Thursday 31 December 2009

வேட்டைக்காரன்,ஆதவன்,கந்தசாமி ..!


















இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.பண்டிகை நாட்களை தொலைக்காட்சி ஆக்கிரமிக்கின்றன. நமிதாவிற்கும் சுததந்திர தினத்திற்கும் என்ன சம்பந்தம் என்று என் நண்பனிடம் கேட்டேன்.தொலைக்காட்சியில் நமிதா பேட்டி ஓடிக்கொண்டிருந்தது.அவர் ஆடையுடன் இருந்து சுதந்திரம் பெற்றாராம்.என்ன சொல்ல????????குழந்தைகள் தொலைக்காட்சியில் ஒளிந்து கொள்வதும்,தொலைக்காட்சிகள் வக்கிர புத்தியை திணிப்பதும்
நடந்துகொண்டே இருக்கிறது. எங்கள் அறையில் தொலைக்காட்சி இல்லை,நண்பர்களுடம் நன்றாய் கொண்டாடினோம்.


நான் படங்கள் அதிகமாய் பார்ப்பேன் ,பட விநியோகஸ்தர் போல அரங்குகளில் இருக்கைகளை எண்ணுவேன்....ஒரு படம் எங்கு எல்லாம் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது என்று தகவல் சேர்ப்பேன்..இந்த வருடத்தில் போன வருடத்தை போல சிறப்பான படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.....திரை துறை பெரிய லாபம் பெற வில்லை. ரஜினி அஜித் படங்கள் வரவில்லை விஜய் படம் வந்தாலும் மாபெரும் தோல்வியை சந்திக்கிறது.விஜய் படம் வெற்றி பெற்றது இல்லை average என்று சொல்கிறார்கள்.........சென்னையில் வேண்டுமானால் அப்படி அரங்கு நிறையலாம் ...சென்னையை தாண்டினால் படம் நன்றாக இல்லை என்றால் மதிய காட்சியே காத்தாடும்......எனக்கு இந்த அனுபவம் ஆழ்வார்,வில்லு,வசீகரா படத்தில் ஏற்பட்டுள்ளது.

எப்படி வேட்டைக்காரன் வெற்றி என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் முப்பது கோடியாவது வியாபாரம் ஆகி இருக்கும்,சென்னையில் இரண்டு கோடி வசூல் என்று காட்டுகிறது இணையதளங்கள்,சென்னையை போல மற்ற ஊர்களில் அனைத்து காட்சிகளும் அரங்கு நிறையாது, என்பது சதவிகிதம் நிறைந்தாலே பெரிய வெற்றி. நான் மதுரையில் நிறைய பெரிய நடிகர்கள் படத்தை வெறும் முப்பது நாற்பது பெயருடன் பார்த்திருக்கிறேன்......முதல் நாள் கூட்டம் இருக்கும்......முதல் காட்சி கூட திரைஅரங்கில் டிக்கெட் வாங்கி பார்க்கலாம் ரஜினி,அஜித் ,விஜய் போன்ற படங்களை தவிர. இரண்டாவது நாள் படம் நன்றாய் இருந்தால் தான் கூட்டம் இருக்கும்.

வேட்டைக்காரன் average வர வேண்டும் என்றாலே முப்பது கோடிக்கு மேல் ஒரு ரூபாயாவது சம்பாதிக்க வேண்டாமா......கேட்டால் வெளி நாடு என்கிறார்கள்.வெளி நாட்டு மக்கள் இணையத்தில் விமர்சனம் படித்து விட்டு நன்றாய் இருந்தால் தான் போகிறார்கள்.அவர்களுக்கு விமர்சனம் உடனுக்குடன் கிடைக்கிறது.எனக்கு தெரிந்து வில்லு opening விட வேட்டைக்காரன் நாற்பது சதவிகிதம் தான் opening இருந்தது UK நாட்டில் . opening இல்லை என்றால் வெளிநாடுகளில் எப்படி சம்பாதிக்கும். www . boxofficemojo .com இதில் படங்கள் எப்படி வெளிநாடுகளில் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்

வெற்றி தோல்வி சகஜம் தான் ..........ஏன் தோல்வி என்று ஒத்துக்கொள்ள வேண்டியது தானே???????நம் மக்கள் இன்னும் நூறு நாள் இருநூறு மோகத்தில் இருக்கிறார்கள்.நீங்கள் அரங்கிற்கு வாடகை கொடுத்தால் எந்த திரையரங்கிலும் உங்கள் படமும் நூறு நாள் ஓடும்....
முன்பெல்லாம் தமிழகத்தில் ஐம்பது பிரிண்ட் போடப்பட்டால் அதிகம் ஆனால் இப்பொழுது மாஸ் ஹீரோ படம் என்றால் தமிழகத்தில் 200 பிரிண்ட் போடப்படுகிறது.

இது எல்லாம் பரவாயில்லை ....கந்தசாமி சிவாஜி வசூலை தாண்டப்பகிறது என்று பித்தலாட்டம் செய்கிறார்கள்......அதுவும் இந்த சூர்யா விக்ரம் போன்ற நடிகர்கள் தோல்வியை ஒத்துக்கொள்வதில்லை.படம் பார்த்து மொக்கை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்
அப்பொழுது coffe with anu நிகழ்ச்சியில் விக்ரம் தோன்றி படம் நன்றாய் உள்ளது so nice yaa என்பார்.எரிச்சலாய் இருக்கும்......இதை போன்றே ஆதவன் படம் வந்த போது சூர்யா வந்து கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தார். ஏன் உங்களை நம்பும் ரசிகனை இப்படி ஏமாற்றலாமா????????

நண்பர்களே நீங்களே சொல்லுங்கள் .......
1 வேட்டைக்காரன்
2 ஆதவன்
3 கந்தசாமி
வெற்றிப்படமா ....?

Wednesday 30 December 2009

தொலைக்காட்சிக்கு பதில் நூலகங்கள்

இந்த கட்டுரை தொடக்கத்தில் இந்த ஆண்டு முடிந்து கொண்டிருக்கிறது. என்னை பாதித்த விடயங்கள்...............














1 கலைஞர் தன் கல்லறையில் அவர் செம்மொழி வாங்கி தந்ததை பொறிக்க வேண்டும் என்கிறார். சோனியாவிற்கு நன்றி சொல்கிறார்.ஈழ வரலாற்றில் அவர்கள் கல்லறையில் இவர் பெயர் பொறிக்கப்பட்டதே...அதற்கு என்ன செய்ய போகிறார்.
















2 முல்லைபெரியாறு காவேரி பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். தண்ணீர் தனியார்மயமாகி இருக்கிறது கவலை அளிக்கிறது.விவசாயம் என்ற பாடம் அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து மதுரை பக்கத்தில் ஒரு விவசாயக் கல்லூரி உள்ளது,நிறைய கல்லூரிகள் அரசு திறக்க வேண்டும். விவசாயி என்றால் கேவலம் பொறியாளன் என்றால் மிக நன்றாக உள்ளான் என்ற மனப் போக்கு மாற வேண்டும். மழை பெய்யவில்லை என்றாலும் புதிய தொழிர்நுட்பத்துடன் விவசாயம் செழிக்க அரசு துணை நிற்க வேண்டும்.
விவசாய நிலங்கள் கண்மாய்கள் வீடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன .....இப்படியே போனால் நாம் மறுபடியும் பிறர் கையேந்தும் அடிமைகள் ஆவோம்..சோற்றுக்கு பிற நாட்டு உதவி தேவை படும்..........இப்பொழுது அந்நிய தேசத்தில் வேலை பார்ப்பது கூட கூலி வேலை செய்வதை போன்றதே எச்சரிக்கை......!











3 எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல்.காதலினால் புருஷனை கொன்றாள்,மகனை கொன்றாள்.இது வெறும் பாலியல் பிரச்சனை அல்ல சமுதாய பிரச்சனை. இந்த பொருள் தேடும் உலகம் சாமான்யனை பொருள் தேடு surivival of fittest பாணியில் இருக்கிறது. இது தவறு, புருஷன் பொருள் தேட போக, மனைவி அன்பிற்கு ஏங்குகிறாள் வேறு ஒருவனிடம் கிடைக்கிறது அன்பு.........பிரிய முடியாமல் தவிக்கிறாள்..........இது சமூக பிரச்சனை. தனக்கு முக்கியமானவர்களிடம் அன்பு செலுத்துங்கள்.....கள்ளக்காதல் வெறும் உடல் தேவை மட்டும் அல்ல மனத்தேவையும் உள்ளது......!!!!!அன்பு செலுத்துங்கள் .....பொருள் மட்டும் வாழ்கை அல்ல .......
அன்பு அன்பு










4 கலைஞர் அரசு அனைவருக்கும் தொலைக்காட்சி கொடுக்கிறது.ஆம் தொலைகாட்சி மனிதனுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறது, மலிவு விலை காமம்.......மனித வக்கிர எண்ணங்களை தூண்டும் நாடகங்கள்.......
மக்கள் பிரச்சனையை திசை திருப்பும் மட்டை பந்து .........................மக்களே உஷார் இவர்கள் தொலைகாட்சி பெட்டி கொடுப்பதே மக்கள் சிந்திக்ககூடாது என்பதற்காக தான்.................அரசு தொலைக்காட்சி பெட்டிக்கு பதில் வீட்டிற்க்கு ஒரு நூலகம் அமைக்க சொல்லலாமே.......சிந்தித்தால் போதுமே எந்த பிரச்சனையும் சந்திக்கும் பலம் வருமே......கலைஞர் அவர்களே நூலகம் அமைத்து கொடுங்கள் ஒவ்வொரு வீட்டிற்க்கும்.....









5 ஏன் எழுதுகிறோம் என்ற கேள்வி என்னை உலுக்கிக்கொண்டிருக்கிறது....காரணம் இருவர் குறை ஒன்றும் இல்லை என்ற பதிவர்...மற்றும் பெயர் வெளியிட முடியாத தோழர்......சும்மா கற்பனை பண்ணி எழுதிக்கொண்டிருப்பது அற்பவாதம்,மக்களோடு மக்களாக பணியாற்றினால் தான் சிறந்த படைப்பு படைக்க முடியும்...என்று அந்த தோழர் கூறுவார்.......ஆம் அவருடன் பேசியதிலிருந்து சாரு ராமகிருஷ்ணன் போன்ற பிம்பங்கள் என் மனதில் உடைக்கப்பட்டன.......இப்பொழுதும் என்னோடு அழகான கதைகள் கவிதைகள் உள்ளது ....அவரோடு பழகிய பின் ஒவ்வொரு படைப்பிலும் மக்களுக்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.....வெறும் அழகியல் இலக்கியம் அல்ல வாழ்வியலே இலக்கியம் என்று சொல்கிறார் நண்பர்.

சாரு ராமகிருஷ்ணன் மக்களுக்கு என்ன செய்தார்கள் .....சில பதிவர்கள் ஈழ பிரச்சனை போது ...
என்னிடம் கேட்டதை அவர்களிடம் கேட்கிறேன்......வெறும் ரஷ்ய இலக்கியம் தெரியும் பிரெஞ்சு தெரியும் என்பதிலே புண்ணியம் இல்லை.......தன் மக்களுக்காய் இலக்கியம் இருக்க வேண்டும் .....நானும் எதாவது செய்ய வேண்டும் ....? ஒன்று செய்தால் எழுதுவேன் இல்லை என்றால் எழுத மாட்டேன் ..................!


















