Monday, 31 May 2010

பதிவுலக அரசியல்

நர்சிமின் பூக்காரி கதையை படித்து அதிர்ந்து போனேன் . முதலில் சனிக்கிழமை மாதவராஜ் தளம் பார்த்த பொழுது , அவர் இதை பற்றி எழுதி இருந்தார் . அதை படித்தேன் அந்த சுட்டியை நரசிம் அழித்து இருந்தார் ................!!!!! சரி கதை படிக்காமல் விமர்சனம் எழுத பண்ணக்கூடாது என்று எழுதவில்லை
நேற்று வினவிலே அந்த கதையை படித்தேன் , இவ்வளவு வக்கிரமான எண்ணங்களா , என்று மனசு வெடித்தது . அதில் அக்னிபார்வை வினவு பதிவில் ஒரு பின்னூட்டம் கொடுத்து இருந்தார் . இங்கே பதிவுலகிலே வெட்டப்பட்ட காய்களாய் இருப்பவர்கள் நர்சிமை எதிர்க்கலாம் என்று சொல்லி இருந்தார் .அவர் தெரிந்த நண்பர் என்பதால் சொல்கிறேன் . சனிக்கிழமை வரை நரசிம் எனக்கு மிகவும் பிடித்த பதிவர் . பதிவுலகிலே அவருக்கு 600 follower இருக்கிறார்கள் , நான் பொறமை படும் அளவு வளரவில்லை என்றே நினைக்கிறேன் . என்னை அவர் பதிவுகளில் அறிமுகம் செய்தவர் நரசிம் , அதனால் இது தனிநபர் தாக்குதல் அல்ல .
எது எப்படியோ எனக்கு வினாவை போல எல்லா விடயத்தையும் ஆராய்ச்சி பண்ண தெரியாது , கதையை படித்தவரை அதில் ஆணாதிக்க திமிர் தெரிந்தது , அந்த வார்த்தை பிரயோகம் அவர் மீது உண்டான மதிப்பை குறைத்தது . இனி அவர் என்ன எழுதினாலும் என் மனம் ஏற்காது , அவர் கூறும் வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது ,
என்னால் இதற்க்கு மேல் திட்ட முடியாது , எனக்கு திட்டவும் வாறது என்பது தான் உண்மை . புனைவு என்ற பெயரிலே நரசிம் தன் மனதில் தோன்றியவைகளை எழுதியது ,அந்த கெட்டவார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கிறது நரசிம், இவ்வளவு ஆணாதிக்க வெறியா , பார்ப்பனீய வெறியா ,இவ்வளவு பிற்ப்படுத்தப்பட்ட சமூகமா???????????

Sunday, 30 May 2010

IIFA எதிர்க்கும் சீமான் ,செம்மொழி மாநாட்டிற்கு என்ன செய்ய போகிறார்இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று ,சமீபத்தில் "நாம் தமிழர்" இயக்கம் அமிதாப் வீட்டின் முன்பு போராட்டம் செய்தது .அது சல்மான் கான் வீட்டு முன்பாகவும் நடந்ததை கேள்விப்பட்டேன் . எப்படி ஒரு ஹிந்தி நடிகர்களுக்கு தமிழ் உணர்வு இருக்க வேண்டும் என்பது ஒரு கேள்வி ?????? "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்டேன் " என்று சொல்லிவிட்டு ராகுல் காந்தியிடம் பதவிக்காக பேச்சு வார்த்தை நடத்திய நடிகரிடம் சீமான் அவர்கள் அடுத்த படத்திற்கு பேசிக்கொண்டிருக்கிறார். பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரவிய பொழுது ஆங்கில ஊடகங்கள் எவ்வளவு கொச்சையாய் செயல்ப்பட்டன . ஒரு தீவிரவாதி இறந்து விட்டார் , அதனால் இலங்கையே நிமதியாய் உள்ளது என்பது போன்று செய்திகளை பரப்பிக்கொண்டே இருந்தன .அப்படி இருக்க ஒரு ஹிந்தி நடிகரிடன் தமிழ் உணர்வுகளை எதிர்ப்பார்ப்பது எப்படி என்று புரியவில்லை ?????இது எல்லாம் தன் பக்கம் திசை திருப்பும் நாடகமாகவே நினைக்கிறேன் .

சரி எங்கு எல்லாம் காங்கிரஸ் நின்றதோ அந்த இடத்தில் எல்லாம் பிரச்சாரம் செய்தாரே , ஏன் தி மூ கா நின்ற இடங்களில் பிரசாரம் செய்ய வில்லை . தி மூ கா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறது , காங்கிரஸ் மக்களை கொல்ல ஆயுதம் அனுப்புகிறது , ஏன் சீமான் வடமாநிலத்தில் இருந்து தமிழ் உணர்வை எதிர்ப்பார்க்கிறார் , தமிழனிடம் அல்லவா இருக்க வேண்டும் . சரி IIFA இருக்கட்டும் இந்த ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க போகிறதே அதற்க்கு என்ன செய்யப்போகிறார் சீமான் . ஒரு இனமே அழிந்து இருக்கிறது அதை கொண்டாட அந்த இனத்தில் இருந்தே மாநாடு அதற்க்கு சோனியா கூட தலைமை ஏற்கலாம் ????? இதை எல்லாம் எதிர்க்க மாட்டாரா . இந்த மாதிரி அமிதாப் வீடு முன்பு போராட்டம் நடத்துவதால் ஈழம் கிடைக்க போகிறதா ????? செய்தி வேண்டுமென்றால் வரும், பரப்பரப்பு மட்டுமே மிஞ்சும்.

கலைஞர் பெண் சிங்கம் என்னும் படத்திற்கு வசனம் எழுதுகிறார் . சரி அவர் பேரன்கள் சினிமாவிலே கால் ஊன்றுகிறார்கள் . அந்த படங்களை எல்லாம் எதிர்க்க முடியுமா
சீமானால் . இரண்டாவது அவர் சொல்வது போல் எல்லா தமிழர்களையும் இணைக்க முடியுமா , தமிழர்கள் வர்க்க ரீதியாய் பிரிந்து உள்ளனர் . எல்லா தமிழர்களையும் சேர்ப்பது என்பது எப்பொழுது முடியும் என்றால் ,வர்க்கங்களை கலைந்தால் மட்டுமே முடியும் . ஒரு தலித்துடன் தேவர் சேர்வார்களா , சரி ஒரு ஏழையும் ஒரு பணக்காரரும் தமிழன் என்ற ஒரே குடையில் எப்படி வருவார்கள் , உணர்ச்சி போங்க தமிழன் தமிழன் என்று பேசலாம் , முதலில் வர்க்கங்களை கலைக்க முயற்சி செய்ய வேண்டும் . இந்தியா தமிழனும் ஈழ தமிழனும் நண்பர்கள்

ஆனால் ஒரே வீட்டில் உள்ள சகோதரன் அல்ல . அப்படி சகோதரனாய் இருந்திருந்தால் இங்கே தமிழன் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் , இங்கே தமிழன் காங்கிரஸ்கட்சிக்கு வாக்கு அளித்திருக்க மாட்டான் . பௌதிக ரீதியாய் இருவரும் வேறு வேறு என்பதையே இது காட்டுகிறது . இரண்டாவது ஒரு போராட்டம் என்றால் அந்த மக்கள் ஒன்று கூடினால் மட்டுமே அது சாத்தியம். ஈழ போராட்டம் என்றால் ஈழ தமிழர்களை ஒன்று கூட்ட வேண்டும் , புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து ஈழ மண்ணிலே திரட்டி போராட வைக்க வேண்டும் .
மக்கள் புலம்பெயர்ந்து இருப்பார்கள் காசு தருவார்கள் அவர்களுக்காய் நாம் களத்தில் நிற்ப்போம் என்பது சரி அல்ல . பிரபாகரன் கூட இதை தான் செய்தார் , மக்களுடன் கலந்து போராட வேண்டுமே தவிர , மக்கள் எங்கேயோ இருந்து உதவி செய்வார்கள் அவர்களுக்காய் களத்தில் நிற்ப்பது சரி அல்ல . அதை தான் மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்கிறார்கள்.
ஈழம் பிரச்சனை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாம் , ஆனால் உணர வேண்டுமென்றால் அவர்கள் அங்கு இருந்திருந்தால் மட்டுமே அது முடியும். இங்கு மக்களை ஒன்று திரட்டுவதை விட , ஈழ மக்களை ஒன்று திரட்ட வேண்டும் , களத்திலே அவர்கள் முன்னாலே நிற்க வேண்டும் , பின்னால் வேண்டுமென்றால்
நம் தமிழர்கள் நிற்கலாம் . தமிழன் என்ற ஒற்றை கோட்டில் தமிழக தமிழர்களை திரட்ட முடியாது , ஜாதி பணம் போன்ற வேறுபாடுகள் இங்கு உள்ளது .சரி சல்மான் கான் ஷாருக் கான் அங்கு போவது இருக்கட்டும் . "கன்னத்தில் முத்தமிட்டால் " எடுத்த மணி சார் படம் " ராவணன்" படத்தை திரையிடுவாதாய் இருந்தார்கள் ,
கடைசியில் ஈழ மக்கள் எல்லா கண்டங்களிலும் இருக்கிறார்கள் படம் போகாது என்று தெரிந்த வுடன் , கைவிட்டு விட்டார்கள் . அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் .மணி சார் தமிழன் தானே . ஏன் எல்லா கேசட் கடைகளிலும் அவர்கள் பாடல்களே ஒலித்து கொண்டிருக்கிறது , மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள் ???? இந்த
சினிமா நடிகர்கள் எல்லாம் வெத்து வேட்டுக்கள் . இவர்களை எதிர்த்தால் ஒன்றும் ஆகாது . அரசியல் ரீதியாய் ஆக்கபூர்வமாய் செய்யப்பாருங்கள் .நீங்கள் செய்யும் போராட்டம் வெறும் பரபரப்புக்காக இல்லாமல் ஆக்கப்புர்வமாய் இருக்கட்டும் . கலைஞர் செம்மொழி மாநாட்டை எதிர்த்தால் நான்வரவேற்ப்பேன் ஈழ மக்களை ஒன்று திரட்டப்பாருங்கள் முடிந்தால் .

ஒரு மண்ணிற்கான போராட்டம் அந்த மண்ணிலேயே தான் துடங்க வேண்டுமே தவிர வேறு மண்ணில் அல்ல . ஈழ போராட்டத்தினை தமிழகத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை . தமிழகம் பின்னால் வேண்டும் என்றால் இருக்கலாம் ஆனால் மனரீதியாக கூட இருவரும் வேறு வேறு . அதனால் புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்று திரட்டி
ஈழத்தில் போராடுங்கள் இதுவே என் வேண்டுகோள்.

Friday, 28 May 2010

ராஜாங்கம் - செண்பகமே செண்பகமே


இசையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ,ஆனால் கேட்க்கும்பொழுது சில இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் . இசைக்கு மொழியே கிடையாது , மொழி தெரியவில்லை என்றாலும் இசையின் வடிவத்தை வைத்து இப்படி தான் உணர்ச்சி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியும் . மொழி தெரியாமலேயே இசையை ரசிக்க முடியும் . எனக்கு
bethovan mozart இவர்கள் இசை எல்லாம் கேட்டதில்லை . ஆனால் நம்ம ஊரு இளையராஜாவை கேட்டு இருக்கிறேன் .

தொண்ணுருகளின் தொடக்கத்தில் ரெஹ்மான் வந்துவிட்டார் எனக்கு அப்பொழுது வயது பத்து இருக்கும் . உலகமயமாக்கலின் தாக்கத்தில் நான் ரெஹ்மான் ரசிகனாய் இருந்தேன், ரோஜா கிழக்கு சீமையிலே திருடா திருடா மே மாதம் அத்தனை படங்களையும் ரசித்தேன் . நான் கல்லூரி வரும் வரை A R ரெஹ்மான் ரசிகராய் இருந்தேன் . என் கல்லூரிக்கு போன கால கட்டத்தில் என் நண்பன் சந்தோஷ் இளையராஜா ரசிகன் . அவன் வீட்டிக்கு போகும் பொழுது கணினியில் ராஜா பாடல்கள் போடுவான் , அப்பொழுது தான் தெரிந்தது ராஜா என்றால் யார் என்று .
பாதி பாடல்கள் சிறுவயதிலேயே என் மனதிற்குள் படிந்து இருக்கிறது என்பதை உணர முடிந்தது . எண்பது முதல் தொண்ணூறு வரை இந்த அளவு ஊடகங்கள் வளரவில்லை , ஆனாலும் இளையராஜா பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் போனது . சிறு வயதில் அவர் பாடல்களை கேட்டு இருக்கிறேன் போல , என் நண்பன் வீட்டில் மறுபடியும் கேட்கும் பொழுது எல்லா பாடல்களும் இசையுடம் நியாபகம் வந்தது.

அதிர்ந்து போனேன் நான் உள்ளுக்குள் ராஜா ரசிகனாய் இருந்து இருக்கிறேன் . அதன் பின்பு படம் எப்படி பார்க்க வேண்டும் என்ற அறிவு கொஞ்ச கொஞ்சமாய் வளர்ந்து கொண்டிருந்தது . அப்பொழுது தான் RERECORDING என்ற வார்த்தையை கேள்வி படுகிறேன் , என் நண்பன் சொன்னான் அவர் தான் RR கிங் என்று .ReRecording என்பது பின்னணி இசை கோர்வை . ஒரு காட்சியை இசையால் சொல்ல வேண்டும் . ரெஹ்மான் ஹாரிஸ் போன்றவர்கள் பாடல்களை ஹிட் செய்யலாம் பின்னணி இசையில் ராஜா ராஜா தான் . அதற்க்கு காரணம் அவர் மனப்பக்குவம் என்றே நினைக்கிறேன் , அவ்வளவு பக்குவப்பட்ட மனதாலேயே இந்த காட்சிக்கு இந்த உணர்வு வேண்டும் என்று இசையால் உணர்ந்து கொண்டு இசையால் பேச முடியும் என்று நினைக்கிறேன் , இப்பொழுது எனக்கு தெரிந்து யுவன் அர்ப்புதமாய் RR செய்கிறார் என்று நினைக்கிறேன் .
எனக்கு பிடித்த இளையராஜா பாடல்களை அது என்ன உணர்வலைகள் எனக்குள் ஏற்ப்படுத்தியது என்பதை எழுத போகிறேன் , ராஜாங்கம் என்ற தலைப்பில் . இந்த வாரம் "எங்கள் ஊரு எங்கா ஊரு பாட்டுக்காரன் " என்ற படத்தில் வரும் "செண்பகமே செண்பகமே " என்ற பாடல் . இளையாராஜா பாடல் போன்று வரிகளுக்கும் ஒலிக்கும் சம்பந்தம்
உள்ள பாடல்களை பார்க்க முடியாது . அந்த வரிகள் உணர்வை என்ன சொல்கிறதோ அதை ஒலிகள் அதே அளவில் செய்யும் மந்திரம் ராஜவுடனே இருக்கும் . அந்த பாடல் மெதுவாய் ஆரம்பிக்கும் , மனோவின் குரல் அற்புதமாய் இருக்கும் . காதலை மென்மையாய் சொல்லும் பாடல் , அது அந்த மெட்டிலேயே இருக்கும் , பொறுமையாய்
ஆரம்பிக்கும் பாடல் மனதை ஆக்ரமிக்கும். அந்த பாடலில் எனக்கு பிடித்த இடம் " உன் பாதை போகும் பாதை நானும் போக வந்தேனே , உன் மேல ஆசைப்பட்டு பாத்து காத்து நின்றேனே" , காதலை இவ்வளவு எளிமையாய் யாரும் சொல்ல முடியாது , உனக்காக காத்து கிடக்கிறேன் என்று உன் காதலியிடம் சொல்கிறீர்கள் .....அப்பொழுது இந்த "பாத்து காத்து " என்ற இடத்தில் பாத்துக்கும் காத்துக்கும் நடுவில் ஒரு சிறு கமா போடுவதை போல் ஒரு சிறு நொடி நிற்கும் அந்த இடத்தில் காதலிக்கான காத்திரக்கும் உணர்வு உண்மையிலேயே வரும், இது தான் ராஜா கவிஞர் எளிமையாய் எழுதிருந்தாலும் தன் இசை கோர்வையால் அந்த உணர்வை கொண்டுவரக்கூடியவர் ராஜா .

