Sunday 22 January 2012

நண்பன் - லக்கி லுக்கிற்கு ஒரு எதிர்வினை

"படம் பார்த்த சில நண்பர்கள் இப்படம் மிக மோசமான அரசியலை முன்வைப்பதாக சொல்கிறார்கள். ஏனோ எனக்கு அப்படி எதுவும் உறுத்தவில்லை. அல்லது அம்மாதிரி அரசியல் பார்வையோடு படம் பார்க்கத் தெரியவில்லை. மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது. ஜீவாவின் குடும்பப் பின்னணியை காட்டும் காட்சிகளில் ஏழ்மையை கேலி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. போதுமான இரக்கம் கோரவில்லை என்பதைத் தவிர்த்து இதில் வேறு பிரச்சினை இருப்பதாக தோன்றவில்லை. ஏழ்மையை யதார்த்தமாக காட்டுவதாக சொல்லிக் கொள்ளும் சில படைப்புகள் மோசமான கருத்தியல் வன்முறையை உருவாக்கவல்லவை. கல்விமுறை மாறவேண்டும் என்கிற படத்தின் அடிநாதத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்." இது நண்பர் லக்கி லுக் எழுதிய நண்பன் பற்றிய பதிவில் பதியப்பட்டவை.கல்விமுறை மாறவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது உண்மை தான். ஆனால் இன்றைய
கல்வி முறை எப்படி உள்ளது.புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள்,பன்னாட்டு முதலாளிகளுக்கான இயந்திரங்களை
(மனிதர்களை) குறைந்த விலையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.அதாவது ஒரு மாணவன் நன்றாக படித்து இருந்தாலும்
பொறியியல் கல்லூரியில் ஒரு செமஸ்டர் பீஸ் குறைந்தது 32000 ரூபாய்.சென்னையில் சில கல்லூரிகளில் வீடு சென்னையில் இருந்தாலுமே
லஞ்ச் அங்கே தான் சாப்பிட வேண்டும். அப்புறம் பஸ் பீஸ் இப்படி அனைத்து பீசுகளையும் கொடுத்து, தன் உழைப்பு சொந்த செலவு,
அறிவு அனைத்தையும் அடமானம் வைக்கும் இடம் பன்னாட்டு நிறுவனங்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் தனக்கு தேவையான கட்டிடம் இயந்திரங்கள் இவற்றை காசு கொடுத்து வாங்குகின்றன. ஆனால் HUMAN RESOURCE எனப்படும் மனித உழைப்பை அவன் சொந்த செலவை வைத்தே வாங்குகின்றன. புற்றீசல் போல பொறியியல் கல்லூரி பெருகுவதற்கு யார் காரணம் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தாலே புலப்படும்.
பொறியியலை சந்தையாக உருவாக்கி, அதிக மாணவர்களை உருவாக்குகிறது முதலாளித்துவம். அதவாது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மூன்றே மூன்று வேலைக்கு ஆயிரத்து ஐநூறு பேர் போட்டி போட்டால் என்ன ஆகும்,
ஒருவன் மிகத் திறமையானவனாய் இருந்தாலும் அவனால் சம்பளத்தை அதிகமாய் கேட்க முடியாது. அந்த வேலைக்கான சம்பளம் முப்பதாயிரமாய் இருக்கும் பட்சத்தில், பத்தாயிரம் தான் கொடுப்பேன் என்றால் இவன் ஒத்துக்கொள்ளவே செய்ய வேண்டும்,இவன் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இவனுக்கு பின்பு ஒருவன் இருக்கிறான். ஆனால் வேலைக்கு ஆள்
எடுக்கும் அந்த நிறுவனத்தை பாருங்கள், அவர்கட்கு லாப விகிதம் அதிகமே. இப்படி வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள் ஒரு BPO நிறுவனத்தில் வேலை செய்வது வாடிக்கை வயிற்றின் தேவை கருதி.பன்னாட்டு முதலாளிக்கு இலவச நட் போல்ட் ஆவதற்கு புரிந்து படித்தால் என்ன புரியாமல் படித்தால் என்ன?மேலும் தனக்கு தேவையான துறையை யாரால் தேர்ந்தெடுக்க முடியும், நாட்டில் எண்பது சதவிகித மக்கள் தினம் இருபது ருபாய் சம்பாதிக்கும் தேசத்தில்(இங்கு தமிழ் நாடு முன்னேறிய மாநிலம்), ஒரு சிறுவன் விரும்பும் பட்சத்தில் அவனால் CORPERATION பள்ளிக்கு கூட செல்ல முடியாது, இப்படி உருவாகும் சிறுவர்களே சுண்டல் விற்பவர்கள் ,சூ துடைப்பவர்கள். இரண்டாவது அப்பா அம்மா படிக்கவில்லை, ஆனால் ஒரு மாணவன் DAV போன்ற பள்ளியில் படிக்க ஆசை படுகிறான் பணம் இருக்கிறது, அவ்வாசை கூட நிறைவேறாது சூழல் இங்கு இருக்கிறது. படிப்பு என்பது பணம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து, சாதி சார்ந்து இருக்கிறது. இப்படி இருக்கும் தேசத்தில் விருப்பதிற்க்காய் யார் படிக்க முடியும், சாதியால் வர்க்கத்தால் பாரிய அளவில் உயர்ந்தவர்களே அத்தகைய விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க முடியும். ஜீவாவின் குடும்ப பின்னணியை காட்டும் பொழுது மேல் தட்டு வர்க்கம் பல் இலிக்கவில்லையா. உழைக்கும் மக்கள் உழைப்பாதால் அழுக்காய் தான் இருப்பார்கள். வெயிலில் உழைக்கும் முகம் வெள்ளையாய் இருக்க முடியுமா. அதுவும் பெண்கள் என்றாலே பொருள், அப்பொருள் கருப்பாய் இருப்பதால் அழகாய் இல்லை, அதனால் ஸ்ரீகாந்திற்கு வாந்தி வருகிறது.இப்படி மனித சமூகத்தை யாரால் இழிவாய் காட்ட முடியும். மேலும் பன்னீர் தலித்தின் குறியீடு என்று சொல்கிறார் யுவா,படத்தில் PRESSURE தாங்காமல் தான் பன்னீர் கொல்லப்படுவார்,தலித் என்ற ஒடுக்குமுறையால் அல்ல. அவர் சொன்ன உயிர்மை கட்டுரையில் கல்லூரி வளாகத்தில் சகமாணவர்கள் தலித் என்பதாய் கொடுமை படுத்தியதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பதியப்பட்டிருக்கும்,
படத்தில் அவ்வாரா பதியப்பட்டு இருக்கிறது நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். இங்கே சக மாணாவர்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாய் தான் இருப்பார்கள். ஸ்ரீகாந்த் அவர்கட்கு கூட இதே PRESSURE இருக்கும் , ஆனால் கம்மியாய் இருக்கும் , இங்கு இதை தலித்து என்று எப்படி நிறுவ முடியும்.
இது எல்லாம் உங்கள் கண்ணில் பட்டிருக்க தான் செய்யும், விமர்சனத்தை கதையில் இருந்து பார்க்காமல் இலியான இடுப்பு என்னும் சதையில் இருந்து பார்க்காதீர்கள் யுவா.