6 . உலகெங்கும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது.......மனிதனின் கண்டுபிடிப்பு மேதாவித்தனம் அவனை அழித்துக்கொண்டிருக்கிறது....குளிர்சாதனம் என்ற கருவி கண்டுபிடித்ததால் உபயோக படுத்த மனிதன் தள்ளப் படுகிறான்....முதலில் பொருள் அப்புறம் அதை மக்களிடம் சேர்ப்பது என்ன கொடுமை???????? ஓசோன் ஓட்டை விழ இந்த கண்டுபிடிப்புகள் காரணம் என்றால் மகி ஆகாது .....???????
நம் செல் போன் பேசுவதால் சில பறவைகள் அழிந்துவிட்டதாம் ...........லிப்ஸ்டிக் போன்ற பொருட்கள் தயாரிக்க எலிகள் அழிக்கிறார்கள் .....! இது ஒரு சுழற்சி ......அனைத்து விலங்குகளும் அழிய மனிதன் அழிந்துகொண்டே இருக்கிறான் .........................! வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வைப்போம் .................மரங்கள் வைப்பது மட்டும் அன்றி ....மரங்கள் வளர பாதுகாப்பு வேண்டும் .....தினம் தண்ணி ஊற்ற வேண்டும் .....இடம் வேண்டும் .........அதற்கான சந்திப்புகள் வேண்டும் ...............எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் மரமாவது வளர்க்க வேண்டும் .........................இது நம்மால் முடிந்ததே

Tuesday 29 December 2009

கடலோரக் கவிதைகள்
















மிக கூட்டமாய் இருக்கும் பேருந்து மாதவன் ஒரு பெண்ணை பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் இவனுக்கு சளைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.அவள் பக்கத்தில் ஒரு இருக்கை இருக்க அருகிலே அமர்ந்து கொண்டான் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டே வந்தான் அவளும் ஒன்றும் சொல்லவில்லை.பக்கத்தில் அமர்ந்து கணவன் போல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்,அவளும் நன்றாகவே இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெரினா கடற்க்கரை வந்தது,அவள் இறங்கினாள் கூடவே இவனும் இறங்கினான்.இருவரும் கடற்கரை நோக்கி சென்றனர்,அலைகள் உயர வந்து கொண்டே இருந்தது.கரை பக்கத்தில் இருவரும் சற்றே பாதை மாறி சிறிய இடைவெளியில் அமர்ந்தனர். ஆம் அவன் காதலி அருகில்,அவள் காதலன் அருகில். பத்து அடி இடைவெளி இருக்கும். இவள் அவன் காதலனிடம் "உன்னைய விட்டா யாரு டா இருக்கா" என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில் அவனும் அதே வசனத்தை தன் காதலியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

Monday 28 December 2009

அழுவதற்கு ஒருத்தன் இருக்க போவதில்லை
















ஓசோன் ஓட்டை
துகில் உரித்தோம்
கண்டுபிடிப்பு துச்சாதனன்
கொண்டு .......!
வெப்பம் முறைக்க.....
பனி அழுக.........
கடல் மட்டம் ஏறிக்கொண்டே இருக்க ......
2012 படம் நம் கண் முன் ஓடத்தான் போகிறது ........
உலகமே மயானமாய்,
அழுவதற்கு ஒருத்தன்
இருக்க போவதில்லை ...!

ஓடிப்போலாமா சொல்லித்தரும் காதல்



















காதலன் காதலிக்கிறான் ஓடிப்போகிறார்கள்,இருவரும் ஓடிப்போகிறார்கள்,இருவரும் தனி தனியாக ஓடுகிறார்கள் ,காதலன் காதலியுடன் சேர்ந்தானா என்பதே கதை. கதாநாயகன் முதல் காட்சியில் படித்துக்கொண்டே இருக்கிறான்,விளையாடும் போது கூட படிக்கிறான் என்னடா என்று பார்த்தால் அவன் படிப்பதற்கு காரணம் ஒரு பெண் சந்தியா. எப்பொழுதுமே படிக்காத கதாநாயகன் காதலுக்காக படிக்கிறான்.அவளுக்காக அவள் வீடு பக்கத்திலேயே வீட்டை பார்க்கிறான்.அவளிடம் நட்பை வளர்க்கிறான். பொய் சொல்கிறான் தனக்கு படிப்பு நன்றாய் வருமென்று,ஒரு நாள் அவன் அம்மா இவனுக்கு படிப்பு வரவே வராது என்று சொல்ல??????இவன் அவளிடம் காதலை சொல்ல??அவள் நட்பாய் இருப்போம் உனக்கு படிப்பு வரவில்லை தகுதி இல்லை என்கிறாள்.காதலிக்காக படிக்கிறான், அவள் வேறு வீட்டு பிரச்சனைக்காக வீட்டை விட்டு ஓட,இவன் அதை வேவு பார்த்து பின் தொடர்கிறான். பிளாட்டில் இருவரும் சேர்ந்து ஓடுகிறார்கள் என்றே நம்புகிறார்கள்."

இடைவெளி முன்பாய் ஒரு காட்சி இவள் ஓடும் பேருந்தில் கதாநாயகன் ஏறுகிறான்,
மூஞ்சியை மறைத்துக்கொண்டு,அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.அப்பொழுது ஒருவர் கேட்கிறார் "ஏன் பா அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு இருக்க" அதற்கு இவன் சொல்கிறான் "அவ என் காதலின்னு நாங்க ரெண்டு பேரும் ஒடரோம்னு" "ஏன் சேர்ந்து போலாமேன்னு" அவர் கேட்க. "நான் வர்றது அவளுக்கே தெரியாது" என்கிறான்.திரை அரங்கு கலகலக்கிறது.

படம் ஜனரஞ்சகமாய் நன்றாய் இருக்கிறது.நன்றாய் இருக்கிறது. காதலுக்காய் படிக்கிறான் எல்லாம் சரி.ஆனால் படிப்பதற்காகவே காதலிக்க முடியுமா????????தகுதி இருப்பவன் காதலிக்கலாம் என்ற மேட்டுக்குடி பார்வை படத்தில் உலா வருகிறது........தகுதி முக்கியமே ஆனால் தகுதி மட்டுமே முக்கியம் என்று சொல்வது அபத்தம்.......!!!!நீ படிக்கவே மாட்டிங்கற அதனால உனக்கு என்ன தகுதி இருக்கு நாம நண்பர்களாய் இருப்போம் அப்படின்னு காதலி சொல்றா. அப்ப பொருள் முக்கியத்துவம் பெருது. காதலை
அற்பமாய் சித்தரிக்கும் போக்கு தமிழ் படங்களில் நிறையவே நிரம்பி இருக்கிறது.

இரண்டாவது பாதியில் நாயகன் காதலிக்கிறான் என்று தெரியும் ,இவளுக்கும் அவனை பிடிக்கும். ஆனாலும் அவன் மாமா பையனுக்கு டெஸ்ட் வைப்பாள்,ஐஸ்கிரீம் வைத்து. இருவரையும் ஒப்பிடுவாள் ஒப்பிட்டு இவனே சரி என்று முடிவுக்கு வருவாள். இது எப்படி காதலாகும்.ஐஸ்கிரீம் மாமா மகன் வாங்கித்தந்தால் அவன் பின்னாடி போவாளா...........???????? அப்ப வேறு ஒருவன் இதை விட நன்றாய் வந்தால் அவன் பின் செல்வாளா. தப்பு தப்பான விஷயங்களை காதல் என்று சொல்லும்,அந்த படத்தின் ரசிகனிடம் ஒரு தப்பான பிம்பத்தை உருவாக்குகிறது.

இந்த மாதிரி படங்கள் ஊடகங்கள் தப்பான காதலை சொல்லித்தருகின்றன.....
.படம் ஆனால் பொழுதுப்போக்காக நன்றாகவே உள்ளது.

Saturday 26 December 2009

விவசாயி ரத்தம் குடிக்கும் குளிர் பானம்


















நம் மீது கண்ணுக்கு தெரியாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. எப்படி????தண்ணீர் தனியார்மயம் ஒரு விதமான போர்.
முன்பெல்லாம் தண்ணீர் காசு கொடுத்து வாங்க மாட்டோம்,இப்பொழுது சென்னை நகரில் நாம் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்குகிறோம்.நண்பர் பின்னூட்டம் போட்டது போல ஒரு லிட்டர் கோக் தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் தேவைதானா சொல்லுங்கள்??

இங்கே தஞ்சை மண்ணில்,தமிழனுக்கே சோறு போட்ட மண்ணில் விவசாயி எலிக்கறி உண்கிறான்.தண்ணீரை எல்லாம் தாரைவார்த்து விட்டால்.எங்கே விவசாயம் விவசாயி தினக்கூலி ஆவான்.அவன் பிள்ளைகளை நகரத்தில் வளர்ப்பானே தவிர விவசாயம் சொல்லித்தரமாட்டன். நாம் வரலாற்றிலே மட்டுமே விவசாய பூமியை பார்க்க முடியும்.வெறும் தகவல்தொழில்நுட்பம் மட்டும் வைத்து இந்தியா வளர்ந்த நாடு என்று எப்படி சொல்ல முடியும். உடம்பில் ஒரு பகுதி மற்றும் வளர்கிறது கோளாறே தவிர வளர்ச்சி அல்ல.


இதுவும் மறைமுக போரே.கலாச்சார ரீதியான போர்,கண்ணுக்கு தெரியாத போர். நம் உணவிற்கே ஒரு நாட்டை எதிர்பார்க்க வேண்டியது இருக்கும்.இது நம் நாடு மீண்டும் அடிமை ஆவதை உறுதி செய்கிறது.விவசாயம் மறக்க செய்து,எந்த தொழிலாய் இருந்தாலும் முதலாளி கொடுப்பதை நாம் சம்பளமாக மட்டுமே பெரும் அபாயம் இருக்கிறது.இப்பொழுதே நாம் கொத்தடிமைகள் ஆகிக்கொண்டிருக்கிறோம்.வணிக ரீதியாய் வந்து தான் ஆங்கிலேயன் நம் நாட்டை பிடித்தான் தெரியாதா தோழர்களே.

இந்த எந்த பின்புலமுமே தெரியாத நடிகர்கள் இந்த விளம்பரத்தில் நடிப்பது ஏன். அவர்கள் சம்பளம் அதில் நடிக்க ஒரு கோடி ரெண்டு கோடி.ஒரு பெரிய நடிகனை மட்டும் வைத்து விளம்பரம் செய்தால் ஒரு கோடி கொடுத்தால் தெருக்கோடி வரை செல்லலாம்.நடிகனுக்கு என்று புனித பிம்பம் உள்ளதே.
























ஏன் பகுத்தறிவு என்று பேசும் சின்னக்கலைவாணர் இந்த விளம்பரங்களிலே நடிக்கிறார் . கடவுள் மறுப்பு கொள்கை மட்டும் பகுத்தறிவு ஆகாது.உங்கள் பகுத்தறிவு பல விடயங்களை பகுத்து அறிவதே. தஞ்சையில் எலிக்கறி உண்றது தெரியாதா.........இதே நிலைமை போனால் மனிதக்கறி உண்ண வேண்டியது வரும்.......!நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பெப்சி கோக் இல்லை அதை சார்ந்த மிரண்டா பாண்டா எதை குடித்தாலும் நீங்கள் விவசாயியின் இரத்தம் குடிக்கிறீர்கள் நியாபகம் இருக்கட்டும்.

Friday 25 December 2009

குளிர்பானமும் கருத்து சொல்லும் நடிகர்களும்






















"எவனோ ஒருவன்" நல்ல படம் என்று சொன்னார்கள். நானும் அப்படி தான் நினைத்தேன் சமீபத்தில் தொலைக்கட்சியில் ஒரு காட்சி பார்த்தேன். ஒன்பது ருபாய் பெப்சி குளிர்சாதனத்தை இரண்டு ருபாய் கூட விற்று விட்டார் என்று மாதவன் கோபப்படுவார். அந்த காட்சி "கண்டேன் காதலை" படத்திலும் பிரதிபலித்தது.





