அதன் பின் ஒரு வரி வரும் " உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு " அந்த வரிகள் பாடும் பொழுது அந்த ஒலிகளில் ஒரு நிம்மதி இருக்கும் , பாடல்கள் என்ன பொருள் தருகிறதோ அதற்க்கேற்றார் போல் இசை மாறிக்கொண்டே போகும் , அந்த உணர்வுகளை அழகாய் எழுப்பிச்செல்லும் . ராஜா ராஜா தான் " நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நா ராஜா " உண்மை .அந்த பாடலை கேட்காதவர்கள் கூட கேட்க வேண்டுமென்பது என் ஆசை, ரெஹ்மான் ரசிகர்கள் கூட கேட்காலம் , இசை என்பது ஒலிக்கருவிகளின் கூடல் அல்ல , அது உணர்வுகளின் கூடல் அது ராஜா இசையில் சாத்தியம் .

Thursday, 27 May 2010

எஜமான் சின்ன கௌண்டர் தேவர்மகன்நம் இந்தியா நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் கலந்த நாடு என்றே சொல்லலாம் . நிலப்பிரபுத்துவம் என்றால் என்ன ?????? எளிமையாய் சொல்லவேண்டுமென்றால் நிலவுடமை .நிலத்தை சொந்தமாக சிலர் வைத்திருப்பார்கள் , பலர் அவர்களிடம் கூலி வேலை செய்வார்கள் . இந்தியா விவசாய நாடு என்பதால் இந்த முறை தான் இருந்தது . இங்கே உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் அல்ல அவன் அடிமையே.இன்னும் கூட கிராமங்களில் பெரிய குடும்பம் என்று ஒன்று இருக்கும் அது ஜாதி ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பமாய் இருக்கும் ,அவர்களிடம் நிறைய நிலம் இருக்கும் , ஊரே அவர்களுக்கு மரியாதை செய்வார்கள். 1970 பின் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வருகிறது , கிராமங்களில் இருந்து இளைய சமுதாயம் நகர் புறம் சென்று வேலை தேடுகிறார்கள். நிறைய நகரங்கள் தொழில் நகரங்கள் ஆகின்றன , இந்தியா நிலப்பிரபுத்துவத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்து முதலாளித்துவ நாடாய் இன்று வரை மாறிக்கொண்டே இருக்கிறது . முதலாளித்துவ நாட்டிலே பெண்களுக்கு சுதந்திரம் உண்டு , அதற்க்கான அரசியல் காரணமும் உண்டு , இங்கே முதலாளிகளுக்கு உழைக்கும் சக்திகள் அதிகம் தேவை படுகிறது அதனால் பெண்கள் சுதந்திரம் பெறுகிறார்கள் , கலப்பு திருமணங்கள் நடக்கிறது , சமூகம் விரிவடைகிறது , நிலப்பிரபுக்களை நம்பி இருந்த மக்கள் இங்கே வந்து தொழிற்சாலைகளில் தொழில் செய்கிறார்கள் . ஆனால் நிலப்பிரபுத்துவம் மக்களை சுரண்டுவதை விட முதலாளித்துவம் அவர்கள் வாழ்கையையே சுரண்டுகிறது . நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ நாடாய் மாறிக்கொண்டிருக்கும் சுழலில் உள்ளோம் . இதை நமது தமிழ் படங்கள் இந்த கலவையை பிரதிபலிக்கின்றன.எண்பதுகளில் கிராமப்புறத்து மக்கள் படிக்கிறார்கள் , அப்பொழுது வேலை இல்லா திண்டாட்டம் வருகிறது . அதற்க்கு முந்தைய காலகட்டத்தில் கிராமத்தில் சிறு விவசாயியாக மட்டும் இருக்கும் மக்கள் படிக்க தொடங்குகிறார்கள் . இந்த வேலை இல்லா திண்டாட்டம் பற்றி அப்பொழுது படங்கள் நிறைய வந்தது "வறுமை நிறம் சிகப்பு" முக்கியமான படம் . அதன் சாயலிலேயே "பாலைவன சோலை " போன்ற படங்கள் வந்தன . நான்கு ஐந்து நண்பர்கள் வேலை இல்லாமல் வறுமையை சமாளிப்பார்கள் , அப்புறம் அந்த படங்கள் சுயமுன்னேற்றத்தை பற்றி பேசும் படங்களை இருக்கும். ஆனால் வெறும் சுயமுன்னேற்றத்தால் சமூகம் முன்னேறுவதில்லை என்பதே உண்மை.

முதாலளித்துவ சமூகமாய் மாறிக்கொண்டிருந்த வேலையில், வேலை வாய்ப்பு இன்மை மற்றும் காதல் போன்றவை இயல்பாய் தமிழகத்தில் தோன்றின . 1980 பின்பு நிறைய காதல் படங்கள் வந்தன ,இளையராஜாவின் காதல் பாடல்கள் சந்து போந்து எங்கும் ஒலித்தன. அதற்க்கு முன் காதல் இல்லையா , இருந்தது ஆனால்
பெண்களுக்கு சமமான நிலை இல்லை , ஆனால் முதலாளித்துவ தேசமாய் மாறும் பொழுது பெண்களுக்கு சமாமான நிலை வருகிறது ஓரளவிற்கு அங்கே காதல் வருகிறது .அதனால் எண்பதுகளில் இருந்து தொண்ணுறு வரை காதல் படங்கள் கொடிக்கட்டி பறந்தன.

இந்தியா இப்பொழுது நிலபிரபுத்துவதிற்கும் முதலாளித்துவத்திற்கும் நடுவில் உள்ளது ,அதனால் இரண்டு கருத்துக்களுமே படங்களில் பிரதிபலிக்கும் .தனிமனித வழிபாடு என்பது நிலப்பிரபுத்துவத்தில் தான் உள்ளது . ஊரில் யாரவது பெரிய மனிதர் இருப்பார் அவரிடம் நிலம் இருக்கும் , அந்த குடும்பத்தை ஊரே மதிக்கும் . இந்த மாதிரியான காட்சிகள் சினிமாவில் படிமங்களாய் உள்ளன . "தேவர் மகன்" "சின்ன கௌண்டர்" "எஜமான் " போன்ற படங்கள் இதை பிரதிபலித்தன. ஊருக்கு நல்லது செய்பவராவே இருக்கட்டுமே மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா என்ன , மண்ணை தொட்டு கும்பிட வேண்டுமா என்ன.???? ஆனால் கலை இதை பிரதிபலித்தது
ரசிகன் அந்த பின்னணியில் வந்ததால் அதை ரசித்தான் . இதே நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பெண்கள் அடிமையாய் இருந்தனர் இந்த நேரத்தில் இப்பொழுது வரை வந்த படங்களில் பெண்களை வசை பாடும் வசனங்கள் கை தட்டு வாங்கின .


அப்புறம் முதாலாளித்துவம் வருகிறது உலகமயமாக்கல் வருகிறது முதலாளிகளை காப்பாற்றும் தேசியம் பேசும் "ரோஜா" போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அதே நேரத்தில் தனிநபரால் சமூகத்தை காக்க முடியும் என்ற வாதம் கொண்ட "GENTLE MAN " "இந்தியன்" போன்ற படங்கள் ஓடத்துவங்கின. ஆனால் அப்படி தனிநபரால் மக்களை காக்க முடியும் என்னும் பிரசாரம் முதலாளித்துவத்தின் ஊது கோள். அடிப்படை ஒரு பிரச்சனை தீரவேண்டுமென்றால் மக்கள் கூடவேண்டும் என்பதை மறுத்து , உங்களுக்கு உதவ கடவுள் வருவான் என்பதை மறைமுகமாய் சொல்கிறது இந்த படங்கள் . இதற்க்கு எல்லாம் BASE "கடவுள் காப்பற்ற வருவார் , நீ முயற்சி செய்யாதே " என்ற கருத்து தூவப்பட்டுக்கொண்டே இருக்கிறது . இதுவும் முதலாளித்துவம் வந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது ."குரு" போன்ற படங்கள் முதலாளித்துவத்தை நேரடியாக ஆதரித்தன . திருட்டுத்தனத்தை நியாய படுத்தியது .அவர்களை ஹீரோ போல சித்திரம் செய்யப்பட்டது .இது போல கலை காலத்தை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு வகையில் , ஒரு நாட்டை பற்றிய வரலாற்று பார்வை வேண்டுமென்றால் அந்த வரலாறை படிக்காதீர்கள் , ஏன் என்றால் அந்த வரலாறு முக்கியமானவர்கலையே பிரதிபலிக்கும் , சாமானிய மக்களை பற்றி படித்து அவர்கள் எப்படி மாறி இருக்கிறார்கள் என்ற படிப்பு வேண்டுமென்றால் அதன் கலை புதினம் படங்களை பாருங்கள் , ஒவொவொரு காலத்திலும் படங்கள் மாறுபடும் நாம் அந்த மக்களின் வரலாற்றை படிக்கலாம்.

Wednesday, 26 May 2010

பெப்சி குடிக்கும் சிங்கம்
சமீபாத்தில் வினவு தளத்தில் பெப்சி கோக் பற்றி எழுதி இருந்தார்கள் . ஆனால் நாம்
செய்யும் பிரச்சாரத்தை விட ஊடகங்கள் பத்து மடங்கு செயல் படுகிறது . சூர்யா போன்ற நடிகர்கள் எந்த விளம்பரம் கூப்பிட்டாலும் நடிக்கிறார்கள் காசு வாங்குகிறார்கள்??? " அரசியல் இல்லாமல் நன்மை செய்ய முடியும் என்று NGO வேலை பார்க்கிறார்கள் " . முதலில் சமூக அக்கறை இருந்தால் பெப்சி போன்ற விளம்பரங்களில் வருவதை தவிர்க்கலாமே . அமீர் கான் மேத்தா பட்கரின் ஒரு போராட்டத்திற்கு சென்று இருக்கிறார் . அது விவசாயிகள் போராட்டம் , அமிரை பார்த்தவுடன் "முதலில் நீ விளம்பரத்தில் வருவதை நிறுத்து அப்புறம் போராட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளலாம் " என்று அமீர் கானை மக்கள் விரட்டிவிட்டார்கள் .

சரி நமக்கு எல்லாம் இந்த நடிகர்கள் தெரியும் , விவசாயிகள் தெரியுமா . சரி பெப்சி கோக் எதிர்ப்பதால் விவசாயம் முன்னேறுமா என்று கேட்கலாம் . பெப்சி கோக் நிலத்தடி நீரை உருஞ்சுகிறது . பிளாச்சிமடா என்னும் ஊரையே நிர்மூலம் ஆக்கி இருக்கிறது . இங்கு உள்ள சிறுமுதலாளிகளை அழித்து இருக்கிறது .விவசாயத்தை
அழித்து இருக்கிறது . பிளாச்சிமடா என்னும் ஊர் தண்ணீர் பிரசித்தி ஒரு காலத்தில் , இதை கணக்கு பண்ணிய கோக் அங்கு கூடாரத்தை ஏற்படுத்தியது .அங்கு உள்ளசுற்றுசுழலை பாதிப்பு ஏற்ப்பட செய்தது . அந்த தண்ணீர் இப்பொழுதெல்லாம் விடம் போல் உள்ளதாம் , அங்கு பிறக்கும் குழந்தை உடல் நலக்குரைவாய் பிறக்கிறதாம் . யாரோ சிலர் பின்னூட்டம் செய்து இருந்தார்கள் bovanto சுற்றுசுழலை பாதிக்க செய்ய வில்லையா என்று ?????? கட்டாயம் சொல்லலாம் இந்த அளவு ஒரு ஊரேபாழலடிக்கும் அளவு செய்ய வில்லை என்று .

ஊரிர்க்கே தண்ணீர் கிடைக்காத பொழுது இவர்கள் mineral வாட்டர் தயார் செய்ய எங்கே தண்ணீர் கிடைக்கிறது . இயற்க்கை வளத்தை சுரண்டி எப்படி அவர்கள் சொந்தம் கொண்டாட முடியும் . ஆனால் அது இங்கே நடந்து கொண்டிருக்கிறது , " அரசியல் வராமல் கூட நன்மை செய்யலாம் " என்று சொல்லும் சூர்யா விவசாயிகளுக்கு செய்யும் நன்மை இது தானா ??? சூர்யாவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம் ???? சூர்யா அமீர் விஜய் போன்றவர்கள்விளம்பரத்தில் நடிக்கிறார்கள் . இவர்கள் சொன்னால் செய்வதை கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது . அதுவும் படித்தவர்கள் அறிவாளிகள் என்று நினைத்து கொள்பர்வர்கள் சூர்யாபடம் பார்க்கிறார்கள் . இவர்களுக்கு எல்லாம் விதர்ப்பா விவசாயி பற்றி அறிவார்களா என்ன ??????

விதர்பா என்னும் ஊரில் விவசாயம் அழிந்ததே அதை பற்றி தெரியுமா????? விதர்பா என்னும் ஊர் அழியும் பொழுது, சூர்யா குடிக்கிறார் என்பதற்காய் சத்யம் திரையரங்கில் வாங்கி குடிப்பானே படித்த பாமர தமிழன் . அவனுக்கு எங்கே தெரியும் ஒரு லட்சம் மேல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் விதர்பாவில் என்று . இந்த நடிகருக்கெல்லாம் ECR ரோட்டில் ஒரு பங்களா இருக்கும் கட்டாயம் அதில் நீச்சல் குளம் இருக்கும் . ECR ரோடு நீச்சல் குளம் உள்ள வீடுகளை ஒழித்தாலே மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்று நினைக்கிறேன் .

சரி இந்த பெப்சி கோக் அனைத்து கடைகளிலும் தன்னுடைய fridge கொடுத்து தன் பொருள் மட்டும் விற்க வேண்டும் என்று சொல்கிறது .இவை இரண்டும் ஏக போக முதலாளியை ஆக பார்க்கிறார்கள் , ஊடகம் நடிகர்கள் அரசு என்று அனைத்தையும் தன் பாக்கெட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள் . மக்கள் ஒன்று பட்டு எழுந்தால் மட்டுமே இவர்களை எதிர்க்க முடியும். விதர்பா பற்றி பேசும் பொழுது எதற்கு சச்சின் சூர்யா போன்றவர்களை இழுக்கிறாய் என்று சொல்லலாம் ?????????அவர்கள் இந்த விளம்பரங்களில் வருவதால் கட்டாயம் குற்றவாளி கூண்டில் ஏற்றபடுவார்கள் இந்த விளம்பரங்கள் விவசாயிக்கு எதிர்ப்புறமாய் இருக்கிறது , அதனால் அவர்கள் மக்கள் விரோதிகள் , அதனால் தான் இந்த கேள்வி எல்லாமே வருகிறது.


பெப்சி கோக் குடிப்பவர்கள் ஆதரிப்பவர்கள் விதர்பா , மற்றும் பிளாச்சிமடா பற்றி படித்து விட்டு வாருங்கள் . இதை படித்து ஒருவன் பெப்சி கோக் குடிக்காமல் இருந்தால் வெற்றி அல்ல , நூறு பேர் படிக்கிறார்கள் என்றால் எல்லாருமே குடிக்காமல் இருந்தது என்றால் மட்டுமே வெற்றி . என் எழுத்துக்கள் கோர்வை இல்லாமல் இருக்கலாம் , நான் நீங்கள் நம்பும்படி எழுதாமல் இருக்கலாம் ஆனால் நான் சொல்வது உண்மை . விவசாய தேசத்தில் , விவசாயம் எப்படி இருக்கிறதுஎன்ற அறிவு இல்லாமலேயே நாட்டின் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் . சினிமா பார்ப்பது விஜய் சூர்யா போன்றவர்கள் சொல்வதால் பெப்சி குடிப்பட்து கோக்குடிப்பது என்று குழந்தைகள் வளர்வது வேதனை . அதனால் தான் என்னமோ விவசாயம் வீழ்ச்சி அடைந்து எல்லா மக்களும் நகர்ப்புறத்துக்கு புலம்பெயர்கிறார்கள். நாளை விவசாயம் என்பது சாயம் போனதாய் இருக்கும். விவசாயி என்பவன் எப்படி நாம் ஆதி மனிதனை படிக்கிறோமோ , பின் வரும் மக்கள் அப்படி படிப்பார்கள் . அமெரிக்காவில் கூலிகளாய் இருப்பார்கள் இந்தியர்கள் . இந்தியா ஒரு கூலிகளின் தேசமாய் இருக்கும் . இந்த நடிகர்கள் உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லைஎன்றாலும் ரசிகனை திசை திருப்பாமல் இருக்கலாம் ஏன் என்றால் சூர்யா போன்ற நடிகன் இந்த விளம்பரத்தில் நடிக்காததால் சாப்பிடாமல் இருக்க போவதில்லை .

Tuesday, 25 May 2010

த(க)ண்ணீர்


ஒரு பக்கம் தண்ணீர் மக்களுக்கு கிடைப்பதில்லை இன்னொரு பக்கம் ECR ரோட்டில் நீச்சல் குளத்துடன் வீடுகள் . அந்த நீச்சல் குளம் பராமரிக்க தண்ணீர் வேண்டுமே எங்கிருந்து வருகிறது . பணம் இருப்பவனே வாழ முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் . ஐந்து நட்சத்திர ஹோடேலில் 24 மணி நேரமும் நல்ல தண்ணீர் தான் வருமாம்??????இது மின்சாரம் போன்ற எல்லா விடயத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் .


மேல் மட்டத்தில் சுரண்ட சுரண்ட கீழ் தட்டு மக்கள் கஷ்ட்டப்பட பழக்க படுத்த படுகிறார்கள் என்பதே உண்மை . அநேகமாய் இனி காசு இருப்பவனே தண்ணீர் குடிக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் . ஏற்க்கனவே நடுத்தர மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க பழகி விட்டார்கள் .நான் மதுரையில் இருக்கும் பொழுது ஒவொவொரு கடிக்கும் வெளியே தண்ணீர் வைத்து இருப்பார்கள் , நாம் போய் குடித்தால் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் முன்பெல்லாம் .இப்பொழுது தண்ணீர் என்று கேட்டால் வாட்டர் பாக்கெட் ஒரு ருபாய் என்று சொல்கிறார்கள் . மேல் இருப்பவன் சொகுசாய் இருக்க கீழ் உள்ளவன் அதிகமாய் சுரண்டப்படுகிறான்

நீச்சல் குளமும் தண்ணீர் சிக்கனமும்

ECR ரோடு பங்களாவில்
நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார் நடிகர் ஒருவர் ...........
குளித்து முடித்து
"அடுத்தது என்ன " என்று உதவியாளரிடம் கேட்டார்
"இன்னைக்கு கோக் விளம்பரம்" என்றார் ....
"அப்புறம் வேற எதாவது நிகழ்ச்சி இருக்கா"
" அப்புறம் தண்ணீர் சிக்கனத்த பத்தி பேசணும் "
இரண்டு இடத்திலும் நடிக்க கிளம்பினார் நடிகர் ............
சேரியில் தண்ணீர் சிக்கனம் பற்றி பேசினார் .........
காலையில் மறுபடியும் நடிகர் நீச்சல் குளத்தில் நீந்த ..........
கைதட்டிய கூட்டம் லாரி தண்ணீர் வாங்க சண்டை
போட்டுகொண்டிருந்தது ..........!

Monday, 24 May 2010

ரஜினிகாந்த் படங்களும் உற்பத்தி முறைகளும்ரஜினிகாந்த் இன்றைய தேதியில் ஒரு சூப்பர் ஸ்டார் . அவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கின்றனர், திரைஅரங்கில் கூட்டம் கூட்டமாய் மக்கள் செல்கின்றனர் . இன்று வரும் இளம் நடிகருடன் போட்டி போடுவது அவரின் பலம் . தமிழகத்தில் பெருவாரியான ரசிகர்கள் ரஜினி ரசிகர்களே, ரஜினி படங்களை ஏன் ரசிக்கிறோம் என்பது மூலம் தமிழகத்தின் ரசனை முறை எப்படி உள்ளது என்பதை சொல்ல முடியும் . சில பேர் கேட்கலாம் ரசனை முறை எப்படி இருந்தால் என்ன என்று , படம் நன்றாய் இருக்கிறதா பார்த்தோமா கைதட்டினோமா என்று இருக்க வேண்டுமென்று ???? ஒரு நாடு கலையில் எப்படி இருக்கிறதோ அப்படியே அந்நாடு மற்ற விடயங்களில் இருக்கும் . கலையை எப்படி ரசிக்கிறோமோ அதைப்போலவே நம் அரசியல் பார்வையும் இருக்கும் . பெருவாரியான மக்கள் ரஜினி ரசிகர்கள்,அதனால் ரஜினி படங்களை ஆய்வு செய்வது ஓரளவு தமிழ் மக்களின் மனநிலையை ஆய்வு செய்வது போன்றது.

அபூர்வ ராகம் துடங்கி இன்றைய எந்திரன் வரை அதிர்வுகளையும் கரகோஷங்களையும் ஏற்படுத்தும் superstar. படம் துடங்கும் பொழுது S U P E R என்று தனி தனியாக போடும் பொழுதே அரங்கம் அதிர ஆரம்பிக்கும் . யார் இந்த சூப்பர் ஸ்டார் ஏன் இவ்வளவு ரசிகர்கள் .அவர் உச்சத்தில் இருந்த காலம் 90 முதல் 2005 வரை வைத்துக்கொள்ளலாம் .அவரை உச்சத்தில் வைத்த படம் பாட்ஷா, அதற்க்கு முன் எஜமான் மன்னன் உழைப்பாளி தளபதி அண்ணாமலை போன்ற படங்கள் பண்ணி இருந்தார் . எப்பொழுதுமே ஒரு கலைவடிவம் உற்பத்தி முறையை
சார்ந்தது . நம் இந்தியா பாதி நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறையையும் பாதி முதலாளித்துவ உற்பத்தி முறையையும் சார்ந்தது. நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறை என்பது பண்ணையார் விவசாயி உற்பத்தி முறை , முதாலளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளி தொழிலாளி உற்பத்திமுறை . இந்த இரண்டும் சேர்ந்த கலவையாக ரஜினி படங்களில் பிரதிபலிக்கும்.

நிலப் பிரபுத்துவம் உற்பத்தி முறையில் ஒரு பண்ணையார் இருப்பார் , அவருக்கு கிராமத்தில் அதிக சொத்து இருக்கும் ,அவரை ஊரே வணங்கும். இந்த மாதிரி காட்சிகளை ரஜினி படங்களில் காணலாம் . உதாரணமாய் எஜமான் என்ற படத்தை எடுத்துக்கொள்வோம் "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வச்சோம்" என்பது நிலப் பிரபுத்துவத்தின் அடிமை தனத்தை காட்டுகிறது . ஊருக்குள் பண்ணையார் சொன்னால் கேட்க்கும் பாமர மக்கள் அதை பிம்பத்தில் பார்க்கும் பொழுது விசில் அடிக்கிறார்கள் . ஏன் அவர் பிந்தைய படங்களான முத்து , அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் கூட காணலாம் . ரஜினிகாந்த் பெரிய வீட்டு பையனாய் இருப்பார்கள் , ஊரே வணங்கும் இந்த கலைவடிவம் நிலப் பிரபுத்துவத்தின் வடிவம் . உற்பத்திமுறை எப்படி இருக்கிறதோ அப்படி தான் கலையின் வடிவம் இருக்கும்.

நிலப் பிரபுத்துவமில் மக்கள் கிராமத்திலேயே ஒரு பண்ணையாரிடம் அடிமையாய் இருப்பார்கள் , இந்த கருத்தை சொல்வதை போல் ஒரு பாடல் முத்து படத்தில் "ஒருவன் ஒருவன் முதலாளி , உலகில் மற்றவன் தொழிலாளி" இது எந்தவிதமான கருத்தை சொல்கிறது . இந்த உற்பத்தி முறையில் மக்கள் ஒருவரிடம் அடிமையாய் இருக்கிறார்கள் , கிராமத்திலே கூலி விவசாயியாய் இருக்கிறார்கள் , இயல்பிலேயே பெண் அடிமைத்தனம் இருக்கிறது , ரஜினி படங்களில் இயல்பாய் பெண் அடிமைத்தனத்தை காணலாம் , நம்மை போன்ற ரசிகனும் அதே பின்புலத்தில் வருவதால் கை தட்டி மகிழ்கிறான் . " பொம்பள பொம்பளையா இருக்கணும் " " பொண்ணு வீட்ட விட்டுவெளில
போன கெட்டு போய்டுவா" என்று அனைத்து படங்களிலும் பெண்களுக்கு எதிரான ஒரு வசனமாவது வைத்து கை தட்டு வாங்குவார் சூப்பர் ஸ்டார் .

95 பிறகு உலகமயமாக்கல் எல்லாம் கலைவடிவங்களில் தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன . மக்களுக்கு தனிமனித கதாநாயகன் தேவை படுகிறான். பொது மக்கள் பிரச்னையை பேசுபவன் தேவை படுகிறான் . உதிக்கிறார் பாட்ஷா கஷ்டப்படுபவருக்கு ஒரு அவதாரமாய் வருகிறார். அரசாங்கம் செய்யும் வேலையை தான் செய்து மக்களிடம் பேர் வாங்குகிறார் . மக்கள் போராடாமல் இருக்க வழி செயக்கிறார் , மக்கள் சார்பாய் இவர் இருக்கிறார் என்பதே முதலாளிகளுக்கு துணையாய் இருக்கிறது . எப்படி ???? ஒரு அரசிற்கு மக்கள் கேள்வி கேட்க்க கூடாது , மக்கள் எழுச்சி அடைய கூடாது , அதனால் பிரச்னையை தீர்த்து வைக்க அவதாரம் வரும் என்ற நம்பிக்கையும்
டான் பாட்ஷா வருவார் என்ற நம்பிக்கையும் இந்த கலை மூலம் விதைக்கப்படுகிறது. மக்களும் தன்னால் ஒரு விடயம் முடியவில்லையே தனிமனிதனாய் இருந்து ரஜின்காந்த் எவ்வளவு சாதிக்கிறார் என்பதை ரசிக்கின்றனர்.

2000 பிறகு முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருக்கிறது சமூகம் . முதலாளித்துவத்தால் மக்களுக்கு 12 மணிநேரம் மேல் வேலை சுரண்டப்படுவது , நகர்மயமாக்கல் எல்லாமே மிக இயல்பாய் நடக்கிறது , மக்கள் எந்திரன்களாய் இருக்கிறார்கள் அவர்களுக்கு மன அமைதி தேவை படுகிறது. அந்த நேரத்தில் தான் ஊரெங்கிலும் தியான வகுப்புகள் நடக்கின்றன . Corperate சாமியார்கள் நித்யானந்தா , ரவிசங்கர் போன்றவர்கள் உருவாகிறார்கள் .சாய்பாபா , ரமண மகரிஷி போன்றவர்களுக்கு பக்தர்கள் அதிகரிக்கிறார்கள் , ஏன் ???????Stress வேலை நேரம் மன அமைதி வேண்டும் . சம்பாதித்து கொண்டு A /C பார்களில் மாப்ள வாழ்க்கையல ஒன்னும் இல்ல டா என்று பலர் தத்துவம் பேசும் நேரம் . அந்த நேரத்தில் அந்த உற்பத்தி முறையின் கலைவடிவமாய் பாபா என்ற படத்தை வெளியிடுகிறார் ரஜினிகாந்த் . படம் முழுக்க ஆன்மிக கருத்துக்கள்.

கடைசியாய் வந்த சிவாஜியை பார்ப்போம். சிவாஜி இங்கு NGO போல செயல்படுகிறார் , NGO என்பது முதலாளித்துவத்துக்கும் அரசிற்கும் சாதகமாய் இருப்பது .மக்கள் இயல்பிலேயே எழுச்சி அடையும் பொழுது , அவர்களை எழ விடாமல் உங்களுக்காய் நான் தட்டிகேட்கிறேன் என்று உள்ளதை கெடுத்துவிட்டு போவது .
அப்படி எல்லாம் ஒரு தனிமனிதன் ஒரு விடயத்திற்கு தீர்வு சொல்ல முடியாது . மக்கள் இயல்பாய் எழுவதை இந்த NGO இயல்பாய் மட்டுப்படுத்துகிறது , ஒரு பிச்சைக்காரன் உழைக்க முற்படும் பொழுது அவனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து மேலும் பிச்சைக்காரன் ஆக்குகிறது . நீயெல்லாம் உழைக்க வேண்டாம் , உனக்கு நான் இருக்கிறேன் போரடதே , நான் போராடுகிறேன் என்று நீர்த்து போக செய்கிறது . அந்த NGO வேலையை சிவாஜி பார்க்கிறார் அந்த சமயத்தில் ஊரெங்கும் NGO . இப்படி ரஜினி படங்கள் உற்பத்தி முறையைபிரதிபலிக்கின்றன. இது ரஜினியை குறைசொல்வதாய் இல்லை , நம் உற்பத்தி முறை கேவலாமாய் இருக்கிறது சமூகம் கேவலாமாய் இருக்கும் பொழுது அந்த படைப்பும் அப்படியேஇருக்கும் .

ரஜினி என்பவர் உச்சம் என்பதால் இதை ஆய்விற்கு எடுத்துக்கொண்டேன். நம் உற்பத்தி முறை எப்படி இருக்கிறதோ அதை சார்ந்தே நம் கலை , மதம் , கருத்து அனைத்தும் இருக்கும்.

Sunday, 23 May 2010

என்னோடு வா வீடு வரைக்கும்"இன்னிலேர்ந்து அவல மறந்திடணும்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்
பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவள் பெயரை சொல்லி யாரோ கூப்பிட சட்டென
திரும்பினேன் . யாரோ ஒரு பெரியவர் குழந்தையை வைத்துக்கொண்டிருண்டார் .
அந்த குழந்தைக்கு இவன் காதலியின் பெயர் ....அதை முறைத்து பார்த்தேன் .....அது என்னை பார்த்து ஏளனமாய்
சிரித்தது . கீழே இறங்கினேன் யாரோ ஒரு பெண் அவள் சாயலிலேயே இருந்தால் ......மறுபடியும் அவள் நியாபகம்
வந்தது. வானம் கருத்துக்கொண்டு மேகம் முட்டிக்கொண்டு வந்தது . அவன் காதலித்த நாட்களில் மழை ஒரு குறியீடாய்
இருந்தது . அந்த மழையிலும் நீச்சல் அடித்துக்கொண்டு அந்த தெருவுக்குள் நடந்து கொண்டே இருப்பேன் .................................
அதனால் மழை இவன் காதலை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாய் நினைப்பேன் ...................................
மழையை விட வெயில் குறியீடாய் இருந்திருந்தால் காதல் நிலைத்து இருக்குமே என்று நினைப்பேன் .....................

சரி என்று டீ கடை முன்பு உட்கார்தேன் ..................டீ கடை முன்பு "குஷி" படம் ஓடிக்கொண்டிருந்து ........ ஆரம்ப கட்ட காட்சிகள்
இவன் காதலித்து 2005 அந்த வருடமே பிரிந்தது கசந்தது . ஆனால் இது 2010 இன்னுமா காதல் தொடர்கிறது இன்னும் அவள் அலைகள்
அடித்துக்கொண்டே இவனை சல்லடை ஆக்குகின்றன. அவள் வெளிநாட்டில் படிக்க போய்விட்டாள் , ரொம்ப நாள் மறந்த காதலை வாரணம் ஆயிரம்
படம் நியாபக படுத்தியது அதில் இருக்கும் கிருஷ்ணன் சொல்வாரே " அமெரிக்க என்ன டா இங்க தான் இருக்கு " என்பாரே அந்த விடயம் இவனுக்குள்
எதோ பண்ணியது .............அமெரிக்க போகலாமா என்று யோசித்தான் ......... அப்புறம் விட்டு விட்டான் . மறுபடியும் மழை பெய்கிறது , யாரோ ஒருவர்
"குஷி" படம் பார்க்கிறார் , யாரோ ஒரு குழந்தைக்கு அவளின் பெயர் , அதுவும் கூப்பிடும் பொழுது என் காதில் விழ வேண்டுமா , யாரோ ஒரு பெண்அவளை
போலவே இருக்கிறாள் , யாரோ ஒரு பெண் அவள் அணிந்த ஆடைகளை உடுத்திகிறாள் நான் அவள் ஆடையை பார்க்க நான் தப்பானவனோ என்று நினைத்து
முறைத்துப்பர்க்கிறாள் .

சரி இப்படி எல்லாம் நடந்துக்கொண்டே இருந்தது . எப்படி வெளியே வர என்று தெருவிற்குள் நுழைத்தேன் . என் காதலி எதோ ஒரு வேனில் இறங்கினாள்.
பச்சை நிற புடவை அணிந்து இருந்தாள் . இருவர்க்கும் அதிர்ச்சி ????இதற்க்கு முன்னால் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவள் வருகிறாள் ஊரில் இருந்து
வந்திருக்கிறாள் என்பதை குறியீடாய் சொன்னதா ????நான் நினைப்பது போல் அவளும் நினைத்து இருப்பாளா??? வெயில் சுளீரென்று அறைந்தது ..................
நிஜம் வெயில் , மழை எல்லாம் எதோ ஒரு காலம் தான் வரும் என்றது , வெயிலுடன் பேருந்தில் அலுவல் போக ஏறினேன்

பிறந்த நாள் சிறப்பு பதிவு

இன்று எனது பிறந்தநாள் , பதிவுலகத்திற்கு வந்து முதல் பிறந்த நாள் . பதிவுலகத்தில் வந்து என்ன சாதித்து விட்டேன் ????? வந்த புதிதில் கதை கவிதை என்றெல்லாம் எழுதுவேன் , நல்ல அங்கிகாரம் கிடைத்தது . அனைவருக்கும் பின்னூட்டம் போடுவேன் , ஆனால் பின்னூட்டம் போடுவது வாக்களிப்பது இங்கே அரசியல் என்று புரிய ஆரம்பிக்க , நண்பர்களின் பதிவுகளை படிக்கறேன் ஆனால் பின்னூட்டம் அல்லது வாக்களிப்பதில்லை. என் பிறந்த நாள் அன்று தான் என் காதலை சொன்னேன் . அது என்னனென்னமோ ஆனது. பிறந்ததிலிருந்து நிறைய தோல்விகளை சந்தித்து விட்டேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு வலி மட்டும் உள்ளது , மே தின பதிவு போட்டேன் , அது வரை நான் சொல்லவில்லை என்றாலும் நான் யாருக்கும் பின்னூட்டமே போடவில்லை என்றாலும் எனக்கு பதினைந்து முதல் இருபது வாக்கு வரும்
மக்களுக்காக போராடும் தோழர்களுக்கு ஆதரவாய் எழுதியவுடன் " அவனா நீ ????" என்ற தொனியில் யாரும் படிக்க வருவது இல்லை , எனக்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல , ஆனால் விவாதம் செய்யாமலேயே ஓடுவது தவறு , படியுங்கள் கருத்து இருந்தால் மோதலாம் , உங்கள் கருத்தோ என் கருத்தோ வெற்றி பெரும் ,ஆனால் விவாதம் செய்தே பல விடயங்களை மாற்றிக்கொள்ளலாம் . முன்பெல்லாம் சாமி கும்பிடுவேன் இப்பொழுது கும்பிடுவதில்லை , முன்பெல்லாம் அஜித் என்ற பிம்பம் வசீகர படுத்தும் , ஆனால் இப்பொழுதெல்லாம் அதனால் ஒரு பயனும் இல்லை , அஜித் என்னும் தனிமனிதர் சமூகத்திற்கு என்ன செய்தார் என்று தோழர் கேள்வி கேட்டார் ???? சரியாக தான் இருந்தாது , எந்த ஒரு தலைவனும் தனிமனித சாதனை வைத்து தலைவனாக கூடாது , சமூகத்திற்கு என்ன பயன் என்று யோசிக்க வேண்டும் . இரண்டு வருடம் முன்பு வரை சச்சின் ரசிகன் , எப்பொழுது கிரிக்கெட் வியாபாரம் என்று தெரிந்ததோ விட்டு வந்துள்ளேன் , எதிர்த்து பதிவு கூட போட்டேன் .

விவாதம் செய்வதால் நன்மைகள் அதிகம் , நான் விவாதம் செய்தே கற்றுகொண்டிருக்கிறேன் . முன்பெல்லாம் நான் சொன்னதே சரி என்பேன் ,விவாதம் செய்யாமல் சண்டை போடுவேன் . ஆனால் இப்பொழுது விவாதம் மட்டுமே செய்கிறேன் பொறுமையாய் பதில் சொல்கிறேன் .
தோழர்கள் ஆதரவாளர்கள் என்றவுடன் ஒதுக்குவது தவறு . இந்த பதிவு துறை நமக்கு நல்ல வாய்ப்பு . நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் .எல்லாராலும் சரியானா பார்வை பார்க்க முடியாது , விவாதம் செய்வது மூலம் நாம் சரியான பார்வைக்கு வருவோம் . IT துறையில் குரூப் discussion எதற்கு வைக்கிறார்கள்??????? நாம் விவாதம் செய்வோம் பரிமாறிக்கொள்வோம் .

"தோல்விகள் என்னை ஒன்றும் செய்யாது , என்னென்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல ஆயிரம் முறை தோற்றவன் "

Friday, 21 May 2010

தொலைக்காட்சியும் 75000 மக்கள் தொலைந்த காட்சியும்

மன்னார் மாவட்டம் நாச்சிகூடா பகுதியில் தோண்ட தோண்ட பிணங்கள் வருகிறதாம் . இதை போல பல காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . ஒரு போராளியை துன்புறுத்தி வெட்டிக்கொன்று இருக்கிறார்கள் .75000 பேர் காணமல் போய் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.கன்னி வெடி இருக்குமோ என்ற ஆராச்சி செய்த வெளிநாட்டவர் அதிர்ந்து இருக்கிறார்கள் .சரி இது இணையத்தில் படிப்பவருக்கு தெரிகின்றது , TV பார்க்கும் பாமரனுக்கு இந்த செய்திகள் வேண்டுமென்றே மறைக்கபடுகின்றன . ஊடகங்கள் இன்று நடந்த மங்களூர் விமான விபத்தை பெரிதுபடுத்தி காட்டுகின்றன , வயலின் எல்லாம் வாசிக்கிறார்கள் என்று நண்பன் சொன்னான்???? பக்கத்தில் ஒரு இனம் அழியும் பொழுது மௌனமாய் பார்த்து ரசித்த இணையம் , விமான விபத்தை பதிவு செய்கிறது வேடிக்கை .

ஊடகங்களின் பங்கு எந்த அளவு இருக்கின்றன ,தமிழ் சினிமா ஏன் தோல்வியில் இருக்கிறது என்று ஒரு ஊடகம் முக்கியமான விடயத்தை பேசுகிறது .குஷ்பூ தான் HOT டாக் , கொஞ்சா நாள் முன்னால் IPL , நித்யானந்த , இவர்களுக்கு பேச காசு பார்க்க எதையாவது அசை போட ஏதாவது ஒன்று வேண்டும்.இந்த ஊடகங்கள் மக்களை முட்டாளாக்க வைக்க பல சதிகள் செய்கின்றன . இவன் சொல்வது தான் செய்தி ,மக்களிடம் தொடர்ந்து மந்த புத்தி வளரஇந்த ஊடகங்களே காரணம் என்று சொல்லுவேன் . இந்த ஊடகங்கள் மூலம் நுகர்வு கலாச்சாரம் திணிக்கபடுகிறது.

சரி இந்த ஊடகங்கள் ஏன் வேண்டுமென்றே சில செய்திகள் சொல்கின்றன வேண்டுமென்றே சில செய்திகளை மறைக்கின்றன. ஊடகங்கள் ஆளும் மக்களின்ஊதுகுழல் . இலங்கையில் பிரச்சனை என்றால் தமிழகத்தில் எழுச்சி ஏற்ப்படும் , அதை மட்டுப்படுத்த வேண்டும் . இங்கே முத்துக்குமரன் இறந்தது தமிழக மக்களிடையே
வேண்டுமென்றே பரப்பபடவில்லை . எந்த ஒரு எழுச்சியையும் அரசு விரும்பாது , எங்கெல்லாம் எழுச்சி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஊடகம் வைத்து எழுச்சியைகட்டுப்படுத்தும். அதனால் தான் ஆளுவது காங்கிரஸ் , மன்னார் செய்தியை கலைஞர் தொலைகாட்சி போடுமா என்ன????????

நித்யனந்தவின் காம லீலைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கியது சூரிய குழுமம் , இந்த மன்னார் விடயத்தை ஏன் போடவில்லை என்பதில் ஆச்சர்யம் . கலைஞர் டெல்லி சென்று சோனியா அம்மையாரை மகன் அமைச்சர் ஆகா வேண்டும் என்று சக்கர நாற்காலியில் பார்க்கிறார் . இன்னொரு சமயம் அழகிரி ஒழுங்காய் பாராளுமன்றம் போக வில்லையாம் என்பதற்காய் ஒரு சிறு குழந்தையின் படிப்பிற்காக ஆசிரியரை பார்ப்போமே அது போல
மறுபடியும் சோனியா அம்மையாரை பார்க்கிறார் . ஒரு இனம் அழிந்து இருக்கிறதே அங்கே சென்று பார்க்க வேண்டியது தானே . கலைஞர் வந்தால் ஊடகங்கள் அவரை தொடரும் , மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்ப்படும் என்று தெரியாதா முதல்வருக்கு.

அரசியல் பேசாமல் இருப்பது கூட அரசியல் தானே??? இப்பொழுது சன் குழுமமோ ஜெயா தொலைகாட்சி கலைஞர் தொலைகாட்சி காட்டாமல் இருக்கிறது என்றால் இவர்கள் ராஜபக்ஷே ஆதரவாளர்கள் என்பதே உண்மை.உண்மைக்கு துணை நிற்க மாட்டேன் , நான் யார் பக்கமும் இல்லை என்பதே பொய்க்கு துணை நிர்ப்பது போன்றது .
பதிவர்கள் சிலர் நல்ல விடயம் என்று நினைத்து அழகான கவிதை எழுதுகிறார்கள் கதை எழுதிகிறார்கள் , இதை போல பேசினால் யாரும் வந்து படிப்பதில்லை . ஏன் யாரும் படிக்கவில்லை என்று யோசித்தால் அவர்களிடம் இருந்து வரும் பதில் "எனக்கு அரசியல் பிடிக்காது ஆனால் நல்லது செய்வேன்" என்பது . அப்படி அரசியல் இல்லாமல் நல்லது செய்ய முடியாது என்பதே உண்மை . நீங்கள் தப்பை தட்டிகேட்க்கவில்லை என்றாலே எதிரிக்கு துணை போகிறீர்கள் என்று அர்த்தம் . இங்கே கலைஞர் செய்வதை தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம் , சில விடயங்களை நாம் உரக்க பேசுவதில்லை.

