Wednesday, 14 July 2010

முள் வேலிக்குள் இருப்பவன் தமிழன் இல்லையா ????













தமிழர்களாய் இருப்பவர்கள் மாநாட்டிற்கு வந்துள்ளனர் , இதை போல வாக்கியத்தை விஷத்தனமாய் யார் சொல்ல முடியும் ???? மாண்புமிகு செம்மொழிகொண்டான் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டுமே சொல்ல முடியும் .
கலைஞர் குடும்பத்தில் மட்டும் 2000 பேருக்கு மேல் வந்தததாக கேள்வி , அதனால் அவர் நாளை தமிழர்கள் என்றால் என் குடும்பத்தவர்கள் என்று சொல்லக்கூடும்
சில கேள்விகள்

1 . ஈழத்தில் முள் வேலியில் இருந்தே வர முடியாத தமிழர்கள் எப்படி கோவை வருவார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லையா ?????

2 . லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலே உயிர் உடமை இழந்த பொழுது , இந்த துக்கத்திலே செம்மொழி என்று கொண்டாடுவது அருவருப்பாய் கருதும் மக்கள் தமிழர்கள் இல்லையா ??????

3. பாமரனுக்கு கூட சட்டம் புரிய வேண்டும் , ஆங்கிலம் படிக்காத பாமரன் ஒரு ஒருவர் மீது வழக்கு போடுகிறான் என்றால் அவனுக்கு வழக்குரைஞர் என்ன வாதிடுகிறார் என்பது கூட புரியாது . அப்படி
நீதி மன்றத்தில் கூட தமிழை கொண்டு வர முடியமால் என்ன செம்மொழி விழா .அப்படி நீதி தமிழிலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தோழர்கள் இல்லையா ????

4.இவ்வளவு நடந்து தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் தமிழர்கள்
இல்லையா ??

செம்மொழி மாநாட்டிற்கு வந்தவர்கள் இரண்டு பிரிவினர்

1 ஒன்று உங்களின் குடும்பம் அரங்கையே நிரப்பியவர்கள்

2 இன்னொன்று உங்களுக்கு ஜால்ரா போட்ட பானபத்திர ஓணான்டிகள் இவர்கள் பின்வருசைக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஏன் என்றால் முன்வருசையில் உங்கள் வீட்டு கவின்கர்கள் கனிமொழி , கயல்விழி உட்க்கார்ந்து இருப்பார்கள் , பின்பு தமிழ் தொண்டு ஆற்றும் பேரன்கள் RED GIANT MOVIES , மற்றும் CLOUD NINE MOVIES அதிபர்கள் உட்கார்ந்து இருப்பார்கள் .

இப்படி இருப்பவர்கள் மட்டுமே தமிழர்களா???????????வைரமுத்துவும் வாலியும் நீங்களும் தமிழிலே நன்றாய் எழுதுவீர்கள் . தமிழ் நன்றாய் எழுதவதால் மட்டும் தமிழனா என்ன ??????? உணர்வு வேண்டும் தலைவரே ??? நீரோ மன்னனை நான் பார்த்ததில்லை , ஆனால் உங்களை பார்த்த பின்பு தெரிகிறது

நிலைமை இப்படி இருக்கும் பொழுது ஒரு அமெரிக்க பத்திரிகை தமிழ் நாடு தான் தொழில் துடங்க
சிறந்த இடம் என்று சொல்லி உள்ளது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் . அதற்க்கு அர்த்தம் இங்கே தான்
குறைந்த கூலி என்பதே மறைமுக அர்த்தம் , என்பது தாய் காவியம் படித்த கலைங்கருக்கு தெரியாதா .
"எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா ???" என்பதை போல ......ஈழம் பத்தி எறிந்த வேளையில் கொதிக்காத தமிழன் தான் சிறந்த அடிமை , எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் செம்மொழியை மாநாடு நடத்துபவனே சிறந்த அடிமை என்று அமெரிக்க பத்திரிகையும் Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM) போன்றவர்கள் நினைக்கிறார்கள் போலும் . "நல்ல அடிமை சிக்கிடாண்டா " என்று வடிவேலு சொல்வது காதில் கேட்கிறதா ?????

Tuesday, 13 July 2010

வாயை மூடிக்கொள் என்கிறது இந்திய இறையாண்மை














இந்திய ஜனநாயக நாடு , ஆனால் தீவிரவாதிகள் தான் நாட்டின் அமைதி இழப்பிற்கு காரணமாய் இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன .ஊடகங்கள் அதிகார வர்க்கத்தை காப்பாற்றுகின்றன , மாறாக அதிகார வர்க்கமும் ஊடகத்தை காப்பாற்றுகிறது . நடுத்தர வர்க்கம் இதை போல செய்திகளை படித்துவிட்டு தீவிரவாதிகளை கொல்ல வேண்டும் என்று சொல்கின்றன . சரி தண்டகாரண்யா என்னும் இடத்தில் baxasite கனிம வளம் உள்ளது அதை வேந்தாந்த என்னும் பணமுதலைக்கு விற்பனை செய்ய , அங்கு உள்ள பூர்வ குடி மக்களை விரட்டுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர் . அவர்கள் மறுபடியும் போராடினால் தீவிரவாதி என்று செய்தி பரப்புவது , அவர்களை கொலை செய்வது போன்ற விடயங்களை திறம்பட செய்கிறது ஆளும் வர்க்கம் . பேச்சு வார்த்தைக்கு தயார் என்கிறார்கள் , ஆனால் பேச வந்த ஆசாத்தை ENCOUNTER முறையில் கொலை செய்தார்கள் , அவர் செய்திதொடர்பாளர் என்பது ஊரறிந்த விடயம் , அவருக்கே இந்த கதி என்றால் ....... பாமரனுக்கு இதே நேரத்தில் அருந்ததி ராய் போன்ற அறிவுத்தளத்தில் இருப்பவர்கள் வருகிறார்கள் , மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்கிறார்கள் . ஆனால் ஆசாத் போன்ற ENCOUNTER அவர்களை மிரட்டும் , யாரும் ஜனநாயகம் பற்றி பேசக்கூடாது என்று ஆசாத் போலவே இன்னொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது .

லிங்கரம் கடோபி மாவோயிஸ்ட் இல்லை என்றாலும் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்பவர்.
அவர் போலிசாரால் துன்பப்பட்டுள்ளார் . அவரை மாவோயிஸ்ட் என்று போலிஸ் துன்பப்படுத்துகிறது . கேட்டால் அவருக்கு அருந்ததி ராயுடன் தொடர்பு உள்ளது , மேத்தா பட்கருடன் தொடர்பு உள்ளது என்கிறது . இதன் மூலம் அருந்ததி ராய் , மேத்தா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்களை தீவிரவாதியாய் சித்தரிக்கிறது , மேலும் யாரவது வாயை திறந்தால் அவ்வளவு தான் என்னும் எச்சரிக்கை மணியை அடிக்கிறது ஆளும் வர்க்கம் .ஆறு மாதத்தில் கடோபி தீவிரவாதிகளிடம் இருந்து பயிற்சி பெற்றார் என்று காவல்துறை சொல்கிறது .அவர் தான் ஆசாத்துக்கு அடுத்த செயத்திதொடர்பாளர் என்று காவல்துறை சொல்கிறது . ஆனால் லிங்கரம் என்ன சொல்கிறார் " போலிஸ் என்னை துன்பப்படுத்துகிறது , எனக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் சம்பந்தம் இல்லை " என்கிறார் .

சரி இதன் பெயர் தான் ஜனநாயகமா ??? அதவாது இதன் மூலம் மக்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன " வாயை மூடி கொள் " என்பதே.சரியான விடயம் என்று தைரியமாய் பேசினால் , இந்திய இறையாண்மை என்று ஒரு வார்த்தை வைத்து இருக்கிறார்கள் , அமைதியை கெடுத்து விட்டீர்கள் , நீங்கள் தீவிரவாதிகள் என்று காவல்த்துறை கொன்று விடும் . இங்கு உண்மையை உறக்கச்சொல்வது குற்றம் . சுரண்டுபவனுக்கு முதுகு சொரிய வேண்டும் , அதற்க்கு எதிராய் குரல் கொடுத்தால் நீ தீவிரவாதி . இங்கு தீவிரவாதி என்பவன் ஆளும் வர்கத்திற்க்கு எதிராய் குரல் கொடுப்பவன் . தற்பொழுது துறை முருகன் பேசினாரே "யாரவது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது போல் பேசினால் கடுமையான தண்டனை விதிக்க படும் , சட்டம் எதுவும் இல்லை என்றாலும் இயற்றப்படும் என்று" இது வேறு ஒரு பிரச்சனைக்காக அவர் சொன்னாலும் பேசாதே வாயை மூடிக்கொள் என்பது மட்டுமே பொருள் . அரசியல் சாசனத்தில் சோசியலிசம் என்ற சொல் எதற்கு என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் , டேய் முட்டாள்களா இந்தியா முதலில் ஜனநாயக நாடே இல்லை அப்புறம் என்ன சோசியலிசம் , என்று மண்டையில் அடித்து சொல்கிறது இந்த லிங்கரம் மற்றும் ஆசாத் விடயங்கள் .

