Wednesday 29 December 2010

நித்தியிடம் காட்டிய எதிர்ப்பை?

நித்தி தனது முப்பத்தி நாலாவது பிறந்தநாளை கொண்டாட திருவண்ணாமலை சென்று இருக்கிறார் . அங்கு அவருக்கு பலத்த வரவேற்ப்பு காத்துக்கிடந்தது . ‘திரும்பிப்போ திரும்பிப்போ.. நித்தியானந்தனே திரும்பிப்போ’ என்று என்று கோஷங்கள் பறந்தன . கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சரி ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்கட்டும் , இந்த ஆர்ப்பாட்டங்களை ஏன் பார்ப்பன ஜெயந்திரனிடம் காட்டவில்லை ? கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தான் புகவேண்டும் என்பதை எதிர்த்து ஏன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை ? நித்தியிடம் நடத்தியதை அங்கே நடத்த முடியுமா ? காவி உடை என்றாலும் பார்ப்பனர்கள் போடும் காவி உடை வேறு அல்லவா ?

சரி பொதுபுத்தி எப்படி தான் உள்ளது நித்தி விடயத்தை கவனம் செலுத்திய ஊடகம் ஏன் ஜெயேந்திரன் விடயத்தை மறந்தது . "அகம் பிரம்மாஸ்மி " என்று அத்வைத்தம் சொல்கிறது " நானே கடவுள் " , மனதும் கடவுளும் ஒன்றே வெளியில் எதுவும் இல்லை எல்லாம் மாயை என்று அத்வைத்தம் சொல்கிறது . அதை ஏற்றுக்கொண்டு ஜெயேந்திரன் கொலை செய்யவில்லை , எல்லாமே மாயை என்பது போல் , ஊடகங்கள் மறக்கின்றனவா ? இல்லை அத்வைத்ததை ஏற்றுக்கொண்டு போராட்டக்காரர்களுக்கு ஜெயேந்திரன் செய்த கொலை மறந்துவிட்டதா ? ஆர்ப்பாட்டங்களிலும் காவிக்கறை படித்து இருக்கிறதா ?

Monday 27 December 2010

தினமலர் நடு(தெருவிற்கு) நிலை

2010 டாப் டென் நிகழ்ச்சிகளை தினமலர் போட்டுள்ளது , அதில் தண்டகாரண்யா நிகழ்வும் அடக்கம் .
மக்கள் போராட்டத்தை தீவிரவாத செயல்களாகவும் , அதனால் நாடே அதிர்ச்சி அடைந்ததாகவும்
அச்செய்தி சித்தரிக்கிறது .மக்கள் போராட்டம் தினமலருக்கும் மற்ற ஊடகங்களுக்கும் தீவிரவாத செயல்களாய் தெரிகிறது . பொது புத்தியில் மக்கள் போராட்டத்தை தீவிரவாத செயல்களாய் ஆணி அடிப்பதில் அதிகார வர்க்கத்திற்கு சொம்பு தூக்குகிறது தினமலர் . அங்கு ராணுவமும் , போலிசும் செய்யும் நாசவேலைகளை தட்டிக்கேட்க துப்பு இல்லை , அங்கு வாழ்வியல் ஆதாரத்தை கெடுக்கும் வேதாந்தா நிறுவனத்தை தட்டிக்கேட்க துப்பு இல்லை , அதற்க்கு எதிராய் மக்கள் போராடினால் தீவிரவாதாமா ?

அந்த டாப் டென் செய்திகளில் அலைக்கற்று ஊழலும் அடக்கம் . ஊடகங்கள் ராஜா தான் இதை செய்தார் என்று கொக்கரிக்கின்றன ? தினமலர் போன்றவர்களுக்கு அந்த ஊழலுக்கு காரணம் டாட்டா என்பது தெரியாது . ஒரு நாட்டின் அமைச்சரை ஒரு தரகு முதலாளி முடிவு செய்கிறார் , அதை கிடப்பில் போட்டுவிட்டு , அமைச்சரை மட்டும் கட்டம் கட்டுவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துவது ஏன்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் தினமலரின் நிலைப்பாடு என்ன ? இங்கு வேதாந்தா முதாலாளி காப்பாற்றப்படவேண்டும் அதனால் மக்கள் தீவிரவாதிகள் தண்டகாரண்யாவில் . அதே போல டாட்டா காப்பாற்றப்படவேண்டும் என்பதை போலவே இவர்கள் செய்திகள் உள்ளனர் . மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு போகும் நிலை தான் இந்த தினமலரின் நடுநிலை .

Tuesday 21 December 2010

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா

இலக்கியம் என்றால் ஏதோ விட்டத்தை பார்த்து கொண்டு தோன்றுவதை எல்லாம் எழுதுவது என்று வெகு காலம் நினைத்துக்கொண்டிருந்தேன் .
நான் படித்த தமிழ் இலக்கியம் அனைத்தும் தனிமை , வெறுமை , சமூகத்தால் பாதிக்கப்படும் தனிமனித வாழ்க்கை போன்றவற்றை பிரதிபலித்தன .
மனிதனை தனித்தனியாய் பிரிக்கும் வேலையை அவை செவ்வென செய்தன . இலக்கியம் என்றால் இயலாமையை எழுதுவது என்று நினைத்துக்கொண்டேன் .
என் வாசிப்பு எஸ் ரா இருந்து தொடங்கியது "துணை எழுத்து" வாசித்து பிரமித்து போனேன் , அப்புறம் கதா விலாசம் , விழித்திருப்பவனின் இரவு
என்று வாசிப்பு தொடர்ந்தது , இவை எல்லாம் என்னை நகரசெய்யாமல் பழமையை நோக்கி பின்னுக்கு அழைத்தன , ஒரு எழுத்தாளன் என்றால் சமூகத்தை வெளியில்
இருந்து பார்த்து இயலாமையை பதிவு செய்ய வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டேன் , அப்பொழுது "நினைவுநதி கனவு குட்டை " படிக்க நேர்ந்தது,
எனக்குள் இருக்கும் அற்பவாத சிந்தனை எல்லாவற்றையும் தவிடுபொடி ஆக்கியது . இலக்கியம் என்பது மக்களுக்கானது மக்களை பிரதிபலிக்க வேண்டும் ,
மக்கள் அந்த புத்தகம் படித்து ஒரு அடியாவது நகர வேண்டும் என்று என் மனதில் ஆணியாய் படிந்தது . அது இந்த புரிதல் அனைவருக்கும் செல்லவேண்டும்
என்று நினைக்கிறேன் . வினவு தளம் இத்தகைய மக்களுக்கான இலக்கியத்தை தருகிறது . அவர்களின் புத்தக வெளியீடு வரும் ஞாயிறு அன்று நடக்கிறது ,

புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிமனிதனுடைய வலிகளை , எழுத்தாளனது வலிகளை பதிவு செய்யும் இயல்பாய் . ஆணால் மனிதன் என்ற ஒட்டுமொத்த சமூகமாய்
பார்க்கும் இலக்கியம் நமக்கு அவசியம் உதாரணமாய் "தாய்" புதினம் , அப்படிப்பட்ட மாற்றம் தேவை என்று நினைக்கிறேன் .



கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!




கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்
விலை ரூ. 40.00
2. ஈராக்: வரலாறும் அரசியலும்
- பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00
3. அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்
- வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00
4. விடுதலைப் போரின் வீர மரபு
- புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65
5. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
- உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00
6. நினைவின் குட்டை கனவு நதி
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
-சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும்
நூல்,புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00
7. மீண்டும் தொழிலாளி வர்க்கம்

- வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00
8.
நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

- வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 110.00

_____________________________________________________

நூல் வெளியீட்டு விழா
நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!


(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

___________________________________________________

Sunday 19 December 2010

ரொம்ப நல்லவன்

"ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" இந்த பொன்னான வார்த்தைகளை உதிர்த்தவர் வேறு யாரும் அல்ல , எங்கு திரும்பினாலும் ஊழல்
என்ற செய்து எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கும்படி செய்த காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா . ஊழல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகள் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை. ஊழலை ஒழிப்பதில் கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி துணைபோகாது. ஊழல்வாதிகளையும் ஆதரிக்காது. அதாவது அன்னை என்ன சொல்கிறார் என்றால் , காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு துணை போகாது , ராஜா சுரேஷ் கல்மாடி போன்றவர்களுக்கு துணை போவதால் அவர்கள் ஊழல் செய்தவர்கள் அல்ல காங்கிரஸ் தான் ஊழலுக்கு துணை போகதே .

அரசுத் துறைகளில் நடைபெறும் ஒப்பந்தங்கள், கொள்முதல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான சட்டத்தையும் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அதனால் தான் அணுஆயுத ஓப்பந்தம் வெளிப்படையாக நடந்தாதாம் . காங்கிரஸ்
போல வெளிப்படையாக இருக்க முடியுமா ?

பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் சந்தேகம் கொள்ள முடியாது. எனவே பிரதமரை பா.ஜ., விமர்சிப்பது கேவலமான செயல். பிரதமருக்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் காங்கிரஸ் கட்சி அளிக்கும். ஊழல் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயேகூட, காங்கிரஸ் தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அசோக் சவான் உட்பட பலரும் ராஜினாமா செய்தனர். பிக்பாக்கெட் அடிப்பவன் கூட ஜெயிலில் தான் போடுவார்கள் , ஆனால் ராஜா , சவான் போன்றவர்கள் ராஜினாமவே செய்துவிட்டார்கள் இது அல்லவோ நேர்மை .அதனால் பிரதமர் மன்மோகன் சிங்க் மிகவும் நல்லவர் .

Tuesday 14 December 2010

நீயா நானா

இரவு ஒன்பது
விஜய்யில் "நீயா நானா"
"அந்த காலத்து காதலா , இந்த காலத்து காதலா "
தலைப்பு .
"84 விழுக்காடு மக்களின் ஒரு நாள் கூலி 20 ருபாய் "
"30 கோடி மக்கள் இரவு உணவில்லாமல் தூங்குகிறார்கள் ,அது எல்லாம் பிரச்சனை அல்ல இது தான் பிரச்சனையா என்றேன் ? "
"இந்த காதல் உன்னையும் என்னையும் போல நடுத்தரவர்க்கம்
கொள்ளும் போலி மயக்கம் , இதை எல்லாம் காதல் என்று சொல்லாதே "
"இந்த காலத்திலும் உண்மையான மனதை படிக்கும் காதல் இருக்கு" என்றான் நண்பன் .
"மனதை பார்க்கும் காதல் என்றால் , பிடித்திருக்கிறது என்பதற்காய் உன்னால் சித்தாள் வேலை செய்யும்
பெண்ணை காதலிக்க முடியுமா ?" என்று என் நண்பர் ஒருமுறை என்னிடம் கேட்டதை கேட்டேன்
"இல்லை என்றான் "
"அப்புறம் என்ன மயிறு காதல் " என்றேன்
"கல்யாணமோ காதலோ சொர்க்கத்தில் நிச்சயிக்க படவில்லை வர்கத்தில் நிச்சயிக்க படுகிறது " என்றேன் .
"நீயா நானா " கோபிநாத் பொய்யான விடயத்தை உண்மையை போல
அழகாய் பேசிக்கொண்டிருந்தார் .

Monday 13 December 2010

176000 கோடி முக்கியம் அல்ல ,டாடாவின் புகழே முக்கியம் நீதிமன்றம்

"நீரா ராடியாவும், மற்றவர்களும் பேசிய தொலைபேசிப் பேச்சுக்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில், புகழை சீர்குலைக்கும் வகையில் அதை வெளியிடக் கூடாது " . டேப் வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு தலையிடுவதாக உள்ளது என்று டாடா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது . நீதிமன்றம் எந்த சமூகத்தின் நலனுக்காய் உள்ளது என்பது இதில் இருந்து புலப்படும் .
டேப்பில் இருப்பது டாடாவின் குடும்ப விடயமா , இல்லை குடும்பச்சண்டையா? ஒரு நாட்டின் பிரச்சனை .ஒரு நாட்டின் அமைச்சரை ஒரு முதலாளி முடிவு செய்கிறார் என்றால் எவ்வளவு நகைப்புக்கு உரியது , எவ்வளவு கேவலாமான நிலைமையில் நாம் உள்ளோம் . ஊழல் என்னும் மைய்யப்புள்ளியே இது தான் . பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது , எலும்பு துண்டுகளை முதலாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் . நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையில் 1 76000 கோடி களவாடப்பட்டதே அது பிரச்சனை அல்ல , இந்த நட்டத்தை ஈடு கட்ட விலைவாசி எல்லாம் ஏறப்போக
சாமானியன் ஒரு வேலை சோற்றுக்கே திண்டாடுகிரானே அது பிரச்சனை அல்ல . ஆனால் சம்பந்தப்பட்ட முதலாளிகள் பெயர் , புகழ் கெடக்கூடாது .

அமைச்சர் யார் , ஆட்சியில் யார் என்று தீர்மானிக்கும் முதலாளிகளுக்கு அமைச்சரோ , ஆட்சியில் இருப்பவரோ விசுவாசமாய் தான் இருக்கமுடியும் .நீதித்துறை யார் சார்பாக உள்ளது , என்பதை இந்த தீர்ப்பின் சாராம்சம் விளக்கும் . இது ஜனநாயகமா ? தரகு முதலாளிகள் நாட்டை ஆளும் 'பணநாயகம்' .

Sunday 12 December 2010

சச்சினும் நீர்த்துப்போன எதிர்ப்பும்

சச்சின் டெண்டுல்கர் ஒரு மது அருந்தும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருப்பது ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு ஒரு தியாக நிகழ்வாய் சித்தரிக்கப்பட்டது. இந்த விளம்பரகளில் நடிக்காமல் போனதால் அவருக்கு 20 கோடி நட்டமாம் , என்று அவர் தியாக செயலை பார்த்து ஊடகங்கள் மூக்கின் மேல் விரல் வைக்கின்றன . அவர் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் வருகிறார் அதனால் அவரை எதிர்க்கிறேன் (பொதுவுடைமை போல இருக்கும் கருத்து ) ஆனால் அவர் விளையாட்டிற்கு ரசிகன் , பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவர் (பொதுவுடைமை நீர்த்து போகும் இடம்) என்கிறார்கள் . அதாவது அவர் நல்லவர் தான் ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிப்பதை மட்டும் நிறுத்திவிட்டால் ,அவர் பாரட்டுக்குறியவரே என்று எதிர்ப்பவர்கள் கூட சச்சின் ரசிகனாய் இருக்கிறார்கள் . இது ஏதோ கமல் அன்பே சிவத்தில் சொல்வதை போல , முதலாளித்துவ கோட்பாடு உள்ளவர்களை அன்பால் வெல்ல முடியும் என்ற சிந்தனை போல உள்ளது .

எதிர்ப்பை ஒரு விடயத்தில் மட்டும் காட்டிவிட்டு , மற்றபடி எல்லாம் சரி தான் என்று இவர்களை விட்டு விட முடியுமா . இவர் பெப்சி விளம்பரத்தில் நடிக்கும் சமகாலத்தில் இவர் மாநிலத்தை சேர்ந்த விதர்பா விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனரே தாஜ் ஹோடேலில் குண்டு வெடித்தபொழுது நீலி கண்ணீர் வடித்த சச்சின் , லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது , ஒரு பக்கம் மட்டையையும் இன்னொரு புறம் பெப்சியையும் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் . சச்சின் என்ன அரசியல் வாதியா ? அவர் ஒரு விளையாட்டு வீரர் நல்லவர் , அவர் எல்லாவற்றிக்கும் குரல் கொடுக்க முடியாது என்று நீங்கள் சொல்வது கேட்க்கின்றது . சரி அந்த பெப்சி கோக் நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுரண்டுகிறது , கிராமங்களில் ஆலையை ஏற்ப்படுத்தி விட்டு , வேலை கொடுக்கிறோம் என்று ஏமாற்றி , நிலத்தடி நீரை சுரண்டி , விவசாயத்தையும் வாழ்வியல் ஆதாரத்தையும் கெடுக்கின்றது . அந்த பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்து மக்களை முட்டாளாக்கும் சச்சினுக்கு தேவை , போலி கண்டனம் மட்டுமா ?

ஒரு அமைச்சாராக யார் வர வேண்டும் என்று முடிவு செய்வது பன்னாட்டு முதலாளிகளும் , தரகு முதலாளிகளும் ராஜாவின் spectrum விவகாரம் சிறந்த உதாரணம் . அத்தகைய முதாலாளிகள் பக்கம் இருக்கும் சச்சினை விளையாட்டை ரசித்துவிட்டு , வெறும் விளம்பரத்தில் நடிப்பதை மட்டும் விமர்சனம் செய்யும் பக்குவம் எனக்கு இல்லை . உண்மையில் இந்த விமர்சனம் சச்சினுக்கு அல்ல , அவரை ரசிக்கும் ரசிகரின் மனநிலைக்கு .
இங்கு தேவை போலியான எதிர்ப்பு அல்ல , வெறும் போலியான எதிர்ப்பு ஒரு நீர்த்து போன மனநிலை .

Thursday 9 December 2010

ஊழல் ராஜா மட்டுமே பொறுப்பா

"ஊழல்" எங்கு பார்த்தாலும் ஊழல் , யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் " இவன் 100 கோடி அடிக்காரனு , அவனுக்கு வோட்டு போட்டா அவன் ஆயிரம் கோடி அடிக்கிறான் " என்னும் வார்த்தையை யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பார்கள் இந்த நொடியில் . நானும் கூட பொது புத்தியில் அப்படி தான் புரிந்து கொண்டு இருந்தேன் .ஊழலுக்கு காரணம் தனிநபர் , அவர் ஊழல் செய்கிறார் என்கிற நோக்கில் என் புரிதல்
இருந்தது . உதாரணமாய் இப்பொழுது அலைகற்று ஊழலை எடுத்துக்கொள்ளுங்கள் , ஏதோ ராஜா என்ற தனிநபர் மட்டும் ஊழல் செய்ததை போல சித்திரம் பொதுபுத்தியில் உள்ளது . "தவறு நிரூபிக்கப்பட்டால் ராஜா தண்டிக்கப்படுவார் " என்று கருணாநிதி சொல்கிறார் . இயல்பாகவே இந்த ஊழலுக்கு தனிநபர் மட்டுமே காரணம் போல சித்தரிக்கிறார் , ஊடகங்களும் அதையே சித்தரிக்கின்றன . ஊழலுக்கு தனிநபர் ஒழுக்கம் மட்டுமே காரணமா ???

பண்ணா , முக்தா என்ற எண்ணெய் 2000 கோடி மதிப்புள்ள எண்ணெய் வயல்களை ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் 12 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது . பொதுத்துறையை தனியாரிடமும் தரகு முதலாளிகளிடமும் விற்கும் போக்கு உள்ளது . இதை போன்ற ஊழலே ராஜா விடயத்தில் நடந்து இருந்தது . முதலாளிகள் முடிவு செய்கிறார்கள் யாரை அமைச்சராய் ஆக்க வேண்டுமென்று . பொது சொத்துக்கள் தனியார் வசம் போகின்றன , வளங்கள் தனியார் வசம் போகின்றன , தண்ணீர் தனியார்மயம் ஒரு சிறந்த உதாரணம் . இந்திய நாட்டை
யார் ஆள்கிறார்கள் ??? ஒரு அமைச்சரின் தலைவிதி தரகு முதாலளியிடமும் , பன்னாட்டு முதலாளியிடமும் உள்ளது . அப்படி என்றால் இந்தியாவை ஆள்வது தரகு முதலாளிகளா ??? வேதாந்தா என்னும் நிறுவனதிற்க்காக அங்கு உள்ள பழங்குடியினர் விரட்டப்படுகிறார்கள் . இப்படி இருக்கும் சூழலில் ராஜா மட்டும் தான் காரணம் என்று சொல்வது முழுபுசநிக்காயை சோற்றில் மறைப்பது .


இது தனிமனித ஊழல் அல்ல , பன்னாட்டு முதலாளிக்கும் தரகுமுதலாளிக்கும் குடைபிடிக்கும் அரசாங்கம் என்னும்
எந்திரத்தில் இருந்து ஊழல் தொடங்குகிறது . இங்கு ராஜா அல்லாமல் யார் இருந்தாலும் இந்த ஊழல் நடந்தே தீரும் . இங்கு ராஜாவை விட கவனிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களை ஆட்டுவிக்கும் தரகுமுதலாளிகளே . வில்லை விட்டு விட்டு நாம் அம்புகளை மட்டும் உடைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் .

இந்த வோட்டு கட்சி அரசியலும் , மறு காலனியாக்கம் இருக்கும் வரை இந்த ஊழல் இருந்து கொண்டே இருக்கும்

Tuesday 7 December 2010

அருந்ததி ராயும் ஜெயமோகனின் அதிகார வர்க்க குரலும்

நேற்று ஜெயமோகன் தளத்தில் அருந்ததிராய் பற்றிய கட்டுரை படித்தேன் .அருந்ததிராய் ஆழமான படைப்புகள் தந்ததில்லை , இந்தியாவை சிதிலப்படுத்தும் சக்திகளே அருந்ததிராயை தூக்கி பிடிக்கின்றன என்று ஜெயமோகன் சொல்கிறார் . ஜெயமோகனை பொறுத்தவரை இந்தியாவை சிதிலப்படுத்தும் சக்திகள் யார் என்பதை அவர் கட்டுரை படிக்கும்பொழுது புரிந்தது . அதில் சில வரிகள்

"சென்ற பதினைந்தாண்டுகளில் அருந்ததி ராய் மேலைநாடுகளின் பல தரப்புகளால் கொண்டாடப்படுகிறார். அவருக்கு எந்த இந்திய இலக்கியமேதைக்கும் அளிக்கப்படாத அங்கீகாரங்களும் விருதுகளும் அளிக்கப்படுகின்றன. பல்கலைகளில் அவர் பேருரைகள் ஆற்றுகிறார். இந்த பரிசுகளின் பின்புலங்கள் எல்லாமே ஆச்சரியத்துக்குரியவை. உதாரணமாக 2004ல் அருந்ததி ராய்க்கு ’சிட்னி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டது, அகிம்சையை பிரச்சாரம்செய்தமைக்காக! அவர் அப்போது நக்சலைட்டுகளையும் காஷ்மீர் ஆயுதப்போராட்டத்தையும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார்!"


அதாவது அவர் சிதிலப்படுத்தும் என்று சொல்லும் சக்திகள் நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீரில் போராடுபவர்கள் .
சரி நக்சலைட்டுகள் யாருக்காக போராடுகிறார்கள் யார் சார்பாகா நிற்கிறார்கள் , ஜெயமோகன் யார் சார்பாக நிற்கிறார் , அருந்ததிராய் யார் சார்பாக நிற்கிறார் என்பதை இலக்கிய ஆழம், நீளம் , அகலம் , உயரம் , தெரியாத மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும் . ஒரு ராணுவ வீரன் துப்பாக்கியை காண்பிக்கிறான் , ஒரு சிறுவன் கல்லை எடுத்து அவனிடம் காண்பிக்கிறான் , இது எதோ ஒரு படத்தில் வரும் காட்சி அல்ல , காஷ்மீரின் நிலை . அங்கே போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல , அங்கு உள்ள சாதாரண சாமனிய மக்கள் . அப்போரட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்மையில் அமைதியை எதிர்ப்பார்பவர்கள் .

உலகமயமாக்கல் காலனிஆதிக்கம் இவை மக்களிடம் செலுத்தும் தாக்கம் கொடூரமானது . அமைதி வேண்டுமென்றால்
கூட போராடவேண்டிய சூழல் , அப்படி போராடும் மக்களுக்கு ஆதரிக்கிறார் அருந்ததிராய், அமைதிக்கான விருது எப்படி அவரட்கு தரலாம் என்று ஜெயமோகன் கதறுகிறார் .

"அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்"

அருந்ததிராய் அதிகாரசக்திகளின் ஐந்தாம்படை என்கிறார் ஜெயமோகன் , அவரை பொறுத்தவரை தண்டகாரண்யாவில் போராடும் மக்கள் அதிகாரவர்க்கம் காஷ்மீரில் போராடும் மக்கள் அதிகாரவர்க்கம் . அவர்களை சுரண்டும் , வாழ்வியல் ஆதாரத்தை கூர்போடும் வேதந்தா நிறுவனம் , இந்திய ராணுவம் இவர்கள்
பாவப்பட்டவர்கள் . இந்தியா ஒருமைப்பாட்டை கெடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அருந்ததி ராய் ஆதரவு அளிக்கிறாராம் . இந்திய ஒருமைப்பாடு என்பது யாதெனில் உழைக்கும் மக்களை விரட்டுவது , நாட்டை வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு விற்ப்பது , நாட்டின் சந்தை ஒரே சந்தையாக இருக்க வேண்டுமே . அதனால்
ஒருமைப்பாடான இந்தியாவை சந்தைக்காக கட்டிக்காப்பது.இந்த ஒருமைப்பாடு கெட்டுவிட்டது என்று ஜெயமோகன் சொல்கிறார்


மக்களுக்காக போராடுவதே இலக்கியப்பணி . இலக்கியம் என்று விட்டத்தை பார்த்து எதோ புரியாமல் சிலர் எழுதிக்கொண்டிருக்க , மக்களுக்கான இலக்கியம் என்பது , மக்களின் சார்பில் நின்று போராடுவது . அதிகாரவர்க்கத்தின் குரலாய் இருப்பது நீங்களா அருந்ததிராயா.

ஜெயமோகன் கட்டுரை

Tuesday 30 November 2010

நந்தலாலா -ரசிகனுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம்

நந்தலாலா ஒரு மன எழுச்சியான படம் " தமிழில் முதல் திரைப்படம் " என்றெல்லாம் ஒருபக்கம் பாராட்டு மழை .
இன்னொருபுறம் படம் கிகுஜிரோ பார்த்து களவாடப்பட்டு இருக்கிறது என்ற குற்றசாட்டு . நானும் கூட குற்றம் சாட்டினேன் . கிகுஜிரோவை தழுவி எடுத்ததை தவிர மற்ற விடயங்கள் எனக்கு பிடித்து தான் இருந்தது . திரைஅரங்கில் கிகுஜிரோ பற்றி தெரியாத பாமர ரசிகன் ஒவ்வொரு காட்சியையும் ரசிதுக்கொண்டே கைதட்டுகிறான் . இதனிடையில் நேற்று மகள்நேயா என்னும் வலைப்பதிவர் தளத்தில் நந்தலாலா விமர்சனம் படித்தது நந்தலாலா படத்தை விட என்னை பெரிதும் பாதித்தது . எனக்குள் இருக்கும் ரசிகனை கூர்ந்து வாசிக்க தொடங்கினேன் .

ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரும் , ஒரு சிறுவனும் தன் தாயை தேடி செல்கிறார்கள் என்பதே கதையின் அடிநாதம் . சிறுவன் தன் அப்பா ஓடிவிட்டார் என்று நகைச்சுவையாய் சொல்கிறான் , பாஸ்கர் மணி என்ற மனநல பாதிக்கப்பட்டவன் சிரிக்கிறான் அரங்கமே கைதட்டுகிறது . ஆனால் முரணாய் பாஸ்கர் மணி சிறுவனின் அம்மாவை பார்க்கிறான் , அவள் அவள் சூழலை விளக்குகிறாள் , கன்னத்தில் அறைந்துவிட்டு செல்கிறான் , திரை அரங்கம் கைதட்டுகிறது பாஸ்கர் மணியின் வீரத்தையும் பாசத்தையும் மெச்சுகிறது . குழந்தையை தவிக்கவிடும் தந்தையானாலும் , தாயானாலும் தண்டிக்கபடவேண்டியவர்களே , ஆனால் தாயை
அடிக்கும் பாஸ்கர் மணி , தந்தையை குற்றம்சாட்டவில்லை . ஆணாதிக்க சமூகத்தில் வளர்ந்த நம் அனைவரின் மன எழுச்சிக்கு காரணம் இதுவே .

"அம்மா நல்லவ இல்ல " என்று பாஸ்கர் மணி குழந்தையிடம் சொல்கிறான் . "ஆட்டோகிராப் " ரசிதவர்களால் ஒரு பெண் இருவரை மனம்முடிப்பதை போன்ற ஒரு ஸ்டில் வந்த படத்தின் போஸ்டர் கூட ரசிக்க முடியாது . இப்படி பெண்ணிற்கே குடும்ப பொறுப்பு இருக்கிறது , ஆணிற்கு இல்லை என்று படம் சொல்கிறது . அதுவே மன எழுச்சியாக இருக்கிறது படித்த அறிவாளிகளுக்கு . சரி இந்த படம் எப்படி ஜப்பான் நாட்டு சூழலுடன் ஒத்து இருந்தது . ஜப்பானும் இந்தியா போலவே , பெண் அடிமைத்தனம் இருக்கும் நாடு . ஏன் உலக திரைப்படவிழாவில் பல விருதுகள் வாங்கியது என்று யோசிக்கும் பொழுது தமிழில் "தே மகன் " கெட்ட வார்த்தையை போல ஆங்கிலத்தில் "பாஸ்டர்ட் " என்ற வார்த்தை மிக பிரசித்தம் . ஒருவனை திட்டவேண்டும் என்றால் அவன் அம்மாவை திட்டும் பழக்கம் மட்டுமே உள்ளது . இங்கு எந்த ரசிகனிடமும் , சிறுவனிடமும் , பாஸ்கர் மணியிடனும் தந்தையை பற்றி கேள்விகளே இல்லை .

இப்படத்தை உண்மையில் ரசிக்கிறோம் என்றால் நமக்குள் ஆணாதிக்கவாதி உறங்கிக்கிடக்கிறான் . அனைவரும் படிக்கவேண்டிய பதிவு
தாய்மைச் சுமை

Friday 26 November 2010

அலசல்

ராஜாவுக்கு பதில் யார் ?

ராஜாவின் மீதான ஊழல் நிரூபிக்கப்படவில்லை அதனால் இது ஊழல் இல்லை என்கிறார்கள்.
BSNL தொழிலாளர்கள் தங்கள் உழைப்பால் உருவான தகவல் தொடர்புதுறையை நட்டப்படுத்தியது எப்படி ஊழலாகும் என்கிறார்கள் . அரபிக் கடல் ஓரத்தில் இருக்கும் பண்ணா , முக்தா என்ற எண்ணை வயல்களின் மதிப்பு 2000 கோடி , அப்பொதுத்துறையை கட்டியாமைத்தவர்கள் தொழிலாளர்கள் .அதை அரசு வெறும் பனிரெண்டு கோடிக்கு அம்பானியிடம் விற்றது அது ஊழல் , அதை போன்ற ஊழலே ராஜாவின் ஊழல் . இவ்வரசு தனியார் பன்னாட்டு முதலாளிகளுக்கும் , தரகு முதலாளிகளுக்கும் உண்டான அரசு . இந்த நட்டம் எல்லாம் எப்படி சரிகட்டப்படும் நம் வரிப்பணத்தில் இருந்து தான் .

BSNL அலைவருசையை ரிலையன்ஸ் கலவாடியத்தில் 1500 கோடி நட்டம் , அதற்க்கு
நட்ட ஈடு வெறும் 90 லட்சம் . ஊழல் செய்த ராஜா பதவி விலகிவிட்டாராம் , அப்பா பெரிய தண்டனை . உலக வங்கியும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆளும் வரை ராஜா என்பவரை தூக்கிவிட்டு வேறு யார் இருந்தாலும் இந்த ஊழல் தொடரும்.


கிகுஜிரோ அட்டை டு அட்டை

நந்தலாலா படம் கிகுஜிரோவின் அப்பட்டமான காப்பி . காட்சிக்கு காட்சி திருடிவிட்டு அவரே
அனுபவித்தமாறு பேசுகிறார் . ஏன் தமிழகத்தில் சொல்லப்படவேண்டிய கதைகளே இல்லையா ??? காப்பி அடிக்கவேண்டியது தான் அதற்காக அங்கு காட்டப்படும் குறியீடு பாம்பு , ஒரு புழு , பனையோலை சொருகி கொள்ளும் மிஸ்கின் சிறுவன் என்று காட்சிக்கு காட்சியா பிட் அடிப்பது .கோணங்கள் முதல்கொண்டு காப்பி செய்யப்பட்டுள்ளது , உதாரணமாய் மிஸ்கின் பையனின் அம்மாவிடம் பேசும் காட்சி .

இதில் லட்சியத்துடன் ஊரில் இருந்து வரும் உதவி இயக்குனர்களை காயப்படுத்துவதை போல பேசுவது . இரண்டரை லட்சத்திற்கு புக் வாங்கி உள்ளாராம் ??? வாழ்க்கையை உலக சினிமாவிலும் , புத்தகங்களிலும் தேடாதீர்கள் மிஸ்கின். கண் திறந்து பாருங்கள் காட்சிகள் கொட்டிக்கிடக்கிறது .

Thursday 25 November 2010

நீதித் துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் கூட்டம்

அயோத்தி தீர்ப்பு வெறும் இந்து மதத்தின் நம்பிக்கையை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது .
மனுதர்மம், இந்த சாதி இந்த வேலையை தான் செய்யவேண்டும் என்று சொல்கிறது , அதுவும்
இந்து மத நம்பிக்கையே . இந்து மதம் அனைவரையும் ஒன்றாய் பாவிக்கிறதா என்ன ?
பார்பனன் அல்லாதவன் கருவறைக்குள் நுழையமுடியுமா . சொந்த மதத்திலேயே தீண்டாமை
இருக்கும் மதம் இந்து மதம் . தீர்ப்பு இந்து மதத்தின் நம்பிக்கையில் இருக்கிறது என்றால் இதையும் நீதிமன்றம் ஏற்றுகொள்கிறதா ? இதை எல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் ஒரு கூட்டம் நடக்கிறது

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

Thursday 18 November 2010

புதினம் முடிகிறது நினைவுகள் தொடங்குகிறது

1940களில் நடந்த கையூர் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி எழுதப்பட்ட புதினம் "நினைவுகள் அழிவதில்லை ". வரலாற்று பின்னணியில் அக்காலத்தை வைத்து பார்க்கும் பொழுது அது உலக யுத்தம் நடந்த கால கட்டம் ,நிலபிரபுக்களின் ஆதிக்கம் நிறைந்த காலம் . உழைப்பவனுக்கு விவசாயிக்கு நிலம் இல்லாத கால கட்டம் . இதற்க்கு முன் "மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சி" போன்ற போராட்டங்கள் நடந்த காலகட்டம் . விவசாயிகள் படிப்பு அறிவில்லாமலோ,இல்லை கையெழுத்து மட்டுமே போடத்தெரிந்தவர்களாக இருந்த காலகட்டம் . அரசியல் அறிவு கூர்மை இல்லாத காலகட்டம் .இப்படிப்பட்ட காலகட்டத்தில் விவசாயிகளை அணிதிரட்டி , உங்களால் போராடமுடியும் என்று வலு சேர்த்து போராடிய இருபத்து ஐந்து வயது கூட ஆகாத நான்கு தோழர்கள் கையூர்த் தோழர்கள் . அத்தோழர்களின் வாழ்க்கையை உண்மை சம்பவத்தை பதிவு செய்த புதினம் "நினைவுகள் அழிவதில்லை ".

ஒரு திருவிழாவுடன் புதினம் தொடங்கபடுகின்றது , திருவிழாவில் கையூர் போராட்டத்தில் மரணம் அடைந்த தியாகிகள் நினைவுகூற படுகிறார்கள் ,அதனூடாக புதினம் விரிகிறது .கையூரில் மரணம் அடைந்த தோழர்கள் மடத்தில் அப்பு , சிருகண்டன் , அபு பக்கர் ,குஞ்ஞம்பு. அப்பு சிருகண்டன் இளமை காலங்கள் , அவர்களை வழி காட்டிய மாஸ்டர் அங்கு ஆதிக்கம் செய்த நிலப்பிரபுக்கள் அவர்களை எதிர்த்து விவசாயிகளை அணிதிரட்டியது , அவர்களின் அடக்குமுறையால் போராட்டத்தில் வீர மரணம் அடைந்தது என்று செல்கிறது புதினம் .

அப்பு நடுத்தர விவசாயி வீட்டில் இருந்து வருகிறான் , சிருகண்டன் கூலி விவசாயி குடும்பத்தில் இருந்து வருகிறான் . புதினத்தின் ஊடாகவே அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் , அந்த வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை இயல்பாய் படம்பிடித்து காட்டுகிறார் ஆசிரியர் .அப்புவின் குடும்பம் நடுத்தர விவசாய குடும்பம் என்பதால் சிருகண்டன் சந்திக்கும் பிரச்சனைகள் ஆப்பு சந்தித்ததில்லை . சிருகண்டணிற்கு போராட்டமே வாழ்கை , அவன் அப்பா நிலபிரபுவிற்கு அடிமையாய் உள்ளார் , ஆனால் அப்புவிற்கு போராட்டம் என்பது அவன் விருப்பத்தில் இருந்து வருகிறது . அதனால் மாஸ்டர் சொல்லித்தரும் அரசியலை அப்புவை விட சிர்கண்டணிற்கு கூர்மையாய் புரிகிறது . ஆனாலும் அப்பு சிருகண்டனிடமிருந்து அரசியல் கூர்மையை படிப்பால் வந்தடைகிறான் . இரு தோழர்களின் உழைப்பும் முக்கியம் ஆனாலும் ஒரு வர்க்கம் என்ற முறையில் எப்படி வருகிறார்கள் , அப்பு எப்படி மாற்றிக்கொள்கிறான் என்பதை அழகாய் படம்பிடித்து காட்டுகிறது புதினம்.

அப்புவையும் சிருகண்டனையும் மாஸ்டர் வழிகாட்டுகிறார் . மாஸ்டர் இருவரையும் ஒரு இடத்திற்கு வர சொல்கிறார் . தேஜஸ்வினி நதிகடந்து படகில் வருகிறார்கள் சிறுவர்கள் . அங்கே மாஸ்டர், அமைப்பு தலைவர், பயில்வான் முதலியவர்களை சந்திக்கிறார்கள் சிறுவர்கள் . அமைப்பு தலைவர் தலைமறைவு வாழ்கை வாழ்பவர் , அரசியல் நுணுக்கங்களை தலைவர் சிறுவர்களுக்கு விளக்குகிறார் .ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உழைக்கும் மக்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற வர்க்க பார்வையில் தலைவர் சிறுவர்களுக்கு விவரிக்கிறார் . இது புதினத்தின் முக்கியமான இடம் , சிருகண்டனும் அப்புவும்
அரசியல் பார்வை பெறுவது இந்த இடத்தில் தான் .தினமும் அப்புவும் , சிருகண்டனும் அரசியல் விவாதம் செய்கிறார்கள் . தலைவர் மாணவர்களை பத்திரிகை படிக்கசொல்கிறார் , சரி என்கிறார்கள் . எதாவது ஒரு விடயத்தில் சந்தேகம் வந்தால் மாஸ்டரை கேட்கிறார்கள். அவர்கள் அரசியல் மேலும் மேலும் கூர்மை அடைகிறது .


அரசியலை தங்கள் கிராமத்துடன் பொருத்தி பார்க்கிறார்கள் . கையூரில் இரு நிலபிரபுக்கள் அவர்களின் கோர பிடியில் கையூர் இருந்தது . உழைக்கும் விவசாயிகளுக்கு நிலம் இல்லை , என்ற நிலைமை . அப்படி இருக்கும் பொழுது மக்களை அணிதிரட்டுவதால் மட்டுமே விடுதலை அடையமுடியும் என்று அப்பு சிருகண்டனிடம் சொல்கிறான் .மாஸ்டர் அனைத்து விவசாயிகளையும் பத்திரிகை படிப்பதை அறிமுகம் செய்கிறார் , இதை அறிந்த நிலப்பிரபு மாஸ்டரை கூப்பிட்டு இதை மறைமுகமாய் கண்டிக்கிறார் . கையெழுத்து மட்டும் போடத்தெரிந்தால் போதாதா என்கிறார் .இப்படி படித்தால் யாரும் வேலைக்கு போகமாட்டார்கள் என்று மாஸ்டரிடம் சொல்கிறார் . தன் மகனிற்கு பள்ளி முடிந்தவுடன் மாஸ்டர் டியூஷன் சொல்லித்தரவேண்டும் என்கிறார் .இங்கு டியூஷன் பிரதானம் அல்ல , ஆளும் வர்க்கம் வேலையை எப்படி நரித்தனமாய் கெடுக்கும் என்பது சுட்டிக்க்காட்டபடுகிறது . மாஸ்டர் டியூஷன் எடுக்க வந்தால் , விவசாயிகளுக்கு யார் அரசியல் அறிவு
தருவார்கள் ,இதை கெடுப்பதற்கான வேலையை நிலபிரபு செய்கிறார் .

ஆளும் வர்க்கம் அடிமைப்பட்ட வர்க்கத்தை ஒடுக்க எவ்வாறெல்லாம் செயல்படும் , வர்க்கப்போராட்டம் எப்படி கூர்மை பெறுகிறது என்பதை புதினம் பதிவு செய்கிறது . கிருஷ்ணன் நாயர் என்ற சிறுவிவசாயி நிலபிரபுவால் பாதிக்கப்பட்ட ஒரு விதவையை கல்யாணம் செய்வது போன்ற பெண்ணியத்திற்கு உண்டான கூறுகள் இப்புதினத்தில் நிறைந்து காணப்படுகிறது . அப்புரட்சிகர திருமணத்தை மாஸ்டரின் வழிகாட்டுதலுடன் செய்கிறார் கிருஷ்ணன் நாயர் .


விவசாயிகள் அனைவரும் ஒரு வீட்டில் பத்திரிகை படிக்கிறார்கள் . புரட்சிகர அரசியலை கற்று தேர்கிறார்கள் . அப்பொழுது பக்கத்து ஊரில் விவசாயிகள் மாநாடு நடக்கிறது . அப்பு சிருகண்டன் அனைவரும் செல்கிறார்கள் . அதே சமயம் ஊரில் கிருஷ்ணன் நாயரிடம் வரி கேட்க நிலப்பிரபு வருகிறார் , கிர்ஷ்ணன் நாயர் கொடுக்க மறுக்கிறார் , அதை பார்த்த மற்ற சிறுவிவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது . மாஸ்டர் உள்ளூரில் கிர்ஷ்ணன் நாயரை வழிகாடுவதற்க்காய் மாநாடு செல்லாமல் இருக்கிறார் . நிலப்பிரபு பெரும் திரளான ஊர் மக்களும் விவசாயிகளும் மாநாட்டிற்கு சென்றதற்க்காய் கோபம் கொள்கிறார் . மறுநாள் கிருஷ்ணன் நாயரிடன் வரிகளை அடித்து பிடுங்குகிறார் . மாஸ்டரை கூப்பிட்டு கண்டித்து வேலையைவிட்டு நீக்குகிறார். பள்ளியை இழுத்துமூடுகிறார் .அந்த ஒருநாள் மட்டும் வரிகட்டாமல் இருந்தது அதில் தோல்வி அடைந்தது எல்லாம் பின்னால் நடக்கும்
போரட்டத்திற்கு எல்லாம் விதையாய் இருந்தது .



மாஸ்டர் ஊரை விட்டுசெல்கிறார் . புதினத்தின் இரண்டாம்பாகம் தொடங்குகிறது . அப்பு , சிருகண்டன் இருவரும் வாலிபர்கள் ஆகி விட்டார்கள் . விவசாய சங்கம் கட்டிவிட்டார்கள் , அப்பு விவசாய சங்க தலைவர் ஆகிவிட்டான் , அவன் வீட்டின் மாடியில் சிகப்புக்கொடி கம்பீரமாய் பறந்தது . அவ்விவசாய சங்கத்தில் அப்புவின் அப்பா சிருகண்டனின் அப்பா அனைவரும் இருந்தனர் . அபூபக்கர் என்ற தோழன் நிறையபோரட்டங்களை வழிநடதியவன் . ஒரு தலைவன் போல தோழர்களை வழிநடத்தும் ஆற்றல் உள்ளவன் . அவன் கூடவே இருந்தது அப்புவிற்க்கும் சிருகண்டனுக்கும் பக்கபலமாய் இருந்தது . அப்புவின் தம்பி பாலர் சங்கத்தலைவன் , சிறுவன் . விவசாய சங்கம் தீவிரமாய் இருந்தது , அவர்கள் வளர்ச்சி நிலப்பிரபுக்களை உறுத்தியது .

அக்காலத்தில் நிலப்பிரபுக்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல இருந்தனர் . தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிடந்தனர் . விவசாயிகள் போராடி பள்ளியை திறந்தனர் . மேலும் உழுபவர்களுக்கே நிலம் என்ற கோரிக்கையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் தோழர்கள் . அப்பொழுது நிலப்பிரபு இவர்கள் ஆதிக்கத்தை ஒடுக்க ஒரு காவலனை வரவழைத்தார் . நிலப்பிரபுவின் வீடு முன்பு கூட்டம் நடந்து சென்றது கோஷங்கள் விண்ணை முட்டின "உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் " என்ற கோஷம் விண்ணை முட்டியது .காவலனை
பார்த்தவுடன் காவலனுக்கு எதிரானா கோஷங்கள் விண்ணை முட்டின . கோபம் கொண்ட காவலன் அடிக்க ஓடி வர , கூட்டம் சேர்ந்து அவனை அடிக்க , அங்கேயே இறக்கிறான் . தோழர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் , அப்பு , அபூபக்கர் தப்பி செல்கிறார்கள் .

நிலபிரபுக்களின் ஆதிக்கம் கோரமாய் இருக்கிறது , பெண்கள் வன்புணர்ச்சி செய்யபடுகிறார்கள் இதை அறிந்த அப்பு அபூபக்கர் சரணடைகிறார்கள் . வழக்கு நடக்கிறது , பொறுப்பில் இருக்கும் நால்வருக்கு தூக்கு தண்டனை கொடுக்கபடுகிறது , மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை , தலைவர் தேடப்படும் கைதி , அப்புவின் தம்பி பாலர் சங்க தலைவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் .அதாவது சிறுவயிதிலேயே போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ,ிலபிரபுவிற்கு எதிரான போராட்டத்தை செய்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் .
மக்களிடம் எதிர்ப்பு பலமாய் கிளம்பியது . தோழர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற முழக்கம் நாடெங்கும் பரவியது .

வெறும் கொலைக்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல இது , நிலபிரபுவிற்கு எதிராய் ஒரு வர்க்கம் எழக்கூடாது என்பதற்காய் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .தூக்கு மேடைக்கு போகும் முன்பு அணைத்து குடும்பத்தினரும் அனைவரையும் பார்க்க வரும் இடம் உருக்கமானது . சிறுவயதில் அப்பு வெட்டியாய் போய் விடுவான் என்று அவன் தந்தை நினைக்கிறார் . சிறையில் அப்பு அவரை பார்த்தவுடன் " நான் வெட்டியா எல்லாம் போய்விடல அப்பா " என்று சொல்லும் காட்சியும் . அபுபக்கர் அம்மாவும் தம்பியும் வருகிறார்கள் , அம்மா சொல்வதை தம்பி கேட்க மாட்டேன் என்கிறான் என்கிறாள் அம்மா . அபு அவனிடன் ஏன் கேட்க மாட்டேன் என்க்கிறாய் என்று கேட்க . தம்பி " அம்மா படிக்க வேண்டாம் என்கிறார்கள் " என்று தம்பி சொல்ல . ஏன் அப்படி சொன்னீர்கள் என்று அபு கேட்க அம்மா " அவன் உன்னமாதிரியே எல்லாத்தையும் படிக்கிறான் டா " என்று சொல்ல " ஏதோ கோவத்துல சொலிட்டேன் என்று சொல்ல " ஒரு தாயின் உள்மன போராட்டமும் , வர்க்க போராட்டமும் துயரம் வலி போன்றவைகளை மனதில் பதிய செய்து ஆழ்ந்த துக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.

தூக்கு மேடைக்கு போகும் முன் நால்வரும் மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள் , அது புரட்சிகரமானது . தூக்கிற்கு முன் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்க "மாஸ்டரை காண வேண்டும் " என்று சொல்கிறார்கள் . மாஸ்டர் ஆழ்ந்த சோகத்தில் வருகிறார் . மாஸ்டருக்கு அவர்கள் சிறுவயது அப்பு சிருகண்டனாகவே தெரிகிறார்கள் . மாஸ்டர் நால்வரையும் பார்த்து ஒன்றாய் இருக்க வேண்டும் என்று சொகிறார் . அதவாது மதம் , ஜாதி , என்ற விடயங்களை எல்லாம் தவிர்த்து மக்கள் ஒன்றாய் வர்க்க போராட்டம் செய்ய வேண்டும் என்று பொருளில் அமைக்கப்பட்ட வாக்கியம் . கவிதையாய் முடிகிறது .

இது தான் என் தோழர்களின் வரலாறு என்று புதினத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கதை முடிகிறது . இதை கையூர் மக்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் . நுகர்வுக்கலாச்சரத்தில் கொண்டாடப்படும் திருவிழாவை விட , இப்புரட்சிகரமான வீரர்களை நினைவு கூறும் பொழுது , திருவிழா அர்த்தம் பெறுகிறது .அப்படி அவர்களை நினைவு கூறுவதோடு முடிகிறது புதினம் தொடங்குகிறது நம் நினைவுகள் .


பின்குறிப்பு :
நிரஞ்சனா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதிய புதினம் "சிரஸ்மரணா ". அப்போராட்டம் நடந்த பொழுது ஆசிரியர் வயது ஏழு .பின்பு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . மலையாளத்தில் இருந்து திரு பி.ஆர். பரமேஸ்வரன் தமிழில் மொழிபெயர்த்து தமிழில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்தியது .மேலும், லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மீனம் மாசத்தில் சூரியன் என்ற படம் வெளிவந்துள்ளது .



நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்),
சவுத் விஷன் வெளியீடு , ரூ..60.00

Wednesday 3 November 2010

நோக்கியா என்னும் எமனும் ஒரு பின்னூட்டமும்

அம்பிகா என்னும் தொழிலாளிக்கு நடந்த கொடுமையை வினவு தளத்தில் படித்தேன்
அங்கே மணி என்னும் தோழரின் பின்னூட்டம் ஆயிரம் கதை சொன்னது , மனது பதைபதைத்து. அனைவருக்கும் அவ்விடயம் போக வேண்டும் என்று எண்ணுகிறேன் ,குழந்தைகளை கொலை செய்ததை ஊடகங்கள் காட்டுகிறது , ஏன் இதை பற்றிய செய்தியை மறைக்கிறது . நமக்கெல்லாம் அரசியல் இல்லாத மனிதாபிமானமே இருக்கிறது . பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் போடும் மனது , தண்டகரன்யாவில் நடக்கும்
பிரச்சனைக்களுக்கு காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறது நம் நடுத்தரவர்க்க குணாதிசியம் , அதையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன . இன்னும் ஏகாதிபத்தியதிற்கு யாரெல்லாம் இரையாக போகிறார்களோ ???? ஏன் நாளை அந்த இரை நாமாக கூட இருக்கலாம் . அந்த பதிவின் சுட்டி கீழே உள்ளது நண்பர்களே படிக்கவும் .இப்பதிவு மணி அவர்களின் பின்னூட்டம்


நீங்கள் படிக்க வேண்டிய பின்னூட்டம் என்றே நினைக்கிறேன் .

மணியின் பின்னூட்டம்




நான் அம்பிகா பேசுகிறேன். போன தலைமுறையின் கனவுக்கன்னி என்று படிக்க வந்திருந்தால் தயவுசெய்து திரும்பிப் போங்கள். கையில் அழுக்கும் முகத்தில் கருப்புமாக கையில் தூக்குப் பாத்திரத்துடன் அதிகாலையில் பயர் ஒர்க்ஸ் கம்பெனிக்கும் ஜின்னிங் பேக்டரிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை அம்பிகா நான்.

நான் நேற்றைக்கு மரணமடைந்தேன். அது விபத்துதான் என்று எனக்கு ஆதரவாக பேசுபவர்களும் சொல்கிறார்கள். நான் பூமியில் பிறந்த சம்பவம் விபத்தாக இருந்திருந்தால் இதுவும் விபத்துதான். துரதிர்ஷர்டவசமாக நான் அப்படி பிறக்கவில்லை. சாவுக்கு என் பிணம் ஒதுங்கிய அப்பல்லோ மருத்துவமனையில்தான் அந்த கட்டப்பஞ்சாயத்து நடந்த்தாக கேள்விப்பட்டேன்.

கேள்விப்பட்டேன் என்ற சொல் உங்களுக்கு கிண்டலாக தோன்றலாம். நான் உயிரற்ற சவம், எனக்கு எப்படி தகவல் பரிமாற்றப்பட்டிருக்கும் என நினைக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கும பலருக்கும்தானே நோக்கியா கம்பெனிக்குள் தகவலை பரிமாறிக் கொள்ள முடியவில்லை. உங்களது தலைக்கு மேல் பெரியண்ணன் போல ஒட்டிக் கொண்டிருந்த காமரா வில் எத்தனை பெண்களின் அந்தரங்க பகுதிகளை சில வெறிநாய்கள் ரசித்திருக்கும். திருடர்களும் பொறுக்கிகளும் உள்ள சிறையின் சில பகுதிகளில் கூட இல்லாத அந்த காமராவை வறுமை என்ற சொல்லுக்கு எதிராக முதலாளிகள் நிறுத்தியபோது நாம் வாயடைத்து போய் அடிமைச் சமூகத்தின் அடிமைகள் போலத்தானே நடந்து கொண்டோம். சம்பளத்தை குறைப்பதற்காக இவர்கள் எத்தனை முறை போட்டுக் காண்பித்தார்கள் அந்த காமராவை. என் கழுத்து அறுபட்டதை அந்த காமிரா படம் பிடிக்க மறந்திருக்குமா. தர்க்கரீதியான அறிவு அக்கேமிராவுக்கு இருந்திருக்குமா எச்ஆர் மேனேஜர் போல என எனக்கு தெரியவில்லை.

எதிர்பாராத ஆயிரத்தில் ஒரு சம்பவம் என வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம். நடந்த்து ஒரு சூதாட்டம் என்றால் அதில் நான் பங்கு பற்றியிருந்தால் ஒத்துக்கொள்வேன் இக்கூற்றை. ஆனால் இது நான் வாழ நினைத்த வாழ்க்கை. நடந்த்து ஒரு சூதாட்டம் என்பது என் தலைக்கும் உடலுக்கும் நடுவில் அந்த கில்லட்டின் இருந்தபோது எனக்கு புரிந்த்து. ஆனால் முரண்நகையாக தொழிலாளி வர்க்கமே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அடிமைத்தனத்தையும் யூனியன்வாதம் மாத்திரமே பேசும் சின்ன சின்ன குண்டூசிகளையெல்லாம் எதிர்கொள்ள இயலாத போது பூக்களை மாத்திரமே அணிந்த என் கழுத்துப்பகுதிக்கு கில்லட்டின் சுமையாக தெரியவில்லை.

நான் அம்பிகா பேசுகிறேன். நேற்றும் அதற்கு முந்தைய நாளுக்கும் முந்தைய நாளெல்லாம் உங்களுக்கு மத்தியில் நடந்து பேசி சிரித்து சண்டையிட்டு விளையாடிய தோழி பேசுகிறேன். காது இருப்பவர்கள் கேட்க கடவர்கள். சிலருக்கு இச்சொற்கள் அயற்சியாக இருக்க கூடும். இன்னும் சிலரோ 500 ரூபா சம்பளத்தில் குறைந்தால் என்ன இதுக்காக ஏன் தலய கொடுத்தாள் என்றும் கேட்க கூடும். என் அப்பாவை என் தாயை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் தந்தையும் தாயும் இவர்களை விட கொஞ்சம் குண்டாக இருந்திருக்க கூடும். ஆனால் உன் அப்பனும் என் அப்பனும் 2500 கோடியில் மும்பையில் வீடுகட்டும் அளவுக்கு வசதியாக இருந்தால் நம்முடைய பாதங்கள் சுங்குவார் சத்திரத்துக்கு பதிலாக பைவ் ஸ்டார் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோத்தேக்களுக்கு போயிருக்கும். சிக்கிய தலை நமது மேனேஜரின் தலையாக இருந்திருந்தால் அல்லது முதலாளியாகவோ இருந்திருந்தால் என்னை மீட்டெடுத்த கதையை இன்று எந்திரன் ரோபோ போல கதை எழுதும் பத்திரிகைகள் என்னிடம் பேட்டி கேட்டு ப்ப்ளிஷ் பண்ணி இருக்கும்.

அந்த புகைப்படத்தை பார்த்தீர்களா அதுதான் என் அம்மா. களை பிடிங்கியும் நாற்று நட்டும் என்னை படிக்க வைத்த தாய். ஆக்கத் தெரிந்த அந்தக் கைகளுக்கு அழிக்கவும் தெரியும். ஆனால் நான் மூத்த மகள். என்னை பிரசவித்த பொழுதை அவள் சபித்துக் கொண்டிருப்பாள். அவளது துயரத்தை யாரால் புரிய முடியும். எனக்கோ திருமணம் முடியவில்லை. தாய்மையின் துயரத்தை என்னால் எப்படி விளக்க முடியும். நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.

எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக நான் பட்டபாடு நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. நோக்கியா கம்பெனியில் வாயிலில் இருந்து இன்னும் நிறைய ஆம்புலன்சில் அம்பிகாக்கள் இனி வெற்றிகரமாக வெளியேறுவார்கள். ஆம் நேற்று உங்களால் அப்பல்லோவில் இருந்து என்னுடைய பிணத்தை தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதமாக மாற்றிட முடியாமல் போனதே.. ஏன் என புரிந்து கொண்டீர்களா.. அரசியல் இன்மைதான் நம்மை தோற்க வைத்த சக்தி என்பதை புரிந்து கொண்டீர்களா. என்ன புரிந்து என்ன பயன் என்கிறீர்களா அல்லது மாண்டவர் மீள்வரோ என கவிதை படிக்கிறீர்களா.. அல்லது என் தம்பிக்கு வேலை தருவார்களா என்பதை நோக்கி உங்களை கவனப்படுத்துகிறீர்களா.. என்னுடைய திருமண பத்திரிகையை என்னுடைய அப்பா உங்களிடம் காண்பித்தாரா… எது எப்படியோ நான் உங்களிடம் இருந்து விடை பெற்று விட்டேன். ஒருவேளை என்னிடம் கடைசியாக சண்டை போட்ட தோழிகளிடம் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க அவகாசம் இல்லாமல் போயிருக்கும். அது என்னை வருத்தவில்லை. நடந்த்து விபத்துதான் என்று பேசும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கும் மண்ணில் சொல்லாமல் போவது ஒன்றும் தப்பில்லை என எனக்கு இப்போது புரிகிறது.

நான் அம்பிகா பேசுகிறேன். இனிமேல் என்னை நோக்கியா அம்பிகா என்றுதான் அழைப்பார்கள். எங்க குலசாமிக்கு நேர்ந்துவிட்ட செம்மறியாட்டுக்கு தலையில தண்ணிய விட்டவுடன மாலய பாத்துட்டு அதுல உள்ள தழைகள திங்கதுக்கு வாயை சந்தோசமா நீட்டும். அந்த மாலதான் தனக்கு போட்ட சவ ஊர்வலத்துக்கான துவக்கம்னு அதுக்கு தெரியாது. நமக்கு மாலைக்கு பதிலா வேலய கொடுத்தாங்க• வேலக்கு ஒரு டார்கெட் வச்சாங்க• இந்த டார்கெட்தான் திருப்பூரின் பஞ்சாலைக்கு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் தென்மாவட்ட இளம்பெண்களை 25000 ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்றது. இலவசமாக ஆஸ்துமா கொடுத்த்து. அப்புறம் நடைபிணமாக்கிய திட்டமான அந்த சுமங்கலித் திட்டத்திற்கு தப்பித்து நான் சிக்கிய இடம் இந்த கில்லட்டின் (நான் வேலைபார்த்த இடத்தில் வரும் போர்டுக்கு பெயர் மதர் ஆம். சிரிப்பாகத்தான் வந்த்து.) சுமங்கலி திட்டத்திற்காக திருப்பூர் போன பக்கத்து வீட்டு தனலட்சுமியும் நானும் வேறு வேறு அல்ல• இருவரும் ஒரே கொள்கையால்தான் அரசின் ஏதோ தவறான கொள்கையால்தான் நன்றாக படித்தும் இப்படி வாடுகிறோம் என தெரிந்த்து. ஆனால் என்ன என்றுதான் தெரியாமல் இருந்த்து. அதனை நம்மை அடிக்கடி பார்க்க வந்த சிஐடியூ காரணும் சொல்லவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயர் கட்சிகொடியை வைத்து எதனையும் அளவிட்டு விடாதீர்கள் நோக்கியாவை போல•

நான் நோக்கியா அம்பிகா பேசுகிறேன். ஓ. இந்திய நோக்கியா என்றுதானே சொல்ல வேண்டும். நல்ல வேளை இந்த கம்பெனி தமிழகத்தில் இருந்த்து. இது மேற்குவங்கத்தில் இருந்திருந்தால் என்னை நக்சலைட்டு என்றும் ஆண்துணைக்காக ஏங்குபவள் என்றும் இந்தச் செங்கொடிகளே பேசியும் இருப்பார்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் தன்னையறிதலில் மாத்திரம் வெற்றி இல்லை என்பதை உலகம் முழுவதும் பற்றி எறியும் போராட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன• பின்லாந்தின் காலாவதியான இயந்திரங்களை இறக்கியதுதான் என் கழுத்தை நசுக்கியதற்கு காரணம் என்றுதான் முதல் சில நொடிகளில் எனக்கு புரிந்த்து. ஆனால் செத்த பிறகுதான் தெரிந்த்து. இது உலகப்பிரச்சினை என• நான் மட்டும் பின்லாந்தின் தொழிலாளியாக இருந்திருந்தால், அந்த இயந்திரங்களை உடைத்து அப்பல்லோவுக்கும் அப்பனான சீயஸிடம் போயாவது என்னை காப்பாற்றி இருப்பார்கள். என் தாயும் கைகழுவும் இடத்தில் ஒரு சரவணா ஸ்டோர் பையுடனும் காலி தண்ணீர் பாட்டிலுடனும் சாய்ந்து கிடந்திருக்க மாட்டாள்.

