Tuesday 23 March 2010

பிணவறை ஆகும் பிளாச்சிமடா - கோகோ கோலா விற்கு எதிரான போர்














"கடவுளின் பூமி" என்று சொல்லப்படும் கேரளா , எங்கே பார்த்தாலும் பச்சை நிறம். நல்ல பசுமையான மாநிலம், சுத்தமான காற்று ,சுத்தமான தண்ணீர்.கேரளத்தின் நெற்களஞ்சியம் பாலக்காடு. பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலுக்காவில் பிளாச்சிமடா என்னும் கிராமம் நெற்களஞ்சியம் மாவட்டத்தின் இதயம் ஒரு காலத்தில். ஒரு
காலத்தில் செழிப்பாய் இருந்தது பிளாச்சிமடா என்னும் கிராமம், தண்ணீர் தனியார் மாயம் ஆகும் வரை. ஒரு மாவட்டத்தின் நெற்களஞ்சியம் இரண்டு ஆண்டுகளில் பாலைவனமாய் போகும் என்றால் நம்புவீர்களா ,இதற்க்கு யார் காரணம் என்றால் விஜய் அமிர்க்ஹான் சூர்யா போன்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு வருவார்களே, நாம் கூட மேட்டுக்குடி என்று நினைத்துக்கொண்டு கோகோ கோலா மற்றும் பெப்சி டின் குடிப்போமே . ஆம் இந்த நிலத்ததடி நீரை சுரண்டியது, மாசு படுத்தியது சுட்ட்ருசுழலை எல்லாமே கோகோ கோலா நிறுவனம் .

2000 ஆம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் ஒரு தொழிற்சாலையை கட்டியது பிளாச்சிமடாவில் .இதன் தண்ணீர் தேவைக்காக பல ஆழ் குழாய் கிணறுகள் போடப்பட்டு தினந்தோறும் 1.5 மிலியன் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சப்பட்டது. பிளாச்சிமடா மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் 400 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. பெருமாட்டி பஞ்சாயத்திற்கு 6,45,000 ரூபாய் வரியாகவும், உரிமத்தொகையாகவும் கிடைத்தது. முதலில் கிராம மக்கள் இதை வரவேற்றனர்.2002 ஆண்டு முதல் குடிநீரின் அளவு குறைய துடங்கியது . தண்ணீர் எல்லாம் கருப்பாக வரதுடங்கியது .தண்ணீரின் சுவையும் மாறத் துடங்கியது.

நீர்வளமிக்க பிளாச்சிமடாவில் மக்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருக்க துடங்கினார். மக்கள் தெருவில் இறங்கி போராட துடங்கினார் , போராட்டத்தின் ஐம்பதாம் நாளில் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 7 பெண்கள் காயப்படுத்தப்பட்டனர் . இப்போராட்டம் நாடெங்கும் நடந்தது. "நிலத்தடி நீர் என்பது அப்பகுதி மக்களுக்கு உரிமையானது. மாநில அரசும், அதன் நிர்வாகமும் இந்த அரிய செல்வத்தை பாதுகாப்பதில் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறது. அந்த நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர், அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும் அனுமதிக்க அரசு இடங்கொடுக்காது. அது மக்கள் நலனைக் காக்கும் ' என்றதொரு வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

2004 ஆம் ஆண்டு பலாக்காடு வறட்சி மாவட்டமாய் அறிவிக்கப்பட்டது . மேலும் கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்பதையும் கேரள அரசாங்கம் அறிவித்தது.ஆனாலும் கோகோ கோலா போன்ற பணமுதலை அதை கேட்பதாய் இல்லை . போராட்டம் நடந்து கொண்டே இருந்தது போராட்டத்தின் 1000 நாளில் மேத்தா பட்கர் கலந்து கொண்டார் . ஒரு நாட்டின் அடி நாதம் விவசாயம் அதன் அரசாங்கம் சொன்ன தீர்ப்பாயே மதிக்க வில்லை என்றால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது . நாட்டை பணமுதலைகளிடம் விற்றுவிட்டதா.
ஹிந்து நாளிதழ் சொல்வதை போல் கோகோ கோலா நிறுவனம் ஒரு பத்து விதமான சட்டங்களை மீறி உள்ளது