நல்ல கருத்து சொல்கிறேன் என்று சிலர் என்னனமோ சொல்கின்றனர்.முதலில் இந்த பெப்சி மற்றும் கோகோ கோலா பூச்சி கொல்லி மருந்து. நம் உடல் மண்ணில் புதைக்கபட்டால் ஐம்பது ஆண்டு கழித்து எதுவுமே மிஞ்சாது,பல்லை தவிர.அப்படிப்பட்ட பல்லையே பதினோரு நாளில் அரித்துவிடும் விஷத்தன்மை வாய்ந்தது இந்த குளிர்சாதனங்கள்.அந்த குளிர்பானத்திற்கு கொடி பிடிக்கிறார் நாயகன்.ஏன் கொஞ்சம் சிந்தித்து
அவர்கள் எதிராக கொடி பிடித்திருக்கலாமே.
எனக்கு தெரிந்து அந்த குளிர்பானத்தின் தயாரிப்பு ஒரு ருபாய் கூட இல்லை. அந்த குளிர்பானத்தை இவர்கள் ஒன்பது ருபாய் விற்பாராம்,அதை இரண்டு ருபாய் கூட விற்பது தப்பாம்,இது முதலாளிக்கு கொடி பிடிப்பது .
மாதவன் அந்த குளிர்சாதன விளம்பரத்தில் நடிக்கிறார்,அதனால் முதலாளி விசுவாசத்தை காட்டுகிறார். இது சரி என்று பாமரனின் மனதில் விடத்தை திணிக்கிறார்.இதற்கு விஜய்,ராமராஜன்,டி ராஜேந்தர் படங்களை பார்த்து விடலாம்.

இரண்டாவது அது சுற்றுசுழலை பாதிக்கிறதே.அது அந்த நாயகனுக்கு தெரியவில்லையா????தாமிரபரணியை ஆக்ரமிக்க நினைத்தார்களே அது தெரியவில்லையா அந்த நாயகனுக்கு.ஒவ்வொரு இடத்தையும் பாலைவனம் ஆக்குகின்றரே அது தெரியவில்லையா???????மேத்தா பட்கர் உண்ணா விருந்து இருந்த போது அமீர் கான்
அவரை பார்க்க சென்றார்.பொது மக்கள் நீங்கள் முதலில் குளிர்சாதன விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துங்கள் என்று விரட்டினர்.









என் ரூம் நண்பர் தினமும் குளிர்பானம் உடன் இரவு உணவை உட்கொள்வார். இப்பொழுது அந்த பழக்கத்தை விட்டு விட்டார். ஏன் என்று கேட்டேன் "நெஞ்சு வலித்தது" விட்டு விட்டேன் என்றார்.குடிக்க வேண்டும் என்றால் பழச்சாறு குடியுங்கள் பன்னீர் சோடா குடியுங்கள்.





















இம்சை அரசன் படம் தேவி திரையரங்கில் காண சென்றேன். அக்கா மாலா கப்சி நகைச்சுவையை எல்லாரும் ரசித்தனர். இடைவெளி வந்தது,அதிகமாய் விற்றது பெப்சி. இந்த குளிர்பானம் விளம்பரத்தில் நடிகர்கள்,விளையாட்டு வீரர்களும் நடிக்கிறார்கள்.நீங்கள் அரசியல் இறங்கி அரசியல் செய்ய வேண்டாம். ரசிகனை தப்பான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம்.உங்களுக்கும் அரசியல் பொறுப்பு இருக்கிறது.

Wednesday 23 December 2009

பிம்பங்களை மட்டுமே காதலிக்கும் காதல்






















மாலை பொழுதில்

வாசிக்கப்படாத இசைப் பின்னணியில்

மடியில் சாய்ந்தான் காதலன்....!

நேற்று சொன்ன காதல் உஷ்ணம்

சூடு குறையாமல்......!

"எவ்வளவு சம்பளம் டா உனக்கு,IT நல்லாத்தானே இருக்கு" என்றாள்...
சூடு கொஞ்சம் குறைந்தது ......!

"பார்க்க அமீர் கான் மாதரியே இருக்க" என்றாள் ....

பால் உணர்வால் ஈர்ப்பு கூட அமீருக்கு சொந்தமா நினைத்துக்கொண்டான்.....!

"நாமெல்லாம் ஒரே ஜாதி ஓடிப்போக அவசியம் இல்லை" என்றாள் ......

காதல் சூடு இல்லை......

சுட்டது....!

பிம்பங்களை மட்டுமே காதலிக்கும் காதல்.....

Monday 21 December 2009

இந்தியன்
















வீட்டில் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் சண்டை வரும்,கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போதெல்லாம்.பெயர் கார்த்திக்."கிரிக்கெட் என்று இருந்தாலே கார்த்திக் தவிர்க்க முடியாத பெயர்" என்பான்.அவன் காதலித்த பெண் தெருவில் நடந்த போது "தினேஷ் கார்த்திக்கா முரளி கார்த்திக்கா" என்று கேட்ட போது புல் அரித்தது அவனுக்கு.கூடவே தற்போது அருண் கார்த்திக் தமிழ் நாட்டில் ஆடுவது அவனுக்கு பெருமையாய் இருந்தது .

தினேஷ் கார்த்திக் ஆடும் போது அவன் ஆரம்ப கால கட்டத்தில் கார்த்திக் சுவாதி என்ற மற்றொரு வீரன் இருந்தான் அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்பான். அவன் பெயருக்கு ஏற்றார் போல் அவன் கல்லூரியில் ஐந்து கார்த்திக்.அனைவரும் நன்றாய் ஆடக்கூடியவர்கள் .......இவனும் கல்லூரி ஆட்டத்தில் ஹ்ரிசிகேஷ் கனிட்கர் போல ஒரு ஆல் ரௌண்டேராக அரைகுறை ஆட்டக்கரனாய் இருந்திருக்கிறான்.

பத்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரண்டு மேட்ச் மட்டுமே ஆடினான்.அவன் பந்துகள் ஆறுக்கும் நான்கிற்கும் பறக்க விட பட்டன,அவனுக்கு கல்லூரி ஆட்டங்களில் தண்ணி கொண்டு போய் கொடுப்பதும் மட்டுமே வேலையாய் இருந்தது. எப்போதாவது கல்லூரி சொஹைப் அக்தர் chrompet எக்ஸ்பிரஸ் சுவாதி பிரசாத் சில ஓவர்கள் ரெஸ்ட் எடுத்தால் அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் போலவே இறங்குவான்,பந்துகளை தடுப்பான் மறுபடியும் உள்ளே போய் அமர்வான்.

இவன் அத்தை வீட்டுக்காரர் சச்சின் சட்டை போட்டுக்கொண்டு அமர்வார்.அவருடன் தான் மேட்ச் காண்பான். இந்திய உணர்வு என்றால் கிரிக்கெட் பார்ப்பது என்று அவன் ரத்தத்தில் ஊறி கிடந்தது.

ஆம் உலக கோப்பை அட்டவணை வந்தது, பெப்சி நடத்துகிறதாம். அனைத்து இடத்திலும் பெப்சி கோகோ கோலா விளம்பரங்கள் ஒரு பக்கம் அந்த கால டோனி சச்சின். இன்னொரு பக்கம் இந்த கால சச்சின் டோனி பெப்சி விளம்பரத்திற்கு. ஏதோ இது மட்டும் தான் உணர்வு என்ற மாய பிம்பங்கள் ஊருக்குள் உலா வந்தன.இவனும் மழையில் நனைத்து கொண்டே ஒரு டிவி கடையில் வெளியில் மேட்ச் எல்லாம் பார்த்துக்கிறான்.

ஆம் அன்று உலக கோப்பை இறுதி ஆட்டம் . இந்தியா ஆஸ்திரேலியா ........சச்சின் சதம் அடிக்கவில்லை இந்தியா வெற்றி பெரும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். யுவராஜ் 50 அதனால் இந்தியா கட்டாயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை . கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை வேறு. ஜெயா டிவியில் சடகோபன் ரமேஷ் சேவாக் பூட் வொர்க் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

கடைசி ஓவர் இந்தியா அடிக்க வேண்டிய ரன்கள் 11 .யுவராஜ் சிங்க் ஆட்டம்,brett lee பந்து போடுகிறார், அனைவரயும் இடது புறம் நிறுத்தினார். ஒரு லாங் on ஒரு square leg . அனைவரையும் இடது புறம் நிற்க வைத்து. யுவராஜிற்கு காலுக்கு போட்டார் லீ. காலில் போட்டவுடன் ஆறு ஓட்டங்கள். இந்தியர்கள் உணர்விலே கை தட்டினர்.கார்த்திக்கும் குதித்தான். அடுத்த இரு பந்துகளும் நான்கு நான்கு.இந்தியா வெற்றி பெற்றது

கார்த்திக்கின் இந்தியன் என்ற உணர்வு ஜெயித்தது,உணர்வால் கத்தினான்.ஆனந்த கண்ணீர் வேறு. ஆம் பெப்சி கோகோ கோலா,மொபைல் கம்பெனிகள் கணக்கு வீண் போகவில்லை.
உலககோப்பை வெற்றி பெற்றதற்கு ஹோடேலில் விருந்து கொடுக்கப்பட்டது. இந்தியாவை செமி அல்லது இறுதி ஆட்டதிற்கு வரவைத்ததே பொருளை விற்பனை செய்வதற்கே என்று யாரோ ஒரு ICC அதிகாரி உளறிக்கொண்டிருந்தார். சச்சின் டிராவிட் விட்டா வேற யாருக்கும் கட்டாந்தரைய விட்டா ஆட தெரியாது பா .ஆனா அந்த மக்கள் தானே பாக்குறாங்க,அதனால அவங்களுக்கு ஏத்த மாதிரி தான் ஆடுகளம் தயார் செய்ய படுகிறது என்று போதையிலே புத்தன் போல பேசி கொண்டிருந்தார்.

இங்கு கார்த்திக் உணர்வு இதில் மட்டுமே உள்ளதாய் நினைத்துக்கொண்டிருந்தான் போதையிலே. அவன் நண்பன் அவனிடம் ஏதோ அரசியல் பேச வந்தான். "மொக்க போடாத அரசியல் வாதி எப்படி இருந்த என்ன" என்று சொல்லி ஏதோ மேட்ச் இருக்கிறது நான் செல்ல வேண்டும் என்று சென்று விட்டான்.

நண்பர்களே மன்னிக்கவும்

நண்பர்களே மன்னிக்கவும்,என் கருத்து சரி என்றாலுமே நான் ஜனநாயக முறையில் போராட வேண்டும்.சிலர் பின்னூட்டம் மனம் புண்படுத்தினாலும் தளரக் கூடாது. நான் நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் .பல பேரிடம் சண்டை பயங்கரமாய் போட்டுள்ளேன்,இனி சண்டை போடாமல் என் கருத்தை ஜனநாயக முறையில் வைக்க பார்பேன் .என் தம்பி ராமகிருஷ்ணன் அசத்த போவது யாரு பார்பீர்களா அதில் வருவானே மதுரை ராமகிருஷ்ணன் அவன் என் தம்பி.சித்தப்பா பையன் என்றாலும் என் வீட்டிலேயே
இருந்ததால் நாங்கள் இருவரும் சொந்த அண்ணன் தம்பி போல பழுகுவோம்.அவன் எழுதாமல் இருப்பது தவறு என்றான். என்னை மாமா என்று அழைப்பான். "நீ நல்ல படைப்பாளி ஆனால் கோழை" என்றான். "ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்றான்".

அகல் விளக்கு புலிகேசிக்கு போன் அடித்து கேட்டு விட்டார் என்று புலிகேசி சொன்னான்.ஊடகன் மிகவும் வருத்தப்பட்டான்.என் அக்கா அவருடன் சண்டை போட்டதால் எழுதவில்லை என்று நினைத்துக்கொண்டால். அண்ணன் பிரபாகர் போன் செய்து பேச வேண்டும் என்றார்.புலிகேசி மறுப்பு போடு என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.பதிவுலகத்தில் வந்து விட்டாலே ஒரு பொது சொத்து நாமாய் ஒரு முடிவு செய்ய முடியாது. பலர் பின்னூட்டத்தில் வருத்தம் தெரிவித்தனர். அது என் பக்குவமின்மையை காட்டியது, உணர்கிறேன்.