செத்துப் போன அம்பிகாவாகிய நான் பேசுகிறேன். எனக்கு நட்ட ஈடு தருவது பற்றி பேசிக் கலைந்தீர்களா நேற்று. போலீசாருடன் நமது பக்கம் பேசிய அனைவரும் கை கொடுத்தார்களாமே. இன்னும் யாரை நம்ப போகிறீர்கள். சில லட்சம் வரும் என்பதற்காக தொகையை குறைப்பது பற்றிய பேரங்கள் அங்கே நடந்தபோது நீங்கள் தனித்தனியாக நின்று கொண்டிருந்தீர்களாமே. ஒன்றாக நிற்பதை கூட இன்றுவரை சொல்லித் தராத உதவாத சிஐடியு வை நம்பி இன்னும் என்ன செய்ய முடியும். நட்டாற்றில் விட நிறைய என்ஜிஓ க்கள் அங்கே குவிந்திருந்தார்களாம். பத்திரமாக இருங்கள். அரசியல் புரிதல் இல்லாவிட்டால் வெறும் நமது பிரச்சினையை மாத்திரமே பேசி சக விவசாயியின் பிரச்சினைக்கும் நெசவாளியின் பிரச்சினைக்கும் காரணமான ஒரே எதிரியான அன்னிய நாடுகளின் முதலாளிகளை ஓரணியில் நிறுத்தி எதிர்க்காதவரை அவர்களது செக்யூரிட்டிகளான போலிசார் நம்மை எளிதில் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

தொழிலாளிகள் சங்கமாக சேருவது அவசியம் என புரியவைக்க உலக தொழிலாளிகளை பற்றி பேசினேன் இதுவரை. ஆனால் நானாவுத 22 வயது பெண். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாட வாங்கும் சீனத்தின் பொம்மைகளை உருவாக்கிய சீன குழந்தை தொழிலாளிகள், நைக் சூவின் வேலைப்பாட்டிற்காக கைகளை ரணமாக்கி சிறு தவறு நேர்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கூலியான ஒரு டாலரை பெற முடியாமல் அழுதுகொண்டே வீடு திரும்பும் தாய்லாந்தின் பிஞ்சுக்கைகள் இவையெல்லாம் எனது முறிக்கப்பட்ட மென்னியை விட இளகியவை. சுமங்கலித் திட்டத்திற்காக திருப்பூருக்கு போன தனலட்சுமி யின் பஞ்சடைந்து காசமாக சீரழியப்போகும் அவளது நுரையீரல் அதனை விட இளகியதுதான். தனக்கு என்ன நேர்கிறது என தெரிவதற்கு முன் பூச்சிமருந்தை குடித்து கீழே சாகிறானே விதர்பாவின் பருத்தி விவசாயி அவன் மனம் கூட இப்படி இளகியதுதான். இளகியது ஏமாற வேண்டும் என்பது அறிவியலின் விதி அல்ல•பீலி பெய் சாகாடும்.. என்று சின்ன வயதில் படித்த குறளும் மறக்கவில்லை.

கவந்தகனுக்கு பசி அடங்கவில்லை. அந்த கவந்தகனான சுங்குவார்சத்திரத்தின் நோக்கியா, தாய்லாந்தின் கைவினைஞர்கள், தென்னமரிக்க மற்றும் ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள், தண்ணீரை விற்பனை பொருளாக்கி தாகத்திற்கும் விலை நிர்ணயித்த உலக தண்ணீர் மாபியாக்கள், பன்னாட்டு ஹூண்டாய் கார் கம்பெனிகள், அண்ணாச்சிகளை மீண்டும் ஊருக்கே விரட்டும் ரிலையன்சு பிரஷ், விவசாயிகளை உலகத்தை விட்டே அனுப்பும் அரசின் புதிய பொருளாதார கொள்கை அதுதான் அம்பிகாவையும் சவமாக்கியது என புரிய வரும்போது நோக்கியாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் அந்த மிஷின் மீது கோப்ப்பட மாட்டார்கள். அரசு மிஷின் மீது கோப்ப்பட துவங்குவார்கள். அது வீதிக்கு அவர்களை விரட்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்ப்போம் என பல வண்ணங்களில் மனிதர்கள் வருவார்கள். கவந்தக முதலாளி சாப்பிடுவதற்கு பிள்ளைக்கறி வேண்டும். உங்கள் நாட்டில் குறைந்த விலையில் பிள்ளைக்கறி கிடைக்குமாமே. வரும் எட்டாம் தேதி சுங்குவார்சத்திரம் நோக்கியா கம்பெனியில் இதற்கு பேரம் நடத்த போகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் அணுக வேண்டிய முகவரி அரசுதான்

வினவின் பதிவு

Sunday 31 October 2010

2000 ரூபாய்க்கு வாக்கும் ,பசி போக்கும் மனிதாபிமானமும்

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் அனைத்து கணிப்பொறியையும் தொட்டிருக்கும் . அதாவது CNN நடத்தும் இந்த வருடத்தின் கதாநாயகன் யார் என்ற வாக்கெடுப்பில் ஒரு தமிழர் இருக்கிறாராம் அவர் மதுரைக்காரராம் அவருக்கு வாக்களிக்கும்படி பல மின்னஞ்சல்கள் வந்து கொண்டு இருக்கின்றன . அப்படி என்ன தான் செய்தார் அந்த மதுரைக்காரர் என்று பார்ப்போம் . அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன் , ஐந்து நட்சத்திர உணவகத்தில் குக் ஆக வேலை செய்துள்ளார் , மதுரைக்கு வந்த பொழுது ஒரு கிழவர் உணவு கிடைக்காமல் பசியில் மலத்தை உண்ணுவதை கண்டு இருக்கிறார் இவர் மனம் நெகிழ்ந்து விட்டது , அதனால் தினமும் நானூறு பேருக்கு மூன்று வேலை உணவளித்துக்கொண்டிருக்கிறார் . இதை மேலோட்டமாய் பார்க்கும் பொழுது நமக்கு அவர் கதாநாயகனாய் தெரிகிறார் , ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானம் அவரை கதாநாயகனாய் ஆக்குகிறது .

சரி அவர் செய்வது சரியா ???? என்று விமர்சனம் செய்யும் பொழுது இயல்பாய் அவரை கதாநாயகனாய் ஏற்கும் நம் மனதும் சரியா என்பதும் விமர்சனத்திற்கு உரியது . ஆட்டோகிராப் படத்தில் ஒரு பாடல் வரி வரும் "தாகம் என்று சொல்கிறேன் , மரக்கன்று ஒன்று தருகிறாய் . பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மணி ஒன்று தருகிறாய் " என்ற ஒரு வரி வரும் அந்த வரி இந்த விமர்சனத்திற்கு உகந்த வரி.பிசைக்கார்களுக்கு உணவளிப்பது
என்பதை விட , ஏன் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள் என்று பார்த்து அதை களைய முற்ப்பட வேண்டும் அதுவே நிரந்தர தீர்வு . இப்படி நாம் சொல்லும் பொழுது இயல்பாய் நமக்குள் ஒரு கேள்வி வரும் ????? பசியால் ஒருவன் வாடிக்கொண்டிருக்கிறான் அப்படி இருக்கும் பொழுது அந்த தருணத்தில் பசியை போக்குவது தவறா என்ற கேள்வி வரும் . எந்த ஒரு விடயத்திற்கும் நிரந்தர தீர்வு , தர்க்காலிக தீர்வு என்று இரு தீர்வு இருக்கும் .தற்காலிக தீர்வை விட நிரந்தர தீர்வு முக்கியமானது .

தற்காலிக தீர்வு எல்லா தருணங்களிலும் நிரந்தர தீர்வை தடுக்கும் , இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் . உதாரணமாய் தொழிலாளர்கள் தன்னை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டி போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . நிறுவனத்தின் முதலாளி சம்பளத்தை ஒரு இரு நூறு ரூபாய் ஏற்றுகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னால் ????? போராட்டத்தை விட்டு விட்டால் அது நாளைக்கு அவர்கள் வேலையை உலை வைத்து விடும் . எந்த ஒரு நிரந்தர தீர்வையையும் நீர்த்து போக செய்வது தர்க்காலிக தீர்வுகள் . எப்படி சில மாத்திரைகள் அப்பொழுது உள்ள தலைவலியை மட்டும் போக்கிவிட்டு , SIDE EFFECTS கொடுக்குமோ அதை போலவே தர்க்காலிக தீர்வுகள் . நாராயணன் செய்வது கூட ஒரு தர்க்காலிக தீர்வு அதற்கும் SIDE EFFECTS உண்டு .

சில பேர் இயல்பாய் சொல்வார்கள் "என்னால் முடிந்ததை செய்கிறேன் ????" சரி ஒரு பிச்சைக்காரனுக்கு நாம்
பிச்சை போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம் , நாம் விருப்பப்பட்டால் போடுவோம் . நமக்கு சாத்தியப்பட்டால்
போடுவோம் , நம்மிடம் பத்து ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் போடுவோம் . நம்மிடம் காசு இல்லை என்றால் ??????? அவனுடைய பசி நம் விருப்பத்தின் பெயராலேயே தீர்க்கப்படுகிறது . நாளைக்கே நாராயணன் விருப்பம் இல்லை என்றால் இதை செய்யவில்லை என்றால் , அந்த நானூறு பேரின் கதி .நீங்கள் அவருக்கு கட்டாயம் சோறிட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது ????? அவர்களை மேலும் பிசைக்காரனாக்குவதே இதை போல செயல்கள் செய்யும்.

உங்கள் பகுதிக்கு சாலை ஒன்று தேவைப்படுகிறது , அதை ஒரு நபர் ஒரு வள்ளல் சொந்த செலவில் போட்டுக்கொடுக்கிறார் . அந்த தொகுதி MLA அந்த பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம் . நாளைக்கு அந்த வள்ளல் இறந்துவிட்டாலோ , இல்லை விருப்பம் இல்லை என்றாலோ அவரை இச்செயல்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது . அந்த தொகுதி மக்களும் தனக்காய்
யாரோ ஒருவர் செய்கிறார் என்ற நம்பிக்கையில் , போராடும் குணம் இல்லாமல் நீர்த்து போய் இருப்பார்கள் அது அவர்களுக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை . சாலையே இல்லாமல் இருப்பதற்கு ஒருவன் சாலை போட்டு தருகிறானே என்று சொல்பவர்கள் மட்டுமே பசியால் வாடுபவருக்கு ஒருவன் சோறு போடுகிறானே என்று சொல்லி வாக்களிக்க சொல்கிறார்கள் .

விதர்பா விவசாயி பிச்சைக்காரர் ஆகிறார் விவசாயம் படுப்பதால் . அவருக்கு தேவை உணவளிப்பதா ??? இல்லை அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்ற ஏகாதிபத்தியத்தை விரட்ட போராட அணி திரட்டுவதா ????? அவருக்கு உணவளிப்பது என்பது உங்கள் தீர்வானால் நீங்கள் அவர் போராட்ட குணத்தை நீர்த்து போக செய்கிறீர்கள் ?????? இது ஒரு வகையில் ஏகாதிப்பதியதிற்கு துணை போவது இந்த நீர்த்து போகும் வேலையை தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் நாராயணன்.

கலைஞர் தொலைகாட்சி தருகிறார் வாக்கிற்கு 2000 ரூபாய் தருகிறார் , அது கூட சாமனிய மக்களுக்கு அந்த தருணத்தில் மகிழ்ச்சியே , இதனால் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வரப்போகிறதா , இல்லை முல்லைப்பெரியார் பிரச்சனை தீரப்போகிறாதா. இல்லை பல தயாரிப்பாளர்களை ஏழைகளாக்கும் சன் குழுமத்தின் ஏகாதிப்பத்தியம் அழியப்போகிறதா ???? இப்படி 2000 ரூபாய் அப்பொழுது தருகிறார்கள் என்று நீர்த்துபோன சிந்தனை உள்ளவர்கள் மனிதாபிமான கண்ணோடு பார்த்து ,நாராயணனுக்கு வாக்களியுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் .

ஒரு ஊடகம் ஆளும்வர்கத்தின் ஏதாவது ஒரு குரலாய் இருந்தால் மட்டுமே அது பரிசீலிக்கும் . CNN அவ்வகையில்
எடுத்து இருக்கும் நபர் ஒரு ஐரோம் ஷர்மிலாவோ , இல்லை அருந்ததி ராயோ அல்ல ஏன் என்றால் அவர்கள் பழங்குடி மக்களை பிரதிபலிக்கிறார்கள் , அவர் ஏதோ ஒரு விதத்தில் ஆளும் வர்க்கத்தை பிரதிபலித்தால் தான் அவர் முன்னிலை படுத்த படுகிறார் .நீங்கள் ஆளும் வர்கத்தின் குரலா ???

Sunday 3 October 2010

PEEPLI LIVE ஒரு மேட்டுக்குடியின் பார்வையில் விவசாய தற்கொலைகள்

"PEEPLI LIVE " என்ற ஹிந்தி திரைப்படம் ஆஸ்கார் செல்கிறது என்று படித்தேன் . படத்தினுடைய தயாரிப்பாளர் அமீர் கான் . சமகாலத்தில் வந்த நேர்மையான அரசியல் படம் என்று விமர்சனங்கள் , மேலும் சாரு போன்ற எழுத்தாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .ஆனால் விவசாய தற்கொலைகள் அதிகம் ஏற்படும் விதர்பா மக்கள் அமீர் கான் கொடும்பாவியை எரித்தார்கள் . மேலும் மன்மோகன் சிங் ஒரு நாள் ஓய்வில் இப்படத்தை பார்த்தாராம் இவை எல்லாம் சேர்ந்து இப்படத்தை பார்க்க தூண்டியது .

சரி அப்படி படம் என்ன தான் சொல்கிறது , விவசாய பிரச்சனைகளை படம் பேசுகிறது .ஒரு விவசாயி தற்கொலை செய்தால்ஒரு லட்சம் தன் குடும்பத்திற்கு அரசாங்கம் கொடுக்கும் என்று நினைத்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறான், அது ஊடகங்களுக்கு தெரிந்து TV சேனல்கள் முற்றுகை செய்கின்றன , அரசியல் கட்சிகள் முற்றுகை செய்கின்றன , கடைசியில் அவன் ஊரை விட்டு ஓடும் நிலைமை , எப்படி ஊடகங்கள் அவன் மைய்ய பிரச்னையை பார்க்காமல் வெறும் பரபரப்புக்காய் அந்த செய்தியை கையாள்கிறது என்பதே படத்தின் ஒரு வரி செய்தி.

படத்தை பார்த்தவுடன் எனக்கு இது சம கால பிரச்னையை நன்று அலசிய படமாய் தோன்றவில்லை . ஊடகங்கள் நேர்மையாய் இல்லை உண்மை தான் , விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்கின்ற பொழுது IPL மேட்ச் கவர் செய்தது ஊடகங்கள் . ஊடகங்கள் மக்களிடம் அரசியல் பார்வையுடன் விடயங்களை கொண்டு செல்வதில்லை உண்மைதான் . பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பொழுது எந்திரன் படத்தை பற்றி மட்டும் அதிகாமாய் சன் தொலைகாட்சி கவலைப்பட்டு கொண்டிருந்தது . ஊடகங்களின் நேர்மை அவ்வளவே . ஆனால் விவசாயிகளின் தற்கொலைக்கு எது மூல காரணம், வெறும் ஊடகங்களா ???இல்லை அரசியல்வாதிகளா ??? இல்லை உலகமயமாக்கலா???

உலகமயமாக்கம் என்பதை தொடாமலேயே விவசாய பிரச்சனைகளை சொல்கிறது படம் . படத்தில் ஒரு அரசியல்வாதியுடன் ஒரு பேட்டி வரும் அதில் விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்று கேட்கும் பொழுது "INDUSTRIALISATION " என்ற பதில் வரும் , இப்படி ஒன்று இரண்டு இடங்களில் வரும் வசனம் தவிர பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் விவசாயிகளின் பிரச்சனை ஊடகங்கள் அல்ல ??? உலகமயமாக்கமே ,அப்படி உலகமயமாக்கலை தொடமால் எப்படி ஒரு நேர்மையான அரசியல் படம் எடுக்க முடியும் .

பிளாச்சிமடா கேரளாவில் உள்ள கிராமம் அங்கு கோக் வந்தது , நிறைய பேருக்கு வேலை அளிக்கிறோம் என்ற பெயரில் அந்த கிராமத்தையே அளித்தது , இனிக்கும் தண்ணீர் உள்ள கிராமம் பிளாச்சிமடா , இன்று அந்த தண்ணீர் எல்லாம் விடமாய் போனது . அந்த கிராம மக்கள் விவசாயம் பாழ் அடைந்தது , இப்படி உலக கொள்ளைக்காரர்கள் கோக் பெப்சி உலகத்தின் உள்ள தண்ணீரை எல்லாம் பகல் கொள்ளை அடிக்க , விவசாயத்தை எல்லாம் பாழ் செய்ய , உலகமயமாக்கமே விவசாயிகளின் பிரதான எதிரி . sterlite ஆலை தூத்துக்குடியை பாழ் செய்தது . இப்படி எதோ ஒரு ஆலை வர அந்த விவசாயம் பாழ் ஆனது என்பதை போன்ற காட்சிகள் பெயர் அளவிற்கு கூட படத்தில் வைக்கவில்லை .

ஏதோ காசு தருவார்கள் என்பதற்காய் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பது போல சித்தரிக்க பட்ட காட்சிகள் . உண்மை அதுவா ??? வாழ வழி இல்லாமல் அல்லவா தற்கொலை செய்து கொள்கிறார்கள் ??? இப்படி தற்கொலைகளுக்கு பணம் தான் காரணம் என்பது போல் சித்தரிப்பது விவசாயிகளை புண்படுத்துவது போல் உள்ளது . மேலும் யார் தற்கொலை செய்து கொள்வது என்ற விவாதம் படத்தில் வரும் , அது நகைச்சுவை காட்சி போல சித்தரித்து விவசாய பிரச்சனைகளை கேலி பொருள் போல் ஆக்கி விட்டார் அமீர் .

சரி ஒரு பன்னாட்டு குளிர் பான பொருட்களுக்கு விளம்பரத்தில் நடிக்கும் அமீர் கான் எப்படி ஒரு நேர்மையான படத்தை தயாரித்து கொடுக்க முடியும் .சாரு போன்ற அறிவாளிகளை விட , விதர்பா மக்களுக்கே அங்கு நடக்கும் அரசியல் தெரியும். படம் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை இந்த சுட்டியில் இருந்து பாருங்கள் , PEEPLI LIVE உண்மையில் நேர்மையான படமா என்பது உங்களுக்கு புரியும் . உலகமயமாக்கம் தாக்கம் இல்லாமல் விவசாய பிரச்னையை காண்பித்ததற்கு அமீர் கான் அவர்கட்க்கு ஆஸ்கார் தரலாம்.

















பின் குறிப்பு :
நாம் பெரிதும் கொண்டாடிய "3 IDIOTS " படத்தில் கூட ஒரு ஏழை குடும்பம் எப்படி சித்தரிக்கபட்டது . ஒரு மேட்டுக்குடியின் பார்வையில் ஏழை என்றால் அசுத்தமானவர்கள் என்பது போல சித்தரிக்கபட்டது, அதே போல் PEEPLI LIVE ஒரு மேட்டுக்குடியின் பார்வையில் விவசாய தற்கொலைகள் .

இந்த சுட்டியை படிக்கவும்
Vidharba farmer view on PEEPLI

Friday 1 October 2010

கருப்பு கோட் எதற்கு , காவி உடை போதுமே




பாபர் மசூதி பற்றி தீர்ப்பு வந்துள்ளது பா ஜா கா மற்றும் இந்து முண்ணனியினர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் ,தீர்ப்பின் சாராம்சம் இந்து மதத்தினுடைய நம்பிக்கை , அதாவது ராமர் கோவில் அங்கு இருந்தது என்று ஒருநம்பிக்கையாம் அதனால் இந்துக்களுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுக்கிறார்களாம் . சில கேள்விகள்

1 வெறும் நம்பிக்கை மட்டுமே ஆதாரமாய் இருக்கும் பட்சத்தில் , இப்பொழுது இருக்கும் ஒரு ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு இங்கு ஒரு கிருத்துவ சர்ச் இருந்தது என்றால் நீதிமன்றம் , கிறுத்துவர்களுக்கு நிலத்தை பாதியாய் தந்து விடுமா ??????
2 நம்பிக்கை மட்டுமே தீர்ப்பின் சார்மசமாய் இருக்கும் பட்சத்தில் , சட்ட மன்றம் இருக்கும் இடத்தில் என் மதத்தினுடைய கோவில் இருந்தது என்று அதை இடித்தால் நீதிமன்றம் , மற்றும் கரசேவகர்கள் ஒத்துக்கொள்வார்களா ?????3 மசூதியை இடித்ததற்கு வீடியோ ஆதாரம் முதல் இருக்கும் பொழுது அதை எல்லாம் ஒரு பொருட்டாய் கருதாமல் அங்கு முன்பே ராமர் கோவில் இருந்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ????? 4 அப்படி பார்க்கும் பொழுது ஒவொவொரு இடமுமே 10000 வருடங்களுக்கு முன்பு வேறு போல் இருக்கும் அதற்க்கு
ஏற்றார் போல் அனைத்து தீர்ப்பும் எழுதப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் .
5 ராமர் இருப்பது உண்மை என்றால் சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் அம்பேலா ???????
6 கோவிலை இடித்து கட்டியதால் அது மசூதியே அல்ல என்கிறார்களே , கோவிலை இடித்ததற்கு ஆதாரம் உண்டா ?????
பார்ப்பனர்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று வேதம் சொல்கிறது , இன்று US போன்ற வெளிநாடுகளில் இருப்பது
பார்ப்பனர்களே , அதற்காக அவர்கள் பார்ப்பனர் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா ?????
7 நான் ஒரு வீடை இடித்து விட்டு , முன்பு ஒரு காலத்தில் அது என் தாத்தாவின் வீடு அங்கே அவர் படம் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால் நீதி ஏற்றுக்கொள்ளுமா ???
8 வருணாசிரமம் தூக்கிப்பிடிப்பதை போல் உள்ளதே நீதி இதற்க்கு எதற்கு நீதி மன்றம் , கருப்பு கோட் எதற்கு , காவி உடை
போதுமே ...................................??????

http://www.youtube.com/watch?v=5AhbyGeTIbQ

இந்த சுட்டியை பார்க்கவும் இப்படி திருப்பதி கோவில் இடிக்கப்பட்டால் சும்மா இருப்பார்களா .
வலுவான ஆதாரம் தற்காலத்தில் இருக்கும் பொழுது ஏன் கற்காலத்தில் ஆதாரத்தை தேடுகிறார்கள்

Sunday 5 September 2010

MODERN TIMES

முதலாளிகளின் உலகத்திலே , ஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது அதன் தொழிலாளர்கள் எப்படி பாதிக்கபடுகிறார்கள் என்பதை அற்புதமாகவும் நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் படம் சார்லி சாப்ளின் நடித்த "MODERN TIMES " . எந்திரங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது அனைத்தையும் ஒரு தொலைகாட்சி போல ஒன்றை வைத்துக்கொண்டு தொழிற்சாலையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதாலாளி பார்த்துக்கொண்டிருக்கிறார் , அதன் மூலமாகவே ஒரு தொழிலாளியிடம் வேகத்தை அதிகப்படுத்த சொல்கிறார் . இக்காட்சி இப்பொழுது மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் TELECONFERENCING உடன் பொருத்தி பார்க்கலாம் . சாப்ளின் ஒரு screw driver வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஸ்க்ருவை டைட் செய்யும் வேலை . வேகமாய் வர வர டைட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.கொஞ்சம் சாப்ளின் மெதுவாய் வேலை பார்த்தாலும் supervisor அவரை வேகமாய் வேலை பார் என்று திட்டிக்கொண்டே இருப்பார் . சாப்ளின் கழிவறைக்கு செல்கிறார் , அங்கு ஆற அமர உட்கார்ந்து தம் அடிக்கிறார் , அதை தொலைக்காட்சியில் இருந்து முதலாளி பார்க்கிறார் , சாப்ளினை திட்டுகிறார் , சாப்ளின் மறுபடியும் வேலை பார்க்க செல்கிறார் . இத்தகைய கழிவறை கூட முதலாளி கட்டுப்பாட்டில் இருக்கிறது , nike போன்ற நிறுவனங்களில் ஒன்றுக்கு சென்றால் கூட குழந்தைகளை திட்டுவார்கள் , அதற்க்கு கூட நேரம் ஒதுக்காமல் செல்ல வேண்டும் , அங்காடி தெரு படத்திலும் அத்தகைய காட்சி பார்த்தாய்
நியாபகம் , இப்படி முதலாளித்துவம் எப்படி இருக்கிறது , எப்படி எல்லாம் இருக்கும் என்பதை 1936 அந்த ஆண்டிலேயே சித்தரித்து விட்டார் சாப்ளின் . screw டைட் செய்து செய்து சாப்ளினுக்கு இயல்பாகவே அது ஒரு குணாதிசயம் போல மாறிவிட்டது . SCREW இல்லை என்றாலும் அதை போலவே செய்கிறார் . ஒரு பெண்மணியின் பட்டன் வைத்த ஷர்டை டைட் செய்ய பாய்கிறார் , அந்த பெண்மணி ஓடுகிறாள் . சாப்ளினுக்கு அதிக வேலை பளு அவரை ஒரு நரம்பு தளர்ச்சி உள்ளவன் போல மாற்றுகிறது . எந்திரத்தனமாய் ஒரு இயந்திரம் போல அவர் நடவடிக்கைகள் இருக்கிறது . எப்படி பணக்காரர்கள் நுகர்கிறார்கள் , எப்படி சாமனியன் கஷ்டப்படுக்கிறான் என்பதை அற்புதமாய் படம் சித்தரிக்கிறது . இப்படி படம் நெடுக அற்புதமான நகைச்சுவை , சிந்தனை , ஆழ்ந்த சோகம் என்று சாப்ளின் பின்னி எடுக்கிறார் . கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் "MODERN TIMES ".

Sunday 29 August 2010

இவண் இரண்டாம் பிரட்மன் சச்சின் ரசிகர் மன்றம் நேதாஜி நகர் புளியங்குளம் விளக்கு

"கிரிக்கெட் மதம் சச்சின் அதன் கடவுள் " என்பது மைதானங்களில் அடிக்கடி இருக்கும் வாசகம் . ஆம் இந்தியாவில் மின்சாரம் நுழையாத இடங்களில் கூட மட்டை பந்து நுழைந்துள்ளது . மதுரை மாநகரிலே ஒரு கிராமத்தில் சச்சின் 194 அடித்தபொழுது டிராவிட் declare செய்து விட்டார் , அப்பொழுது ஒரு சுவரொட்டி அதில் "கங்குலி கைக்கூலி திராவிடே பதவி விலகு " கீழே இவண் இரண்டாம் ப்ரட்மான் சச்சின் ரசிகர் மன்றம் புலியான்குலம்விலக்கு நேதாஜி நகர் . இப்படி தினசரி வாழ்வோடு தினசரிக்களுடன் கிரிக்கெட் மரபாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஊருக்குள் விக்கி பந்து tournament நடக்கும் பொழுது கைலிகட்டிக்கொண்டு ஒற்றைக்காலில் pad மாட்டிக்கொண்டு விளையாடும் அளவிற்கு கிரிக்கெட் கிராமங்களை கூட தொட்டு உள்ளது .

இங்கு சென்னையில் கேட்கவே தேவை இல்லை கல்லி கிரிக்கெட் பிரசித்தம் . கலைஞர் முதல் புரட்சிக்கலைஞர் பிறந்த நாள் முதற்கொண்டு கல்லி கிரிக்கெட் tournament நடக்கும் . தெருவில் இருந்து பீச்சில் இருந்து மின்ராசா ரயில் போகும் பாதைகளில் எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் விளையாட்டு கொடி கட்டி பறக்கிறது . உலகக்கோப்பை பொழுது எல்லாம் கிரிக்கெட் ஒரு தேசியத்தை எழுப்பக்கூடிய செயலாய் இருக்கும் . தேனீர் கடை முன்பு நின்று கொண்டு கடைசி ஓவரை மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்துக்கொண்டு பார்ப்பான் ரசிகன் .

இன்று பாக்கிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் மாட்டியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது . கிரிக்கெட் என்பது மதரீதியான வெறி போல் மக்களிடம் இருக்கும் சூழலில் , கொடிக்கட்டி பறக்கும் விளையாட்டு கோடிகளில் புரளும் பொழுது இது தவிர்க்க இயலாதது . இப்பொழுது இந்திய அணிக்கு கோக் sponser செய்வது என்று வைத்துக்கொண்டால் , இந்தியா ஜெயித்தால் தான் அவன் பண்டத்தை விற்க முடியும் , அப்பொழுது எதிர் அணிகளை நாடுவது , பிட்ச் மாற்றுவது , போன்ற முக்கிய வேலைகலை நிறுவனமே பார்த்துக்கொள்ளும் . இப்படி விளையாட்டு என்பதை தாண்டி வணிக பொருளாய் இருக்கும் விளையாட்டு எப்படி விளையாட்டாய் இருக்க முடியும் . இந்தியா இலங்கையில் தோற்றவுடன் , ஒரு பையன்
அழுது கொண்டிருந்தான் , சின்ன வயதில் சச்சின் அவுட் ஆனவுடன் நான் அழுதது நியாபகம் வருகிறது . அன்று எனக்கு விதர்பா விவசாயப்படுகொலைகள் எல்லாம் தெரியாது , கிரிகெட் என்பது வணிகம் என்பது தெரியாது . இப்படி தெரியாமலேயே அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது . விளையாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து யார் ஜெய்க்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள் . ரசனையை பன்னாட்டு நிறுவனங்கள் பணமாக அறுவடை செய்கிறது . ஜெயிப்பது யார் என்று தெரியாது தோற்பது பாமர ரசிகன் .

Thursday 26 August 2010

மொக்கை

பாரதியின் பார்ப்பனீயம்
பற்றி எழுதினேன் மொக்கை என்றார்கள் .
உமாசங்கர் பற்றி
எழுதினேன் மொக்கை என்றார்கள் ...
போபால் பற்றி
அதுவும் மொக்கை .............!!!
கருத்துக்கள் தவறா
வடிவங்கள் தவறா .........!!!!
கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம்
வடிவங்கள் தவறு என்றால் ...
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும்
சுரண்டல் பற்றி எழுதினேன்
மொக்கை
சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........
எது மொக்கை ?????

Monday 23 August 2010

நான் மாகான் அல்ல

நான்கு ஏழை பசங்க கால்பந்து ஆக்ரோஷமா விளையாடறாங்க , ஒருவன் ஆவேசமா பீலே போல கோல் அடிக்கிறான் , அடுத்த காட்சியில் கஞ்சா அடிக்கிறாங்க அப்புறம் பீச் ஓரம் போற காதலர்கள மடக்கி பொண்ண கற்பழிக்கிறாங்க , இப்படி பண்றவங்கள தட்டி கேக்குறாரு கார்த்தி இது தான் நான் மகான் அல்ல . பார்ட்டி கலாச்சாரம் , weekend டேடிங் பப் போன்ற சமாச்சாரங்களில் ஈடுபட்டு ,பீச்சுக்கு தள்ளிட்டு வந்து உக்காந்து
தடவிக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க .ஆனா அந்த சேரி பசங்க கெட்டவங்க , அவங்க இந்தியால பணக்கார ,நடுத்தரவர்க்க மக்கள் விளையாடுற கிரிக்கெட் கூட விளயாடரதில்ல விளையாடறது கால் பந்து தான் . மேலும் அவங்களோட மாமன் ஆட்டோ ஓட்டும் ஒரு தொழிலாளி அவரு கொலை பண்ண ஸ்கெட்ச் போடுவாரு , கத்தி எல்லாம் வச்சுருப்பாரு . ஏழை மக்கள் மீது இயக்குனரோட வன்மமே இதுல தெரியுது . பொதுவா
காதலர்களுக்கு அவர்கள கூட்டிட்டு வர மேட்டுக்குடி பையனைவிட , அங்க இருக்கிற ஏழை உழைக்கும் மக்கள் , மீனவ நாண்பர்கள் தான் பாதுகாப்பு . அதுல ஒரு நண்பர் கொள்ளப்படறான் ,அவன் முஸ்லிமாக காட்டப்படரான் , இவங்க எல்லாம் இருக்கிற ஏரியா மேட்டுக்குடி மாம்பலம் மயிலாப்பூர் அல்ல அவங்க எல்லாம் இருக்கிற இடம் சைதாபேட்டை . அவங்க கலைக்கலூரியில் தான் படிக்கிறாங்க ஏன் நா மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க , அதனால தான் ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம் ????மேலும் பீச்ல லவ் பண்றேன்னு அசிங்கம் பண்றது யாரு . நாயகன் "இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு " சொல்றான் கை தட்டறாங்க அடித்தட்டு மக்கள் அரசியல் புரியாம ???? இது எல்லாம் பாராட்ட "நான் மாகான் அல்ல " ,அழாகான தமிழுல எழுத தெரியாத சாமனியன் .

Friday 20 August 2010

அது சரி, முகிலனை காணவில்லை























இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை. கண்டுபிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் வந்து தெரிவிக்கவும். புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் மனித‌ இனத்தை தாங்கள் உடனடியாக வந்து காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு. - அது சரி, முகிலன் சரியாக தெரியாதத‍ற்கு நான் காரணமில்லை. தன்னைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்து தனக்காகவே வாழ்ந்து தனது சிந்தனைகளையே மோகித்து, தனக்கு மாத்திரமே (சுயமோக) புரட்சி செய்பவர்கள் இப்படித்தான் தெரிவார்கள். இல்லை என மறுப்பவர்கள் கண்ணாடியில் பாருங்கள்.

Thursday 19 August 2010

மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன்

"மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன் " என்று இருபத்தி மூணாம் புலிகேசியில் ஒரு வசனம் வரும் , அப்படி இருக்கிறது பதிவர்கள் எந்திரன் பற்றி எழுதியவுடன் எதிர்வினை ஆற்றியது . மாற்றம் என்பது தவறா என்ன ????????ஒருவனுக்கு துன்பம் வருகிறது கோவிலுக்கு போகிறான் , துன்பம் தீர்கிறதா என்ன ???? கோவில் என்ன செய்கிறது மூளை சலவை செய்து அவன் துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்வகையில் செய்கிறது ....அதனால் கோவில் சரியா என்ன .......சரி ஒருவன் TASMAC செல்கிறான் TASAMAC அதே வேலையை செய்கிறது . அப்படி தான் எந்திரன் போன்ற படங்கள் ஏற்ப்படுத்தும் தாக்கம் மக்களை மூளை சலவை செய்வதால் ,
கடுமையாக மக்களை பாதிப்பதால் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் .சரி மக்களின் பொது புத்தி எப்படி உள்ளது NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு ............பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது . இதை புரிந்து கொள்ள தோழராய்
இருப்பது அவசியம் அல்ல , சாதாரண மனநிலையில் இருந்து யோசித்தாலே போதும் . இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது . உதாரணமாய் கொஞ்சம் உண்மையை
எழுதினால் தோழர் என்கிறார்கள் ...........தோழர் என்பது சமூகத்திற்கான வேலையை செய்பவர்கள் .........அந்த தகுதி எனக்கு வந்ததா என்பது தெரியவில்லை .. இரும்புத்திரை போன்றவர்கள் தோழர் , புரட்சி வார்த்தைகளை அவ்வளவு எளிமையாய் உபயோகம் செய்கிறார்கள் அது கொச்சையாக இல்லையா ???? எங்களை பற்றி எழுதினால் எங்களை பற்றி எழுதுங்கள் ஏன் புரட்சி தோழர் என்ற வார்த்தையை தவறாய் பிரயோகம் செய்ய வேண்டும் ....முகிலன் போன்றவர்கள் ஹிட்ஸ் பற்றி எழுதி இருந்தார்கள் . தமிளிஷ் தளத்தில் ரஜினி ,அஜித் , விஜய் படங்கள் வந்தால் தனியாய் ஒரு COLUMN ஒதுக்குவார்கள் போபால் ,ஈழ பிரச்சனைக்கு தனியாக ஒதுக்கினார்களா ????? வினவு தோழர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் ....களப்பணி செய்பவர்கள் அவர்களின் alexa ரேங்க் பாருங்கள் கேபிள் சங்கர் alexa ரேங்க் பாருங்கள் ..............எதை பற்றி எழுதும் பொழுது ஹிட்ஸ் ஆதரவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும் ............ ????நான் புலிகேசி எல்லாம் புரட்சி என்று சொல்லும் அளவில் இருந்து எல்லாம் எழுதுவதில்லை முதலில் எங்களை பக்குவபடுத்துககொள்கிறோம் , ஆனால் நீங்கள் எங்களை பார்த்து என்ன சொல்கிறீர்கள் "மாற்றங்களை விரும்பாத மாமன் " என்கிறீர்கள் .............

Tuesday 17 August 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனம்













உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரி . போன ஆட்சியில் சுடுக்காட்டு கூரை ஊழலில் சிக்கியவர்களுக்கெல்லாம் MP பதவி ..............அதை சட்டம் முன் கொண்டுவந்த உமா சங்கருக்கு தண்டனை வேதனையான விடயம் .........என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்

Monday 16 August 2010

காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்



















Commen Wealth விளையாட்டுகளுக்கு ரெஹ்மான் சொம்பு தூக்கி உள்ளார் , எதிர்மறையான செய்திகளை மீடியா தவிர்க்க வேண்டும் என்ற மாபெரும் கருத்தை உதிர்த்து உள்ளார் .அதாவது ஊழல் பற்றி பேசக்கூடாது , மேலும் இந்திய இவ்வளவு ஏழ்மையாக இருக்கும் பொழுது இப்போட்டிகள் எல்லாம் தேவையா என்று யாரும் கேள்விக்கேட்க கூடாது ????? ஏழை மக்களை துரத்தி டெல்லியை அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்களே அதை பற்றி யாரும் வாயை திறக்க கூடாது என்று சொல்கிறார் இந்த தேசபக்தியாளர் ????? அமெரிக்கனை நல்லவனாய் காண்பித்து அவனை வள்ளலாய் காண்பித்து இந்தியனை திருடனாய் காட்டி "this is india " என்று சொன்ன "SLUM DOG MILLIANORE " படத்தில் வராத தேசபக்தி இப்பொழுது வந்துள்ளது .ஒரு வேலை அப்படி அந்த படம் காட்டியதால் தான் ஆஸ்கார் கிடைத்ததோ .

ஒரு ஏழை தேசத்தில் மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்க படவேண்டுமா என்ன ????? இந்த மாதிரி போட்டிகள் நடத்துவதால் சாமனியன் வீட்டில் அடுப்பு எரியுமா , ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெருமைக்கு எருமை மேய்ப்பது " அதை போல தான் உள்ளது ???சாமனிய திரைப்பட தயாரிப்பாளர்களே அணுக முடியாத ரெஹ்மான் , எப்படி சாமனிய மக்கள் பற்றி யோசிப்பார் ??? அவர் வேலை செய்யும் படங்களை பாருங்கள் "ராவணன்" "எந்திரன்" . 180 கோடி படத்தில் வேலை செய்யும் ஆஸ்கார் நாயகன் எப்படி தெருக்கோடியில் இருப்பவனை ஆதரிப்பார் .

தண்டக்காரன்யாவில் மலை வாழ் மக்கள் துரத்தப்படும் பொழுது அவர்களை கேவலப்படுத்தும் விதமாய் வந்த "ராவணன் " படம் ரெஹ்மானுக்கு அவப்பெயராய் தெரியவில்லை ??? எத்தனையோ சிறு முதலீட்டாளர்களை அழித்து பங்கு சந்தையை கைக்குள் வைத்து இருந்த அம்பானியை கதாநாயகனாய் ஆக்கி வெளிவந்த "குரு" படத்திற்கு இசை அமைத்தது அவப்பெயராய் தெரியவில்லை .இந்தியாவை கேவலமாய் சித்தரித்த "SLUM DOG " படம் அவப்பெயராய் தெரியவில்லை???? தமிழ் மொழியில் வழக்காட முடியாது , அங்கே ஈழத்தமிழன் செத்துக்கொண்டு இருந்தபொழுது , நம் சாகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த பட்ட பொழுது செம்மொழி மாநாடு நடந்தது அதற்க்கு
அடித்தொண்டையில் இருந்து பாடிய ரெஹ்மான் ,அது எல்லாம் அவப்பெயராய் தெரியவில்லை . ஆனால் ஊடகங்கள் COMMEN WEALTH விளையாட்டு பற்றி வெளி வந்த செய்திகளால் வருத்தப்படுகிறார் ஆஸ்கார் நாயகன் .முதலாளிகளின் குரலுக்கு பின்னணி இசை அமைக்கும் ரெஹ்மான் அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான் ,
காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்???

