"மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன் " என்று இருபத்தி மூணாம் புலிகேசியில் ஒரு வசனம் வரும் , அப்படி இருக்கிறது பதிவர்கள் எந்திரன் பற்றி எழுதியவுடன் எதிர்வினை ஆற்றியது . மாற்றம் என்பது தவறா என்ன ????????ஒருவனுக்கு துன்பம் வருகிறது கோவிலுக்கு போகிறான் , துன்பம் தீர்கிறதா என்ன ???? கோவில் என்ன செய்கிறது மூளை சலவை செய்து அவன் துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்வகையில் செய்கிறது ....அதனால் கோவில் சரியா என்ன .......சரி ஒருவன் TASMAC செல்கிறான் TASAMAC அதே வேலையை செய்கிறது . அப்படி தான் எந்திரன் போன்ற படங்கள் ஏற்ப்படுத்தும் தாக்கம் மக்களை மூளை சலவை செய்வதால் ,
கடுமையாக மக்களை பாதிப்பதால் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் .சரி மக்களின் பொது புத்தி எப்படி உள்ளது NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு ............பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது . இதை புரிந்து கொள்ள தோழராய்
இருப்பது அவசியம் அல்ல , சாதாரண மனநிலையில் இருந்து யோசித்தாலே போதும் . இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது . உதாரணமாய் கொஞ்சம் உண்மையை
எழுதினால் தோழர் என்கிறார்கள் ...........தோழர் என்பது சமூகத்திற்கான வேலையை செய்பவர்கள் .........அந்த தகுதி எனக்கு வந்ததா என்பது தெரியவில்லை .. இரும்புத்திரை போன்றவர்கள் தோழர் , புரட்சி வார்த்தைகளை அவ்வளவு எளிமையாய் உபயோகம் செய்கிறார்கள் அது கொச்சையாக இல்லையா ???? எங்களை பற்றி எழுதினால் எங்களை பற்றி எழுதுங்கள் ஏன் புரட்சி தோழர் என்ற வார்த்தையை தவறாய் பிரயோகம் செய்ய வேண்டும் ....முகிலன் போன்றவர்கள் ஹிட்ஸ் பற்றி எழுதி இருந்தார்கள் . தமிளிஷ் தளத்தில் ரஜினி ,அஜித் , விஜய் படங்கள் வந்தால் தனியாய் ஒரு COLUMN ஒதுக்குவார்கள் போபால் ,ஈழ பிரச்சனைக்கு தனியாக ஒதுக்கினார்களா ????? வினவு தோழர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் ....களப்பணி செய்பவர்கள் அவர்களின் alexa ரேங்க் பாருங்கள் கேபிள் சங்கர் alexa ரேங்க் பாருங்கள் ..............எதை பற்றி எழுதும் பொழுது ஹிட்ஸ் ஆதரவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும் ............ ????நான் புலிகேசி எல்லாம் புரட்சி என்று சொல்லும் அளவில் இருந்து எல்லாம் எழுதுவதில்லை முதலில் எங்களை பக்குவபடுத்துககொள்கிறோம் , ஆனால் நீங்கள் எங்களை பார்த்து என்ன சொல்கிறீர்கள் "மாற்றங்களை விரும்பாத மாமன் " என்கிறீர்கள் .............
14 comments:
கோவிலையும், டாஸ்மாக்கையும் இணைத்து எழுதி உங்கள் மேதைமை தன்மையை காட்டிவிட்டீர்கள். நீங்கள் என்ன எழுதினாலும் ஏன் உங்கள் மீது பாய்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா?
//பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது .
மேலே கூறிய எல்லா நிகழ்வுகள் நடந்தபோதும், பெரும்பாலான பதிவர்கள் தங்கள் எதிர்ப்புகளையும், வருத்தங்களையும் பதிவு செய்தார்கள். அதே போலத்தான் எந்திரனுக்கும். ஆனால் என்னவோ மற்ற நிகழ்வுகளுக்கு இவர்கள் ஒன்றும் செய்யாதது போலவும், எந்திரனுக்காக தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியது போலவும் சொல்கிறீர்களே?
//NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு
இதற்கு என்ன செய்து விடுவார்கள்? எந்தப்பக்கம் முடிவு செய்தாலும் இரண்டுநாள் கண்டனம் சொல்லிவிட்டு அடுத்த ஆட்டத்தை பார்க்க சென்று விடுவார்கள் (என்னையும் சேர்த்துதான்) . இது வெட்டிப்பேச்சு என்று அனைவருக்கும் தெரியும். என்னவோ ஈழ பிரச்னைக்கு இலங்கை வரை சென்று போராடாத இவர்கள், இந்த பிரச்னைக்கு அடுத்த பஸ்ஸில் கிளம்பி ரண்டிவ் வீட்டு முன்னால் போராட்டம் நடத்தியது போல சொல்கிறீர்களே?
உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் யாருக்குமே பிடிக்கக்கூடாது என்று நினைப்பது உங்கள் தவறு.