Monday, 12 July 2010

உலக மயானம் ஆக்கல்


















பிஞ்சு நஞ்சை
குடித்தது
தாய் பாலில்
போபாலில் ........!!!!!!
சுவாசம் தின்று உயிர்
வாழ்ந்தான் .................
சுவாசம் உயிரைத் தின்றது
போபாலில் .............!!!!!
லட்சம் உயிர் மயிர்
அன்டேர்சன் மயிரே உயிர்
என்றது அரசாங்கம் ....!!!!!
"வாகனம் ஒட்டியவன் தவறு செய்தால் எப்படி அன்டேர்சன் குற்றவாளி " என்று
போபால் பற்றி பேசினால்
"போ பா" என்கிறது .........
அடுக்குமாடியில் இருக்கும் நடுத்தர வர்க்கம் ....!!!!
"வாகன ஒட்டிக்கு பழுதடைந்த வாகனம் கொடுத்தால் , பிரேக் பிடிக்காத வாகனம் கொடுத்தால் "
என்றேன் மறுபடியும் அவர்களிடம் .....!!!!
போபால்
தண்ணீர் கூட விடம் .........
கண்ணீர் மட்டுமே நித்தம் .
பிணங்கள் தின்று
பணங்கள் குவிக்கும்
உலகமயமாக்கல்
உலக மயானம் ஆக்கல்..........!!!

Sunday, 11 July 2010

இந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் - போபால் உணர்த்தும் உண்மை
















போபால் விடயத்தை முதலில் நான் எழுதிய பொழுது எனிடம் கேட்க பட்ட கேள்விகள் , "ஓட்டுனர் விபத்தை ஏற்ப்படுத்தினால் எப்படி வண்டிக்கு சொந்தக்காரரை கைது செய்ய முடியும் ", அதனால் அன்டேர்சன் குற்றமற்றவர் என்று விவாதம் .சரி அந்த விடயத்தை கொஞ்சம் விவரமாய் புரிந்து கொள்வோம் . மெத்தில் ஐசோ சயனைடு என்ற திரவம் வெளியில் லீக் ஆகி விஷ வாயுவை கக்கியது . இந்த மூல பொருளை வைத்து தான் "செவின்" என்ற பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க படுகிறது . ஐசோ சயனைடு விஷத்தை கக்கும் என்பதால் இதே பொருள் அமெரிக்காவில் வேறு ஒரு சூத்திரத்தில் அதவது மெத்தில் ஐசோ சயனைடு உபயோகப்படுத்தாமல் இதே மருந்தை தயார் செய்ய முடியும் . ஆனால் மெத்தில் ஐசோ சயனைடு செலவு கம்மி , அதிக லாப வெறி கொண்ட முதலாளியின் நோக்கம் தான் போபால் படுகொலை . முதலில் 1969 முதல் 1975 வரை இதற்க்கு அனுமதி மறுக்க பட்டுள்ளது ஏன் எனில் இது பழைய தொழிற்நுட்பம் மற்றும் இதன் மூலம் ஏற்படும் விபரீதங்களும் பயங்கரமாய் இருக்கும் என்பதால் முதலில் அமைச்சகம் இதற்க்குஎதிர்ப்பு தெரிவித்து உள்ளது , 1975 ஆண்டே அதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது .

மெத்தில் ஐசோ சயனைடை அதிகமாய் கலங்களில் சேர்த்து வைப்பது ஆபத்து , விபத்து நடந்த அன்று அதிகமாய் தான் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒரு கலன் வெப்பம் கூடினால் மற்றொரு கலனுக்கு மாற்றி , அதன் வெப்பத்தை மட்டுப்படுத்த வேண்டும் , இந்த முறை தான் அமெரிக்காவில் இதே UNION CARBIDE நிறுவனத்தில் உள்ளது ஆனால் இந்தியாவில் அதற்க்கான வழி இல்லாமல் இருக்கிறது கட்டமைப்பு . மேலும் குளிரூட்டப்பட்ட
நிலையிலேயே இருக்க வேண்டும் ஆனால் செலவின் காரணமாய் குளிர்சாதனத்தை போடாமல் இருந்து இருக்கிறது நிர்வாகம் . இதை எல்லாம் செய்து விட்டு அன்டேர்சன் குற்றவாளி அல்ல தொழிலாளர்கள் செய்த தவறே காரணம் என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்கள் .

அமெரிக்காவில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் தொழிற்சாலை இங்கே இல்லை அதே தொழிற்சாலை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது முதலாளியின் லாப நோக்கத்திற்காக . அமெரிக்காவில் இதை போல் செய்து விட்டு சும்மா போக முடியுமா என்ன ???? பிரிட்டிஷ் பெற்றோலியம் இதை போல ஒரு விபத்துசெய்தது அமெரிக்காவில் இழப்பு என்னமோ கம்மி தான் 12 பேர் , சில மீன்கள் இறந்தன , அதற்க்கு 2000 கோடி டாலர்கள் நிவாரணம்
ஆனால் இங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் , லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இங்கே இழப்பீடு இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு 47 கோடி டாலர் , அதாவது அமெரிக்காவில் வாழும் கடல் நாய் , மற்றும் மீன்களை விட மனித உயிர்கள் மயிர்களை போன்றது என்கிற மனோபாவமே .

பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய். எவ்வளவு கொடுமை . அதாவது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அடியுங்கள் , எங்கள் முதுகு காத்து கிடக்கிறது , என்று இந்தியா முதுகை திரும்பி காண்பிக்கிறது , இது வெளி நாட்டில் இருக்கும்முதலாளிகளை ஈர்க்கும் என்கிறார்கள் . தனியார்மயம் , உலகமயம் என்று சொல்பவர்களின் மூஞ்சியில் சேர் , கரி பூசப்பட்டுள்ளது . அதாவது பல லட்சம் உயிர்களின் மதிப்பை விட ஒரு முதலாளியின் லாபம் முக்கியமானது என்கிறது .

மேலும் இதை போல ஒரு நிறுவனம் பேரழிவை ஏற்ப்படுத்தினால் 30 வருடம் வரை அந்த மக்களுக்கு நிறுவனமே பொறுப்பு , அந்த பொறுப்பை முப்பது முதல் பத்து வருடமாய் குறைக்கிறது மசோதா . சட்டங்கள் ஆளும் வர்கத்திற்க்கு , ஜனநாயகம் ஆளும் வர்கத்திற்க்கு . இன்று போபால் நாளை சென்னை அல்லது மதுரை ?????? பல போபல்கள் வெடித்து கொண்டிருக்கின்றன , போபால் உலகமயத்தின் trailor மட்டுமே , இன்னும் அதன் கொடுராமான படம் ஆரம்பிக்கவில்லை .
நண்பன் புல்கேசியின் படிக்க வேண்டிய பதிவு


http://pulavanpulikesi.blogspot.com/2010/07/1.html

Friday, 9 July 2010

மூன்றாம் உலக நாடுகள் உயிர் மலிவானதா ?????????????
















உலக மயமாக்கம் மக்களை சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் உயிர் கூட சந்தை மதிப்பை வைத்து தான் , வாழ தகுதி இல்லாதவன் சாகலாம் என்று சொல்கிறது .முதலாளித்துவம் இயங்க வேண்டுமென்றாலே சந்தை தேவை , அவனுடைய அதிக உற்பத்தியை விற்பனை செய்ய , உலகமயமாதலே சந்தையை உருவாக்குகிறது .அவர்களின் முக்கியாமான சந்தை மூன்றாம் உலக நாடுகள் , அதாவது ஆசியா ஆப்ரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகள் .உயிர்கள் கூட முதலாளிகளுக்கு அற்ப்பமானதே என்று சொல்லாமல் பல இடங்களில் சொல்கிறது . உலக வங்கி தான் இந்த மூன்றாம் உலக நாடுகளை ஆள்கிறது , அவர்கள் சொன்னால் முதாலாளிகளுக்கு சந்தையை திறக்க வேண்டும். ஒரு உயிருக்கு கூட மரியாதையை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது . முதலாளித்துவத்தால் வேலை கிடைக்கிறதே என்று சிலர் பேசலாம் எப்படி பட்ட வேலைகள் என்பதை பார்ப்போம் , எப்படி மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் எப்படி அந்த உழைப்பு சுரண்டப்படுகிறது என்று பார்ப்போம்.








உதாரணமாய் கப்பல் உடைக்கும் தொழில் இது ஆப்ரிகா மற்றும் ஆசியா நாடுகளில் அதிகம் செய்யப்படுகிறது . இந்த கப்பல் உடைக்கும் தொழில் கல்லீரல் புற்று நோயை கொண்டு வரும் . கப்பல்களில் அதிக ASBESTOS ஷீட் இருக்கும் , அது தான் இந்த கல்லீரல் புற்று நோயை உருவாக்குவது . இதற்க்கு உண்டான மனித உழைப்பை முதாலாளி மூன்றாம் உலகநாடுகளில் மட்டும் வாங்குகிறான் . அதாவது இங்கே மனித உழைப்பு மலிவானது என்பதே பொருள் . சரி நம் பக்கத்தில் இருக்கும் தூத்துக்குடியில் உள்ள STERLITE ஆலையின் முக்கியமான தொழில் காப்பரில் இருந்து அதனுடன் கலக்கும் விடயங்களை பிரிப்பது , அது உடல் நலத்திற்கு மிக கேடு என்பது அறிந்ததே , அதை எதிர்த்து பலர் போராடினாலும் அது வீணாய் போனது .அந்த STERLITE ஆலை வேதந்தா நிறுவனத்தை சேர்ந்தது அவர்கள் அங்கே தண்டகாரண்யாவில் பூர்வகுடிகளை விரட்டும் வேலையை செய்கிறார்கள் .இது தான் நடக்கும் உலகமயமாக்களில் .


1992 ஆம் ஆண்டில் lawrence summers என்பவர் உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார் .அவர் உலக வங்கியின் ஊழியர்க்களுக்கு வழிக்கட்டுவதர்க்காய் ஒரு கடிதம் எழுதினார் . அதில் மாசு உள்ள தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதே அதன் சாராம்சம் . அந்த கடிதத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் .