Sunday 15 August 2010

சுதந்திரம்

22000 மக்களை
"சுதந்திரமாய் " பிணம் தின்ற
அன்டேர்சன் ..............!!!
நம் தண்ணீர்
எடுத்து நமக்கே "சுதந்திரமாய் "
தண்ணீர் காட்டும் கோக் .......!!!!
மலை காடுகள்
கணிமவலங்களுக்காய் "சுதந்திரமாய்"
மக்களை விரட்டும் வேதாந்தா .......!!!!
சுதந்திரம்
தரகு முதலாளிக்கு மட்டும் .........!

Saturday 14 August 2010

அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தினமாம் சொல்றைங்க .......கலைஞர் TVLA , கலைஞர் கொடுத்த டிவி ல "தமிழ் படம்" போட்ரைங்க ....... நம்ம தல சிவா நடிச்சது .......அந்த படத்த சுதந்திரமா பாக்குரோம்ல அப்பா சுதந்திர நாடு தானே ..........................!!! சரி அங்கன தண்டக்காரன்யாள வேந்தாந்தா கம்பனி சுதந்திரமா இருக்க ............பா சிதம்பரம் அண்ணாச்சி ரொம்ப பாடுபடராராம் ....ஏன் நா சுதந்திரம் முக்கியமல அதனால சுதந்திரதிற்க்காக அங்க பிரச்சனையா இருக்கிற மக்களை விரட்டி பாடுபடரைங்க ................ஆமா முதலாளி பெரிய மனுசங்க சுதந்திரமா இருக்கணும்லா .....சரி தானே ........ இப்படி பல பேர் யார் ஆட்சிக்கு வந்தாலும் சுதந்திரத்த கட்டி காப்பாதுரைங்க ??????அந்த அன்டேர்சன் பாவம்
பா போபால இருபத்தி ரெண்டைய்ரம் பேர் தான் செத்தாங்க , லட்சக்கணக்கு மக்கள் தான் பாதிக்கப்பட்டாங்க ஆனா அதுக்கு இந்த தீவிரவாதிக்க ஆவூனு குதிக்கறாங்க ,அன்டேர்சன் எப்படி சுதந்திரமா இருப்பாரு , நம்ம ராஜீவ் ஒன்னு
பான்னாரு நாம எல்லாரும் சிலுத்து போறமாதிரி ஒரு விஷயம் பண்ணாரு ..........அவர் சுதந்திரமா இருக்க சொகுசா FLIGHT ஏத்தி விட்டாரு .............எப்படி இருந்தாலும் சுதந்திரம் முக்கியமல CAPTAIN சொல்லற மாதிரி இந்த தீவிரவாதிகள ஒழிச்சா தானே நாடு உருப்படும் ..........................அப்புறம் இப்ப கூட FOXCONNLA விஷவாயு தான்பா லீக் ஆச்சு 100 பேர் மட்டுமே மயக்கம் ஆனாங்க ????????அதுக்கு போய் போஸ்டர் போராட்டம்னு இந்த தோழர்னு சொல்றவங்களே இப்படி தான் ...........இப்படி இருந்த முதலாளி எப்படி சுதந்திரமா இருக்க முடியும் ..........................................நாம தாகம் தீரனும்னா கோக் குடிக்கிறோம் ,சந்தோஷமா இருக்கோம் , உலகமே சந்தோஷமா இருக்கறப்ப ஒரு ஊரு அழிஞ்சா தப்பு இல்ல சரி தானே பிளாச்சிமடா அப்படின்னு ஒரு ஊரு பாழ் ஆயய்டுசாம் அந்த கோக் கம்பெனி வெளிய போகணுமாம் . இப்படியே இருந்தா கோக் எப்படி சுதந்திரமா தொழில் நடத்த சொல்லுங்க ???????அதுக்காக அந்த சுதந்தர்த்திர்க்காக தான் அரசாங்கம் போராடுது ,,,,,,, அரசாங்கத்த அடிச்சுக்க முடியாதுள்ள ..........

விஜய் சூர்யா எல்லாம் விளம்பரத்துல நடிக்காறாங்க , அவங்க என்ன தப்பாவா நடிப்பாங்க சொல்லுங்க ????மக்களுக்காக எவ்வளவு நடிக்கறாங்க சே பஞ்ச் எல்லாம் பெசராங்காபா ??????????அவங்க சொன்ன கோக் குடிக்கனும்ல அப்புறம் எப்படி சுதந்திர நாடுன்னு சொல்ல முடியும் , எல்லாத்துக்கும் கொடி ஆர்ப்பாட்டம் வேற வேலையே இல்ல சரிதானே ????

இந்து மதம் தெய்வீக மதம் லா ...பாவம் அந்த ஜெயந்திர சாமி ஒரு கொலை தான் பண்ணாரு .............நாம கூட கொசுவ கொல்றதில்ல சரிதானே .....ஆனா அவங்க சுதந்திரமா இருந்தா தானே நாடு நல்ல இருக்கும் அப்புறம் பார்த்தீங்கன பங்காரு பாவம் என்ன தப்பு பண்ணாரு சொல்லுங்க , நித்யா எந்த வித்யா கிடைப்பாலானு பாப்பாரு , கால் வலிக்குதுனு ரஞ்சிதா மேல கால் போட்டாரு ???? உடனே ஆ வூ நு எழுதரைங்க இப்படி இருந்தா
எப்படி ஆன்மீகத்த வளர்க்க முடியும் . அதனாலதான் இவங்க எல்லாத்தையும் வெளிய விட்டு ஆன்மீகத்த காப்பாத்துது அரசாங்கம் சரி தானே ......சுதந்திரம் முக்கியமல .........முக்கியமா இத பத்தி எழுதற வால் பையன உள்ள வைக்க பேசிக்கிறாங்களாம் ????சும்மா சும்மா சாமி தப்புங்கராறு வால் பைய்யன் ......சாமி ஒருநாள் கண் குத்த போகுது ஏன் நா சுதந்திரம் முக்கியமல ???????????சரி தானே ..........

அப்புறம் விதர்பால ரெண்டு லட்சம் விவசாயி தான் செத்தாங்க பா ?????? ஆனா மும்பைல பக்கத்து ஊர்ல IPL சுதந்திரமா விளயாடரோம்ல ???? இப்ப கூட COMMEN WEALTH கேம்ஸ் எல்லாம் விளையாடி இந்தியா வளர்ந்த நாடு ஆயக்கிட்டு இருக்கு .............என்ன பா நூறுல 95 பேர் தானே கஷ்டப்படறாங்க அஞ்சு பேர் சுதந்திரமா இருக்காங்களா ???சுதந்திரம் முக்கியமல .......அந்த 95 பேர் கஷ்டப்படமா இருக்கணும்னு மானாட மயிலாட நிகழ்ச்சி போடறாங்க wine ஷாப் இருக்கு , கிரிக்கெட் இருக்கு , கோவில் எல்லாம் திறந்து வச்சுருக்காங்க யாருக்கு என்ன விருப்பமோ அங்க போய்டா கஷ்டம் தீருது ..............இந்தியா சுதந்திர நாடு பா நம்ம நண்டு சொல்றாரு ...நம்ம சீனா அண்ணா கூட அத சொல்றாரு ..........................?????சுதந்திரமா தானே இருக்கோம்
அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல

Thursday 12 August 2010

மகிழ்ச்சியின் தருணங்கள்

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரிடம் போபால் தீர்ப்பை பற்றி பேசி இருக்கிறார் , மேலும் உலகமயமாக்கலின் தாக்கங்களை எடுத்து சொல்லி இருக்கிறார் .அதற்க்கு இன்னொரு நண்பர் " சமூகத்துக்கு நீ என்ன பண்ண ????" என்று கேட்டு இருக்கிறார் . "உன்னால ஒன்னும் பண்ண முடியாதுள்ள , யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது இப்படி வெட்டித்தனமா பேசாம பொழப்ப பாரு " என்று இன்னொரு நண்பர் இவரை கடித்து இருக்கிறார் .இருவரின் பொழப்பு திரைத்துறை , பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் . சரி அப்படி கடித்த நண்பர் போல தான் பொது புத்தி உள்ளது , எடுத்துவுடனே பிள்ளை பெற முடியுமா என்ன ????? அந்த உதவி ஒளிப்பதிவாளர் முதலில் தரமணி கல்லூரியில் படித்து இருக்கிறார் , பின்பு இப்பொழுது ஒரு பெரிய ஒளிப்பதிவாளரிடம் உதவி ஒளிப்பதிவாளர் , பின்பு ஒரு ஐந்து வருடம் கிடைத்து ஒரு படம் கிடைக்கும் , இப்படி படிப்படியாக தானே செய்ய முடியும் .தனக்கு என்று வரும்பொழுது அக்கறையாய் செய்யும் மக்கள் , சமூகம் என்று வரும்பொழுது ஒதுங்கிக்கொள்கின்றனர்.ஒதுங்குவதற்கு சாக்காய் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்ன பண்ண முடியும் என்று சொல்கின்றனர் .

ஒரு குழந்தை எழுந்து நடக்கிறது தட்டு தடுமாறி விழுகிறது மறுபடியும் எழுந்து நடக்கிறது . இப்படி தான் ஒவ்வொரு செயலிலும் இருக்க முடியும் ,முதலில் படிக்கும் பொழுது புரியாது படிக்க படிக்க மட்டுமே புரியும் . முதலில் ஒரு பெண் பார்க்க மாட்டாள் மூன்று நாட்கள் நாம் பின்தொடர்ந்தால் யாரோ ஒருவன் பார்க்கிறானே என்று திரும்பி பார்ப்பாள் . மேலும் அரை கூட விழுக வாய்ப்பு உள்ளது , அதற்காய் காதாலிக்காமல் இருப்போமா
என்ன ???? ஒரு வேலைக்கு INTERVIEW செல்கிறோம் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடுவோமா ????? ஒரு மகன் படிக்கவில்லை என்றாலும் அப்பா படிக்க வைக்கத்தான் செய்வார் . இப்படி தனித்தனியாய் நம் வாழ்க்கைக்கு போராடும் நாம் , சமூகம் என்று வரும்பொழுது "அது எல்லாம் வேலைக்கு ஆகாது வெட்டி வேல " என்று சொல்கிறோம் . மேலும் பொதுஉடைமை என்றால் "ரஷ்ய சீனா தோற்றுவிட்டதே " என்கிறோம் , ஆனால் பரிட்சையில் தோற்றுவிட்டோம் என்பதற்காய் நாம் மறுபடியும் எழுதாமல் இருக்கிறோமா என்ன ??????

சரி சமூகத்திற்கான போராட்டங்களில் இறங்க வேண்டும் என்று நினைக்கும் பலர் , அதை நடைமுறைபடுத்தும் பொழுது பாதியிலேயே வேண்டாம் இது நம்மால் முடியாது என்று விலகுகிறார்கள் . மேலும் இவரை போன்றவர்களை பார்த்தால் இது நடைமுறையில் சாத்தியம் அல்ல , என்று தனக்கு நடந்த விடயங்களை வைத்து விளக்குகிறார்கள் . இவர்களால் மட்டுமே தனக்கு நடந்ததை வைத்து சமூக சிந்தனை வேண்டாம் என்று மற்றவர்களுக்கு
விளக்க முடியும் . ஆனால் இவர்கள் குடும்பம் என்றால் , இவர்கள் வேலை என்றால் தோல்வி கண்டாலும் விடுவதில்லை . தன் தங்கையை கிண்டல் செய்யும் ஒருவனை முறைக்கும் அண்ணன் தான் , இலங்கையில் சகோதரிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பொழுதும் கூட , அதே நேரத்தில் நடந்த மட்டை பந்து விளையாட்டை அவனால் ரசிக்க முடிகிறது . தான் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் ,சமூகம் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் .

சமூக அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டிய கட்டுரை தோழர் மருதையனின் "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமூக செயல்களால் உந்தப்பட்டாலும், நடைமுறை படுத்தமுடியாமல் இருக்கும் தவித்து போய் இதெல்லாம் சாத்தியம் அல்ல என்று மனம் வெதும்பி பாதியிலேயே திரும்பும் மக்களுக்காய் எழுதப்பட்ட கட்டுரை . ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் உற்சாகமாய் மாற்றக்கூடிய கட்டுரை என்றே சொல்வேன் . ஒரு செய்ய முடியாத செயலை செய்து அடுத்த கட்டத்திற்கு போவது , சமூக வேலைகள் செய்யும் பொழுது தன் மனதிற்குள் ஏற்ப்படும் முரண்பாடு , குடும்பத்திற்குள் ஏற்ப்படும் முரண்பாடு இதை எல்லாம் தாண்டி தன் சொல்லிற்கும் செயலிற்கும் இடைவெளி இல்லாமல் போராடும் தருணங்களே "மகிழ்ச்சியின் தருணங்கள் " என்று சொல்வார் . "போராட்டமே மகிழ்ச்சி " என்பது காதில் ஒளித்து கொண்டே இருக்கிறது .கட்டுரையை படிக்க நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும் .
http://www.vinavu.com/2010/07/30/momemts-of-joy/

Tuesday 10 August 2010

டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை

ஏகதிபத்தியம் ஆட்சி செய்கிறது , உயிர்கள் மயிர்களை போல மதிக்கபடுகின்றன ???? போபால் விடயம் நமக்கு உரைக்கும் உண்மை என்ன . நாம் சுதந்திரம் அடையவில்லை , ஏகாதிபத்தியங்களும் உலக வங்கியும் ஆட்சி செய்கிறது இந்தியாவை , இந்நிலையில் சுதந்திர தினம் வருகிறது , நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்ன ????? சுதந்திரதினத்தன்று போபால் விடயத்திற்காக டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை நடைபெற போகிறது அனைவரும் வருக .மேலும் தெரிந்து கொள்ள இதை சொடுக்கவும் .

http://www.vinavu.com/2010/08/11/dow-blockade/

Thursday 5 August 2010

போபால் படுகொலையும் ஒரு விவாகரத்தும்

சம்பவம் 1 :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடக்கிறது ,ஹிந்து முறைப்படி நடக்கிறது , மனைவி இந்தியாவில் விவாகரத்து கேட்கிறாள் .திருமணம் அமெரிக்காவில் நடந்ததால் விவாகரத்து வழக்கை இந்திய நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது என்கிறார் கணவர் , ஆனால் திருமணத்தில் எப்பொழுது தாலி கட்டப்பட்டதோ அப்பொழுதே அது ஹிந்து திருமணம் என்று சொல்கிறது நீதிமன்றம் . விவாகரத்து கேட்டவர் நடிகை சுகன்யா , சரி ஒரு திருமணம் இந்திய முறைப்படி நடந்ததால் மட்டுமே இந்திய சட்டத்திற்குள் வரும் என்று நீதிமன்றம் சொல்கிறது .

சம்பவம் 2 :
1969 ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கேட்கிறார்கள் , அந்த நிறுவனம் வந்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் , அந்த நிறுவனம் உபயோக படுத்துவது பழைய ஆபத்தான தொழிற் நுட்பம் . சில திருகுதாளங்கள் செய்து அந்த நிறுவனம் அனுமதி வாங்குகிறது . 1975 முதல் இயங்குகிறது , பல சின்ன சின்ன விபத்துக்கள் நடக்கிறது . அந்த விடத்தால்
பிரச்சனை என்பது தெரியும் , ஆனாலும் இயங்குகிறது . சின்ன சின்ன விபத்துகளுக்கு பிறகு , நிபுணர் குழு வருகிறது , முப்பது மாற்றங்கள் செய்ய சொல்கிறது அதையும் அவர்கள் செய்யவில்லை . 1984 விட வாயு கசிகிறது ஆயிற கணக்கான பேரை விழுங்குகிறது , இந்த முதலாளித்துவம் அதன் இரைக்காக ஒரு ஊரையே சாப்பிடுகிறது . விபத்து என்று முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் கூற்று , ஆனால் அது படுகொலை .
நூறு பேரை கொலை செய்த காசாபை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று சொல்வார்கள் , வெளிநாட்டுகாரனை தண்டிக்க முடியாது என்றால் , காசபை விட்டுவிடலாமே . கசாபிற்கு ஒரு நீதி முதலாளி என்று வந்தால் ஒரு நீதியா .. ஆனால் இன்னும் போபாலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பொழுது , இருபது ஆயிரம் மக்கள் இறந்த பொழுதும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்டேர்சன் கைது செய்யப்படாமல் பத்திரபடுத்தி விமானத்தில் அனுப்பினர். இது துரோக வரலாறு .

முரண் :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடந்தால் கூட இந்திய சட்டத்திற்கு உட்ப்பட்டதாம் . ஆனால் ஒரு அமெரிக்கன் இந்திய மக்களை சேரி போல உபயோகம் செய்து . கழிவு நிறுவனத்தை , கம்மியான கூலியுடன் இந்தியாவில் பெற்று . பல லட்சம் உயிரை தன் லாப நோக்கத்திற்கு கொலை செய்த அன்டேர்சன்னை விசாரிக்க கூட முடியாதாம். இதுவல்லவா முரண் . இம்முரண்ணுக்கு சட்டம் மட்டும் காரணமா . மக்கள் அதிகம் பாதிக்கபட்டாலும் அதை பற்றி எழுதாமல் "போபால் என்றால் சரோஜா தேவி சொல்கிற மாதிரி கோபால் கோபால் " என்றிருக்கிறது என்று சொல்பவர்களும் . மேலும் இந்த விடயம் மக்களிடம் செல்ல நிறைய பேரை எழுத கேட்டு இருந்தேன் அவர்கள் நன்றாய் எழுதிவிட்டனர் .அந்த நண்பர்களும் இத்தகைய முரண்களுக்கு காரணம்.

Wednesday 4 August 2010

மந்திரனும் அப்பாவி ரசிகனும்






















மந்திரன் ஒரு படம் வெளிவருதாம் , மலேசியலா தான் தமிழர்கள் அதிகம் இருக்காங்காலாம் அதனால்
அங்க தான் விழா எடுத்தாங்கலாம். இங்க ரசிகனுக ஒரே ஆர்ப்பாட்டமாம் , ஏன் நா தமிழ்நாட்டுல தலைவிதியே (தலைவிதி) இந்த சூப்பர் (தாத்தாவாம்) ச்டாராம் . வேற வேல வெட்டி இல்லாததாலா பாடல் வெளியீட்டு விழாவிற்கே CUT OUT எல்லாம் வச்சுருக்காங்க . இந்த தீபாவளிக்கு படம் வரலைனா துக்க தீபாவளி என்று போஸ்டர் வொட்டுவோம்னு மதுரை ரசிகர்கள் சொல்றாங்களாம் . ஏன் அப்படி சொல்றாங்கனா சும்மா இல்ல , தலைவர் நடிக்கற படத்துல லாபத்துல பங்கு கொடுக்கற மாதிரி சின்ன விஷயம் எல்லாம் பண்றதில்ல மாறா , தன் படத்திற்கு நூறு ரூபா ticketnaa 1000 ரூபாய்க்கு விக்க சொல்லி ரசிகர்கள குஷி படுத்தராராம் தலைவர் . ஆனா படத்துல லஞ்சத்த ஒழிக்கரது என்ன , கருப்பு பணம் பத்தி பேசறது என்ன ???? கௌண்டர் சொல்ற மாதரி ஒரே டகால்ட்டி தான் .மேலும் படம் வந்தா , இப்படி பணம் செலவழித்த பேரன்களின் தாத்தா வாழ்கன்னு பாராட்டுவிழா
அமெரிக்கால நடக்க போகுதாம் . ஏன் அமெரிக்கால தமில்நாடவிட மூன்று மடங்கு தமிழர்கள் இருக்காங்கனு ஆய்வு சொல்லுதாம்.படம் வெளிவரப்ப பால் , பீர் எல்லாம் நல்லா விற்பனை ஆகுமாம் ??? கடன் வாங்கி தண்ணி அடிக்கறவன் ஒரு மாற்றா கடன் வாங்கி படம் பார்ப்பானாம் , என்ன முன்னேற்றம் அன்னிக்கு தான் தண்ணி அடிக்கலையே . எப்பொழுதுமே பேரன் பேத்திகள் ஆட தாத்தா பாட்டி ரசிப்பாங்க . ஆனா மந்திரன் படம் வரப்ப தாத்தா பாட்டி ஆட பேரன் பேத்திகள் எல்லாம் கை தட்டறாங்க பிரபு சொல்ற மாதிரி என்ன கொடுமை சரவணன் .

Tuesday 3 August 2010

நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ????

