Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Wednesday, 11 January 2012

நண்பன் - உழைக்கும் மக்களின் பகைவன்

இன்று "நண்பன்" படம் வெளிவருகிறது.கேரளத்தில் விஜய்க்கு ரசிகர்கள், அதிகம் முல்லைப்பெரியார் பிரச்சனையால் ஐந்து மாவட்டங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொழுது கூட இந்த பிள்ளை பூச்சி வாய் தரக்கவில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்று நான் விளக்க தேவை இல்லை.கேரளத்தில் குறைந்தது நூறு திரைஅரங்கில் படம் வெளிவருகிரதாம். தனக்கு பிரச்சனை, தன் படம் ரிலீஸ் பிரச்சனை என்ற பொழுது அரசியலிலே வாய்ஸ் கொடுக்கும் நடிகர்கள், மக்களின் பணத்தில் வளர்ந்து குளிர் காயும் நடிகர்கள்,மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்றால் தெருவில் இறங்கி போராட வேண்டாம் குரல் கூட குரல் கொடுப்பதில்லை . இத்தகையவனுக்கு பால் அபிஷேகம் கட் அவுட் "என்ன கொடும சரவணன்". முன்பெல்லாம் MASS HERO படத்திற்கு முதல் நாள் செல்வதுண்டு,ரசிக மனப்பான்மையுடன் அவர்கள் அடிக்கும் விசில் சத்தம் கேட்டு பூரித்தது உண்டு,இப்பொழுது அது முட்டாள் தனம் நாம் எவ்வளவோ முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. நீங்கள் கேட்கலாம் நடிகர் , கலைஞர் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்று அதற்கு என் பதில் சமூக அக்கறை இல்லாதவன் நடிகனாக , ஏன் கலைங்கனாக இருக்கவே முடியாது? இவருக்கு போட்டி நடிகர் சமூக பிரச்சனை என்று வந்தால் "நான் நடிகன் எனக்கு அரசியல் தெரியாது " என்று ஒதுங்கிகொள்வார்.
இன்னொரு நடிகர் பனியன் ஜட்டி விளம்பரங்களுக்கு கூட வருவார்,உலக தமிழர்களின் வெற்றி என்று போஸ்டரில் கர்ஜிப்பார் , அப்படி கர்ஜித்த நேரம் அவர் படம் கேரளத்தில் ஓடிக்கொண்டிருந்தது,வாயை மூடி மௌனமே காத்தார் . கூலி விவசாயி போராடுகிறான் , கடைக்காரர்கள் ஒரு நாள் வியாபாரம் விட்டு போராடுகிறார்கள் , கோயம்பேட்டில் காய்கறி காரர்
போராடுகிறார்.ஆட்டோ ஓட்டுனர் போராடுகிறார்கள் , ஆனால் இந்த MASS HEROKKAL கோடியில் புரளும் ஹீரோக்கள் தயாரிப்பாளரின் நண்பனாய் , அவர் கேரளத்தில் எங்கு வணிகம் பாதிக்கப்படுமோ என்று ஒரு வார்த்தை கூறுவதில்லை . அதனால் இனி இவர்களை புறக்கணிக்க வேண்டும் , நான் புறக்கணிக்க போகிறேன்.

