Tuesday, 27 July 2010

போபால் விபத்தா இல்லை படுகொலையா பார்வையாளன்

பார்வையாளன் என்ற பதிவர் போபால் பற்றி பதிவு எழுதினார் , வரவேற்க தக்கது . ஆனால் ஒரே ஒரு வரியில் அந்த கட்டுரையின் சாரம்சத்தை உடைத்துவிட்டார் "ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது"... என்று ஒரு வரி அந்த வரி எனக்குள் புகுந்து கொண்டு ஏதோ ஏதோ செய்தது என்றே சொல்வேன் . மேலும் "அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது... " இப்படி ஒரு வரியை வேறு எழுதி இருக்கிறார் . இது இந்திய நடுத்தர குடும்பங்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது . வலிக்காமல் எல்லாம் புரட்சி செய்ய முடியாது . எதையாவது பெற வேண்டுமென்றால் எதையாவது இழக்க தான் வேண்டும் , என்பதை தெரிந்து கொள்ள பொதுஉடைமை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் .

"போபால் விபத்து நடந்த பொது இந்தியாவே அதிர்ந்து நின்றது..." கட்டுரையின் முதல் வரியிலேயே விபத்து என்று சொல்கிறார் .

மேலும் "ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது..."

எது அதீதம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்க பட்டது அதீதம் இல்லையா , ஒருவனுக்கு மரண தண்டனை கொடுக்க போராட்டம் நடத்துவது அதீதமா . இது என்னமோ அரசின் குரல் இல்லை பா சிதம்பரம் குரல் போலவே உள்ளதே . ஏன் மூன்றாம் உலக நாடுகள் என்ன குப்பைதொட்டிகளா ......... இப்படி நினைத்ததனால் தானே இங்கே
பழைய தொழில் நுட்பம் உபயோகபடுதினான் , அந்த திமிரிர்க்கே மரண தண்டனை ஏன் கொடுக்க கூடாது . எதார்த்தம் எல்லாம் அதீதமாக போகின்றன ஆதீதம் எல்லாம் எதார்த்தமாக போகின்றன என்பதே உண்மை . நாம் உண்மையில் அங்கே பாத்திக்க பட்டு இருந்தால் இப்படி பேசுவோமா ?????????????


"இருந்தாலும், ஒரு பார்வையாளன் என்ற முறையில் அதை பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்...
அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது"

என்று சொல்கிறார் பார்வையாளன் . அது என்ன நடைமுறைக்கு ஏற்றவாறு ????யார் நடைமுறைக்கு ஏற்றவாறு அன்டேர்சன் காப்பாற்றும் இந்திய நடைமுறைக்கு ஏற்றவாறா ????
இல்லை அமெரிக்க நடைமுறைக்கு ஏற்றவாறா ?????"பாரவையாளனாய் இல்லாமல் எப்பொழுது பங்கேற்ப்பவனாக இருக்க போகிறீர்கள் .

இந்திய நடுத்தர மக்கள் பார்வையாளனாகவே இருப்பது தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்

PAARVAIYAALAN

8 comments:

rk guru said...

அது ஒரு படுகொலை.......

வால்பையன் said...

கேளிக்கைகூடமான தியேட்டரிலேயே விபத்து ஏற்பட்டால் தேவைப்படும் என்று மண் வாளி வைக்கப்படுகிறது, அதுக்கே அப்படியென்றால் மாபெரும் அணு உலையில் கசிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் பாதுகாப்பில்லாத மாதிரி அமைத்த நிறுவனம் நிச்சயம் அதற்கு படுகொலைக்கு சமமான பொறுப்பு ஏற்க வேண்டும்!

உயிர் என்ன கிள்ளுக்கீரையா!?

வெண்ணிற இரவுகள்....! said...

உண்மை வால் மூன்றாம் உலக நாடுகளின் உயிர் கிள்ளுக்கீரையாய் இருக்கிறது

புலவன் புலிகேசி said...

இன்று மக்கள் மனதில் இதை ஒரு விபத்தாக ஊறவைத்து விட்டார்கள் இந்த பொழுதுபோக்கு ஊடகங்கள்...கொடுமை

Madumitha said...

விபத்து என்பது
அராஜகம்.
மாபெரும் அழிவு.
ஆண்டர்ஸனை
தூக்கில் போடுவது
நடக்குமா என்று
தெரியாது.
ஆனால்
இனி
அந்நியர்களை
உள்ளே விடாமல்
தடுப்பது
மிக மிக அவசியம்.

பார்வையாளன் said...

"அது என்ன நடைமுறைக்கு ஏற்றவாறு "
ஆண்டர்சனுக்கு கடுமையான சிறைவாசம் , இன்னும் பாதுகாப்பு இல்லாமல் செயல்படும் நிறுவனகள மேல் நடவடிய்கை, பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் போன்றவை எல்லாம் நடைமுறையில் மக்களுக்கு பயன் தர கூடியவை.. இதை செய்யவே நம் அரசால் முடியாது...
அப்படி இருக்கும் போது ஆண்டர்சனுக்கு மரண தண்டனை வாங்கி கொடுங்கள் என போராட்டம் நடத்ததுவது எல்லாம், அதீதமானது..நடைமுறைக்கு ஒத்து வராது..

இன்னும் எத்ததனை நிறுவனக்கள் பாதுகாப்பு யுல்லாமல் இருக்கின்றன என இருங்காட்டு கோட்டைகோ , ஸ்ரீ பெரும்புதுருக்கோ சென்றால் பார்க்கலாம்..அதற்கு குரல் கொடுங்ககள்..
போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வசங்க குரல் கொடுங்கள்... முடிந்தால் ஆண்டர்சநக்கு அடையாள பூர்வ தண்டநையாவது வாங்கி கொடுக்க குரல் கொடுங்கள்...

மக்கள் ஆதரவு தானாக கிடைக்கும்...

பார்வையாளன் said...

"இது இந்திய நடுத்தர குடும்பங்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது"

நன்றி... நடுத்தர குடும்ப மனநிலையை பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

அவர்கள் ஆதரவு இருந்தால்தான் போராட்டம் வெற்றி அடைய முடியும்..

பணக்காரகளுக்கு எதிரான போராட்டம் என்பதால் அவர்கள் ஆதரவு எப்படியும் கிடைக்காது... அடித்தள மக்களின் பிரச்சினை வேறு... அவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர , உதவியை எதிர்பார்க்க முடியாது...

ஆகவே, நடுத்தர மக்கள் கையில்தான் போராட்டத்தின் வெற்றி தோல்வி உள்ளது.... அவர்கள் ஆதரவை பெற வேண்டுமானால் இலக்கு யதார்த்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து

பார்வையாளன் said...

"அந்த திமிரிர்க்கே மரண தண்டனை ஏன் கொடுக்க கூடாது"

நண்பரே..உங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது...
இதே போன்ற திமிர்த்தனம் பல இடங்களில் இன்னும் நடக்கிறது... அதை தடை செய்ய முடியக்கூட முடியாத கையாலாகாத நிர்வாக அமைப்பு நம்முடையது...

தஹ்டை இல்ல சான்று இல்ல்லாமல் நடக்கும் நிறுவனகள் ஏராளம்.. இதை எல்லாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வைப்பதே இந்தியாவை பொறுத்த வரை பெரிய சாதனை ..
ஆண்டர்சனை பார்க்க கூட இந்திய அரசு முயற்சி செய்யவில்லை.இதில் தண்டனை என்பதெல்லாம் கேலி கூத்து...