என் பெயர் பெயாரா முக்கியம் , நான் மாவட்ட ஆட்சியாளர் இப்போ எதோ கௌரவமா இருக்கேன் , ஆனா நான் பிறந்தது ஆதி திராவிட வகுப்பு , சின்ன வயசில் இருந்து தீண்டாமை , நான் ஒரு பொண்ண காதலிச்சேன் , அந்த பொண்ணு வீட்ல எதிர்ப்பு அடிச்சு ஊர விட்டே துரத்திடாங்க . சரி IAS படிச்சேன் மாவட்ட ஆட்சியாளர் ஆனேன் , ஆனா கூட மேல் சாதி வீட்ல தண்ணி கொடுக்க யோசிப்பாங்க , இப்ப மதம் மாறினேன் , ஆனாலும் கேவலமா தான் பார்க்குறாங்க , அரசாங்கம் மதம் மாறினதால் IAS செல்லாதுன்னு சொல்லுது . மதம் மாறினா சமூகத்துல என் அந்தஸ்த்து உயர்ந்துச்சா . சில பிரபலங்கள் கேக்குறாங்க , ஜாதி இல்லாத மதங்கள்ல ஜாதி பாக்குறது தவறுன்னு , மத ரீதியா ஒதுக்கீடு கொடுக்கணும்னு . அப்படினா நாடார் ஜாதியில் இருந்து மதம் மாறினவனும், தேவரில் இருந்து மதம் மாறினவனும் , மீனவனை இருந்து மதம் மாறரவனும் ஒண்ணா ?????? எல்லாரும் கேக்கலாம் மதம் தான்
மாறியாச்சே அப்புறம் என்ன ஜாதின்னு ????? நான் ஜாதி பாக்கள சாமி ஆனா என்னைய கேவலமா தானே பாக்குறாங்க சரி தானே ????? அப்ப இட ஒதுக்கேடு வேணும்ல ????மதம் மாறிட்டேன் என்பதற்காய் நான் கேவலப்பட்டது இல்லாமல் போய்டுமா என்ன ?????இடஒதுக்கீடு தேவை ஆனா அது அனைத்து மதத்திலும் இருக்கும் தலித்துக்களுக்கு மட்டுமே .சரி மதத்தினால அந்தஸ்த்து உயர்ந்து இருக்குனு சொல்றாங்க , அது மட்டும் உண்மைனா நான் அன்னிக்கே மதம் மாறி காதலிய கை பிடுச்சு இருப்பேன்ல????

நடைமுறை என்ன , ஒரு தலித்த் மதம் மாறறாரு அதுக்காகவே சமூக அந்தஸ்த்து உதவுமா ??????அவர் BC அதற்காய் மற்ற BC அவரை சமமா நினைச்சு பொண்ணு தருவாங்களா ??? அதனால சமூக அந்தஸ்த்து உயருமா ?? இல்லைல , அதனால இடஒதுக்கீடு ஒரு அளவிற்கு வேணும்னா உபயோகப்படும் சமூக நீதி எல்லாம் அதுல இல்லை??? தர்க்காலிக தீர்வு நிரந்தர தீர்வு ஆகாது .


இப்போ உங்களுக்கு உடம்பு சரி இல்ல டாக்டர்ட போறீங்க , தல வலி தானு வச்சுக்குவோம் , டாக்டர் ஒரு மருந்து தராரு , நாமளும் சாபிட்றோம் அது தலைவலியா நிக்க வைக்குது வயத்த வலி வருத்துன்னு வச்சுக்குவோம் , அந்த மருந்து நமக்கு சேரல ??? அதனால தலைவலி நின்னுடுச்சு அப்படின்னு அந்த மருந்த உபயோகபடுத்த முடியுமா ????? அப்ப டாக்டர் எப்படி இருக்கணும் அந்த மருந்து நமக்கு சேருமா இல்லையா , அந்த தலைவலி எங்கிருந்து தோணிச்சுன்னு ஆராய்ச்சி பண்ணி தான் மருந்து கொடுக்கணும்ல , அது தானே நிரந்தர தீர்வு . எந்த ஒரு பிரச்சனைக்குமே நிரந்தர தீர்வு தான் இருக்கணும் , இல்லேன்னா எப்பவுமே தலைவலி தான் . அப்படி பார்த்தா நிரந்தர தீர்வு எப்ப வரும்னா ???புரட்சி செய்யறதுல தான் வரும் . புரட்சினா உடனே துப்பாக்கி அது இதுன்னு நினைக்க வேணாம் , ஒரு மற்றம் வரணும் . அதாவது சொத்த வச்சுதான் கிராமங்கள்ல ஜாதி நிர்ணயிக்கபடுது அந்த சொத்துடமைய ஒழிக்கறது மூலமா தான் சாதியின் வேர்கள புடுங்கலாம் . அப்புறம் அகமண முறை ஒழிக்க படனும் , யாரும் யாரையும் கல்யாணம் செய்யலாம் , அப்படி பெற்றோகள் ஜாதிக்காரர்கள் தடுத்தால் அவர்களை உள்ளே வைக்க சட்டம் போடலாம் . இப்படி நிறையா இருக்கு , அது எல்லாம் விவாதத்தின் மூலமா பல கருத்துகள கேட்கலாம்.சரி முதலாளித்துவ உற்பத்தி முறை இருக்குனு சொல்றாங்க சில முற்ப்போக்காளர்கள், ஆனா பிற்ப்போக்கா தான் இருக்காங்க மக்கள்

சரி முற்ப்போக்கு சிந்தனையாளருக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? இப்ப நான் மதம் மாறிட்டேன் , அப்புறம் நாத்திகம் ஆகறேன் . நாத்திகனா இருக்கறேன் அதுக்காக எங்க அப்பா அம்மாவெல்லாம் பள்ளில படிக்க அனுமதிசாங்களா இல்லை அவங்க குடிக்கற க்ளாஸ் நாங்க குடிக்க முடியுமா , இன்னும் கிராமத்துல ரெட்டை கப் முறை இருக்குலா ???? நாத்திகனு சொன்னா எல்லா மக்களும் எனக்கு மரியாதையை தந்துட போறாங்களா ??? ஐயா நான் ஜாதி பாக்கல ஒக்காளி ஊருக்குள்ள அப்படி பாக்குரைங்க சரி தானே . நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? அப்ப மதம் இருந்தா தான் ஒதுக்கீடா ???? அப்ப மதத்தை கட்டிக்காக்குதா இப்ப உள்ள இடஒதுக்கீடு , இடஒதுக்கீடு மதத்தை ஜாதியை ஒழிக்கவேண்டுமே தவிர கட்டிக்காக்க கூடாது .

Monday 2 August 2010

அது இன்னா பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா -2

நேற்று இடஒதுக்கீடு பற்றி பதிவு போட்டு இருந்தேன் .அதில் கிறுத்துவ மதத்தில் சாதி இல்லை எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் , இந்து மதத்திலே தான் சாதி உள்ளது அதனால் அவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்று சிலர் விவாதம் செய்தனர் . இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் அப்பிரிவினர் எப்படி பார்க்க படுகிறார்கள் அவர்கள் அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா என்பதை வைத்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது ஒருவன் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த தலித்தாய் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் ,மதம் மாறுகிறான் அதனால் அவன் சமூகத்தில் அந்தஸ்த்து அடைவானா ??????? என்பதற்கு இல்லை என்ற பதிலே சரியாக இருக்கும் . அப்படி மதம் மாறினால் சமூக விடுதலை அடையும் என்பது சாத்தியம் ஆனால் , இப்படி இடஒதுக்கீடு எல்லாம் தேவை இல்லை அனைவரும் மதம் மாறியே சமூக விடுதலை அடைவார்களே , ஏன் அப்படி செய்வதில்லை ஏன் என்றால் மதம் மாறினால் மட்டும் சமூக விடுதலை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாய் தெரியும் .

சரி கிறுத்துவர்களில் சாதி இல்லை என்கிறார்கள் . அப்படி என்றால் நாடார் கிறுத்துவர் , தேவர் கிறுத்துவர் எல்லாம் எங்கு இருந்து வந்தார்கள் .ஒரு தேவர் கிறுத்துவராய் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் , ஒரு தலித்தும் கிறுத்துவராய் இரண்டு பெரும் கிறுத்துவர் தானே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பார்களா ???? IAS கூட படித்து இருக்கட்டுமே , தலித்த் என்ற ஒற்றை காரணம் கொண்டு பெண் தர மறுப்பார்கள் , அப்பொழுது நடைமுறையில் சாதி என்பது இருக்கிறாது. அப்படி சமூக ரீதியாய் ஒடுக்கப்படும் பொழுது ஏன் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க கூடாது இது மேல்சாதியின் குரலை போல அல்லவா இருக்கிறது . நடைமுறையில் சமூக அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா இல்லையா என்பது தான் கேள்வி ??????அதை பொறுத்தே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தானே நியாயம் .

இந்து மதமே சாதி என்ற அமைப்பை கட்டிக்காக்கிறது என்பது பெரியார் அவர்கள் சொல்கிறார் , அப்படி ஒடுக்குமுறையை தாண்டி வரவேண்டும் என்று நினைப்பவர்களை இல்லை நீ இந்து மதத்தின் அடிமை என்று சொல்வது போல் உள்ளது இந்த இடஒதுக்கீடு . இது இந்து மதத்தை மறைமுகமாய் கட்டிக்காக்கிறது , இப்படி ஒரு அரசியல் சட்டம் இருக்க எப்படி பெரியார் அவர்களும் , பார்ப்பன எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்காமல் இருந்தார்கள்
என்பது வருத்தமாய் தான் உள்ளது .அம்மையார் மதம் மாற்று தடை சட்டம் கொண்டு வந்தாரே அதை போல அல்லவா இருக்கிறது மதம் மாறக்கூடாது ,நீ இந்துக்களின் அடிமை அப்படி மாறினால் உன் IAS பட்டம் கூட செல்லாது என்று தலித்த்களின் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும் .IAS ஆனால் என்ன ??? அடிமை அடிமை தான் என்று சொல்வது வெட்கப்பட வேண்டிய விடயம் அல்லவா??

இந்த இடஒதுக்கீடு சாதி என்பதை ஒழிக்காமல், இந்து மதம் என்பதை கட்டிக்காக்கிறது ???? இடஒதுக்கீடு ஒரு அளவிற்குஉபயோகப்படுமே அன்றி , சமூக விடுதலைக்கு இது தீர்வு அல்ல .

Sunday 1 August 2010

அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????














அதாவது நைனா உமாசங்கர் உமாசங்கர் ஒருத்தர் இருந்தாரு அவர் ஆதி திராவிடர் இல்லைன்னு ஒரு உலக உண்மைய கண்டுபிடுசுட்டாங்க பா . அந்த அதிகாரிய தண்டிக்கனும்ல , அது தான் தருமம்ல அதனால பதவி நீக்கம் செஞ்சுட்டான்கலாம் . அதுக்கு என்ன சொல்றைங்கா நா அவரு கிறுத்துவராம் அந்த சான்றிதழ் செல்லாதுன்னு சொல்ற்ரைங்க . அது அவர் இன்னா சொல்றாரு நா , எங்க அப்பா அம்மா காதல் கல்யாணம் அம்மா கிறுத்துவர் அப்பா இந்து , சட்டப்படி நான் இந்துன்னு சொல்றாரு . சொல்றது கரக்ட்டு தானே தலிவா . ஆமாம் அரசும் என்ன பண்ணும் எதாவது சொல்லி பதவி நீக்கம் செய்யணும்ல இல்லைனா பேரன் கோவிப்பானே தாத்தா என்ன பண்ணுவாரு , ஒரு தாத்த ஸ்தானத்துல இருந்து யோசிக்கனும்ல . இப்ப பேரன் மிட்டாய் கேட்டால் தாத்தா வாங்கித்தருவார்ல , பேரனுக்கு வேலைக்காரன் பிடிக்கலைனா தாத்தா அவர நீக்கனும்ல அது தானே நியாயம் , தாத்தா அத தான் செஞ்சாரு . தமிழ் மக்கள் என்பது பேரன் பேத்தி மகன் மகள் தானே . இந்த உமா சங்கர நீக்கினதுக்கு சமூக நீதி கொண்டான் என்று தாத்தாவிற்கு பேரன்கள் பாராட்டு விழா நடத்துவாங்களாம் ஆனா எந்த சேனல் போடறது பேரன்க சேனலா அல்லது பிள்ளைங்க சேனலா அப்படின்னு போட்டில விழா கொஞ்சம் தள்ளி போயிருக்காம் .

சரி மெயின் மேட்டருக்கு வருவோம் . இந்த இட ஒதுக்கீடு பத்தி ஆ வூ நு பேசறவைங்களுக்கு ஒரு கேள்வி .??? ஏன் கிறுத்துவனா இல்ல முஸ்லிமா மாறினா இட ஒதுக்கீடு இல்லையா ???? அப்ப இட ஒதுக்கீடு மெய்யாலுமே இந்துவாவே இருக்க தான் சொல்லுதா . யாரோ ஒரு முஸ்லிம் அவருக்கு இதே மாதிரி பிரச்சன வந்தப்ப
ஆதீனத்துட்ட போய் சான்றிதழ் வாங்கினாராமே????? அப்ப நித்தி இல்ல ஜெயேந்திர சாமிட்டா உமா ஷங்கர் போய் சான்றிதழ் வாங்க சொல்லிடுவோமா ??? ஏனா ஆதி திராவிடர்னாளும் இந்து ஆதி திராவிடர்லா என்ன நான் சொல்றது ???? இடஒதுக்கீடு பேர கூட இந்து மத ஒதுக்கீடுனு மாத்திடலாம்னு நினைக்கறேன் .ஒரு பிற்படுத்த பட்டவன் முன்னேற வாய்ப்பாய் இருக்கணும் அது தானே ஒதுக்கீடு , அது என்ன கிறுத்துவனா மாறிட்டாலே அவன் முன்னேறியவனா ஆகா முடியுமா நைனா ???? இத ஏன் பெரியார் பேரன்களும் உடன் பிறப்புக்களும் கேக்க மாட்டாங்கள ?????அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????

Friday 30 July 2010

போராட்டமே மகிழ்ச்சி

"பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
"பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் " என்னும் தலைப்பில் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் பதிவை படித்தேன் . அவர் பதிவு யாரும் பிரச்சனைகளை பற்றி எழுதாதீர்கள் ஒதுங்கி போங்கள் என்று சொல்லும் விதமாய் இருந்தது . அதாவது போராடாமல் இருப்பது தான் மகிழ்ச்சி என்பது போல் கட்டுரை இருந்தது . எதில் போராட்டம் இல்லை , ஒரு தாய் பிரசவிக்கும் பொழுதே வலியுடன் தான் குழந்தையை பிரசவிக்கிறாள் . நம் போராட்டம்
பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது . ஒரு குழந்தை போராடி போராடி தான் நடையை கற்றுக்கொள்கிறது . கீழே விழுவோம் என்று நினைத்தால் நடக்காமல் இருந்து விடும் தானே . பள்ளிக்கு செல்கிறோம் ஒரு தேர்வில் தோல்வி அடைகிறோம் , போராடி படிக்கிறோம் , நாம் என்று வரும்பொழுது , நமக்கு என்று வரும்பொழுது போரடிகிறோம் .
ஆனால் இதே விடயம் சமூக பிரச்சனை என்றால் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி கொள்ளும் போக்கு உள்ளது . சிலர் ஒதுங்கிக்கொண்டு போவது உண்டு , சிலர் உங்களுக்கு எதற்கு வீண் வேலை என்று செல்லும் ஒன்று இரண்டு பேரையும் தடுப்பது உண்டு . சிலர் ரஷ்யாவிலே ஏன் தோற்றனர் சீனாவில் லட்சணம் தெரிகிறதே என்று ஏளனம் செய்வது உண்டு . அவர்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி நீங்கள் ஒரு INTERVIEW செல்கிறீர்கள் வேலை கிடைக்கவில்லை , உங்கள் முயற்சியை விடுவீர்களா ? உங்களுக்கு என்று வரும்பொழுது
முயற்சி , சமூகம் என்று வந்தால் அது எல்லாம் முடியாது வெட்டி வேலை என்று சொல்கிறீர்கள் . ராதாகிருஷ்ணன் ஐயாவிற்கு இன்று வினவு தளத்தில் வந்த "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமர்ப்பணம் . போராட்டத்திலே மகிழ்ச்சி உண்டு மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை.

"மகிழ்ச்சியின் தருணங்கள் "

Tuesday 27 July 2010

விடுதலை போரின் வீர மரபு - வீர பாண்டிய கட்டபொம்மன் -1

விடுதலை போராட்டத்திற்கு என்ற மரபு உண்டு . ஏன் விடுதலை போராட்டத்தை பற்றி இப்பொழுது எழுத வேண்டும் என்ற கேள்விகள் இயல்பாய் எழலாம் ????? வணிகத்திற்காய் வந்த ஆங்கிலேயரின் காலனி நாடாய் ஆனது இந்தியா . இந்தியா என்பது வெறும் சந்தை , முதலாளித்துவம் பிரிட்டனில் உருவான காலத்தில் , அதிக
உற்பத்தி செய்த முதலாளித்தவத்தின் பொருட்களை விற்பனை செய்ய காலனி நாடுகள் தேவைப்பட்டன . உலகத்தில் உள்ள அனைத்து போர்களும் தேசியத்திற்காக என்று சொல்வதை விட, முதலாளிகளின் அதிக உற்பத்தியை விற்பனை செய்ய ஏதாவது ஒரு சந்தை தேவை அதன் அடிப்படையிலேயே இருந்தன என்பது புரியும் . அப்படி பிரிட்டனின் சந்தையை , ஆட்டு மந்தையாய் , காலனியை காலணியாய் இருந்தது இந்தியா ????? எப்படி ஆகிலேயன் கிழக்கு இந்திய கம்பெனி மூலமாய் வணிகம் செய்ய வந்து நாட்டை பிடித்தானோ , அதே சூழல் இன்று நிலவுகிறது . அன்று இந்தியா காலனிய நாடாய் இருந்தது , இன்று மறுகாலனிய நாடாய் இருக்கிறது அதாவது இன்றும் பெப்சி கோக் போன்ற முதலைகளும் , அம்பானி டாடா போன்றவர்களும் . வேதந்தா போன்ற நிறுவனங்களும் ஆட்சி புரிகின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம் . ஆனால் தண்டக்காரன்யா என்னும் இடம் வேதந்தா என்னும் முதலாளிக்கு போக வேண்டும் என்பதற்காய் பொது மக்கள் மீது ராணுவத்தை ஏவும் அரசு இது . அக்கால சூழலில் போராட சிலர் இருந்தனர் அவர்கள் வரலாறு மிகவும் வீரம் நிறைந்தது , அவர்கள் எல்லாம் மானம் உள்ளவர்கள்,சாவதை பற்றி கவலை இல்லாதவர்கள் , இன்று உள்ள மக்களோ மிகுந்த சுயநலம் கொண்டவராய் இருக்கும் வேளையில் , அவர்களுக்கு வரலாறை மீள் பதிவு செய்வதாக வேண்டியது இருக்கிறது .கட்டாயம் அந்த விடுதலை மாந்தர்களின் சிகப்பு ரத்தம் வணக்கத்திற்கு வீரத்திற்கும் உகந்தது .


முதலில் கட்டபொம்மன் பற்றி பார்ப்போம் . ஏன் முதலில் கட்டபொம்மனை பார்க்க வேண்டும் . தனி தனியாக அனைவரும் போராடி இருக்கலாம் ஆனால் முதல் முறையாக அனைத்து பாளையக்காரர்களையும் ஒருங்கிணைத்து போராடிய முதல் ஆள் கட்டபொம்மன் . ஆதாவது ஒன்று பட்டால் மட்டுமே உண்டு விடுதலை என்று தொலை நோக்கு பார்வை கொண்ட வீரன் கட்டபொம்மன் . கட்டபொம்மன் மீது அவனும் வரி கட்டி கொண்டு தான்
இருந்தான் எதோ ஒரு தடவை அவனால் வரி கட்ட முடியவில்லை அதனால் தூக்கில் போட்டார்கள் என்ற விமர்சனம் அவன் மீது உண்டு . அவனை விமர்சிக்கும் முன் அவன் உலகத்தில் சுவாசித்த கடை மூச்சு உலாவிய நாட்களை கொஞ்சம் திரும்பி பார்ப்போம் . ""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.

— கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான். இதில் இருந்து அவன் வீரம் புரிந்து கொள்ள கூடியது .


