Tuesday, 30 March 2010

காதலும் கற்று மற

















என் இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர் , ஒருவர் காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி என்று வாதிடுபவர். இன்னொருவர் காதல் என்று ஒன்று உள்ளது அது இந்த மண்ணில் சாத்தியம் இல்லை என்று சொல்பவர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .முதல் நண்பர் அவரிடம் "காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி தான் மரினா பீச் சத்யம் திரையரங்கில் எல்லாம் பாருங்கள்" என்றார் அதற்க்கு இரண்டாம் நண்பர் "பால் உணர்ச்சியில் வருவது தவறல்ல ஆனால் வர்க்கம் சார்ந்து தான் காதல் வருகிறது அது காதலே அல்ல
உடன்படிக்கை" என்றார் . எனக்கும் என் நண்பருக்கும் வர்க்கம் என்று எதை சொல்கிறார் என்று புரியவில்லை .

நண்பர் இன்னொரு நண்பரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.கடைசியில் வர்க்கம் என்று விவாதம் செய்த நண்பர் ஒரே ஒரு கேள்வி கேட்டார் இன்னொரு நண்பரால் பதில் சொல்ல முடியவில்லை " அழகா இருக்கு ஒரு பொண்ணு உங்களுக்கும் பிடிச்சிருக்கு அந்த பொண்ணு சித்தாள் வேலை செய்கிறாள் நீங்க காதலிப்பீங்களா" சக நண்பர் சாப்ட்வேர் "அது எப்படி முடியும் " என்றார் . இதன் பெயர் தான் வர்க்கம் கிளாஸ் சார்ந்தே ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று நண்பர் விளக்கினார்.

வர்க்கம் என்பது இனம் சார்ந்து இருக்கலாம் மதம் ஜாதி சார்ந்து இருக்கும் அது எல்லாம் இல்லாத வகையில் பொருளாதாரம் சார்ந்து இருக்கும். நானும் அந்த நண்பரும் பேசிக்கொள்ளும் பொழுது கூட நிறைய கேள்வி கேட்டு மடக்குவார் பேசிப்பார்க்கும் பொழுது நண்பரிடம் ஒரு ஆழம் இருக்கும் அஜித் பிடிக்கும் என்றால் ஏன் பிடிக்கும் என்பார் . நான் தொழிலாளியுடன் சமமாய் பழகுவார் என்பேன். அப்படி என்றால் அந்த தொழிலாளி வீட்டில் பெண் எடுப்பாரா????? என்பார் நான் முழிப்பேன் அப்புறம் என்ன தொழிலாளி எல்லாம் வர்க்கம் சார்ந்தது கார்த்திக் என்பார்.

நானும் யோசித்து பார்த்தேன் சினிமாவில் காட்டுவதை போல் ஒரு பணக்கார பெண் ஏழை பையனை காதலிப்பது பணக்கார பையன் ஏழை பெண்ணை காதலிப்பது இது எல்லாம் சாத்தியமே இல்லை அப்படி இருந்தாலும் மிக குறைவு. மனிதனின் லெவல் மாற மாற நட்பு வட்டாரம் மாறும் அந்த அளவிலே மட்டுமே யோசிப்பான். காரில் வரும் பெண்கள் காரில் வரும் பையனையே காதலிப்பாள் . ஒரு கல்லூரியில் படிக்கும் இரு பாலார் காதலித்தால் ஏறக்குறைய ஒரே பொருளாதார அமைப்பையே சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஜாதி மத ரீதியாகவோ ஒரே வர்க்கம் சார்ந்து இருப்பார்கள்.

அப்படியே ஏழை பையனாய் இருந்தால் கூட அவன் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நன்றாய் படித்து மென்பொருள் நிறுவனம் அல்லது அதை ஒத்த மேட்டுக்குடி வேலை இதை பார்த்தே காதல் வருகிறது . இன்னொரு நண்பரிடம் கேட்டேன் "high கிளாஸ் பொண்ணுகள பார்பீங்களா" அதற்க்கு அவர் சொன்ன பதில் "அழகா இருந்தாலும் லவ் பண்ண தோணாது" " ஏன் " என்று கேட்டேன் . "அந்த பொண்ணெல்லாம் நமக்கு செட் ஆகாது" என்றார் நண்பர் . ஒரு மிடில் கிளாஸ் பையன் காதலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு
குடும்ப பாங்கான பெண்ணையே பார்ப்பான் ஏன் என்றால் அதை பார்த்தால் தான் இவனுக்கு ஒத்துவரும் என்று இவனுக்கு தெரியும் .

