Friday, 30 July 2010

போராட்டமே மகிழ்ச்சி

"பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
"பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் " என்னும் தலைப்பில் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் பதிவை படித்தேன் . அவர் பதிவு யாரும் பிரச்சனைகளை பற்றி எழுதாதீர்கள் ஒதுங்கி போங்கள் என்று சொல்லும் விதமாய் இருந்தது . அதாவது போராடாமல் இருப்பது தான் மகிழ்ச்சி என்பது போல் கட்டுரை இருந்தது . எதில் போராட்டம் இல்லை , ஒரு தாய் பிரசவிக்கும் பொழுதே வலியுடன் தான் குழந்தையை பிரசவிக்கிறாள் . நம் போராட்டம்
பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது . ஒரு குழந்தை போராடி போராடி தான் நடையை கற்றுக்கொள்கிறது . கீழே விழுவோம் என்று நினைத்தால் நடக்காமல் இருந்து விடும் தானே . பள்ளிக்கு செல்கிறோம் ஒரு தேர்வில் தோல்வி அடைகிறோம் , போராடி படிக்கிறோம் , நாம் என்று வரும்பொழுது , நமக்கு என்று வரும்பொழுது போரடிகிறோம் .
ஆனால் இதே விடயம் சமூக பிரச்சனை என்றால் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி கொள்ளும் போக்கு உள்ளது . சிலர் ஒதுங்கிக்கொண்டு போவது உண்டு , சிலர் உங்களுக்கு எதற்கு வீண் வேலை என்று செல்லும் ஒன்று இரண்டு பேரையும் தடுப்பது உண்டு . சிலர் ரஷ்யாவிலே ஏன் தோற்றனர் சீனாவில் லட்சணம் தெரிகிறதே என்று ஏளனம் செய்வது உண்டு . அவர்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி நீங்கள் ஒரு INTERVIEW செல்கிறீர்கள் வேலை கிடைக்கவில்லை , உங்கள் முயற்சியை விடுவீர்களா ? உங்களுக்கு என்று வரும்பொழுது
முயற்சி , சமூகம் என்று வந்தால் அது எல்லாம் முடியாது வெட்டி வேலை என்று சொல்கிறீர்கள் . ராதாகிருஷ்ணன் ஐயாவிற்கு இன்று வினவு தளத்தில் வந்த "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமர்ப்பணம் . போராட்டத்திலே மகிழ்ச்சி உண்டு மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை.

"மகிழ்ச்சியின் தருணங்கள் "

Tuesday, 27 July 2010

விடுதலை போரின் வீர மரபு - வீர பாண்டிய கட்டபொம்மன் -1

விடுதலை போராட்டத்திற்கு என்ற மரபு உண்டு . ஏன் விடுதலை போராட்டத்தை பற்றி இப்பொழுது எழுத வேண்டும் என்ற கேள்விகள் இயல்பாய் எழலாம் ????? வணிகத்திற்காய் வந்த ஆங்கிலேயரின் காலனி நாடாய் ஆனது இந்தியா . இந்தியா என்பது வெறும் சந்தை , முதலாளித்துவம் பிரிட்டனில் உருவான காலத்தில் , அதிக
உற்பத்தி செய்த முதலாளித்தவத்தின் பொருட்களை விற்பனை செய்ய காலனி நாடுகள் தேவைப்பட்டன . உலகத்தில் உள்ள அனைத்து போர்களும் தேசியத்திற்காக என்று சொல்வதை விட, முதலாளிகளின் அதிக உற்பத்தியை விற்பனை செய்ய ஏதாவது ஒரு சந்தை தேவை அதன் அடிப்படையிலேயே இருந்தன என்பது புரியும் . அப்படி பிரிட்டனின் சந்தையை , ஆட்டு மந்தையாய் , காலனியை காலணியாய் இருந்தது இந்தியா ????? எப்படி ஆகிலேயன் கிழக்கு இந்திய கம்பெனி மூலமாய் வணிகம் செய்ய வந்து நாட்டை பிடித்தானோ , அதே சூழல் இன்று நிலவுகிறது . அன்று இந்தியா காலனிய நாடாய் இருந்தது , இன்று மறுகாலனிய நாடாய் இருக்கிறது அதாவது இன்றும் பெப்சி கோக் போன்ற முதலைகளும் , அம்பானி டாடா போன்றவர்களும் . வேதந்தா போன்ற நிறுவனங்களும் ஆட்சி புரிகின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம் . ஆனால் தண்டக்காரன்யா என்னும் இடம் வேதந்தா என்னும் முதலாளிக்கு போக வேண்டும் என்பதற்காய் பொது மக்கள் மீது ராணுவத்தை ஏவும் அரசு இது . அக்கால சூழலில் போராட சிலர் இருந்தனர் அவர்கள் வரலாறு மிகவும் வீரம் நிறைந்தது , அவர்கள் எல்லாம் மானம் உள்ளவர்கள்,சாவதை பற்றி கவலை இல்லாதவர்கள் , இன்று உள்ள மக்களோ மிகுந்த சுயநலம் கொண்டவராய் இருக்கும் வேளையில் , அவர்களுக்கு வரலாறை மீள் பதிவு செய்வதாக வேண்டியது இருக்கிறது .கட்டாயம் அந்த விடுதலை மாந்தர்களின் சிகப்பு ரத்தம் வணக்கத்திற்கு வீரத்திற்கும் உகந்தது .


முதலில் கட்டபொம்மன் பற்றி பார்ப்போம் . ஏன் முதலில் கட்டபொம்மனை பார்க்க வேண்டும் . தனி தனியாக அனைவரும் போராடி இருக்கலாம் ஆனால் முதல் முறையாக அனைத்து பாளையக்காரர்களையும் ஒருங்கிணைத்து போராடிய முதல் ஆள் கட்டபொம்மன் . ஆதாவது ஒன்று பட்டால் மட்டுமே உண்டு விடுதலை என்று தொலை நோக்கு பார்வை கொண்ட வீரன் கட்டபொம்மன் . கட்டபொம்மன் மீது அவனும் வரி கட்டி கொண்டு தான்
இருந்தான் எதோ ஒரு தடவை அவனால் வரி கட்ட முடியவில்லை அதனால் தூக்கில் போட்டார்கள் என்ற விமர்சனம் அவன் மீது உண்டு . அவனை விமர்சிக்கும் முன் அவன் உலகத்தில் சுவாசித்த கடை மூச்சு உலாவிய நாட்களை கொஞ்சம் திரும்பி பார்ப்போம் . ""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.

— கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான். இதில் இருந்து அவன் வீரம் புரிந்து கொள்ள கூடியது .


மதுரையை நாயக்க மன்னர்கள் 16 ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினர் . பிற்காலத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன . பாளையக்காரர்களுக்கு சிற்றசனுக்கு உரிய அனைத்து உரிமைகளும் இருந்தன , வரி வாங்க வேண்டும் , படைகளை தேவைப்படும் பொழுது அனுப்ப வேண்டும் போன்ற பொறுப்புக்களும் இருந்தன . 18 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வீழ்ச்சி அடைய , தங்களை வளர்த்துக்கொண்டார்கள் பாளையக்காரர்கள் . இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

பஞ்சங்கள் சூழ்ந்து இருந்த காலம் . விளைச்சல் இல்லை , இந்நிலையில் ஆற்காட்டு நவாப் முகலாயர்களால் நியமிக்கப்பட்டான் வரி வசூல் செய்ய . எதிர்த்தவர்களை அடக்க கம்பனியின் படைகள் உபயோகப்படுத்தப்பட்டன . கம்பனி வரி வசூல் செய்ததற்கு பணம் கொடுக்க முடியாத நவாப் , வரிவசூல் செய்வதை அவர்களிடமே ஒப்படைத்தான் . பாளையக்காரர்கள் வரி வசூல் செய்தாலும் மக்களிடம் தன்மையாக இருந்தனர் , ஆனால் கம்பெனி காராராக இருந்தது . கட்டபொம்மன் நினைத்து இருந்தால் மக்களிடம் கறாராக பேசி பணத்தை பிடுங்கி உயிர் வாழ்ந்து இருக்க முடியும் . ஆனால் அவன் அப்படி செய்யாமல் எதிர்த்து போரிட்டு தூக்கு கயிரை மாலையாய் அணிந்தான் .

கட்டபொம்மன் எப்படி ஆட்சிக்கு வந்தார் எப்படி போராடினார் என்ற வீரம் மிகுந்த வரலாறை நாளை பார்ப்போம் .
இந்தியா மறுகாலனியாய் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய மீள் ஆய்வு தேவை என்றே நினைக்கிறேன் .

இன்று படுகொலைகளை விபத்துக்களாய் பார்க்கும் நேரத்தில் , மூன்றாம் உலக நாடுகள் சேரிகளாய் முதலாளிகளால் ஆக்கப்படும் காலக்கட்டத்தில் .இந்தியா பணக்காரனின் சந்தை . இந்தியா முதலாளிகளுக்கு தன் பொருட்களை விற்பனை செய்யும் இடம் . இந்தியனின் உயிர் ஒரு ஆய்வு பொருள் , அதனாலேயே UNION CARBIDE போன்ற நிறுவனம் இந்தியாவின் உயிர்களை வைத்து வியபாரம் செய்தான் போபாலில் . இப்படி ஆதாரங்கள் பல பல , அப்படி பட்ட வேளையில் அன்று இந்தியா காலனி நாடானதும் , இப்பொழுது இருக்கும் சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது . அன்று ஆர்காட் நவாப் இன்று
பா சிதம்பரம் . காலங்கள் மாறி இருக்கிறது காட்சிகள் மாற வில்லை , வரலாறு சுற்றி அதே இடத்திலேயே வருகிறது . வேண்டும் இன்னொரு விடுதலை . அப்படி பட்ட சூழலில் இக்கட்டுரைக்கான தேவைகள் அதிகரிக்கின்றன .

போபால் விபத்தா இல்லை படுகொலையா பார்வையாளன்

பார்வையாளன் என்ற பதிவர் போபால் பற்றி பதிவு எழுதினார் , வரவேற்க தக்கது . ஆனால் ஒரே ஒரு வரியில் அந்த கட்டுரையின் சாரம்சத்தை உடைத்துவிட்டார் "ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது"... என்று ஒரு வரி அந்த வரி எனக்குள் புகுந்து கொண்டு ஏதோ ஏதோ செய்தது என்றே சொல்வேன் . மேலும் "அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது... " இப்படி ஒரு வரியை வேறு எழுதி இருக்கிறார் . இது இந்திய நடுத்தர குடும்பங்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது . வலிக்காமல் எல்லாம் புரட்சி செய்ய முடியாது . எதையாவது பெற வேண்டுமென்றால் எதையாவது இழக்க தான் வேண்டும் , என்பதை தெரிந்து கொள்ள பொதுஉடைமை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் .

"போபால் விபத்து நடந்த பொது இந்தியாவே அதிர்ந்து நின்றது..." கட்டுரையின் முதல் வரியிலேயே விபத்து என்று சொல்கிறார் .

மேலும் "ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது..."

எது அதீதம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்க பட்டது அதீதம் இல்லையா , ஒருவனுக்கு மரண தண்டனை கொடுக்க போராட்டம் நடத்துவது அதீதமா . இது என்னமோ அரசின் குரல் இல்லை பா சிதம்பரம் குரல் போலவே உள்ளதே . ஏன் மூன்றாம் உலக நாடுகள் என்ன குப்பைதொட்டிகளா ......... இப்படி நினைத்ததனால் தானே இங்கே
பழைய தொழில் நுட்பம் உபயோகபடுதினான் , அந்த திமிரிர்க்கே மரண தண்டனை ஏன் கொடுக்க கூடாது . எதார்த்தம் எல்லாம் அதீதமாக போகின்றன ஆதீதம் எல்லாம் எதார்த்தமாக போகின்றன என்பதே உண்மை . நாம் உண்மையில் அங்கே பாத்திக்க பட்டு இருந்தால் இப்படி பேசுவோமா ?????????????


"இருந்தாலும், ஒரு பார்வையாளன் என்ற முறையில் அதை பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்...
அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது"

என்று சொல்கிறார் பார்வையாளன் . அது என்ன நடைமுறைக்கு ஏற்றவாறு ????யார் நடைமுறைக்கு ஏற்றவாறு அன்டேர்சன் காப்பாற்றும் இந்திய நடைமுறைக்கு ஏற்றவாறா ????
இல்லை அமெரிக்க நடைமுறைக்கு ஏற்றவாறா ?????"பாரவையாளனாய் இல்லாமல் எப்பொழுது பங்கேற்ப்பவனாக இருக்க போகிறீர்கள் .

இந்திய நடுத்தர மக்கள் பார்வையாளனாகவே இருப்பது தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்

PAARVAIYAALAN

Sunday, 25 July 2010

நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு - உபேந்திரநாத்பந்த்யோபபாத்தியாய்

சற்றேக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர்களாக வாழ்ந்த உண்மை மனிதர்களின் சுயசரிதை இது. அரவிந்தர் போன்ற தம்முடைய சக தோழர்கள் ஆன்மீகத்திற்கு திரும்பிய பிறகும் பத்திரிகைகளில் எழுதியதன் பயனாகவும் அந்தமான் சிறையின் 12 ஆண்டுகளோடு கூடுதலாக மூன்றாண்டுகள் தண்டனை கிடைக்கப் பெற்றது அவருக்கு.

சிறுவயதில் துறவு, பிறகு ஆசிரியப் பணி, கர்சன் பிரபு வளர்த்தெடுத்த வங்கத்தின் மெய்யான மறுமலர்ச்சியின்பால் ஈர்க்கப்பட்டு ஜூகந்தர் இயக்கத்துடன் இணைந்து கொண்டது, பத்திரிக்கையில் பொறுப்பு எடுத்துக் கொண்டது.. என இந்த கடந்த நூற்றாண்டின் காரியவாதமற்ற இம்மாந்தர்களின் விழுமியங்களை அசைபோட்டால் மனம் கூனிக் குறுகுகிறது.

கதையின் நாயகர்களது மனதில் ரோபோஸ்பியர்களும், ஆனந்தமடத்தின் ஜீவானந்தமும் குடி கொண்டிருந்தார்கள். அதுதான் மேற்தட்டு வகுப்பை சேர்ந்த பாரீந்திரன் போன்றவர்களை பத்திரிகை ஆரம்பிக்கவும், தீவாந்திரம் செல்லவும் பணித்த இக்கனவு அவர்களை பழைய பார்ப்பனீய விழுமியங்களில் இருந்து விடுவித்து இருக்கவில்லை. அதனால்தான் தமது தலைமைக்கு கூட ஜான்சி ராணியின் படையில் 1857 சிப்பாய் கலகத்தில் போரிட்டு துறவியானவரை தேட வைத்தது. அன்று பிரிட்டிஷாரின் அவதூறுப் பிரச்சாரமான அராஜகவாதிகளுக்கு பதிலளிக்கும் முகமாகத்தான் இந்நாவலும் பிறந்தது.
பத்திரிகை மீது அடக்குமுறை வந்தவுடன் வரலாற்று சிறப்பு மிக்க மாணிக்தாலா தோட்டத்திற்கு சில வாழ்க்கையை தேசவிடுதலைக்கு ஒப்புக்கொடுத்த இளைஞர்களுடன் குடியேறி மத பயிற்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார்கள். அம்முயற்சியின் ஒரு அங்கம்தான் துறவி தேடி ஆசிரியர் தேவவிரதனோடு ஊர் ஊராக சுற்றிய கதை.

பிறகு வைசிராயை கொல்லும் நோக்கத்தில் நடத்திய குண்டுவெடிப்பு, அரசின் ரசிய நிகிலிஸ்டுகள் பூச்சாண்டி, நேபாள உதாஸி மதப்பிரிவினரின் மத ஏற்பு நடவடிக்கைகளின் எளிமை, 1907 சூரத் காங்கிரசில் காங்கிரசு நடத்திய மிதவாத தீவிரவாத நாடகத்தின் மூலம் செயலுக்கு தயாராக இருந்த இளைஞர்களை செயலின்மைக்கு தள்ளிய அட்டைக்கத்தி தலைவர்கள் பற்றிய பாரீனின் ஆதங்கம், அதற்குள் ஒளிந்திருந்த மராத்திய சித்பவன் பார்ப்பன கும்பலின் அண்டிப்பிழைத்தலை அம்பலப்படுத்தியது, அப்போது உல்லாஸ்கர் தத்தா தலைமையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்... என நாவல் இந்தியாவின் 1906 க்குப் பின்னான காலத்தில் விரிகிறது.

பிரிட்டிஷ் நேவிகேசன் கம்பெனிக்க எதிராக வங்கத்தில் இவ்வியக்கம் வளரத் துவங்கிய இக்கால கட்டத்தில்தான் பாரிசார் என்ற இடத்திலிருந்த வியாபாரிகள் அனைவரும் பிரிட்டிஷாருக்கு எதிராக கடல் வணிகத்தை சொந்தமாக துவங்கினர். இதே காலகட்டத்தில்தான் தனது தலைப்பிள்ளையை மரணப்படுக்கையில் விட்டுவிட்டு பம்பாயில் கப்பல் வாங்க அலைந்து கொண்டிருந்தார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. நாவலின் நாயகர்கள் அறியாத அவரை ஒரு துரோகியை குழப்பமடைய செய்வதற்காக தங்களுடன் இணைத்தும் அவர்கள் கதைப்பார்கள்.