மதுரையை நாயக்க மன்னர்கள் 16 ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினர் . பிற்காலத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன . பாளையக்காரர்களுக்கு சிற்றசனுக்கு உரிய அனைத்து உரிமைகளும் இருந்தன , வரி வாங்க வேண்டும் , படைகளை தேவைப்படும் பொழுது அனுப்ப வேண்டும் போன்ற பொறுப்புக்களும் இருந்தன . 18 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வீழ்ச்சி அடைய , தங்களை வளர்த்துக்கொண்டார்கள் பாளையக்காரர்கள் . இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

பஞ்சங்கள் சூழ்ந்து இருந்த காலம் . விளைச்சல் இல்லை , இந்நிலையில் ஆற்காட்டு நவாப் முகலாயர்களால் நியமிக்கப்பட்டான் வரி வசூல் செய்ய . எதிர்த்தவர்களை அடக்க கம்பனியின் படைகள் உபயோகப்படுத்தப்பட்டன . கம்பனி வரி வசூல் செய்ததற்கு பணம் கொடுக்க முடியாத நவாப் , வரிவசூல் செய்வதை அவர்களிடமே ஒப்படைத்தான் . பாளையக்காரர்கள் வரி வசூல் செய்தாலும் மக்களிடம் தன்மையாக இருந்தனர் , ஆனால் கம்பெனி காராராக இருந்தது . கட்டபொம்மன் நினைத்து இருந்தால் மக்களிடம் கறாராக பேசி பணத்தை பிடுங்கி உயிர் வாழ்ந்து இருக்க முடியும் . ஆனால் அவன் அப்படி செய்யாமல் எதிர்த்து போரிட்டு தூக்கு கயிரை மாலையாய் அணிந்தான் .

கட்டபொம்மன் எப்படி ஆட்சிக்கு வந்தார் எப்படி போராடினார் என்ற வீரம் மிகுந்த வரலாறை நாளை பார்ப்போம் .
இந்தியா மறுகாலனியாய் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய மீள் ஆய்வு தேவை என்றே நினைக்கிறேன் .

இன்று படுகொலைகளை விபத்துக்களாய் பார்க்கும் நேரத்தில் , மூன்றாம் உலக நாடுகள் சேரிகளாய் முதலாளிகளால் ஆக்கப்படும் காலக்கட்டத்தில் .இந்தியா பணக்காரனின் சந்தை . இந்தியா முதலாளிகளுக்கு தன் பொருட்களை விற்பனை செய்யும் இடம் . இந்தியனின் உயிர் ஒரு ஆய்வு பொருள் , அதனாலேயே UNION CARBIDE போன்ற நிறுவனம் இந்தியாவின் உயிர்களை வைத்து வியபாரம் செய்தான் போபாலில் . இப்படி ஆதாரங்கள் பல பல , அப்படி பட்ட வேளையில் அன்று இந்தியா காலனி நாடானதும் , இப்பொழுது இருக்கும் சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது . அன்று ஆர்காட் நவாப் இன்று
பா சிதம்பரம் . காலங்கள் மாறி இருக்கிறது காட்சிகள் மாற வில்லை , வரலாறு சுற்றி அதே இடத்திலேயே வருகிறது . வேண்டும் இன்னொரு விடுதலை . அப்படி பட்ட சூழலில் இக்கட்டுரைக்கான தேவைகள் அதிகரிக்கின்றன .

போபால் விபத்தா இல்லை படுகொலையா பார்வையாளன்

பார்வையாளன் என்ற பதிவர் போபால் பற்றி பதிவு எழுதினார் , வரவேற்க தக்கது . ஆனால் ஒரே ஒரு வரியில் அந்த கட்டுரையின் சாரம்சத்தை உடைத்துவிட்டார் "ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது"... என்று ஒரு வரி அந்த வரி எனக்குள் புகுந்து கொண்டு ஏதோ ஏதோ செய்தது என்றே சொல்வேன் . மேலும் "அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது... " இப்படி ஒரு வரியை வேறு எழுதி இருக்கிறார் . இது இந்திய நடுத்தர குடும்பங்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது . வலிக்காமல் எல்லாம் புரட்சி செய்ய முடியாது . எதையாவது பெற வேண்டுமென்றால் எதையாவது இழக்க தான் வேண்டும் , என்பதை தெரிந்து கொள்ள பொதுஉடைமை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் .

"போபால் விபத்து நடந்த பொது இந்தியாவே அதிர்ந்து நின்றது..." கட்டுரையின் முதல் வரியிலேயே விபத்து என்று சொல்கிறார் .

மேலும் "ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது..."

எது அதீதம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்க பட்டது அதீதம் இல்லையா , ஒருவனுக்கு மரண தண்டனை கொடுக்க போராட்டம் நடத்துவது அதீதமா . இது என்னமோ அரசின் குரல் இல்லை பா சிதம்பரம் குரல் போலவே உள்ளதே . ஏன் மூன்றாம் உலக நாடுகள் என்ன குப்பைதொட்டிகளா ......... இப்படி நினைத்ததனால் தானே இங்கே
பழைய தொழில் நுட்பம் உபயோகபடுதினான் , அந்த திமிரிர்க்கே மரண தண்டனை ஏன் கொடுக்க கூடாது . எதார்த்தம் எல்லாம் அதீதமாக போகின்றன ஆதீதம் எல்லாம் எதார்த்தமாக போகின்றன என்பதே உண்மை . நாம் உண்மையில் அங்கே பாத்திக்க பட்டு இருந்தால் இப்படி பேசுவோமா ?????????????


"இருந்தாலும், ஒரு பார்வையாளன் என்ற முறையில் அதை பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்...
அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது"

என்று சொல்கிறார் பார்வையாளன் . அது என்ன நடைமுறைக்கு ஏற்றவாறு ????யார் நடைமுறைக்கு ஏற்றவாறு அன்டேர்சன் காப்பாற்றும் இந்திய நடைமுறைக்கு ஏற்றவாறா ????
இல்லை அமெரிக்க நடைமுறைக்கு ஏற்றவாறா ?????"பாரவையாளனாய் இல்லாமல் எப்பொழுது பங்கேற்ப்பவனாக இருக்க போகிறீர்கள் .

இந்திய நடுத்தர மக்கள் பார்வையாளனாகவே இருப்பது தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்

PAARVAIYAALAN

Sunday 25 July 2010

நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு - உபேந்திரநாத்பந்த்யோபபாத்தியாய்

சற்றேக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர்களாக வாழ்ந்த உண்மை மனிதர்களின் சுயசரிதை இது. அரவிந்தர் போன்ற தம்முடைய சக தோழர்கள் ஆன்மீகத்திற்கு திரும்பிய பிறகும் பத்திரிகைகளில் எழுதியதன் பயனாகவும் அந்தமான் சிறையின் 12 ஆண்டுகளோடு கூடுதலாக மூன்றாண்டுகள் தண்டனை கிடைக்கப் பெற்றது அவருக்கு.

சிறுவயதில் துறவு, பிறகு ஆசிரியப் பணி, கர்சன் பிரபு வளர்த்தெடுத்த வங்கத்தின் மெய்யான மறுமலர்ச்சியின்பால் ஈர்க்கப்பட்டு ஜூகந்தர் இயக்கத்துடன் இணைந்து கொண்டது, பத்திரிக்கையில் பொறுப்பு எடுத்துக் கொண்டது.. என இந்த கடந்த நூற்றாண்டின் காரியவாதமற்ற இம்மாந்தர்களின் விழுமியங்களை அசைபோட்டால் மனம் கூனிக் குறுகுகிறது.

கதையின் நாயகர்களது மனதில் ரோபோஸ்பியர்களும், ஆனந்தமடத்தின் ஜீவானந்தமும் குடி கொண்டிருந்தார்கள். அதுதான் மேற்தட்டு வகுப்பை சேர்ந்த பாரீந்திரன் போன்றவர்களை பத்திரிகை ஆரம்பிக்கவும், தீவாந்திரம் செல்லவும் பணித்த இக்கனவு அவர்களை பழைய பார்ப்பனீய விழுமியங்களில் இருந்து விடுவித்து இருக்கவில்லை. அதனால்தான் தமது தலைமைக்கு கூட ஜான்சி ராணியின் படையில் 1857 சிப்பாய் கலகத்தில் போரிட்டு துறவியானவரை தேட வைத்தது. அன்று பிரிட்டிஷாரின் அவதூறுப் பிரச்சாரமான அராஜகவாதிகளுக்கு பதிலளிக்கும் முகமாகத்தான் இந்நாவலும் பிறந்தது.
பத்திரிகை மீது அடக்குமுறை வந்தவுடன் வரலாற்று சிறப்பு மிக்க மாணிக்தாலா தோட்டத்திற்கு சில வாழ்க்கையை தேசவிடுதலைக்கு ஒப்புக்கொடுத்த இளைஞர்களுடன் குடியேறி மத பயிற்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார்கள். அம்முயற்சியின் ஒரு அங்கம்தான் துறவி தேடி ஆசிரியர் தேவவிரதனோடு ஊர் ஊராக சுற்றிய கதை.

பிறகு வைசிராயை கொல்லும் நோக்கத்தில் நடத்திய குண்டுவெடிப்பு, அரசின் ரசிய நிகிலிஸ்டுகள் பூச்சாண்டி, நேபாள உதாஸி மதப்பிரிவினரின் மத ஏற்பு நடவடிக்கைகளின் எளிமை, 1907 சூரத் காங்கிரசில் காங்கிரசு நடத்திய மிதவாத தீவிரவாத நாடகத்தின் மூலம் செயலுக்கு தயாராக இருந்த இளைஞர்களை செயலின்மைக்கு தள்ளிய அட்டைக்கத்தி தலைவர்கள் பற்றிய பாரீனின் ஆதங்கம், அதற்குள் ஒளிந்திருந்த மராத்திய சித்பவன் பார்ப்பன கும்பலின் அண்டிப்பிழைத்தலை அம்பலப்படுத்தியது, அப்போது உல்லாஸ்கர் தத்தா தலைமையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்... என நாவல் இந்தியாவின் 1906 க்குப் பின்னான காலத்தில் விரிகிறது.

பிரிட்டிஷ் நேவிகேசன் கம்பெனிக்க எதிராக வங்கத்தில் இவ்வியக்கம் வளரத் துவங்கிய இக்கால கட்டத்தில்தான் பாரிசார் என்ற இடத்திலிருந்த வியாபாரிகள் அனைவரும் பிரிட்டிஷாருக்கு எதிராக கடல் வணிகத்தை சொந்தமாக துவங்கினர். இதே காலகட்டத்தில்தான் தனது தலைப்பிள்ளையை மரணப்படுக்கையில் விட்டுவிட்டு பம்பாயில் கப்பல் வாங்க அலைந்து கொண்டிருந்தார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. நாவலின் நாயகர்கள் அறியாத அவரை ஒரு துரோகியை குழப்பமடைய செய்வதற்காக தங்களுடன் இணைத்தும் அவர்கள் கதைப்பார்கள்.

பிறகு முஸபர்பூர் குண்டுவெடிப்பிற்கு பிறகு மாணிக்தலா தோட்டத்தை போலீசு சுற்றிவளைத்து அனைவரையும் கைது செய்கிறது. அரவிந்தரும் கைது செய்யப்படுகிறார். விசாரிக்கும் மாஜிஸ்டிரேட் இளைஞர்களிடம் ’’உங்களால் இந்தியாவை ஆள முடியுமா ? ’’ என்று வினவுவார். ’’நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் நீங்கள்தான் ஆண்டீர்களா ? அல்லது உங்களை ஆள வரச் சொல்லி நாங்கள் அழைத்தோமா ?’’ என்று அந்த வெள்ளை நீதிபதியிடம் வங்கத்து வேங்கைகள் சீறுவார்கள். இன்று இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு எங்களை ஆள வாருங்கள் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குழைகிறார் மன்மோகன் சிங்.

உயர்நடுத்தர வர்க்க பிரிவை சேர்ந்த இவர்களுக்கு சிறையில் திருட்டுத்தனமாக தின்பண்டங்களை வீட்டார் வழங்கும்போது, பிற்காலத்தில் பகத்சிங்கின் உற்ற தோழனாக இருந்த ஆசாத் ம், அவரது தோழர்களான அசுவமில்லா கானும் இருந்த அனுசீலன் சமிதி அமைப்பின் தோழர்கள் பழம், பிஸ்கெட் என அத்தோழர்களுக்கு அனுப்பி வைப்பர். சிறையின் எளிய லாப்ஸி உணவு கூட அவ்வர்க்க பின்னணியில் வந்த தோழர்களுக்கு சிறப்பான உணவாக படுகிறது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நரேன் என்பவன் அப்ரூவர் ஆகிறான். அவனை பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு மருத்துவமனையை தேர்வு செய்கிறது. இடையில் சத்யேன் என்ற தோழருக்கு சிறை உணவின் போதாமையால் காச நோய் கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சாவு நிச்சயம் என்று தெரிந்த பிறகும் அந்த வாழ்க்கையை உருப்படியாக செலவழிக்க விரும்பும் சத்யேன் துரோகி நரேனை கொல்வதற்கு கானாயி யின் உதவியை கோருகிறார். வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் போராளி ஆகிறார்கள் எனக் கருதிக் கொண்டிருப்போர் அவசியமாக சத்யேனின் தன் நம்பிக்கையையும், சூழல் நம்பிக்கையற்ற நிலையிலும் பயன்பாடாக மாற்ற முனையும் நம்பிக்கையையும், அதன்வழி போராளிகளின் பாத்திரத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் சரியானது.

ஒருவழியாக துரோகியை கானாயி தீர்த்து கட்டுவான். பிஸ்டல் எங்கு கிடைத்தது என்ற கேள்விக்கு அன்று இறந்து போனவராக கருதப்பட்ட வங்கப் புரட்சியாளன் குதிராம் போஸின் ஆவி வந்து தந்ததாக பதில் அளிப்பார் கானாயி. கானாயி க்கு உறுதி செய்யப்படும். 16 பவுண்டு எடை அதிகரிக்க பின்னர் தூக்குமேடைக்கு முகமலர்ச்சியுடன் செல்வான் கானாயி. அவனை தூக்கிலேற்றிய ஐரோப்பிய காவலாளி பாரீனிடம் வந்து இதுபோல இன்னும் எத்தன பசங்க உங்ககிட்ட இருக்காங்க என்று கலக்கத்துடன் கேட்பான். 1909 மே மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 20 ஆண்டுகள் கழித்து சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு பதில் அளிப்பான் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் போது மதச்சார்பு, மத நம்பிக்கையின் மீதான எள்ளல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை இவற்றுக்கிடையில் இளைஞர்கள் சச்சரவில் இறங்குவதும் நடைபெற்றது. முடிவில் உல்லாஸ்கார் மற்றும் பாரீனுக்கு தூக்குத்தண்டனை உள்ளிட்டு 15 பேருக்கு தீவாந்திர தண்டனை உறுதி செய்யப்படும்.
கப்பலில் கீழ்தளம்தான் கைதிகளுக்கு என்ற சட்டதிட்டத்தை எதிர்த்து இவர்கள் துவங்கிய போராட்டம் அடுத்த 12 ஆண்டுகளும் அந்தமான் சிறையிலும் தொடர்ந்தது. அன்றைய அந்தமான் சிறையில் பர்மிய முசுலீம்கள் நிறைய இருந்ததையும், மதராசி பிராமணர்கள் யாரும் இல்லாமல் போனதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

கைதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சைக்கு அனுப்பாமல் தீவாந்திரம் அனுப்பியிருந்தது. ஒரு சேர் (பத்து கிலோகிராம்) தேங்காய் நாரை காய்ந்த மட்டையை வெறும் கல்லில் உதிராமல் அடித்து சேர்க்க வேண்டும் ஐரோப்பிய மேட்டுக்குடிகளின் சோபாக்களுக்கு. அல்லது முப்பது பவுண்டு எண்ணெய் எடுக்கும் அளவுக்கு செக்கிழுக்க வேண்டும். இவற்றை புரட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமது வழியில் புரட்சி சாத்தியமா என்ற விவாதங்கள் கிளம்பி அதன் கோட்பாடற்ற தன்மையினால் இன அரசியலில் போய் முடியும். கொடுக்கும் வேலையை ஏற்று நடக்கும் இத்தகைய தோழர்களுக்கு நந்தகோபால் என்ற பஞ்சாபிய கைதி வந்துதான் சிறை விதிகளை சுட்டிக்காட்டி மறுக்க கற்றுத் தருவார். இவ்வளவுக்கும் அவர் ஒரு சாத்வீகவாதி.

போராட்டம் துவங்கியவுடன் தனிமை சிறை, அடி என கொடுமைகளுக்கு பஞ்சமே இருக்காது. நல்ல உணவு, உடை, கடுமையான வேலையில் இருந்து விடுதலை என்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அந்தமான் கைதிகளின் தியாகத்தில்தான் இன்று சிறையின் சட்டதிட்டம் ஓரளவாவது இருக்கிறது என நினைக்கையில் கண்ணில் நீர் முட்டுகிறது. இடையே உல்லாஸ்கரும் மனநிலை பிறழ்ந்து விடுகிறான். சென்னைக்கு அனுப்பபடுகிறான். போராட்டத்தின் பலனாக விசாரணை கமிசனும் போடப்படுகிறது.

முதல் உலகப் போர் துவங்குகிறது. எண்ணெய் ஏற்றுமதி தடைபடுவதால் உற்பத்தி அந்தமானில் தேங்குகிறது. தோல்வி பயமும் அவர்களை பயமுறுத்துகிறது. எம்டன் கப்பலின் குண்டுவீச்சும், ரசிய சோசலிச புரட்சியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. கைதிகளுக்கோ ஜெர்மனியை எதிர்த்து கருத்து சொல்லி தப்பிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அதற்காக ஜெயில் சூப்பிரண்டு ஜெர்மனிக்கும் அளிக்கும் சாபத்தை கூட (ஜெர்மனி செத்த பிறகு நிச்சயம் நரகத்திற்குதான் செல்லும், தேவலோகத்தில் இங்கிலாந்துக்கு அருகில் அது இடம்பெற வாய்ப்பே இல்லை) அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.

யுத்தகாலத்தில் அரசின் செலவினங்களை குறைப்பதற்காக மிகுந்த பிரயாசைப்படும் அவர் ஆறு மாதம் முன்னரே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கையில் அனுமதி மறுக்கப்படும். தன்னை அராஜகவாதி என அறிவித்துக் கொண்டு சிம்லாவின் கடவுள்களை திருத்த முடியாது என்றும் கூறுவார். பிறகு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்திற்காக அரசை பாராட்டவும் அவர் தவறவில்லை. நடுத்தர வர்க்கத்தின் இவ்வகை மாதிரிகளை இன்று கூட நீங்கள் நடைபாதையில் அலுவலகங்களில் கண்டு களிக்கலாம்.

கதர் கட்சி தோழர்களின் தீவாந்திரமும் இவர்களோடுதான் ஒருசேர நிகழ்ந்தது. வரலாற்றின் பாடங்கள் எதனையும் முன்னே வைத்திருக்க தெரியாமல் இந்திய கடல் எல்லைக்குள் மாயனத்திற்கு அனுப்பப்பட்ட கனடா வாழ் இந்திய குறிப்பாக சீக்கிய பட்டாணிய மக்களின் அர்ப்பணிப்பும், வரலாற்றுப் பாடத்தை கற்காமல் கீதா உபதேசத்திற்கு அலைந்ததோடல்லாமல் இரகசிய இயக்கம் கட்ட முடியாமலும் தோற்ற இவ்வங்க இளைஞர்களுக்கு 1967 ல் நக்சல்பாரி கிராமத்திலிருந்து எளிய பழங்குடியின மக்கள் தமது வில், அம்பு மற்றும் கோடாரிகளால் பதில் சொன்னார்கள். ஆம் உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம். இதை தடுக்க வரும் மத்திய மாநில அரசுகளை விரட்டியடிப்போம்.



வெளியீடு ; பல்கலை பதிப்பகம், 25 தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24
விலை; ரூ. 45
மொழிபெயர்ப்பு; சு. கிருஷ்ணமூர்த்தி


கட்டுரை : முருகன்

பின்குறிப்பு :
நண்பர் ஒருவருக்கு வலைபூ இல்லை , இலக்கிய பரிச்சியமும் வரலாறும் நன்கு தெரிந்தவர் , இதை என் வலைப்பூவில் போடும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டுளேன் .அந்த கட்டுரையை படித்த பொழுது , அக்கால பகத் ஆசாத் எப்படி இருந்தனர் ,காலனி ஆதிக்கத்தை எதிர்த்து எப்படி போராடினர் .இக்கால இளைஞன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஒப்பிடும் பொழுது கூனி குறுக வேண்டியதாய் இருக்கிறது . இன்று போபால் விட வாயு சம்பவம் நடந்ததற்கு நாம் குரல் கொடுப்பதாய் இல்லை . தண்டக்காரன்யாவில் பிரச்சனை என்றால், நாம் குரல் கொடுக்காமல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கூட தெரியமால் ஊடகங்கள் சொல்வதை நாமும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் , அப்படிப்பட்ட சூழலில் இந்த புத்தக மதிப்புரை தேவை என்றே நினைக்கிறேன் . நன்றி நண்பர்களே முடிந்தால் புத்தகத்தை வாங்கிவிட்டு படிப்போம் .