மதுரையில் சமீபத்தில் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மாணவர்கள் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனராம்,குறிப்பிட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவிகளும் இதில் அடக்கமாம்.தொண்ணுறுகளில் தெருவிளக்குகள் கூட எரியாத கிராமங்கள் மதுரையில் உண்டு,இன்று உலகமயமாக்கல் ஏற்ப்படுத்தி இருக்கும் வளர்ச்சியில் கணினிகளும்,செல் போன்களும் கிராமத்தில் எளிதாய் பார்க்க முடியும்.தெருவுக்கு தெரு விஜய் அஜித் மன்றங்கள் சிறு காதுகுத்து என்றாலும் சச்சின் ரசிகர் மன்ற போஸ்டர்கள்,காதை கிழிக்கும் பாடல்கள் என்று மதுரை திருவிழா கோலத்தில் எப்பொழுதும் இருந்த காலம் மலை ஏறி போய், இன்று மாணவர்களிடம் அதிகம் படிப்பது தன் carrier பற்றி யோசிப்பது, எப்படியாவது நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து காம்பெஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்குவது என்ற போக்கு இருக்கிறது . மதுரையில் வீதிக்கு வீதி TOP என்று செல்லமாக அழைக்கப்படும் வெட்டி அரட்டை கச்சேரி நள்ளிரவு வரை நடைபெறும், தன் நண்பனின் தங்கையை கிண்டல் செய்தவனை எப்படி அடிப்பது,ஏரியா முழுவதும் எந்த எந்த பெண் எந்த எந்த வேலை செய்கிறாள்,யாரை காதலிக்கிறாள்,எந்த திரையரங்கள் யாருடன் படம் பார்த்தாள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்கள் டாப்பில் நடைபெறும் . அத்தகைய கலாச்சாரங்கள் மதுரையில் குறைந்து கொண்டே போவதற்கு ஊரில் ஒட்டப்படும் போஸ்டர்களும்,ப்லேக்ஸ்களும் காதை கிழிக்கு ஸ்பீக்கர் களும் குறைந்ததே சாட்சி. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட
காலம் வரை மதுரைக்காரன் சமூகத்திநூடவே இருந்தான்.தனிமைபடுத்தி கொள்ளாமல் ஒரு இனக்குழு போல திருவிழா,கிரிக்கெட்,ரசிகர்மன்றம் என்று வாழ்ந்து கொண்டிருந்தான் . வாரலாற்றின் தொடர்ச்சியிலே உலகமயமாக்கத்தின் தாக்கத்தால் பணம் தேடி ஓட ஆரம்பித்தான்.
ஒரு பக்கம் உலகமயமாக்கம் சாதி,மதங்களை தூக்கி எரிவதால் முற்ப்போக்கு பாத்திரம் வகித்தாலும் மறுபக்கம் மனிதனை சமூக உறவில் இருந்து பிரித்து தனித்து தான் விடுகிறது. காதலி தேவை படுகிறாள் பதினோராவது படிக்கும் மாணவனுக்கு , பீர் தேவை படுகிறது , கிங்க்ஸ் தேவை படுகிறது , பைக் தேவை படுகிறது , அதற்கு பெட்ரோல் தேவை படுகிறது. இப்படி உலகமயமாக்கலின் நுகர்வு கலாச்சாரத்திற்கு எளிதாய் அடிமை ஆகிறான் மாணவன்.
