
மதுரை சுற்றி எங்கு பார்த்தாலும் மதுரை மன்னர் அழகிரியின் படமும், இளவரசர் துரை அவர்கள் தலைமையில் நடைபெறும் ஏதோ ஒரு திருமணம் சம்பந்தமான ப்ளெக்ஸ் நம்மை பார்த்து சிரிக்கும் . அதுவும் ஜனவரி மாதம் அஞ்சா நெஞ்சரின் பிறந்தநாள் வருவதால் கழக கண்மணிகள் இரண்டு அடிக்கு ஒரு ப்ளெக்ஸ் வைப்பர் . இதனால் பல லட்சம் பேருக்கு மறைமுகமாய் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று கலைஞர் சொல்லக்கூடும் . நாடோடிகள் படத்தில் ஒரு காட்சி அப்பொழுது தான் நடந்து முடிந்திருக்கும் அதற்குள் ஒரு ப்ளெக்ஸ் வைத்துவிடுவார்கள் அக்காட்சி அழகிரியை நியாபகப்படுத்தும் .
அனைத்து பிரபலங்களின் மூஞ்சியை அழகிரி மூஞ்சியாய் மாற்றி ப்ளெக்ஸ் வைப்பது வாடிக்கை . ரஜினி அஜித் விஜய் டோனி சச்சின் உடம்புகள் அழகிரி மூஞ்சிக்குள் சிரிக்கும் .தி மு காவின் "MAN OF THE மேட்ச்" போன்ற வாசகங்கள் அங்கிங்கே கண்ணடிக்கும் . கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் அவர்களுக்கே ப்ளெக்ஸ் வைக்கவில்லை , அண்ணன் துரை தயாநிதி கிரிக்கெட் ஆடுவதற்கு , அவர் மட்டையை வைத்துக்கொண்டு பெவிலியனில் அமர்ந்தது போன்ற ப்ளெக்ஸ் வைத்த ஊர் இது .
கழக கண்மணிகள் வராலாறு தெரியாமல் ப்ளெக்ஸ் வைத்து மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்துவதுண்டு .
சே குவேரா என்னும் மாபெரும் போராளியை அழகிரியுடன் ஒப்பிட்டு ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில்
சே குவேரா ஒடுக்கும் மக்களுக்காக போராடினார் , வேறு வேறு தேசம் சென்று போராடினார் , அவரை பற்றி வரலாறு தெரியாமல் கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது . நான் மற்ற போஸ்டர்களை நகைச்சுவையாய் கடந்து சென்றதுண்டு , ஆனால் இது மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்தும் விதமாய் உள்ளது . ஒரு தடவை கூட பாராளுமன்றத்தில் பேசாத அழகிரி "அஞ்சா நெஞ்சராம் "கேக்கறவன் கேனப்பயலா இருந்தா எருமைமாடு aeroplane ஓட்டுமாம் "
பின் குறிப்பு :
படம் ஆதிஷ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது