Tuesday, 1 March 2011

காசு வாங்கிய சச்சின் டோனி கதை


"இப்ப பாரு டெண்டுல்கர் எட்டு ரன் அடிச்சிருக்கார் பத்துக்குள்ள அவுட் ஆவார் " என்றான் விஷ்வா
ஓடக்கூடாத ரன்னிற்கு ஓடி அவுட் ஆனார் சச்சின் , "எப்படி டா சொன்ன "என்று அதிர்ந்தான் குமார் .
"டோனி அஞ்சு ரன் தாண்ட மாட்டன் பார் " , மூன்று ரன்களின் போது ஏறி அடிக்க போய் அவுட் ஆனான் டோனி "எப்படி மச்சான் கலாசுற " என்றான் குமார் . "இந்தியா இன்னிக்கு எப்படியும் தோத்துரும் , 150 ரன் தான் அடிசுருக்காங்க " என்றான் விஷ்வா . hundred for நோ லாஸ் என்று தொலைகாட்சி ஸ்கோர் காட்டியது ,திடிரென 102 for Five என்று ஸ்கோரை பார்த்தவுடன் சன் தொலைக்காட்சியில் இருந்த சேனலை உற்சாகத்துடன் திருப்பினான் குமார் ,மட மட என்று விக்கெட் விழுக ஆரம்பித்தது 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா , விஷ்வா முகம் வாடியது ...........................
"என்ன மச்சான் ரெண்டு கோடி போச்சே இந்தியா தோக்கறதுக்கு எவ்வளவு கொடுத்தும் வீண் ஆயுடுச்சே ,
இவங்க காசு வாங்கின மாதிரி ஆடினாங்க ஆஸ்திரேலியா அத விட மட்டமா ஆடிட்டாங்க நம்மள விட எதோ புக்கி விளையாடி இருக்கான் " என்றான் விஷ்வா ..................................................
தண்ணி அடித்து கொண்டிருந்த குமாருக்கு ஒரு போன் வந்தது ...................எழுந்து சென்ற அவன்
"மச்சான் நல்லவேளைக்கு தோத்து போகல இந்தியா ஜெயிச்சுருச்சு , ஆஸ்திரேலியா மேல போட்ட அஞ்சு கோடி வீணா போகல "கலக்கல் மச்சான் என்று போனை வைத்தான்

Sunday, 27 February 2011

சச்சின் "நூறில் "

"ரெண்டு லட்சம்
கோடி ஊழல் "
நாகப்பட்டினம் , வேதாரண்யம்
ராமேஸ்வரம் "37 உயிர்கள்" ,
எல்லாம் மறந்து போனது
சச்சின் "நூறில் "

படத்த படமா பாருங்கப்பா - ஜாக்கி சேகரும் சினிமா விமர்சனங்களும்

படங்கள் பற்றி விமர்சனங்கள் வரும் பொழுது பொதுவாய் படத்தை படமாக பாருங்கள் என்ற விமர்சனம் வருவதுண்டு ."ராவணன் " படம் வந்தபொழுது எழுதிய விமர்சனத்திற்கு அது ஒரு கலை அவ்வளவே பிடித்து இருந்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அது என்ன அரசியல் விமர்சனம் செய்வது என்று வாதம் செய்பவர்கள் உண்டு . ஒரு படம் மொக்கை என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , போர் என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , நாயகி நன்றாக கவர்ச்சியாய் இருக்கிறார் என்று சொல்ல உரிமை உண்டு , ஆனால் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் மட்டும் படத்தை படமாக பார் என்று விமர்சனம் அறிவு ஜீவிகளிடம் இருந்து இயல்பாய் வரத்தான் செய்யும் .