பிறகு முஸபர்பூர் குண்டுவெடிப்பிற்கு பிறகு மாணிக்தலா தோட்டத்தை போலீசு சுற்றிவளைத்து அனைவரையும் கைது செய்கிறது. அரவிந்தரும் கைது செய்யப்படுகிறார். விசாரிக்கும் மாஜிஸ்டிரேட் இளைஞர்களிடம் ’’உங்களால் இந்தியாவை ஆள முடியுமா ? ’’ என்று வினவுவார். ’’நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் நீங்கள்தான் ஆண்டீர்களா ? அல்லது உங்களை ஆள வரச் சொல்லி நாங்கள் அழைத்தோமா ?’’ என்று அந்த வெள்ளை நீதிபதியிடம் வங்கத்து வேங்கைகள் சீறுவார்கள். இன்று இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு எங்களை ஆள வாருங்கள் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குழைகிறார் மன்மோகன் சிங்.

உயர்நடுத்தர வர்க்க பிரிவை சேர்ந்த இவர்களுக்கு சிறையில் திருட்டுத்தனமாக தின்பண்டங்களை வீட்டார் வழங்கும்போது, பிற்காலத்தில் பகத்சிங்கின் உற்ற தோழனாக இருந்த ஆசாத் ம், அவரது தோழர்களான அசுவமில்லா கானும் இருந்த அனுசீலன் சமிதி அமைப்பின் தோழர்கள் பழம், பிஸ்கெட் என அத்தோழர்களுக்கு அனுப்பி வைப்பர். சிறையின் எளிய லாப்ஸி உணவு கூட அவ்வர்க்க பின்னணியில் வந்த தோழர்களுக்கு சிறப்பான உணவாக படுகிறது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நரேன் என்பவன் அப்ரூவர் ஆகிறான். அவனை பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு மருத்துவமனையை தேர்வு செய்கிறது. இடையில் சத்யேன் என்ற தோழருக்கு சிறை உணவின் போதாமையால் காச நோய் கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சாவு நிச்சயம் என்று தெரிந்த பிறகும் அந்த வாழ்க்கையை உருப்படியாக செலவழிக்க விரும்பும் சத்யேன் துரோகி நரேனை கொல்வதற்கு கானாயி யின் உதவியை கோருகிறார். வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் போராளி ஆகிறார்கள் எனக் கருதிக் கொண்டிருப்போர் அவசியமாக சத்யேனின் தன் நம்பிக்கையையும், சூழல் நம்பிக்கையற்ற நிலையிலும் பயன்பாடாக மாற்ற முனையும் நம்பிக்கையையும், அதன்வழி போராளிகளின் பாத்திரத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் சரியானது.

ஒருவழியாக துரோகியை கானாயி தீர்த்து கட்டுவான். பிஸ்டல் எங்கு கிடைத்தது என்ற கேள்விக்கு அன்று இறந்து போனவராக கருதப்பட்ட வங்கப் புரட்சியாளன் குதிராம் போஸின் ஆவி வந்து தந்ததாக பதில் அளிப்பார் கானாயி. கானாயி க்கு உறுதி செய்யப்படும். 16 பவுண்டு எடை அதிகரிக்க பின்னர் தூக்குமேடைக்கு முகமலர்ச்சியுடன் செல்வான் கானாயி. அவனை தூக்கிலேற்றிய ஐரோப்பிய காவலாளி பாரீனிடம் வந்து இதுபோல இன்னும் எத்தன பசங்க உங்ககிட்ட இருக்காங்க என்று கலக்கத்துடன் கேட்பான். 1909 மே மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 20 ஆண்டுகள் கழித்து சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு பதில் அளிப்பான் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் போது மதச்சார்பு, மத நம்பிக்கையின் மீதான எள்ளல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை இவற்றுக்கிடையில் இளைஞர்கள் சச்சரவில் இறங்குவதும் நடைபெற்றது. முடிவில் உல்லாஸ்கார் மற்றும் பாரீனுக்கு தூக்குத்தண்டனை உள்ளிட்டு 15 பேருக்கு தீவாந்திர தண்டனை உறுதி செய்யப்படும்.
கப்பலில் கீழ்தளம்தான் கைதிகளுக்கு என்ற சட்டதிட்டத்தை எதிர்த்து இவர்கள் துவங்கிய போராட்டம் அடுத்த 12 ஆண்டுகளும் அந்தமான் சிறையிலும் தொடர்ந்தது. அன்றைய அந்தமான் சிறையில் பர்மிய முசுலீம்கள் நிறைய இருந்ததையும், மதராசி பிராமணர்கள் யாரும் இல்லாமல் போனதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

கைதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சைக்கு அனுப்பாமல் தீவாந்திரம் அனுப்பியிருந்தது. ஒரு சேர் (பத்து கிலோகிராம்) தேங்காய் நாரை காய்ந்த மட்டையை வெறும் கல்லில் உதிராமல் அடித்து சேர்க்க வேண்டும் ஐரோப்பிய மேட்டுக்குடிகளின் சோபாக்களுக்கு. அல்லது முப்பது பவுண்டு எண்ணெய் எடுக்கும் அளவுக்கு செக்கிழுக்க வேண்டும். இவற்றை புரட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமது வழியில் புரட்சி சாத்தியமா என்ற விவாதங்கள் கிளம்பி அதன் கோட்பாடற்ற தன்மையினால் இன அரசியலில் போய் முடியும். கொடுக்கும் வேலையை ஏற்று நடக்கும் இத்தகைய தோழர்களுக்கு நந்தகோபால் என்ற பஞ்சாபிய கைதி வந்துதான் சிறை விதிகளை சுட்டிக்காட்டி மறுக்க கற்றுத் தருவார். இவ்வளவுக்கும் அவர் ஒரு சாத்வீகவாதி.

போராட்டம் துவங்கியவுடன் தனிமை சிறை, அடி என கொடுமைகளுக்கு பஞ்சமே இருக்காது. நல்ல உணவு, உடை, கடுமையான வேலையில் இருந்து விடுதலை என்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அந்தமான் கைதிகளின் தியாகத்தில்தான் இன்று சிறையின் சட்டதிட்டம் ஓரளவாவது இருக்கிறது என நினைக்கையில் கண்ணில் நீர் முட்டுகிறது. இடையே உல்லாஸ்கரும் மனநிலை பிறழ்ந்து விடுகிறான். சென்னைக்கு அனுப்பபடுகிறான். போராட்டத்தின் பலனாக விசாரணை கமிசனும் போடப்படுகிறது.

முதல் உலகப் போர் துவங்குகிறது. எண்ணெய் ஏற்றுமதி தடைபடுவதால் உற்பத்தி அந்தமானில் தேங்குகிறது. தோல்வி பயமும் அவர்களை பயமுறுத்துகிறது. எம்டன் கப்பலின் குண்டுவீச்சும், ரசிய சோசலிச புரட்சியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. கைதிகளுக்கோ ஜெர்மனியை எதிர்த்து கருத்து சொல்லி தப்பிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அதற்காக ஜெயில் சூப்பிரண்டு ஜெர்மனிக்கும் அளிக்கும் சாபத்தை கூட (ஜெர்மனி செத்த பிறகு நிச்சயம் நரகத்திற்குதான் செல்லும், தேவலோகத்தில் இங்கிலாந்துக்கு அருகில் அது இடம்பெற வாய்ப்பே இல்லை) அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.

யுத்தகாலத்தில் அரசின் செலவினங்களை குறைப்பதற்காக மிகுந்த பிரயாசைப்படும் அவர் ஆறு மாதம் முன்னரே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கையில் அனுமதி மறுக்கப்படும். தன்னை அராஜகவாதி என அறிவித்துக் கொண்டு சிம்லாவின் கடவுள்களை திருத்த முடியாது என்றும் கூறுவார். பிறகு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்திற்காக அரசை பாராட்டவும் அவர் தவறவில்லை. நடுத்தர வர்க்கத்தின் இவ்வகை மாதிரிகளை இன்று கூட நீங்கள் நடைபாதையில் அலுவலகங்களில் கண்டு களிக்கலாம்.

கதர் கட்சி தோழர்களின் தீவாந்திரமும் இவர்களோடுதான் ஒருசேர நிகழ்ந்தது. வரலாற்றின் பாடங்கள் எதனையும் முன்னே வைத்திருக்க தெரியாமல் இந்திய கடல் எல்லைக்குள் மாயனத்திற்கு அனுப்பப்பட்ட கனடா வாழ் இந்திய குறிப்பாக சீக்கிய பட்டாணிய மக்களின் அர்ப்பணிப்பும், வரலாற்றுப் பாடத்தை கற்காமல் கீதா உபதேசத்திற்கு அலைந்ததோடல்லாமல் இரகசிய இயக்கம் கட்ட முடியாமலும் தோற்ற இவ்வங்க இளைஞர்களுக்கு 1967 ல் நக்சல்பாரி கிராமத்திலிருந்து எளிய பழங்குடியின மக்கள் தமது வில், அம்பு மற்றும் கோடாரிகளால் பதில் சொன்னார்கள். ஆம் உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம். இதை தடுக்க வரும் மத்திய மாநில அரசுகளை விரட்டியடிப்போம்.வெளியீடு ; பல்கலை பதிப்பகம், 25 தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24
விலை; ரூ. 45
மொழிபெயர்ப்பு; சு. கிருஷ்ணமூர்த்தி


கட்டுரை : முருகன்

பின்குறிப்பு :
நண்பர் ஒருவருக்கு வலைபூ இல்லை , இலக்கிய பரிச்சியமும் வரலாறும் நன்கு தெரிந்தவர் , இதை என் வலைப்பூவில் போடும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டுளேன் .அந்த கட்டுரையை படித்த பொழுது , அக்கால பகத் ஆசாத் எப்படி இருந்தனர் ,காலனி ஆதிக்கத்தை எதிர்த்து எப்படி போராடினர் .இக்கால இளைஞன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஒப்பிடும் பொழுது கூனி குறுக வேண்டியதாய் இருக்கிறது . இன்று போபால் விட வாயு சம்பவம் நடந்ததற்கு நாம் குரல் கொடுப்பதாய் இல்லை . தண்டக்காரன்யாவில் பிரச்சனை என்றால், நாம் குரல் கொடுக்காமல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கூட தெரியமால் ஊடகங்கள் சொல்வதை நாமும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் , அப்படிப்பட்ட சூழலில் இந்த புத்தக மதிப்புரை தேவை என்றே நினைக்கிறேன் . நன்றி நண்பர்களே முடிந்தால் புத்தகத்தை வாங்கிவிட்டு படிப்போம் .

Saturday, 24 July 2010

திரையை விலக்கி தெளிவது தானே அறிவு - இரும்புத்திரை அரவிந்த்

போபாலில் நடந்தது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை . இதை வேறு யாரும் சொல்லவில்லை அங்கே இருக்கும் பத்திரிகையாளர்கள் சொன்ன உண்மை அது . அங்கு 1984 மட்டும் விபத்து நடக்கவில்லை அதற்க்கு முன்பு பல முறை நடந்துள்ளது நண்பா அதற்க்கான ஆதாரங்கள் பல உள்ளன .முதலில் பழைய தொழில் நுட்பம் உபயோகபடுத்தினதே விடம் கசியக்காரணம் , அப்படி இருக்க எப்படி விபத்து என்று சுருக்கிவிட முடியும் .

ஆனால் என்ன செய்ய... நமக்குத்தான் வருமுன் போராட வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறதே.. நாளை கொண்டுவர உள்ள அரசின் சட்டத்தின் படி இந்தியாவில் இதுபோன்ற விபத்துகள் நடந்தால் இனி நட்ட ஈடு 300 கோடிக்கு மேல் தரக் கூடாது என சீலிங் போட்டிருக்கிறார்கள். அதனை விட நாயை பத்தி விட்டதும், கோழி ரோமம் போட்டதும் அவருக்கு முக்கிய பிரச்சினையாகி விட்டது. பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்டது பெரியதா ????? இல்லை மாடு நாய் பிரச்சனை பெரியதா என்று நீ தான் சொல்ல வேண்டும் நண்பா .

மூன்றாவது பாயிண்டுக்கு மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும். ஒரு தாய், மகள் விசயத்திற்காக வருத்தப்படுவது சரிதான். ஆனால் மூன்று பாயிண்டிலும் மலையாள வெறுப்பு புரையோடி போயிருக்கிறது என நான் சொல்ல மாட்டேன். வாச்சாத்தியில் வால்டர் தேவாரத்துடன் சென்று நூற்றுக்கணக்கான மலையக பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவர்களில் கர்நாடக தமிழக வனத்துறையினரும் போலீசாரும் கலந்துதானே இருந்தனர். அதனைப் பற்றி நீ எழுதி இருக்கலாம். ஒருவேளை அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் அல்லது போபாலை போல முடிந்து போன கதை என்று நீ தவிர்த்தும் இருக்கலாம். கயர்லாஞ்சி கிராமத்தின் போக்மாங்டே குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி ஒரு தலித்திற்கு இழைக்கப்பட்டது அல்ல, தமிழர்களை விரட்டியடித்த மராட்டியர்களுக்கு இழைக்கப்பட்ட பாடமாக உங்களுக்கு தெரிந்திருக்கலாம். குஜராத் படுகொலை கூட உனக்கு விபத்து எனப் படலாம்.மாநிலம் வேறுபட்டாலும்
அதிகார வர்க்க புத்தி மாறுமா என்ன ????

இந்த பிரச்சனைகளை பேசக்கூடாது என்றில்லை பேசலாம் ஆனால் போபால் விடயத்துடன் ஒப்பிடுவது தவறு . எந்த பிரச்சனைக்கு பிரதான மதிப்பு கொடுக்க வேண்டுமென்றால் , பல மக்களை பாதிக்கும் விடயத்திற்கு , போபால் பல மக்களை பாதித்ததா இல்லையா ???? போபால் பல மக்களை பாதித்ததா இல்லை ..........நீ சொல்லும் அந்த மூன்று புள்ளிகள் அதிக மக்களை பாதித்ததா நீ தான் முடிவு செய்ய வேண்டும் .

கம்யூனிச நாடு இதுவரை உலகத்தில் எங்குமே வரவில்லை. அப்புறம் எப்படி சீனா கம்யூனிஸ்டு நாடானது என தெரியவில்லை. இதனை புரிந்து கொள்ள கம்யூனிச நாடு எப்போது சாத்தியம் என்பதை புரிந்து கொள்ள கம்யூனிசத்தை முதலில் தெரிந்து கொள்வதுதானே சரியானது. தெரியாத ஒன்றைப் பற்றி தீர்க்கமாக எழுதுவதுதான் சரியானது என்றால் அதில் இருந்து மாறி தெரிந்து கொண்டு விமர்சிக்கும் எனது நிலை ஒன்றும் முன்னதை விட பரிதாபத்திற்குரியது இல்லையே.. அருணாசல பிரதேசத்தை சீனாவும் இந்தியாவும் கூறு போட அந்த ஏழு சகோதரிகள் என்ன இந்திய ஆளும் வர்க்கத்தின் கூத்தியாள்களா.. கேவலம் நாயப் பத்தி விடுறான், குப்ப கொட்டுறான், வீடியோ பிடிக்கிறான்கிறதுக்காக நீ கக்கும் மலையாள வெறுப்போடு ஒப்பிட்டால் உங்களோடு எந்த வகையிலும் இணைய முடியாத படேலின் கற்பனையிலும், சிறப்பு காவற்படையின் துப்பாக்கியின் கீழும் மாத்திரமே இந்தியாவுடன் இணைய முடிந்த அந்த சகோதரிகளின் கண்ணீர் உன் இதயத்திற்கு அருகில் ஒலிக்கவில்லையா... அதனை விடவும் சவுக்கு இணைய தோழர் கைதுக்கு காரணமான நக்கீரன் காமராஜ் போன்றோர் முன்வைக்க விரும்பும் தமிழ் தேசியம் உன் கண்களுக்கு ஜனநாயகத்திற்கான போராட்டமாக படுவதுதான் முரண்பாடாக உள்ளது.