\\இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது \\
காமெடியா இருக்கு உங்க பேச்சு!
என்ன தோழர்ன்ற வார்த்தைய கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும் பட்டா போட்டு கையில கொடுத்துருக்குற மாதிரி பேசுறீங்களே!
நானெல்லாம் அஞ்சாம் வகுப்பு அருஞ்சொற்பொருளில்,தோழர் என்ற வார்த்தைக்கு, நண்பர் என்ற பொருள் தான் என்று படித்துள்ளேன்.
அன்புள்ள வெண்ணிற இரவு அவர்களுக்கு,
சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர் நீங்கள்.
ஆதலின் நம் சமூகம் மேம்பட தேவையான விஷயங்களை பற்றி நிறைய எழுதுங்கள்.
ஹிட்ஸ் குறித்து கவலைப்பட நாம் ஒன்றும் விஜய், அஜித் இல்லையே.
தேவை சமூக விழிப்புணர்வு. அதற்கு நம் எழுத்துகள் பயன்படும் என்றால் அதை விட சந்தோஷம் வேறெதும் இருக்க முடியாது.
ரம்பாவின் தொடை பற்றியும், நமீதாவின் தொப்புள் பற்றியும் எழுதினால் ஹிட்ஸ் கூடும் என்பது ஊரறிந்த விஷயம்.
அப்படி செய்து நம் தரத்தை நாம் ஏன் குறைத்துக்கொள்ள வேண்டும்.
மாற்றம் தேவை... அந்த நோக்கோடு பயணிப்போம்!
குறிப்பு:
நேரமிருந்தால் என்னுடைய இந்த பதிவை படிக்கவும்.
http://nudenandu.blogspot.com/2010/08/blog-post_18.html
யாருக்குமே பிடிக்ககூடாது என்று சொல்லவில்லை பாலா ???? ஏன் பிடித்து இருக்கிறது என்பதின் மேல் உள்ள விமர்சனம் ......
//நானெல்லாம் அஞ்சாம் வகுப்பு அருஞ்சொற்பொருளில்,தோழர் என்ற வார்த்தைக்கு, நண்பர் என்ற பொருள் தான் என்று படித்துள்ளேன்.//
நான் கூடத்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று படித்தேன் .ஆனால் இன்று போபாலில் நடந்திருக்கும் விட வாயுவிற்கு
கிடைத்த தீர்ப்பு , நாம் சுதந்திர நாடா என்ன ?????
எனக்கு தெரிந்து எங்கள் அலுவலில் , வெளிப்புறங்களில் ஈழம் பற்றி பேசியதை
விட ரன்திவ் பற்றி பேசியது அதிகம் . ஏன் நம் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள்
ஈழம் பற்றி சொன்னார்களா ??? என்ன என்ன நண்பரே நான் பதிவர்களை மட்டும் குறை சொல்லவில்லை
அவர்கள் ஒரு அளவு தெரிந்து வைத்து இருக்கிறார்கள் பொது புத்தி என்ன ...... அப்படி பொது புத்தி அப்படி
இருக்கும் பொழுது விமர்சனம் தேவை தானே ................. சரி இந்திய ஊடகங்கள் கிரிக்கெட் ஆதரவு தெரிவப்பதை
நான் நூறு நாளேடுகள் காட்ட முடியும் ஈழ பிரச்னையை எந்த ஊடகம் காட்டியது என்பதற்கு ஆதாரங்கள் தேவை பாலா ????
அப்போ,தோழர்ஸ்ன்னா கம்யூனிஸ்ட்ஸ்தான்னு சொல்றீங்க! இல்லையா..?
ஐயா
புரட்சி என்றால் என்ன ?
கமெண்ட் moderation ஆ ? ரைட் விடு
மாற்றம் என்பது தவறில்லை . ஆனால் மாறாத மாற்றம் என்பது தவறு !
அது என்ன மாறாத மாற்றம் .....நான் மாற்றம் அடைவது என்னால் உணர முடிகிறதே
can use different format for ur postings
...........
??????????
these things doesnt look the material presentable
நண்பரே.. எந்திரன் படம் பற்றி எழுதியது தவறில்லை . ஆனால் டௌ கெமிக்கல் போராட்டம் குறித்து, நோகியா உதிரிபாக போராட்டம் குறித்தெல்லாம் எழுதாமல் , எந்திரன் படத்தின் கதை சரியில்லை என பதிவிடுவது, இயக்கத்துக்கு பலனளிக்காது. இருங்காட்டு நச்சு வாயு ஆலை போராட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டது பதிவுலகத்துக்கே இழுக்கு. டௌ கெமிக்கல் போராட்டம் குறித்து ஒரு நாள் முன் நீங்கள் பதிவிட்டது எனக்கு வருத்தம்தான் .
கிருபா,Nigeria
RAJINI IS GREAT, DONT WRITE WRONGLY OUR SUPER STAR
Post a Comment