1 மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்ப்படும்

2 மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறந்தது .
ஏன் என்றால் அங்கு வீசும் காற்று los angels கற்றை விட சிறந்தது (திமிரை பார்த்தீர்களா )

3 ஏழைகள் ஏழைகள் தான் ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லை . ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணம் 200 சதவிகிதமாய் இருக்கும் போது மார்பு புற்றுநோய்க்கு ரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டார்கள் .

(நன்றி புத்தகம் "உலகமயமாதல்" ரயாகரன் )


சரி போபாலில் நடந்ததே அது உலகமயமாக்கல் நல்லது முதலாளித்துவம் நல்லது என்று சொல்பவர்கள் செருப்பால் அடித்தது என்றே சொல்ல வேண்டும் . வாரேன் அன்டேர்சன் என்னும் கொலைகாரன் , பல ஆயிரம் உயிர்களை கொன்று விட்டு செல்கிறான் , ராஜீவ் காந்தி , அர்ஜுன் சிங்க் வழி அனுப்பி வைக்கிறார்கள் பாதுகாப்பாய் . இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு , அவர்கள் கொடுத்த நட்ட ஈடு தலைக்கு பத்தாயிரம் .அரசு அப்பொழுது இருந்தே முதாலாளிகளை காப்பற்றி வருகிறது என்று மேலும் ஒரே ஒரு நிகழ்ச்சியை சொன்னால் புரியும் .

போபால் விட வாயு விபத்து நடந்த பொழுது , இரண்டு மூன்று மருத்துவ மனைகள் சீல் வைக்கப்பட்டன , ஏன் தெரியுமா ????? அந்த விடத்திற்கு மருந்து போட்டோ எடுக்கும் பொழுது நெகடிவ் கழுவப்படுமே அந்த மருந்து , அதை அந்த மருத்துவமனைகள் injection மூலமாய் போட்டார்களாம் , அப்படி போட்டால் , அது கம்பெனிக்கு எதிரானா ஆதாரமாகும் , அதனால் மருந்தை தடை செய்தார்களாம் , மருத்துவமனையை சீல் வைத்தார்களாம் . அதவாது முதாலாளியின் உயிரே உயிர் மற்றெதெல்லாம் மயிர் என்று தானே அர்த்தம் . அதாவது முப்பதாயிரம் உயிர்களின் விலையை விட , அன்டேர்சன் என்னும் உயிர் முக்கியமானது . முதலாளித்துவம் சிறந்தது என்று சொல்கிறவர்களுக்கு செருப்பால் அடி .

மூன்றாம் உலக நாடுகள் வெறும் சந்தைகள் மட்டுமே இங்கே உயிரின் மதிப்பு மலிவானது . உயிர் கொன்று கூட பிணம் தினலாம் என்னும் கூட்டமே முதலாளித்துவத்தை ஆதரிக்கும் . இன்று நடுத்தர வர்க்கம் தன் மீது கல் எறியப்படவில்லை என்று ஒதுங்கி போகலாம். ஆனால் அங்கே மென் பொருளுக்கும் மற்ற வேலைகளும் இல்லை என்றால் இங்கே வந்து நாம் விவசாயம் கூட பார்க்க முடியாது , ஏன் என்றால் விவசாயம் பண்ண நிலம் இல்லை பண்ணவும் தெரிவதில்லை .அதனால் நடுத்தர மக்கள் மெத்தனமாய் இருக்க வேண்டாம் ???? இன்று போபால் நாளை சென்னை மதுரையாக கூட இருக்கலாம் . இன்று தண்டகாரண்யா , நாளை ஊட்டியாக கூட இருக்கலாம் . மனித உயிர்கள் மலிவானதா ????????????

போபால் விடயத்தின் பொழுது பிணங்களை எங்கே போடுவது என்று தெரியாமல் , நர்மதை நதியில் போட்டுள்ளனர் .எப்படி இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கம் அமைதியாய் இருக்கிறது என்று புரியவில்லை ???? உயிர்களுக்காக துடிக்கும் சின்ன விடயம் கூட இல்லை என்றால் எங்கே இருக்கிறான் மனிதன் .