மறுபடியும் உங்களிடம் எல்லாம் சண்டை போட வந்து விட்டேன். பில்லாவில் அஜித் சொல்வதை போல 'i am back ' . நேற்று ஒன்று புரிந்தது ....குறை ஒன்றும் இல்லை கேட்டு இருந்தார் "இப்படி எழுதி எழுதி என்ன சாதித்து விட்டீர்கள்" என்று."நண்பரே இப்பொழுது தெளிவாய் சொல்கிறேன் "எழுதுவதற்கு தான் எழுத்து".....தவறு என்றால் கேட்பதே ஜனநாயகம் "right to speak ".எழுதினால் தான் தெரியும் பல பேருக்கு .......எழுதும் போது தான் எனக்கே என்னை பற்றி தெரிகிறது.

பின் குறிப்பு:
நண்பர்களே என் மாமாக்களை வேறு தப்பாய் எழுதிவிட்டேன். எந்தவித நோக்கமும் இல்லை,அவர் அவர் நிலைமையை விளக்கினார்.
நான் என் தவறை உணர்கிறேன்.என் மாமா வயதில் நான் அந்த அளவு பொறுப்பை இல்லை என்பதே உண்மை. என் immaturity கண்டு வருந்துகிறேன்.
நண்பன் ரோச்விக்கையும் மறந்து விட்டேன் மன்னித்து விடு நண்பா

Sunday 20 December 2009

என் கடைசி பதிவு



















நான் சமிபத்தில் நண்பர் ஒருவரை சந்தித்தேன் . எழுத்து தான் இலக்கியம் அல்ல மனிதர்களோடு களப் பணி ஆற்றுங்கள் என்றார்.நாம் இலக்கியவாதி என்று நம்பிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வெறும் பிம்பமே என்று புரிய வைத்தார். என் மனதிற்குள் ஆத்ம விசாரணை நடத்தி பார்த்தேன்.நான் எழுதி பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை . நண்பர் குறை ஒன்றும் இல்லை அடிக்கடி என் பின்னூட்டத்தில் போடுவார்,இப்படி எழுதி எழுதி என்ன செய்ய போறீங்க என்று. நான் கேட்கிறேன் எழுதுவதற்கு தானே எழுத்து.

நீங்கள் சொல்வது சரியே நண்பரே அதனால் தான் எழுதாமல் களப் பணி ஆற்றபோகிறேன்.அதற்காய் தோழர் தளபதியுடன் பேசி கொண்டிருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன்,இறங்க வில்லை என்றாலும் எழுதபோவதில்லை .

களப் பணி செய்து ஓரளவு எனக்கு தகுதி வந்தால் எழுதுவேன் நண்பா.குறை ஒன்றும் இல்லை அவர்களே நீங்கள் சொல்வதில் நிஜம் உள்ளது ஆனால் ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதுகிறீர்கள் அதனால் என்ன நடக்க போகிறது.எழுத்து என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. நீங்கள் களப் பணியில் விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.எழுதுபவன் கட்டாயம் தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று எழுதினேனே தவிர யாரும் ஹிட்ச்க்கு எழுதவில்லை நண்பா.

எனக்கு சினிமா நன்றாகவே தெரியும்,ஒரு பட விமர்சனம் எழுதினால் இதை விட எனக்கு ஹிட்ஸ் வரும் நண்பனே. இதற்கு தான் எழுதினேன் என்று சொன்னது கொஞ்சம் புண்படுத்தியது .என் நண்பர்களிடம் கேட்டுப்பார் ,எனக்கு இந்த ஊடகங்கள் எல்லாம் தெரியும் முன்னரே, என் ரூமில் மேட்ச் பார்த்த உயிர் நண்பன் ,அதாவது போரின் போது மேட்ச் அதே இலங்கையில் நடந்தது அப்பொழுது மேட்ச் பார்த்த நண்பனிடம் பேசாமல் இருந்தேன் . அது என்ன ஹிட்சுக்காகவா சொல் நண்பா.

இன்னொரு முக்கிய காரணம் ஒன்று உண்டு.நான் அவ்வளவு சொல்லியும் பதிவு எழுதியும் 'வேட்டைக்காரன்' படத்திற்கு போய் மறுபடியும் அசிங்கபடுத்தி விட்டார்கள் உயிர் நண்பர்கள்.இந்த குழுவில் ஈழ பிரச்சனை பற்றி நன்றாய் தெரிந்த என் நண்பனும் அடக்கம் என்னால் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் இருக்க முடியவில்லை.என்னால் என் உயிர் நண்பனை பார்க்க வைக்க முடியாமல் இருக்க வைக்க முடியவில்லை நான் எல்லாம் எழுதி என்ன மயிறவா புடுங்க போகிறேன்.

நாமெல்லாம் முத்துக்குமரனை பிரபாகரனை மறந்து விஜய்யை நியாபகம் வைத்திருக்கிறோம் என்ன கொடுமை நண்பா. நாங்கள் படம் பார்க்காததால் பிரச்சனை தீருமா என்று நண்பன் கேட்டான். ஒரு உயிர் போகிறது கொண்டு வர முடியாது,சன் டிவியில் படம் பார்பீர்களா அழுக மாட்டீர்களா என்ன???????????கண்ணீரை காசாக்கியவனிடம் துரோகியுடன் படம் பார்க்க வேண்டுமா. நண்பனே நீ களப் பணி ஆற்ற சொல்லவில்லை,உயிர் தியாகம் செய்ய சொல்லவில்லை,படம் பார்க்காமல் துரோகியின் படம் பார்க்காமல் இருந்திருக்கலாமே.

நண்பா நீ சொல்வது சரி தான்.நான் சொல்லி கேட்க என் நண்பர்கள் கூட இல்லை .நாமெல்லாம் வணிக குப்பை ஆகி விட்டோமா. நான் முடிந்தால் களப் பணி ஆற்ற போகிறேன். இல்லை என்றால் என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க போகிறேன்.அதனால் தான் ஈரோடு பதிவர் சந்திப்பிற்கு கூட செல்லவில்லை.மனது ஒரே குழப்பமாய் உள்ளது.போலித்தனமாய் எழுதி வெறும் பாராட்டுகள் வாங்க விருப்பமில்லை.இந்த புத்தக கண்காட்சியில் புத்தகம் கூட வாங்க போவதில்லை. நம் இலக்கியத்தால் என்ன சாதித்து விட்டோம் என்ற கோபம் ரணம் இருக்கிறது நண்பா......!

இது தான் கடைசி பதிவு.பதிவுலகில் எனக்கு கிடைத்த நண்பன் அரவிந்த்.
அவனை பிடிக்கும்.அரவிந்த் நேர்மையானவன். நான் அவன் பதிவு படிக்கவில்லை என்றாலும் எனக்கு வந்து பின்னூட்டம் போடும் பாலாசி.அவன் பண்பு பிடிக்கும்,நண்பா நீ ஒரு சிறந்த மனிதன் பலமுறை உணர்ந்து இருக்கிறேன்.

நான் மயங்கும் எழுத்து கதிர் அண்ணன் மற்றும் நரசிம் அண்ணன். நான் வாசகனாய் படித்து கொண்டிருப்பேன்.என்னுடைய அண்ணன் என்றால் பிரபாகர் அண்ணனை சொல்வேன்.
பிரபாகர் அண்ணனே வெகு நாட்களாய் உனக்கு பின்னூட்டம் போடவில்லை .இனி பின்னூட்டம் மட்டுமே தம்பி பதிவுலகம் விட்டு விலகுகிறேன்.எனக்கு பாமரன் ஐயா கலகல பிரியா பிடிக்கும்.வசந்த் கற்பனை அபாரம்.மேலும் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.என்னை உணர வைத்த நண்பன் குறை ஒன்றும் இல்லை.


கடைசியாய் என் உயிர் தங்கை திவ்யா......நான் அரசியலே எழுத போவதில்லை ஏன் என்றால் நான் எழுதவே போவதில்லை.

Saturday 19 December 2009

சே--- மனிதன் என்ற வார்த்தையின் பொருள்





















நமக்குள் இந்தியன் என்ற உணர்வு இருக்கும்.உங்கள் சுதந்திர போராட்டாம் என்றால் உங்களுக்குள் உணர்வு வரும்.அப்படி என்றால் நாம் இந்தியன் மட்டுமே .தமிழுக்காக உணர்விற்காக பேசினால் நான் தமிழன் மட்டுமே. எனக்கு தெரிந்து
மனித வரலாற்றிலே மனிதன் என்ற ஒரே தகுதி இருப்பவன் என் தலைவன் 'சே குவேரா '. ஏதொ ஒரு தேசத்தில் பிறந்து ,ஊர் சுற்ற போய் உலகம் முதலாளித்துவம் புரிந்து,மக்கள் மனிதன் துன்பபடுகிறான் என்று உணர்ந்து,மனிதனுக்காக போராடிய
ஒரே தலைவன்.


சே பிறந்தது அர்ஜென்டினா,கியூபா சுதந்திரத்தில் போராடுகிறான்.கொரில்லா யுத்தம் செய்கிறான்.பிடலுக்கு நம்பிக்கையாய் இருக்கிறான்.கியூபா விடுதலை அடைகிறது,சேக்கு நிதி துறை மந்திரி இலாகா ஒதுக்கப்படுகிறது.அதை உதறி விட்டு எனக்கு பொலிவியாவில் வேலை இருக்கிறது,என்று மறுபடியும் போராட்டத்தில் இறங்கினான்,ஏதொ ஒரு பிணை கைதி போல இறந்து போனான்.சே நினைத்திருந்தால் கியூபாவில் அவரே ராஜா,ஏன் கியூபா கூட அவர் தேசமா என்ன.


எங்கு மனிதன் துன்பப்படுகிரானோ அங்கு எல்லாம் சென்றான்,ஒரு வேலை கடவுளாக இருப்பானோ????????தன் நாடு ,தன் மக்கள் என்று சொல்லாமல் மனிதனுக்கு போராடிய ஒரே தலைவன்.சே பிடிக்கப்படுகிறான்,அவனை ஒரு பாழடைந்த பள்ளியில் சிறை வைக்கிறார்கள்.ஒரு பள்ளி ஆசிரியை சாப்பாடு கொடுக்க வருகிறாள். நான் இந்த சிறையில் இருந்து மீண்டு வந்தால் இந்த பள்ளிக்கு நிதி உதவி செய்கிறேன் என்றான்.மரணம் முன்பு கூட பதட்டம் இல்லை,அன்பு மட்டுமே வழிந்தது.


ஒரு ராணுவ வீரன் சேவை கொல்ல வருகிறான்.அவனுக்கு தெரியும் சே ஒரு உலக வரலாறு,அந்த வரலாற்றை அழிக்க போகிறோம் என்று.அவனுக்கு ஒரே பதற்றம் அவன் கொல்ல போவது ஒரு கடவுளை.சே அமைதியாய் சொல்கிறார் " நீ உன் வேலையை பார்கிறாய்,இந்த இடத்தில சுடு உயிர் வேகமாய் பிரியும்" என்று சொல்கிறார்.அவர் குருதி புனிதமானது.அவர் இறந்த பின்பு இருந்த புகைப்படம் ஏசுவை போல இருந்ததாம்.அவ்வளவு அமைதி.அவர் இறந்த இடத்தில் "அவர்கள் நினைத்து போல் அல்லாமல் உயிருடன் இருக்கிறாய் சே" என்ற வாசகம் ஏந்திய பலகை இருக்கிறது. சே என்னும் பிம்பத்தை அமெரிக்க என்ன தான் அழிக்க நினைத்தாலும் முடியவில்லை.பிம்பத்தை அழிக்க முடியும்,நிதர்சனத்தை அழிக்க முடியுமா,சே பிம்பம் அல்ல சே நிதர்சனம்


பின் குறிப்பு :
சே இன்று வணிக பொருள் ஆகி விட்டது வருத்தமே.அவர் யாரென்று தெரியாமல் அவர் படம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு செல்கின்றனர்.வரலாறு கூட அவர்களுக்கு தெரியாது.சே வணிக பொருளோ,சினிமா நாயகனோ இல்லை

தீராத பக்கங்கள்
அண்ணன் வலை பூவை பாருங்கள் சே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..................................
மனிதனாய் யோசிப்போம்

Friday 18 December 2009

திரைப்படம் காலத்தின் ஆவண குறிப்பு
















உலகத்தின் முதல் படம் திரையிடப்படுகிறது. ரயில் வண்டி திரையில் ஓடுகிறது,எங்கு தம் மீது மோதிவிடுமோ என்று அனைவரும் சிதறுகின்றனர். ஆம் திரைப்படம் மாய பிம்பம்,அது தனி உலகம்....மாய வலையில் கட்டிப்போடும் உலகம்.கண்முன்னே நடப்பது உண்மை என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் உலகம்.அந்த உலகத்தின் கடவுள் இயக்குனர். ஆம் திரைப்பட உலகத்தை இயக்குபவர்.அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது .கதாப்பாத்திரங்களை படைக்கிறார். ஒளி ஒலி கோர்க்கிறார். படச்சுருளில் ஒரு கவிதை எழுதுகிறார். தான் நினைக்கும் காட்சிகளை படம் பிடிக்கிறார்.காதல் சொல்கிறார்,நட்பு சொல்கிறார்.முதல் பிரேம் முதல் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.















