Monday 16 August 2010

காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்



















Commen Wealth விளையாட்டுகளுக்கு ரெஹ்மான் சொம்பு தூக்கி உள்ளார் , எதிர்மறையான செய்திகளை மீடியா தவிர்க்க வேண்டும் என்ற மாபெரும் கருத்தை உதிர்த்து உள்ளார் .அதாவது ஊழல் பற்றி பேசக்கூடாது , மேலும் இந்திய இவ்வளவு ஏழ்மையாக இருக்கும் பொழுது இப்போட்டிகள் எல்லாம் தேவையா என்று யாரும் கேள்விக்கேட்க கூடாது ????? ஏழை மக்களை துரத்தி டெல்லியை அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்களே அதை பற்றி யாரும் வாயை திறக்க கூடாது என்று சொல்கிறார் இந்த தேசபக்தியாளர் ????? அமெரிக்கனை நல்லவனாய் காண்பித்து அவனை வள்ளலாய் காண்பித்து இந்தியனை திருடனாய் காட்டி "this is india " என்று சொன்ன "SLUM DOG MILLIANORE " படத்தில் வராத தேசபக்தி இப்பொழுது வந்துள்ளது .ஒரு வேலை அப்படி அந்த படம் காட்டியதால் தான் ஆஸ்கார் கிடைத்ததோ .

ஒரு ஏழை தேசத்தில் மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்க படவேண்டுமா என்ன ????? இந்த மாதிரி போட்டிகள் நடத்துவதால் சாமனியன் வீட்டில் அடுப்பு எரியுமா , ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெருமைக்கு எருமை மேய்ப்பது " அதை போல தான் உள்ளது ???சாமனிய திரைப்பட தயாரிப்பாளர்களே அணுக முடியாத ரெஹ்மான் , எப்படி சாமனிய மக்கள் பற்றி யோசிப்பார் ??? அவர் வேலை செய்யும் படங்களை பாருங்கள் "ராவணன்" "எந்திரன்" . 180 கோடி படத்தில் வேலை செய்யும் ஆஸ்கார் நாயகன் எப்படி தெருக்கோடியில் இருப்பவனை ஆதரிப்பார் .

தண்டக்காரன்யாவில் மலை வாழ் மக்கள் துரத்தப்படும் பொழுது அவர்களை கேவலப்படுத்தும் விதமாய் வந்த "ராவணன் " படம் ரெஹ்மானுக்கு அவப்பெயராய் தெரியவில்லை ??? எத்தனையோ சிறு முதலீட்டாளர்களை அழித்து பங்கு சந்தையை கைக்குள் வைத்து இருந்த அம்பானியை கதாநாயகனாய் ஆக்கி வெளிவந்த "குரு" படத்திற்கு இசை அமைத்தது அவப்பெயராய் தெரியவில்லை .இந்தியாவை கேவலமாய் சித்தரித்த "SLUM DOG " படம் அவப்பெயராய் தெரியவில்லை???? தமிழ் மொழியில் வழக்காட முடியாது , அங்கே ஈழத்தமிழன் செத்துக்கொண்டு இருந்தபொழுது , நம் சாகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த பட்ட பொழுது செம்மொழி மாநாடு நடந்தது அதற்க்கு
அடித்தொண்டையில் இருந்து பாடிய ரெஹ்மான் ,அது எல்லாம் அவப்பெயராய் தெரியவில்லை . ஆனால் ஊடகங்கள் COMMEN WEALTH விளையாட்டு பற்றி வெளி வந்த செய்திகளால் வருத்தப்படுகிறார் ஆஸ்கார் நாயகன் .முதலாளிகளின் குரலுக்கு பின்னணி இசை அமைக்கும் ரெஹ்மான் அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான் ,
காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்???

7 comments:

Unknown said...

ரகுமானின் வெல்த் ரகுமானுக்கு முக்கியமாகி விட்டது

Anonymous said...

வெண்ணிற இரவு அவர்களுக்கு,
யார் பிரபலம்... அவர் என்ன செய்கிறார்... அதில் என்ன குற்றம் காணலாம்... இதுவேதான் உங்களுக்கு தொழில் என்று நினைக்கிறேன்...
ஒரு சந்தேகம்... உங்களின் வேலை மென்பொருள் பொறியாளர் என்று போட்டிருந்தீர்கள்...
நீங்கள் என்ன சாமான்ய மக்களுக்காகதான் மென்பொருள் எழுதுகிறீர்களா?
நீங்கள் எழுதும் மென்பொருளை அங்கே செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழன் பயன்படுத்திக்கொண்டிருக்கிரானா?
சமூகத்தின் பால் மிகுந்த அக்கறை உள்ளவர்போலக் காட்டிக்கொள்ளும் நீங்கள் தமிழனின் அடிநாதமான விவாசாயத்தை செய்யலாம் அல்லவா... அதை விடுத்து வெள்ளைக்காரனுக்கு அதுவும் இந்தியாவை சேரி என்று சொன்ன வெள்ளைக்காரனுக்கு ஏன் வேலை பார்க்கிறீர்கள்?