Thursday, 8 July 2010

உலகை காலால் அளந்த ராகுல் சங்கிர்த்தியாயன்






















நான் இப்பொழுது ஒரு புத்தகம் படித்து கொண்டிருக்கிறேன் புத்தகத்தின் பெயர் "மனித சமூகம் " ராகுல் சங்கிர்த்தியாயன் எழுதியது , ராகுல்ஜி என்று கூட அழைப்பார்கள் .ராகுல்ஜி ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் . உலக வரலாறாய் கரைத்து குடித்தவர் .இமய மலையை மூன்று தடவை நடந்தே கடந்தவர் என்று சொல்கிறார்கள் . ராகுல்ஜி உலகை தான் காலாலும் , அறிவாலும் அறிந்தவர் என்று அவரை படிக்கும் பொழுது புரிகிறது . ராகுல்ஜியின் "வோல்கா முதல் கங்கை வரை " புத்தகம் மிக பிரபலம் என்று கேள்விபட்டிருக்கிறேன் . மனித சமூகம் என்ற புத்தகம் என்ன சொல்கிறது. மனித சமூக வரலாறை சொல்கிறது முதலில் புரதான பொதுவுடைமை சமூகம் , பின்பு இனக்குழுக்கள் , தாய் வழி சமூகம் தந்தை வழி சமூகம் , நிலா பிரபுத்துவம் , முதலாளித்துவம் எல்லாம் ஒன்றில் இருந்து மற்றொன்று எப்படி வந்தது அதன் அவசியம் என்ன , சொத்துடமை எப்படி வந்தது என்று வரலாற்று சான்றுகளுடன் விளக்குகிறார் ராகுல்ஜி .நல்ல படிப்பு , மற்றும் திறனாய்வு திறன் , மக்கள் மேல் கொண்ட அன்பு இவை கலந்தால் மட்டுமே இது சாத்தியம் . வாழ்கையில் 75 சதவிகிதம் நடந்தே கழித்து இருக்கிறார் .

உதாரணமாய் புத்தகத்தில் ஒரு பகுதி , எப்படி தாய் வழி சமூகம் முதல் தந்தை வழி சமூகம் வந்தது . தந்தை வழி சமூகம் எப்படி சொத்துடமைக்கு வழி வகுத்தது ,எப்படி புரதான பொதுவுடைமை சமூகம் அழிந்தது என்பதை போன்ற பகுதியை அறிவியல் ரீதியாக விளக்குகிறார் ராகுல் .முதலில் புராதன பொதுவுடைமை சமூகத்தில் தாய் முக்கியமானவள் , அவளே அரசி போல இருந்தால் , ஒரு குழந்தைக்கு தாய் தெரியும் தந்தை யார் என்று தெரியாது , யாருக்கும் தனி சொத்து என்று எதுவும் இல்லை , வேண்டியதை அனைவரும் உற்பத்தி செய்து பகிர்ந்து கொண்டனர். மனிதன் குழுக்களாய் இருந்தான் , அந்த குழுவிற்குள் பொதுவுடைமை இருந்தது . அப்படி இருக்க மற்ற குழுவுடன் இயல்பாய் சண்டை வரத்தொடங்கியது ,ஆயுதங்களை ஆண்களே செய்தார்கள் , ஆயுதங்கள் ஆண்கள் சொத்துடமை ஆகியது . சண்டைக்கு ஆண்கள் முக்கியமானவர்களாய் பட்டதால் , பெண்ணிற்கு உண்டான முக்கியத்துவம் அழிகிறது . மேலும் மனிதன் விவசாயம் செய்கிறான் அப்பொழுது பசுக்களை அவனே பாரமரிக்கிறான் , வீட்டிற்கு தேவையான பரிவர்த்தனை அவனே செய்கிறான் ,அவன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

அப்பொழுது ஆண்களுக்கு முக்கியத்துவம் வரும் பொழுது , ஒரு குழந்தைக்கு தாய் யார் என்று மட்டும் தெரிந்த சமூகத்தில் . தந்தை முக்கியத்துவம் பெறுகிறார் . பெண் ஆணின் பிடியில் வருகிறாள் , பெண் என்பவள் எப்படி பொருட்கள் மாடுகள் தனக்கு சொந்தமோ அதை போல அவளும் சொந்தம் என்று அடிமைப்படுதுகிறான் . தன் மனைவி தன் மகன் தன் மகள் என்று தெரிந்த பின்பு அவர்களுக்காய் சொத்து சேர்க்கிறான் . சேர்க்கும் பொழுது சொத்துடமை வருகிறது . பெண்ணடிமைதனமும் சொத்துடமையும் சேர்ந்தே வருகிறது என்று புத்தகம் சொல்கிறது .ராகுல் ஜி மதங்களை பற்றியும் எழுதி உள்ளார் .நான் 60 பக்கம் தான் படித்து உள்ளேன் , புத்தகம் ஐநூறு பக்கங்கள் இருக்கும் , பிரமிப்பாய் தான் இருக்கிறது . ராகுல்ஜியின் இந்த புத்தகத்தை நான் "NEW CENTURY BOOK HOUSE " திருமங்கலத்தில் வாங்கினேன் . கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்