உலக அளவில் மூன்றாம் உலக நாடுகளையும், ஆசிய ஆப்ரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்களையும் தங்களது சேரிகளைப் போல (அனுபவிப்பதற்கும், குப்பை கொட்டுவதற்கும்) பாவிக்கும் உலக முதலாளிகளை குறிப்பாக அமெரிக்காவை பற்றி என்ன கருதுகிறாய் நீ. கம்யூனிஸ்டுகள் மாத்திரம் இவர்களை விமர்சனம் செய்யவில்லை என்பதும் உனக்கு தெரியுமா.. முதலில் நமது வீட்டை பாருங்கள். சுற்றத்தை சரி செய்யுங்கள் என்று நீ கூறக்கூடும். என்ன செய்ய கம்யூனிஸ்டுகள் வந்துதான் ஒன்றாம் வகுப்பில் படித்த நான்கு மாடு ஒரு சிங்கம் கதையை சொல்லி ஒற்றுமையை புரிய வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனாலும் இந்த லாஜிக்தான் எனக்கு புரியவில்லை. கம்யூனிஸ்டுகள் மலம் கழிக்க போன பிறகு கழுவ வேண்டும் என சொல்லி விட்டார்கள் என்பதற்காக தனிநபர்களின் பிரச்சினையே சமூகத்தின் பிரச்சினை எனக் காட்ட முனைபவர்கள் அனைவரும் குளத்திடம் கோபித்துக் கொண்டுதான் போகிறார்கள். என்ன செய்ய ச்ச்சின் கூட்டம் கூட வழி என்றும், விதர்பா வுக்கு காரணமான துரோகிகள் தனிநபர்களாக இருந்த போது கண்ணில் தெரியாததும் தனித்தனி பிரச்சினை இல்லையே.


முதலில் படி,வினவு தோழர்கள் போலி கம்யூனிசத்தை, மேற்கு வங்கத்தை சிங்கூர் மற்றும் ந்ந்திகிராம் போன்ற சமூகத்தின் பொதுப்போக்கை பாதிக்கும் விசயங்களை, கேரளத்தை முல்லைப் பெரியாருக்காக எத்தனை முறை எழுதி உள்ளார்கள் என அதன் மூலம் தெரியவரலாம். கம்யூனிசத்தை கற்பதற்கும் கொஞ்சம் முயற்சித்து அதன் பிறகு விவாதிக்க வா. ஒருவேளை கற்று கொண்டால் தனது பழைய நிலை மாறி விடுமோ என பயந்தால் அறிவு பற்றி உன் புரிதல்தான் சந்தேகத்திற்குரியது.

பின் குறிப்பு
ஐந்து லட்சம் மக்களை 26 ஆண்டுகள் பாதித்த விடயத்திற்காக உயிர் நண்பனை பேச அழைத்தேன் . ஒவ்வொருவருக்கும் சில விடயங்கள் முக்கியமாய் இருக்கிறது என் நண்பனுக்கு வேறு விடயங்கள் முக்கியமாய் இருக்கிறது . நான் சமூகத்திற்கு முக்கியமான விடயத்தை தான் தேர்வு செய்கிறேன் என்று நம்புகிறேன் . என் நண்பனும் மாறுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது . மாற்றம் ஒன்று தானே மாறாதது . மாறுவது
முக்கியம் அல்ல எதற்காய் மாறுகிறோம் என்பதே பிரதானம் .

Friday, 23 July 2010

புலிகேசியின் போபால் பற்றிய தளம் ஆதரவு அளியுங்கள்

போபால் பற்றி அனைவரும் எழுத தயங்கும் பொழுது , நண்பன் புலிகேசி அதற்காய் தனி தளம் அமைத்து உள்ளான் .
சொந்தமாய் வலைப்பூ இல்லாதவர்கள் கூட எழுதி அனுப்புங்கள் . நாம் சங்கம் சங்கம் என்று சொல்கிறோம்
ஆக்கப்பூர்வமாய் ஏதாவது செயல்படுகிறோமா ????? சவுக்கு சங்கர் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெகு
சில பதிவர்களே . போபால் விடயத்தை பற்றி யாரும் வாயை திறக்க வில்லை . தொடர் பதிவு என்று கூட அழைத்து ஆயிற்று .புலிகேசி தளத்தில் அனைவரும் எழுதுங்கள் போபால் பற்றி . இது ஒரு வரலாற்று ஆவணமாய் இருக்கட்டும் ,உலகமயமாக்கலுக்கு சவுக்கடி கொடுப்பதாய் இருக்கட்டும்Blog for BHOPAL

பதிவுலக தோழர் சவுக்கு சங்கர் கைது
பதிவுலக தோழர் சவுக்கு சங்கர் கைதி செய்யப்பட்டு இருக்கிறார் . சவுக்கு ஒரு நேர்மையான ஊடகமாய் இருந்ததால் வந்தது வினை . நாம் பதிவர் சந்திப்பு எல்லாம் போகிறோம் , பதிவர்களுக்கு சங்கம் பற்றியெல்லாம் பேசுகிறோம் . நாம் ஒன்று கூடி எதிர்ப்பு காட்ட வேண்டிய தருணம் . என் கண்டனத்தை கடுமையாக பதிவு செய்கிறேன் தோழர்களே .

Thursday, 22 July 2010

அன்று போபால் இன்று ஸ்ரீகாகுளம் மற்றும் தண்டகாரண்யா இனையும் புள்ளி
நேற்று போபால் இன்று தண்டகாரண்யா நாளை நம் ஊராக கூட இருக்கலாம், என்று உலகமயமாக்கம் நாள் தோறும் ஏதாவது ஒரு விடயங்களை நடத்திக்கொண்டே இருக்கிறது.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு பத்து ஆயிரம் ஏக்கர் நிலம் ையகப்படுத்தப்படுகிறது. இத்தனைக்கும் அது செழிப்பான நிலம் அந்த நிலங்களை தரிசு நிலங்கள் தான் என்கிறது அரசாங்கம் . மேலும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் அந்த அனல் மின் நிலையம் வருவதை எதிர்க்கிறார்கள் . இப்படி இருக்க அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் பொழுது அங்கு இருக்கும் விவசாயமக்களும் மீனவ நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் . போலிஸ் அவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர் . சுட்டதில் நான்கு மீனவர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு பாட்டியை அடித்தே கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த உலகமயமாக்கம் மூன்றாம் உலகநாடுகளின் மக்களை கொன்று குவித்து ,பிணங்களை விற்பனை செய்து உயிர் வாழ்கிறது . தண்டகாரண்யாவில் நடக்கும் யுத்தத்திற்கு ஒரு உதாரணமே இந்த ஆந்திரா விடயம் . தண்டகாரண்யா, போபால் , மற்றும் ஆந்திராவில் நடக்கும் இவ்விடயங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி இருக்கிறது . இது எல்லாம் பின்னப்பட்டு இருக்கும் புள்ளி உலகமயமாக்கம் .மக்கள் உயிரோ மக்கள் நலனோ இங்கு முக்கியம் அல்ல . முதலாளிகள் ஏகபோகமாய் சுரண்டவேண்டும் . லட்சம் பேர் செத்தாலும் முதாலாளியும் அவன் குடும்பமும் அளவுக்கு மீறிய சொத்துக்களை சம்பாதித்து கொண்டே இருக்க வேண்டும் அவற்றை பாதுகாக்கவே போலிஸ் ராணுவம் அனைத்தும் .யார் சொன்னது இந்திய சுதந்திர நாடு என்று.

பின்குறிப்பு :
இந்த செய்தியை சுட்டிக்காட்டிய புலவன் புலிகேசிக்கு நன்றிகள் .பதிவுலகில் நானும் போபால் பற்றி எழுத சொன்னேன் யாரும் எழுதுவதை இல்லை . குத்து ,பதிவுலகத்தில் நான் எப்படி பட்டவன் என்ற தொடர்பதிவுகள் எழுதுகிறார்கள் . ஆனால் புலிகேசி போபால் விடயத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறான் சந்தோஷமாய் இருக்கிறது . இந்தவிடயத்தையும் சுட்டிக்காட்டியதும் புலிகேசி தான்

பேருந்திலும் மழை பெய்யும்சில தருணங்கள்
வாழ்வை புரட்டி போடும் ,
சில பயணங்கள்
நம்முடன் பயணம் செய்யும் ,
ஏதோ ஒரு பேருந்தில்
யாரையோ சந்திக்க போக ,
விழிகள் சந்தித்தேன்
அதே பேருந்தில்
சில நாட்கள்
தூரப்பார்வை ,
சில நாட்கள் கிட்டப்பார்வை
பக்கத்து பக்கத்து இருக்காய்
என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது காதல் ,
காதல் பிரிந்த நாட்களில்
நீ ஒரு ரயிலிலும்
நான் மற்றொரு பேருந்திலும்
பயணத்திலும் காதல் பயணத்தை பிரித்தோம் ,
மாநகர பேருந்தில்
ஏதோ ஒரு பையன்
யாரோ ஒரு பெண்ணை பார்த்துக்கொண்டிருக்கிறான் .
எனக்கு ஏனோ பதறுகிறது

Wednesday, 21 July 2010

ஏன் பதிவர்கள் போபால் பற்றி தொடர்பதிவு எழுதவேண்டும்


நண்பர்களை தொடர்பதிவிற்கு என்று அழைத்தேன் ,யாரும் வருவதாய் தெரியவில்லை .வால் பையன் எழுதுவார் என்ற நம்பிக்கை உள்ளது . அதற்க்கு முன் ஏன் இந்த விடயங்களை எழுத வேண்டும், ஏன் பதிவர்கள் இந்த விடயத்தில் ஒன்று கூட வேண்டும் ????
1 . போபால் பிரச்சனை உலகமயமாக்கலை தோல் உரித்து காட்டுகிறது . பெரிய அரசியல் தெரியவில்லை என்றாலும் மேலோட்டமாய் பார்த்தாலே அந்த அநீதி புரியும் என்றே நினைக்கிறேன்.26 வருடம் பிறகு நீதி சொல்கிறேன் என்று சொல்கிறார்கள் யாரும் ஒரு நாள் கூட ஜெயிலுக்குள் இல்லை என்பதே வெட்கக்கேடு .
2 . உலகமயமாக்கல் மூன்றாம் உலக நாடுகளில் கழிவு நிறைந்த தொழிற்சாலைகளை கொண்டு செல்கிறது . அதாவது ஆசியா ,ஆப்ரிக்கா இலத்தீன் அமெரிக்க போன்ற நாடுகளில் , அபாயம் நிறைந்த தொழில்களை கொண்டு செல்கிறது . இதனால் முதலாளிகளுக்கு மலிவான கூலி கொண்ட உடல் உழைப்பு கிடைக்கிறது ,லாபம் முதலாளிக்கு அபாயம் என்றால் நாட்டு மக்களுக்கு , என்ற கொள்கையிலே இருக்கிறது , போபால் சிறந்த உதாரணம் .
3 . சிலர் கேட்கிறார்கள் தொழிலாளிகளின் கவன குறைவிற்கு முதலாளி எப்படி காரணமாய் இருக்க முடியும் என்று . methyl isocyanide தடை செய்யப்பட்ட தொழில் நுட்பம் . அதற்க்கு இந்திய அரசு எப்படி அனுமதி வழங்கியது ????? அபாயகரமான தொழிற்நுட்பத்தை ஏன் இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் அதாவது இங்கு உயிர்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்பதே அதன் பொருள் .
4 . சரி மருந்து கொடுத்த மருத்தவமனையை தடை செய்தார்களாம் போபாலில் . ஏன் என்றால் , மருந்து சரியாக வேலை செய்தால் , லீக் ஆனது METHYL ISOCYANADE என்று தெரிந்துவிடும் . அது முதலாளிக்கு எதிரான ஆதாரமாம் , அதனால் அந்த மருந்துகளை தடை செய்தது அரசு இதை விட கொடுமை என்ன இருக்கமுடியும் . உயிர் மயிர் என்று சொல்கிறது உலகமயமாக்கம் .
5.இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாய் பிறக்கிறது , தலை நீண்டு பிறக்கிறது , நாளை நம் குழந்தைகள் கூட அதை போல ஆகலாம் . அங்கு தண்ணீரில் விடம் கலந்துள்ளது , தாய்ப்பாலில் விடம் கலந்துள்ளது குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் . அன்டேர்சன் வைத்த விடம் பரம்பரை பரம்பரையாய் கொள்கிறது .
6 இதை போன்ற ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன , அந்த புதிய ஜனநாயக சிறப்பிதழில் . 17 கட்டுரைகள் .............அறிவயல் பூர்வமாய் விளக்கி உள்ளார்கள் ...............தொழிற்நுட்பம் முதல் அனைத்து விடயங்களிலும் துரோகம் நடந்து கொண்டிருக்கிறது . இன்று போபால் நாளை மதுரை சென்னையாக கூட இருக்கலாம் எனினும் எனக்காக அந்த புதிய ஜனநாயகம் புத்தகத்தை ஒரு முறையாவது படியுங்கள். அந்த PDF லிங்க் போன பதிவில் உள்ளது நன்றி நண்பர்களே .

PDF டவுன்லோட்

Monday, 19 July 2010

போபால் ஒரு தொடர் பதிவு - பதிவுலகத்திற்கு


உலகமயமாக்கலின் கோரத்தாண்டவம் , போபால் விட வாயு வழக்கில் தெரிந்தது . இருபத்தி ஆறு வருடம் கழித்து தீர்ப்பு என்ற பெயரில் அநீதி நடந்தது . அதை பற்றி நம் பதிவர்கள் வேதனையே குறைந்தது நாம் அனைத்து பதிவர்களும் , அரசிலுக்கு அப்பாற்ப்பட்டு எழுத வேண்டும் போபால் விடயங்களை பற்றி அதில் இருக்கும்
உலகமயமாதலின் சுரண்டல் பற்றி . நாம் எது எதற்கோ பதிவர் சந்திப்பு என்று கூட்டுகிறோம் இதற்க்கு ஏன் கூட்டக்கூடாது . நாம் எது எதற்கோ தொடர் பதிவு எழுதுகிறோம் இதற்க்கு ஏன் தொடர் பதிவு எழுதக்கூடாது . வினவு தன்னுடைய தளத்தில் புதிய ஜனநாயகம் லிங்க் கொடுத்துள்ளார் , அது PDF தான் . அதை முழுவதுமாய் படியுங்கள் ,

அந்த புதிய ஜனநாயகம் புத்தகத்தில் சான்றுகளுடன் போபால் பற்றி விரிவாய் விளக்கப்பட்டுள்ளது . அவர்கள் மீது ஆயிரம் விமர்சனம் உங்களுக்கு இருக்கலாம் ஆனால் அந்த புத்தகத்தை ஒரு முறை படியுங்கள் . ஆளுக்கு ஒரு பதிவு போடுங்கள் . அதில் 17 கட்டுரைகள் இருக்கிறது , ஹிந்து விதர்பா விடயத்தில் எழுதிக்கொண்டிருக்கும் சாய்நாத் கட்டுரை உட்பட .

முடிந்தவர்கள் தரவிறக்கம் செய்து படியுங்கள் , படித்து விட்டு பதிவு போடுங்கள் . முடியாதவர்கள் வெளியில் பத்து ரூபாய் தான் புதிய ஜனநாயக புத்தகம் , அதை வாங்குங்கள் . இதில் பார்ப்போம் பதிவுலக ஒற்றுமையை . ஏன் என்றால் எனக்கு இருக்கும் வாசகன் புலிகேசிக்கு இருக்க மாட்டான் . புலிகேசியை படிப்பவன் பலாசீயை படிக்காமல் இருக்கலாம் . ஏன் கேபிள் சங்கர் அவருக்கு தனி வாசகர்கள் , அதனால் எல்லாரும் எழுதினால் தான் மக்களுக்கு விடயம் செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . "பதிவுலகத்தில் நான் எப்படி பட்டவன் " போன்ற தனிமனித தொடர்பதிவுகள் எழுதிகிறோம் ஏன் நாம் மக்களுக்காய் எழுத கூடாது . இந்த கட்டுரைகள் பலபேருக்கு சேர வேண்டும் .நான் எழுதும் கட்டுரைகளை ஒரு வால்பையன் , வானம்பாடிகள் , ஈரோடு கதிர் போன்றவர்கள் எழுதினால் மக்களுக்கு பயன் கிடைக்குமே .

