TIDEL PARK வெளியில் நாய் பட்டை போல ID கார்டு மாட்டிக்கொண்டு வெயிலில் வெளியில் வந்தான் பாலாஜி.எந்திரங்கள் மனிதர்கள் போலவும்,மனிதர்கள் எந்திரங்கள் போலவும் இயல்பாய் நடமாடிக்கொண்டிருந்தன. காலை பீக் HOUR என்பதால் படிக்கட்டுகளில் கூட நிற்க இடமில்லாமல் , ஜன்னல்களில் தொத்திக்கொண்டு நோட்களை மாணவிகளிடம் ஜன்னல் வழியே கொடுத்துவிட்டு அலட்சியமான பார்வையுடம் தலையை கோதிக்கொண்டு ஒத்தக்கையை
பிடித்து கொண்டு நின்றனர் மாணவர்கள்.பாலாஜிக்கு பேருந்து கிடைபதாய் இல்லை ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்தினான் .இந்த இடத்திற்கு போகவேண்டும் என்று பேரம் பேசினான்.ஆட்டோக்காரன் அவனிடம் கேட்டது அவனுக்கு அதிகமாய் தோன்றியது.
"ஏன் பா இது அநியாயமா இல்ல கழுத்துல ID CARD மாட்டி இருந்த ஒரு அம்பது ரூபா கூட கேட்ப்பீங்களே" என்றான் "என்ன சார் பண்ண பெட்ரோல் விலை ஏறிக்கினே இருக்கு , ஆட்டோ வாடகை ஒரு நாளுக்கு நூற்றியம்பது சார் , அப்புறம் போலிஸ் காரங்க ஷேர் வான் காரங்க ட்ட காச வாங்கிகுனு எங்க ஸ்டாண்ட்ல கூட நிறுத்த விட மாட்டிங்க்ரங்க எங்கயும் நிக்காம இப்பெல்லாம் சவாரி இல்லை நாளும் சும்மாவே சுத்தறதா இருக்கு சார். கடைசியா எங்க கைல நிக்கறது 250 ரூபா.இதுல ரெண்டு பிள்ளைங்கள படிக்கவைக்கணும் GOVERMENT SCHOOL நிறைய ஓபன் பண்ணல , பசங்க நல்ல இங்கிலீஷ் ஸ்கூல்ல தான் படிச்சா நல்லது ரெண்டாவது பையனுக்கு LKG ல சேக்க 20000 ஆச்சு. என்ன பண்ண சார் " என்றான் . ஆட்டோ ஸ்கூல் வாசல் முன் நின்றது "முன்னாடி பேசினத விட ஒரு இருபது ரூபா கம்மியா குடுங்க சார் உங்களுக்கு மட்டும் என்ன காசு விளயுதா என்ன" என்றான், பாலாஜி புன்முறுவலுடன் காசை
எடுத்துக்கொடுத்தான் .
அப்பொழுது தான் ஸ்கூல் prayer முடிந்து அனைவரும் உள்ளே சென்றனர் , ஐந்தாவது படிக்கிறாள் பாலாஜியின் முதல் பெண் காயத்ரி. ஆபீஸ் ரூம் நோக்கி சென்றான் பதினைந்து கிலோ உள்ள குழந்தைகள் முதுகில் இருபது கிலோ சுமந்து கொண்டு செல்வது அவனுக்கு வலித்தது . ஆபீஸ் ரூமில் வேலை செய்பவன் "சார் உங்க பொண்ணு காயத்ரிக்கு அறுபதாயிரம் பீஸ் சார் " என்றான் , பாலாஜி கிரெடிட் கார்டை எடுத்தான் அவனால் இங்கே பேரம் பேச முடியவில்லை.

2 comments:
//எங்கயும் நிக்காம இப்பெல்லாம் சவாரி இல்லை நாளும் சும்மாவே சுத்தறதா இருக்கு சார்.// நியாயமான கட்டணம் வாங்கினால் மக்கள் தயங்காமல் ஆட்டோவில் சவாரி செய்வார்கள், சும்மாவே சுத்தவேண்டி இருக்காது.
//"சார் உங்க பொண்ணு காயத்ரிக்கு அறுபதாயிரம் பீஸ் சார் " என்றான் , பாலாஜி கிரெடிட் கார்டை எடுத்தான் அவனால் இங்கே பேரம் பேச முடியவில்லை.// இந்த கொள்ளையை வைத்து அந்த கொள்ளையை நியாயப்படுத்துகிறீர்கள்.
rendumey thapputhaaan.....!
Post a Comment