ஆம் இயக்குனர் ஒரு ஆளுமை .மண்ணை பதிவு செய்பவனே மனதில் பதிவாகிறான்.
மஜீத் முதல் பாரதிராஜா வரை மண்ணை பதிவு செய்தவர்களே.திரைப்படம் காலத்தின் பதிவு, 1982 மதுரை சுற்றி கிராமம் எப்படி இருந்தது என்று தெரிய வேணுமா பாருங்கள் எங்கள் பாரதிராஜாவை..பாரதிராஜா படங்களில் கிராம இலக்கியத்தை காணலாம்,கிராம வழக்கு மொழிகளை காணலாம் . பல்வேறு பழமொழிகள் கிராம வழக்கங்களை அழுத்தமாய் பதிவு செய்தவர் பாரதிராஜா.ஈரான் பற்றி சுவடு வேண்டுமா பாருங்கள் மஜீத் படங்கள் ஈரான் குழந்தைகளின் அக வெளிப்பாடு.

இயக்குனர் என்பவர் ஒரு ஆளுமை.இயக்குனரின் மனம் எவ்வளவு ஆழமாய் உள்ளதோ அதைப் பொருத்து அவன் படைப்பு வெளிப்படும். சேரனின் படங்களில் அவர் மனித உறவுகளை எவ்வளவு மதிப்பவர் என்று வெளிப்படும்.ஆட்டோகிராப் படத்தில் அவர் தொலைந்த வாழ்க்கையை அசை போடுவார். பழைய காதலிகளை
சந்திப்பார் அது ஒரு உணர்வுப்பூர்வமான கவிதை. பாண்டவர் பூமி பார்த்து சற்று குலுங்கித் தான் போனேன்.தொலைந்த வாழ்க்கையை சேரனின் படச்சுருள் தேடிக்கொண்டே இருக்கிறது. பாலா தொலைந்த ,யாருமே கண்டு கொள்ளாத மனிதர்களையே காட்டுகிறார். ஒரு படம் இயக்குனரின் அக வெளிப்பாடு, அன்புக்காக ஏங்கித் துடிக்கும் இயக்குனர் அதை படைப்பாய்
வெளிப்படுத்துகிறார்.பாலாவின் படங்கள் உலகப் படங்கள் பார்ப்பது போல மனதை உலுக்கி விடும்.மன ரீதியான அதிக வலிகளை கொண்டவரே அப்படிப்பட்ட படைப்பை படைக்க முடியும்.

























செல்வராகவனின் படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இவர் படங்களும் பாலாவை போலவே இருக்கின்றன.மனதை போட்டு ஒரு வழி செய்கின்றன."நினைத்து நினைத்து " பாட்டு பார்க்கும் பொழுது திரையரங்கில் எத்தனை பேர் அழுதிருப்பார்கள்
என்பது அப்பொழுது விளக்கை போட்டு இருந்தால் தெரிந்திருக்கும் . காதலி இறக்கும் போது ஒரு வெறுமை இருக்குமே அதை பதிவு செய்திருப்பார் செல்வா. இவர்களின் வேர் ஆதர்ஷ இயக்குனர் பாலு மகேந்திரா.

















ஒரு பெண் எப்படி தன்னை எப்படி உலுக்குகிறாள் என்பதை சொன்ன படம் 'மூன்றாம் பிறை'.
முன்றாம் பிறை படத்தை ஷோபாவின் நீட்சியாக பார்க்கலாம்."கனவு காணும்" பாடல் காட்சி அமைப்பு போதும் அவர் எவ்வளவு பக்குவப்பட்டவர் என்று. அதனால் தான் என்னவோ அவர் வியாபாரத்திலே வெற்றி பெற வில்லை. உங்களால் வியாபாரத்தில் வெற்றி அடைய முடியாது என்ற போது எடுத்த படம் "நீங்கள் கேட்டவை".....அதாவது ரசிகர்களுக்காக எடுத்த படம் என்றே சொல்லலாம்.ஆட்டோகிராப் படத்தின் தந்தை 'அழியாத கோலங்கள்...'
அவரின் வாரிசுகள் இன்று கலக்குகிறார்கள்........பாலா ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் .ராம் கற்றது தமிழ் .ஆளுமை என்றால் அது பாலு மகேந்திரா....தலைவருக்கு பிடித்த இடம் கேத்தி.

ஒரு சிறந்த இயக்குனர் தனிமையாகவே இருக்கிறான்.அவன் படைப்பு பேசப்படுகிறது,அகத் தனிமையாக இருக்கிறான்.திரையில் ஏதோ தேடிக்கொண்டே இருக்கிறான்.அவன் எவ்வளவுக்கு எவ்வளவு மனதில் அடி வாங்குகிறானோ,அந்த அளவு அவன் படைப்பு ஆழமாய் வருகிறது. ஒரு தொலைந்தவனின் ஆழமான பதிவாய் வெயில் படம் இருக்கிறது.அது வசந்த பாலனின்
கதை. ஆம் உலகத்தை சந்தோஷ படுத்தி மௌனமாய் அழுது கொண்டே இருக்கிறான் என் இயக்குனர்.அவன் தனிமைக்கு வடிகாலாய் இருக்கிறது திரைப்படம்.

















காலத்தை இயக்குனர் டைரியில் பதிவு செய்வதை போல பதிவு செய்து கொண்டே இருக்கிறான்.ஈரான் மண்ணின் வாசனை மஜீத் படங்களில் அடிக்கிறது.தேனியின் செம்மண் பாரதிராஜா படங்களில் படிந்து இருக்கிறது.எந்த ஊர் மண் என்றாலும்,மண்ணின் வெளிப்பாடு இயக்குனர்.திரைப்படம் காலத்தின் ஆவண குறிப்பு.குறிப்பு எடுத்துக்கொண்டே இருக்கிறான் இயக்குனர்.

Thursday 17 December 2009

வேட்டைக்காரனை விரட்டுவோம் -----இரண்டு






















வேட்டைக்காரனை விரட்ட வேண்டும் .இதனால் தயாரிப்பாளர் பாதிக்க படுவாரே என்று யோசிக்க வேண்டாம்.அவர் சன் குழுமத்திற்கு படத்தை விற்று விட்டார்.சன் குழுமம் பெரும் பண முதலைகள். மக்கள் கண்ணீரை கூட விற்பனையாக்கி தொடர்கள் போட்டு காசு பாப்பவர்கள். ஒரு தடவை தோற்றால் தப்பு இல்லை.

தோற்கடிக்க வழிகள் ...........
நான் நேற்று நூறு பேருக்காவது குறுந்தகவல் அனுப்பி இருப்பேன் ......மானம் உள்ள தமிழன் என்ற வார்த்தையை சேருங்கள் படம் பார்ப்பவனுக்கு நெஞ்சு உறுத்த வேண்டும் .........நீங்கள் அதையே செய்தால் நல்லது ..............
காசு போட்டு முடிந்தால் அனைவரிடம் போன் செய்து பேசுவேன் .....அப்படியும் படம் பார்த்தால் எனக்கு யாராக இருந்தாலும் அவர் நட்பு வேண்டாம் ....................
விஜய் மேல் ஏன் இந்த கொலை வெறி என்று
கேட்கலாம் ................................ஈழம் பற்றி பேச வேண்டும் என்று
சொல்லவில்லை.....பேசி விட்டு ராகுலை பார்த்தது தவறு .....படத்திலே வசனம் பேசுவது உணர்வுகளை காசாக்குவது நியாயமா விஜய். அப்படி பேசி முடித்து ஒழுங்காய் நடந்தாயா...உண்ணா விரதம் பிரியாணி வந்தது என்று கேள்விப்பட்டேன். அது உன் பட விழாபோல் உனக்கு போஸ்டர் மற்றும் உன் பாடல்கள் ..........எதற்காக செய்கிறோம் என்று உணர்வு இல்லை உன்னிடம் ......நீ நயன்தாராவை கட்டி பிடிக்க முடியும் ஆட்சியை கட்டி பிடிக்க முடியாது...........கண்ணீரை கல்லா ஆக்காதே. படம் ஓட வேண்டும் என்றால் வேறு யாராவது மழையில் நனைய விடு .....ஈழம் கண்ணீர் பற்றி பேசி ஏமாற்றாதே ........!

பின்குறிப்பு
என் நண்பர்கள் அந்த பதிவை படித்து விட்டும் பார்க்க கிளம்பினார்கள் .....
நண்பர்களே உங்களை போராடுங்கள் என்று சொல்ல வில்லை பிரபாகரன் மாதிரி
உயிரை விட சொல்ல வில்லை ஒரு படம் உங்காளால் பார்க்காமல் இருக்க முடியுமா ........எந்த நண்பனாவது இதை படித்து விட்டு பார்க்க சென்றால் ........நான் பேச மாட்டேன் "எச்சரிக்கை அல்ல கட்டளை"

வேட்டைக்காரனை விரட்டுவோம்
















"அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்டேன் " எதற்கு கேட்டேன் என் படம் இந்தியாவை தாண்டி ஓட்ட வேண்டும் .படம் ஓட வில்லை .அடுத்து என்ன செய்ய அரசியல் . இங்கே அரசு யார் காங்கிரஸ் ,பிடி ராகுலை,அப்பாவுக்கு governer எனக்கு
தமிழக முதல்வர் பதவி. ம்ம்ம் அந்த நாளைய முதல்வர் வாங்க நா நம்ம இளைய தலைவலி மனிக்கவும் தளபதி .தளபதி ஈழ பிரச்சனை என்ன உன் கல்லா காட்டும் இடமா என்ன???????"அகதி மக்கள் பத்தி பேச எமனிடம் செல்வாயா ?????

உங்கள் மகன் என்றால் உங்களுடம் நடனம் ஆடுவார். என் ஈழ சிறார்கள் இறந்தனரே உனக்கு கண்ணுக்கு படவில்லையா......உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரியும் ...அந்த விடயத்தை ஏன் கேலி செய்கிறாய்........உன் வீர வசனம் பேச அவர்கள் தான் கிடைத்தார்களா............என்ன மானம் கெட்ட பொழப்பு........................நானும் உன் படத்தை முதல் நாள் தான் பார்ப்பேன்....உன் காதல் படங்கள் என் வாழ்வோடு ஒத்து இருந்தன. ரசித்தேன் ,ஆனால் நீ வேறு எதையாவது வைத்து அரசியல் பண்ணி இருந்தால்
பொறுத்துக்கொள்ளலாம்., ஏன் ஈழம் ????வெட்கமாய் இல்லை .....

இங்கே உன் மகன் உன்னுடன் நடனம் ஆடும் போது....ஈழ குழந்தை இழவு வீட்டில். .......! நீ நயன்தாராவை பாரு இல்லை அநோக்ஷ பாரு ,படத்தில் வீர வசனம் பேசு ,நடனம் ஆடு .....உன் வியாபார நோக்கதிற்காக எதற்கு ஈழ பிரச்சனை.......!மானமுள்ள தமிழனாக இருந்தால் பார்க்க மாட்டான் 'வேட்டைக்காரனை' .............

