராட்டம் நடத்தறான் , புரட்சி வெடிக்கிறது , எப்படி அவங்கள மீடியால தீவிரவாதியா காட்டுறாங்க , எப்படி அரச எதிர்த்து மக்களுக்கான அரசா மாத்தறான் இது தான் சார் லைன் பிடிச்சுருந்தா சீன் by சீனா கதை சொல்றேன் சார் .படத்துல ஐரோம் ஷர்மிலா மாதிரி ஒரு கேரக்டர் , பினாயக் சென் மாதிரி
ஒரு கேரக்டர் , அருந்ததி ராய் மாதிரி ஒரு கேரக்டர் எல்லாம் இருக்கு சார் " என்றான் பத்து வருடமாய் உதவி இயக்குனராய் இருக்கும் வேலவன் . "கதை எல்லாம் சரி பா சென்சார்ல படம் மாட்டிக்கும் , அரசாங்கத்த எதிர்த்து படம் பண்ண முடியாது , அதுவும் நீ அரசியல் அமைப்பே மாறணும்னு கதை சொல்றதலா ,படத்த விட மாட்டாங்க ,நீ வேணும்னா ஒன்னு பண்ணு , அரசாங்கம்னு அரசு நு பேச வேணாம் , ஒரு MLA அவன் தான் வில்லன் சரியா பன்னாட்டு கம்பெனிக்கு விக்கறான் , மக்களை துரத்தரான் , ஹீரோ அவன பழிவான்குரானு கதையா மாத்து ". "சார் இந்த அமைப்பே தாப்பா இருக்குறப்ப , MLA கேட்டவன் அதனால தப்பு பண்ணறான்னு கதையா மாத்தின படத்துல உண்மையான அரசியல எப்படி சார் சொல்ல முடியும் " "சினிமால எல்லாமே காசு தான் பா ? ஏன் நாளைக்கு அதே பன்னாட்டு கம்பெனி உனக்கு FINANCE செய்ய வரலாம் வேண்டான்னு சொல்வாய "
அமைதியாக இருந்தான் வேலவன் .

ஐந்து வருடங்களுக்கு பிறகு
CLIMAX 1 :
கொத்தா யாருடா அது framela . Lightaa கட் பண்ணு , தினேஷ் மாஸ்டர் வந்துட்டாரா ? randy சார் ஓகே வா ? டேக் போலாமா ? "சார் நீங்க நல்ல உரசிக்கிட்டு நிக்குறீங்க ,உதட்ட பாக்குறீங்க டக்குன்னு கடிக்கீறீங்க ,ரெயின் effect , RANDY சார் heroine லிப்சுக்கு closeup வையுங்க " என்று கணீரான குரலில் வேலவன் ........................... "சார் நாளைக்கு fight சீன் , போன படத்துல பத்து பேர் , இந்த படத்துல நூறு பேர பறக்க விடுறீங்க பயப்படதீங்க ரெண்டு பேர தான் அடிக்கிறீங்க ஸ்க்ரீன்ல 100 பேரா கட்டறோம் "

CLIMAX 2 :
சினிமாவில் கதை சொல்ல முடியாது என்று புரிந்து கொண்ட வேலவன் . இன்று கிராமம் கிராமமாய் சென்று கலை நிகழச்சிகள் நடத்துகிறான் , மேடை வேறு தான் புகழ் கூட கம்மி தான் , வசதி கம்மி தான் . கலைஞன் என்றால் சினிமா மட்டுமே எடுக்க வேண்டுமா என்ன , கலைங்கனுக்கு தேவை ஒரு மேடை மட்டுமே .