Thursday, 26 August 2010

மொக்கை

பாரதியின் பார்ப்பனீயம்
பற்றி எழுதினேன் மொக்கை என்றார்கள் .
உமாசங்கர் பற்றி
எழுதினேன் மொக்கை என்றார்கள் ...
போபால் பற்றி
அதுவும் மொக்கை .............!!!
கருத்துக்கள் தவறா
வடிவங்கள் தவறா .........!!!!
கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம்
வடிவங்கள் தவறு என்றால் ...
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும்
சுரண்டல் பற்றி எழுதினேன்
மொக்கை
சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........
எது மொக்கை ?????

10 comments:

சிங்கக்குட்டி said...

வீர கவியை "ஜாதி" கண்ணாடி கொண்டு பார்த்தது :-).

புரட்சித்தலைவன் said...

சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........
எது மொக்கை ????? //////
those who are reading your post

Robin said...

//சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........//
எதற்கு இத்தனை நிறுத்தல் குறிகள். ஓன்று போதுமே.

உண்மைத்தமிழன் said...

சொல்பவர்களெல்லாம் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளும் அற்பபுத்திக்காரர்கள்..!

நீங்கள் ஏன் அதைப் பற்றி இத்தனை பீல் செய்கிறீர்கள்..?

அவரவர்க்கு வருவதுதான் வரும்.. அவர்கள் எழுதியதைப் படிக்கவே 5 பேர் இருக்கும்போது நீங்கள் எழுதியதைப் படிக்க 10 பேராவது இருப்பார்கள்..!

ரிலாக்ஸ்..!

Madumitha said...

நீங்கள் எழுதியவை எல்லாம்
மொக்கை என்று சொல்வது
அற்பத்தனம்.
ஆனால் எல்லா விஷயங்களையும்
ஒற்றை பரிமாணத்தில்
பார்ப்பது மட்டுமே
விமர்சனத்துக்குரியது.

Robin said...

//ஆனால் எல்லா விஷயங்களையும்
ஒற்றை பரிமாணத்தில்
பார்ப்பது மட்டுமே
விமர்சனத்துக்குரியது.//

இதுவேதான் என் கருத்தும். ஏன் எல்லா சம்பங்களையும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் என்ற வட்டத்திற்குள்ளேயே அடைக்கிறீர்கள்.

அவ்வப்போது இந்த வட்டத்தை விட்டு வெளியில் வந்தும் சிந்தித்துப் பாருங்கள்.

வால்பையன் said...

எப்போதும் சீரியஸாவே இருக்காதிங்க தல! அதான் பிரச்சனை

வால்பையன் said...

எப்போதும் சீரியஸாவே இருக்காதிங்க தல! அதான் பிரச்சனை

ரதியழகன் said...

நீங்கள் ஒன்றை முடிவு செய்துவிட்டு எங்களை விவாதத்திற்கு கூப்பிடுகின்றிர்.

விவாதம் என்பது தெளிவு பெறுதல் என்ற நோக்கத்தில் நடைபெற வேண்டும். நாம் அப்படியல்ல, நம்முடைய கருத்தையே வெற்றி பெற செய்ய வேண்டும். இதனால் தான் சில நேரங்களில் நம்முடைய விவாதம் மொக்கையாக முடிகிறது.

நான் முந்தைய விவாதத்தில் கூறியது நினைவு உள்ளதா...
நான் உங்களை புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களை மிகவும் ரசிப்பவன் நான். அதனால்தான் உங்களுடைய ரசிப்பு தன்மை மிகவும் குறுகிய வட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பது எனக்கு பிடிக்கவில்லை.

உங்கள் பதிவின் விவாதத்தினால் நீங்கள் எந்த விஷயத்தை தெரிந்து கொண்டிர்கள், எந்த விஷயத்தில் தெளிவு பெற்றிர்கள்...

கூறுங்கள்...

pichaikaaran said...

சக்கையான பதிவை மொக்கை என்றுதான் சொல்லுவார்கள்
***************************

உங்கல் லட்சியம் தவறல்ல.. கொள்கையும் தவறல்ல..

கருத்தும் தவறல்ல.. வடிவமும் தவறல்ல..

ஆனால்....

குடல் கருகி சாகும் மக்களை பேசாமல்,

படம் சரியில்லை என , பாடல் தீட்டுவதும்,

கஞ்சிக்கு வழியில்லாமல் கருகுவோரை விட்டு விட்டு,

கவிதை சரியில்லை , காவியம் தீட்டுவதும்,

சாதனை வீரனாம் உமா சங்கரை ,

சாதி வட்டத்துக்குள் அடைக்க பார்ப்பதும்,

போபால் போராட்டத்தை , போர் குணத்துடன் பதிவிடாமல்,

போனால் போகுது என , கடைசி நேரத்தில் எழுதியதும்,

இருங்காட்டு கோட்டை ஆலை விபத்தை ,

இருட்டடிப்பு செய்ததும்,

பதிவர் என்ற முறையில் தவறு அல்ல..
ஆனால், கம்யுனிஸ்ட் என்ற முறையில் தவறு...

சாரத்தை விட்டு விட்டு விட்டு ,
சக்கையை பேசும் பதிவை
மொக்கை என சொன்னது யார் என சொல்லுங்கள்..
அவரை பாராட்ட விரும்புகிறேன் ...