Wednesday, 21 July 2010
ஏன் பதிவர்கள் போபால் பற்றி தொடர்பதிவு எழுதவேண்டும்
நண்பர்களை தொடர்பதிவிற்கு என்று அழைத்தேன் ,யாரும் வருவதாய் தெரியவில்லை .வால் பையன் எழுதுவார் என்ற நம்பிக்கை உள்ளது . அதற்க்கு முன் ஏன் இந்த விடயங்களை எழுத வேண்டும், ஏன் பதிவர்கள் இந்த விடயத்தில் ஒன்று கூட வேண்டும் ????
1 . போபால் பிரச்சனை உலகமயமாக்கலை தோல் உரித்து காட்டுகிறது . பெரிய அரசியல் தெரியவில்லை என்றாலும் மேலோட்டமாய் பார்த்தாலே அந்த அநீதி புரியும் என்றே நினைக்கிறேன்.26 வருடம் பிறகு நீதி சொல்கிறேன் என்று சொல்கிறார்கள் யாரும் ஒரு நாள் கூட ஜெயிலுக்குள் இல்லை என்பதே வெட்கக்கேடு .
2 . உலகமயமாக்கல் மூன்றாம் உலக நாடுகளில் கழிவு நிறைந்த தொழிற்சாலைகளை கொண்டு செல்கிறது . அதாவது ஆசியா ,ஆப்ரிக்கா இலத்தீன் அமெரிக்க போன்ற நாடுகளில் , அபாயம் நிறைந்த தொழில்களை கொண்டு செல்கிறது . இதனால் முதலாளிகளுக்கு மலிவான கூலி கொண்ட உடல் உழைப்பு கிடைக்கிறது ,லாபம் முதலாளிக்கு அபாயம் என்றால் நாட்டு மக்களுக்கு , என்ற கொள்கையிலே இருக்கிறது , போபால் சிறந்த உதாரணம் .
3 . சிலர் கேட்கிறார்கள் தொழிலாளிகளின் கவன குறைவிற்கு முதலாளி எப்படி காரணமாய் இருக்க முடியும் என்று . methyl isocyanide தடை செய்யப்பட்ட தொழில் நுட்பம் . அதற்க்கு இந்திய அரசு எப்படி அனுமதி வழங்கியது ????? அபாயகரமான தொழிற்நுட்பத்தை ஏன் இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் அதாவது இங்கு உயிர்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்பதே அதன் பொருள் .
4 . சரி மருந்து கொடுத்த மருத்தவமனையை தடை செய்தார்களாம் போபாலில் . ஏன் என்றால் , மருந்து சரியாக வேலை செய்தால் , லீக் ஆனது METHYL ISOCYANADE என்று தெரிந்துவிடும் . அது முதலாளிக்கு எதிரான ஆதாரமாம் , அதனால் அந்த மருந்துகளை தடை செய்தது அரசு இதை விட கொடுமை என்ன இருக்கமுடியும் . உயிர் மயிர் என்று சொல்கிறது உலகமயமாக்கம் .
5.இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாய் பிறக்கிறது , தலை நீண்டு பிறக்கிறது , நாளை நம் குழந்தைகள் கூட அதை போல ஆகலாம் . அங்கு தண்ணீரில் விடம் கலந்துள்ளது , தாய்ப்பாலில் விடம் கலந்துள்ளது குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் . அன்டேர்சன் வைத்த விடம் பரம்பரை பரம்பரையாய் கொள்கிறது .
6 இதை போன்ற ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன , அந்த புதிய ஜனநாயக சிறப்பிதழில் . 17 கட்டுரைகள் .............அறிவயல் பூர்வமாய் விளக்கி உள்ளார்கள் ...............தொழிற்நுட்பம் முதல் அனைத்து விடயங்களிலும் துரோகம் நடந்து கொண்டிருக்கிறது . இன்று போபால் நாளை மதுரை சென்னையாக கூட இருக்கலாம் எனினும் எனக்காக அந்த புதிய ஜனநாயகம் புத்தகத்தை ஒரு முறையாவது படியுங்கள். அந்த PDF லிங்க் போன பதிவில் உள்ளது நன்றி நண்பர்களே .
PDF டவுன்லோட்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன . இன்னும் சில பேர் இந்த விடயங்களை படித்து
விட்டு பதிவு போட்டால் பல பேரை சென்றடையும்
இந்தப் பதிவிலும் அந்த பி.டி.எஃப் லின்க் கொடு கார்த்தி. அது இன்னும் உபயோகமாக இருக்கும். அனைவரும் எழுத வேண்டும் என நானும் விரும்புகிறேன்.
கொடுத்தாச்சு புலிகேசி ஆலோசனைக்கு நன்றி
நெட்டில் படிப்பதை விட, அச்சில் படிப்பதையே விரும்புகிறேன்... இந்த இதழை படுத்தி விட்டு என் பார்வையை பகிர்ந்து கொள்வேன்...
இது போன்ற தலை போகும் விஷயங்கள் இருக்கும்போது, தேவையே இல்லாமல் பாரதியார் பற்றி நீங்கள் எழுதியது, ஒரு நண்பன் என்ற முறையில் என்னை வருத்தப்பட செய்தது....
நன்றி நண்பரே புதிய ஜனநாயகம் இதழ் வெளியில் கிடைக்கும் வாங்கி படியுங்கள் ,
தோழருக்கு வாழ்த்துக்கள்.உங்கள் பணிதொடரட்டும்.
உங்கள் பணி தொடரட்டும்,வாழ்த்துக்கள் தோழமையுடன்
வாங்கி படித்து விட்டேன் . அனைவரும் படிக்கவேண்டும்
Post a Comment