1. Water (Prevention and Control of Pollution) Act, 1974

2. The Environment (Protection) Act, 1986

3. The Factories Act, 1948

4. Hazardous Waste (Management and Handling) Rules, 1989

5. The SC-ST (Prevention of Atrocities) Act 1989

6. Indian Penal Code

7. Land Utilization Order, 1967

8. The Kerala Ground Water (Control & Regulation) Act, 2002 Indian Easement Act, 1882

9. Indian Easement Act, 1882.

தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் ஊராட்சியில் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. ஒரு காலத்தில் விவசாயம் பார்த்த பூமி இன்று பிளாட் போட்டு விற்கப்பட்டது . அந்த பாலாற்றின் பக்கத்தில் black night பீர் கம்பெனி வேறு . இவர்கள் வெளியிடும் கழிவுகளை பாலற்றிலேயே விடுவது கொடுமை .இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை உறுஞ்சியது .























கோகோ கோலா குடிப்பதை ஒரு மேட்டுக்குடி கலாச்சாரம் என்று நினைத்து குடித்து கொண்டிருக்கிறோம் . நீங்கள் கோகோ கோலா குடிக்கும் நேரத்தில் நம் அன்னை நிலம் கற்பு இழந்து கொண்டிருக்கிறது . இன்னும் நமக்கு தெரியாத எத்தனை பிளாச்சிமாடா என்று தெரியவில்லை ???


எத்தனையோ வரட்சிகளை கண்டுள்ளது இந்தியா, நிலத்ததடி நீர் குறைய வெறும் பருவ மழை காரணம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் . தண்ணீர் தனியார்மயம் ஆகி விட்டது இலவசமாய் தொலைகாட்சி கிடைக்கும் ஆனால் தண்ணீர் கிடைக்காது. நாம் கின்லே இல்லை aqua fina சார்ந்து இருக்கிறோம் . உண்மையிலேயே அது காரணமா , தண்ணீர் பஞ்சம் வரும் பொழுது எப்படி கோகோ கோலா நிறுவனம் தண்ணீர் எடுக்கலாம். மக்கள் உயிரை
குடித்தாவது பாவத்தில் லாபத்தை அடையலாமா??? எப்பொழுதுமே பஞ்சம் இருந்தாலும் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் தினமும் லட்சக்கணக்கான litre தண்ணீர் எடுக்கிறார்கள் . ஒரு வகையில் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் செய்யும் போர் என்று சொல்லலாம் . நிலங்களின் நீர் ஆதாரத்தை குறைப்பது விவசாயின் பையன் நகரத்திற்கு வருவான் ,இவன் கூலியாய் MNC கம்பனிகளில் வேலை செய்வான் .உணவு சம்பளம் போன்ற எல்லா வற்றிக்கும் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் பொருளாதார நெருக்கடி உண்டு. இந்த அரசியல் புரியாமல் டுபாகூர் நடிகர்களும் டுபாகூர் கிரிக்கெட் வீரர்களும் விளம்பரத்தில் தோன்றுவார்கள் . அது என்னமோ கோகோ கோலா என்பது இந்த கலாச்சாரத்தின் தூண் போல பிம்பம் வளர்க்கப்படும்.

இப்பொழுது கிராமத்து விலை நிலங்கள் ப்ளாட்டுகள் ஆகின . என் ஊர் மதுரையை சேர்ந்த கண்மாய்கள் ப்ளாட்டுகள் ஆகி கொண்டிருக்கின்றன. விவசாயி புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறான் என்பது வருத்தமான விடயம். ஊரிற்கு ஊர் wine shop இருக்கிறது தண்ணி இல்லை என்று நண்பர் வருத்தப்பட்டார் . புத்திகள் மழுங்கடிக்க கலைஞர் தொலைக்காட்சி உள்ளது .முன்பெல்லாம் ஒவொவொரு கடைமுன்பும் தண்ணீர் வைத்திருப்பார்கள் , இப்பொழுது எல்லாம் தண்ணீர் காசு குடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது.

நீங்கள் கோகோ கோலா இல்லை பெப்சி faanta mirinda sprite போன்றவைகளை குடித்தால் நீங்கள் ஏதொ ஒரு வகையில் விவசாயிகளை கொன்று கொண்டிருகிறீர்கள்.