Wednesday, 7 July 2010

ஏன் சினிமாவை விமர்சனம் செய்யக்கூடாதா
















சமீபத்தில் ஒரு பதிவுலக நண்பர் நான் ஏன் சினிமா பற்றி எழுத வேண்டும் , வெறும் கணக்கிற்கு ஏன் பதிவுகள் எழுதுகிறீர்கள் என்று மடல் அனுப்பி இருந்தார் .அவருக்கு சூர்யாவை , மணிரத்தினத்தை விமர்சனம் செய்வது சுத்தமாய் பிடிக்கவில்லை . தான் பொதுவுடைமை சிந்தனையாளன் அரசியல்வாதிகளை தவிர யாரையும் விமர்சனம் செய்ய மாட்டேன் என்று சொன்னார் . ஆனால் மார்க்ஸ் அனைவரைவரையும் சந்தேக படு என்கிறார் ,விமர்சனம் என்பது பொதுவுடமையின் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன் . விமர்சனம் செய்யாமல் வளர முடியாது ,நம் ஒவ்வொரு செயலுக்கும் விமசனம் அவசியம் என்றே நினைக்கிறேன் . அவருக்கு அனுப்பிய மடல் .

" சினிமா என்பது அர்த்தமில்லாதது என்று யார் சொன்னது .ஒரு மக்களின் ரசனையை பொறுத்தே அந்த நாட்டின் அரசியல் தீர்மானம் செய்யப்படுகிறது . இங்கே மணிரத்தினமும் கமலையும் ரசிக்கும் மனப்பான்மையே நம்மை அரசியல் ரீத்யாகவும் ஏமாற்ற முடியும் என்பதற்கு உதாரணம் . நீங்கள் களப்பணி செய்து இருக்கலாம் ஆனால் பொதுவுடைமை விமர்சனம் செய்ய சொல்கிறது . "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்க்காமல் யாரும் இல்லை ?????" என்ற தோழர் கல்யாண சுந்தரனார் பாட்டு சொல்வதை போல் தான் . சினிமா மயக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள் ,மணிரத்தனம் என்றால் முற்போக்கு என்று பல தரப்பட்ட நடுத்தர வர்க்கம் சொல்கிறது . அப்படி ஆனால் இவர்களை எளிதாய் ஏமாற்றி விடலாம் . தப்பான விடயத்தை முற்ப்போக்கு என்று அரசியலிலும் நம்புவார்கள் கலைஞர் அண்ணாத்துரை எல்லாருமே இப்படி முற்ப்போக்கு வேடம் போட்டவர்கள் . சினிமா கலைஞர் நம்மை ஏமாற்றி
ஆள்கிறார் என்றால் , நம் ரசனை முறை எவ்வளவு பிற்போக்கனாது என்று நினைத்து பாருங்கள் . அப்படி தவறாய் மக்களை இழுத்தும் செல்லும் கலையை மக்களுக்காய் ஏன் விமர்சனம் செய்ய கூடாது . அந்த சினிமா கூட சமூகத்தின் அங்கம் அல்லவாநண்பா . நான் அஜித் விஜய் ரசிகர்களை கூட ஏற்றுக்கொள்வேன் . ஆனால் கமல் மணிரத்தினம் போன்றவர்களது படங்களை விட மாட்டேன் ........















சினிமா பதிவு தவறு என்று சொல்வதை விடுங்கள் , ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் . இது என்ன அர்த்தமில்லாத பதிவா இல்லை நண்பா " EK THUJE கேலியே" படம் வந்த பொழுது 100 காதல் ஜோடிகள் மும்பையில் இறந்தார்கள் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் . நாம் எதை ரசிக்கிறோமோ ரசிப்பை வைத்தே நம் மனது இப்படி தான் என்று சொல்லிவிட முடியும் . சினிமா திரையரங்கில் நுழைந்தால் மக்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கை தட்டும் காட்சியை கொண்டு சொல்லி விடலாம் . உதாரணமாய்
"பொம்பள பொம்பளையா இருக்கணும் " என்று ரஜினி பேசியதுடன் கை தட்டும் கூட்டம் ஆண் ஆதிக்க சமூகமாய் இருக்கும் சரி தானே .அந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அந்த பல பேர் ஏற்ற கலையை விமர்சனம் செய்ய வேண்டும் .............