நண்பன் பற்றி படம் பார்க்காமலேயே என் ஒரு வரி விமர்சனம்
நண்பன் - பகைவன்

Thursday, 29 December 2011

பச்சை மஞ்ச வைட் தமிழன் டா

"தமிழா தமிழா நாளை நம் நாளே " ,
"தமிழ் என்றால் நானொரு தமிழன் டா "
"அழகிய தமிழ்மகன் நீ தானே "
என்னும் சொல்லும் பச்சை மஞ்ச வைட் தமிழர்கள் நிஜத்தில் அட்டை கத்தி வீரர்களாகவே இருக்கிறார்கள் .
முல்லைப்பெரியார் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள விவசாய வாழ்வாதாரமே அழிந்து கொண்டிருக்கிறது அதற்கு குரல் கொடுக்காத தலைவர்,
இப்பொழுது முற்ப்போக்கு முகமுடிக்கு சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார் .
தேனீ, மதுரை பக்கம் தலைக்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் பணம் மட்டுமே முக்கியம் எக்கேடு கேட்டால் என்ன என்று தல சிங்கபூர் சென்றுள்ளார்
புத்தாண்டு கொண்டாட.விளம்பர வியாபாரி சூர்யா, அன்னா ஹசாரே அவர்கட்கு ஆதரவு தெரிவிக்கும் சூர்யா ,"உலக தமிழர்களின் வெற்றி" என்று ஆர்பரிக்கும் சூர்யா , இதற்கு குரல் கொடுக்கவில்லை. நாளைய முதலவர் விஜய் அவர்கட்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் அவர் வாய் திறக்க மாட்டார்
கொஞ்சம் மேலோட்டமாய் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தமிழர்கள் வெளிநாட்டிலே பார்த்தால் மட்டுமே படம் ஓடும் , அதனால் அங்கே தமிழனுக்கு ஆதரவு , இங்கு கேரளாவில் படம் ஓட வேண்டும் , கேரளா ரசிகனை பகைத்து கொள்ள முடியாது அதனால் இங்கே வாய் திறக்க கூடாது.இப்படி
பிழைப்புவாதியாய் இருக்கும் நடிகர்களுக்கு CUT OUT தோரணம் , பால் அபிஷேகம் .நீங்க கேட்கலாம்
அவங்க அவங்க வேலைய பார்க்குறாங்க படத்த மட்டும் பாருங்கன்னு ?
கலைத்துறை என்பது வியாபாரம் சார்ந்ததல்ல மக்கள் சார்ந்தது,மக்களின் பிரச்னையை மைய்யபடுத்தி பேசுவதே
கலை, அவனே கலைஞன்.

Tuesday, 22 February 2011

தளபதி(கேப்டன்) இளைய தளபதி(ஸ்மால் கேப்டன்)


நாகை மாவட்டத்தில் பேசிய நடிகர் விஜய் அவரின் அறிய தத்துவமான "மத்திய மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்கள் " என்று சொல்லி உள்ளார் . அவரை பார்க்க ஒரு கூட்டம் . இந்த நடிகர் யார் என்றால் ஈழத்தில் பிரச்னை உக்கிரமாய் இருக்கும் பொழுது தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தியை சந்தித்தவர் . இந்த நடிகர் யார் என்றால் "கோகோ கோலா " விளம்பரத்தில் பணத்துக்காக நடித்தவர் . இவருக்கு சீனியர் நடிகர் என்ன டா என்றால் சரக்கு அடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறார் . ஒருவர் சினிமா வெளிவர பிரச்சனை என்பதால் அரசியலில் இறங்குகிறார் , இன்னொருவர் கல்யாண மண்டப பிரச்னையை ஏதோ ஈழ பிரச்சனை போல மேடைக்கு மேடை பேசுகிறார் ,இவர்களின் அறஉணர்ச்சி மக்கள் பிரச்சனையில் இருந்து வருவதில்லை , தன் மண்டைக்குள் இருக்கும் பிரச்சனையில் இருந்து வருகிறது . இத்தகைய முட்டாள்களே நம்மை ஏமாற்றுகிறார் என்றால் , நாம் எந்த அளவு இருக்கிறோம் .

சரத்குமார் என்பவர் தனக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை என்று அ தி மு கா சென்ற வரலாற்று காரணம் நாம் அறிந்ததே .விஜய டி ராஜேந்தர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது . பிரச்சாரத்திற்கு போக கூட நேரம் ஒதுக்காத கார்த்திக் தான் ஜாதி என்பதாலேயே தலைவராய் இருக்கிறார் . இப்படி நடிகர்களின் நகைச்சுவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . இந்த கோமாளிகளுக்கு பின் நின்று நாமும் கோமாளி ஆகப்போகிரோமா ?கேப்டன் தளபதி என்றால் இளைய தளபதி ஸ்மால் கேப்டன் தானே