இப்படி தான் பயணம் பார்க்க சென்ற பொழுது என் திரையுலகை சேர்ந்த நண்பரிடம் இது ஹிந்துத்துவா படம் என்று
சொன்னபொழுது அவர் சண்டைக்கு வந்தார் .மோடியை உங்களால் தீவிரவாதியாக சித்தரிக்க முடியுமா என்று நான் கேட்டேன் "மோடி தான் சிறந்த முதல்வர் என்று அவர் வாதிட்டார் " . நீங்கள் எல்லாம் ஹிந்து இல்லை பார்ப்பனர்கள் மட்டுமே ஹிந்து என்று சொன்னேன் , நீங்கள் அவர்களுக்கு வேலை செய்பவர் என்று சொன்னேன் . " எப்படி சொல்கிறீர்கள் நான் ஹிந்து தான் " என்று சொன்னார் .ஹிந்து மதம் உங்களை இழிவு படுத்துகிறது "இந்த ஒரு வீட்டில் மட்டுமே பத்தினி வாழ்கிறார் " என்று பார்ப்பனீயம் சொல்கிறது அதை ஏற்றுகொண்டால் நீங்கள் ஹிந்து தான் என்றேன். இப்படிப்பட்ட யோசிக்காத சமூகத்தில் ஒரு படைப்பு என்பது வரும்பொழுது அரசியல்
விமர்சனம் தேவை என்றே நினைக்கிறேன் .

சினிமாவை மொக்கை என்று விமர்சனம் செய்யலாம் ஆனால் அரசியல் விமர்சனம் கூடாது என்ன ஜனநாயகம் ?
ஆனால் இப்படி அரசியல் விமர்சனம் செய்யாதவர்கள் கூட "நடுநிசி நாய்களில் " வரும் வக்கிரம் என்னும் அரசியல் பற்றி சமூகம் பற்றி கவலை பட்டார்கள் . இது அவர்கள் செய்யும் தவறல்ல , அப்படம் அவர்களை மனதளவில் பாதித்து இருக்கிறது , அதில் அவர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்கிறது . இதே நடுநிசி நாய்களை விமர்சனம் செய்பவரை கூப்பிட்டு "அன்பே சிவம் " பற்றி விமர்சனத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "நீ என்ன பெரிய புடிங்கியா , நீ முதல்ல ஒரு படம் எடு" என்பார்கள். தன்னை பாதிக்கிற விடயத்தில் மட்டும் , தன்னில் இருந்து வரும் சமூக அக்கறையை மட்டும் காட்டும் இவர்கள் மற்றபடங்களை அரசியல் விமர்சனம் செய்யும்பொழுது "படத்தை படமாய் பாருங்க பா " என்று சொல்வார்கள் .

பின் குறிப்பு :
இப்பதிவை எழுத்தத்தூண்டியது அண்ணன் ஜாக்கியை பற்றி பதிவுலகில் எழப்பட்டிருக்கும் விமர்சனங்கள் . ஆனால் ஒருவிதத்தில் ஜாக்கி நேர்மையானவர் அவர் சிலபடங்களை மட்டும் அரசியல் பார்வையுடனும் சில படங்களை படங்களாகவும் பார்ப்பதில்லை அனைத்து படங்களையும் படமாகவே தான் பார்க்கிறார் .

Thursday, 24 February 2011

வாக்காளர்களே இல்லாத பொழுது எப்படி வாக்கு வங்கி குறையும்


சுட்ட மண்ணிலே
மீனாக மடிந்துகொண்டிருக்கிறான்
எம்மீனவன் ....
அம்மீன்கள் விற்பனைக்கு வைக்க
படுகின்றன வாக்கிற்காக.. !
தேர்தல் வாக்கிற்காக
நக்கும் நாக்குகள் கதைக்கின்றன

மீன்களை ஐந்து நட்சத்திர உணவகத்தில்
மட்டுமே பார்த்த
அரிதாராம் பூசும் நடிகன் ,
மீனவனுக்காக குரல் கொடுக்கிறான் .
தன் இழந்த பிம்பத்தை மீட்க்க
மீனவன் பிம்பம் தேவை !

கனிமொழி உண்ணாவிரதம் ..........
ஆச்சர்யம் அடையவேண்டாம் .
தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்களுக்குமே
பிரச்சனையாம் ,ராணுவத்திற்கு சம்பந்தம் இல்லையாம்
எப்படி மன்மோகனுக்கும் spectrum ஊழலுக்கும்
சம்பந்தம் இல்லை தானே ...!

தந்தி அனுப்புவோம் ........
தந்தி அனுப்புவதற்குள் நான்கு
உயிர் போயிருக்கும் அவ்வளவு
தானே ...............

