Thursday 5 August 2010

போபால் படுகொலையும் ஒரு விவாகரத்தும்

சம்பவம் 1 :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடக்கிறது ,ஹிந்து முறைப்படி நடக்கிறது , மனைவி இந்தியாவில் விவாகரத்து கேட்கிறாள் .திருமணம் அமெரிக்காவில் நடந்ததால் விவாகரத்து வழக்கை இந்திய நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது என்கிறார் கணவர் , ஆனால் திருமணத்தில் எப்பொழுது தாலி கட்டப்பட்டதோ அப்பொழுதே அது ஹிந்து திருமணம் என்று சொல்கிறது நீதிமன்றம் . விவாகரத்து கேட்டவர் நடிகை சுகன்யா , சரி ஒரு திருமணம் இந்திய முறைப்படி நடந்ததால் மட்டுமே இந்திய சட்டத்திற்குள் வரும் என்று நீதிமன்றம் சொல்கிறது .

சம்பவம் 2 :
1969 ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கேட்கிறார்கள் , அந்த நிறுவனம் வந்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் , அந்த நிறுவனம் உபயோக படுத்துவது பழைய ஆபத்தான தொழிற் நுட்பம் . சில திருகுதாளங்கள் செய்து அந்த நிறுவனம் அனுமதி வாங்குகிறது . 1975 முதல் இயங்குகிறது , பல சின்ன சின்ன விபத்துக்கள் நடக்கிறது . அந்த விடத்தால்
பிரச்சனை என்பது தெரியும் , ஆனாலும் இயங்குகிறது . சின்ன சின்ன விபத்துகளுக்கு பிறகு , நிபுணர் குழு வருகிறது , முப்பது மாற்றங்கள் செய்ய சொல்கிறது அதையும் அவர்கள் செய்யவில்லை . 1984 விட வாயு கசிகிறது ஆயிற கணக்கான பேரை விழுங்குகிறது , இந்த முதலாளித்துவம் அதன் இரைக்காக ஒரு ஊரையே சாப்பிடுகிறது . விபத்து என்று முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் கூற்று , ஆனால் அது படுகொலை .
நூறு பேரை கொலை செய்த காசாபை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று சொல்வார்கள் , வெளிநாட்டுகாரனை தண்டிக்க முடியாது என்றால் , காசபை விட்டுவிடலாமே . கசாபிற்கு ஒரு நீதி முதலாளி என்று வந்தால் ஒரு நீதியா .. ஆனால் இன்னும் போபாலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பொழுது , இருபது ஆயிரம் மக்கள் இறந்த பொழுதும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்டேர்சன் கைது செய்யப்படாமல் பத்திரபடுத்தி விமானத்தில் அனுப்பினர். இது துரோக வரலாறு .

முரண் :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடந்தால் கூட இந்திய சட்டத்திற்கு உட்ப்பட்டதாம் . ஆனால் ஒரு அமெரிக்கன் இந்திய மக்களை சேரி போல உபயோகம் செய்து . கழிவு நிறுவனத்தை , கம்மியான கூலியுடன் இந்தியாவில் பெற்று . பல லட்சம் உயிரை தன் லாப நோக்கத்திற்கு கொலை செய்த அன்டேர்சன்னை விசாரிக்க கூட முடியாதாம். இதுவல்லவா முரண் . இம்முரண்ணுக்கு சட்டம் மட்டும் காரணமா . மக்கள் அதிகம் பாதிக்கபட்டாலும் அதை பற்றி எழுதாமல் "போபால் என்றால் சரோஜா தேவி சொல்கிற மாதிரி கோபால் கோபால் " என்றிருக்கிறது என்று சொல்பவர்களும் . மேலும் இந்த விடயம் மக்களிடம் செல்ல நிறைய பேரை எழுத கேட்டு இருந்தேன் அவர்கள் நன்றாய் எழுதிவிட்டனர் .அந்த நண்பர்களும் இத்தகைய முரண்களுக்கு காரணம்.

No comments: