Saturday 10 October 2015

உன் வீட்டருகில் வந்த பொழுது

முன்பொருமுறை
உன் வீட்டருகில் வந்த பொழுது
திரும்பி பார்த்தாய் ........!!!
முன்பொருமுறை
உன் வீட்டருகில் வந்த பொழுது
சிரித்தாய் ....!!!
எப்பொழுதும்
பார்த்துக்கொண்டிருப்பது குறைந்தது ....!!!
எப்பொழுதும் உன் வீட்டருகே
வந்தாலும்
எப்பொழுதாவது தான் பார்த்துக்கொண்டோம்
சிறிது காலம்
கழித்து.....!!!
நீ இல்லாத
வீட்டை இப்பொழுதெல்லாம்
எப்பொழுதாவது தான் பார்க்கிறேன் ...
எப்பொழுதும் உன்னை பார்க்க மாட்டேன்
என்ற நம்பிக்கையில் ......!!!