வாக்காளர்களே இல்லாத பொழுது
எப்படி வாக்கு வங்கி குறையும்

Wednesday, 23 February 2011

நடுநிசி நாய்கள்


நடுநிசி நாய்கள் பார்த்தேன் , படம் பார்த்த பின்பு உண்மையிலேயே மன உளைச்சல் ஏற்ப்படுத்தியது , கதையை கூர்ந்து நோக்க தொடங்கினேன் . சமர் என்ற பையன் அவன் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தப்படுகிறான் அதனால் மனச்சிதைவு உள்ளாகிறான் , அவன் வளர்ப்பு தாய் அவரை புணர்கிறான் ,வளர்ப்புத்தையின் கணவரை கொல்கிறான், பின் நிறைய பெண்களை அனுபவித்து கொடுமை செய்கிறான் ,என்று படம் முழுக்க வக்கிரத்தின் உச்சத்தில் செல்கிறது . "ஊரில் நடப்பதை தானே எடுக்கிறோம் " என்று படைப்பாளிகள் எளிதில் சொல்வதுண்டு ,ஆனால் ஏதாவது ஒரு விடயத்தை மட்டும் காட்டிவிட்டு ,சில விடயங்களை மறைப்பதை படைப்பாளிகள் திறம்பட செய்கிறார்கள் .

அந்த சமர் போன்ற குணாதிசியம் மிக்க சிறுவன் எந்த சமூகத்திலே வளர்கிறான் , அவர் தந்தை குரூப் செக்ஸ் வைத்துக்கொள்கிறார் , அது எந்த சமூகத்தில் இருக்கிறது . பணத்திமிருடன் பெண்களை நுகர்வு பொருளாய் பார்த்து பழக்கப்படும் மேட்டுக்குடி பணக்கார சமூகத்தில் இருக்கிறது .அச்சமூகம் நுகர்வு கலாச்சாரம் சீர்கேடு
என்பதை படம் விமர்சனமே செய்யவில்லை .அப்படி விமர்சனம் செய்து அச்சமூகத்தில் இருந்து வளர்க்கப்படும் குழந்தை இப்படி தான் சிதைவுடன் வளரும் என்று சொல்லி இருந்தால் படம் ஒரு சிறந்த படைப்பை வந்திருக்கமுடியும் . அதைவிடுத்து வெறும் வக்கிரத்தை மட்டுமே மூலதனமாய் கொள்கிறது கதை என்பதே பிரச்சனை .

எந்த ஒரு பிரச்சனையையும் சமூகத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதே சிறந்த ஆய்வு முறை என்று நினைக்கிறேன் . உதாரணமாய் கள்ளக்காதல் பிரச்சனை , அவசர உலகம் ஒரு நாளைக்கு பத்து மணி நேர உழைப்பு கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பு செலுத்த முடியவில்லை அதனால் கள்ளக்காதல் அதிகரிக்கிறது . இது வெறும் ஒழுக்கம் சம்பத்தப்பட்ட பிரச்சனையாக பார்த்தோமானால் நாம் தீர்வு சொல்ல முடியாது ,ஆனால் அதன் ஆணி வேரை பார்க்கவேண்டுமென்றால் , அக்காலகட்ட சமூகத்துடன் இணைத்து
அப்பிரச்சனையை பரிசீலிக்க வேண்டும் . அப்படி பரிசீலிக்காமல் போனால் , ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தீர்வுகளை தேடிக்கொண்டிருக்க வேண்டும் . அப்படி சமூகத்துடன் பிரச்னையை இணைத்து பார்க்காமல் இது ஒரு தனிமனித ஒழுக்க பிரச்சனையாய் செல்கிறது "நாடு நிசி நாய்கள்".

நடுநிசி நாய்கள் என்றாலும் ,நாய்கள் அந்தரத்தில் இல்லை சமூகத்தில் உள்ளது . அந்த நாய் சொறி நாய் ஆனாலும் அந்த நாய் ஏன் சொறிநாய் ஆனது என்ற பின்புலத்துடன் சொல்லப்படாத கதையானதால் நடுநிசி நாய்கள் நாதரி நாய்கள் ஆனது .