அர்த்தமில்லாமல் எழுதுகிறேன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் நண்பா ........சினிமா விமர்சனத்தை பாருங்கள் கட்டாயம் அர்த்தம் இருக்கும் என்றே நினைக்கிறேன் , என் விமர்சனம் படித்து இருக்கிறீர்களா ???? திரைக்கதை அருமை , கோணம் அருமை போன்ற விடயம் இருக்காது ..............அடி ஆழத்தில் போய் என்ன கரு என்பதே இருக்கும் என்று நினைக்கிறேன் . எப்படி மக்களிடம் சினிமா மோகத்தை குறைப்பது
அந்த படத்தை நாம் பார்த்து இது குப்பை என்று மண்டையில் தட்டும் பொழுது தான் அது உரைக்கும் சரி தானே . நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன் . நானும் மதுரை தான் , மதுரை மாணவர்கள் எழுச்சியாய் இல்லாமல் ரஜினி அஜித் விஜய் என்று போஸ்டர் ஓட்டும் கலாச்சாரத்தில் மண்ணில் இருந்து வந்த நான் அதை சொல்ல வேண்டுமென்றால் விமர்சனம் அவசியம் என்றே நினைக்கிறேன் .
"தல இல்லாத தீபாவளி துக்க தீபாவளி " என்று போஸ்டரை ஒரு முறை என் மனமும் ரசித்து உள்ளது , ஆனால் இன்று வேறு மாதிரி உள்ளேன் ஆச்சர்யமாய் இருக்கிறது நண்பரே , இது பல மக்களை தாக்க கூடியது . ஒரு நாட்டின் கலை எப்படி இருக்கிறதோ அதை வைத்து அந்த சமூகம் இப்படி இருக்கிறது என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன் . சினிமா கோடிக்கணக்கான ரசிகர்களை சந்து பொந்துக்குள் எல்லாம் செல்கிறது .
புத்துகம் படிக்காதவன் கூட சினிமா செல்கிறான் . இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடாய் இருக்கிறது . அதனால் சமூக மாற்றம் ஏற்பட கூட சினிமா முக்கிய காரணம் அதனால் விமர்சனம் அவசியமானது .மக்கள் ரசனை அப்படியே போகட்டும் , மக்கள் மந்தைகளாக இருக்கட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க முடியுமா என்ன ??????????? வெறும் கணக்கிற்காக பதிவுகள் போடுவதில்லை நண்பா .............சினிமா விமர்சனம் என்றால்
வெறும் கேவலமாய் நினைக்க வேண்டாம் . அது மனித மனம் பொருத்தது ???? அது வெறும் வியாபாரம் என்றால் நான் இவ்வளவு மெனக்கிட மாட்டேன் சூர்யா பெப்சி குடித்தால் , பெப்சி விற்பனையாகும் ,நம் ஊர் மாப்ளை விநாயகர் சோடா விற்காது , விவசாய நிலங்கள் கையக படுத்தப்படும் .அவர் செய்யும் விடயத்தை சினிமா தானே அப்படியே விடச் சொல்ல்கிரீரா .அவரை எதிர்த்து பதிவு போட்டதால் அது தரமான பதிவு இல்லாமல் போகுமா
நண்பா ...........!!!!!!!வேட்டைக்காரன் வந்த பொழுது அவர் எப்படி ராகுல் காந்தியை சந்திக்கலாம் வேட்டைக்காரனை விரட்டுவோம் என்று பதிவு போட்டேன் ஒரு விஜய் ரசிகர் எனக்கு உருகி நான் படம் பார்க்க மாட்டேன் இனிமேல் விஜய் படங்கள் பார்க்க மாட்டேன் என்றார் , இது சாதனை இல்லையா ???????
அந்த விடயம் மக்களை தாக்குவதால் நானும் எழுதுகிறேன் .......அதை சும்மா கணக்கு காண்பிக்க பதிவு போடுகிறேன் என்று இழிவு படுத்த வேண்டாம் ...... வேண்டுமென்றால் அந்த பதிவுகளில் விவாதம் செய்வோம் .பொதுவுடமையை ஏற்றுக்கொண்டவன் விமர்சனம் வேண்டும் என்பான் எந்த துறையாக இருந்தாலும் .தவறு என்றால் விமர்சனம் செய்யுங்கள் ஆனால் ஏன் சினிமா பதிவு எழுத கூடாது என்பதற்கு தெளிவாய் விளக்கம் வேண்டும் ,
நீங்கள் என்னை பற்றி சொல்வதில் தவறில்லை , எது என்றாலும் விவாதம் செய்து முடிவுக்கு வரவேண்டும் .நான் வியாபார ரீதியாய் விமர்சனம் செய்கிறேனா என்ன .........என் விமர்சனத்தில் அரசியல் இருக்கும் மக்களின் என்ன ஓட்டத்தில் என்ன தவறு என்பது கட்டாயம் இருக்கும் விளக்கம் போதுமா நண்பரே .......கேள்வி கேட்டதற்கு நன்றி கேள்வி தான் அறிவை வளர்க்கும் நண்பா நன்றிகள் "

நண்பர்களே சினிமா விமர்சனம் எழுதுவது கேவலாமான செயலா என்ன . அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது ஏன் விமர்சனம் செய்யக்கூடாது அது மக்களை சிறிது அளவாவது பாதிக்கிறதே . சம கால இலக்கியத்தில் விமர்சனம் தேவை , புத்தகங்கள் கூட படித்தவருக்கு மட்டுமே சென்றடைகிறது .சினிமா பட்டி தொட்டி எங்கும் செல்கிறது அதனால் இது வெட்டி வேலை அல்ல என்றே நினைக்கிறேன் .