நீ தமிழக முதல்வராக கூட ஆகு .......தயவு செய்து ஈழம் பற்றி பேசாதே ......அண்ணா உங்களுக்கு ஆப்பு ரெடி ..........நூறு பேரிடமாவது சொல்வேன் ....படம் பார்க்க வேண்டாம் என்று .....சிங்கள பாட்டு வேறு ...........................அண்ணா பார்போம் நா எப்படி ஓடுதுன்னு ............எல்லார்டையும் சொல்வேன் நா "எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா...."

Wednesday 16 December 2009

திரும்பி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்












உன்னை பார்க்கும்
நேரத்தை விட பார்க்காத நேரத்தில்
அதிகமாய் பார்க்கிறேன் ..!
பார்க்கும் நொடியை விட...
பார்க்காத நொடியில் காதல் ஒளிந்துகொண்டிருக்கிறது.....!
'விழி மூடி தனக்குள் பேசும்' மௌனம்
என்ற 7g பாடல் கேட்கிறேன்.....!
காதலித்து கசிந்து காமுற்று காதல் வாழாது....
காதலிக்கும் போதே காதல் வாழும் ......!
நீ இருந்திருந்தால் கூட
இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது......!
போனதால் மட்டுமே அந்த சுவடுகள்
உள்ளது ......
இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள்
செத்திருக்கும்....!
உதட்டோடு உதடு ஓட்டுவதை
விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல் அதிகம் ....!
காதலித்ததை விட
நான் காதல் சொல்லும் முன்
கடந்து செல்லும் முன் ...
இந்த பார்வை காதலா என்னும் சந்தேகத்தில்
காதல் அதிகம் .....!
இப்பொழுது நீ வந்தாலும்
நீ காதலி அல்ல ....
என் காதலி நான் இமை மூடியவுடன்
எனக்குள் புகுந்து பேசுவாள் ......
அவள் வேறு
பிம்பம் வேறு .....
இமைகளை மூடுபவன்
ஒன்று தூங்குபவன்
இரண்டு காதலிப்பவன்.....
நான் காதலிப்பவன் ....!
ஆம் நீ பிரிந்ததால்
மட்டுமே காதல் வாழ்கிறது .......!
காதல் திருமணத்தில் முடிந்தால் தான்
வெற்றியா ...?
என் காதலி நான் இமை மூடும்
போது என்னை திரும்பி பார்த்துக்கொண்டே
இருக்கிறாள் .....!

Tuesday 15 December 2009

vodafone நாய்கள் ஆகிவிட்டோம்






















நான் airtel உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.அவர்கள் ஏதாவது குறுந்தகவல் அனுப்பிவிட்டு,பதினைந்து என்று கொள்ளை அடிகிறார்கள்.என்ன கொடுமை என்றால் என் நண்பனுக்கு சில நாள் முன்பு ஒரு குறுந்தகவல் 54321 அந்த மாதிரி ஏதொ எண்ணிலிருந்து "ஹாய் நான் சித்ரா" என்று ....அதற்கு பதினைந்து ரூபாய் எடுத்து விட்டனர் . என்ன மாமா வேலை பார்கின்றனவா இந்த நிறுவனங்கள். எல்லாமே காசு தானா.
அவசரமாய் customer care போன் செய்ய வேண்டுமென்றால், போன் செய்தவுடன் ....கிரிக்கெட் pack என்று ஒரு குரல் கேட்கிறது....அதற்கு பின்பு அவர்களுடைய ஏனைய விளம்பரங்கள் கேட்க வேண்டும்.......அப்புறம் தான் நீங்கள் பேச நினைக்கும் மனிதருடன் பேச முடியும்.

என்ன விளம்பரம் caller tune வையுங்கள் என்று முக்கியமான நேரத்தில் போன் செய்வார்கள் .அதுவும் நாம் ஒரு இழவு வீட்டில் வந்திருப்போம் அப்பொழுது??????சரி அந்த பாடலாவது ஒழுங்காய் இருக்கிறதா....press star to copy a song என்ன கொடுமை இந்த பண பேய்கள் உங்கள் உள்ளாடையை அவிழ்க்காமல் விடமாட்டார்கள்.

ஆசைகளை திணிக்க வேண்டியது, அழகான பெண்களுடன் தொடர்பு வேண்டுமா என்பது,
மாமா வேலைக்கும் இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை . நுகர்வு கலாச்சாரம் மிக கொடுமையாக உள்ளது. உங்களுக்கு போன் செய்து இதை பயன்படுத்துங்கள் அதை பயன்படுந்துகள் பிரஸ் 4 பிரஸ் 5 என்கிறான்.என் நண்பர்கள் மூவருக்கு அவர்கள் எதுவும் செய்யாமலேயே காசுகள் பிடுங்கப்பட்டன.மூவருமே வெகு நாள் கழித்து தான் அதை உணர்ந்தார்கள். நம்மிடம் அடிக்கடி balance check செய்யும் பழக்கம் இல்லை. அதனால் திடிரென்று ஒரு தகவல் வரும் ,நீங்கள் விளம்பரம் தானே என்று நினைப்பீர்கள் காசு
எடுத்து இருப்பார்கள்.

நான் ஒரு நாள் ஐம்பது ரூபாய்க்கு போட்டிருந்தேன்.எனக்கு இந்திய ஆஸ்திரேலியா ஆட்டம் நடக்கும் போது எத்தனை ரன்கள் என்ற குறுந்தகவல் வந்துகொண்டே இருந்தது . நான் அலுவலில் ஏதொ விளம்பரம் என்று விட்டு விட்டேன். அப்புறம் பார்த்தால் ஆறு ரூபாய் தான் balance இருந்தது. பாருங்கள் அவலத்தை...............இது எல்லாம் திருட்டு இல்லையா.அனைத்து போன்களும் அப்படியே என்று நம்புகிறேன் .......................
எதற்கெடுத்தாலும் விளம்பரம்......நாமெல்லாம் அந்த நிறுவனங்கள் பின் ஓடும் vodafone நாய்கள் ஆகிவிட்டோம்

பின் குறிப்பு :
கார்ல் மார்க்ஸ் சொன்னார்....மனிதனுக்காக பொருள் போய் பொருளுக்காக மனிதன் வந்து விட்டான் ....எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்

கவிதைக்குள் எதற்கு போட்டி....!













கவிதை போட்டிக்கு
கவிதையாம் .....!
ரோஜா நறுமணத்தை ஏன்
மல்லிகையிடம் ஒப்பிட வேண்டும் .....!
என் அம்மாவின் பாசம்
எனக்கு சிறந்தது .....!
உங்களுக்கும் அம்மா இருப்பார்
என் தங்கை திவ்யாவின்
பாசம் எனக்கு சிறந்தது .....!
உங்களுக்கும் தங்கை இருப்பாள்
அஜித் ஷாலினி அழகான
ஜோடி தான் ........!
அதற்காய் என் காதல் சொம்பையா
என்ன .....!
என் கவிதை சிறந்ததே
கவிதைக்குள் எதற்கு போட்டி....!
அன்பிற்கு எதற்கு போட்டி .....
என் கவிதையை அங்கீகரிக்க நீங்கள் யார் .......
பாரதி முதல் கவிதை திருப்பி அனுப்பப்பட்டதாம் .......
கவிதைக்கும் கலைக்கும் போட்டிகள் வைக்க வேண்டாம் .....
ரோஜா அழகு தான் ,மல்லிகையும் அழகு தானே ......
என் கவிதைகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டாம் .....
ஒரு கவிதைக்கு பரிசு கொடுத்து
மற்ற கவிதையை பரிகாசம் செய்ய வேண்டாம்.....!
கலையை அங்கீகரிக்க நீங்கள் யார் ???????
கவிதை என்ன ஓட்டப்பந்தயமா

Monday 14 December 2009

எந்த மழைத் துளியும் நனைவதில்லை





















எந்த மழைத் துளியும்
நனைவதில்லை ....!
எந்த வெயிலும் சுடுபடுவதில்லை ...!

கண் இருக்கும்
மனிதன் தன் பார்க்க முடியாது .....
பார்த்தேன் என்னை பெண் பாலாய்.....!
என் கண் மோதும் போது....
என் கண்ணே என்னை பார்த்தது ....
உன் கண்ணில் ......

மழை நனைந்தது
வெயில் சுடப்பட்டது...
என் கண் என் கண்ணை பார்த்தது ....
தன்னிலை அறிவதே ஆன்மிகம் ....!

ஒரு முறை காதலித்து விடு .....
தன்னிலை அறிய வேண்டும் ...!

Sunday 13 December 2009

தோற்றமயக்கம்
















மணி எட்டு இந்த நொடி,
அடுத்த நொடி வரை,
தோற்ற மயக்கமாய் காலன்
நொடிக்கு நொடி வரைந்து
அழித்துக் கொண்டே இருக்கிறான்...!
திமிராய் நான் கண்ணாடி
முன் சொன்னேன் நான் உண்மை நீ பிம்பம் என்று ....!
அது எத்தனை பிம்பத்தை பார்த்திருக்கும் ...
நீயும் பிம்பமே முட்டாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டது.
மணி எட்டு இந்த நொடி,
அடுத்த நொடி வரை,
தோற்றமயக்கம் .....!

பின்குறிப்பு:
உரையாடல் போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை

Saturday 12 December 2009

சாருவிற்கு வாழ்த்துக்கள்

















நேற்று புத்தகம் வெளியீட்டு விழா,சாருவின் புத்தகங்கள்.

1. கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும் , அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்கின்றன .

ரூ. 230/-



2. வாழ்வது எப்படி ?

வாழ்வின் எளிமையான, சுவாரசியமான சம்பவங்களை சாரு நிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன் , கனிமொழி , பீர்பால் , வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வேவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன .

ரூ. 50/-



3. கெட்ட வார்த்தை

சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.

ரூ. 150/-



4. மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய , ஆப்பிரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சார தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவியிலிருந்து ஆனந்த் அண்ணாமலை எழுதிய கடிதங்களை சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு அதற்கு பதிலும் எழுதினார். அதன் தொகுப்பே இந்த நூல் .

விலை: ரூ.140/-




5 நரகத்திலிருந்து ஒரு குரல்


சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயற்சிக்கும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைபூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.

விலை: ரூ.120/-


5.அருகில் வராதே

வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இது. இவை வினா-விடைகள் என்தைவிட சாரு தனது வாசகர்ளுடன் தொடர்ந்து நடத்திவரும் நீண்ட உரையாடலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். முகமற்ற வாசகர் களின் கேள்விகளுக்கு சொல்லப்படும் பொதுவான பதில்களிலிருந்து மாறுபட்ட இந்த நூல் ஒரு அந்தரங்கமான தொனியை உருவாக்குகிறது.

விலை: ரூ.120/-



7 அதிகாரம் அமைதி சுதந்திரம்

சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் , தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன .

விலை: ரூ.40/-




8. கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்

சாரு நிவேதிதாவின் இலக்கிய – தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்துபட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல; அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.

விலை: ரூ.115/-




9 ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்படட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.

விலை: ரூ.85/-


10.ரெண்டாம் ஆட்டம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ ரெண்டாம் ஆட்டம் ’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், அகஸ்தோ போவாலின் ’ கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர் ’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன் எப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை

விலை: ரூ. 50/-


சில சொந்த காரணங்களால் போக முடியவில்லை.சளைக்காமல் பத்து புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் புத்தகம் எழுதி கொண்டே இருக்கிறார் அவர் புத்தகம் பற்றி
பேசாமல் அவரை எதிர்த்து கொண்டே இருக்கின்றனர் நேற்று என் வலைப்பூவை வேறு சாரு தன் வலைத்தளத்தில் ஏற்றி இருந்தார்.இது மிக பெரிய அங்கிகாரம்.சாரு வளர்த்து வளர்ந்தவர்கள் நிறைய பேர். இதை சாருவின் அடி ஆள் என்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே.சாரு ஒரு கோமாளி என்பது அதை நீங்கள் படித்தால் நீங்கள் எவ்வளவு பெரிய கோமாளி???அதுவும் என் போன்ற ஜால்றவிற்கு ஏன் பின்னூட்டம் போடா வேண்டும்.....அப்பொழுது நீங்கள் ஜால்றவையே அங்கிகாரம் செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம். பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்.