பின் குறிப்பு : படத்தை படமாக தான் பார்க்க வேண்டும் என்று சொல்லும் விமர்சகர்கள் , இப்படத்தை மட்டும் படமாய் பார்க்காமல் சமூகம் பாதிப்படையும் என்று பதறுவது ஏன் ,அக்னி பார்வைக்கு எழுந்த கேள்வி எனக்கும் எழுவதை தவிர்க்க முடியவில்லை

Tuesday, 22 February 2011

தளபதி(கேப்டன்) இளைய தளபதி(ஸ்மால் கேப்டன்)


நாகை மாவட்டத்தில் பேசிய நடிகர் விஜய் அவரின் அறிய தத்துவமான "மத்திய மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்கள் " என்று சொல்லி உள்ளார் . அவரை பார்க்க ஒரு கூட்டம் . இந்த நடிகர் யார் என்றால் ஈழத்தில் பிரச்னை உக்கிரமாய் இருக்கும் பொழுது தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தியை சந்தித்தவர் . இந்த நடிகர் யார் என்றால் "கோகோ கோலா " விளம்பரத்தில் பணத்துக்காக நடித்தவர் . இவருக்கு சீனியர் நடிகர் என்ன டா என்றால் சரக்கு அடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறார் . ஒருவர் சினிமா வெளிவர பிரச்சனை என்பதால் அரசியலில் இறங்குகிறார் , இன்னொருவர் கல்யாண மண்டப பிரச்னையை ஏதோ ஈழ பிரச்சனை போல மேடைக்கு மேடை பேசுகிறார் ,இவர்களின் அறஉணர்ச்சி மக்கள் பிரச்சனையில் இருந்து வருவதில்லை , தன் மண்டைக்குள் இருக்கும் பிரச்சனையில் இருந்து வருகிறது . இத்தகைய முட்டாள்களே நம்மை ஏமாற்றுகிறார் என்றால் , நாம் எந்த அளவு இருக்கிறோம் .

சரத்குமார் என்பவர் தனக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை என்று அ தி மு கா சென்ற வரலாற்று காரணம் நாம் அறிந்ததே .விஜய டி ராஜேந்தர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது . பிரச்சாரத்திற்கு போக கூட நேரம் ஒதுக்காத கார்த்திக் தான் ஜாதி என்பதாலேயே தலைவராய் இருக்கிறார் . இப்படி நடிகர்களின் நகைச்சுவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . இந்த கோமாளிகளுக்கு பின் நின்று நாமும் கோமாளி ஆகப்போகிரோமா ?கேப்டன் தளபதி என்றால் இளைய தளபதி ஸ்மால் கேப்டன் தானே

Monday, 21 February 2011

ஷோபா ஷக்தி பெரியார் என்னும் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கவாதி

ஆங்கிலத்தில் "basturd " தமிழில் "தே ம " எந்த தேசமாய் இருந்தாலும் ஒருவனை மிகக்கேவலமாய் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தை அவன் தாயை திட்டுவது .இப்படி ஆணாதிக்கம் கரைபுரளும் உலகில் , பதிவுலகம் மட்டும் விதிவிலக்கா ? கீற்று இணையதளத்தில் தமிழச்சி மற்றும் மினர்வா கட்டுரை படித்தேன் , முற்போக்கு முகமூடி போடும் ஷோபா சக்தியை கிழித்து இருந்தது பதிவு . ஆண்கள் பெண்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை என்றால் கடைசியாய் உபயோகப்படுத்தும் ஆயுதத்தை ஷோபா ஷக்தி உபயோகித்து இருக்கிறார் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது என்ன ஆயுதம் என்று கீற்றில் படித்து தெரிந்து கொள்ளவும் , மறுபடியும் அதே விடயத்தை எழுதி பெண்களை இழிவு படுத்த விரும்பவில்லை இந்த போலி முற்போக்கு ஆசாமிகளின் முகமூடியை கிழிக்க வேண்டும் . பெண்கள் வளர்ந்தது போல தெரிந்தாலும் , நவீன வடிவில் சுரண்டப்படுகிறார்கள் .

இதற்க்கு சம்பந்தமான சுட்டிகள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011

http://kaargipages.wordpress.com/2011/02/21/therupporukki/

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_18.html

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

பெரியார் பற்றி பேசும் பெண்ணையே இப்படி இழிவு படுத்துகிறார்கள் என்றால் , சாமனிய பெண்ணின் நிலைமை . இதற்க்கு எதிராய் பதிவுலகம் தன்னுடைய கண்டனத்தை அழுத்தமாய் பதிவு செய்ய வேண்டும்