18 comments:

வினவு said...

நன்றி நண்பரே. கோகா கோலாவின் தண்ணீர்ச்சுரண்டலை அறியாமல் கோலாவை நாகரீகமாக கருதி குடிக்கும் இளைஞர்களை சிந்திக்க வைக்கும் பதிவு

ஸ்ரீ said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

ஊடகன் said...

பெப்சி மற்றும் கோகோ கோலாவை பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே...!

நம் தேசத்தில் மதுபானங்கள் எவ்வாறு தயாரிக்க படுகிறது....? அதற்க்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்...? அதுவும் நீங்கள் சொல்ல்வதுபோல நிலத்தை சுரண்டிதான் எடுக்க படுகிறது.......

இன்று என்பது சதவிகித பேர் அதை பருகினால் தான் ஹீரோ என்று நினைத்து , எல்லா விதமான நிகழ்சிகளிலும் குடிக்கிறார்கள்.... இது மேட்டுக்குடி மக்கள், அடிமட்ட மக்கள் என அனைவருக்கும் பொருந்தும்.....

கோககோலா, பெப்சியை போல் இதையும் எதிர்த்தால் நான் இந்த பதிவிற்கு முழுமையான ஆதரவு.........!

வெண்ணிற இரவுகள்....! said...

நீங்கள் சொல்வது மிக சரி ஊடகன் அவர்களே .................இந்த மாதிரி பதிவுகள் போட்டால் ஏனோ பின்னூட்டங்கள் வருவதில்லை ....................
பதிவில் குறிப்பிட்டது உண்மையான விடயம் ...யாருமே கண்டுகொள்ள வில்லை அப்படி இருக்கும் பொழுது நீங்கள் போட்டது கண்டு
ஒரு சில பேராவது உண்மையை உணர்ந்து உள்ளார்கள் என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சி ...............உங்களை போன்ற பதிவர்கள் உங்கள் பார்வையை
எழுதினால் சிறப்பாய் இருக்கும் நீங்கள் ஏன் எழுதுவதில்லை

Sathya said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல பதிவு நண்பா..

பல காரணங்களுக்காக நான் கோக், பெப்ஸி குடிப்பதை விட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவையில் விளை நிலம் வாங்க (விவசாயம் செய்யத்தான்) அலைந்த போது எல்லா ரியல் எஸ்டேட்காரர்களும் என்னைப் பார்த்து நகைத்ததும் ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

அப்புறம் உங்கள் வலைப்பூவிற்கு வந்து எந்த தொடுப்பைத் தொட்டாலும் பாப்-அப் வருகிறது. கொஞ்சம் பாருங்களேன்? (இதை இரண்டாவது முறை பதிகிறேன் என்று நினைக்கிறேன்).

இராகவன் நைஜிரியா said...

நீர் மோர், இளநீர், நுங்கு என இயற்கை கொடுத்த கொடைகள் நிறைய இருக்க... பெப்சியும், கோக்கும் ... தேவையா நமக்கு.

கோக்கு, பெப்சிக்கு பதிலாக.. நம்ம ஊர் தயாரிப்பு பவண்டோ, ப்ரூட்னிக்.. இது மாதிரி குளிர் பானங்களை அருந்துங்களேன்.

க.பாலாசி said...

நல்ல இடுகை.. என்னுள் விழுந்துகிடக்கும் விதைக்கும் உங்களின் இடுகை நீர்....

அறிவு GV said...

///ஒரு வகையில் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் செய்யும் போர் என்று சொல்லலாம் . நிலங்களின் நீர் ஆதாரத்தை குறைப்பது விவசாயின் பையன் நகரத்திற்கு வருவான் ,இவன் கூலியாய் MNC கம்பனிகளில் வேலை செய்வான் .உணவு சம்பளம் போன்ற எல்லா வற்றிக்கும் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் பொருளாதார நெருக்கடி உண்டு///

இது தான் உண்மை கார்த்திக். மீண்டும் நாம் அடிமைகள் ஆகிக்கொண்டிருக்கிறோம். முன்பு பிரிட்டன், இன்று அமெரிக்கா. முன்பு முதுகில் குத்தினார்கள், இன்று வயிற்றில். காசு கொடுத்தால் போதும், நடிகர்களும், அரசியல் வாதிகளும் வேறு எதையாவது குடிக்க சொன்னால் கூட செய்வார்கள். இந்த நாய்களை அடித்து துரத்தினால் போதும், எல்லாம் சரிஆகிவிடும்.