காதல் பயண சீட்டு


பஸ்சுக்குள் ஏறிய
காதலன் இரண்டு பயணசீட்டு
கேட்டேன்
"ஒருத்தன் தானப்பா ஏறின" என்றார் நடத்துனர்
"என் காதலி இதயத்தில் இருக்கிறாள் அவளுக்கும் சேர்த்து "
என்றேன்
வெறிக்க பார்த்தான் ..................!!!
இரண்டு டீ என்றேன் ................................
இரண்டு சாப்பாடு என்றேன் ...............................
ஊரில் இருந்து காதலி திருபியவுடன்
பெருமையாக சொன்னேன் இதெல்லாம்
பொறுமையாக காதலி சொன்னால்
" நாம் இருவரும் ஒன்று தானே எதற்கு இரண்டு இரண்டு என்று
கேட்டாய் நீ என்னை காதலிக்கவில்லையா" எனறாள்

Thursday, 20 May 2010

ஒரு நாயகன் உதயமாகிறான்

"எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுது இறைவன் தோன்றுவார் " போன்ற பொன்மொழிகள் வாசகங்கள் நம் மதங்களிடம் உண்டு.மனிதனை காப்பாற்ற எப்பொழுதுமே ஒரு கடவுள் தேவைப்படுகிறார் , அது ராமர் உருவத்தில் வரலாம் பட கதாநாயகனாக கூட இருக்கலாம். சமூகத்தை கதாநாயகன் திருத்தும் படங்கள் மாபெரும் வெற்றி பெற்று உள்ளன . இந்தியன், ரமணா, gentle man ,நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மிகவும் வெற்றி பெற்றன .

அப்படி தனிநபரால் ஒரு சமூகத்தை மாற்ற முடியுமா என்ன?? இது மறைமுகமாய் கடவுள் இருக்கிறார் போராடாதே என்பதை போல் , மனிதர்களே நீங்கள் போராட வேண்டாம் உங்களுக்காய் M G R ரஜினிகாந்த் வந்து போராடுவார்கள் என்பதை போல் உள்ளது. இது வெறும் படம் சார்ந்த பிரச்சனை அல்ல , மக்களின் பொதுபுத்தி. இங்கே தனிநபர் வழிபாடுகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஏன் இங்கு M G R , கலைஞர் , அம்மா போன்றவர்கள் கூட தனிநபர்களே , யாரோ ஒரு தனிநபர் தான் ஆளவேண்டும் , நாமெல்லாம் அவர்களுக்கு அடிமை போன்ற எண்ணத்தில் மனிதர்கள் மனதளிவிலே பழக்கபடுத்தபட்டு இருக்கிறார்கள் .

தனக்கு ஒன்று என்றால் கதாநாயகன் சினிமாவில் வருவான் என்பதை போல தினசரி வாழ்விலும் மக்கள் அதை எதிர்ப்பார்கின்றனர் . கடவுள் என்ற தனிநபர் போல கதாநாயகன் அனைவரையும் வீழ்த்திவிட்டு சிம்மாசனத்தில் ஏறி ஆட்சி புரிவான் என்ற மாயையில் இருக்கின்றனர் மக்கள் . ரமணா படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் விஜகாந்த் ஊழலுக்கு எதிராய் பாடுபடுவார். ஒவ்வொரு துறையிலும் பதினைந்து பேரை பிடித்து அதிகம் லஞ்சம் வாங்கியவனை கொலை செய்வார். நமக்குள் இருக்கும் ரசிகன் எழுந்து நின்று கைதட்டுகிறான் , ஏன் கைதட்டுகிறான் என்பது முக்கியம் , அவனுக்கு விஜயகாந்த் போல யாரோ ஒருவர் அவனை விடுதலை செய்ய சமூகத்துக்கு வழிகாட்ட தேவைபடுகிறார்கள்.அப்படி தேவைபடுவதால் எழுந்து நின்று கைதட்டுகிறான்

அப்படிப்பட்ட சாமான்யனுக்கு அவனுக்கு உண்டான தீர்வு சாமூகத்திடம் இருக்கிறது என்று தெரிவதில்லை . மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடினால் தான் தீர்வு என்பது தெரிவதில்லை தனிநபர்கள் தனிநபர்களே , எல்லா கையும் தட்டினால் மட்டுமே ஓசை . மக்கள் எங்கெல்லாம் ஒன்று கூடுகின்றனரோ அங்கு எல்லாம் எழுச்சி ஏற்படுகிறது . இத்தகைய தனிநபர் ஹீரோயிசம் அந்த மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கிறது. ஒரு ரமணா , அல்லது இந்தியன் போன்ற படங்கள் பார்ப்பதற்கு முற்போக்காய் இருந்தாலும் பிற்ப்போக்கான கருத்துக்களை வைக்கின்றனர் , உங்களுக்காய் கதாநாயகன் வருவான் என்பதும் , உங்களுக்காய் கடவுள் வருவார் என்பதும் ஏறக்குறைய ஒன்றே . கடவுளும் வரப்போவதில்லை கதாநாயகனும் உருவாகப்போவதில்லை என்பதே நிஜம் . கடவுள் வருவார் என்பது எப்படி எழுச்சியை மட்டுப்படுத்துகிறதோ அதை போலவே இந்த தனி கதாநாயகன்கள். ஒரு MGR இல்லை கடவுள் ராமர் இல்லை ராகுல்காந்தி போன்றவர்கள் மக்களை காப்பாற்ற போவதில்லை . மக்கள் சேர்ந்து எழுந்தால் மட்டுமே இதற்க்கு தீர்வு . மக்கள் எழ வேண்டும் என்றாலே இந்த தனிநபர் துதிபாடலை விடவேண்டும்.
தனியாய் யாரோ ஒருவன் பிறந்துவர மாட்டான் கடவுளும் பிறந்து வரமாட்டார் , அனைவருக்கும் உண்டான தீர்வு அனைவரும் ஒன்றுபட்டு அரசியல் உணர்ந்து போராடுவதிலே மட்டுமே சாத்தியம்

Wednesday, 19 May 2010

மதங்களும் உட்கருத்துக்களும் - பகுதி ஒன்று

"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்றது
ஒரு மதம்........!
உட்கருத்து
"வேலை செய்தாலும் ஊதியத்தை எதிர்பார்க்காதே "

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு "
மற்றொரு மதம்...........!
உட்கருத்து
" ஒரு பக்க பையில் இருந்து சுரண்டி விட்டால் மற்றொரு பையை காட்டு சுரண்ட "

"உன் தலையில் என்ன எழுதப்பட்டதோ அதை போலவே நீ மாறுவாய் "
இன்னொரு மதம்....!

உட்கருத்து
எல்லாம் தலை எழுத்து போல் நடக்கும் சுரண்டப்படாலும் போரடதே எல்லாம் விதிக்கப்பட்டது

Monday, 17 May 2010

பிரபாகரனுக்கு வீர வணக்கம்மாவீரன் பிரபாகரன் இறந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. சிலர் அவர் உயிருடன் இருக்கார் என்று சொல்கிறார்கள் , சிலர் மறுக்கிறார்கள் . எப்படி இருந்தாலும் பிரபாகரனுக்கு வீர வணக்கம். புலிகளின் அரசியல் நிலைப்பாடை தாண்டி மக்களுக்காக அவர்கள் நின்றார்கள் என்பதில் பிரபாகரன் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு . இங்கு நடக்கும் வாக்கு சீட்டு அரசியல் போல இல்லாமல் எதிரியை நேருக்கு நேராய் நின்று போராடியவர் பிரபாகரன் அவர் ஒரு போராளி. அவர் இறந்ததை வடக்கத்தி ஊடகங்கள் கொண்டாடினா???? இலங்கைமக்கள் எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் அரசியல்வாதிகளோ பிரபாகரனை வைத்து எவ்வளவு ஆதாயம் தேட முடியுமோ அதை செய்தனர்.

ஏன் முத்துக்குமரன் இறந்ததை கூட பெரிய அலைகளை ஏற்ப்படாமல் பார்த்துக்கொண்டனர் இன்று பிரபாகரனுக்கு வீர வணக்கம் கூட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் .முத்துக்குமரன் சவத்தை வைத்து போராடி இருக்க முடியும் , ஆனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட அவர்கள் விரும்பவில்லை . பிரபாகரன் என்ற பெயரை வைத்து வாக்கு மட்டும் வேண்டும் ஆனால் அங்கே எந்த மாற்றமும் வரக்கூடாது என்பதிலே முனைப்போடு செயல்பட்டனர் செயல் வீரர்கள் . தமிழகத்திலே இரண்டு விதமான அரசியல்வாதிகள் பார்க்க முடியும் ஒன்று நேரடியாய் எதிர்ப்பவர்கள் இன்னொன்று அதரவு தருவது போல் பேசிவிட்டு ஈழ பிணங்கள் வைத்து அரசியல் ஆதாயம் தேடி , யார் ஈழ போருக்கு காரணமோ அவர்களிடமே கூட்டணி வைத்து கொண்டிருப்பவர்கள்.

இனியாவது ஈழத்து சகோதரர்கள் இவர்களை நம்பி செயலில் இறங்கக்கூடாது . பிரபாகரன் அவர்கள் மீது மதிப்பு மரியாதை உண்டு ஆனால் அவர்கள் அரசியல் பார்வையில் இருந்து வேறுபடுகிறேன் . எந்த ஒரு நாட்டின் புரட்சியோ வெறும் துப்பாக்கி ஏந்தி நடத்த முடியாது , துப்பாக்கி தூகவது முக்கியம் அல்ல , மக்களை அரசியல் படுத்தி இருக்க வேண்டும். ஈழ தமிழனும் தமிழக தமிழனும் மொழியால் ஒன்றாய் இருந்தாலும் அவனுக்கு இருக்கும் உணர்வு இங்கே வர சாத்தியம் இல்லை. பிரபாகரன் அவர்கள் அங்கு இருக்கும் மக்களை அரசியல்படுத்தி இருக்க வேண்டும் . துப்பாக்கியை மக்கள் சார்பாக இவர்கள் தூக்குவதை விட , மக்களுக்கு உண்டான புரட்சியை அவர்களே செய்ய வைக்க வேண்டும் , அதற்க்கு அவர் தலைமை தாங்கி இருக்க வேண்டும் .

எந்த ஒரு புரட்சியுமே மக்களால் முடிவு செய்யப்பட்டது . சே அவர்களால் கியூபாவில் சாதிக்க முடிந்த விடயத்தை இன்னொரு நாட்டில் செய்ய முடியவில்லை . சே என்னும் தனிமனித சாகசங்களும் கொரிலா யுத்தம் இது மட்டுமே கை கொடுக்கவில்லை கியூபாவில் மக்கள் அரசியல்படுத்த பட்டு இருக்கிறார்கள் . அங்கே புரட்சி செய்ய முடியும் , ஆனால் பொலிவியாவில் சே ஒன்னும் செய்ய முடியவில்லை . மக்களுக்கான புரட்சிக்கு மக்கள் கூட நிற்க வேண்டும், அதை விடுத்து அவர்கள் மேற்ப்பார்வையில் இவர்கள் சண்டை மட்டும் செய்வதால் பயன் இல்லை.

எந்த ஒரு புரட்சியிலும் மக்களை ஒன்று திரட்டவேண்டும் . அவர்களுக்கு அரசியல் அறிவை புகட்ட வேண்டும் . ஆயுதம் ஏந்துவது கூட தவறல்ல , ஆனால் யார் ஏந்துகிறார்கள் என்பது முக்கியம் . இங்கே மக்களுக்காக புலிகள் ஆயுதம் ஏந்தினர் , ஆனால் புலிகளும் மக்களும் ஒன்று என்ற நிலைமை வந்து அனைத்து மக்களும் போராடி இருந்தால் இப்படி பட்ட சுழல் ஏற்பட்டு இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு புரட்சி என்பதை குழுக்கள் முடிவு செய்வதில்லை மக்களே முடிவு செய்வார்கள் .

"ஈழம் தேவை - ஒரு நேர்மையான மீள் ஆய்வு" என்ற புதிய ஜனநாயகத்தின் புத்தகம் ஒன்றை படித்தேன் . ஈழம் பற்றி ஒரு ஆழமான புத்தகம் என்றே நினைக்கிறேன்.பிரபாகரனுக்கு வீர வணக்கம் , ஈழம் பிறக்க வேண்டும் என்றால் அரசியல் ரீதியான முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்றே நம்புகிறான்

Sunday, 16 May 2010

கடவுளிடம் இருக்கும் உலக அரசியல்

தனிநபர் தீர்விலே மக்கள் அதிகம் போகும் இடம் கடவுள் மற்றும் மதங்கள் . ஒவ்வொரு மதமும் கடவுள்களும் மனிதனிடம் நீர்த்து போகும் செயலை செய்துகொண்டே இருக்கின்றன. அதன் வாசகத்திலேயே அரசியல் பதுங்கி இருக்கும். வெறும் கடவுள் என்றால் மூடநம்பிக்கை என்று சொல்வதை விட ஏன் மூடநம்பிக்கை என்று பார்ப்போம் .உதாரணமாய் நாம் பலஇடங்களில் பகவத் கீதை சாரம் என்று கீதா சாரத்தை பார்த்து இருப்போம் அது என்ன சொல்கிறது கூர்ந்து கவனியுங்கள் "எது நடந்ததோ அது நன்றாகவேநடந்தது எது நடக்க இருக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும் ,எதை நீ கொண்டுவந்தாய் கொண்டு செல்ல , ....." இப்படி போகிறது வாசகம் .அதவாது இது மறைமுகமாய் விதி என்று இருக்கிறது என்று உணர்த்துகிறது , அதவாது இங்கு நடப்பது எல்லாமே ஏற்க்கனவே முடிவு செய்யப்பட்டது என்பது போல் கருத்தை சொல்கிறது. ஒரு அரசியல்வாதியோ ஒரு முதலாளியோ சுரண்டினால் கூட நடப்பது மட்டுமே நடக்கும் என்ற எண்ணத்தை விதைக்கிறது , மனிதனின் மாதை நீர்த்துப்போக செய்கிறது .

சரி இந்தகொள்கையால் சுரண்டுபவனுக்கு பாதிப்பு இல்லை , சுரண்டப்படுபவன் பாதிக்கபடுகிறான் . சரி இப்பொழுது ஒரு அரசியல்வாதி சுரண்டிக்கொண்டிருக்கிறான் என்றால் "எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கிறது" என்றால் அதை அதாரிப்பது போல் உள்ளதே . மதங்களை கடவுளை தீவிரமாய் நம்பும் பக்தகோடிகள் இதை கடைப்பிடிப்பதால் தான் சுரண்டப்பட்டாலும் நடப்பது தான் நடக்கும் கடவுள் பார்த்து கொண்டிரிருக்கிறார் என்ற மனநிலை வருகிறது . மக்களிடம் இயல்பாய் வெளிப்படும் கோபம் கூட வீபுதி அடித்து நீர்த்துப்போக செய்யப்படுகிறது .