இந்த பின்னூட்டத்தைப் பதிவேற்றம் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நண்டு...

கல்வெட்டு said...

ம்ம்ம்..
ரஹ்மான் அவரது வேலையில் சிறப்பாக உள்ளார்.

அதாவது இசை அமைப்பது.

செருப்பு தைக்கும் தொழிலாளியும் கக்கூஸ் அள்ளும் தொழிலாளிகளும் அவர்கள் வேலையில் சிறப்பாகத்தான் உள்ளார்கள். இதில் ரஹ்மான் சிறப்பாக இருபது மட்டும் என்ன முக்கியத்துவமோ?

எப்படி ஒரு பேங்க் குமாஸ்தாவிற்கு நந்திகிராமில் என்ன நடக்கிறது என்பது குறித்து சொரணை இல்லையோ அதுபோலவே இவருக்கும் ..மற்றும் பல சினிமா தொழிலாளிகளுக்கும்.

கோக்கை தடை செய்தால் நான் அமெரிக்காபோய் குடிப்பேன் என்று நடிகர் சாருக்கான் சொன்னார். அதுபோல் இவர். இவர்கள் பாவம். :-((((

காசு கொடுத்தால் பாட்டுப்பாடுகிறார்கள் நடிக்கிறார்கள் அதைத்தாண்டி என்ன எதிர்பார்கிறீர்கள்?

.

புரட்சித்தலைவன் said...

A.R.Rahman got 5.5 crore for Commonwealth Games theme song

புரட்சித்தலைவன் said...

A.R.Rahman got 5.5 crore for Commonwealth Games theme song

வெண்ணிற இரவுகள்....! said...

மென் பொருள் பொறியாளர் என்பதற்கு நான் ஏற்க்கனவே எழுதி உள்ளேன்
"என் மென் பொருள் பொறியாளர் COMMNUNISM பேசக்கூடாதா " என்று ...........
விவசாயம் நன்றாய் இருந்து இருந்தால் நான் செய்துருப்பேன் .......எத்தனையோ
விவசாய குடும்பங்கள் சேர்ந்த மாணவர்கள் விவசாயத்தில் முன்னேற்றம் இல்லாததால்
அடுத்த தலைமுறை இங்கு வந்து மென்பொருள் வேலை செய்கிறார்கள் ..............
அது உணவு பிரச்சனை அவ்வளவே ..............................நீங்கள் விவசாயம் நன்றாய் இருக்கிறது என்று
சொல்லுங்கள் நான் செய்யத்தயார் ,............நீங்கள் சொல்வதை பார்த்தால் மென்பொருள் பொறியாளர்கள்
எல்லாம் நிலைமையை புரிந்து கொண்டாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது
தல .........................!!!!!!ஒரு சமூகம் இப்படி இருக்கும் பொழுது தனிமனிதனாய் போராட முடியாது ................
ஆனால் ரெஹ்மான் போல அதை நான் நியாயப்படுத்த இல்லை .................. உண்மை மென்பொருள் என்பது
கேவலமே ஆனால் எனக்கு வேறு வழி இல்லை..................!!!!ஆனால் ரெஹ்மான் வீட்டில் இதற்க்கு இசை அமைக்க
வில்லை என்றாலும் அடுப்பு எரியும் .........................!!!!! ஒரு மனிதன் தனியாய் இருந்து கத்திக்கொண்டு இருக்க முடியாது .............ஒரு சமூக மாற்றம் வந்து புரட்சி வந்து விவசாயம் நன்றாய் இருந்தால் தான் விவசாயம் செய்ய
முடியும் .......!!!எனக்கும் ஊரில் இருக்க ஆசை தான் நண்பா ......????? அதில் வேலைப்பர்க்கிறோம் என்பது
முக்கியம் அல்ல , கொள்கை என்ன ?????? சில நாட்கள் கழித்து என் அப்பா அம்மா என் மீது நம்பிக்கை கொண்ட பிறகு .........நான் வேலையை விட்டு முழுவதும் பணியில் இறங்கலாம் என்று இருக்கிறேன் ........நீங்கள் கூட
கலைஞரை பற்றி எழுதி உள்ளீர்கள் நான் வரத்தயார் நீங்கள் வரத்தயாரா ??

Hai said...

இங்கு நடப்பது பன்னாட்டு வீரர்கள் விளையாடும் கேம்ஸ் வெல்த் அல்ல. அரசியல்வாதிகளும் அரசுயர் அதிகாரிகளும் நடத்தும் கரப்சன் வெல்த் கெயின்ஸ்.(corruption wealth gains)