ஏன் என்றால் போபாலில் நடந்தது விபத்து அல்ல . மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றால் நம் உழைப்பு
தேவை. ஒரு கை தட்டினால் ஓசை அல்ல . உரக்க குரல் நான் பதிவுலகத்தில் எனக்கு பிடித்த வால் பையன் , பலாசீ , அகல்விளக்கு , ஈரோடு கதிர் , வானம்பாடிகள் ஐயா போன்றவர்களை போபால் விட வாயு பற்றி எழுத அழைக்கிறேன் . தனிமனித விருப்பு வெறுப்பை மீறி , நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் . இது நட்ப்பிற்க்கான தொடர் பதிவு அல்ல , சமுதயதிற்க்கான தொடர் பதிவு தட்ட மாட்டர்கள் என்ற நம்பிக்கை உள்ளது


1 வால் பையன் ,
2 பலாசீ ,
3 அகல்விளக்கு ,
4 ஈரோடு கதிர் ,
5 வானம்பாடிகள்
6 இரும்புத்திரை அரவிந்த்
PDF டவுன்லோட்

பின் குறிப்பு :

மேலும் விடுபட்ட பதிவர்கள் ஜக்கி சேகர் , மாதவராஜ் , கேபிள் சங்கர் , ஊடகன் போன்ற பதிவர்கள் கூட எழுதினால் நன்றாய் தான் இருக்கும்

Saturday, 17 July 2010

ராகுல்ஜி பொதுஉடைமை தான் என்ன


ராகுல்ஜி எழுதிய "பொதுஉடைமை தான் என்ன " என்ற புத்தகம் படித்தேன் . எளிய வாசகனுக்கு அறிவயல் பூர்வமான விளக்கங்கள் , இது ஒரு சிறந்த அறிமுக நூல் என்று சொல்வேன் . முதலாளித்துவம் எப்படி தோன்றுகிறது , நீராவியின் கண்டுபிடிப்பு எப்படி தொழில் மாயம் ஆக்குகிறது என்பதை தெளிவாய் எழுதி உள்ளார் . முதலாளித்துவ காலத்திற்கு முன் அதாவது நீராவி கண்டுபிடிக்கும் முன் , மனிதனின் சொத்துகளாய் சிறு பொருட்களே இருந்தன . அதாவது ஒரு தையல்காரன் சில உடமைகளை வைத்து இருப்பான் . சமூகத்திற்கு தேவையான உற்பத்தி மட்டும் நிலவியது . நீராவி கண்டுபிடித்ததில் இருந்து அறிவியல் வளர்கிறது . உற்பத்திகள் பெருகுகின்றன , உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் அதிக விலை உள்ளதால் முதலாளிகள் மட்டுமே வைத்து இருக்கிறார்கள் .அதே துறையில் சிறு தொழில் செய்வோர் அழிக்கப்படுக்கிறார்கள். இயந்திரங்கள் முதலாளிகள் வைத்துக்கொண்டதால் மட்டுமே உழைப்பு இல்லாமல் , லாபத்தை எடுத்துக்கொள்ளும் உரிமை அவனிடம் வருகிறது .

ஆரம்பத்தில் முதலாளித்துவம் அதிக உற்பத்தி செய்தது . அதாவது முதலில் அந்த உற்பத்தி இங்கிலாந்தில் ஏற்ப்பட்டதாம் அவர்கள் தன் காலனிய நாடுகளை சந்தையாக உபயோக படுத்தினார்கள் . ஆனால் மற்ற போட்டி நாடுகளும் தொழில் புரட்சி என்று வரும் பொழுது . சந்தைகளுக்கு போட்டி ஏற்ப்பட்டன . அப்படி நடந்தது தான் உலக யுத்தங்கள் என்று சொல்கிறார் ராகுல்ஜி . மேலும் யுத்தங்களின் போக்கு பிற்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணிக்கிறார். யுத்தங்கள் என்றாலே முதாலாளிகளுக்காய் நடத்தப்படுவது என்று சொல்கிறார் . இதை காஷ்மீரில் தொழில் செய்யும் தொழில் அதிபர்களுக்காய் , அந்த மக்களை வாட்டுவதுடன் பொருத்தி பார்க்க வேண்டும் . மேலும் தண்டகாரண்யாவில் வேதந்தா என்னும் நிறுவனதிற்க்காக பழங்குடி மக்களை அடித்து விரட்டும் உள்நாட்டுப்போரும்
இதனுடன் அடங்கும் . முதலாளிகள் இயந்திரங்களை வைத்துக்கொண்டு அதிக உற்பத்தி செய்கிறார்கள் , அவர்களுக்கு சந்தை வேண்டும் என்பதே குறிக்கோள் என்கிறார் . பொதுஉடைமை சமூகத்தில் திட்டமிட்ட உற்பத்தி இருக்கும் அதனால் அங்கு சண்டை இல்லை
யுத்தம் இல்லை என்கிறார் .

மேலும் பெண்களுக்கு முதலாளித்துவம் விடுதலை அளிப்பதை போல் எதற்கு , அவர்கள்
அதிகம் உற்பத்தி செய்ய பெண் உழைப்பு தேவை என்கிறார் , அதனால் பெண் விடுதலை என்று முதலாளித்துவம் சொல்கிறது என்கிறார் . மேலும் கடவுள் பற்றி சொல்லும் பொழுது " ஒன்றே கடவுள் "என்ற தத்துவமே முதலாளித்துவ கொள்கையில் தான் வருகிறது என்கிறார் . அது அதிக வெறியை தூண்டக்கூடியது . அது மக்களை சிந்திக்க விடாமல் இருக்க கூடியது , அது முதலாளித்துவதிற்கு சேவை செய்கிறது என்கிறார் .

இதற்க்கு எல்லாம் தீர்வு பொதுஉடமையே என்கிறார் . புத்தகம் எளிமையான தமிழில் உள்ளது .தமிழ் புத்தகாலயம் தமிழில் மொழி பெயர்த்து உள்ளது . இது உங்களுக்கு வரலாற்று ஆதாரத்துடன் பொதுஉடைமை பற்றி எளிய தமிழில் விளக்கும் நூல் .படிக்க வேண்டிய நூல் .கீழைக்காற்றில் கிடைக்கிறது

Thursday, 15 July 2010

புரட்(சி)டு கவி பாரதி“மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொடுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளைத் துறந்துவிட்டேன். நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.”
இது எட்டப்பனோ இல்லை வேறு ஒரு தேச துரோகியோ எழுதிய கடிதம் அல்ல , நாட்டு மக்கள் நம்பும் தேசியக்கவி பாரதி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய மன்னிப்பு கடிதம் .தேசியக்கவியாம் சொல்லிற்கும் செயலுக்கும் எவ்வளவு வித்யாசம் . கவிதையில் புரட்சி , நேரிலே காலில் விழுவது என்ன ஒரு கேவலம் . கலை வேறு கலைஞன் வேறு , படைப்பாளி வேறு படைப்பு வேறு என்று சொல்லிற்கும் செயலுக்கும் முரண்பாடு காட்டும் அறிவாளிகள்(என்று நினைத்துகொள்கிறவர்கள்) செயல் இது .
சிலர் பாரதியின் காலகட்டத்தை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்க கூடாது எனலாம். சரி இக்காலகட்டத்தில் பாரதி வறுமையில் வாடினான், ஆனால் பாரதி இப்படி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சரணடைந்த காலம் ஜாலியன் வாலாபாக் போன்ற எழுச்சி மிகும் சம்பவங்கள் நடந்த காலகட்டம் . அரசு வேலையை துறந்து சாதாரண மக்கள் நாட்டு விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் அரசாங்கத்துடன் மோதிய காலகட்டம் .சாதாரண
மக்களே இப்படி வரும் பொழுது , புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட தேசியக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதி , அரசாங்கத்திடம் நான் உங்கள் அடிமை என்று சொல்கிறான்.

மேலும் தேசியக்கவி ஒரு வியத்தகு விடயத்தை செய்கிறார் ‘தங்கள் குலவம்ச வரலாற்றை சிறப்பாக எழுதித்தருகிறேன்’ என்று எட்டப்ப பரம்பரையிடம் செல்கிறார் . பாரதி மட்டும் அந்த படைப்பை எழுதி இருந்தால் கட்டபொம்மன் வில்லனாக இருந்திர்ப்பான் , எட்டப்பன் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு இருப்பான் . இந்த பிழைப்பு வாதியை என்னவென்று சொல்வது ???? பாரதியை ரசிப்பவர்கள் ஒன்று அவரை பற்றி தெரியாமலேயே கேட்டதை வைத்து ரசிப்பவர்கள் , மற்றொரு வகையினர் பாரதியின் மனநிலையிலேயே இருப்பவர்கள் நிறைய படித்து இருப்பார்கள் , ஆனால் கலை வேறு கலைஞன் வேறு ,சொல் வேறு செயல் வேறு என்று கருதுபவர்கள்.பாரதியின் தேசியத்தின் லட்சணம் இது தான் .

பாரதியை பற்றி சொல்பவர்கள் அவர் சாதிகளை ஒழிக்க பாடுபட்டார் என்று சொல்வது உண்டு ,ஆனால் சொல் வேறு செயல் வேறு என்ற செயல் இருந்து கொண்டே இருக்கும் அவர் வாழ்வில் . "சாதிகள் இல்லையடி பாப்பா " என்று
குழந்தைகளுக்கு மட்டும் சொல்கிறார் , தலித் பையனுக்கு பூணுல் மாட்டி விடுகிறார் . இந்த செயலை பார்த்து அனைவரும் வியக்கின்றனர் , ஆனால் இதன் உள்ளே உள்ள அரசியல் என்ன தெரியுமா , தலித் பையனை உயர்த்துகிற எண்ணம் . அதாவது பார்பனர்கள் மேட்டுக்குடி , அதனால் அந்த தலித் பையனின் வாழ்கை மேம்பட , அவன் தரத்தை உயர்த்துகிறாறாம் இந்த மகாக்கவி . சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதி நியாயமாய் பூணலை அறுத்து எறிந்து இருக்க வேண்டுமே , ஆனால் நான் எறிய மாட்டேன் நான் பார்ப்பான் வேண்டுமென்றால் தலித் மக்களை உயர்ந்தவராய் மாற்றுகிறேன் என்ற முற்ப்போக்கு வாதி தான் பாரதி. பாரதியை ஆதரிப்பவர்கள் பார்பனர்களே சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ . கடைசி காலத்தில் பாரதி தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டத்திலே கலந்து கொள்கிறார் . முற்போக்காளர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும் ஆனால் பாரதி அந்த விடயத்தை செய்தார் . தேவர் ஜெயந்திக்கு போகிறவர்களை யாரவது முற்போக்காளர்கள் என்று சொல்வார்களா ?????


பாரதியின் நீதிக்கட்சி பற்றிய விமர்சனத்தை பாருங்கள் ‘இன்றைக்கு நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் என்பார்கள். . .. இப்படியே போனால் நாளைக்கு காக்கை குருவிகள் கூட நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் எனக் கூறி உரிமை கோருவார்கள்’ என்று பாரதி நீதிக்கட்சியின் கொள்கையை நக்கல் செய்து எழுதினார்." அதாவது திராவிடர்கள் காக்கை குருவிகலாம்.

சரி இவருடைய பொதுஉடைமை கொள்கை எப்படி உள்ளது என்று பார்ப்போமானால் , தன் பாடல்களிலே ரஷ்யாவில் நடந்த முதலாளத்துவ புரட்சியை(FEBRUARY) ஆதரித்து எழுதுக்கிறார் , ஆனால் அதன் பின்பு நடந்த சோசியலிச புரட்சியை(OCTOBER) எதிர்த்து எழுதுகிறார் .

இப்படி பாரதி வாழ்க்கை முழுவதும் ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன . பாரதியை ஆதரிக்கும் நாம் நம் உளவியலை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன் . நமக்குள்ளும் அறிவாளிகளின் சொல்லிற்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்துக்கொண்டே இருக்கும் , அதை கலைந்து வெற்றி பெறுபவனே புரட்சியாளன் . நாம் நம் சமகால இலக்கியம் கட்டாயம் படிக்க வேண்டும் , ஏன் என்றால் நானும் இந்த விடயங்கள் தெரியாதவரை , பாரதி என்னும் பிம்பம் எனக்குள்ளும் இருந்தது . நம் புத்தகத்தில் கொடுக்கப்படும் வரலாறுகள் படித்து நானும் பாரதி தேசியக்கவி என்று நினைத்து கொண்டிருந்தேன் . இப்படி அறிவற்றவராக இருக்கும் பொழுது , நம்மை பிறர் எளிதாய் ஏமாற்ற முடியும் . சில விடயம் உண்மையிலேயே புரட்சி போலவே இருக்கும் ஆனால் அது புரட்டு .

பின் குறிப்பு :
பகத் சிங் போன்றவர்கள் சரியானவர்கள் . அவர்களை தியாகிகள் ஆக்குவதன் மூலம் தங்களை சரியானவர்களாக 'காட்டிக்கொள்ள' நினைப்பவர்களுக்கு பாரதி பற்றிய விமர்சனம் பிடிக்காது.

Wednesday, 14 July 2010

முள் வேலிக்குள் இருப்பவன் தமிழன் இல்லையா ????

தமிழர்களாய் இருப்பவர்கள் மாநாட்டிற்கு வந்துள்ளனர் , இதை போல வாக்கியத்தை விஷத்தனமாய் யார் சொல்ல முடியும் ???? மாண்புமிகு செம்மொழிகொண்டான் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டுமே சொல்ல முடியும் .
கலைஞர் குடும்பத்தில் மட்டும் 2000 பேருக்கு மேல் வந்தததாக கேள்வி , அதனால் அவர் நாளை தமிழர்கள் என்றால் என் குடும்பத்தவர்கள் என்று சொல்லக்கூடும்
சில கேள்விகள்

1 . ஈழத்தில் முள் வேலியில் இருந்தே வர முடியாத தமிழர்கள் எப்படி கோவை வருவார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லையா ?????

2 . லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலே உயிர் உடமை இழந்த பொழுது , இந்த துக்கத்திலே செம்மொழி என்று கொண்டாடுவது அருவருப்பாய் கருதும் மக்கள் தமிழர்கள் இல்லையா ??????

3. பாமரனுக்கு கூட சட்டம் புரிய வேண்டும் , ஆங்கிலம் படிக்காத பாமரன் ஒரு ஒருவர் மீது வழக்கு போடுகிறான் என்றால் அவனுக்கு வழக்குரைஞர் என்ன வாதிடுகிறார் என்பது கூட புரியாது . அப்படி
நீதி மன்றத்தில் கூட தமிழை கொண்டு வர முடியமால் என்ன செம்மொழி விழா .அப்படி நீதி தமிழிலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தோழர்கள் இல்லையா ????

4.இவ்வளவு நடந்து தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் தமிழர்கள்
இல்லையா ??

செம்மொழி மாநாட்டிற்கு வந்தவர்கள் இரண்டு பிரிவினர்

1 ஒன்று உங்களின் குடும்பம் அரங்கையே நிரப்பியவர்கள்

2 இன்னொன்று உங்களுக்கு ஜால்ரா போட்ட பானபத்திர ஓணான்டிகள் இவர்கள் பின்வருசைக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஏன் என்றால் முன்வருசையில் உங்கள் வீட்டு கவின்கர்கள் கனிமொழி , கயல்விழி உட்க்கார்ந்து இருப்பார்கள் , பின்பு தமிழ் தொண்டு ஆற்றும் பேரன்கள் RED GIANT MOVIES , மற்றும் CLOUD NINE MOVIES அதிபர்கள் உட்கார்ந்து இருப்பார்கள் .

இப்படி இருப்பவர்கள் மட்டுமே தமிழர்களா???????????வைரமுத்துவும் வாலியும் நீங்களும் தமிழிலே நன்றாய் எழுதுவீர்கள் . தமிழ் நன்றாய் எழுதவதால் மட்டும் தமிழனா என்ன ??????? உணர்வு வேண்டும் தலைவரே ??? நீரோ மன்னனை நான் பார்த்ததில்லை , ஆனால் உங்களை பார்த்த பின்பு தெரிகிறது

நிலைமை இப்படி இருக்கும் பொழுது ஒரு அமெரிக்க பத்திரிகை தமிழ் நாடு தான் தொழில் துடங்க
சிறந்த இடம் என்று சொல்லி உள்ளது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் . அதற்க்கு அர்த்தம் இங்கே தான்
குறைந்த கூலி என்பதே மறைமுக அர்த்தம் , என்பது தாய் காவியம் படித்த கலைங்கருக்கு தெரியாதா .
"எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா ???" என்பதை போல ......ஈழம் பத்தி எறிந்த வேளையில் கொதிக்காத தமிழன் தான் சிறந்த அடிமை , எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் செம்மொழியை மாநாடு நடத்துபவனே சிறந்த அடிமை என்று அமெரிக்க பத்திரிகையும் Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM) போன்றவர்கள் நினைக்கிறார்கள் போலும் . "நல்ல அடிமை சிக்கிடாண்டா " என்று வடிவேலு சொல்வது காதில் கேட்கிறதா ?????

Tuesday, 13 July 2010

வாயை மூடிக்கொள் என்கிறது இந்திய இறையாண்மை


இந்திய ஜனநாயக நாடு , ஆனால் தீவிரவாதிகள் தான் நாட்டின் அமைதி இழப்பிற்கு காரணமாய் இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன .ஊடகங்கள் அதிகார வர்க்கத்தை காப்பாற்றுகின்றன , மாறாக அதிகார வர்க்கமும் ஊடகத்தை காப்பாற்றுகிறது . நடுத்தர வர்க்கம் இதை போல செய்திகளை படித்துவிட்டு தீவிரவாதிகளை கொல்ல வேண்டும் என்று சொல்கின்றன . சரி தண்டகாரண்யா என்னும் இடத்தில் baxasite கனிம வளம் உள்ளது அதை வேந்தாந்த என்னும் பணமுதலைக்கு விற்பனை செய்ய , அங்கு உள்ள பூர்வ குடி மக்களை விரட்டுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர் . அவர்கள் மறுபடியும் போராடினால் தீவிரவாதி என்று செய்தி பரப்புவது , அவர்களை கொலை செய்வது போன்ற விடயங்களை திறம்பட செய்கிறது ஆளும் வர்க்கம் . பேச்சு வார்த்தைக்கு தயார் என்கிறார்கள் , ஆனால் பேச வந்த ஆசாத்தை ENCOUNTER முறையில் கொலை செய்தார்கள் , அவர் செய்திதொடர்பாளர் என்பது ஊரறிந்த விடயம் , அவருக்கே இந்த கதி என்றால் ....... பாமரனுக்கு இதே நேரத்தில் அருந்ததி ராய் போன்ற அறிவுத்தளத்தில் இருப்பவர்கள் வருகிறார்கள் , மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்கிறார்கள் . ஆனால் ஆசாத் போன்ற ENCOUNTER அவர்களை மிரட்டும் , யாரும் ஜனநாயகம் பற்றி பேசக்கூடாது என்று ஆசாத் போலவே இன்னொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது .

லிங்கரம் கடோபி மாவோயிஸ்ட் இல்லை என்றாலும் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்பவர்.
அவர் போலிசாரால் துன்பப்பட்டுள்ளார் . அவரை மாவோயிஸ்ட் என்று போலிஸ் துன்பப்படுத்துகிறது . கேட்டால் அவருக்கு அருந்ததி ராயுடன் தொடர்பு உள்ளது , மேத்தா பட்கருடன் தொடர்பு உள்ளது என்கிறது . இதன் மூலம் அருந்ததி ராய் , மேத்தா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்களை தீவிரவாதியாய் சித்தரிக்கிறது , மேலும் யாரவது வாயை திறந்தால் அவ்வளவு தான் என்னும் எச்சரிக்கை மணியை அடிக்கிறது ஆளும் வர்க்கம் .ஆறு மாதத்தில் கடோபி தீவிரவாதிகளிடம் இருந்து பயிற்சி பெற்றார் என்று காவல்துறை சொல்கிறது .அவர் தான் ஆசாத்துக்கு அடுத்த செயத்திதொடர்பாளர் என்று காவல்துறை சொல்கிறது . ஆனால் லிங்கரம் என்ன சொல்கிறார் " போலிஸ் என்னை துன்பப்படுத்துகிறது , எனக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் சம்பந்தம் இல்லை " என்கிறார் .

சரி இதன் பெயர் தான் ஜனநாயகமா ??? அதவாது இதன் மூலம் மக்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன " வாயை மூடி கொள் " என்பதே.சரியான விடயம் என்று தைரியமாய் பேசினால் , இந்திய இறையாண்மை என்று ஒரு வார்த்தை வைத்து இருக்கிறார்கள் , அமைதியை கெடுத்து விட்டீர்கள் , நீங்கள் தீவிரவாதிகள் என்று காவல்த்துறை கொன்று விடும் . இங்கு உண்மையை உறக்கச்சொல்வது குற்றம் . சுரண்டுபவனுக்கு முதுகு சொரிய வேண்டும் , அதற்க்கு எதிராய் குரல் கொடுத்தால் நீ தீவிரவாதி . இங்கு தீவிரவாதி என்பவன் ஆளும் வர்கத்திற்க்கு எதிராய் குரல் கொடுப்பவன் . தற்பொழுது துறை முருகன் பேசினாரே "யாரவது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது போல் பேசினால் கடுமையான தண்டனை விதிக்க படும் , சட்டம் எதுவும் இல்லை என்றாலும் இயற்றப்படும் என்று" இது வேறு ஒரு பிரச்சனைக்காக அவர் சொன்னாலும் பேசாதே வாயை மூடிக்கொள் என்பது மட்டுமே பொருள் . அரசியல் சாசனத்தில் சோசியலிசம் என்ற சொல் எதற்கு என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் , டேய் முட்டாள்களா இந்தியா முதலில் ஜனநாயக நாடே இல்லை அப்புறம் என்ன சோசியலிசம் , என்று மண்டையில் அடித்து சொல்கிறது இந்த லிங்கரம் மற்றும் ஆசாத் விடயங்கள் .

Monday, 12 July 2010

உலக மயானம் ஆக்கல்


பிஞ்சு நஞ்சை
குடித்தது
தாய் பாலில்
போபாலில் ........!!!!!!
சுவாசம் தின்று உயிர்
வாழ்ந்தான் .................
சுவாசம் உயிரைத் தின்றது
போபாலில் .............!!!!!
லட்சம் உயிர் மயிர்
அன்டேர்சன் மயிரே உயிர்
என்றது அரசாங்கம் ....!!!!!
"வாகனம் ஒட்டியவன் தவறு செய்தால் எப்படி அன்டேர்சன் குற்றவாளி " என்று
போபால் பற்றி பேசினால்
"போ பா" என்கிறது .........
அடுக்குமாடியில் இருக்கும் நடுத்தர வர்க்கம் ....!!!!
"வாகன ஒட்டிக்கு பழுதடைந்த வாகனம் கொடுத்தால் , பிரேக் பிடிக்காத வாகனம் கொடுத்தால் "
என்றேன் மறுபடியும் அவர்களிடம் .....!!!!
போபால்
தண்ணீர் கூட விடம் .........
கண்ணீர் மட்டுமே நித்தம் .
பிணங்கள் தின்று
பணங்கள் குவிக்கும்
உலகமயமாக்கல்
உலக மயானம் ஆக்கல்..........!!!

Sunday, 11 July 2010

இந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் - போபால் உணர்த்தும் உண்மை
போபால் விடயத்தை முதலில் நான் எழுதிய பொழுது எனிடம் கேட்க பட்ட கேள்விகள் , "ஓட்டுனர் விபத்தை ஏற்ப்படுத்தினால் எப்படி வண்டிக்கு சொந்தக்காரரை கைது செய்ய முடியும் ", அதனால் அன்டேர்சன் குற்றமற்றவர் என்று விவாதம் .சரி அந்த விடயத்தை கொஞ்சம் விவரமாய் புரிந்து கொள்வோம் . மெத்தில் ஐசோ சயனைடு என்ற திரவம் வெளியில் லீக் ஆகி விஷ வாயுவை கக்கியது . இந்த மூல பொருளை வைத்து தான் "செவின்" என்ற பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க படுகிறது . ஐசோ சயனைடு விஷத்தை கக்கும் என்பதால் இதே பொருள் அமெரிக்காவில் வேறு ஒரு சூத்திரத்தில் அதவது மெத்தில் ஐசோ சயனைடு உபயோகப்படுத்தாமல் இதே மருந்தை தயார் செய்ய முடியும் . ஆனால் மெத்தில் ஐசோ சயனைடு செலவு கம்மி , அதிக லாப வெறி கொண்ட முதலாளியின் நோக்கம் தான் போபால் படுகொலை . முதலில் 1969 முதல் 1975 வரை இதற்க்கு அனுமதி மறுக்க பட்டுள்ளது ஏன் எனில் இது பழைய தொழிற்நுட்பம் மற்றும் இதன் மூலம் ஏற்படும் விபரீதங்களும் பயங்கரமாய் இருக்கும் என்பதால் முதலில் அமைச்சகம் இதற்க்குஎதிர்ப்பு தெரிவித்து உள்ளது , 1975 ஆண்டே அதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது .

மெத்தில் ஐசோ சயனைடை அதிகமாய் கலங்களில் சேர்த்து வைப்பது ஆபத்து , விபத்து நடந்த அன்று அதிகமாய் தான் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒரு கலன் வெப்பம் கூடினால் மற்றொரு கலனுக்கு மாற்றி , அதன் வெப்பத்தை மட்டுப்படுத்த வேண்டும் , இந்த முறை தான் அமெரிக்காவில் இதே UNION CARBIDE நிறுவனத்தில் உள்ளது ஆனால் இந்தியாவில் அதற்க்கான வழி இல்லாமல் இருக்கிறது கட்டமைப்பு . மேலும் குளிரூட்டப்பட்ட
நிலையிலேயே இருக்க வேண்டும் ஆனால் செலவின் காரணமாய் குளிர்சாதனத்தை போடாமல் இருந்து இருக்கிறது நிர்வாகம் . இதை எல்லாம் செய்து விட்டு அன்டேர்சன் குற்றவாளி அல்ல தொழிலாளர்கள் செய்த தவறே காரணம் என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்கள் .

அமெரிக்காவில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் தொழிற்சாலை இங்கே இல்லை அதே தொழிற்சாலை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது முதலாளியின் லாப நோக்கத்திற்காக . அமெரிக்காவில் இதை போல் செய்து விட்டு சும்மா போக முடியுமா என்ன ???? பிரிட்டிஷ் பெற்றோலியம் இதை போல ஒரு விபத்துசெய்தது அமெரிக்காவில் இழப்பு என்னமோ கம்மி தான் 12 பேர் , சில மீன்கள் இறந்தன , அதற்க்கு 2000 கோடி டாலர்கள் நிவாரணம்
ஆனால் இங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் , லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இங்கே இழப்பீடு இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு 47 கோடி டாலர் , அதாவது அமெரிக்காவில் வாழும் கடல் நாய் , மற்றும் மீன்களை விட மனித உயிர்கள் மயிர்களை போன்றது என்கிற மனோபாவமே .

பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய். எவ்வளவு கொடுமை . அதாவது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அடியுங்கள் , எங்கள் முதுகு காத்து கிடக்கிறது , என்று இந்தியா முதுகை திரும்பி காண்பிக்கிறது , இது வெளி நாட்டில் இருக்கும்முதலாளிகளை ஈர்க்கும் என்கிறார்கள் . தனியார்மயம் , உலகமயம் என்று சொல்பவர்களின் மூஞ்சியில் சேர் , கரி பூசப்பட்டுள்ளது . அதாவது பல லட்சம் உயிர்களின் மதிப்பை விட ஒரு முதலாளியின் லாபம் முக்கியமானது என்கிறது .

மேலும் இதை போல ஒரு நிறுவனம் பேரழிவை ஏற்ப்படுத்தினால் 30 வருடம் வரை அந்த மக்களுக்கு நிறுவனமே பொறுப்பு , அந்த பொறுப்பை முப்பது முதல் பத்து வருடமாய் குறைக்கிறது மசோதா . சட்டங்கள் ஆளும் வர்கத்திற்க்கு , ஜனநாயகம் ஆளும் வர்கத்திற்க்கு . இன்று போபால் நாளை சென்னை அல்லது மதுரை ?????? பல போபல்கள் வெடித்து கொண்டிருக்கின்றன , போபால் உலகமயத்தின் trailor மட்டுமே , இன்னும் அதன் கொடுராமான படம் ஆரம்பிக்கவில்லை .
நண்பன் புல்கேசியின் படிக்க வேண்டிய பதிவு


http://pulavanpulikesi.blogspot.com/2010/07/1.html

Friday, 9 July 2010

மூன்றாம் உலக நாடுகள் உயிர் மலிவானதா ?????????????
உலக மயமாக்கம் மக்களை சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் உயிர் கூட சந்தை மதிப்பை வைத்து தான் , வாழ தகுதி இல்லாதவன் சாகலாம் என்று சொல்கிறது .முதலாளித்துவம் இயங்க வேண்டுமென்றாலே சந்தை தேவை , அவனுடைய அதிக உற்பத்தியை விற்பனை செய்ய , உலகமயமாதலே சந்தையை உருவாக்குகிறது .அவர்களின் முக்கியாமான சந்தை மூன்றாம் உலக நாடுகள் , அதாவது ஆசியா ஆப்ரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகள் .உயிர்கள் கூட முதலாளிகளுக்கு அற்ப்பமானதே என்று சொல்லாமல் பல இடங்களில் சொல்கிறது . உலக வங்கி தான் இந்த மூன்றாம் உலக நாடுகளை ஆள்கிறது , அவர்கள் சொன்னால் முதாலாளிகளுக்கு சந்தையை திறக்க வேண்டும். ஒரு உயிருக்கு கூட மரியாதையை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது . முதலாளித்துவத்தால் வேலை கிடைக்கிறதே என்று சிலர் பேசலாம் எப்படி பட்ட வேலைகள் என்பதை பார்ப்போம் , எப்படி மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் எப்படி அந்த உழைப்பு சுரண்டப்படுகிறது என்று பார்ப்போம்.
உதாரணமாய் கப்பல் உடைக்கும் தொழில் இது ஆப்ரிகா மற்றும் ஆசியா நாடுகளில் அதிகம் செய்யப்படுகிறது . இந்த கப்பல் உடைக்கும் தொழில் கல்லீரல் புற்று நோயை கொண்டு வரும் . கப்பல்களில் அதிக ASBESTOS ஷீட் இருக்கும் , அது தான் இந்த கல்லீரல் புற்று நோயை உருவாக்குவது . இதற்க்கு உண்டான மனித உழைப்பை முதாலாளி மூன்றாம் உலகநாடுகளில் மட்டும் வாங்குகிறான் . அதாவது இங்கே மனித உழைப்பு மலிவானது என்பதே பொருள் . சரி நம் பக்கத்தில் இருக்கும் தூத்துக்குடியில் உள்ள STERLITE ஆலையின் முக்கியமான தொழில் காப்பரில் இருந்து அதனுடன் கலக்கும் விடயங்களை பிரிப்பது , அது உடல் நலத்திற்கு மிக கேடு என்பது அறிந்ததே , அதை எதிர்த்து பலர் போராடினாலும் அது வீணாய் போனது .அந்த STERLITE ஆலை வேதந்தா நிறுவனத்தை சேர்ந்தது அவர்கள் அங்கே தண்டகாரண்யாவில் பூர்வகுடிகளை விரட்டும் வேலையை செய்கிறார்கள் .இது தான் நடக்கும் உலகமயமாக்களில் .


1992 ஆம் ஆண்டில் lawrence summers என்பவர் உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார் .அவர் உலக வங்கியின் ஊழியர்க்களுக்கு வழிக்கட்டுவதர்க்காய் ஒரு கடிதம் எழுதினார் . அதில் மாசு உள்ள தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதே அதன் சாராம்சம் . அந்த கடிதத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் .

1 மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்ப்படும்

2 மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறந்தது .
ஏன் என்றால் அங்கு வீசும் காற்று los angels கற்றை விட சிறந்தது (திமிரை பார்த்தீர்களா )

3 ஏழைகள் ஏழைகள் தான் ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லை . ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணம் 200 சதவிகிதமாய் இருக்கும் போது மார்பு புற்றுநோய்க்கு ரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டார்கள் .

(நன்றி புத்தகம் "உலகமயமாதல்" ரயாகரன் )


சரி போபாலில் நடந்ததே அது உலகமயமாக்கல் நல்லது முதலாளித்துவம் நல்லது என்று சொல்பவர்கள் செருப்பால் அடித்தது என்றே சொல்ல வேண்டும் . வாரேன் அன்டேர்சன் என்னும் கொலைகாரன் , பல ஆயிரம் உயிர்களை கொன்று விட்டு செல்கிறான் , ராஜீவ் காந்தி , அர்ஜுன் சிங்க் வழி அனுப்பி வைக்கிறார்கள் பாதுகாப்பாய் . இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு , அவர்கள் கொடுத்த நட்ட ஈடு தலைக்கு பத்தாயிரம் .அரசு அப்பொழுது இருந்தே முதாலாளிகளை காப்பற்றி வருகிறது என்று மேலும் ஒரே ஒரு நிகழ்ச்சியை சொன்னால் புரியும் .

போபால் விட வாயு விபத்து நடந்த பொழுது , இரண்டு மூன்று மருத்துவ மனைகள் சீல் வைக்கப்பட்டன , ஏன் தெரியுமா ????? அந்த விடத்திற்கு மருந்து போட்டோ எடுக்கும் பொழுது நெகடிவ் கழுவப்படுமே அந்த மருந்து , அதை அந்த மருத்துவமனைகள் injection மூலமாய் போட்டார்களாம் , அப்படி போட்டால் , அது கம்பெனிக்கு எதிரானா ஆதாரமாகும் , அதனால் மருந்தை தடை செய்தார்களாம் , மருத்துவமனையை சீல் வைத்தார்களாம் . அதவாது முதாலாளியின் உயிரே உயிர் மற்றெதெல்லாம் மயிர் என்று தானே அர்த்தம் . அதாவது முப்பதாயிரம் உயிர்களின் விலையை விட , அன்டேர்சன் என்னும் உயிர் முக்கியமானது . முதலாளித்துவம் சிறந்தது என்று சொல்கிறவர்களுக்கு செருப்பால் அடி .

மூன்றாம் உலக நாடுகள் வெறும் சந்தைகள் மட்டுமே இங்கே உயிரின் மதிப்பு மலிவானது . உயிர் கொன்று கூட பிணம் தினலாம் என்னும் கூட்டமே முதலாளித்துவத்தை ஆதரிக்கும் . இன்று நடுத்தர வர்க்கம் தன் மீது கல் எறியப்படவில்லை என்று ஒதுங்கி போகலாம். ஆனால் அங்கே மென் பொருளுக்கும் மற்ற வேலைகளும் இல்லை என்றால் இங்கே வந்து நாம் விவசாயம் கூட பார்க்க முடியாது , ஏன் என்றால் விவசாயம் பண்ண நிலம் இல்லை பண்ணவும் தெரிவதில்லை .அதனால் நடுத்தர மக்கள் மெத்தனமாய் இருக்க வேண்டாம் ???? இன்று போபால் நாளை சென்னை மதுரையாக கூட இருக்கலாம் . இன்று தண்டகாரண்யா , நாளை ஊட்டியாக கூட இருக்கலாம் . மனித உயிர்கள் மலிவானதா ????????????