UYIRMAI ABOUT DALITHS
NANBAN YUVA
YUVA ABOUT SOCIALISM

Thursday 12 January 2012

ட்ரெயின் டூ பாகிஸ்தான்

1956 இல் நாவலாக வெளியாகி 1998 இல் திரைப்படமாகவும் வந்த இப்படைப்பு பிரிவினைக் கால இந்தியாவின் துயரங்களுக்கு மத்தியில் கடந்து போகிறது. குஷ்வந்த் சிங் இன் இந்த நாவல் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது தனித்தன்மையால் படிப்பவர்களின் இதயத்திற்கு அருகில் நின்று கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் மாபெரும் துயரமும் பல பத்து லட்சம் மக்களை அகதிகளாகவும் மாற்றி, பல்லாயிரக்கணக்கில் மக்களை கொலைக்களனுக்கும் அனுப்பிய மாபெரும் துயரம்தான் பிரிவினை. பிரிவினை என்ற சொல் முன்னுக்கு வந்தவுடனே கலவரம் யாரும் எதிர்பாராத வங்காளத்தின் நவகாளியில் 1946 மத்தியில் துவங்கியது. ஆனால் எல்லைப்புறத்தில் லாகூருக்கும் டெல்லிக்கும் மத்தியில் சட்லெஜ் ஆற்றுக்கு அருகில் அமைந்திருந்த மனோ மஜ்ரா என்ற சிறு கிராமமோ அமைதியின் வாயிலில் தூங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிய, முசுலீம் மக்களுக்கு மத்தியில் ஒரே இந்துவாகவும், 80 குடும்பம் உள்ள அக்கிராமத்தின் பணக்காரருமான ராம்லால் சேட் என்ற லேவாதேவிக்காரரும் வசிக்கிறார்கள்.
ஹூகும் சந்த் என்ற உயர் காவல் துறை அதிகாரி அந்த ஊருக்கு அருகில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தனது போக்கை மதுவுடனும், தன் மகளது வயதையொத்த பெண்ணுடனும் கழிக்கிறார். ஜமீன்தாரிய உயர் சாதியினைச் சேர்ந்த அவரது பதவி உயர்வுகள் எப்படி நடந்த்து என்பதை பற்றியும், பிரிட்டிஷ் இந்தியாவில் அதற்குள் இருந்த சாதிய, வர்க்க பாசங்களையும் நாவல் பல இடங்களில் சுட்டிக் கடந்து செல்கிறது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் நடக்கும் கலவரங்களை அடக்க பொறுப்பெடுக்கும் அவர்கள் எல்லா முசுலீம்களையும் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு பத்திரமாக அனுப்பி விட்டால் தமது கடமை தீர்ந்து விடும் என்ற முடிவுக்கு வந்தடைகின்றனர். அதற்காக எல்லா ஊர்களிலுமுள்ள முசுலீம்களை திரட்டி ஒரு முகாமில் இருக்க வைத்து, பகுதி பகுதியாக ரயிலில் அனுப்ப முடிவு செய்கின்றனர்.
மனொ மஜ்ராவில் ஒரு நள்ளிரவு கேட்கும் துப்பாக்கிச் சூடும் அதற்கு அடுத்த நாள் அங்கு அனுப்ப படும் ராணுவ வீரர்களாலும் மனொ மஜ்ராவின் ஒற்றுமை குலைகிறது. ராம்லால் சேட்டை கொள்ளையிட்ட பின் கொலை செய்த மல்லி என்ற அடுத்த ஊர் கொள்ளையனின் துப்பாக்கிச் சத்தம்தான் அது. உள்ளூர் கொள்ளையன் ஜக்கா சிங் அந்நள்ளிரவில் சட்லெஜ் ஆற்றங்கரையில் தனது முசுலீம் காதலி நூரன் உடன் தனித்து இருக்கிறான். திருந்தி வாழும் அவனை கோழை என்று கேலி செய்யும் பொருட்டு அவனது வீட்டுக்குள் வளையல்களை வீசிச் செல்கிறான் மல்லி. இதனை பார்த்த பிறகும் காதலின் வெற்றிக்காக பொறுமை காக்கும் ஜக்கா மீதுதான் ஊரின் கவனம் திரும்புகிறது. அவனது தந்தையும் திருடி தூக்கிலிடப்பட்டவர் என்பதால் காவல்துறையும் அவனைக் கைது செய்கிறது. அதற்கு உத்தரவிடும் ஹூகும் சிங் கூடவே அந்த ஊருக்கு வரும் காங்கிரசு சோசலிஸ்டான இக்பால் சிங் ஐயும் கைது செய்யுமாறு உத்தரவிட்டு மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஊர் இரண்டுபடுகிறது. மல்லி கோஷ்டியினர் கிடைத்த இடங்களில் எல்லாம் வெளியேறும் முசுலீம்களின் சொத்துக்களை சூறையாடுகின்றனர்.
சிறைப்படும் இக்பால் சிங் ஐ ஒரு நடுத்தர வர்க்கத்தினன் என்பதற்காக மரியாதையுடன் நடத்தும் காவல்துறையினர் ஜக்காவை அடித்து துவைக்கின்றனர். ஊரை இரண்டாக்க மல்லி கோஷ்டியை விடுதலை செய்ய உத்தரவிடும் காவல்துறை கடைசியில் இக்பால் சிங் முசுலீமா அல்லது சீக்கியனா என்ற பெயர்க் குழப்பத்தில் இருக்கவே விடுதலை செய்கின்றனர்.
இதற்கிடையில் ஊரிலிருந்த நூரன் தனது கண் தெரியாத வாப்பாவுடன் ஊரை விட்டு வெளியேறுகிறாள். பிரிய மனமில்லாத மனோ மஜ்ராவும் அவளது காதலன் ஜக்காவும் அவளை துயருர செய்கிறார்கள். வெளியேறும் முன்னர் ஜக்காவின் தாயை சந்தித்து தனது மூன்று மாத கர்ப்பத்தையும், ஜக்காவுடனான காதலையும் சொல்லி தன்னை தேடி வரும்படி ஜக்காவிடம் சொல்லச் சொல்கிறாள். விடுதலையாகி வரும் ஜக்கா அவளைத் தேடிச் செல்கிறான். சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட கட்சியால் பணிக்கப்பட்ட இக்பாலும் மனோ மஜ்ராவுக்கு வருகிறான்.
மல்லி மற்றும் சில தூண்டிவிடப்பட்ட சீக்கியர்கள் அன்று இரவு பாகிஸ்தானுக்கு போக இருக்கும் ரயிலை கவிழ்க்க சதி செய்கின்றனர். இதனை தெரிந்து கொண்டும் ஏதும் செய்ய இயலாதாவனாக இக்பால் தூங்கிப் போகிறான். அதிகாலையில் நடக்க இருக்கும் அச்சதிசெயலை அறிந்த ஜக்கா சிங் இரு மத தலைவர்களிடமும் பாவமன்னிப்பை அவனது மொழியில் கேட்டுவிட்டு தனது உயிரை ஈந்து பாகிஸ்தானை நோக்கி ரயிலை தடையில்லாமல் செல்ல வைக்கிறான். அந்த ரயிலில்தான் மனொ மஜ்ராவின் அகதிகளோடு அவனது காதலி நூரனும் அவனை எதிர்பார்த்து லாகூரை நோக்கி பயணிக்கிறாள். நடுத்தர வர்க்கத்தின் தியரிக்கும் பிராக்டிகலுக்குமான வேறுபாட்டையும் இக்பாலின் இரட்டைத் தன்மையின் வழி குஷ்வந்த் சிங் துகிலுரிக்கும் அதே வேளையில் சோசலிசம் போன்ற சொற்களை கூட கேட்டறியாத ஜக்கா ஏழைத் திருடன் அந்த ஜனங்களை நேசிப்பதன் வாயிலாக தனது உயிரை மாய்க்கிறான். \(தமிழில் தற்போதுதான் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் நாவலாக வெளிவந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் செவுளில் அறையும் நாவலின் கருவிற்காக அனைத்து மிடில் கிளாசும் படிக்க வேண்டிய நாவல் இது.)

பின் குறிப்பு :
இது நண்பர் எழுதிய புத்தக விமர்சனம்

Wednesday 11 January 2012

நண்பன் - உழைக்கும் மக்களின் பகைவன்

இன்று "நண்பன்" படம் வெளிவருகிறது.கேரளத்தில் விஜய்க்கு ரசிகர்கள், அதிகம் முல்லைப்பெரியார் பிரச்சனையால் ஐந்து மாவட்டங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொழுது கூட இந்த பிள்ளை பூச்சி வாய் தரக்கவில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்று நான் விளக்க தேவை இல்லை.கேரளத்தில் குறைந்தது நூறு திரைஅரங்கில் படம் வெளிவருகிரதாம். தனக்கு பிரச்சனை, தன் படம் ரிலீஸ் பிரச்சனை என்ற பொழுது அரசியலிலே வாய்ஸ் கொடுக்கும் நடிகர்கள், மக்களின் பணத்தில் வளர்ந்து குளிர் காயும் நடிகர்கள்,மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்றால் தெருவில் இறங்கி போராட வேண்டாம் குரல் கூட குரல் கொடுப்பதில்லை . இத்தகையவனுக்கு பால் அபிஷேகம் கட் அவுட் "என்ன கொடும சரவணன்". முன்பெல்லாம் MASS HERO படத்திற்கு முதல் நாள் செல்வதுண்டு,ரசிக மனப்பான்மையுடன் அவர்கள் அடிக்கும் விசில் சத்தம் கேட்டு பூரித்தது உண்டு,இப்பொழுது அது முட்டாள் தனம் நாம் எவ்வளவோ முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. நீங்கள் கேட்கலாம் நடிகர் , கலைஞர் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்று அதற்கு என் பதில் சமூக அக்கறை இல்லாதவன் நடிகனாக , ஏன் கலைங்கனாக இருக்கவே முடியாது? இவருக்கு போட்டி நடிகர் சமூக பிரச்சனை என்று வந்தால் "நான் நடிகன் எனக்கு அரசியல் தெரியாது " என்று ஒதுங்கிகொள்வார்.
இன்னொரு நடிகர் பனியன் ஜட்டி விளம்பரங்களுக்கு கூட வருவார்,உலக தமிழர்களின் வெற்றி என்று போஸ்டரில் கர்ஜிப்பார் , அப்படி கர்ஜித்த நேரம் அவர் படம் கேரளத்தில் ஓடிக்கொண்டிருந்தது,வாயை மூடி மௌனமே காத்தார் . கூலி விவசாயி போராடுகிறான் , கடைக்காரர்கள் ஒரு நாள் வியாபாரம் விட்டு போராடுகிறார்கள் , கோயம்பேட்டில் காய்கறி காரர்
போராடுகிறார்.ஆட்டோ ஓட்டுனர் போராடுகிறார்கள் , ஆனால் இந்த MASS HEROKKAL கோடியில் புரளும் ஹீரோக்கள் தயாரிப்பாளரின் நண்பனாய் , அவர் கேரளத்தில் எங்கு வணிகம் பாதிக்கப்படுமோ என்று ஒரு வார்த்தை கூறுவதில்லை . அதனால் இனி இவர்களை புறக்கணிக்க வேண்டும் , நான் புறக்கணிக்க போகிறேன்.

நண்பன் பற்றி படம் பார்க்காமலேயே என் ஒரு வரி விமர்சனம்
நண்பன் - பகைவன்

Monday 9 January 2012

மாட்டுக்கறி நியூஸ் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது

இன்றைய தமிழகத்தின் முக்கிய செய்தி கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையோ அல்ல முல்லைப்பெரியார் பிரச்சனையோ அல்ல மாண்புமிகு அம்மா அவர்கள் மாட்டுக்கறி தின்றதே பிரதான பிரச்சனையாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது .சட்டென்று பார்க்கும்பொழுது இது வெறும் செய்தியாக தோன்றும் , ஆனால் குடிபழக்கம் போல,விபச்சாரம் போல மாட்டுக்கறி சாப்பிடுவது இழிவு படுத்தப்பட்டுள்ளது . ஆட்டுக்கறி ,கோழிக்கறி சாப்பிடுபவர்கள் கூட
மாட்டுக்கறியை இழிவாய் பார்க்கிறார்கள் .நக்கீரனும் பார்ப்பன ஊடகம் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை.இது ஒரு செய்தி அதற்கு ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் .இந்த நக்கீரனின் பத்திரிகையை எரித்தது வெறும் பத்திரிகை எதிர்ப்பு அல்ல தலித் மக்கள் மீது காலகாலம் உள்ள எதிர்ப்பு .ஏன் பரமக்குடியில் ஆறு பேரை எரித்தபொழுது தமிழகம் தூங்கிக்கொண்டிருந்தது என்பதன் அரசியல் பத்திரிகையை எரித்த பொழுதும் ரத்தத்தின் ரத்தங்கள் உணர்ச்சி வசப்பட்டபோழுதும் புரிந்தது .

என்ன படிப்பது - புத்தக கண்காட்சி ஏதோ என்னால் முடிந்தது

இலக்கியம் என்பது நம்மை பக்குவப்படுத்துவது . மக்களுக்கான இலக்கியமே தலை சிறந்த இலக்கியம்.ஒரு புத்தகம் படித்து முடிக்கும் பொழுது, மனதளவில் ஒரு அடி உயர்ந்திருக்க வேண்டும் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆரம்பத்தில் "தபு சங்கர்" படித்ததுண்டு. அதன் பின் சுஜாதா,பின்னர் ராமகிருஷ்ணன் சாரு ஜெமோ ஜெயகாந்தன் ஆதவன் என்ற பரிணாம வளர்ச்சி பெற்ற படிப்பு,இப்பொழுது இடதுசாரி பாதையை நோக்கி வந்துள்ளது. முன்பெல்லாம் என்னடா இடதுசாரி புத்தகங்கள் புரிவதில்லை என்ற கருத்து மற்றவர்களை
போலவே எனக்கும் இருந்தது.'தாய்' நாவல் வாங்கிவிட்டு இரண்டு பக்கம் மேல் படிக்க பக்குவம் இல்லாமல் வைத்திருக்கிறேன். இப்பொழுதும் தொடர்ந்தார் போல் ஒரு ஐம்பது பக்கம் மேல் வாசிக்கக்கூடிய பக்குவம் இல்லை. நான் புத்தகக்கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கினேன்,அதை இப்பொழுது பட்டியலிடவில்லை, கண்டிப்பாய் எளிதாய் படிக்கக்கூடிய முக்கியமான புத்தகங்களை பட்டியலிடுகிறேன்.நிறைய படித்தவர்களுக்கு இப்புத்தகங்கள் பயன் இல்லாததாய் இருக்கலாம் .நான் பட்டியலிடுவது என்னைப்போலவே மிகக்குறைந்த படிக்கும் அனுபவம் உள்ளவர்க்கட்கு ,சமூக மாற்றத்தை விரும்பி அதற்கு புத்தகங்களில் விடை
கிடைக்குமா என்று தேடுபவர்கட்கு இப்பட்டியல்.

மக்சிம் கார்கி 'தாய்' நாவல் ,மக்கள் போராட்டம் பற்றி ,போராடும் இளைஞன் அவனுடைய தாய் பற்றிய உறவை பற்றி.அந்த தாய் அவ்வரசியலை ஏற்று கொண்டு மக்களுக்கு வேலை செய்வதை பற்றி.

"ஏழு தலைமுறைகள்" உலகை உலுக்கிய கறுப்பர் வரலாறு பற்றி சித்தரிக்கும் நாவல்.

சோளகர் தொட்டி

சீன வானில் சிவப்பு நட்சத்திரம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நினைவுகள் அழிவதில்லை - இது காதல் நாவல் அல்ல கையூர் தோழர்களை பற்றிய நாவல்

புதியதோர் உலகம்

மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - கண்டிப்பாய் படிக்க வேண்டியது

மார்க்சிய மெய்ஞானம் ------ பொலிட்சர் கண்டிப்பாய் படிக்க வேண்டியது

வரலாற்று புத்தகங்களுக்கு நா வனமாலை , கோசாமி , தேவி பிரசாத் சடோப்பாத்த்யாய புத்தகங்கள்

பெண் ஏன் அடிமையானால் - பெரியார்

நான் எவ்வாறு எழுதக்கற்றுக்கொண்டேன் - மக்சிம் கார்க்கி ------------புதிதாய் எழுதுபவர்கட்க்கு

யான் பயின்ற பல்கலைகழகம் - மக்சிம் கார்க்கி ---------புதிதாய் எழுதுபவர்கட்க்கு

சினிமா திரை விலகும் பொழுது --------------- ஒரு படத்தை அரசியல் ரீதியாய் விமர்சிப்பது எப்படி

விடுதலை போரின் வீர மரபு



இவை எல்லாமே படித்த பின்பு உணர்வுப்பூர்வமாய் , மனதளவில் ஒரு அடி முன்னாள் செல்வீர்கள் என்று நம்புகிறேன். இலக்கியத்தை தாண்டி,கவிதையை தாண்டி வெளியே நிறைய பயனுள்ள படிப்பை படிக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

இவை தவிர NCBH ரஷ்ய புத்தகங்கள் , நெடும்பயணம், நீண்ட புரட்சி போன்ற முக்கிய புத்தகங்கள்
உள்ளது ...............