நம் ஊரெங்கும் கோவில்கள் அதிகமாக அதிகமாக ஊழல்களும் அராஜகமும் அதிகமாகிக்கொண்டே போகிறது . உலகில் உள்ள அனைத்து மதங்களும் அதிகாரம் செய்பவனை அதே இடத்தில வைத்து அழகு பார்க்கிறது அடிமையை போரடவிடாமல் செய்யும் வேலையை நன்றாக பார்க்கிறது என்றே சொல்லவேண்டும் . " ஊசி முனையில் ஒட்டகம் கூட நுழையலாம் , பணக்காரன் சொர்கத்திற்கு செல்ல மாட்டான் " இது பைபிள் வாசகம் . பார்பதற்கு சாதரணமாய் தோன்றினாலும் அதன் உள்ளே ஒரு அரசியல் இருக்கிறது . சொர்க்கம் என்ற ஒன்று பணக்காரனுக்கு இல்லை என்று சொல்கிறது . ஒருவன் சுரண்டப்படும் பொழுது இவ்வாக்கியத்தை சொன்னால் அவன் போராடவே மாட்டான் . சுரண்டப்படும் பொழுது மனதிலே நினைத்துக்கொள்வான் உனக்கு நரகம் எனக்கு சொர்க்கம் என்று.

மறுமை என்று இருப்பதை போல் ஒரு மாயையை மதங்கள் செய்கின்றன. மறுமையில் சொர்க்கம் நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் என்று சாதாரண பாமர மக்கள் நினைத்துக்கொள்வான் , இது சுரண்டுபவனுக்கு வசதியாய் இருக்கும். கடவுள் என்று ஒன்றை நினைத்துக்கொண்டு அதனிடம் புலம்புவதால் மனஅழுத்தம் மட்டுமே குறையும் அதை கடவுள் தான் மனமைதியை கொடுக்கிறார் என்ற ரீதியில் புரிந்துகொள்கிறான் பாமரன் . அதனால் எவன் கடவுளை கும்பிடுகிரனோ அவன் சக மனிதனுக்கு தீங்கு நேர்ந்தால் குரல் கொடுப்பதில்லை , எல்லாமே விதி நாம் எதற்கு குரல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறான் . கடவுள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறாரே நாம் தீர்வு சொல்லமுடியாது என்று நினைக்கிறான் . இந்த கோவிலுக்கு போ அந்த கோவிலுக்கு போ என்று மற்றவனை திருத்தும் வேலையை செய்கிறான்.

எல்லா மதங்களும் இம்மை மறுமை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு மனிதனை நீர்த்து போக செய்கின்றன. எந்த கடவுளும் மனிதனின் தற்காலிக பிரச்சனைக்கு தீர்வு சொல்வதாய் இல்லை, மறுமையில் நீ நன்றாக இருப்பாய் என்று சொல்கிறது. இல்லாத மறுமையை நோக்கி பாமரன் செலுத்த படுகிறான்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வெறும் விவாத பொருள் அல்ல , அதையும் தாண்டி அதன் அரசியலிலே தான் உலகம் இயங்குகிறது.எனக்கு இன்று
கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் ஒரு காலத்தில் பிள்ளையார் என்றால் பிடிக்கும் சிறு நாட்களுக்கு முன்னர் என்றால் சாய்பாபா பிடிக்கும் . பாபாஜி என்றே நண்பர்கள் அழைப்பார்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நானே விஞ்ஞான பூர்வமாய் உணர்ந்தேன் என்பதே உண்மை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல ??? அது எந்த அளவு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது என்பதே பிரச்சனை. கடவுள் என்ற போர்வையில் உலக அரசியல் ஒளிந்துகொள்கிறது. கடவுள் என்ற நம்பிக்கையே சுரண்டுபவனுக்கு சாமரம் வீசுகிறது. ஆதிக்கம் செய்பவன் ஆதிக்கம் செய்துகொண்டே இருப்பான் அடிமை அடிமையாகவே இருப்பான் என்ற வேலையே கடவுள் செய்கிறது. அதனால் இதை வெட்டி விவாதமாய் எடுத்துக்கொள்ள வேண்டாம், கடவுளிடம் தான் உலக அரசியலுக்கு உண்டான சாவி இருக்கிறது. அந்த சாவியை திறந்துப்பார்த்தால் உலகத்திற்கு உண்டான வாசல் திறந்துகிடக்கும் . கடவுளிடம் இருந்து சாவியை பிடுங்குங்கள் மனிதன் மண்ணிலே வாழட்டும்.

Friday, 14 May 2010

தனிநபர் தீர்வு பகுதி இரண்டு

ஒரு பிரச்சனைக்கு தனிமனித தீர்வு சாத்தியமா என்பதை பற்றி பார்த்தோம் , நிறைய நண்பர்கள் விவாதம் செய்தனர் தனி மனித ஒழுக்கம் முக்கியம் என்று சொன்னார்கள். இங்கே பிரச்சனை தனிமனித ஒழுக்கம் அல்ல தனிநபர் தீர்வு. அதாவது ஒரு தீர்வை வைக்கும் பொழுது அதன் பலன் பற்றி யோசிக்க வேண்டும் . உதாரணமாய் தண்ணி அடிப்பபவர்களை பற்றி பேசும் பொழுது தனிநபர் ஒழுக்கம் வந்தது , நான் நண்பர்களிடம் தனிநபர் ஒழுக்கத்தால் இந்த பிரச்சனை தீராது ஒட்டு மொத்த சமூகம் எழுந்திருக்கும் பொழுது தான் தீரும் என்றேன் , என் நண்பர்கள் இல்லை இல்லை ஒரு சமூகம் என்பது தனி தனி
மனிதர்களை சார்ந்தது ஒவ்வொருவரும் தன் பிரச்னையை தீர்த்தால் சமூகம் நன்றாய் இருக்கும் என்கின்றனர்.

நாம் சமூகத்தின் அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல. உதாரணமாய் விளக்க வேண்டும் என்றால், தனி மனித முயற்சியை பற்றி பார்ப்போம். எனக்கு தெரிந்து IT துறைக்காக எத்தனையோ இளைஞர்கள் தெற்கில் இருந்து கிராமத்தில் இருந்து
புலம் பெயர்ந்து வருகின்றனர்.ஒரு தனிமனிதனாய் பார்க்கும் பொழுது அது சமூக வளர்ச்சி போல் தோன்றும், ஒரு சமூகமாய் பார்க்கும் பொழுது அது வீழ்ச்சி பாதையை வகுக்கும். என் மதுரைக்கார நண்பர்கள் பாதி பேர் விவசாய பின்னணியை சேர்ந்தவர்கள் , படிப்பு எழுத்து என்று வந்து IT துறையில் இருக்கின்றனர் . ஓரளவு படிப்பு குறைந்தவர்கள் ஓட்டுனர்களாக சென்னையில் வேலை செய்கின்றனர் அவர்களின் தனிநபர் முயற்சி என்ன ஆகிறது , கிராமங்களை நகர்மயம் ஆக்குகிறது . நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் அந்த தனிப்படவருடைய முயற்சி சமூகத்திற்கு தீர்வாக இருக்க வேண்டுமே இல்லையே. சரி நகர்மயமாவது விவாசாயம் இல்லாமல் போவதால் என்ன காசு சம்பாதிக்கரானே
என்று பேசலாம் , ஆனால் நம்மை கூலி ஆக்குகிறது இந்த சமூக மாற்றம் . IT துறையில் recession நேரத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் இருக்கிறார்கள்.


ஒரு அமெரிக்க மென்பொருளிலே வேலை செய்பவர் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது, recission காலத்தில் அதற்க்கு காரணம் என்ன. மாதம் பத்து லட்சம் வாங்கிவிட்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய முடியாது ????சில பேர் நன்கு திறமையாய் வேலை செய்தாலும் , PROJECT என்று ஒன்று இருந்தால் தானே காசு வரும் PROJECT இல்லாமல் இவன் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய???? அவன் முயற்சி செய்து தான் படித்து இருப்பான் , கிராமத்தில் இருந்து வந்து நகரத்தில் வேலை வாங்கி இருப்பான் . இதற்க்கு என்ன தீர்வு சொல்வீர்கள் அவன் விவாசாயம் கற்று இருக்க வேண்டும் என்று சொல்வீர்களா ???


சரி விவசாயியின் நிலைமை எப்படி உள்ளது விதர்பா போன்ற ஊர்களில் லட்சக்கணக்கில் விவசாயி சாகிறான் , அதே நேரம் IPL பார்க்கும் தேசம் இது. சரி தஞ்சையில் என்ன நடந்தது , இப்படி சமூகத்தில் விவசாயிக்கு ஆதரவு இல்லாத பொழுது தன்மகனை IT துறைக்கு அனுப்புகிறான் ஏழை கிழவன். நிலம் , ஏழை கிழவனின் உழைப்பு அதை மீறி விவாசாயம் என்றால் தவறு நீயாவது ஒழுங்க படித்து முன்னேறு என்று அனுப்புகிறான் ஏழை கிழவன் . ஒரு சமூக மாற்றமே அவனை நிர்பந்தம் செய்கிறது.


இதில் தனிநபர் முயற்சி எவ்வளவு செய்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என்பதே உண்மை. அப்படி தனிநபர் தீர்வை காட்டுபவர்கள் பொருளாதரத்தை மட்டுமே முன்னேற்றத்தின் அளவுகோலாய் பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சரி நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து தான் மென்பொருள் பொறியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதற்காய் இந்தியா முன்னேறிவிட்டதா என்ன???
இந்தியாவில் தான் உலக கோடீஸ்வரகள் இருக்கிறார்கள் இந்தியா இன்றும் கூட முன்னேறிய நாடு அல்ல மற்றவர்க்கு ஒரு சந்தை . குறைவான வேலைக்கு குறைவான கூலிக்கு ஆட்கள் தேவை என்றால் இந்தியாவை பிடியுங்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் உலகம் நம்மை
பார்க்கிறது.

இங்கே தனிநபர் தீர்வு எப்படி சொல்வது,சமூகத்தில் மைய்ய பிரச்சனை என்று ஒன்று இருக்கும் அந்த பிரச்னையை தீர்க்க அணிதிரண்டு தீர்வு காணுவதன் மூலமே தனிமனித பிரச்சனை தீர்க்க படும் . தனிநபர் பிரச்சனை அந்த சமூக பிரச்சினையிலே புதைந்து இருக்கும் , மைய்ய புள்ளி தீர்வடையும் பொழுதே அனைத்தும் விடுதலை பெரும் என்பதே உண்மை.

ஒழுக்கம் என்பதெல்லாம் ஒரு அளவு கோல் மட்டுமே . உதாரணமாய் ஒரு அப்பா தன் மகன் தண்ணி அடிக்கிறான் என்று ஏற்றுக்கொள்ளும் மனது, தன் மகன் சமூகத்திற்காக இறங்கி குரல் கொடுக்கிறான் என்றால் "ஊரார் வம்பு உனக்கு எதுக்கு " என்பார் . இங்கே ஒழுக்கம் எதை சொல்லி தருகிறது அடுத்தவனை கவனிக்காதே நீ பார்த்து முன்னேறிக்கொண்டே இரு என்பதை. பின்தங்கிய ஆண் ஆதிக்க சமூகத்தில் ஆணுடன் பேசும் பெண்களை கேவலமாய் பார்க்கும் மனம் உள்ளது , இங்கே ஒழுக்கம் கெட்டவள் பெண் ????? அப்பொழுது ஒழுக்கம் எங்கு உள்ளது .ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அளவு கோள். நீங்கள் பத்து பேரை கூடிவந்து ஒழுக்கம் பற்றி கேட்டால் ஒவொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்வார்கள் என்பதே உண்மை. ஒழுக்கம் தனிமனிதனுக்கு கூட தீர்வாகாது அப்படி இருக்க எப்படி சமூகத்திற்கு தீர்வு கொடுக்கும்.


தனிமத தீர்விலே ஒழுக்கம், முயற்சி பற்றி பார்த்தோம் , இந்த விடயங்களில் அது தனிமனிதனுக்கு தீர்வாகாது . அப்துல் கலாம் M S உதையமூர்த்தி போன்றவர்கள் சுயமுனேற்ற புத்தகங்கள் எழுதி உள்ளனர் . shivkhera "YOU CAN WIN " என்ற புத்தகம் எழுதுகிறார் . இவர்கள் எல்லாம் சமூகத்தை முழு பொருளாய் பார்க்காமல் தனிதனி விடயமாய் பார்க்கின்றனர். சரி ஒட்டுமொத்த சமூக தீர்வு என்பது என்ன, அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.


எல்லா சாலைகளும் உங்கள் வீட்டில் இருந்து ஆரம்பிக்கவில்லை, உங்கள் வீடு சாலையில் உள்ளது .

Wednesday, 12 May 2010

அந்நியன் போன்ற படங்கள் சொல்லும் தனிமனித தீர்வு சாத்தியமாநம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. நாம் அந்த பிரச்னையை தனியாய் தீர்க்க முற்படுவது உண்டு , சரி அப்படி சரியாய் தீர்க்க முடியுமா . நம் பிரச்சனைகள் எங்கு இருந்து தோன்றுகின்றன என்று பார்ப்போம்??? உதாரணமாய் நான் மதுரையில் இருந்து வந்து சென்னையில் வேலை செய்கிறேன் என்றால் என் வாழ்க்கை இயந்திரமாய் போகிறது என்று வைத்துக்கொள்வோம் . இதற்க்கு என்ன தீர்வு நான் திரும்பவும் மதுரையில் போய் வேலை செய்ய முடியுமா ????? சரி அப்படி மதுரைக்கு போய் வேலை செய்தால் பொருளாதார பிரச்சனை இருக்குமே???? நீங்கள் எதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொள்ளுங்கள் இது பொருந்தும்.

ஒரு மனைவி கணவன் குடிக்கிறார் என்று சொன்னால்??? அவர்கள் நடுத்தர வர்க்கமாய் இருந்தால் கணவருக்கு வேலையில் மன அழுத்தம் இருக்கும் அதுவும் IT துறை போன்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். சரி அடித்தட்டு வர்க்கமாய் இருந்தால் என்ன பிரச்சனை ????கணவன் லாரி ஒட்டுபவனாகவோ இல்லை சித்தாள் இல்லை என்றால் மலம் அல்லுபவனாகவோ இருந்தால் வேலை பளு கட்டாயம் அவன் குடித்தே ஆக வேண்டும் . அப்படி இருக்கையில் இங்கே சமூக மாற்றம், முதலாளிகளால் சுரண்டப்படாமல் இருப்பது மூலமே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதாவது இங்கே தனி நபர் பிரச்சனை என்பது தனி நபர் பிரச்சனை அல்ல அது சமூக பிரச்சனை எப்பொழுது சமூக பிரச்சனை தீர்கிறதோ அப்பொழுதே தனி மனிதனுக்கும் தீர்வு கிடைக்கிறது.