எல்லாமே வர்க்கம் சார்ந்து என்றால் உண்மையான காதல் என்ன என்று நண்பரிடம் கேட்டேன் . எதுவுமே பொருள் வைத்து கொள்ளாமல் பாதுகாப்பு இல்லாமல் அன்றைய நாளுக்கு மட்டும் உழைக்கும் மக்களிடம் இது சாத்தியம் என்றார். எப்படி என்று யோசித்து பார்க்கும் பொழுது சரியாகவே தோன்றியது . ஆம் இவனிடமும் பாதுகாப்பு இல்லை அவளிடமும் பாதுகாப்பு இல்லை சொத்துக்கள் இல்லை இங்கு இருவருக்கும் பிடிக்கும் உயிரை கூட விடுவார்கள் என்பது முன்னிலை படுகிறது , பணம் தேவை ஜாதி வர்க்கம் எல்லாம் பின்னிலை அடைகிறது, அதனால் அந்த இடத்தில் காதல் சாத்தியம்.

இன்னொரு இடத்திலும் காதல் சாத்தியம் எங்கே என்றால் ஒரு போராளி போல இருக்கிறான் , போராட்டங்களில் கலந்து கொள்கிறான், எப்பொழுது ஜெயிலுக்கு போவான் என்று தெரியாது இதை போல் ஒருவன் இருந்தால் எந்த பெண்ணும் நெருங்கி வர மாட்டாள். அவன் வாழ்கையில் பாதுகாப்பு இல்லை அவனையே ஒரு பெண் காதலித்தால் அங்கே உண்மையான காதலுக்கு சாத்தியம் இருக்கிறது ஏன் என்றால் இங்கே பிடிப்பது மட்டுமே பிரதானம் ஆகி விடுகிறது .

நண்பரிடம் பேசிவிட்டு வந்த பொழுது பெசென்ட் நகர் பீச்சில் காருக்குள் மேட்டுக்குடி காதல் நடந்து கொண்டிருந்தது உள்ளே A R ரஹ்மான் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஹோசன்ன" பாடிக்கொண்டிருந்தது. உள்ளே நூறு காதலர்கள் இருப்பார்கள் பீச்சில் அந்த வர்க்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கோ ஒரு இடத்தில் "கண்கள் இரண்டால்" பாடல் ஒலித்து கொண்டிருந்தது எப்பொழுதுமே கிளர்ச்சி ஏற்ப்படுத்தும் அந்த பாடல் இப்பொழுது என்னை ஒன்றும் செய்யவில்லை. என் காதலி என்னை விட்டு போய்விட்டால் என்ற வடு கூட இல்லை கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தது வெகு நாட்களுக்கு பின்.

Thursday, 25 March 2010

உற்று பார்த்துக்கொண்டே இருந்தது


















காரி உமிழ்ந்து
விட்டு போனார் பெரியவர் .......!
மழை வந்து குளிப்பாட்டியது ............
வண்டிகள் ஊர்ந்து சென்றன .......
நேற்று ஒரு காதலனுடன்
பிரிந்த காதலி இன்னொரு காதலனுடன்
நடந்து சென்றாள்............!
பிராத்தல் நின்று கொண்டு கூப்பிட்டு
கொண்டிருந்தாள் ...........!
பார் சென்றனர் A சென்டர் குடிமகன்கள்
டாஸ்மாக் சென்றனர் C சென்டர் .............!
ஒரு குழந்தை பஞ்சு மிட்டாய்க்காக அழுது கொண்டிருந்தது .........
ஆயிரம் ருபாய் பொம்மை வைத்து காருக்குள் சென்றது பணக்கார குழந்தை .......
தோழர்கள் ஏதோ பிரச்சனைக்காக
சுவரொட்டியிலே ஓட்ட ..............பக்கத்திலே
ஷகிலா பட சுவரொட்டி .....................!
துரோகி விரோதி நல்லவன் யாராக இருந்தாலும்
தெருவிற்கு மிதி மட்டுமே ..................
சில நேரம் காரி உமிழ்தல்
சில நேரம் அதன் பெயர் மூத்திர சந்து .............!
இருந்தாலும் அந்த அங்காடி தெரு அனைவரையும்
உற்று பார்த்துக்கொண்டே இருந்தது ....................!