இவை கிடைக்கும் இடம்

கீழை காற்று .

அலைகள்

தமிழ் புத்தகாலயம்

விடியல்

பாரதி புத்தகாலயம்


NCBH

Sunday 8 January 2012

பிரிவோம் சந்திப்போம் -சிறுகதை

வசந்தி நடக்க ஆரம்பித்தாள். எப்போதுமே இல்லாத அளவுக்கு மனதில் பாரம் அதிகரித்தது. கண்ணாடி அறைக்குள்ளிருந்து கல்லெறிந்து விட்டோமோ என்ற அச்சமும் மனதில் நிழலாடியது. சிவாவிடம் பேசியதில் தான்தான் பேசினோமா ? என்றே தெரியாத அளவுக்கு வேறுபட்ட தொனி தென்பட்டதாக கருதியபடியே நடந்த அவளது சிந்தனையை ஒரு நாயின் குரைப்பு கலைத்தது.
சிவாதான் குழம்பிப் போயிருந்தான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு ஏன் இவள் முகத்தில் விழித்தோம் என்று கூட நினைக்க ஆரம்பித்தாள். எத்தனையோ முறை சரியாக படிக்க முடியாத முகமாயிற்றே என வியந்த வசந்தியின் முகத்தில் இப்போது விழித்ததற்காக வருந்துவது அவனுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
கால ஓட்டத்தின் சக்கரங்களில் மனிதர்களும் மதிப்பீடுகளும் மாறி அமைவதை இருவரும் அவதானித்தார்களா எனத் தெரியவில்லை. ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம் சென்னை புத்தக கண்காட்சியில் இப்படித்தான் துவங்கியது.
எல்லா முன்னாள் காதலர்களைப் போலவும்தான் இவர்களையும் சாதியும் மதமும் பிரித்தது. கொஞ்சம் அந்தஸ்தும் என்பான் சிவா. சிவாவின் பிடிவாதம் என்பாள் வசந்தி. வசந்த காலத்தின் துவக்கத்தில் அரும்பும் காதலில் எத்தனை பேருக்கு காரண காரியங்களைப் பற்றி விவாதிக்க நேரமிருந்தது. சிறுநகரத்தின் காதலர்களுக்கே இருக்க கூடிய கட்டுப்பாடுகளுடன்தான் இருந்தாலும் அவர்களது கல்லூரி காதலும் வளாகத்தின் பேசு பொருளாயிற்று. பிணக்குகளுக்கு பின் ஏற்படும் நெருக்கங்களில்தான் காதலியோ காதலனோ மற்றவர்களுக்கு அழகாக தெரிய வருவார்கள். அப்படித்தான் அவர்களும் அடிக்கடி சச்சரவிட்டார்கள். அவ்வப்போது கூடிக் கொண்டார்கள்.
கல்லூரிக் காலத்தில் ஒருவேளை சேர முடியாவிட்டால் என்றெல்லாம் யோசிக்காமல் முடிவுகளை எடுத்தார்கள். பிள்ளைகளில் ஆணுக்கு என்ன பெயர் பெண்ணுக்கு என்ன பெயர் என்பது வரை வைத்து கேக் வெட்டாத குறைதான். இதில் கூட கேக் வெட்டி கிறிஸ்தவ முறைக்கு மாற்றி உன் வீட்டுப் பக்கம் பிள்ளையை கொண்டு போகிறாயா ? சர்க்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று வசந்தியிடம் சண்டை பிடிப்பான் சிவா. சிவா பொதுவாகவே கல்லூரியில் அடாவடிப் பேர்வழி என்பதால் சிரித்தே மழுப்பி விட்டு கண்ணால் பேசத் துவங்குவாள் வசந்தி. பிறகென்ன அடாவடித்தனம்.?! எல்லாம் அம்புட்டுத்தான் என்றபடி மகுடிக்கு ஆடும் பாம்பாகி மடிவான் சிவா.
கல்லூரி முடித்த இரண்டாண்டுகளில் வசந்திக்கு வசதியான இடத்தில் திருமணமானது. எப்போதுமே இளந்தாடியுடன் வலம்வரும் சிவா எப்போது ஷேவ் பண்ணிய முகத்துடன் தன் துக்கத்தை கொண்டாட துவங்கினான். திருமணத்திற்கு போன இடத்தில் சிவா திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல வர்க்கத்தில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என்றெல்லாம் எழதிதான் வயிறெரிய வாழ்த்தினான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சுக்கு போகின்ற வழியொன்றில் இருவரும் சந்திப்பார்கள் என அந்த மனுஷகுமாரனுக்காவது தெரிந்திருக்குமா எனத் தெரியாது. இருவரது முகம், பழக்கவழக்கம், பண்பாடு என எல்லாமுமே மாறினாலும் தெரிந்தவர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதா என்ன ? அதுவும் காதலர்களாகிப் போன பின்னர்.
---
..நீங்க சிவா தானே..
..நீங்க ..
..வசந்தி..
..ஏய்.. ஹய்யோ.. எப்படிமா இருக்க ?..
கேட்டிருக்க கூடாதோ எனத் தோன்றுமளவுக்கு வசந்தியிடம் நீண்ட மவுனமும், கடைசியில் கொஞ்சம் கண்ணீரும்.
..ஏய் இதெல்லாம் உள்ள பாவமன்னிப்பு கேக்கும்போது பண்ணனும் புரிதா.. என வழக்கமான பாணியில் சிவா கலாய்க்கவே தேம்பல் அதிகமானது.
..சிவா .. உனக்கு திருமணம் ஆயிட்டதா..
சிவா மவுனமானான். இப்போது தனது முதிர்ந்த கண்களால் வசந்தி பேசத் துவங்கினாள். ஆனால் சிவா மடியவில்லை. கண்ணீர் எட்டிப் பார்த்த கண்களுடன் மடை திறந்தான்.
..சர்ச்சுக்குள்ள போலாமா.. என்றான் சிவா.
..ம். ஆனா சொல்லு ஏன் பண்ணிக்கல.. என்றபடியே அவனுடன் சர்ச்சுக்குள் நுழைந்தாள் வசந்தி. ஆராதனை முடிந்துவிட்டதால் வீடுதிரும்பும் சிலர் இப்போது உள்ளே நுழையும் இவர்களை அதிசயமாகப் பார்த்தபடி கடந்து போயினர்.
ஓரமாகப் போய் அமர்ந்தவுடன் சிவா ஆரம்பித்தான்.
..அப்போ நான் பக்குவமடையல. இப்பவுந்தான். ஆனா அந்த புராசஸ் முடியாத காரணத்தால னு நெனைக்கேன்..
..பக்குவந்தான் நம்ம படிக்கும்போதேயிருந்து இருந்திட்டுதானே இருக்கு..
..அப்படினு நெனச்சிட்டதாலதான் என்னால பத்து வருசம் கழிச்சும் சுயமா முடிவெடுக்க முடியல..
..கல்யாணம் பண்ணான சாமியாரா ஆயிடலாம் னு பாக்குறயா..
..என்ன வசந்தி.. கிண்டல் பண்ணாத..
..பின்ன என்ன.. தப்பிக்கிறதுக்காக என்ன நெனைக்கிறதா கத சொல்லிட்டு திரியிறியா?..
சிவாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. உண்மைதானே அது. கதை என்று வேறு சொல்கிறாளே!
சிவா கண்களைத் துடைத்தபடியே
..சரி. அத விடு .. உன் வீட்டுக்கார்ரு உன்ன எப்படி பாத்துக்கிர்றாரு?..
..அவரு எங்க பாக்குறது. வீடாம் வீடு. வருசத்துல ரெண்டு மாசம்தான் சந்திச்சுக்குறோம். கடல் வாழ்க்க அவருக்கு போரடிக்கல போல..
..உனக்கென்னப்பா வசதியான ஆளு..
சிவா சொன்னதுதான் தாமதம்.. வசந்தியின் கண்களில் ஆறு பெருக்கெடுக்கத் துவங்கியது. வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவர் இருவரது அழுகையையும் பார்த்தபடியே வந்து தலையில் கைவைத்து பாவமன்னிப்பு வழங்கத் துவங்கினார். அவர் போகும் வரை காத்திருந்த வசந்தி
..இக்கரைக்கு அக்கரை பச்சை சிவா.. அவரு உன்ன விட ஜாஸ்தி குடிக்காரு. இதில என் மேல சந்தேகம் வேற.. என்றாள்.
சிவாவுக்கு தன்னைப் போலவே அவளும் துன்பப்படுவதை சகிக்கவில்லை. அதே நேரத்தில் தனது துன்பத்தை வெளிக்காட்டவும் கூடாது என்ற வீராப்பும் வேறு அப்போது சேர்ந்து கொண்டது.
..என் கல்யாணத்த கேட்ட.. உன் கல்யாணமே சோகமா இருக்கு. இந்த லச்சணத்துல என்ன வேற கல்யாணம் பண்ண சொல்ற..
..எல்லாருக்கும் ஒரே மாதிரி ஆகாது .. சிலரோட தலையெழுத்து.. என்றபடியே நாக்கை கடித்தாள் வசந்தி. உள்ளுக்குள் சிரித்தபடி சிவா பேச ஆரம்பித்தான்.
..நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லல. ஆனா நான் ஏத்துக்கொண்ட சமூக கடமைகள் முன்னாடியே நாம பேசினத விட நெறைய இருக்கு. அதுக்கு கூட ஒண்ணா வச்சுதான் இத நான் பரிசீலிப்பேன்..
..ஏன் உன் சமூக கடமய கலியாணம் பாதிச்சிருமா ? அதாவது நாங்கதான் ஆண்கள சமூக கடமல இருந்து திச திருப்புறோம். அதத்தானே சொல்ல வர்றே..
வசந்தி இயல்பாக திருப்பினாள். சிவாவுக்கு சுருக்கென்றது. கல்லூரிக் காலத்தில் தான் பேசிய எல்லாவற்றையுமே அரசியல் என்று புரிந்து கொண்ட பேதையல்ல இப்பெண். சொந்த அனுபவத்தில் வளர்ந்திருக்கிறாள் என்பதையும் அப்போதுதான் அவதானிக்கத் துவங்கியிருந்தான் அந்த சமூக கடமையாளன்.
..அம்மாவிடம்.. அதாம்பா என் அத்தைட்ட பேசினாயா ? ..எனக் கிண்டலாக கேட்டாள் வசந்தி.
..இல்ல..
..ஏன் ? அம்மாவோட பாசம் கூட காதல் மாதிரி சமூக கடமய தடுத்திடும்னு பயப்பிடுறியா ?.. என சரமாரியாக கேள்விகளை அடுக்கத் துவங்கினாள்.
..பயம் உன்ன சுத்தி இருக்குது சிவா. நானும் பயப்படத்தான் செய்றேன். எங்கே உன்னப் பாத்தவுடன கடந்த காலத்துக்குள்ள போயி விழுந்திருவேனோனு பட்டுச்சு. அது ஒரு கண நேரந்தான். ஆனா அதையே பத்து வருசமா மூளைல சொமந்து திரியல. அப்பா போன அப்புறம் அம்மா அக்கா வீட்டோட போன அப்புறம் அவரும் கடலுக்கு போயிட்டாரு. எனக்குன்னு வீடு இல்ல. மனுஷ குமாரனுக்கு தலை சாய்க்க இடமில்ல ங்குறப்ப நான் என்ன பெரிசா கிழிச்சிட்டேன்னு சொல்லி சொந்த இடம் கேக்குறது ? எதார்த்தம் எதுவோ அத ஏத்துக்கிட்டு அத எதிர்த்து நீச்சல் போட ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நீஞ்ச கத்துத் தந்த நீ கரைலயே நின்னுட்ட.. என்றாள்.
..இல்ல வசந்தி .. நானும் எதார்த்தத்த மீறி இல்லியே. அம்மாட்ட அவளோட பிற்போக்கான விசயம் பிடிக்காமத்தான் பேசாம இருக்கேன்..
..ஓ.. இப்போ இது வேறயா ? சரி தெரியாமத்தான் கேக்குறேன். எத்தனவாட்டி நீ ஒன்னோட சமூக வேலையோட அவசியம் பத்தி அத்தைட்ட பேசின. அவங்க அதுக்கு மொகம் சுளிச்சாங்க. ? பின்னாடி பொறந்த ஒவ்வொருத்தருக்கும் சரின்னு படுறத அவங்க சொல்லாமலே முன்னாடி பொறந்தவங்க புரிஞ்சு நடக்க வாழ்க்க ஒன்னும் ஜோசியம் இல்லியே சிவா..
சிவாவுக்கு பொறாமையாக இருந்தது. தனது அரசியலறிவிலோ அறிவியலறிவிலோ பத்து சதவீதம் கூட தேறாதவள்தான் தனது முன்னாள் காதலி என்ற அவனது நினைப்பில் மண் விழத் துவங்கியிருந்தது. இல்லை காற்றேதான் மாறி அடிக்கத் துவங்கியிருந்தது.
விரைவில் திருமணம் செய்ய வேண்டும் சிவா என்றும், அதற்கு தானே முன்னின்று பெண் பார்ப்பதாகவும், அதில் எந்த வர்க்கம் வேண்டும் என்று கிண்டலாகவும் கேட்டு வைத்தாள் வசந்தி.
வசந்தியின் கண்கள் அவ்வப்போது குளமாகியது. அது தனக்காகத்தான் என்று நெக்குருகிப் போனான் சிவா. பாலைவனச் சோலையாக மெரினாவின் சாந்தோம் சர்ச் அன்று சிவாவுக்கு தோன்றியது. மதிய நேரம் நெருங்கியதால் சர்ச் ஐ மூட சாவியுடன் பணியாள் ஒருவர் வந்து இவர்களுக்காக காத்திருந்தார். வெளியே வந்த இருவரும் அருகிலுள்ள ஜூஸ் கடைக்கு சென்றதோ அல்லது வசந்தியை அருகிலுள்ள மயிலை மின்ரயில் நிலையத்தில் வீட்டுக்கு சிவா ஏற்றி விட்டதோ கதை வரம்புக்கு அவசியமில்லாததால் எதுவும் சொல்லாமல் நாமும் கடந்து போகலாம்.
ரயிலின் எதிர்காற்றில் உலரும் கண்ணீரை மீறி வசந்தியின் கண்ணீர் பீறிட்டெழுகிறது. கடைசிவரை சிவாவிடம் மறைத்த தனது டிவோர்ஸ் கதையை மனதில் அழுத்த முடியாமல் அழுத்தியபடியே அழுது தொலைத்தபடி பயணிக்கிறாள். சில ஆயிரம் மைல்களுக்கப்பால் பலான பெண்களுடன் பவனி வரும் அவளது சட்டப்பூர்வ கணவன் வசந்தியின் நடத்தையை சந்தேகப்பட்டுதான் மணவிலக்கு கோரியிருந்தான். அடுத்த வாரம் திங்கள் கிழமை சென்னை நீதிமன்றமொன்றால் அவர்கள் பிரிக்கப்பட இருக்கிறாள். இன்னுமொரு ஞாயிறு இடையில் இருக்கிறது. சிவாவிடம் இதை மறைத்த பாவத்திற்காக அடுத்த ஞாயிறன்று முக்காடிட்ட வசந்தி பாவமன்னிப்பு கோருவாள். பாதிரியும் தண்ணீர் தெளித்து அனைத்தையும் சுத்தமாக்குவார்.
சிவா அடுத்த ஞாயிறும் அங்கு வருவான் என்பதை இப்போதாவது மனுஷகுமாரன் வசந்திக்கு சூசகமாகவாவது தெரிவிக்கலாம் இல்லையா?