தனிமனிதன் தீர்வை நோக்கி எங்கே போகிறான். கடவுள், மதம், மதம் சார்ந்த சாமியார்கள், மதம் சாராத சாமியார்கள் , முயற்சி, அராஜகம், பகுத்தறிவு . இது எல்லாம் தனிநபர் தீர்வு இது எல்லாம் உண்மையிலேயே தீர்வா. கடவுள் மதம் எல்லாம் என்ன சொல்கிறது கடவுள் இருக்கிறார் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறது , அதாவது நீ எதை கண்டும் கோப படக்கூடாது கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று எளிமையாய் சொல்கிறது . இந்திய போன்ற நாடுகளில் கடவுள் மதம் சாமியார்கள் அதிகம் அதனாலேயே மனிதன் நீர்த்துப்போய்சமூகம்
அவலமாய் உள்ளது. அதாவது மனிதனுக்கு கோபம் வந்தாலும் , அவன் என்ன எடுத்துக்கொள்கிறான் கடவுள் இருக்கிறார் நாம் எல்லாம் பேசக்கூடாது நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார் நமக்கு நீதி கிடைக்கும் என்று இருக்கிறான். சமூக அவலங்களை கண்டு கொதிப்பதில்லை . கடவுள் மதம் போதை போல கஷ்டங்களை மறக்கடித்து மயக்க நிலையில் வைத்துக்கொள்ளும் அதனால் கஷ்டங்களை மறக்கிறான் சாமானியன்.

மதம் சாரதா கடவுள் எல்லாம் என்ன சொல்கின்றன? என்ன சொல்கிறது ஜென் கதைகள் . நாளை பற்றி யோசிக்காதே பழசை மற, இந்த நொடி மட்டுமே உண்மைஎன்கிறது அதனால் மனிதன் போராடாமல் நீர்த்துப்போகிறான். ஆக மொத்தம் என்ன சொல்கிறது கடவுள் மதங்கள் நீர்த்து போகும் வேலையை பார்க்கின்றன ,அடி தட்டு மனிதனிடமும் , நடுத்தரவர்க்க மனிதனிடமும் கோபம் வராமல் இதுவரை கொள்ளை அடிக்கிற முதாலாளியை காப்பாற்றுகின்றன .

தனிமனித முயற்சியை எடுத்துக்கொள்வோம் , இப்பொழுது எல்லாம் நிறைய சுயமுன்னேற்ற புத்தகங்கள் வருகின்றன. ஏன் அப்துல் கலாம் கூட கனவு காண் என்கிறார் தனிமனித முயற்சியை ஈழத்திலே எடுத்துக்கொள்வோம் , அந்த சமூகம் குண்டடி படும் பொழுது எப்படி முயற்சி செய்து வாழ்கையில் வெற்றி பெறமுடியும் அந்த இடத்தில் மக்களக்கு விடுதலை கிடைப்பதை பொறுத்தே தனிநபரின் முயற்சி வெற்றி பெறுகிறது . ஒரு தத்துவம் என்றால் எல்லா இடத்திலும் பொருத்தி பார்த்தால் வெற்றி பெற வேண்டும் . சரி ஒரு தனிமனிதன் முயற்சி செய்து JAVA படிக்கிறான் என்று வைத்துக்கொண்டால் , IT துறை தோல்வி அடைகிறது என்றால் அவன் தனிமனித முயற்சி என்ன ஆகும், பொருளாதார வீழ்ச்சிக்கு அவன் என்ன செய்வான். அதனால் ஒரு தனிமனிதனுக்கு தீர்வு சமூகத்தில் இருந்து கிடைக்கிறதே அன்று அவனிடம் இருந்து தீர்வு கிடைப்பதில்லை.

சரி படங்கள் எப்படி எடுக்கிறார்கள் , உதாரணமாய் அந்நியன் என்ற படம் எடுத்துக்கொண்டால் தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுகிறது , ஒவ்வொருவரும் ஒழுக்கமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அதன் நாடி ஒரு flash back காட்சியிலே விரிகிறது, ஒரு சின்ன தவறினால் கதாநாயகன் தங்கை இறந்து விடுகிறாள் , அதற்க்கு காரணம் தனிநபர் ஒழுக்கம் என்று சொல்கிறது படம்.சரி தனிநபர் ஒழுக்கம் தான் காரணமா அந்த கவனக்குறைவிற்கு . சரி அப்படி ஒரு ஒரு மனிதனையும் தனி தனியாக திருத்த சாத்தியமா ???எவ்வளவு காலம் திருத்திக்கொண்டிருப்பார்.
ஒவொவொரு பிரச்னையும் தொடர்பு உடையது, அதை தனித்தனியாய் பிரித்து தீர்க்க முடியாது.

உதாரணமாய் அலுவலில் வேலை அதிகம் பார்ப்பதால் குடும்பத்தை கவனிக்க முடியாததால் மன உளைச்சலால் தான் கள்ளக்காதல் வருகிறது என்பதே உண்மை . கள்ளக்காதலை ஒழிக்க வேண்டுமானால் தனிநபரை திருத்துவதை விடுத்து , வேலை நேரம் கம்மி செய்தாலே போதும் , மன உளைச்சல் கம்மியாகும் , வேலை நேரம் குறைய வேண்டுமென்றால் என்ன வேண்டும் முதலாளித்துவம் சுரண்டலை நிறுத்த வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா????? தனிமனித ஒழுக்கம் என்பது கூட சமூக கட்டமைப்பில் வருகிறது . இப்பொழுது PUB டிஸ்கோதே போகும் IT துறையினர் எல்லாருமே பிறக்கும் பொழுது பீர் பாட்டிலுடன் பிறந்தவரா என்ன , மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி அப்படி இருந்துவந்தவர்கள் இங்கு IT வேலை மனஉளைச்சல் உடனே பார் pub ஆட்டம் கொண்டாட்டம் , இதன் வேர் எங்கு உள்ளது , அவர்களுக்கு நேரம் கம்மியாய் வேலை இருக்கவேண்டும் மனஉளைச்சல் தராத வேலையாய் இருக்க வேண்டும் என்பதை சார்ந்ததே தவிர , அது தனிமனித ஒழுக்க சமந்தப்பட்டது அல்ல .

அந்நியன் படத்திலே எச்சி துப்புபவரை கூட விக்ரம் கொள்வார், சிரிப்பாய் உள்ளது . தனி தனியாய் ஒருத்தன் ஒரு விடயத்தை தீர்க்க முடியாது . இந்த ராபின் ஹூட் வேலை எல்லாம் வேலைக்கு ஆகாது , சினிமாவில் கைதட்ட வேண்டுமென்றால் உதவும் . நாம் சமூகத்தில் ஒரு அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல. சமூக பிரச்சனைகளை தீர்ப்பது மூலமே தனிமனித பிரச்சனை தீர்க்கப்படும் என்பதே உண்மை. ஏன் என்றால் நாம்
எல்லாமே சமூகத்தின் படைப்புகள் . சமூகம் நன்றாய் இருக்கும் பொழுதும் அதன் படைப்புகளும் நன்றாய் தான் இருக்கும்.

நம் தமிழ் படங்கள் gentle man , அந்நியன், மகாநதி, பம்பாய், நான் கடவுள் , ரோஜா போன்ற படங்கள் தனிநபரிடம் இருந்து தீர்வை சொல்கின்றன ,சமூக அவலங்களை காட்டாமல் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் , அவன் வரும் கருத்து என்று போகின்றன . கதைகள் தனிநபரின் பார்வை ஓட்டத்தில் போகின்றன, அதனால் தன்னை கடுவுளாய் நினைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கின்றன. ஆனால் தனிநபர் என்பவர் அறிவாளி அல்ல , அவர் சமூகத்தின்
அங்கம் எப்பொழுது சமூக பிரச்சனை எல்லாம் கலையப்படுகிறதோ அப்பொழுது தான் தனிமனிதனுக்கு தீர்வு . ஒரு தனிமனிதன் ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றாலும் அவன் சமூகம் மாற்றம் பெறவேண்டும்.

சமூகத்தில் அந்நியனாய் அறிவாளியாய் இருந்து தீர்ப்பு சொல்ல முடியாது . சமூகத்தில் ஒரு அங்கமாய் இருந்து தீர்வுக்காக போராடலாம்

Sunday, 9 May 2010

போபால் விஷ வாயு தாக்குதல்

யார் தீவிரவாதி - பகுதி ஒன்று
நாம் கசாபை தீவிரவாதி என்கிறோம் சரி அவனால் பல பேர் இறந்திருக்கிறார்கள் அவன் தீவிரவாதி என்றே வைத்துக்கொள்வோம் இன்னும் எத்தனையோ தீவிரவாதிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. மக்கள் ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறார்கள் அவர்களை சொல்லி குற்றம் இங்கு உள்ள ஊடகங்கள் சிந்திக்க விடாத வேலையே தொடர்ச்சியாய் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தியா என்னமோ ஜனநாயக நாடு போல ஊடகங்கள் மக்களுக்கு கட்டமைக்கின்றன. இந்தியாவை சேர்ந்த உளவு அமைப்பான ரா வை சேர்ந்தவர் சர்பஜத் சிங்க்,அவர் பாகிஸ்தானில் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்பட்ட தூக்கு தண்டனைகைதி. இதன் பெயர் தீவிரவாதம் இல்லையா?? இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் போன்ற நாடுகளில் மேலாதிக்கம் செய்கின்றது என்பதே உண்மை.


டிசம்பர் 2 இரவு 1984 போபாலின் துக்க தினம். MIC மெத்தில் ஐசோ சயனட் என்னும் விஷ வாயு கசிந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அந்த விஷ வாயு தாக்குதலின் அதிர்வு போபாலை விடுவதாய் இல்லை. இன்னும் தண்ணீர் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாய் பிறக்கிறது . இதை செய்தது Union Carbide India Limited (UCIL ) என்னும் நிறுவனம். ஆனால் அரசாங்கம் அந்த மக்களை காப்பாற்றுவதை விட அவர்களை காப்பதிலே குறியாய் இருந்தது . அரசுகம்மியான நபர்கள்பாதிக்க பட்டதாய் கணக்கு காட்டியதன் உண்மை என்ன ???இன்னும் அதன் CEO warren anderson கைது செய்யப்படவில்லை. ஏன் நஷ்ட ஈடு கூட கொடுக்கப்படவில்லை.
இதில் ஒரு விஷமத் தனம் உள்ளது தெரிகிறதா . போபால் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் செய்தது ஒரு பெரிய முதாலாளி வர்க்கம். 100 பேர் கொன்ற காசாப் தீவிரவாதி என்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற Warren Anderson இந்நேரம் தூக்கில் போட்டிருக்க வேண்டுமே ??? சரி இங்கு ஒரு முரண்பாட்டை காணலாம் , முதலாளிகள் உயிர் மலிவானதல்ல அதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் முதாலாளி காப்பாற்ற படுகிறார் காசாப் விடயத்தில் அவன் குறிவைத்தது தாஜ் ஒபேரா போன்ற முதலாளிகள் தாங்கும் இடம் அந்த உயிர் தான் மலிவானது இல்லையே அதனால் இந்த ஊடகங்கள் அதை கவர் செய்யும், மக்களும் அதை கிளிப்பிள்ளை போல நம்புவார்கள். சரி மும்பையை போபாலை விடுங்கள் சம காலத்தில் இருக்கும் விதர்பா விடயம் என்ன ஆயிற்று அங்கே தினம் தினம் விவாசாயி செத்துக்கொண்டிருக்கிறான் இந்த ஊடகம் அதை காட்டுவதாய் இல்லை. ஏன் பதிவர்கள் கூட IPL மற்றும் சுறா படத்திற்கு பேசும் பதிவர்கள் விதர்பா பற்றி பேசுவதில்லை, இதே ஊடகம் என்ன சொல்கிறதோ அதையே சொல்கின்றனர் என்பது வேதனையிலும் வேதனை. ஊடகம் தூக்கில் போட வேண்டுமென்றால் இவர்களும் அதையே வழி மொழிவார்கள் ,ஊடகங்கள் முதாலாளிக்கான ஊடகங்கள் இந்த பதிவுலகமும் அதையே பிரதிபலிக்கிறது.

கசாபை தூக்கில் போடவேண்டும் என்பவர்களுக்கு ஒரு கேள்வி நூற்று கணக்கில் மக்களை கொன்ற கசாபே தூக்கில் தொங்க வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற கொன்ற Warren Andersonஉயிரோடு இருக்கிறாரே என்ன செய்ய ????

Thursday, 6 May 2010

கசாப் மட்டும் தான் குற்றவாளியா

மும்பை தாக்குதலுக்கு கசாப் மட்டுமே காரணமா என்ற ரீதியில் வினவு கட்டுரை அமைத்து இருக்கின்றது ..........பழைய ஆறு கட்டுரைகளை மீள் பதிவு செய்துள்ளது .இப்பொழுது அலறும் லதா மங்கேஷ்கர் மற்றும் ஊடகங்கள் 92 இனக்கலவரம் பொழுது அழுக வில்லையே . ஏன் தாஜ் ஹோட்டல் என்றால் ஒரு நீதி சராசரி மக்கள் என்றால் ஊடகங்களுக்கு ஒரு நீதியா. மேலும் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஏன் தூக்கில் போடவில்லை , பாபர் மசூதி இடிப்பை செய்த அத்வானியை என்ன செய்தார்கள் அது எல்லாம் தீவிரவாதம் இல்லையா என்ற கோணத்தில் பல அரசியல் விடயங்களை முன்வைக்கிறது கட்டுரைகள் .சரி தவறு என்று ஒரு புறம் இருந்தாலும் விவாதித்தால் ஆழமாய் போனால் நமக்கே சில விடயங்கள் புரியும் என்பதே உண்மை ஆர்வமுள்ளவர்கள் வினாவில் விவாதியுங்கள் .

என்னை பொறுத்த வரை பக்கத்துக்கு ஊரான விதர்பா என்னும் ஊரில் கடந்த 20 வருடங்களாய் லட்சக்கணக்கான விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இந்த ஊடகங்கள் என்ன செய்தன . தாஜ் ஹோட்டல் என்ற ஒரே காரணம் முதலாளிகள் கூடும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு இவ்வளவு மரியாதையா ..
கசாப் மட்டுமே இதை செய்திருப்பாரா , மகேஷ் படத் மகனின் பெயர் அடிப்பட்டதே அது என்ன ஆச்சு ????? ஏன் மும்பை குண்டு வெடிப்புகளில் சஞ்சய் தத் பெயர் அடிப்பட்டதே என்ன ஆச்சு ???? கடை நிலையில் இருக்கும் தீவிரவாதி மாட்டுமே கண்ணில் படுவாரா.