நான் சாரு என்றால் படிப்பேன்.எனக்கு நிறைய மாற்று கருத்து உண்டு ,ஆனாலும் படிப்பேன். நீங்கள் சொல்வது எல்லாம் மாற்று கருத்தாய் தெரியவில்லை சாரு என்கிற தனிமனித எதிர்ப்பு தெரிகிறது நண்பர்களே.எதிர் கருத்து இருக்கலாம் ஆனால் ஒரு தனிமனித எதிர்ப்பு தவறு.சாருவிற்கு இளையராஜா பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கும் அதற்காக எல்லாம் சாருவை வெறுக்க முடியாது. ஏன் சாரு மேல் ஒரு சிலருக்கு அவ்வளவு ஆத்திரம்.அவர் மனதில் தோன்றுவதை சொல்கிறார் அது பிடிக்கவில்லை.

சாருவினால் நான் உளவியல் ரீதியாக நிறைய கற்றுகொண்டிருகிறேன்.நான் மேம்பட்டு இருக்கிறேன்,அது எனக்கு தெரியும்.எனக்கு உலக இலக்கியம் தெரியாது,உலக இலக்கியம் என்றால் என்ன படிக்கும் மனிதன் மனது மேம்பட வேண்டும் .எனக்கு சாருவினால்
சில உளவியல் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.என் பார்வை விசாலம் அடைந்து உள்ளது.நான் உண்மையை சொல்கிறேன். சாருவின் அடி ஆள் என்றால் ஆயிரம் பேர் பாராட்டினால் அதை விட ஐந்து மடங்கு எதிர்ப்பு வரும் என்று எனக்கு தெரியும்.அதற்காக எல்லாம் பயந்தால் முடியுமா.நான் மிகத்தெளிவானவன் என்று சொல்ல மாட்டேன். உலகில் மிகத்தெளிவானவன் என்று யாரும் இல்லை.நீங்கள் சொல்லும் இலக்கியவாதி கூட குப்பையாய் இருக்கலாம் நீங்கள் தெளிவில்லாமல் இருக்கலாமே?????நான் மேம்படிருக்கிறேன் நான் பாரதி பார்த்தது இல்லை......

எனக்கும் சாரு மீது மாற்று கருத்துக்கள் உண்டு.நிறைய கேள்விகளும் உண்டு??? இளையராஜா ஏன் பிடிக்காது.அமீரை சொன்னவர் ஏன் மிஸ்கின் நந்தலாலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என்று கேள்விகள் எழும்.நான் அல்லக்கை இல்லை????நீங்கள் சொல்கிறீர்கள் நான் அப்படி தான் என்கிறேன். சாரு தவறாக எழுதியது என் கண்ணில் பட்டது என்றால் கேட்பேன்.......ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதாலேயே அல்லக்கை என்று சொல்ல கூடாது.

ஏன் அவர் எழுத்தை பற்றி விசாரிக்காமல் அவரை மட்டும் பற்றி கவலை படுகிறீர்கள் ......நான் அவரின் வாசகன்.....நீங்கள் நினைத்தால் அடி ஆள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்.

Friday 11 December 2009

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்

















ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந்த அறுபது வயதில் நாம் ஒரு நல்ல நடிகனை இழந்திருக்கிறோம்,ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்திருக்கிறார்.ரஜினி நடித்த படங்களில் எனக்கு பிடித்தது நடித்ததில் சிறந்தது 'ஆறிலிருந்து அறுபது வரை'.ரஜினி வசூல் ராஜாவாய் இருக்கிறார் அதை போல் இப்பொழுது அவரால் நடிக்க முடியாது. இன்று அவருக்கு அகவை அறுபது. நடிகனை இழந்திருக்கிறோம் நாம்.

ரஜினி அற்புதமாய் நடித்த படங்கள் பல.அதில் 'முள்ளும் மலரும்' மிகவும் பிடித்த படம் .தனக்கும் தங்கைக்கும் இடையில் ஒரு காதலன் வருவான் ரஜினியால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அண்ணன் தங்கை உறவை நுட்பமாய் செதுக்கிய படம். என்னைப்பொருத்தவரை 'முள்ளும் மலரும்' உலக சினிமா. ரஜினி நடித்த ஒரே காதல் படம் 'புதுக்கவிதை'.பெரிய நடிகர் என்றால் நகைச்சுவை நடிப்பில் குழந்தையை போல் மாறி விடுவார்.'தில்லு முல்லு' ஒரு சிறந்த உதாரணம்.குழந்தைகளுக்கு இன்று ரஜினியை பிடிப்பதற்கு காரணம் அவர் நகைச்சுவை பிம்பமே தவிர சூப்பர் ஸ்டார் பிம்பம் இல்லை.

என்னை பொறுத்தவரை கமலை விட ரஜினி சிறந்த நடிகர். கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார். 'தளபதி' படத்தில் சின்னத்தாயவள் பாடலில் கொஞ்சமாய் வாய் திறப்பார் அது நடிப்பின் சிறந்த உதாரணம்.ரஜினி 'ஒரு கூட்டு கிளியாக' பாடலில் தம்பியாக இருப்பார்,காண்போர் அனைவரும் தன்னை தம்பியை உணர்வார்கள்.'நாம்மை போல அண்ணன் தம்பி' என்று பிரபுவை பார்த்து பாடும் போது நாம் அண்ணனாய் உணர்வோம்.ரஜினி நடிப்பு நம் கலாச்சாரத்தோடு இணைத்து இருக்கிறது.

'பாட்ஷா' இன்றும் நான் பிரமிக்கும் படம்.'நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ...' என்று சொல்லும் போது ..அதிரும் அரங்கம்.ஆனால் இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார் கதாநாயகனாய் அனைத்தும் செய்துவிட்டார். ஒரு நடிகனாய்,ஒரு நடிகனாக.........ஒரு நடிகனை நாம் இழந்து சூப்பர் ஸ்டார் பெற்று இருக்கிறோம்.

சத்யராஜ் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் காவேரி பிரச்சனை என்றால், ஹொகேனகல் பிரச்சனை என்றால் ரஜினியை கேட்காதீர்கள் முதல்வரை கேளுங்கள்,ரஜினி ஒரு நடிகர் மட்டுமே,யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேளுங்கள்,வீணான மலிவான விளம்பரம் செய்ய வேண்டாம்.


ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எப்பவுமே உச்சம் தான்.நீங்கள் ஏன் அமிதாப் வழியில் 'பா' போன்ற படத்தில் மாதவன் போன்றவருக்கு மகனாய் நடிக்ககூடாது. மாதவன், மீனா குழந்தையாக.சூப்பர் ஸ்டாரை நல்ல நடிகரை பார்க்க ஆசை. மீனா அங்கிள் என்று கூப்பிட்டு,அவரே கதாநாயகியாய் நடித்து,அவருடனே பிள்ளையாய் நடித்த பெருமை வருமே. நான் இயக்குனர் ஆனால் கட்டாயம் 'பா' படம் நீங்கள் நடிக்க வேண்டும் வாழ்த்துக்கள்.உங்களை நல்ல நடிகனாய் பார்க்க வேண்டும்

பொக்கிஷம் மற்றும் city of god ஏற்படுத்தும் ரசனை























போன பதிவு எழுதி இருந்தேன் அதற்கு கேபிள் சங்கர்,ஜெட்லி அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.அதற்காய் தனி பதிவு.முதலில் ஜெட்லி அவர்களே சினிமா பார்த்து யாரும் கெடுவதும் இல்லை திருந்துவதும் இல்லை என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு 'eek thuje keliye ' படம் தெரியுமா.அந்தப் படம் பார்த்து நூறு காதல் ஜோடிகள் இறந்து போனார்களாம். அதற்காக தான் பாலச்சந்தர் புன்னைகை மன்னன் என்னும் பதத்தை எடுத்தார்.சினிமா ஒரு ஆளுமை தலைவரே.ரஜினி பார்த்து புகைதவர்கள் அதிகம்,ரெட் படம் வந்த போது கல்லூரியில் அதே போல மொட்டை போட்டு குங்குமம் வைத்தவரை எனக்கு தெரியும்.

'சிகப்பு ரோஜாக்கள்' வந்த போது அதை போலவே ஒருவன் கொலை செய்து இருக்கிறான்,நீ ஏன் கொலை செய்த என்று கேட்டதற்கு சிகப்பு ரோஜாக்கள் பார்த்து கொலை செய்தேன் என்று சொல்லி இருக்கிறான் இது வரலாறு. முதல் படம் திரையிட்ட போது திரையிலே ஒரு ரயில் ஓடி இருக்கிறது அதை பார்த்து அனைவரும் ஓடி இருக்கின்றனர்,திரைப்படம் ஒரு ஆளுமை நண்பரே.

'அக்னி நட்சத்திரம்' பார்த்து பீர் சாப்பிட்ட பெண்கள் இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்த பெண் பீர் குடித்து மாட்டிக்கொண்டாள்என்ன என்று கண்டித்த போது முதல் நாள் படம் பார்த்திருக்கிறாள்,அதன் தாக்கம். இங்கே சினிமா கடவுளை போன்றது ,அது
ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது.இங்கே ரஜினி அஜித் விஜய் போன்றவர்கள் கடவுள் பாமரனுக்கு.அவர்கள் எதை செய்தாலும் இங்கே அதே செய்யும் கூட்டம் உண்டு.

நீங்கள் இந்த செய்தி படித்தீர்களா என்று தெரியாது .சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு. ஒரு சிறுவன் அவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்டான். அதை மறைக்க நாய் வந்தால் மோப்பம் பிடிக்கும் என்று சிறுவர்களுக்கு பயம் அதனால் மிளகாய்பொடி தூவி இருக்கிறார்கள்....சொல்லித் தந்த படம் 'கில்லி'.இது உண்மை நண்பரே கொஞ்சம் நாள் முன்னாடி வந்த செய்தி. சிறுவர்களிடம் கொலை வெறியை ஏற்றி விடுவது சினிமா என்னும் ஊடகம். அடித்தால் தான் நாயகன் என்று இளமையிலேயே அவன் மனதில் விதைக்கபடுகிறது.நடை உடை பாவனை முதற்கொண்டு நாயகன் ஒரு சிறுவனை கவர்கிறான்.

அடுத்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களே,உங்களுக்கு திரைக்கதை பற்றி நான் சொல்லத் தேவை இல்லை. ஏன் வேகமாய் இருந்தால் தான் நல்ல திரைக்கதை என்று ஒத்துக்கொள்வீர்களா. பொக்கிஷம் படம் சிறிது அளவாவது கதையை மீறி சென்றதா. நீங்கள் கேட்கலாம் எல்லா கடிதத்தையும் படித்துக்காட்ட வேண்டுமா என்று. இப்பொழுதெல்லாம் போன் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது,காத்திருக்கும் தவிப்பு இல்லை. ஆனால் சேரன் சொன்ன காலத்தில் காத்திருக்கிறான் கடிதம் போய் சேர்ந்ததா என்று பார்க்கிறான்.தகவல் தொடர்பு இல்லை,அவன் கடிதம் எழுதுகிறானே அது தானே பொக்கிஷம் சங்கர். கடிதம் எழுதுவது தான் கதையே. அவன் கடிதம் கொண்டு சேர்க்க எவ்வளவு சிரம பட்டான்,என்பதில் தான் கதையின் உயிர் நாடி தலைவரே. கவிதை போல ஒரு படம்,கவிதை பிடிக்கவில்லை என்றால் நல்லா இல்லை என்று அர்த்தமா. இந்தக்கால காதலை இடையிடையே காண்பிப்பார்,இந்த காதலில் தினமும் பேசுவார்கள் ஆனால் ஆழம் இருக்காது.

