அன்புள்ள கவின்மலர் உங்களின் "பத்திரிகை துறைக்கு முன்னும் பின்னும் " என்ற கட்டுரை படித்தேன் . விருப்பப்பட்ட வேலையை தேர்ந்தெடுத்து வேலை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் . ஆனால் உங்களிடம் சில கேள்விகள் இருக்கிறது ? கட்டுரை முடிக்கும் பொழுது "Thanks To Recission " என்று எழுதிருக்கிறீர்கள்? ஒரு பிரச்னையை தன்னை மைய்யப்படுத்தி பார்க்கும் பார்வை இது . என்னுடைய நண்பர்கள் பலர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் மென்பொருள் துறையிலே இன்று வேலை செய்பவர்கள் , அவர்களை
RECISSION பாதித்தது , RECISSION சமயத்தில் தற்கொலை எல்லாம் செய்து கொண்டார்கள் என்று தினசரிகளில் செய்திகள் வந்ததுண்டு . நீங்கள் மார்க்சியம் தெரிந்தவர் , ஒரு பிரச்னையை தனிமனிதனிடம் இருந்து அணுகுவதா ? இல்லை சமூக நிலையில் இருந்து அணுகுவதா ? கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ? ஊரையே பாதித்த RECISSION உங்களை பாதிக்கவில்லை என்றால் , உங்களுக்கு மாற்றிக்கொள்ள வேறு வழி உள்ளது , மாற்றிக்கொள்ள முடியாதவர்களுக்கு ?
ஒரு விவசாயி ஒரு பண்ணையாரின் கீழ் வேலை செய்கிறான் ஆனாலும் அவன் வேலையை ரசித்து செய்கிறான்
இதில் மக்களுக்கு ஏதும் தீங்கு இல்லை , எனக்கு இலக்கியம் தான் பிடிக்கும் என்று அவன் ஓட முடியாது அவனுக்கு வேறு மாற்று இல்லை . சரி நீங்கள் பத்திரிகை துறையை தேர்வு செய்திருக்கிறீர்கள் . ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதை விட இங்கே வளைந்து கொடுத்து போவது அதிகமாய் இருக்கும் . நாடே அறிந்த கேப்பமாரியை நல்லவன் என்று எழுதச்சொல்வார்கள் ?எழுதித்தான் ஆக வேண்டும் இல்லை என்று மறுக்க முடியுமா. இங்கே சுதந்திரமாக தான் செயல்படுகிறீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? பொது புத்தியில் என்ன உள்ளதோ, அதை அறுவடை செய்ய வேண்டும் ,ஆள்பவர்களுக்கு முதலாளிகளுக்கு ஆதரவாய் எழுத வேண்டும் ? தான் நிற்க வேண்டும் என்பதற்காய் தன் கொள்களை விட்டுக்கொடுக்க வேண்டும் . இதற்க்கு பெயர் பிழைப்புவாதம் ,இதற்க்கு மென்பொருள் துறையில் இருப்பவர் எவ்வளவோ மேல் .
அந்த கட்டுரையில் ஒரு வரியில் "ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை" இப்படி யாருக்காகவோ என்று எழுதிருந்தீர்கள் , இப்பொழுது அதே யாருக்காகவோ எந்த முதலாளிக்காகவோ , எந்த கட்சி சார்புடனோ தானே எழுத முடியும் ,மக்களுக்காகவா எழுத முடியும்.
http://kavinmalar.blogspot.com/2011/02/blog-post.html