Wednesday, 24 March 2010

இந்த பதிவிற்கு யாரும் vote போட வேண்டாம் - பார்ட் இரண்டு

கோகோ கோலா பதிவு பற்றி எழுதினேன் .........கோகோ கோலா குடிப்பவர்கள் அதிகமா இல்லை
நாம் சரியாக சென்றடயவில்லையா என்று தெரியவில்லை ............................!தயவு செய்து போன பதிவிற்கு
வாக்கு அளிக்க கூட வேண்டாம் படித்து விட்டாவது செல்லுங்கள் .....
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html

Tuesday, 23 March 2010

பிணவறை ஆகும் பிளாச்சிமடா - கோகோ கோலா விற்கு எதிரான போர்














"கடவுளின் பூமி" என்று சொல்லப்படும் கேரளா , எங்கே பார்த்தாலும் பச்சை நிறம். நல்ல பசுமையான மாநிலம், சுத்தமான காற்று ,சுத்தமான தண்ணீர்.கேரளத்தின் நெற்களஞ்சியம் பாலக்காடு. பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலுக்காவில் பிளாச்சிமடா என்னும் கிராமம் நெற்களஞ்சியம் மாவட்டத்தின் இதயம் ஒரு காலத்தில். ஒரு
காலத்தில் செழிப்பாய் இருந்தது பிளாச்சிமடா என்னும் கிராமம், தண்ணீர் தனியார் மாயம் ஆகும் வரை. ஒரு மாவட்டத்தின் நெற்களஞ்சியம் இரண்டு ஆண்டுகளில் பாலைவனமாய் போகும் என்றால் நம்புவீர்களா ,இதற்க்கு யார் காரணம் என்றால் விஜய் அமிர்க்ஹான் சூர்யா போன்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு வருவார்களே, நாம் கூட மேட்டுக்குடி என்று நினைத்துக்கொண்டு கோகோ கோலா மற்றும் பெப்சி டின் குடிப்போமே . ஆம் இந்த நிலத்ததடி நீரை சுரண்டியது, மாசு படுத்தியது சுட்ட்ருசுழலை எல்லாமே கோகோ கோலா நிறுவனம் .

2000 ஆம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் ஒரு தொழிற்சாலையை கட்டியது பிளாச்சிமடாவில் .இதன் தண்ணீர் தேவைக்காக பல ஆழ் குழாய் கிணறுகள் போடப்பட்டு தினந்தோறும் 1.5 மிலியன் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சப்பட்டது. பிளாச்சிமடா மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் 400 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. பெருமாட்டி பஞ்சாயத்திற்கு 6,45,000 ரூபாய் வரியாகவும், உரிமத்தொகையாகவும் கிடைத்தது. முதலில் கிராம மக்கள் இதை வரவேற்றனர்.2002 ஆண்டு முதல் குடிநீரின் அளவு குறைய துடங்கியது . தண்ணீர் எல்லாம் கருப்பாக வரதுடங்கியது .தண்ணீரின் சுவையும் மாறத் துடங்கியது.

நீர்வளமிக்க பிளாச்சிமடாவில் மக்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருக்க துடங்கினார். மக்கள் தெருவில் இறங்கி போராட துடங்கினார் , போராட்டத்தின் ஐம்பதாம் நாளில் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 7 பெண்கள் காயப்படுத்தப்பட்டனர் . இப்போராட்டம் நாடெங்கும் நடந்தது. "நிலத்தடி நீர் என்பது அப்பகுதி மக்களுக்கு உரிமையானது. மாநில அரசும், அதன் நிர்வாகமும் இந்த அரிய செல்வத்தை பாதுகாப்பதில் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறது. அந்த நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர், அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும் அனுமதிக்க அரசு இடங்கொடுக்காது. அது மக்கள் நலனைக் காக்கும் ' என்றதொரு வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