பின்குறிப்பு:
இது நண்பர் எழுதிய கதை அவருக்கு வலைப்பூ இல்லாததால் பதிவு செய்கிறேன்

Thursday 5 January 2012

அன்னாவின் தம்பி வடை பஜ்ஜிக்கு ஒரு எதிர்வினை

"ரலேகன் சித்தியில் அன்னா ஹசாரே ஒரு ஊர் நாட்டமை"

"2006 மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த நேரம் அதைப் பெரிதும் எதிர்த்தவர்கள் AIIMS மருத்துவ மாணவர்கள்தான். அன்னா ஹசாரே போராட்டத்திற்கு முன் அதுபோல் பெரிய மீடியா வெளிச்சத்துடன் நடந்த போராட்டம் இதுவே. இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் தலித் பழங்குடி மாணவர்கள் மீதான நெருக்கடிகள் தீவிரமடைந்தன. இந்தப் போராட்டத்தின்போது நாட்டின் மிகப் பெரும் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலும் முடக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாணவர்களின் பின்னணியில் முழு நிர்வாகமும் செயல்பட்டது. இந்தப் போராட்டத்தை மாணவர்கள் அமைப்பான youth for equalityதான் நடத்தியது. அங்கிருந்த பூங்காவில் ஷாமியானா அமைப்பது முதல் மின்சாரம், மெத்தை விரிப்புகள் என சகல ஏற்பாடுகளையும் நிர்வாகமே செய்து கொடுத்தது. இந்த youth for equality அமைப்புதான் இன்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் முன்னணியில் இருந்தது. இவர்கள் தலித்துகளை நடத்துவதற்கும் அன்னா ஹசாரே ரலேகான்சித்தியில் தலித்துகளை நடத்துவதற்கும் இருக்கும் ஒற்றுமை இங்கு குறிப்பிடத்தக்கது."

