Monday, 9 January 2012

என்ன படிப்பது - புத்தக கண்காட்சி ஏதோ என்னால் முடிந்தது

இலக்கியம் என்பது நம்மை பக்குவப்படுத்துவது . மக்களுக்கான இலக்கியமே தலை சிறந்த இலக்கியம்.ஒரு புத்தகம் படித்து முடிக்கும் பொழுது, மனதளவில் ஒரு அடி உயர்ந்திருக்க வேண்டும் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆரம்பத்தில் "தபு சங்கர்" படித்ததுண்டு. அதன் பின் சுஜாதா,பின்னர் ராமகிருஷ்ணன் சாரு ஜெமோ ஜெயகாந்தன் ஆதவன் என்ற பரிணாம வளர்ச்சி பெற்ற படிப்பு,இப்பொழுது இடதுசாரி பாதையை நோக்கி வந்துள்ளது. முன்பெல்லாம் என்னடா இடதுசாரி புத்தகங்கள் புரிவதில்லை என்ற கருத்து மற்றவர்களை
போலவே எனக்கும் இருந்தது.'தாய்' நாவல் வாங்கிவிட்டு இரண்டு பக்கம் மேல் படிக்க பக்குவம் இல்லாமல் வைத்திருக்கிறேன். இப்பொழுதும் தொடர்ந்தார் போல் ஒரு ஐம்பது பக்கம் மேல் வாசிக்கக்கூடிய பக்குவம் இல்லை. நான் புத்தகக்கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கினேன்,அதை இப்பொழுது பட்டியலிடவில்லை, கண்டிப்பாய் எளிதாய் படிக்கக்கூடிய முக்கியமான புத்தகங்களை பட்டியலிடுகிறேன்.நிறைய படித்தவர்களுக்கு இப்புத்தகங்கள் பயன் இல்லாததாய் இருக்கலாம் .நான் பட்டியலிடுவது என்னைப்போலவே மிகக்குறைந்த படிக்கும் அனுபவம் உள்ளவர்க்கட்கு ,சமூக மாற்றத்தை விரும்பி அதற்கு புத்தகங்களில் விடை
கிடைக்குமா என்று தேடுபவர்கட்கு இப்பட்டியல்.

மக்சிம் கார்கி 'தாய்' நாவல் ,மக்கள் போராட்டம் பற்றி ,போராடும் இளைஞன் அவனுடைய தாய் பற்றிய உறவை பற்றி.அந்த தாய் அவ்வரசியலை ஏற்று கொண்டு மக்களுக்கு வேலை செய்வதை பற்றி.

"ஏழு தலைமுறைகள்" உலகை உலுக்கிய கறுப்பர் வரலாறு பற்றி சித்தரிக்கும் நாவல்.

சோளகர் தொட்டி

சீன வானில் சிவப்பு நட்சத்திரம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நினைவுகள் அழிவதில்லை - இது காதல் நாவல் அல்ல கையூர் தோழர்களை பற்றிய நாவல்

புதியதோர் உலகம்

மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - கண்டிப்பாய் படிக்க வேண்டியது

மார்க்சிய மெய்ஞானம் ------ பொலிட்சர் கண்டிப்பாய் படிக்க வேண்டியது

வரலாற்று புத்தகங்களுக்கு நா வனமாலை , கோசாமி , தேவி பிரசாத் சடோப்பாத்த்யாய புத்தகங்கள்

பெண் ஏன் அடிமையானால் - பெரியார்

நான் எவ்வாறு எழுதக்கற்றுக்கொண்டேன் - மக்சிம் கார்க்கி ------------புதிதாய் எழுதுபவர்கட்க்கு

யான் பயின்ற பல்கலைகழகம் - மக்சிம் கார்க்கி ---------புதிதாய் எழுதுபவர்கட்க்கு

சினிமா திரை விலகும் பொழுது --------------- ஒரு படத்தை அரசியல் ரீதியாய் விமர்சிப்பது எப்படி

விடுதலை போரின் வீர மரபு



இவை எல்லாமே படித்த பின்பு உணர்வுப்பூர்வமாய் , மனதளவில் ஒரு அடி முன்னாள் செல்வீர்கள் என்று நம்புகிறேன். இலக்கியத்தை தாண்டி,கவிதையை தாண்டி வெளியே நிறைய பயனுள்ள படிப்பை படிக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

இவை தவிர NCBH ரஷ்ய புத்தகங்கள் , நெடும்பயணம், நீண்ட புரட்சி போன்ற முக்கிய புத்தகங்கள்
உள்ளது ...............

இவை கிடைக்கும் இடம்

கீழை காற்று .

அலைகள்

தமிழ் புத்தகாலயம்

விடியல்

பாரதி புத்தகாலயம்


NCBH