2004 ஆம் ஆண்டு பலாக்காடு வறட்சி மாவட்டமாய் அறிவிக்கப்பட்டது . மேலும் கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்பதையும் கேரள அரசாங்கம் அறிவித்தது.ஆனாலும் கோகோ கோலா போன்ற பணமுதலை அதை கேட்பதாய் இல்லை . போராட்டம் நடந்து கொண்டே இருந்தது போராட்டத்தின் 1000 நாளில் மேத்தா பட்கர் கலந்து கொண்டார் . ஒரு நாட்டின் அடி நாதம் விவசாயம் அதன் அரசாங்கம் சொன்ன தீர்ப்பாயே மதிக்க வில்லை என்றால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது . நாட்டை பணமுதலைகளிடம் விற்றுவிட்டதா.
ஹிந்து நாளிதழ் சொல்வதை போல் கோகோ கோலா நிறுவனம் ஒரு பத்து விதமான சட்டங்களை மீறி உள்ளது

1. Water (Prevention and Control of Pollution) Act, 1974

2. The Environment (Protection) Act, 1986

3. The Factories Act, 1948

4. Hazardous Waste (Management and Handling) Rules, 1989

5. The SC-ST (Prevention of Atrocities) Act 1989

6. Indian Penal Code

7. Land Utilization Order, 1967

8. The Kerala Ground Water (Control & Regulation) Act, 2002 Indian Easement Act, 1882

9. Indian Easement Act, 1882.

தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் ஊராட்சியில் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. ஒரு காலத்தில் விவசாயம் பார்த்த பூமி இன்று பிளாட் போட்டு விற்கப்பட்டது . அந்த பாலாற்றின் பக்கத்தில் black night பீர் கம்பெனி வேறு . இவர்கள் வெளியிடும் கழிவுகளை பாலற்றிலேயே விடுவது கொடுமை .இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை உறுஞ்சியது .























கோகோ கோலா குடிப்பதை ஒரு மேட்டுக்குடி கலாச்சாரம் என்று நினைத்து குடித்து கொண்டிருக்கிறோம் . நீங்கள் கோகோ கோலா குடிக்கும் நேரத்தில் நம் அன்னை நிலம் கற்பு இழந்து கொண்டிருக்கிறது . இன்னும் நமக்கு தெரியாத எத்தனை பிளாச்சிமாடா என்று தெரியவில்லை ???


எத்தனையோ வரட்சிகளை கண்டுள்ளது இந்தியா, நிலத்ததடி நீர் குறைய வெறும் பருவ மழை காரணம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் . தண்ணீர் தனியார்மயம் ஆகி விட்டது இலவசமாய் தொலைகாட்சி கிடைக்கும் ஆனால் தண்ணீர் கிடைக்காது. நாம் கின்லே இல்லை aqua fina சார்ந்து இருக்கிறோம் . உண்மையிலேயே அது காரணமா , தண்ணீர் பஞ்சம் வரும் பொழுது எப்படி கோகோ கோலா நிறுவனம் தண்ணீர் எடுக்கலாம். மக்கள் உயிரை
குடித்தாவது பாவத்தில் லாபத்தை அடையலாமா??? எப்பொழுதுமே பஞ்சம் இருந்தாலும் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் தினமும் லட்சக்கணக்கான litre தண்ணீர் எடுக்கிறார்கள் . ஒரு வகையில் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் செய்யும் போர் என்று சொல்லலாம் . நிலங்களின் நீர் ஆதாரத்தை குறைப்பது விவசாயின் பையன் நகரத்திற்கு வருவான் ,இவன் கூலியாய் MNC கம்பனிகளில் வேலை செய்வான் .உணவு சம்பளம் போன்ற எல்லா வற்றிக்கும் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் பொருளாதார நெருக்கடி உண்டு. இந்த அரசியல் புரியாமல் டுபாகூர் நடிகர்களும் டுபாகூர் கிரிக்கெட் வீரர்களும் விளம்பரத்தில் தோன்றுவார்கள் . அது என்னமோ கோகோ கோலா என்பது இந்த கலாச்சாரத்தின் தூண் போல பிம்பம் வளர்க்கப்படும்.