"ஊழலை தனியார்மயம் , உலகமயம் என்று பார்க்காமல் வெறும் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தை மட்டும் சொல்லும் அன்னா ஹசாரே" என்று பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும்
காலகட்டத்தில் அண்ணாவின்(அன்னா) தம்பி நண்பர் வட பஜ்ஜி எழுதிய பதிவு கொஞ்சம் வருத்தத்தை மட்டுமே வரவழைத்தது.



"2011 ஆம் ஆண்டு போராட்டங்களுக்கான ஆண்டு. உலக அளவில் பல அரசுகளை ஆட்டம் காணச் செய்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவும் இதற்க்கு விதி விலக்கல்ல. அவற்றுள் அன்னா ஹஸாரே நடாத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது."


நண்பரே அது முக்கியத்துவம் வாய்ந்ததே யாருக்கு முக்கியம்துவம் வாய்ந்தது? அலைகற்றை ஊழலை எடுத்துக்கொள்வோம் அதில் ஆதாயம் அடைந்தது அம்பானி டாட்டா.அன்னாவின் லோக்பால் எல்லை பிரதமர் வரை பாய்கிறதே தவிர தொழிலதிபர்கள் மீது பாய்வதில்லை. திருடியவனை விட்டுவிட்டு, திருட உதவிய காவலாளியை மட்டும் ஊழல் என்ற பெயரில் சொல்கிறார் அன்னா.அன்னாவின் நோக்கம் தான் என்ன திருடனை இலவசமாய் திருடவைப்பது மட்டுமே நண்பரே. நாட்டின் ஆள்பவரை அம்பானி டாட்டா முடிவு செய்யும் காலத்தில் ஊழலின் மையம் எங்கு உள்ளது?

இப்போராட்டத்தில் கூட்டம் கூட்டமாக பொது மக்களும், எதிர் கட்சிகளும், இளைஞர்கள் மற்றும் பொது நல விரும்பிகள் கலந்து கொண்டனர்.இவர்களுள் IT , BPO மற்றும் தனியார் கம்பெனிகளில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு குறுப்பிடத்தக்கது. ஈமெயில், Facebook , Twitter , Utube , SMS மற்றும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மிகப் பெரிய அளவில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முடக்கி விட்டனர்.

ஆனால் இவர்களின் நேர்மை குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்கள் வெளி வேஷம் போடும் போலிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.


நண்பருக்கு அன்னாவிற்கு SPONSER செய்பவர்கள் யார் என்பது பற்றி பிரச்சனை அல்ல. அக்குழுவில் இருக்கும் கிரண்பேடி போன்றவர்கள்செய்யும் ஊழல்களை பற்றி கவலை இல்லை .நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு "தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி". இப்படி ஒரு தலைவனுக்கு இப்படி ஒரு தொண்டனே இருப்பான் என்பது திண்ணம்.

அன்னா ஹசறேவுக்கு நியமகிரி மலையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாய் கொடுத்தல் பிரச்சனை அல்ல ஆனால்அதை காசு வாங்கிக்கொடுத்தால் வாங்காதே என்று கம்பை நீட்டிக்கொண்டு அடிக்கவருவார். தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் ஆயிரம் பேரை கொன்றாலும் ,பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதில் தயாரிக்கப்படும் மின்சாரம் உபோயோகப்படுவது பிரச்சனை அல்ல . கொடு இலவசமாய் கொடு நாம் எல்லாம் கர்ண வம்சா வழியினர் என்று அரசாங்கத்தை மிரட்டுகிறார் . நாட்டில் கூடங்குளம் பிரச்சனை , முல்லை பெரியார் பிரச்சனை , நியமகிரி பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை எதற்கும் குரல் கொடுக்க மாட்டார் , ஆனால் ஊழல் என்ற ஒத்தை வார்த்தைக்கு மட்டும் குரல்.அதிலும் டாட்டா,அம்பானி செய்தால் ஊழல் இல்ல BUSINESS ,அவர்களிடம் காசு வாங்காமல் நாட்டை ஒப்படைக்க வேண்டும் இதுதான் அன்னா தம்பிக்கு சொல்லும் தாரக மந்திரம் பெரியார் பிறந்த பூமி டெல்லியில் கிடைத்த ஆதரவு இங்கே ரஜினி மண்டபம் கொடுத்தும் கிடைக்கவில்லை என்ற வகையில் சந்தோஷமே.

IT நண்பர்கள் டேக்ஸ் கட்டுவதில்லை என்பதில் மாற்றுகருத்து இல்லை,அதற்காக அன்னா ஹசாரே உத்தமர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .

நண்பர் வடை பஜ்ஜியின் பதிவு

Wednesday 4 January 2012

மனுஷ்யபுத்ரனின் வன்மம்

முன் குறிப்பு

நண்பர் இலக்கிய ஆர்வலர்.தனக்கென்று தளம் இல்லாதவர்,சு வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு கிடைத்த விருதை பற்றி மனுஷியபுத்திரன் உயிர்மையில் எழுதி இருக்கிறார் , அதற்கு நண்பரின் விமர்சனம்.எனக்கும் அக்கருத்துக்களில் உடன்பாடு என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.

காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகையை ரூ.1 கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் ஜெயலலிதா. உயிர்மை இன் 101 வது இதழின் தலையங்கத்தை திறந்தால் சாகித்ய அகாதமிக்கு போட்டியாக அதன் பரிசுத் தொகையான ரூ.1 இலட்சத்தை இரண்டாக உயர்த்தி தமிழ் சாகித்ய அகாதமி விருதை நிறுவ அறைகூவல் விடுக்கிறார் ஹமீது என்று அறியப்படும் மனுஷ்யபுத்திரன். ஒலிம்பிக் போட்டியில் ஓடுவதற்கு தயாராகும் வீரனைப் போல இலக்கியப் பிரதியை படைப்பவனுக்கு ஊக்க மருந்து சோதனைகள் ஏதும் நடத்தப்படாது என்ற காரணத்தால் ஒலிம்பிக் உடனான ஒப்பீடு கூட தராதரமில்லாததுதான். ஆனால் என்ன செய்ய முதன் முதலாக எழுத வந்த வெங்கடேசனுக்கு விருதா ? சீனியரான மனுஷ்யபுத்ரனோ அல்லது சூப்பர் சீனியரான அசோக மித்ரன் அல்லது எஸ்ரா வகையறாவோ விருது பெறவில்லை. இவர்களுக்கெல்லாம் சூப்பர் மேனான சுந்தர ராமசாமிக்கு கேவலம் ஒரு ஞானபீட விருது கூட கிடைக்கவில்லை. நேற்று முளைத்த சின்னப் பயலுக்கெல்லாம் விருதா என அங்கலாய்க்கிறார் மனுஷ்ய புத்திரன். கூடவே விருதின் தராதரத்தை நான்கு வகையாக பிரிக்கிறார். தலைசிறந்த எழுத்தாளரின் மோசமான படைப்புக்கு அல்லது மோசமான எழுத்தாளரின் மோசமான படைப்புக்கு அல்லது பிற்காலத்தில் எழுத வாய்ப்புள்ளவர் என்றெல்லாம் கூட கொடுத்து விடுவார்கள் போலும் என்று குமுறுகிறார். இரண்டு லட்சம் ரூபாயில் விருதை ஆரம்பித்து அதை முதலில் தனக்கே கொடுத்து கூட ஆல்பர்ட் நோபல் போல மனுஷ்யபுத்திரனும் ஆரம்பித்து வைக்கலாம். சுரா விருது அவர் இறந்த பிறகுதான் வழங்கப்படுகிறது என்றால் ஏன் ஒரு புதுமைக்காக உயிருடன் இருப்பவர் பெயராலே விருது வழங்கக் கூடாது.? ஏன் இவர்களுக்கு இந்த வனமம். காவல் கோட்டம் என்ற நாவலின் உள்ளடக்கமும் அதன் தவறுகளையும் படைப்பின் சமூக பாத்திரத்திலிருந்து விமர்சனம் செய்வதற்கும், அவர்களே சொல்வது போல மரித்துப் போன படைப்பாளியின் தராதரத்திலிருந்து விமர்சிப்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது விமர்சனம் என்றால் பின்னது வன்மம்தான். காவல் கோட்டம் என்பது நாவலின் வடிவத்தில் இல்லை என்று கூட இவர்கள் விமர்சிக்கவில்லை என்பதையும் இந்த கலை கலைக்காகவே கோஷ்டியிடம் நாம் காண முடிகிறது.  தன் நாவலுக்காக பல தரவுகளைப் படித்து, சிலரை நேர்காணல் செய்து அதன் பிறகு தனக்கு உகந்த அரசியல் வழியில் நின்று படைப்பை நிறுவியுள்ளார் சு.வெங்கடேசன். அவரது பிற நூல்களை வைத்து அளவிடுவதுதான் சரி என்றால், உத்தபுரம் விசயத்தில் அவரது களப்பணியும் முக்கியமானதுதான். போலி கம்யூனிஸ்டு கட்சி யாக இருந்தாலும் அதற்கு முழுநேர ஊழியராக இருந்து வேலை செய்யும் வெங்கடேசன் போன்ற அற்ப மனிதர்கள் விருது வாங்குவது வசிஷ்டர்களின் வாயில் வசம்பைச் தடவி குரைக்கச் சொல்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியத்தை வாங்கும்படி இவர்களுக்கு மார்க்சு போதிக்கவில்லையா ? என்று கேட்கிறார் ஹமீது. எது உழைப்பு ? வருடாவருடன் நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியும், அதற்காக டிசம்பர் சீசன் கச்சேரி போல சாரு எடுத்த வாந்தியில் பத்து, எஸ்ரா ஊர் ஊராக பொறுக்கியதில் பத்து, பதிவர்கள் என்ற பெயரில் கல்லெறிந்தால் காணாமல் போகும் காகங்களுக்கு ஆளுக்கு மூன்று என்ற விகிதாச்சாரத்தில் புத்தகம் போட்டு, கனிமொழியை ஆட்சி யில் திமுக இருக்கும் வரை ஆதரித்து அதன்வழி நூலக ஆர்டரை கையில் எடுத்து ஆட்சி போன பிறகு மாத்திரமே விமர்சிக்கும் புத்தக வியாபாரியான ஹமீது காரல் மார்க்சு உழைப்புக்கேற்ப ஊதியம் பெறுவதைப் பற்றி சொன்னதைச் சொல்கிறார். பத்ரி ஆ அல்லது மனுஷ்யபுத்ரனா என்ற சந்தை ஓட்டப்பந்தயத்திலும் வெல்ல வேண்டும். பல ஆதினங்களுடன் போட்டியிட்டு சாகித்ய அகாதமி பரிசோ அல்லது ஞானபீடமோ பெற வேண்டும் என நினைக்கிறார் மனுஷ்யபுத்திரன். போதாத குறைக்கு தன்னை முற்போக்காளனாகவும் காட்ட வேண்டி இருக்கிறது. அதற்கு கிடக்கவே கிடக்கிறது போலிகளின் முகத்திரை. ஆனால் ஹமீது காவல் கோட்டத்தின் முகத்திரையை தொடவே இல்லை. அதற்கு முன் அரும்பியிருந்த நூலாம்படையை தனது சாணை தீட்டிய வாளால் வெட்டி வீழ்த்தியுள்ளார். ஜெய் ஹிந்த்.

Tuesday 3 January 2012

ஆட்டோ மீட்டரும் ஸ்கூல் பீசும்

TIDEL PARK வெளியில் நாய் பட்டை போல ID கார்டு மாட்டிக்கொண்டு வெயிலில் வெளியில் வந்தான் பாலாஜி.எந்திரங்கள் மனிதர்கள் போலவும்,மனிதர்கள் எந்திரங்கள் போலவும் இயல்பாய் நடமாடிக்கொண்டிருந்தன. காலை பீக் HOUR என்பதால் படிக்கட்டுகளில் கூட நிற்க இடமில்லாமல் , ஜன்னல்களில் தொத்திக்கொண்டு நோட்களை மாணவிகளிடம் ஜன்னல் வழியே கொடுத்துவிட்டு அலட்சியமான பார்வையுடம் தலையை கோதிக்கொண்டு ஒத்தக்கையை
பிடித்து கொண்டு நின்றனர் மாணவர்கள்.பாலாஜிக்கு பேருந்து கிடைபதாய் இல்லை ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்தினான் .இந்த இடத்திற்கு போகவேண்டும் என்று பேரம் பேசினான்.ஆட்டோக்காரன் அவனிடம் கேட்டது அவனுக்கு அதிகமாய் தோன்றியது.
"ஏன் பா இது அநியாயமா இல்ல கழுத்துல ID CARD மாட்டி இருந்த ஒரு அம்பது ரூபா கூட கேட்ப்பீங்களே" என்றான் "என்ன சார் பண்ண பெட்ரோல் விலை ஏறிக்கினே இருக்கு , ஆட்டோ வாடகை ஒரு நாளுக்கு நூற்றியம்பது சார் , அப்புறம் போலிஸ் காரங்க ஷேர் வான் காரங்க ட்ட காச வாங்கிகுனு எங்க ஸ்டாண்ட்ல கூட நிறுத்த விட மாட்டிங்க்ரங்க எங்கயும் நிக்காம இப்பெல்லாம் சவாரி இல்லை நாளும் சும்மாவே சுத்தறதா இருக்கு சார். கடைசியா எங்க கைல நிக்கறது 250 ரூபா.இதுல ரெண்டு பிள்ளைங்கள படிக்கவைக்கணும் GOVERMENT SCHOOL நிறைய ஓபன் பண்ணல , பசங்க நல்ல இங்கிலீஷ் ஸ்கூல்ல தான் படிச்சா நல்லது ரெண்டாவது பையனுக்கு LKG ல சேக்க 20000 ஆச்சு. என்ன பண்ண சார் " என்றான் . ஆட்டோ ஸ்கூல் வாசல் முன் நின்றது "முன்னாடி பேசினத விட ஒரு இருபது ரூபா கம்மியா குடுங்க சார் உங்களுக்கு மட்டும் என்ன காசு விளயுதா என்ன" என்றான், பாலாஜி புன்முறுவலுடன் காசை
எடுத்துக்கொடுத்தான் .
அப்பொழுது தான் ஸ்கூல் prayer முடிந்து அனைவரும் உள்ளே சென்றனர் , ஐந்தாவது படிக்கிறாள் பாலாஜியின் முதல் பெண் காயத்ரி. ஆபீஸ் ரூம் நோக்கி சென்றான் பதினைந்து கிலோ உள்ள குழந்தைகள் முதுகில் இருபது கிலோ சுமந்து கொண்டு செல்வது அவனுக்கு வலித்தது . ஆபீஸ் ரூமில் வேலை செய்பவன் "சார் உங்க பொண்ணு காயத்ரிக்கு அறுபதாயிரம் பீஸ் சார் " என்றான் , பாலாஜி கிரெடிட் கார்டை எடுத்தான் அவனால் இங்கே பேரம் பேச முடியவில்லை.

