Monday, 19 July 2010

போபால் ஒரு தொடர் பதிவு - பதிவுலகத்திற்கு






















உலகமயமாக்கலின் கோரத்தாண்டவம் , போபால் விட வாயு வழக்கில் தெரிந்தது . இருபத்தி ஆறு வருடம் கழித்து தீர்ப்பு என்ற பெயரில் அநீதி நடந்தது . அதை பற்றி நம் பதிவர்கள் வேதனையே குறைந்தது நாம் அனைத்து பதிவர்களும் , அரசிலுக்கு அப்பாற்ப்பட்டு எழுத வேண்டும் போபால் விடயங்களை பற்றி அதில் இருக்கும்
உலகமயமாதலின் சுரண்டல் பற்றி . நாம் எது எதற்கோ பதிவர் சந்திப்பு என்று கூட்டுகிறோம் இதற்க்கு ஏன் கூட்டக்கூடாது . நாம் எது எதற்கோ தொடர் பதிவு எழுதுகிறோம் இதற்க்கு ஏன் தொடர் பதிவு எழுதக்கூடாது . வினவு தன்னுடைய தளத்தில் புதிய ஜனநாயகம் லிங்க் கொடுத்துள்ளார் , அது PDF தான் . அதை முழுவதுமாய் படியுங்கள் ,

அந்த புதிய ஜனநாயகம் புத்தகத்தில் சான்றுகளுடன் போபால் பற்றி விரிவாய் விளக்கப்பட்டுள்ளது . அவர்கள் மீது ஆயிரம் விமர்சனம் உங்களுக்கு இருக்கலாம் ஆனால் அந்த புத்தகத்தை ஒரு முறை படியுங்கள் . ஆளுக்கு ஒரு பதிவு போடுங்கள் . அதில் 17 கட்டுரைகள் இருக்கிறது , ஹிந்து விதர்பா விடயத்தில் எழுதிக்கொண்டிருக்கும் சாய்நாத் கட்டுரை உட்பட .

முடிந்தவர்கள் தரவிறக்கம் செய்து படியுங்கள் , படித்து விட்டு பதிவு போடுங்கள் . முடியாதவர்கள் வெளியில் பத்து ரூபாய் தான் புதிய ஜனநாயக புத்தகம் , அதை வாங்குங்கள் . இதில் பார்ப்போம் பதிவுலக ஒற்றுமையை . ஏன் என்றால் எனக்கு இருக்கும் வாசகன் புலிகேசிக்கு இருக்க மாட்டான் . புலிகேசியை படிப்பவன் பலாசீயை படிக்காமல் இருக்கலாம் . ஏன் கேபிள் சங்கர் அவருக்கு தனி வாசகர்கள் , அதனால் எல்லாரும் எழுதினால் தான் மக்களுக்கு விடயம் செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . "பதிவுலகத்தில் நான் எப்படி பட்டவன் " போன்ற தனிமனித தொடர்பதிவுகள் எழுதிகிறோம் ஏன் நாம் மக்களுக்காய் எழுத கூடாது . இந்த கட்டுரைகள் பலபேருக்கு சேர வேண்டும் .நான் எழுதும் கட்டுரைகளை ஒரு வால்பையன் , வானம்பாடிகள் , ஈரோடு கதிர் போன்றவர்கள் எழுதினால் மக்களுக்கு பயன் கிடைக்குமே .

ஏன் என்றால் போபாலில் நடந்தது விபத்து அல்ல . மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றால் நம் உழைப்பு
தேவை. ஒரு கை தட்டினால் ஓசை அல்ல . உரக்க குரல் நான் பதிவுலகத்தில் எனக்கு பிடித்த வால் பையன் , பலாசீ , அகல்விளக்கு , ஈரோடு கதிர் , வானம்பாடிகள் ஐயா போன்றவர்களை போபால் விட வாயு பற்றி எழுத அழைக்கிறேன் . தனிமனித விருப்பு வெறுப்பை மீறி , நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் . இது நட்ப்பிற்க்கான தொடர் பதிவு அல்ல , சமுதயதிற்க்கான தொடர் பதிவு தட்ட மாட்டர்கள் என்ற நம்பிக்கை உள்ளது


1 வால் பையன் ,
2 பலாசீ ,
3 அகல்விளக்கு ,
4 ஈரோடு கதிர் ,
5 வானம்பாடிகள்
6 இரும்புத்திரை அரவிந்த்




PDF டவுன்லோட்

பின் குறிப்பு :

மேலும் விடுபட்ட பதிவர்கள் ஜக்கி சேகர் , மாதவராஜ் , கேபிள் சங்கர் , ஊடகன் போன்ற பதிவர்கள் கூட எழுதினால் நன்றாய் தான் இருக்கும்

7 comments:

pichaikaaran said...

Nice effort. I support it . When we have tough job of facing serious enemies , it is sad when we shift attention to soft target like barathiyaar.

ரதியழகன் said...

என்னால் முடிந்தது...
உங்கள் எல்லாருடைய போபால் பற்றிய எல்லா பதிவுகளையும், என்னுடைய தலத்தில் லிங்க் செய்கிறேன்... என்னுடைய சொந்த கருத்துகளையும் பதிவு செய்கிறேன்...

அ.முத்து பிரகாஷ் said...

வெண்ணிற இரவின் பார்வைக்கு !

ஜாக்கியும் மாதுவும் தீர்ப்புக்கு பின்னர் போபால் குறித்து ஏற்கெனவே எழுதியிருக்கிறார்கள் .

இதுவா நமது தேசம்?
http://mathavaraj.blogspot.com/2010/06/blog-post_14.html

ச்சீ, தூ, பேமானிங்களா....
http://jackiesekar.blogspot.com/2010/06/blog-post.html

... இருப்பினும் ...மீண்டும் அவர்கள் எழுதினால் மகிழ்ச்சியே ...

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பதிவர்களும் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் ...நானும் உங்களுடன் வலியுறுத்துகிறேன் !

புலவன் புலிகேசி said...

உண்மையில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டியத் தருணம் இது. அதை பதிவுலகிலாவது செய்யலாம். அனைவரும் எழுத வேண்டும் என்பதே என் நோக்கம். நன்றி கார்த்திக்.

புலவன் புலிகேசி said...

உண்மையில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டியத் தருணம் இது. அதை பதிவுலகிலாவது செய்யலாம். அனைவரும் எழுத வேண்டும் என்பதே என் நோக்கம். நன்றி கார்த்திக்.

வால்பையன் said...

நிச்சயம் எழுதுவோம் தோழர்!

Uma said...

நல்ல முயற்சி.