போபால் விடயத்தின் பொழுது பிணங்களை எங்கே போடுவது என்று தெரியாமல் , நர்மதை நதியில் போட்டுள்ளனர் .எப்படி இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கம் அமைதியாய் இருக்கிறது என்று புரியவில்லை ???? உயிர்களுக்காக துடிக்கும் சின்ன விடயம் கூட இல்லை என்றால் எங்கே இருக்கிறான் மனிதன் .

Thursday, 8 July 2010

உலகை காலால் அளந்த ராகுல் சங்கிர்த்தியாயன்


நான் இப்பொழுது ஒரு புத்தகம் படித்து கொண்டிருக்கிறேன் புத்தகத்தின் பெயர் "மனித சமூகம் " ராகுல் சங்கிர்த்தியாயன் எழுதியது , ராகுல்ஜி என்று கூட அழைப்பார்கள் .ராகுல்ஜி ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் . உலக வரலாறாய் கரைத்து குடித்தவர் .இமய மலையை மூன்று தடவை நடந்தே கடந்தவர் என்று சொல்கிறார்கள் . ராகுல்ஜி உலகை தான் காலாலும் , அறிவாலும் அறிந்தவர் என்று அவரை படிக்கும் பொழுது புரிகிறது . ராகுல்ஜியின் "வோல்கா முதல் கங்கை வரை " புத்தகம் மிக பிரபலம் என்று கேள்விபட்டிருக்கிறேன் . மனித சமூகம் என்ற புத்தகம் என்ன சொல்கிறது. மனித சமூக வரலாறை சொல்கிறது முதலில் புரதான பொதுவுடைமை சமூகம் , பின்பு இனக்குழுக்கள் , தாய் வழி சமூகம் தந்தை வழி சமூகம் , நிலா பிரபுத்துவம் , முதலாளித்துவம் எல்லாம் ஒன்றில் இருந்து மற்றொன்று எப்படி வந்தது அதன் அவசியம் என்ன , சொத்துடமை எப்படி வந்தது என்று வரலாற்று சான்றுகளுடன் விளக்குகிறார் ராகுல்ஜி .நல்ல படிப்பு , மற்றும் திறனாய்வு திறன் , மக்கள் மேல் கொண்ட அன்பு இவை கலந்தால் மட்டுமே இது சாத்தியம் . வாழ்கையில் 75 சதவிகிதம் நடந்தே கழித்து இருக்கிறார் .

உதாரணமாய் புத்தகத்தில் ஒரு பகுதி , எப்படி தாய் வழி சமூகம் முதல் தந்தை வழி சமூகம் வந்தது . தந்தை வழி சமூகம் எப்படி சொத்துடமைக்கு வழி வகுத்தது ,எப்படி புரதான பொதுவுடைமை சமூகம் அழிந்தது என்பதை போன்ற பகுதியை அறிவியல் ரீதியாக விளக்குகிறார் ராகுல் .முதலில் புராதன பொதுவுடைமை சமூகத்தில் தாய் முக்கியமானவள் , அவளே அரசி போல இருந்தால் , ஒரு குழந்தைக்கு தாய் தெரியும் தந்தை யார் என்று தெரியாது , யாருக்கும் தனி சொத்து என்று எதுவும் இல்லை , வேண்டியதை அனைவரும் உற்பத்தி செய்து பகிர்ந்து கொண்டனர். மனிதன் குழுக்களாய் இருந்தான் , அந்த குழுவிற்குள் பொதுவுடைமை இருந்தது . அப்படி இருக்க மற்ற குழுவுடன் இயல்பாய் சண்டை வரத்தொடங்கியது ,ஆயுதங்களை ஆண்களே செய்தார்கள் , ஆயுதங்கள் ஆண்கள் சொத்துடமை ஆகியது . சண்டைக்கு ஆண்கள் முக்கியமானவர்களாய் பட்டதால் , பெண்ணிற்கு உண்டான முக்கியத்துவம் அழிகிறது . மேலும் மனிதன் விவசாயம் செய்கிறான் அப்பொழுது பசுக்களை அவனே பாரமரிக்கிறான் , வீட்டிற்கு தேவையான பரிவர்த்தனை அவனே செய்கிறான் ,அவன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

அப்பொழுது ஆண்களுக்கு முக்கியத்துவம் வரும் பொழுது , ஒரு குழந்தைக்கு தாய் யார் என்று மட்டும் தெரிந்த சமூகத்தில் . தந்தை முக்கியத்துவம் பெறுகிறார் . பெண் ஆணின் பிடியில் வருகிறாள் , பெண் என்பவள் எப்படி பொருட்கள் மாடுகள் தனக்கு சொந்தமோ அதை போல அவளும் சொந்தம் என்று அடிமைப்படுதுகிறான் . தன் மனைவி தன் மகன் தன் மகள் என்று தெரிந்த பின்பு அவர்களுக்காய் சொத்து சேர்க்கிறான் . சேர்க்கும் பொழுது சொத்துடமை வருகிறது . பெண்ணடிமைதனமும் சொத்துடமையும் சேர்ந்தே வருகிறது என்று புத்தகம் சொல்கிறது .ராகுல் ஜி மதங்களை பற்றியும் எழுதி உள்ளார் .நான் 60 பக்கம் தான் படித்து உள்ளேன் , புத்தகம் ஐநூறு பக்கங்கள் இருக்கும் , பிரமிப்பாய் தான் இருக்கிறது . ராகுல்ஜியின் இந்த புத்தகத்தை நான் "NEW CENTURY BOOK HOUSE " திருமங்கலத்தில் வாங்கினேன் . கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்

Wednesday, 7 July 2010

ஏன் சினிமாவை விமர்சனம் செய்யக்கூடாதா
சமீபத்தில் ஒரு பதிவுலக நண்பர் நான் ஏன் சினிமா பற்றி எழுத வேண்டும் , வெறும் கணக்கிற்கு ஏன் பதிவுகள் எழுதுகிறீர்கள் என்று மடல் அனுப்பி இருந்தார் .அவருக்கு சூர்யாவை , மணிரத்தினத்தை விமர்சனம் செய்வது சுத்தமாய் பிடிக்கவில்லை . தான் பொதுவுடைமை சிந்தனையாளன் அரசியல்வாதிகளை தவிர யாரையும் விமர்சனம் செய்ய மாட்டேன் என்று சொன்னார் . ஆனால் மார்க்ஸ் அனைவரைவரையும் சந்தேக படு என்கிறார் ,விமர்சனம் என்பது பொதுவுடமையின் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன் . விமர்சனம் செய்யாமல் வளர முடியாது ,நம் ஒவ்வொரு செயலுக்கும் விமசனம் அவசியம் என்றே நினைக்கிறேன் . அவருக்கு அனுப்பிய மடல் .

" சினிமா என்பது அர்த்தமில்லாதது என்று யார் சொன்னது .ஒரு மக்களின் ரசனையை பொறுத்தே அந்த நாட்டின் அரசியல் தீர்மானம் செய்யப்படுகிறது . இங்கே மணிரத்தினமும் கமலையும் ரசிக்கும் மனப்பான்மையே நம்மை அரசியல் ரீத்யாகவும் ஏமாற்ற முடியும் என்பதற்கு உதாரணம் . நீங்கள் களப்பணி செய்து இருக்கலாம் ஆனால் பொதுவுடைமை விமர்சனம் செய்ய சொல்கிறது . "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்க்காமல் யாரும் இல்லை ?????" என்ற தோழர் கல்யாண சுந்தரனார் பாட்டு சொல்வதை போல் தான் . சினிமா மயக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள் ,மணிரத்தனம் என்றால் முற்போக்கு என்று பல தரப்பட்ட நடுத்தர வர்க்கம் சொல்கிறது . அப்படி ஆனால் இவர்களை எளிதாய் ஏமாற்றி விடலாம் . தப்பான விடயத்தை முற்ப்போக்கு என்று அரசியலிலும் நம்புவார்கள் கலைஞர் அண்ணாத்துரை எல்லாருமே இப்படி முற்ப்போக்கு வேடம் போட்டவர்கள் . சினிமா கலைஞர் நம்மை ஏமாற்றி
ஆள்கிறார் என்றால் , நம் ரசனை முறை எவ்வளவு பிற்போக்கனாது என்று நினைத்து பாருங்கள் . அப்படி தவறாய் மக்களை இழுத்தும் செல்லும் கலையை மக்களுக்காய் ஏன் விமர்சனம் செய்ய கூடாது . அந்த சினிமா கூட சமூகத்தின் அங்கம் அல்லவாநண்பா . நான் அஜித் விஜய் ரசிகர்களை கூட ஏற்றுக்கொள்வேன் . ஆனால் கமல் மணிரத்தினம் போன்றவர்களது படங்களை விட மாட்டேன் ........சினிமா பதிவு தவறு என்று சொல்வதை விடுங்கள் , ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் . இது என்ன அர்த்தமில்லாத பதிவா இல்லை நண்பா " EK THUJE கேலியே" படம் வந்த பொழுது 100 காதல் ஜோடிகள் மும்பையில் இறந்தார்கள் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் . நாம் எதை ரசிக்கிறோமோ ரசிப்பை வைத்தே நம் மனது இப்படி தான் என்று சொல்லிவிட முடியும் . சினிமா திரையரங்கில் நுழைந்தால் மக்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கை தட்டும் காட்சியை கொண்டு சொல்லி விடலாம் . உதாரணமாய்
"பொம்பள பொம்பளையா இருக்கணும் " என்று ரஜினி பேசியதுடன் கை தட்டும் கூட்டம் ஆண் ஆதிக்க சமூகமாய் இருக்கும் சரி தானே .அந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அந்த பல பேர் ஏற்ற கலையை விமர்சனம் செய்ய வேண்டும் .............அர்த்தமில்லாமல் எழுதுகிறேன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் நண்பா ........சினிமா விமர்சனத்தை பாருங்கள் கட்டாயம் அர்த்தம் இருக்கும் என்றே நினைக்கிறேன் , என் விமர்சனம் படித்து இருக்கிறீர்களா ???? திரைக்கதை அருமை , கோணம் அருமை போன்ற விடயம் இருக்காது ..............அடி ஆழத்தில் போய் என்ன கரு என்பதே இருக்கும் என்று நினைக்கிறேன் . எப்படி மக்களிடம் சினிமா மோகத்தை குறைப்பது
அந்த படத்தை நாம் பார்த்து இது குப்பை என்று மண்டையில் தட்டும் பொழுது தான் அது உரைக்கும் சரி தானே . நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன் . நானும் மதுரை தான் , மதுரை மாணவர்கள் எழுச்சியாய் இல்லாமல் ரஜினி அஜித் விஜய் என்று போஸ்டர் ஓட்டும் கலாச்சாரத்தில் மண்ணில் இருந்து வந்த நான் அதை சொல்ல வேண்டுமென்றால் விமர்சனம் அவசியம் என்றே நினைக்கிறேன் .
"தல இல்லாத தீபாவளி துக்க தீபாவளி " என்று போஸ்டரை ஒரு முறை என் மனமும் ரசித்து உள்ளது , ஆனால் இன்று வேறு மாதிரி உள்ளேன் ஆச்சர்யமாய் இருக்கிறது நண்பரே , இது பல மக்களை தாக்க கூடியது . ஒரு நாட்டின் கலை எப்படி இருக்கிறதோ அதை வைத்து அந்த சமூகம் இப்படி இருக்கிறது என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன் . சினிமா கோடிக்கணக்கான ரசிகர்களை சந்து பொந்துக்குள் எல்லாம் செல்கிறது .
புத்துகம் படிக்காதவன் கூட சினிமா செல்கிறான் . இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடாய் இருக்கிறது . அதனால் சமூக மாற்றம் ஏற்பட கூட சினிமா முக்கிய காரணம் அதனால் விமர்சனம் அவசியமானது .மக்கள் ரசனை அப்படியே போகட்டும் , மக்கள் மந்தைகளாக இருக்கட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க முடியுமா என்ன ??????????? வெறும் கணக்கிற்காக பதிவுகள் போடுவதில்லை நண்பா .............சினிமா விமர்சனம் என்றால்
வெறும் கேவலமாய் நினைக்க வேண்டாம் . அது மனித மனம் பொருத்தது ???? அது வெறும் வியாபாரம் என்றால் நான் இவ்வளவு மெனக்கிட மாட்டேன் சூர்யா பெப்சி குடித்தால் , பெப்சி விற்பனையாகும் ,நம் ஊர் மாப்ளை விநாயகர் சோடா விற்காது , விவசாய நிலங்கள் கையக படுத்தப்படும் .அவர் செய்யும் விடயத்தை சினிமா தானே அப்படியே விடச் சொல்ல்கிரீரா .அவரை எதிர்த்து பதிவு போட்டதால் அது தரமான பதிவு இல்லாமல் போகுமா
நண்பா ...........!!!!!!!வேட்டைக்காரன் வந்த பொழுது அவர் எப்படி ராகுல் காந்தியை சந்திக்கலாம் வேட்டைக்காரனை விரட்டுவோம் என்று பதிவு போட்டேன் ஒரு விஜய் ரசிகர் எனக்கு உருகி நான் படம் பார்க்க மாட்டேன் இனிமேல் விஜய் படங்கள் பார்க்க மாட்டேன் என்றார் , இது சாதனை இல்லையா ???????
அந்த விடயம் மக்களை தாக்குவதால் நானும் எழுதுகிறேன் .......அதை சும்மா கணக்கு காண்பிக்க பதிவு போடுகிறேன் என்று இழிவு படுத்த வேண்டாம் ...... வேண்டுமென்றால் அந்த பதிவுகளில் விவாதம் செய்வோம் .பொதுவுடமையை ஏற்றுக்கொண்டவன் விமர்சனம் வேண்டும் என்பான் எந்த துறையாக இருந்தாலும் .தவறு என்றால் விமர்சனம் செய்யுங்கள் ஆனால் ஏன் சினிமா பதிவு எழுத கூடாது என்பதற்கு தெளிவாய் விளக்கம் வேண்டும் ,
நீங்கள் என்னை பற்றி சொல்வதில் தவறில்லை , எது என்றாலும் விவாதம் செய்து முடிவுக்கு வரவேண்டும் .நான் வியாபார ரீதியாய் விமர்சனம் செய்கிறேனா என்ன .........என் விமர்சனத்தில் அரசியல் இருக்கும் மக்களின் என்ன ஓட்டத்தில் என்ன தவறு என்பது கட்டாயம் இருக்கும் விளக்கம் போதுமா நண்பரே .......கேள்வி கேட்டதற்கு நன்றி கேள்வி தான் அறிவை வளர்க்கும் நண்பா நன்றிகள் "

நண்பர்களே சினிமா விமர்சனம் எழுதுவது கேவலாமான செயலா என்ன . அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது ஏன் விமர்சனம் செய்யக்கூடாது அது மக்களை சிறிது அளவாவது பாதிக்கிறதே . சம கால இலக்கியத்தில் விமர்சனம் தேவை , புத்தகங்கள் கூட படித்தவருக்கு மட்டுமே சென்றடைகிறது .சினிமா பட்டி தொட்டி எங்கும் செல்கிறது அதனால் இது வெட்டி வேலை அல்ல என்றே நினைக்கிறேன் .

பல்க(கொ)லை கழகம்

கல்வி தனியார்மயமானால் என்ன ஆகும் ,எவ்வளவு தரம் தாழும் என்பதற்கு உதாரணமாய் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் கொடூரமாய் கொலை செய்யப்பட்டுள்ளார் அவர் பெயர் நிர்பேஷ் குமார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் . முன்பெல்லாம் கூட மாணவர்களிடையே கொலைகள் நடக்கும் , ஆனால் அது பெண்ணிற்க்காக நடக்கும் இல்லை ஈகோ தகராறு போன்றவை இருக்கும் . ஆனால் இப்பொழுது நடந்த கொலையை விட அது நடந்ததற்கு உண்டான நோக்கத்தை பாருங்கள் , வெறும் பணம் பணம் பணம் .பணத்திற்காக ஒரு கொலையை செய்யக்கூடிய நோக்கம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய வேண்டும் , கொலைகளுக்கு அவர்கள் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது , அவர்களை பணம் தான் பிரதானம் என்று சிந்திக்க வைத்த தனியார் கல்லூரிகளையே அது சாரும் .

எம் ஜி ஆர் பல்கலையில் படிக்கும் மாணவர் நிர்பேஷ் குமார். கல்லூரியில் தத்தம் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கமிசன் கிடைக்கும் . கொலைக்கு உண்டான ஆணி வேர் எங்கு இருக்கிறது என்று தெரிகிறதா ???? படிக்க வந்த மாணவனை வியாபாரி ஆக்கியது யார் . இந்த கமிசன் இந்த கல்லூரி மட்டும் தருவதில்லை பக்கத்தில் இருக்கும் சத்யபாமா கல்லூரி மற்றும் சில கல்லூரிகளும் இதே வேலையை செய்கின்றன . அதில் ஏற்ப்பட்ட போட்டியே பிரதான காரணம்.