Sivamjothi said...

This kind of problem will be there when politicians without awareness are there. Also most of our politicians are not educated. Many of them are getting bribe and keeping quite.

rajeshkannan said...

சூப்பர் கார்த்திக்.நான் மூன்று வருடமாக இது போன்ற பானங்களை
தொடுவதில்லை . நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும்
உண்மை.

? said...

அறிவு நடிகர்கள் பிரச்சினை இல்லை. அமெரிக்க அடிமைத்தனத்திஃற்கு கூஜா மாத்திரம்தான் அவர்கள்தூக்குவது. மற்றபடி விரட்ட வேண்டியது பன்னாட்டு கம்பெனிகளை, அமெரிக்க அடிமைத்தனம் போன்றவற்றை. நடிகனை விரட்டினால் அந்த இடத்திற்கு ச்ச்சின் டெண்டுல்கர் வருவார் அப்போது என்ன பண்ணூவீர்கள்.

பாலு, முட்டாள்களால் ஆளப்படுவதால் இப்படி நேர்ந்த்தாக தாங்கள் கருதுவது வியப்பாக உள்ளது. நமக்கே இவ்வளவு தூரம் உண்மை தெரியும்போது அவர்களக்கு கட்டாயம் தெரியாமல் இருக் முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கல்வியறிவு இருந்தாலே ஒருவன் நேர்மையானவனாக இருக்க வேண்டும் என நம்ப முடியாது என நினைக்கிறேன்

அப்புறம் ஊடகன்

தண்ணீர் தனியார்மயமும், விவசாயத்தின் சீரழுவும் தான் முக்கியமான பிரச்சினை அதுதான் இங்கே பேசப்படுகிறது. ஆனால் மாறாக பானங்கள் அருந்துவதுதான பிரச்சினை எனவே மது ஒழிப்பு பற்றியும் இந்த இடத்தில் பேசுவதுதான் சரி என்பது ஒரு நோக்கத்தை சிதைஃகும் கலைப்புவாதமே தவிர வேறல்ல‌

-mani

Anonymous said...

Thanks for your educating post.

என் நடை பாதையில்(ராம்) said...

மேற்கத்திய நாடுகளின் கழிவுகளைக் கொட்ட இப்போதைக்கு இந்தியா தான் மிக வசதியான இடம். இதில் இதுவும் ஒன்று...

Unknown said...

நல்ல பதிவு இதை விஜய்,அஜித்,விக்ரம்,த்ரிஷா, ஷாருக் (இவரு இந்தியாவில இல்லனா பாகிஸ்தான் போய் குடிக்கரவரு) ரசிகர்கள் கட்டாயம் படிக்கணும் . ஒன்னு ரெண்டு திருந்துனாலே இந்த பதிவுக்கு மிக பெரிய வெற்றி... வாழ்த்துக்கள்

ராஜரத்தினம் said...

நல்ல பதிவு... கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒரு நாட்டின் நீர்வளம் சுரண்டப்படுவது வெட்கத்திற்கு உரிய விஷயம்.வருத்தமாய் இருக்கிறது.

Anonymous said...

//கோக்கு, பெப்சிக்கு பதிலாக.. நம்ம ஊர் தயாரிப்பு பவண்டோ, ப்ரூட்னிக்.. இது மாதிரி குளிர் பானங்களை அருந்துங்களேன்//

இவங்கெல்லாம் நிலதடி தண்ணீரை உபயோகபடுத்துவதில்லையா? இல்லை மத்தவன் சுரண்டுவதற்க்கு நம்மாலு சுரண்டிட்டு போகட்டும்ன்னு நினைக்குறீங்களா?

வெண்ணிற இரவுகள்....! said...

பிளாச்சிமடா என்னும் ஊரை போல அவர்கள் சிரழிக்க வில்லை என்பதே உண்மை சதீஷ் ............................................
பிளாச்சிமடா மற்றும் நான் சொல்லும் ஊர்களை போல இந்த சிறு கமபனிகள் யாரும் சுற்றுசுழலை கெடுக்கவில்லை