Wednesday, 7 July 2010

ஆசாத் என்றால் விடுலை

மாவோயிஸ்ட்கள் மீது அரசியல் முரண்பாடுகள் உண்டு , ஆனால் அதை தாண்டி சில விடயங்களை பேச வேண்டியது அவசியம் ஜூலை இரண்டு ,தோழர் ஆசாத் மற்றும் தோழர் ஹேம் சந்திர பண்டே இருவரையும் போலீஸ் ENCOUNTER என்ற முறையில் கொன்றுள்ளது .ஆசாத் மாவோயிஸ்ட் (CPI )(ML ) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் , செய்தித்தொடர்பாளர் , பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளார் , வந்த இடத்தில் அவரை கொன்று இருக்கிறார்கள் .அதுவும் நாக்பூர் வந்தவரை ஆந்திராவிற்கு அழைத்து சென்று கொன்றுள்ளனர் . ஆசாத் தான் செய்தித்தொடர்பளார் என்று அனைவருக்கும் தெரியும் . சண்டை போடா வருபவர்கள் வெறும் இரண்டு பேர் மட்டும் வந்து சண்டை போடுவார்காளா என்ன . போலிஸ் சொல்கிறது கடுமையான சண்டைக்கு பின்பே கொன்றோம் என்று ,எப்படி நாக்பூருக்கு வந்தவர் ஆந்திராவில் கொல்லப்பட்டார் . மதிய அரசு என்னமோ இவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போல் அழைத்து அவர்கள் வரவில்லை அதனால் " பச்சை வேட்டை " என்ற பெயரிலே மக்களை வேட்டையாடுகிறது . ஆனால் இங்கே ஜனநாயக முறையில் பேச வந்தவர்களின் கதி என்ன ஆயிற்று. ஜனநாயகம் என்பதெல்லாம் அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே .

யார் இந்த ஆசாத் , ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள் பகத் சிங்கை வழிநடத்தியது கூட ஆசாத் என்பவரே ஆசாத் என்ற பெயர் எழுச்சிகரமானதோ என்பது அவர் வாழ்க்கையை பார்த்தோமானால் தெரியும் , அவர் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் நல்ல மாணவர் , வாரங்கள் பகுதியில் உள்ள REC கல்லூரியில் M TeCh படிக்கிறார் .REC என்றாலே
அவர் படிப்பின் தரம் தெரிகிறது .அவர் நினைத்து இருந்தால் இன்று நன்றாய் சம்பாதித்து இருக்க முடியும் ,ஆனால் மக்கள் சுரண்டப்படுவதை பார்க்கிறார் அமைப்பிற்கு வருகிறார் , அமைப்பு அவரை விசாகப்பட்டினம் போக சொல்கிறது , அங்கே போகிறார் . அங்கே AP Radical Students Union இரண்டாம் ப்ரெசிடென்ட் ஆகிறார் . நாடு முழுக்க பயணம் செய்கிறார் , பல செமினார்களை நடத்துகிறார் . ஆந்திராவிலே நடந்த முக்கிய போரட்டங்களுக்கு காரணமாய் இருக்கிறார் , பல மக்கள் போராட்டங்கள் , மாணவர் போராட்டங்களில் ஆசாத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

1995 முதல் கட்சியின் தொடர்பாளராய் இருக்கிறார் , நன்கு அறியப்பட்ட ஊடக தொடர்பாளர் , பேச்சுவார்த்தைக்கு வரும் பொழுது கொலை செய்தது எப்படி ஜனநாயகம் . சரி இதில் இருந்து என்ன சொல்ல வருக்கிறார்கள் தண்டகாரண்யா இடம் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தம் , மக்கள் கட்டாயம் விரட்டப்படுவார்கள் , பேச்சு வார்த்தைக்கு எல்லாம் அரசு தயாராய் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா பா சிதம்பரம் . இல்லை அருந்ததி ராய் போன்ற அறிவுத் தளத்தில் உள்ளவர்கள் காட்டிற்குள் செல்கிறார்கள் உண்மையை சொல்கிறார்கள் , அதனால் இந்திய நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் புரிகிறது விடயம் .அருந்ததி ராய் போன்றவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையா . பா சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் உலக வங்கியிலே வேலை செய்தவர்கள் , சிதம்பரத்திற்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் தொடர்பு உண்டு . அப்படி இருக்க அப்படி தானே செயல்பட முடியும் .இங்கே உலக வங்கியின் ஆட்சியையும் , முதலாளிகளின் ஆட்சியையும் நடந்து கொண்டிருக்கிறது .

எதோ ஒரு நிறுவனம் சார்பாக முதலாளிகள் சார்பாக அரசு நிற்கிறது .உண்மையில் நாட்டு மக்கள் சார்பாக தானே அரசு நிற்க வேண்டும் .அப்படி இருக்க இந்த பச்சை வேட்டை என்பது உலக முதலாளிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உண்டான போர் .இன்று தண்டகாரண்யாவில் நடக்கலாம் நாளை அவர்களுக்கு மரினா கடற்க்கரை மூலம் ஒரு தேவை என்றால் சென்னையை சேர்ந்த மக்கள் துரத்த படலாம் , இல்லை ஊட்டி மலை பிடித்து இருக்கிறது என்றால் விலைக்கு கேட்பான் மக்கள் மறுபடியும் அடித்து விரட்டப்படுவார்கள் . இது யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்றே நினைக்கிறேன் .

சரி அவருடன் கொல்லப்பட்ட ஹேம் சந்திர பண்டே யார் ???? அவர் பத்திரிகையாளாராம்.....அவர் FREELANCER அதனால் ஒன்றும் செய்ய முடியாது அவருக்கு என்று கைவிரிக்கிறது அவர் வேலை செய்து வந்த பத்திரிகை , சரி FREELANCER என்றால் அவர் உயிருக்கு மதிப்பு இல்லையா .இன்று ஆனந்த விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கூட பாதி பேர் FREELANCER தான் அதற்காய் உயிருக்கு மதிப்பு கொடுக்க
வேண்டாமா ????? சரி தனி மனித சுதந்திரம் எழுத்திற்கு சுதந்திரம் தேவை என்று தனிமனித அரிப்பிற்காக சண்டை போட்ட பத்திரிகையாளர்கள் கூட பதிவுலகத்திலே எதிர்ப்பை பதிவு செய்ய வில்லை . இருந்தாலும் அவர்களுக்கு நடப்பது நாளை நம் தமிழகத்தில் கூட நடக்கலாம் .தோழர்களுக்கு வீர வணக்கங்கள் ,ஆசாத் என்றால் விடுலை என்று பொருள் கவலை படாதே தோழரே மக்கள் விடுதலை அடைவார்கள் தோழர்களின் தியாகத்தால் .

1 comment:

வெண்ணிற இரவுகள்....! said...

விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறேன் , விவாதங்களும் தேவை