அவர் மாநிலத்தில் சேர்ந்த ஒருவனை தன் பல்கலையில் சேர்க்க முடிவு செய்துள்ளார் நிர்பேஷ் குமார் .சத்யபாமா கல்லூரியை சேர்ந்த இன்னொரு வட மாநில பையன் முந்தி கொண்டார் .இது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது .இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இரு கல்லூரியிலும் கமிசன் கொடுக்கிறார்கள் என்று .அப்பொழுது யார் தண்டிக்கப்பட வேண்டும்.

நம் சட்டம் கூட என்ன சொல்கிறது "கொலை செய்தவனை விட கொலைக்கு தூண்டியவனே " முதல் குற்றவாளி என்று . இப்பொழுது யார் குற்றவாளி ????? இது கல்வி தனியார்மயம் ஆவதால் ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் பண விடயத்தில் மோதல் வரும் , அங்கே இருந்து நாளைய தூண்களான மாணவர்கள் எதை கற்றுக்கொள்ள முடியும் கொலை செய்வதையா ???????

கல்வி , மருத்துவம் போன்றவற்றை தனியாருக்கு விட்டால் இது தான் கதி . சரி இந்தியா போன்ற விவசாய நாட்டில் விவசாய கல்லூரிகள் தானே அதிகம் இருக்க வேண்டும் . ஏன் பொறியியல் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது , மருத்துவக் கல்லூரிகள் கூட குறைவு தான் ஏன் தெரியுமா . இங்கு கல்வி என்பது முதலாளிகளுக்கு வேலைக்கு ஆள் தயார் படுத்தவே அமெரிக்காவில் மென் பொருள் என்றால் , இங்கே பல லட்சக்கணக்கான மென் பொருள் பொறியாளர்கள் உருவாக்க படுகிறார்கள் . இந்தியாவில் உற்பத்தி என்பதே அவர்களுக்கு என்ன தேவையோ அதை இங்கே , மானுட சொத்தை எழுதி வாங்குகிறார்கள் . அடுத்து தண்ணீர் தனியார் மாயம் ஆகிக்கொண்டே இருக்கிறது இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை .

இதற்க்கு நடுவில் காவல்துறை ஒரு நகைச்சுவை செய்துள்ளது .வட இந்திய மாணவர்களை கண்காணிக்க போகிறார்களாம் . கண்காணிக்க வேண்டியது அவர்களையா?????

ஆசாத் என்றால் விடுலை

மாவோயிஸ்ட்கள் மீது அரசியல் முரண்பாடுகள் உண்டு , ஆனால் அதை தாண்டி சில விடயங்களை பேச வேண்டியது அவசியம் ஜூலை இரண்டு ,தோழர் ஆசாத் மற்றும் தோழர் ஹேம் சந்திர பண்டே இருவரையும் போலீஸ் ENCOUNTER என்ற முறையில் கொன்றுள்ளது .ஆசாத் மாவோயிஸ்ட் (CPI )(ML ) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் , செய்தித்தொடர்பாளர் , பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளார் , வந்த இடத்தில் அவரை கொன்று இருக்கிறார்கள் .அதுவும் நாக்பூர் வந்தவரை ஆந்திராவிற்கு அழைத்து சென்று கொன்றுள்ளனர் . ஆசாத் தான் செய்தித்தொடர்பளார் என்று அனைவருக்கும் தெரியும் . சண்டை போடா வருபவர்கள் வெறும் இரண்டு பேர் மட்டும் வந்து சண்டை போடுவார்காளா என்ன . போலிஸ் சொல்கிறது கடுமையான சண்டைக்கு பின்பே கொன்றோம் என்று ,எப்படி நாக்பூருக்கு வந்தவர் ஆந்திராவில் கொல்லப்பட்டார் . மதிய அரசு என்னமோ இவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போல் அழைத்து அவர்கள் வரவில்லை அதனால் " பச்சை வேட்டை " என்ற பெயரிலே மக்களை வேட்டையாடுகிறது . ஆனால் இங்கே ஜனநாயக முறையில் பேச வந்தவர்களின் கதி என்ன ஆயிற்று. ஜனநாயகம் என்பதெல்லாம் அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே .

யார் இந்த ஆசாத் , ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள் பகத் சிங்கை வழிநடத்தியது கூட ஆசாத் என்பவரே ஆசாத் என்ற பெயர் எழுச்சிகரமானதோ என்பது அவர் வாழ்க்கையை பார்த்தோமானால் தெரியும் , அவர் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் நல்ல மாணவர் , வாரங்கள் பகுதியில் உள்ள REC கல்லூரியில் M TeCh படிக்கிறார் .REC என்றாலே
அவர் படிப்பின் தரம் தெரிகிறது .அவர் நினைத்து இருந்தால் இன்று நன்றாய் சம்பாதித்து இருக்க முடியும் ,ஆனால் மக்கள் சுரண்டப்படுவதை பார்க்கிறார் அமைப்பிற்கு வருகிறார் , அமைப்பு அவரை விசாகப்பட்டினம் போக சொல்கிறது , அங்கே போகிறார் . அங்கே AP Radical Students Union இரண்டாம் ப்ரெசிடென்ட் ஆகிறார் . நாடு முழுக்க பயணம் செய்கிறார் , பல செமினார்களை நடத்துகிறார் . ஆந்திராவிலே நடந்த முக்கிய போரட்டங்களுக்கு காரணமாய் இருக்கிறார் , பல மக்கள் போராட்டங்கள் , மாணவர் போராட்டங்களில் ஆசாத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

1995 முதல் கட்சியின் தொடர்பாளராய் இருக்கிறார் , நன்கு அறியப்பட்ட ஊடக தொடர்பாளர் , பேச்சுவார்த்தைக்கு வரும் பொழுது கொலை செய்தது எப்படி ஜனநாயகம் . சரி இதில் இருந்து என்ன சொல்ல வருக்கிறார்கள் தண்டகாரண்யா இடம் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தம் , மக்கள் கட்டாயம் விரட்டப்படுவார்கள் , பேச்சு வார்த்தைக்கு எல்லாம் அரசு தயாராய் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா பா சிதம்பரம் . இல்லை அருந்ததி ராய் போன்ற அறிவுத் தளத்தில் உள்ளவர்கள் காட்டிற்குள் செல்கிறார்கள் உண்மையை சொல்கிறார்கள் , அதனால் இந்திய நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் புரிகிறது விடயம் .அருந்ததி ராய் போன்றவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையா . பா சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் உலக வங்கியிலே வேலை செய்தவர்கள் , சிதம்பரத்திற்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் தொடர்பு உண்டு . அப்படி இருக்க அப்படி தானே செயல்பட முடியும் .இங்கே உலக வங்கியின் ஆட்சியையும் , முதலாளிகளின் ஆட்சியையும் நடந்து கொண்டிருக்கிறது .

எதோ ஒரு நிறுவனம் சார்பாக முதலாளிகள் சார்பாக அரசு நிற்கிறது .உண்மையில் நாட்டு மக்கள் சார்பாக தானே அரசு நிற்க வேண்டும் .அப்படி இருக்க இந்த பச்சை வேட்டை என்பது உலக முதலாளிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உண்டான போர் .இன்று தண்டகாரண்யாவில் நடக்கலாம் நாளை அவர்களுக்கு மரினா கடற்க்கரை மூலம் ஒரு தேவை என்றால் சென்னையை சேர்ந்த மக்கள் துரத்த படலாம் , இல்லை ஊட்டி மலை பிடித்து இருக்கிறது என்றால் விலைக்கு கேட்பான் மக்கள் மறுபடியும் அடித்து விரட்டப்படுவார்கள் . இது யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்றே நினைக்கிறேன் .

சரி அவருடன் கொல்லப்பட்ட ஹேம் சந்திர பண்டே யார் ???? அவர் பத்திரிகையாளாராம்.....அவர் FREELANCER அதனால் ஒன்றும் செய்ய முடியாது அவருக்கு என்று கைவிரிக்கிறது அவர் வேலை செய்து வந்த பத்திரிகை , சரி FREELANCER என்றால் அவர் உயிருக்கு மதிப்பு இல்லையா .இன்று ஆனந்த விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கூட பாதி பேர் FREELANCER தான் அதற்காய் உயிருக்கு மதிப்பு கொடுக்க
வேண்டாமா ????? சரி தனி மனித சுதந்திரம் எழுத்திற்கு சுதந்திரம் தேவை என்று தனிமனித அரிப்பிற்காக சண்டை போட்ட பத்திரிகையாளர்கள் கூட பதிவுலகத்திலே எதிர்ப்பை பதிவு செய்ய வில்லை . இருந்தாலும் அவர்களுக்கு நடப்பது நாளை நம் தமிழகத்தில் கூட நடக்கலாம் .தோழர்களுக்கு வீர வணக்கங்கள் ,ஆசாத் என்றால் விடுலை என்று பொருள் கவலை படாதே தோழரே மக்கள் விடுதலை அடைவார்கள் தோழர்களின் தியாகத்தால் .

Monday, 5 July 2010

வாழ்க ஜனநாயகம்

1.மின் இயந்திரங்கள் சிறப்பாய் செயல்படுகிறது (பா சிதம்பரம் வெற்றியே சான்று) நவீன் குப்தா

தமிழகத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.மேலும் தமிழ் நாட்டில் இயந்திர வாக்கு பதிவு தமிழகத்தில் திருப்தியாய் இருக்கிறது என்று கூறியுள்ளார். சரி உள்துறை அமைச்சர் பா சிதம்பரம் எப்படி ஜெயித்தார் என்று ஊருக்கே தெரியும் . இதன் பெயர் ஜனநாயகமா, மக்கள் என்ன தான் வாக்களித்தாலும் முடிவு செய்யப்போவது இயந்திரம் . ஜனநாயக தேசத்தில் பேசுவதற்கு உரிமைஇருக்கும் ஒரு தேனீர் கடையில் உட்க்கார்ந்து நாம் பா சிதம்பரத்தை திட்ட முடியும் , ப்ளாக் போன்ற இடங்களில் எழுத முடியும் . ஆனால் செயல் உண்மையான ஜனநாயகம் பணம் படைத்தவனுக்கே , எப்படி மக்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு , ஆனால் அந்த இயந்திரம் மட்டுமே முடிவுகளை முடிவு செய்ய முடியும். மக்கள் பா சிதம்பரத்திற்கு எதிராய் வாக்களிக்கலாம் ஆனால்
இயந்திரம் பணம் படைத்தவனுக்கு தானே சாதகமாய் இருக்கும் , இது வெளியில் ஜனநாயகம் போலவும் உள்ளே மக்களை ஒடுக்கவும் முடிகிறது . மன்னராட்சியை விட ஜனானயகத்தில் தான் தவறுகளும் செய்து கொண்டு , ஜனநாயக முறையில் இருப்பதை போன்ற விடயங்களை செய்ய முடியும் .

2. ஏன் கலைஞர் தன் பேரன் படத்திற்கு வசனம் எழுதவதில்லை

கலைஞர் வீட்டில் இருந்து இன்னொரு பேரன் சினிமாவில் நடிக்க வருக்கிறார் , அருள்நிதி , படம் பெயர் வம்சம் . கலைஞர் பேரன் விழாவே தாத்தவே பாடல்களை வெளியிட்டார் , இந்த மானம் கெட்ட விஜய் சூர்யா ரிலீஸ் செய்தார்கள் . அதற்க்கு கலைஞர் "வம்சம் " என்பதற்கு விளக்கம் கொடுத்தார் "விஜய் சூர்யா எந்த வம்சத்தில் இருந்து வந்தார்கள் என்று தெரியும் " என்பது போல பேசி உள்ளார் . அதாவது கலைஞரின் பேரனாம் அதனால் நடிப்பு வருமாம்,ஏன் என்றால் வம்சமாம் . கலைஞர் பேரன் என்ற அடையலாம் இல்லை என்றால் அந்த அருள் நிதியால் ஒரு நகைச்சுவை நடிகறாய் கூட ஆகி இருக்க முடியாது என்பதே உண்மை . பேரன் கண் கலங்கியதை பத்திரிகைகள் ஏதோ ஒரு பெரிய விடயம் போல காட்டுகின்றன . ஏன் அப்பா ஈழத்தில் ஒரு இனம் அழிந்த பொழுது அழாத பத்திரிகை இப்பொழுது அழுகிறது .இந்த காட்சியும் ஜனநாயகத்தில் தான் முடியும் . ஏன் கலைஞர் தன் பேரனுக்கு வசனம் எழுதவில்லை , தன் பேரன் தயாரிக்கும் RED GIANT அல்லது CLOUD NINE இல்லை சன் pictures படங்களுக்கு வசனம் எழுதலாமே , ஏன் செய்யவில்லை , கமல் கலைஞர் தான் சிறந்த திரைக்கதை வசனம் எழுதுவார் என்பாரே , கமல் ஏன் நடிக்கவில்லை . தன் பேரன் என்று வரும்பொழுது சிறந்த இயக்குனர் தேவை படுக்கிறார் . இந்த கொடுமை எல்லாம் ஜனநாயகத்தில் மட்டுமே நடக்கக்கூடியது . முடியாட்சி போல , சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் வாரிசுகளே தான் ,தகுதி எல்லாம் தேவை இல்லை . இது எல்லாமே ஜனநாயகத்தில் தான் சாத்தியம் .


3 கடவுள் இருக்கிறார் ஜனநாயகத்தை காப்பாற்ற
கல்லூரி விடயத்தில் பங்காரு அடிகளார் மாட்டி உள்ளார் , நித்யா நிலைமை கொஞ்சம் மோசம் . ஜெயந்திரர் மத நாடு என்பதால் ,தப்பிக்கொண்டு இருக்கிறார் , பார்பனீயம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல .....ஆனால் இன்றும் ஆன்மீக வாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது . அரசியல் வாதிகள் மதங்களை கடவுள் நம்பிக்கயை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள் , மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்ப ஒரு அபின் போன்ற போதை தேவை , கடவுளோ சாமியாரோ ஒரு அபின் போல மனிதனுக்கு இருக்கிறான் .மனிதனின் சோகம் மறக்க தேவைப்படுக்கிறார் கடவுள் . ஒரு ஜனநாயக நாட்டிலே ஜனநாயகம் என்னும் அமைப்பை காப்பாற்ற கடவுள் தேவை .

4 . சமீபத்தில் கடையில் தொங்க விடப்பட்ட பேப்பர் பார்த்தேன் . "விஜய் ஜாதகம் எப்படி உள்ளது " போன்ற ஆராய்ச்சி . நாட்டிற்க்கு ரொம்ப முக்கியம் .

டிஸ்கி :
அருள் நிதி போன்றவர்கள் நடிகர்கள் ஆவதும் . பணக்காரர்களின் ஆளும் வர்க்கத்தின் குடும்ப பாசம் அவர்களின் குலப்பெருமை பற்றி பெருமையாய் பேசுவதும் .நடிகர்கள் கலைஞரை பாராட்டுவதும் , அது சன் அல்லது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப படுவதும் ஒரு விடுமுறை நாளை அதற்காய்
துலைத்து அந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழும் மனநிலையும் ஜனநாயகத்திலே மட்டுமே சாத்தியம் .

