Monday 12 July 2010

உலக மயானம் ஆக்கல்


















பிஞ்சு நஞ்சை
குடித்தது
தாய் பாலில்
போபாலில் ........!!!!!!
சுவாசம் தின்று உயிர்
வாழ்ந்தான் .................
சுவாசம் உயிரைத் தின்றது
போபாலில் .............!!!!!
லட்சம் உயிர் மயிர்
அன்டேர்சன் மயிரே உயிர்
என்றது அரசாங்கம் ....!!!!!
"வாகனம் ஒட்டியவன் தவறு செய்தால் எப்படி அன்டேர்சன் குற்றவாளி " என்று
போபால் பற்றி பேசினால்
"போ பா" என்கிறது .........
அடுக்குமாடியில் இருக்கும் நடுத்தர வர்க்கம் ....!!!!
"வாகன ஒட்டிக்கு பழுதடைந்த வாகனம் கொடுத்தால் , பிரேக் பிடிக்காத வாகனம் கொடுத்தால் "
என்றேன் மறுபடியும் அவர்களிடம் .....!!!!
போபால்
தண்ணீர் கூட விடம் .........
கண்ணீர் மட்டுமே நித்தம் .
பிணங்கள் தின்று
பணங்கள் குவிக்கும்
உலகமயமாக்கல்
உலக மயானம் ஆக்கல்..........!!!

9 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ............போபாலில் இருக்கும் தாயின் தாய் பாலில் விடம் கலந்துள்ளது . தண்ணீரில் அறுபது
லட்சம் ரசாயனங்கள் கலந்துள்ளதாம் , இதே போபால் போன்ற நிலை நாளை சென்னையில் கூட ஏற்ப்படலாம் , அதனால் படித்து
தெரிந்து கொள்வோம் . நான் புதிய ஜனநாயக சிறப்பிதழில் படித்தேன் , உலகமயமாக்கலின் கொடுரத்தை தோண்டி எடுத்த கட்டுரைகள் .....
கண்ணீர் மட்டும் கனத்த இதயம் மட்டுமே இருந்தது அதை படித்தவுடன் .கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் வேலை இது .

புலவன் புலிகேசி said...

//போபால் பற்றி பேசினால்
"போ பா" என்கிறது .........
அடுக்குமாடியில் இருக்கும் நடுத்தர வர்க்கம் ....!!!!//

உண்மை..அதன் வலி இவர்களுக்குப் புரிய வைக்கப் பட வேண்டும்...

வெண்ணிற இரவுகள்....! said...

கண்டிப்பாய் இணைந்து போராடும் தருணத்தில் உள்ளோம் .....ஏன் நம் அரசியல் பத்திரிகைகள் கூட நக்கீரன் , ஜூனியர் விகடன்
இதை கண்டுகொள்வதில்லை புலிகேசி .நடுத்தர மக்களுக்கு உண்மை செய்தி என்ன என்பது தெரியபடுத்த படுவதில்லை .
தெரியபடுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றே நினைக்கிறேன் .

புலவன் புலிகேசி said...

//வெண்ணிற இரவுகள்....! said...
கண்டிப்பாய் இணைந்து போராடும் தருணத்தில் உள்ளோம் .....ஏன் நம் அரசியல் பத்திரிகைகள் கூட நக்கீரன் , ஜூனியர் விகடன்
இதை கண்டுகொள்வதில்லை புலிகேசி .நடுத்தர மக்களுக்கு உண்மை செய்தி என்ன என்பது தெரியபடுத்த படுவதில்லை .
தெரியபடுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றே நினைக்கிறேன் .

12 JULY 2010 20:54//

இங்குள்ளப் பத்திரிகைகள் எல்லாம் காசுக்காகவும், பரபர்ப்புக்காகவும்தானே பத்திரிகை நடத்துகிறார்கள். சமூக அக்கரை என்பது உள்ளப் பத்திரிகைகள் இல்லையே. இருந்தால் மக்களின் ஆதரவும் அற்று இருக்கிறது. நிச்சயம் மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கிறது நண்பா.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நன்றி புலிகேசி

Unknown said...

இப்படியே போனால் கெமிக்கல் உடம்பாய் மாறி.. ஒருநாள் செத்துபோவோம்...

வெண்ணிற இரவுகள்....! said...

போபாலில் இது தான் நடந்துகொண்டிருக்கிறது ,,,,,,,,,,,,லாப வெறிக்காய் படுகொலைகள்
செந்தில்

பனித்துளி சங்கர் said...

கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் வேதனையும் , வலியும் கசிந்து கண்களை நனைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

vignaani said...

உங்கள் சினம் புரிகிறது. அங்கு நிகழ்ந்த அவலங்களுக்கு அந்த ஆலையில் பணி புரிந்த உயர், நடு மட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், நிர்வாகம் நிச்சயமாகப் பொறுப்பு. அவர்கள் ஈடு செய்ய வேண்டும்.
என் குமுறல் வேறு ஒன்று: இங்கு நிறுவப்படும் ஆலைகளில் என்னென்ன காப்பு முறைகள் (safety measures) இருக்க வேண்டும் என விதி எழுதுவது அதிகாரிகள்; அவை கடைப் பிடிக்கப் படுகின்றனவா என சோதனை செய்ய வேண்டியது அதிகாரிகள்; அவர்கள் தம் பணியை சரியாகச் செய்தால் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம்; அதாவது நாம் அரசியல் வாதிகளை காய்ச்சும் அளவுக்கு அதிகமாக காய்ச்சப் படவேண்டியவர்கள் அதிகாரிகள் (லஞ்சம் போன்ற காரணங்களால் செய்யும், செய்யத்தவறிய செயல்களுக்கு) தண்டிக்கப் படுவதில்லை.