கொலை வெறியால் தமிழன் அடையாலப்படுத்தபடுவது வெட்க்ககேடே

டிசம்பர் கடைசி நாள் கடைசி மணித்துளிகள் இன்னும் ஒரு நிமிடத்தில் புத்தாண்டு பிறந்து விடும். பப்புகள் முதல் மதுரையில் இருக்கும் தெருக்கோடி ஸ்பீக்கர் வரை "கொலை வெறி" பாடல் அலறிக்கொண்டிருந்தது.FACEBOOK தமிழன் YOU TUBE தமிழன் இந்த பாட்டு உலக பிரசித்தி பெற்றதில் பெருமை பெற்றுக்கொண்டான்.முல்லைப்பெரியார் அணை பற்றிய வீடியோ YOU TUBE தளத்தில் பிரபலம் அடைவதை விட இந்த பாடல் பிரபலம் அடைவது படித்த இன்டர்நெட் உபயோகம் செய்கிற தமிழனின் பலவீனத்தை காட்டுகிறது.தமிழன் போராட்ட மனப்பான்மையை விட குடித்து விட்டு கூத்தடிக்கும் பாட்டுக்காரனை அடையாலப்படுத்தபடுவது வெட்க்ககேடே .

பின் குறிப்பு :
நான் ஆங்கிலத்தில் எழுதியதால் விமர்சனம் செய்ய வில்லை.கொலைவெறியை பார்த்து பொறமை பட நான் சிம்பு போல சக போட்டி நடிகர் இல்லை.

Monday 2 January 2012

மாணவர் குற்றம் - நுகர்வு காலாச்சாரத்தின் வெளிப்பாடு

மதுரையில் சமீபத்தில் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மாணவர்கள் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனராம்,குறிப்பிட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவிகளும் இதில் அடக்கமாம்.தொண்ணுறுகளில் தெருவிளக்குகள் கூட எரியாத கிராமங்கள் மதுரையில் உண்டு,இன்று உலகமயமாக்கல் ஏற்ப்படுத்தி இருக்கும் வளர்ச்சியில் கணினிகளும்,செல் போன்களும் கிராமத்தில் எளிதாய் பார்க்க முடியும்.தெருவுக்கு தெரு விஜய் அஜித் மன்றங்கள் சிறு காதுகுத்து என்றாலும் சச்சின் ரசிகர் மன்ற போஸ்டர்கள்,காதை கிழிக்கும் பாடல்கள் என்று மதுரை திருவிழா கோலத்தில் எப்பொழுதும் இருந்த காலம் மலை ஏறி போய், இன்று மாணவர்களிடம் அதிகம் படிப்பது தன் carrier பற்றி யோசிப்பது, எப்படியாவது நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து காம்பெஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்குவது என்ற போக்கு இருக்கிறது . மதுரையில் வீதிக்கு வீதி TOP என்று செல்லமாக அழைக்கப்படும் வெட்டி அரட்டை கச்சேரி நள்ளிரவு வரை நடைபெறும், தன் நண்பனின் தங்கையை கிண்டல் செய்தவனை எப்படி அடிப்பது,ஏரியா முழுவதும் எந்த எந்த பெண் எந்த எந்த வேலை செய்கிறாள்,யாரை காதலிக்கிறாள்,எந்த திரையரங்கள் யாருடன் படம் பார்த்தாள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்கள் டாப்பில் நடைபெறும் . அத்தகைய கலாச்சாரங்கள் மதுரையில் குறைந்து கொண்டே போவதற்கு ஊரில் ஒட்டப்படும் போஸ்டர்களும்,ப்லேக்ஸ்களும் காதை கிழிக்கு ஸ்பீக்கர் களும் குறைந்ததே சாட்சி. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட
காலம் வரை மதுரைக்காரன் சமூகத்திநூடவே இருந்தான்.தனிமைபடுத்தி கொள்ளாமல் ஒரு இனக்குழு போல திருவிழா,கிரிக்கெட்,ரசிகர்மன்றம் என்று வாழ்ந்து கொண்டிருந்தான் . வாரலாற்றின் தொடர்ச்சியிலே உலகமயமாக்கத்தின் தாக்கத்தால் பணம் தேடி ஓட ஆரம்பித்தான்.

ஒரு பக்கம் உலகமயமாக்கம் சாதி,மதங்களை தூக்கி எரிவதால் முற்ப்போக்கு பாத்திரம் வகித்தாலும் மறுபக்கம் மனிதனை சமூக உறவில் இருந்து பிரித்து தனித்து தான் விடுகிறது. காதலி தேவை படுகிறாள் பதினோராவது படிக்கும் மாணவனுக்கு , பீர் தேவை படுகிறது , கிங்க்ஸ் தேவை படுகிறது , பைக் தேவை படுகிறது , அதற்கு பெட்ரோல் தேவை படுகிறது. இப்படி உலகமயமாக்கலின் நுகர்வு கலாச்சாரத்திற்கு எளிதாய் அடிமை ஆகிறான் மாணவன்.


சமீபத்தில் ஒரு செய்தி படித்து அதிர்ந்து இருப்பீர்கள் , ஒரு பதினோராவது படிக்கும் மாணவனும் , ஒரு இளைஞனும் சேர்ந்து ஒரு சிறுவனை கொலை செய்துள்ளார்கள். காரணம் மிக எளிது இந்த பதினோராவது படிக்கும் மாணவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது ஒரு சிறுவன் பார்த்து விடுகிறான். அவனை சொல்லக்கூடாது என்று இந்த மாணவன் மிரட்டுகிறான், அவன் கேட்கவில்லை. அவன் பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த் பொழுது நைசாக கூப்பிட்டு அவனை கொன்று விடுகிறார்கள். இது மேலோட்டமாய் பார்த்தால் சிறுவர்கள் அறியாமல் செய்த தவறு போல தோன்றாலாம், கொஞ்சம் உற்று கவனித்தால் ஒரு சமூகம் VALUES இல்லாமலேயே வளர்வதை குறிக்கிறது .எப்பொழுதும் படிப்பு, விளையாடுவது கூட கணினியில் தான், இன்று FACE BOOK இருக்கிறது ஆனால் உணர்விலே கலந்து நடப்பாய் இருப்பது இயல்பாய் குறைந்து உள்ளது.

போட்டி பொறமை, தண்ணி அடிக்க,பைக்கில் ஊர் சுற்ற காசு தேவைபடுகிறது.உலகமயமாக்கலால்
பால் விலை ஏறுகிறது,பஸ் கட்டணம் ஏறுகிறது ஆண் பெண் குடும்பத்தில் வேலை செய்தால் தான்
குடும்பத்தை ஓட்ட முடியும்,அதனால் பெற்றோர்களால் நேரம் செலவிட முடியாத சூழல்.தாத்தா பாட்டி தூக்கி எறியப்படுவதால் நீதி கதைகள் சொல்ல ஆள் இல்லாமை,இவை அனைத்தையும் சேர்த்து மாணவனை மாணவியை சமூக விரோதியாய் ஆக்குகிறது. செல் போன் வளர்ச்சியின் உச்சம், ஒரு மாணவியை ஐந்து மாணவர்கள் பாலியல் வீடியோ எடுத்தது ,அதுவும் வெறும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.அந்த ஐந்து மாணவர்கள் மேல் குற்றம் அல்ல, அவர்கள் பெற்றோரின் மேல் குற்றம் சொல்ல முடியாது , இது நுகர்வு கலாச்சாரத்தின்
வெளிப்பாடு .நுகர்வு காலச்சாரத்தை எதிர்த்து போராடதவரை, வெறும் பெற்றோர்கள் அறிவுரை சொல்லி மாணவர்களை திருத்த முடியாது.

Sunday 1 January 2012

பட்டினப்பாக்க மக்களும் பட்டின பக்க மக்களும் - WHY THIS கொலை வெறி


"தானே புயலால்" பட்டினப்பாக்கம் மக்கள் சிக்கி தவிக்க, பக்கத்தில் மெரீனா கடற்கரையில் பட்டின பக்க மக்கள்
புத்தாண்டை கொலை வெறியோடு வரவேற்றனர் . முல்லை பெரியாருக்கு போய் குரல் கொடுக்க வேண்டாம்,பக்கத்தில்
இருக்கும் மக்கள் எழவு வீட்டில் இருக்க , இங்கு சரக்கு அடித்துவிட்டு கொண்டாட்டம் , நாம் எந்த விதமான
மதிப்பீடுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.