சரி இந்தியா இலங்கையில் என்ன பண்ணி கொண்டிருக்கிறது அது தீவிரவாதம் இல்லையா ???? இந்தியாவிற்கு ஏன் இந்த ஜனநாயக வேடம் . சரி மும்பையில் முஸ்லிம்கள் பாதுக்காப்பாய் வாழத்தான் முடிகிறதா???? இதை எல்லாம் ஆராய்ந்து விட்டு தீவிரவாதம் என்னும் விடயத்திற்குள் செல்ல வேண்டும். உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் , அமெரிக்க ஈராக்கிலும் ஆப்கானிலும் செய்ததே அது தீவிரவாதம் இல்லையா????? ஒசாமாவை ரஷ்யாவை எதிப்பதற்க்காய் வளர்த்தது அமெரிக்க இது உலக வரலாறு...எது தீவிரவாதம் நாமெல்லாம் தேசியம் என்னும் மாயையில் இருக்கிறோமா ??? ஏன் இந்த விடயத்தை மட்டும் பற்றி எழுதும் ஊடகங்கள் விதர்பா என்னும் விடயத்தை விட்டுவிட்டார்கள் ????தாஜ் ஹோடேலில் உயிர் என்றால் அது நாட்டை உலுக்கும் பிரச்சனை என்று சித்தரிக்க படுகிறதா .....

http://www.vinavu.com/2010/05/06/kasab/

மேலும் விவாதங்களுக்கு வினவு தளத்திலே அரசியல் ரீதியாய் பல விவாதம் நடந்துகொண்டிருக்கிறது கட்டுரைகள் ஆழ அரசியல் பார்வை உள்ளன . அது சரி என்று சொல்லவில்லை தவறு என்று தோன்றினாலும் விவாதியுங்கள்.விவாதங்கள் நமக்கே பல உண்மைகளை கற்றுக்கொடுக்கும்

நிலக் கருத்தடைஊர் முழுக்க
நிலங்களை கருத்தடை செய்தது கோகோ கோலா.....!
கிராமத்து கிழவனுக்கு மார்க்ஸ் தெரியாது
போராட்டம் தெரியாது .............
கடையில் சென்று கோக் வாங்கினான்
கிழவன் ............
கழிவு நீரை கழிவறையில் ஊற்றி விட்டு ......
பாட்டில் நசுங்க காலில் ஏறி மிதித்து
அதன் மேல் காரி உமிழ்ந்து எதிர்ப்பை பதிவு
செய்தான் கிழவன் ...................!

Wednesday, 5 May 2010

கடற்கரையில் கடவுள்


கடற்கரை ஓரம்
ஒரு கோவில் இருந்தது
"கடவுள் மண்ணை காப்பார்" என்று மக்கள் நம்பினார்
சுனாமி வந்தது கோவிலுக்குள்
கடவுள் இழுத்து செல்லப்பட்டார்
புதிய கடவுள் சிற்பியால் உருவாக்கப்பட்டார் .......................................
மணல் மேடுகள் உருவாக்கப்பட்டன ..............
மண்ணால் ஆனா கற்கள் கொண்டு உயர்ந்த மதில்கள் எழுப்ப பட்டன .............
"கடவுள் மண்ணை காத்தாரா ?????
மண் கடவுளை காத்ததா

Tuesday, 4 May 2010

குஷ்பூ வழக்கு ஒரு தீர்ப்பு ஒரு கொலை


நிரூபமா பதக் இந்தியாவை உலுக்கும் கொலை செய்தி. நிரூபமா பதக் உயர் ஜாதி பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர் ப்ரியாபான்சு ரஞ்சன் என்ற கீழ் ஜாதி இளைஞனை காதலித்து இருக்கிறாள். மூன்று மாதம் கர்ப்பம் வேறு , இந்த காரணத்தினாலேயே தன் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் .

இத்தனைக்கும் அவர் பெண் நிருபர் அவள் காதலித்த பையனோ ஆண் நிருபர். டெல்லி INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION இருவரும் படித்த இடம். அப்பொழுது காதல் மலர்ந்து இருக்கிறது .நிரூபமா ஜார்க்ஹன்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தந்தையார் பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பெண்ணை MASS COMMUNICATION படிக்க வைக்கிறார்கள் வேறு ஊருக்கு சென்று படித்து இருக்கிறாள் , ஓரளவு படித்த குடும்பமாய் தான் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட குடும்பத்திலேயே கல்யாணம் செய்தால் ஒரு ஜாதியில் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நிரூபமா கல்யாணம் பண்ண வேண்டும் அதற்க்கு முன்னால் கடைசியாய் ஒரு வாய்ப்பு கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து இருக்கிறார். வந்த இடத்தில் குலை செய்யப்பட்டு இருக்கிறாள். இரண்டு விடயங்கள் ஒன்று அவர் காதலித்தது கீழ் ஜாதி பையன் இன்னொரு விடயம் காதலித்து கர்ப்பம் ஆகி இருக்கிறாள். இந்தியா போன்ற பழமை ஊறி இருக்கும் தேசத்தில் குஷ்பூவும் உச்ச நீதி மன்றம் சொல்வது போல் கல்யாணத்திற்கு முன்பு உறவு ஆபத்து ஆனது. அது குஷ்பூ போன்ற மேட்டுக்குடி வர்க்கத்திற்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இந்த கொலை நிருபித்து உள்ளது.

சரி குஷ்பூ சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம். இதுவே காதலித்தது மேல் ஜாதி பையன் காதலிக்க பட்டது கீழ் ஜாதி பெண் என்று வைத்து நிலைமை வைத்துக்கொண்டாலும் மேல் ஜாதிப்பையன் உறவை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எளிதாய் பெண்ணை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது . அப்பொழுதும் தற்கொலையோ இல்லை கொலை செய்யப்படுவது பெண் மட்டுமே.

சரி இன்னொருவனிடம் காதலிக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கும். ஒரு பையன் சுற்றினால் வயது பையன் அப்படி தான் இருப்பான் என்று சொல்லும் சமூகம்,ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்ளுமா என்ன ????? இப்படிப்பட்ட பின்தங்கிய சமூகம் இருக்கும் பொழுது கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது என்பது

குஷ்பூ போன்ற மேட்டுக்குடி பெண்களுக்கும் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நீதிபதி போன்ற மேட்டுக்குடி வர்க்க பெண்களுக்கு மிகச்சரியான தீர்ப்பை இருக்கும்ஆனால் இந்த தீர்ப்பை பார்த்து படிக்காத பாமர பெண்கள் உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.ஜாதிகளும் பெண் அடிமைத்தனம் இருக்கும் தேசத்தில் இப்படி ஒரு பொறுப்பில்லாத தீர்ப்பை படித்து ஒரு கிராமத்து பெண் ஏமாந்து போக வாய்ப்பு உள்ளது.மேட்டுக்குடி வர்கத்தில் இருக்கும் பெண்களோ இல்லை பொறுப்பில் உள்ள நீதிபதிகளோ தங்கள் குடும்பத்தை மட்டும் வைத்து தீர்ப்பு அளிப்பது வேதனையாய் இருக்கிறது.

Monday, 3 May 2010

குட்டி தோழன்
நண்பன் ஒருவன்
இருந்தான்.............!
மது அருந்திகொண்டே மார்க்ஸ் பற்றி
பேசுவான் .........!
குளிர்சாதன அறையில்
சில PDF படித்து விட்டு
சில பதிவுகள் போட்டு விட்டதாலேயே
தன்னை அறிவாளி என்று நினைப்பான் ...!
மே தினம் அன்று அவனை கூப்பிட்டேன்
"வெட்டி வேலை" என்றான் ...........
பரவாயில்லை வெட்டி வேலை பார்ப்போம்
என்றேன் ...........!!!!!
வந்தான் ...........................
கூட்டத்திலே ஓரமாய் நின்றுகொண்டிருந்தோம்
தோழர்கள் பறை விண்ணை முட்டியது
விசில் சத்தம் காதை பிளந்தது,
போலிஸ் அனைவரையும் வண்டியில் ஏற்றியது
ஒரு "குட்டி தோழன் " ஐந்து வயது இருக்கும்
வீரமாய் ஏறினான் ..............................!!!!!!!!
என் நண்பனிடம் சொன்னேன் .......................
நீ மார்சியத்தை எழுத்துக்களால் படித்தாய்
அந்த "குட்டி தோழன்" வாழ்ந்து கொண்டிருக்கிறான்
என்றேன் ....................!!!!
அவன் மூஞ்சியில் கலவரம்
"இதுனால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை" என்று
மீசையில் மண் ஒட்டாமல் போனான்

Sunday, 2 May 2010

உழைப்பாளர்கள் தின பேரணி வினவு தோழர்களுடன்


மே தினம் அன்று வினவு தோழர்களுடன் புதுச்சேரி பேரணிக்கு சென்றேன். நான்கு மணிக்கு பேரணி என்று சொல்லி இருந்தார்கள் . பு ஜ தொ மு சார்பாக பேரணி அறிவித்து இருந்தார்கள்.தோழர்கள் வினவு தோழர் மேலும் மூன்று தோழர்களுடன் ஒரு அணியாய் சென்றோம் . பேரணிக்கு அனுமைதி மறுக்கப்பட்டு இருந்தது. CITU சங்கத்திற்கு அனுமதி வழங்கிய அரசு பு ஜ தோ மு சங்கத்திற்கு வழங்க வில்லை ஏன் என்றால் அவர்களுக்கே தெரிந்து உள்ளது யார் உண்மையாய் மக்களுக்காய் குரல் கொடுப்பார்கள் என்று தெரிகிறது .
ஒரு மே தின பேரணிக்கு தொழிலாளி வர்க்க தோழர்களுக்கு அனுமதி மறுக்கபடுகிறது என்றால் எந்த அளவு ஜனநாயக தேசத்தில் உள்ளோம்.

தோழர்கள் பேருந்து நிலையத்தில் மறியல் செய்தனர் 2000 தோழர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் செங்கொடி பறந்து கொண்டே இருந்தது. தோழர்களின் குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தைகள் கூட குரல் கொடுத்தது மிகுந்த எழுச்சியாய் இருந்தது. சிறிது நேரம் போக போக எழுச்சி அதிகரித்து கொண்டே இருந்தது . தாரை தப்பட்டை வைத்து தோழர்கள் போட்ட தாளம் உற்சாகமாய் இருந்தது. விண்ணை தாண்டி உற்சாக குரல்கள் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. மேலும் கிராஸ் செய்யப்படும் பாலம் மேலே தோழர்கள் பெரிய செங்கொடி வைத்து கொண்டிருந்தனர் .கீழே இருந்து பார்ப்பதற்கு மிகவும் எழுச்சிகரமாய் இருந்தது.

என்ன எனக்கு ஆச்சர்யம் அளித்தது என்றால் சிறு பிள்ளைகள் கூட போராட்டத்திலே களத்திலே இருக்கிறார்கள். போலீஸ் வாகனங்கள் வந்தது அனைவரையும் ஏற்றி கொண்டு சென்றனர் , குழந்தைகள் வயதிற்கு வந்த பெண்கள் அனைவரும் வீரத்துடன் ஏறினர் போராட்டம் அவர்கள் குருதியில் கலந்து இருக்கிறது என்றே சொல்வேன்.

பொதுவுடைமை அவர்களின் வாழ்க்கை தேவை. நம் நடுத்தர வர்க்கமோ அல்லது மேட்டுக்குடி வர்க்கம் போல அவர்கள் வாழ்க்கை சொகுசாய் இல்லை. நாமெல்லாம் பதிவுலகில் சவடால் பேசுவோம் களத்தில் இறங்க சொன்னால் வேலை இருக்கிறது என்போம். ஈழம் பற்றி எழுதுவோம் தெருவில் இறங்கி போரடுவோமானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த உழைக்கும் வர்க்க தோழர்களின் வாழ்கையே போரட்டாமாய் உள்ளது போராட்டம் என்பது அவர்கள் இயல்பு அவர்கள் வெகு இயல்பாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சரி நடுத்தரவர்க்கம் சொகுசாய் இருப்பது போல் மாயை இருந்தாலும் உண்மையில் அப்படி தான் இருக்கிறதா. மென் பொருள் வேலை செய்யும் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் பதிமூணு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட மணி நேரங்கள் உழைத்து அவர்கள் வாழ்க்கையே மிகுந்த மன நெருக்கடி உள்ளான வாழ்க்கை ஆகிறது. சரி மன அழுத்தத்தை குறைக்க I T துறையினர் டிஸ்கோதே பார்கள் செல்கின்றனர் மன நலன் உடல் நலன் பாதிக்க ஒருவிதத்தில் தான் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலேயே சுரண்டப்படும் வர்க்கம் நடுத்தர வர்க்கம் .

ஆனால் அடித்தட்டு மக்கள் போல் நேரடியாய் பாதிக்க படமால் இருப்பதால் போராட்டம் என்றால் நடுத்தர வர்க்கம் வருவதில்லை . ஹிந்து பேப்பர் படித்து கொண்டு இவர்களை அவர்களை குறை சொல்லிக்கொண்டு என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று ஆனதை ஆசிரமத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததை பெருமையாய் பேசிக்கொண்டிருக்கிறது நடுத்தர வர்க்கம். கேட்டால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்கிறது நடுத்தர வர்க்கம். ஒரு பிச்சைக்காரன் வருகிறான் என்று வைத்துக்கொள்வோம் இன்று நம்மிடம் காசு உள்ளது ஐந்து ரூபாய் போடுகிறோம் நாளை காசு இல்லை என்றால் அந்த பிச்சைக்காரன் வேறு ஒருவனிடம் செல்வான், அதைப்போல் தான் உள்ளது இந்த NGO அமைப்புகள் மற்றும் பிச்சைக்காரனுக்கு 2 ருபாய் கொடுக்கும் நடுத்தர வர்க்க மனநிலை.இந்த மாதிரி தன்னால் முடிந்ததை செய்கிறேன் களத்தில் இறங்கி எல்லாம் போராட முடியாது என்கிறது நடுத்தர வர்க்கம். நான் நல்லவன் தான் ஆனால் கோழை என்கிறது. தவறு நடக்கும் பொழுது போரடதது கயமை தனம் அதனால் திருடன் என்று தான் சொல்ல முடியுமே தவிர போரடதவனை நல்லவன் என்று எப்படி சொல்ல முடியும்


நடுத்தர வர்க்கமும் களத்தில் இறங்கி போராடும் நாள் வரும் .அணுகுண்டு வெளியே வெடித்து சிதறவது போல மக்கள் எழுச்சி இருக்கத்தான் போகிறது . நடுத்தரவர்க்கம் தன்னை சுயநீக்கம் செய்துகொண்டு தொழிலாளிகளோடு போராடவேண்டும். IPL வெற்றிக்கும் உலகக்கோப்பை வெற்றிக்கும் கைதட்டும் இளைஞன் விதர்பா விவசாயப்படுகொலைக்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும் களத்தில் இறங்கி போராட வேண்டும். எனக்கு ஒரு மார்க்ஸ் புத்தகம் படித்தால் ஏற்ப்படும் எழுச்சியை விட அங்கு பல ஐந்து வயது சிறுவர்கள் போராட்ட களத்திலே குரல் கொடுத்தது மார்சியத்தை எனக்கு தெளிவாய் புரிய வைத்தது. என்னை விட அந்த சிறுவனுக்கு மார்சியம் என்றால் என்ன என்று தெரியும். மார்சியம் களப்பணி, மது அறிந்திகொண்டு பேசும் இலக்கியம் அல்ல, மக்களுக்கான பணியே மக்களுக்கான இலக்கியம் .