சமீபத்தில் ஒரு செய்தி படித்து அதிர்ந்து இருப்பீர்கள் , ஒரு பதினோராவது படிக்கும் மாணவனும் , ஒரு இளைஞனும் சேர்ந்து ஒரு சிறுவனை கொலை செய்துள்ளார்கள். காரணம் மிக எளிது இந்த பதினோராவது படிக்கும் மாணவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது ஒரு சிறுவன் பார்த்து விடுகிறான். அவனை சொல்லக்கூடாது என்று இந்த மாணவன் மிரட்டுகிறான், அவன் கேட்கவில்லை. அவன் பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த் பொழுது நைசாக கூப்பிட்டு அவனை கொன்று விடுகிறார்கள். இது மேலோட்டமாய் பார்த்தால் சிறுவர்கள் அறியாமல் செய்த தவறு போல தோன்றாலாம், கொஞ்சம் உற்று கவனித்தால் ஒரு சமூகம் VALUES இல்லாமலேயே வளர்வதை குறிக்கிறது .எப்பொழுதும் படிப்பு, விளையாடுவது கூட கணினியில் தான், இன்று FACE BOOK இருக்கிறது ஆனால் உணர்விலே கலந்து நடப்பாய் இருப்பது இயல்பாய் குறைந்து உள்ளது.
போட்டி பொறமை, தண்ணி அடிக்க,பைக்கில் ஊர் சுற்ற காசு தேவைபடுகிறது.உலகமயமாக்கலால்
பால் விலை ஏறுகிறது,பஸ் கட்டணம் ஏறுகிறது ஆண் பெண் குடும்பத்தில் வேலை செய்தால் தான்
குடும்பத்தை ஓட்ட முடியும்,அதனால் பெற்றோர்களால் நேரம் செலவிட முடியாத சூழல்.தாத்தா பாட்டி தூக்கி எறியப்படுவதால் நீதி கதைகள் சொல்ல ஆள் இல்லாமை,இவை அனைத்தையும் சேர்த்து மாணவனை மாணவியை சமூக விரோதியாய் ஆக்குகிறது. செல் போன் வளர்ச்சியின் உச்சம், ஒரு மாணவியை ஐந்து மாணவர்கள் பாலியல் வீடியோ எடுத்தது ,அதுவும் வெறும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.அந்த ஐந்து மாணவர்கள் மேல் குற்றம் அல்ல, அவர்கள் பெற்றோரின் மேல் குற்றம் சொல்ல முடியாது , இது நுகர்வு கலாச்சாரத்தின்
வெளிப்பாடு .நுகர்வு காலச்சாரத்தை எதிர்த்து போராடதவரை, வெறும் பெற்றோர்கள் அறிவுரை சொல்லி மாணவர்களை திருத்த முடியாது.

4 comments:
நுகர்வு கலாசாரத்தால் மாணவர்கள் மட்டுமல்ல,பெற்றோரும் அதிகம் பதிக்கப் படுகிறார்கள்!நல்ல பதிவு!
மிகச்சசரியான உண்மையே வரும் காலங்களில் நம் பிள்ளைகளை காப்பதே பெரும் பீதியாக உள்ளது நல்ல பகிர்வு நன்றி .
வணக்கம் நண்பரே. நீங்கள் கட்டுரையில் கூறி உள்ளது போல, குற்றங்கள் பெருமளவில் பெருகி இருப்பதும், வினோத வடிவங்கள் பெற்று வருவதும் உண்மை. இதன் முக்கிய காரணங்கள் பணம் சேர்க்க மட்டுமே கற்றுத்தரும் கல்வி, விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சித்தான். வேல்யூஸ் பற்றிய கல்வி இங்கே கற்றுத்தரப்படவில்லை. இதைத்தான் நாம் முன்னோர்கள் சிற்றின்பம், பேரின்பம் என்று கூறி உள்ளார்கள். ஆனால் இவை எல்லாம் பார்ப்பான் கட்டி விட்ட கதை என்று நம்மாட்களை , திசை திருப்பி விடுகிறீர்களே? என்னதான் பாப்பான் கட்டி விட்ட கதையாக இருந்தாலும், அதில் இருக்கும் நல்லவற்றை, கால மாற்றத்துக்கேற்ப நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதில் தவறு இருக்கிறதா?
சத்தியமான உண்மை...
புரிந்துகொள்ளத்தான் மறுக்கிறார்கள் அல்லது புரிந்துகொண்டதை மறைக்கிறார்கள்.. :-(
Post a Comment