ஊர் முழுக்க
நிலங்களை கருத்தடை செய்தது கோகோ கோலா.....!
கிராமத்து கிழவனுக்கு மார்க்ஸ் தெரியாது
போராட்டம் தெரியாது .............
கடையில் சென்று கோக் வாங்கினான்
கிழவன் ............
கழிவு நீரை கழிவறையில் ஊற்றி விட்டு ......
பாட்டில் நசுங்க காலில் ஏறி மிதித்து
அதன் மேல் காரி உமிழ்ந்து எதிர்ப்பை பதிவு
செய்தான் கிழவன் ...................!
6 comments:
நம் ஊர் கிழவர்களுக்கு
மார்க்ஸ் தெரியவேண்டிய
அவசியமில்லை.
அவர்களுக்குக் காந்தியைத்
தெரியும்.
அவர்களுக்கு காந்தியை தெரிந்ததால் தான் பிரச்சினையே .............மார்க்ஸ் தெரிந்திரிந்தால்
போராடி இருப்பார்கள் ........சரி உங்களுக்கு காந்தியை தெரியும் அதனால் தான் மைய பிரச்சனை பற்றி விவாதிக்காமல் இதை குறையாக சொல்கிறீர்கள்
வரிகள் ஒரு உழவனின் கோபத்தோடு இருக்கிறது...
தங்களை கிண்டல் செய்வதற்காக கேட்கவில்லை. மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார். முதலாளிகளா? இல்லை அவர்கள் கொல்பவர்கள் எல்லோரும் முதலாளிகளா? இவர்களும் காம்ரேடுகள் தான் என்று நினைக்கிறேன்? இது பற்றி நீங்கள் எதுவும் சொல்ல மறுக்கிறீர்களே...
நிதர்சனம் எப்போதும் சுடும்.... வழிவகை தான் புரியவில்லை
குறையாகச் சொல்லவுமில்லை.
உங்கள் கோபத்தைக்
குறைத்தும் மதிப்பிடவுமில்லை.
காந்தி போராடவில்லை என்று
யார் சொன்னது?
அவரவர்களுக்கான
ஆயுதத்தை
அவரவர்கள் எடுக்கிறார்கள்.
Post a Comment