இப்பொழுது கிராமத்து விலை நிலங்கள் ப்ளாட்டுகள் ஆகின . என் ஊர் மதுரையை சேர்ந்த கண்மாய்கள் ப்ளாட்டுகள் ஆகி கொண்டிருக்கின்றன. விவசாயி புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறான் என்பது வருத்தமான விடயம். ஊரிற்கு ஊர் wine shop இருக்கிறது தண்ணி இல்லை என்று நண்பர் வருத்தப்பட்டார் . புத்திகள் மழுங்கடிக்க கலைஞர் தொலைக்காட்சி உள்ளது .முன்பெல்லாம் ஒவொவொரு கடைமுன்பும் தண்ணீர் வைத்திருப்பார்கள் , இப்பொழுது எல்லாம் தண்ணீர் காசு குடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது.

நீங்கள் கோகோ கோலா இல்லை பெப்சி faanta mirinda sprite போன்றவைகளை குடித்தால் நீங்கள் ஏதொ ஒரு வகையில் விவசாயிகளை கொன்று கொண்டிருகிறீர்கள்.

Sunday, 21 March 2010

இந்த பதிவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம்

இன்று பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது FM ஓடிக்கொண்டிருந்தது . IPL அணிகள் ஏலம் பற்றி சுலபா என்ற ரேடியோ ஜாக்கி பேசிக்கொண்டிருந்தார். 1500 கோடி ரூபாய் என்று பெருமையாய் பேசிக்கொண்டிருந்தார். இந்தியா எங்கயோ போய்க்கொண்டிருக்கிறது என்று பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ஊடகங்கள் என்ன தான் செய்கின்றன , ஊடகமே உங்களுக்கு சினிமா கிரிக்கெட் தவிர ஒன்றும் தெரியாதா
விதர்பா பற்றி பேசினால் பத்து வாக்கு கூட வரவில்லை . சரி கவர்ச்சிக்காக IPL போட்டி பற்றி அதிலிருந்து
லிங்க் கொடுத்தேன் அப்படியும் வாக்கு விழவில்லை ...........................ஒரு வாக்கிற்கு 1000 2000 எல்லாம் தர முடியாது , ம்ம்ம் நான் சும்மாக எழுதுகிற காதல் பதிவுகள் 15 வாக்கு வாங்குகின்றன ........................................

எனக்கு விதர்பா விடயம் நிறைய பேரிடம் செல்ல வேண்டும் ......நான் யாரிடமும் வாக்கு கேட்க மாட்டேன் .முதன் முதலாய் வாக்கு கேட்கிறேன் தயவு செய்து இந்த பதிவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம் போன பதிவின் முந்தய பதிவின் லிங்க் தருகிறேன் வாக்கு அளியுங்கள் .................................

http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_4213.html

Saturday, 20 March 2010

புதிய IPL அணிகள்




"Free டிக்கெட்ஸ்" இந்த லிங்க் free TICKET கொடுக்கப்படும் மேலும் புதிதாய் என்ன என்ன அணிகள் என்பதை பற்றி விவரம் அறிய மேலும் புதிதாய் என்ன என்ன அணிகள் என்பதை பற்றி விவரம் அறிய






New Ipl Teams எந்த நடிகர் வாங்கினார் அமீர் கான் அணியை வாங்குகிறாரா போன்ற செய்திகள்
இடம் பெரும் .படித்து மகிழவும்

Friday, 19 March 2010

விதர்பா விவசாய படுகொலைகள்

















போர் முனையை விட பேனா முனை கூரியது. ஆனால் இங்கே பேனா முனை எப்படி உள்ளது ஊடகங்கள் எப்படி உள்ளது .பேனா முனை நடிகைகள் பற்றி எழுதுகிறது.படுக்கை அறை வரை செல்கிறது. கட்டாயம் குமுதம் குங்குமம் ஆனந்த விகடனில் நடிகைகள் படம் இல்லை மாஸ் ஹீரோ படம் மட்டுமே அட்டையில் இருக்கும். நக்கீரன் reportor போன்ற பத்திரிகைகள் அப்பொழுது நடக்கும் செக்ஸ் crime அதாவது நித்யானந்தா, சங்கரர்,தேவநாதன்,ஜெயலக்ஷ்மி போன்றவர்கள் ஆக்கிரமிப்பார்கள். ஊடகங்கள் எதை காட்டுகின்றன அரை குறை ஆட்டங்கள் , கிரிக்கெட் ஆட்டங்கள், கலைஞர் பாராட்டு விழா.