Saturday, 3 July 2010

விமர்சனங்கள்

இது என்னுடைய ரெட்டை சதத்திற்கு முந்திய பதிவு . நான் ஏதோ எழுத வந்தேன் , கற்பனை பண்ணி எழுத வேண்டும் , வித்யாசமாய் தெரிய வேண்டும் படித்தவர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்ற அற்பமான எண்ணங்களே மேலோங்கி இருந்தது . ஆனால் எழுதும்
போதும் நிறைய படிக்கும் பொழுது அது வேறெங்கோ இழுத்து சென்றது . எழுதுவது ஒரு நோக்கத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றியது . ஏதோ எனக்கு தெரிந்ததை வைத்து மனதில் சரி என்று படுவதை எழுதுகிறேன் . இப்படி எழுதுவதால் பல எதிரிகள்
சம்பாதித்து இருப்பேன் என்று நினைக்கிறேன் .புலவன் புலிகேசி எழுதும் பொழுது அவர் பதிவில் ஒருவர் பின்னூட்டம் இடுவார் வெண்ணிற இரவுகளுடன் சேர்ந்து நீங்கள் கெட்டு போகிறீர்கள் என்று , கட்டம் கட்டி விடுவார்கள் என்று . நான் ஒன்று மட்டும் சொல்வேன்
இந்த பதிவுலகம் மட்டும் உலகம் அல்ல இங்கே என்ன கட்டம் கட்ட போகிறார்கள் . நாம் என்ன தண்டகாரண்யாவில் போரடிக்கொண்டிருக்கிரோமா என்ன இல்லையே ???? இதில் கட்டம் கட்டினால் என்ன கட்டவிட்டால் என்ன ????????நான் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் அளவில் எதுவும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் . இன்னும் பக்குவப்பட்ட எழுத்து வரவில்லை . விடயம் தெரிந்தாலும் கோரவையாய் எழுத வரவில்லை . கோர்வையாய் எழுதினாலும் சில நேரத்தில் விடயத்தை கோட்டை விடுவது உண்டு . இன்னும் எழுத்து பிழைகள் நிறைய இருப்பது உண்டு . ஆனால் என் எழுத்தை பார்த்து ஒரு விடயம் பெருமை படுவேன் , நேர்மையாய் மனதில் பட்டதை சொல்லிவிடுவேன் . இப்பொழுது ஓரளவு நோக்கத்துடன் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி என்ன உனக்கு நல்லதே படதா ????????? இப்பொழுது என் எழுத்தை பற்றி என்ன விமர்சனம் செய்தேன் , நாம் தரக்குறைவாய் இருக்கும் பொழுது விமர்சனம் செய்தால் தான் மாற்றிக்கொள்ள
முடியும் . இது சமூகத்திற்கும் பொருந்தும் . சரியாக செய்தால் அதை பாராட்ட தேவை இல்லை , சரியாய் செய்வது கடமை தவறாய் செய்தால் விமர்சனம் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஒரு சமூகம் வளர முடியாது . நீங்களும் எப்பொழுதும் என்னை விமர்சனம் செய்யலாம் , அது தனி நபர் தாக்குதல் போல் இல்லாமல் , உண்மையிலேயே தவறாய் இருந்தால் சொல்லுங்கள் விவாதம் செய்வோம் . விவாதிப்பதன் மூலம் சரி தவறு என்று கருத்திற்கு வர முடியும் , யார் தவறோ அவர்கள் திருத்திக்கொள்ளலாம் . ஆனால் விமர்சனம் என்பதே தவறு என்று சொல்லாதீர்கள் , ஒரு சினிமா விமர்சனம் கூட முக்கியமானது அரசியல் பார்வையில் . மக்களின் ரசிப்பு தன்மை கலை தன்மை தான் அரசியலையும் முடிவு செய்கிறது என்பதே உண்மை .அதனால் விமர்சனம் தேவை இல்லை என்று மட்டும் நினைக்காதீர்கள் . விமர்சனம் வெறும் குற்றம் சொல்வது அல்ல ,ஆதாரப்பூர்வமாய் இது தான்
பிரச்சனை என்று சொல்வது அது தவறா என்ன ??????????????

Friday, 2 July 2010

உலக (மய ) நாயகன்கமலஹாசன் ஐம்பது வருடங்களாய் திரைத்துறையில் இருக்கிறார் , அதை பாராட்டும் விதமாய் அவர் படங்களை திரையிட்டுள்ளனர் புது டெல்லியில் .இது அரசு விழாவாம், அரசு ஏன் ஒரு சினிமா வணிகனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் . அவர் சினிமாவை வணிகமாய் நினைத்து தானே சம்பாதித்தார் , அதற்க்கு விழாவாம் , அதற்க்கு நாம் கொடுக்கும் வரிப்பணத்தை தானே செலவு செய்திருப்பார்கள் . சினிமா என்பத கலை வடிவம் என்று சொல்வதை விட அது ஒரு மிகப்பெரிய வணிகம் பிசினஸ் கமலஹாசனே இதை ஒற்றுக்கொல்வார் , ஒருவர் வணிகத்தில் இருந்தார் என்பதற்காய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பாராட்டு விழாவா ????? சரி அங்கே சில படங்களை திரையிட்டுள்ளனர் . "ஹே ராம் " , " தசவதாரம்" , "தேவர் மகன் " "விருமாண்டி" "நாயகன் " "அன்பே சிவம் " . இந்த படங்களின் அணிவகுப்பை பார்க்கும் பொழுது தான் ஏன் அரசு இந்த விழாவை நடத்துகின்றது என்று தெரிகிறது .

ஹே ராம் ஹிந்து வெறியை தூண்டும் படம் என்பது படத்தை பார்த்தாலே புரியும் . "தேவர் மகன் " பழைய நில பிரபுத்துவத்தை ஆதரிக்கும் படம் . ஒரு ஊர் தலைவர் இருப்பார் , அவர் வரும் பொழுது எல்லாரும் எழுவார்கள் . எல்லாரும் கையை கட்டிக்கொண்டு நிற்ப்பார்கள் அவர் முன்பு , போன்ற நில பிரபுத்துவ கருத்துக்களை மனதில் ஆழ விதைத்து அதன் பிம்பத்தை உயர்த்தி பிடித்த படம் தேவர் மகன் . சரி "அவ்வை சண்முகி " பார்ப்பன கலாச்சாரத்தை காட்டிய படம் . "தசவதாரம் " மீண்டும் அதே கதை தான் , பத்து அவதாரங்களை , ஹிந்து மதத்தின் ஆணி வேரை அந்த ஆணியை இன்னும் ஆழமாய் அடிக்க கமல் எடுத்த படைப்பு "தசவதாரம் ". கமல் எப்பொழுதும்
நாத்திகம் பேசுவார் ஆனால் ஆழமாய் தன் கருத்துகளை மறைமுகமாய் வைத்துவிட்டு போவார் .

உதாரணமாய் "தசாவதாரத்தில்" கடைசி காட்சி " கடவுள் இருந்திருந்தால் நல்லா இருக்கும் " என்று அசினுடன் பேசிக்கொண்டிருப்பார் . அப்பொழுது கேமரா wide ஆங்கிலிலே விரியும் அப்பொழுது அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் , எதற்கு பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் அந்த சாமி சிலை பின்பு நின்று கொண்டு நாத்திகம் பேசிக்கொண்டிருப்பார் பின்னணியில் "கல்லை மட்டும் கண்டால் " பாடலின் பின்னணி இசை ஒலிக்கும் . என்ன சொல்ல வருகிறார் இங்கே , நாத்திகன் கடுவலை பார்க்காமல் பேசிக்கொண்டிருப்பதை SYMBOLIC SHOT போல காட்டுகிறாரா ???? யாரும் கமல் பார்பனர் அதனால் நான் திட்டுகிறேன் என்று சொல்லவேண்டாம் .....அவரை விமர்சனம் செய்யவில்லை அந்த படைப்பில் என்ன சொல்கிறார் .


அன்பே சிவம் படத்தில் மாதவன் முதலாளித்துவத்தின் குறியீடாய் வருவார் , கமல் communism குறியீடாய் வருவார், ஆனால் அவர்களையும் அன்பால் வென்றுவிடலாம் , வலிக்காமல் புரியவைக்கலாம் என்ற நீர்த்து போன கருத்தை சொல்வார் . சரி முதலாளித்துவம் எத்தனை கொடூரமாய் உள்ளது போபால் விஷவாயு விடயம் என்ன ஆயிற்று , பிளாச்சிமடா என்னும் ஊர் நிர்மூலமானதே , முதலாளித்துவ கோரத்தால் . சரி தண்டகாரண்யா இடத்தை வளைக்கவேண்டும் என்று பார்க்கிறதே வேதந்தா , பழங்குடி மக்களை விரட்ட பார்க்கிறார்களே , அவர்களை அன்பாய் சொல்லி கேட்க்க வைக்க முடியும் . அன்பால் புரிய வைக்க முடியும் என்கிறார் கமல் . அன்பால் சொன்னால் வேதாந்தா நிறுவனம் தண்டகாரன்யாவை விட்டு விடுமா . இந்த அன்பு புரட்சி ஏற்ப்படாமல் நீர்த்து போகசெய்யும் அன்பு ,பொங்கி எழுகிறவனை கோபப்படாதே அன்பாய் சொன்னாலே கேட்டுக்கொள்வான் என்று சொல்லி நீர்த்து போக செய்யும் வேலையை பார்ப்பது. கமல் அன்பே சிவத்தில் ஏற்றிக்கும் பாத்திரத்திற்கு பெயர் தான் போலி Communism .


உலகமயமாதல் என்ன சொல்லிருக்கிறது தெரியுமா சீனாவில் . சீனா மக்கள் உயிர் வாழும் நாட்கள் சராசரி ஆயுள் காலம் மற்றவர்களை விட இரண்டு வருடம் கூட . இந்த நிலையில் உலக வங்கி சீனாவிற்கு விசேட கடன் ஒன்றை வழங்கி உள்ளது , அந்த மக்களின் ஆயுளை குறைக்கும் வழிக்காட்டும் நிபந்தனையுடன் அந்த கடன் வழங்க பட்டுள்ளது . அதாவது ஆயுளை குறைக்க வேண்டும் என்றால் என்ன உணவு உட்க்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை திணித்து நிபந்தனையுடன் கடன் வழங்கி உள்ளது . ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ வேண்டும் என்பதை முதலாளித்துவமும் , உலகமயமாதலும் நிர்ணயம் செய்கிறது,ஏழை உயிர்களுடன் விளயடுக்கிறது அவர்களிடம் அன்பாய் இருக்க சொல்கிறார் கமல் .


1992 ஆம் ஆண்டில் lawrence summers என்பவர் உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார் .அவர் உலக வங்கியின் ஊழியர்க்களுக்கு வழிக்கட்டுவதர்க்காய் ஒரு கடிதம் எழுதினார் . அதில் மாசு உள்ள தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதே அதன் சாராம்சம் . அந்த கடிதத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் .

1 மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்ப்படும்

2 மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறந்தது .
ஏன் என்றால் அங்கு வீசும் காற்று los angels கற்றை விட சிறந்தது (திமிரை பார்த்தீர்களா )

3 ஏழைகள் ஏழைகள் தான் ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லை . ஐந்து வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளின் மரணம் 200 சதவிகிதமாய் இருக்கும் போது மார்பு புற்றுநோய்க்கு ரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டார்கள் .

(நன்றி புத்தகம் "உலகமயமாதல்" ரயாகரன் )


போபாலில் என்ன நடந்தது , உயிர் கூட மயிர் என்று சொல்லும் உலகமயமாக்கலை அன்பால் திருத்திவிடலாம் என்று புரட்சி ஏற்ப்படாமல் இருக்க நீர்த்து போகும் கொள்கையை செயக்கிறார் கமல் . இந்தியா நில பிரபுத்துவமும் முதலாளித்துவமும் கலந்த நாடு , அதனால் அன்பே சிவம் , தேவர் மகன் போன்ற படங்களை அரசு அதன் பிரசார பீரங்கி போல படத்தை சிறந்த படைப்பு போல சித்தரித்து காட்டுகிறது . மேலும் தசாவதாரம் , ஹே ராம் , அவ்வை சண்முகி போன்ற படங்கள் பார்பனீயம் . இதுவும் அரசின் குரல் அதனால் திரையிட்டுள்ளனர். கமலஹாசன் என்பவர் ஆளும் வர்க்கத்தின் குரலாய் உள்ளார் அதனால் அவருக்கு பாராட்டு விழா . கலைஞர் பாராட்டு விழா கூட ஒரு தனிமனிதனின் அர்ப்பாமான எண்ணம் , ஆனால் கமல் பாராட்டு விழாவில் விஷமத்தனம் உள்ளது .

Thursday, 1 July 2010

மென் பொருள் பொறியாளர் ஏன் communism பேசக்கூடாதா

நேற்று ஒரு பதிவர் கேட்டிருந்தார் "மென்பொருள் நிறுவனத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா..." ஏன் எதிர்க்க கூடாது என்பதே என் கேள்வி . சரி பிரெஞ்சு புரட்சி நடந்த பொழுது என்ன நடந்து கொண்டிருந்தது , பிரான்ஸ் நில பிரபுத்துவத்தில் இருந்தது , தொழிற் புரட்சி வெடித்து முதலாளித்துவ நாடாய் மாறுகிறது. ஆனால் புரட்சி வெடிக்கும் முன்பாய் , புரட்சியை தோற்றுவித்தவர்கள் தோன்றியது நில பிரபுத்துவசமூகத்தில் இருந்து . ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்பதற்காய் அதில் உள்ள தவறுகளை எதிர்ப்பது , அல்லது தேவை பட்டால் அந்த அமைப்பையே தூக்கி எறிவது ஆகியவை தவறா என்ன ????? சரி இதை மட்டும் லெனின் நினைத்து இருந்தால் ரஷ்ய புரட்சி ஏற்ப்பட்டிருக்காது .இது மறைமுகமாய் எதை சொல்லவருகிறது என்றால் "ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருக்கிறாய் , உனக்கு முதலாளி தானே சோறு போடுகிறான் , அவனை எதிர்க்க கூடாது " என்று முதலாளித்துவதிர்க்கு ஆதரவு தெரிவிக்கிறது . ஆனால் உண்மை என்ன ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தான் முதல் எதிர்ப்பு குரல் வரும் இது உலக வரலாறு . ஒரு அமைப்பு இருக்கிறது , சமூக சூழலில் அந்த அமைப்பில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் , அதில் இருந்து கொண்டு தான் எதிர்ப்பை தெரிவிக்க முடியும் ,அதற்க்கு ஆதரவு தருவது தான் தவறு , எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி தவறாகும் , ஆனால் மணிரத்னம் கருத்து ரீதியாய் ஆதரவு தெரிவிக்கிறார் , முதலாளித்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் , அதனால் இவர் எதிர்க்க பட வேண்டியவர் .

மாற்றங்கள் என்பதே ஒரு விடயத்தை எதிர்த்து , அதில் இருந்து மாறுவதே . மாற்றங்களே கூடாது இது நாள் வரை கேவலமான சூழலில் தானே வாழ்ந்தாய் உனக்கு தகுதி இல்லை என்று எப்படி சொல்ல முடியும் . எனக்கு தெரிந்து நிறைய மென்பொருள் பொறியாளர்கள் , வார விடுமுறை நாட்களில் மக்களுக்கான பணிகள் செய்யும் இயக்கங்களில் இருக்கிறார்கள் , நீங்கள் சொல்வது போல் அவர்கள் PUB போய் இருந்தால் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள்விமர்சனம் செய்ய வேண்டும் . ஆனால் அவர்கள் பேசுவது communism , அதில் நண்பர் பாலாவிற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை . முதலாளித்துவ அமைப்பில் இருக்கிறார்கள் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள் , மென்பொருள் துறையில் வேலை பதினான்கு மணி நேரம் , சில நாட்கள் இருபது மணி நேரத்தையும் தொடுகிறது , அவர்கள் சுரண்டப்படும் பொழுது இயல்பாய் எதிர்க்கிறார்கள் . கேட்டால் பாலா சொலிகிறார் முதாலாளியின் காசை தின்று விட்டு முதலாளியை எதிர்ப்பதா . ஒரு மென் பொருள் துறையில் நூறு டாலர் நம்மை வைத்து சம்பாதித்தால் ஒரு டாலர் மட்டுமே சம்பளம் வருகிறது என்பதே உண்மை .சுரண்டப்படும் அமைப்பில் இருந்து எதிர்ப்பு வரக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

தாலி
ஊரில்
பொங்கல் வைத்தார்கள்
என்பதற்காய் நான் திருவிழாக்கள் என்று
சொல்லவில்லை .........!!!!!!
திருவிழா என்பது நான் சாமி பார்க்கும்
விழா அல்ல ......
நீ என்னை பார்க்கும் விழா ...... !!!!
நீ என்னை பார்த்த நாள் முதல்
அது திருவிழா என்று ஏற்றுக்கொண்டேன் ....!
காதல் பாடல்கள் ஒலி பெருக்கியில்
பாடிக்கொண்டிருந்த பொழுது ..............
நாம் யார் காதில் விழாமல் பேசிக்கொண்டோம் ...!
பாடல்கள் போடாத நொடிகளில்
பார்வைகளால் பேசிக்கொண்டோம் ............!!!!!
எதோ ஒரு தினத்தில் உனக்கு பரிசம்
போட்டார்கள் ...............வேறு ஒருவனுடன்
திருமண தினத்தன்று
ஒலி பெருக்கி அலறிக்கொண்டிருந்தது ...........
ஆனால் நானும் பேசவில்லை நீயும்
பேசவில்லை ............!!!!
ஏதொ வேறு சாதியாம்
தாலியாம் ..............
தாலி ஏறிவிட்டால் நீ சொத்தாம்
யாரையும் பார்க்க கூடாதாம் ....................!!!!
அன்று நம் பார்வையும் பேசவில்லை
குனிந்து கொண்டே இருந்தாய் ..................
குனிந்த சமூகத்தில்
பெண் குனிந்து தானே இருக்க முடியும் .........
ஏன் மணமகன் மெட்டி போடவில்லை
மணமகன் தாலி கட்டக்கூடதா ....................
மணமகன் நண்பர்களுடன் சேர்ந்து
சரக்கடித்தானாம் பழைய காதலியை
நினைத்து
ஏன் நீ சரக்கடிக்கவில்லையா ??????
உனக்கும் காதல் தோல்வி தானே ....
ஒ பெண்களுக்கு வலி இல்லையோ
சரக்கடித்தால் உன்னை பெண்
என்று ஒத்துக்கொள்ள மாட்டார்களோ ..........
யார் இந்த சட்டம் எல்லாம்
போட்டது ..............!!!!!