விதர்பா விவசாய தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை ஊடகம் காட்டாமல் சச்சின் 200 அடித்ததை கொண்டாடும் ,அதை பற்றி எழுதினால் அதை தேச பற்று என்று சொல்லி அடிக்க வருவார்கள், எதிர்த்து பதிவெல்லாம் போடுவார்கள். எத்தனை ஊடகங்கள் இந்த விதர்பா விவசாயிகளின் தற்கொலையை பதிவு செய்தன.

விவசாயம் வீழ்ச்சி அடைந்ததால் 1997 முதல் 216000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் மொத்தம் 20000 கிராமங்கள் பஞ்சத்தால் பாதிக்கபட்டுள்ளன.

















1.Gunwant Raut of Dhotra inWashim

2.Vithal Lende of Bishur in nagpur

3,Amol Matharmare of Mahatoli In Yavatmal

4.Kisan Patil of Katpur In Amaravati

5.Sandeepzole of Pahur In Yavatmal

6.Purshottam Dewase of Kakada In Wardha

7.Ankush Narayan Thakray of Nimtalai in Nagpur

8.Suryakant Ganpat Gokare of Aadkoli in Yavatmal

9.Satish Keshav Dhote of Bhabulgoan in Yavatmal

10.Smt.Vimal Abhiman Kowe of Zuli In Yavatmal.

11.Santosh Janardhan Bhisale of Koyali In Washim

12.Prahald Nimba Rathode of Mahagoan in Yavatmal

13.Raobhan Raoji Surpam of Morwa In Yavatmal

14.Praka Bhaukade of Udi In Akola .

15.Balaji Paikine 0f Marsud In Yavatmal

16.Prahal Gawande of Bhadkad In Akola .

இவர்கள் IPL அணியில் எடுக்கப்பட்ட வீரர்கள் அல்ல . தேச பற்று மிக்க சச்சின் டெண்டுல்கரோ அவருக்காக எழுதும் தேசப்பற்று மிக்க பதிவர்களோ அல்ல ,கடந்த வாரம் தற்கொலை செய்த விவசாயிகள்!!!!.கணக்கெடுப்பு சொல்கிறது மொத்தம் 15460 கிராமங்கள் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று, உணவு உடை இருப்பிடம் வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. அரசு அந்த பகுதியில் எந்த வேலையையும் செய்ய வில்லையாம். ஊடகங்களும் அரசும் கவனிக்காததால் நாம் தற்கொலை என்று சொல்வதை விட விவசாய படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும்.

தாஜ் ஹோட்டலுக்கு குண்டு வைத்தால் குரல் கொடுக்கும் சச்சின் அதே மாநிலத்தில் உள்ள விவசாயி தற்கொலைக்கு குரல் கொடுத்தாரா என்ன?????????? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.

விவசாய படுகொலை நடந்துகொண்டிருக்கிறது நாமெல்லாம்
விதர்பாவுக்கு பக்கத்தில் இருக்கும் மும்பையில் நடக்கும் மேட்ச் பார்த்து கை தட்டுகிறோம் என்ன நுகர்வு கலாச்சாரம்.ஆனால் இதை பற்றி சிலர் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள்.பேனா முனையை அற்புதமாய் பயன்படுத்தியவர் சாய்நாத் . விதர்பா மக்களுக்காக ஊடகங்களிலே எழுதும் ஒரே ஜீவன். இப்பொழுது ஹிந்து பத்திரிகையிலே ரூரல் பகுதிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார் " ஊடகங்கள் மேல வாழும் 5 சதவிகித மக்களை பற்றி தான் எழுதுகிறார்கள், எனக்கு கீழே அடித்தட்டில் வாழும் ஐந்து சதவீகித மக்கள் பற்றி எழுத தான் விருப்பம் " என்று சொல்கிறார் . அவர் எழுத்தால் தான் விதர்பா விடயம் ஒரு அளவிற்கு கவனத்திற்கு வந்தது. இங்கே உள்ள ஊடகங்கள் என்ன காண்பிக்கின்றன நித்யானந்தா, IPL , நீயா நானா, ஊதாரி தனமான நடன போட்டிகள், வன்மம் வளர்க்கும் மெகா தொடர்கள் கொடுமை.

சாய்நாத் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் அதன் பெயர் "Every body loves a good drougt". பஞ்சத்தால் கஷ்டப்படும் மனிதர்கள் பற்றிய உண்மை கதைகள் காட்டாயம் வாங்கி படியுங்கள் .