காத்திருப்பது தான் காதல் ...அந்த காத்திருப்பு தான் திரைக்கதை.இந்த கதை இப்படி தான் இருக்கும் தலைவரே.அவன் எவ்வளவு ரசித்து எழுதினான் கடிதத்தை என்பதை அனைத்து வரிகளையும் காட்டுகிறார்,உணர்வுகளை காட்டுகிறார்.அவன் எழுதும் போது ஏற்படும் வலி, போஸ்ட் ஆபீசில் சீல் குத்தும் போது ஏற்படும் வலி ஒரு கவிதை .சினிமா தெரிந்த நீங்கள் போய் படம் திரைக்கதை நல்லா இல்லை என்று சொல்ல முடியாது. கவிதைகள் படிக்கும் போது மெதுவாகத் தான் படிக்க வேண்டும்.நீங்கள் திரைக்கதையில் வெற்றி பெற்ற படம் என்று சொல்லும் படங்களில் தேவை இல்லாத நகைச்சுவை காட்சி, சண்டைக் காட்சி இருக்கும்.பொக்கிஷம் படத்தில் அப்படி காட்சிகள் இருந்ததா......'கவிதைகள் மெதுவாக தான் படிக்க வேண்டும்' கேபிள் சங்கர் அவர்களே.

Thursday 10 December 2009

உங்கள் வீட்டில் கூட 'city of god ' குழந்தை இருக்கலாம்













குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி 2012 படம் பார்த்தீர்களா. அதற்கு அவர் சொன்ன பதிலில் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் ,உலகில் உள்ள அனைவரும் இறந்து கொண்டிருக்க நாம் கதாநாயகன் தப்பிக்கவேண்டும் என்று படபடக்கிறோம் இது தான் 'director touch ' என்று எழுதி இருந்தார்.இந்த ரசனை சரியா அரசு அவர்களே.இது சுயநலம் என்னும் தளத்தில் அல்லவா இருக்கின்றது.அதே படத்தின் விளம்பரத்தை தினத்தந்தியில் பார்த்தேன் "குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களாம்" என்ன கொடுமை இது.

இப்பொழுது ரேணிகுண்டா என்னும் படம் வந்திருக்கிறது.படம் முழுக்க வன்முறை,ஏன் வன்முறை செய்பவன் தான் கதாநாயகனாய் இருக்க முடியுமா.அதற்கு ஆனந்த விகடனில் கொடுத்த மதிப்பெண் 43 . அந்த சிறுவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை கூட சரியாக காட்டவில்லை.கேட்டால் 'city of god ' படத்தை உதாரணம் சொல்கிறார்கள். ஏன் சுப்ரமணியபுரம் பருத்திவீரன் படங்களில் கூட வன்முறை கலந்து இருக்கிறது. heroism கொஞ்சம் அழகாய் சொல்கிறார்கள். ஊரில் வெட்டியாக இருக்கிற கதாநாயகன் அவனுக்கு ஒரு காதல் கேட்டால் யதார்த்த சினிமா என்பது. ஏன் under world வாழ்கையை படம் பிடித்தால் தான் யதார்த்தமா. இதற்கு அஜித் விஜய் போல் பாமரனுக்கு படம் பண்ணி விடலாம்.

சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் தலையை சீவும் போது அவர் மூஞ்சியில் ரத்தம் பீச்சீ அடிக்கும் அதற்கு அனைவரும் கை தட்டுகிறோம்,நம் ரசனை கீழ் தரமாய் போகிறது. அது மேம்பட்ட ரசனை போல நினைத்துக்கொள்கிறோம். ஹீரோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அடுத்தவன் மனைவியை பார்க்கும் கலாச்சாரத்தை ஹிந்தியில் ஷாருக் கான் படத்திற்கு படம் செய்கிறார்.

இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் 'யோகி' 'ரேணிகுண்டா' 'நான் அவன் இல்லை' இதில் எந்த நாயகனாவது நல்லவனா????சொல்லுங்கள். ஏன் உலக சினிமா பார்த்து நகல் எடுக்கிறார்களே children of heaven போன்ற படங்கள் இவர்கள் கண்களுக்கு தெரியாதா .....இவர்களை சொல்லியும் குத்தம் இல்லை....நம் சேரன் பொக்கிஷம் என்ற படம் எடுத்தார் அது 'the classic ' என்ற படத்தின் தழுவல். படம் பார்த்தவர்கள் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டார்கள் ஏன் என்றால் சேரன் கத்தி தூக்க வில்லை post box நனைய கூடாது என்று குடை பிடித்தார்.ரசிகர்கள் அதற்கு பெயர் மொக்கை என்று வைத்து விட்டனர் என்ன சொல்ல????

நீங்கள் வன்முறையை ரசித்தால் உங்களுக்குள் ஒரு மன நோயாளி இருக்கலாம்,இந்த ரசனையை வளர்க்க வேண்டாம்.ரசிகர்களே இது தப்பான ரசனை உங்கள் வீட்டில் கூட 'city of god ' குழந்தை இருக்கலாம்.

Wednesday 9 December 2009

வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன




"நீ இல்லாம இருக்க முடியாது.." எத்தனையோ

முறை சொல்லிருக்கிறேன்..?

பிறந்தவுடன் தாய் கண்களை பார்த்து,

மூன்று வயதில் பொம்மையுடன்......

இரண்டாம் வகுப்பு ஆசிரியையிடம்...,

ஈர்ப்பிலே முதல் காதலியிடம்,

உயிர் நண்பனிடம்....

உயிர்த் தங்கை திவ்யாவிடம்..........



விடம் விடம் விடம் ......!
சொல்பவனும் கேட்பவனும் உயிருடன் இல்லை ....
வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன .... !



பின் குறிப்பு:
இது போன கவிதை மாதிரியே இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.இது முதலில் எழுதப்பட்டது .....
இது ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்ட கவிதை வருமா வராதா என்று தெரியாது.....???நான் காதலியை பற்றி எழுதியதால் என் தங்கை திவ்யா கோபித்துக்கொண்டாள்.....அதனால் இது நான் எழுதிய அசல் ,இதனுடைய நகல் தான் போன கவிதை,உறவுகளுக்குள் இருப்பதை வெறும் காதலாக நகல் எடுத்திருந்தேன்....நேற்று தங்கை வீட்டில் அதாவது என் வீட்டில் internet இணைப்பு வந்தது. அரசியல் பற்றி எழுத வேண்டாம் எழுதினால் பேச மாட்டேன் என்றாள் ................இனி என் பதிவுகளில் அரசியல் சுத்தமாக இருக்காது .......................மன்னிக்கவும் நண்பர்களே .....என் தங்கை சொன்னால் பதிவுலத்தில் இருந்து கூட விடை பெறுவேன் ..............என் தங்கையை விடவா எல்லாம் முக்கியம் ....

Tuesday 8 December 2009

இறந்த பின்பு ஆவிகளாக ......!
















நான் பேசிய
வார்த்தை அவள் வார்த்தையோடு
முத்தமிட்டுக்கொண்டது காற்றில் ....!
நான் பார்த்த முதல் பார்வை நொடி ...
எங்கோ என் கவிதையில் பதிவு செய்யப்பட்டு இருந்தது....!
நொடிக்கு நொடி அவள் வீட்டுத் தெருவில்
நடந்த கால்கள் காலடிகளை விட்டுச் சென்றன ....!
சுவடுகள் உயிரோடு இருக்கின்றன.....
உதடுகள் உயிரோடு இல்லை வார்த்தைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன...!
ஏய் காதலியே .....
என்றாவது ஒரு நாள் சந்திக்க வேண்டும் அதே தெருவில் ....
இறந்த பின்பு ஆவிகளாக ......!

பின் குறிப்பு:
இது ஐம்பதாவது பதிவு

Monday 7 December 2009

நீரோ மன்னனும், இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசியும்



















நீரோ மன்னன் ரோம் பற்றி எரிந்த போது வயலின் வாசித்துக் கொண்டிருந்தவன்.கலைஞர் விழா நடுத்துவது தனக்கு தானே விருதுகள் கொடுப்பது அதைப் போலவே உள்ளன.நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சாரம் நான்கு மணி நேரம் கிடையாது.ஆனால் கலைஞர் பிறந்தநாளோ அழகிரி பிறந்த நாளோ என்றால் மின்னொளி போட்டி. அதை நடத்துவது கலைஞர் பேரன் துரை தயாநிதி.மதுரையில் உள்ள முக்கிய ஆட்டக்கார்கள் அவர் அணியில் ஆடுவார்கள்,ஜெயிப்பது அவர்கள் அணியே .

மின்சாரம் இல்லையாம் மின்னொளி போட்டி தேவையா. அதே நேரத்தில் சென்னையில் நடந்த போட்டியிலும் கலைஞர் பேரனே ஜெயிப்பார். சரி பேருந்து பிரச்சனைக்கு வருவோம்,நான் மதுரை எங்க ஊர் கிழவிகள் 50 பைசா கூட இருந்தாலே அரை மணி நேரம் காத்து இருந்து போபவர்கள். மதுரை சுற்றி சொகுசு பேருந்து மட்டுமே ஓடுகிறது. பணக்காரன் மட்டும் தான் பேருந்தில் செல்ல வேண்டுமா என்ன????

என்ன கொடுமை?????பாவம் எங்க ஊரு கிழவிகள்.காலை காய்கறிகளை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு செல்லும் கிழவிக்கு கிடைப்பது சொற்பமே அதையும் பிடுங்கி விடுகிறார்கள்.மக்கள் வரிப் பணம் யாருக்கு போகிறது. கமலஹாசன் ஏதோ சினிமா சம்பந்தமான விழா எடுப்பாராம்,அதற்கு ஐம்பது லட்சம் தருவாராம்,ஏன் கமலிடம் காசு இல்லையா.கமல் வருமான வரி கூட கட்ட மாட்டாராம்.....கேள்வி.சினிமா எடுப்பவர்கள் ஏழையா எதற்கு வருமான வரி. புதிதாக மகள் பிறக்கிறது ஒருவனுக்கு அவன் தமிழிலே பெயர் வைக்கிறான் அவனுக்கு வருமான வரி விளக்கு தருவாரா? "மானாட மயிலாட' இவர் தமிழிலே பெயர் வைத்தது,நமீதா எவ்வளவு அழகாய் தமிழ் பேசுகிறார் பார்த்தோமே. அதைப் போல ஆட்ட நிகழ்ச்சிகள் தமிழிலே கலாச்சார படுகொலை செய்கின்றன.

சரி தமிழ் அறிஞர் என்று சொல்கிறார்.தமிழ் நன்றாய் தெரிந்தவர் தான் ஆனால் அவர் தான் தமிழ் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் லியாகத் அலி கான் கூட தான் நன்றாய் வசனம் எழுதுகிறார். புத்தக கண்காட்சியில் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும் ,அண்ணா அறிவாலயம் ஸ்டால் கூட்டமே இல்லாமல் இருக்கும்.சில புத்தகங்கள் எழுதியதாலேயே அவர் தான் தமிழ் என்று சொல்ல முடியாது. புத்தகம் அதிகம் படிப்பவர்கள் கூட கலைஞர் கண்டால் ஓடுகிறார்கள்.

உளியின் ஓசை சிறந்த வசனமாம்,கொடுமை. கமல் கலைஞரை பார்த்துதான் திரைக்கதை எழுத கற்று கொண்டதாக கதை விடுகிறார். ஏன் கமல் கலைஞர் வசனத்தில் இன்னும் நடிக்கவில்லை,அரசியல் புரிகிறதா நண்பர்களே.கலைஞர் விழா எடுப்பதும் அனைவரும் புகழ்ந்து பாடுவதும் "இம்சை அரசன் 23 புலிகேசி" நியாபகப்படுத்துகிறது.சரி அதை விட கனிமொழியை கவிஞர் கவிஞர் என்று சொல்கிறார்களே.அவர் கவிதை புத்தகம் எங்கு கிடைக்கிறது.அப்படி எத்தனை புத்தகம் எழுதி விட்டார். இப்படி அரசியல் பண்ணி தான் தலைவருக்கும் கலைஞர் பட்டம் கிடைத்திருக்குமோ??????சரி கலைங்கராய் இருங்கள் எப்பொழுது முதவராய் பணியை செய்யப்போறீர்கள். சரி நீங்கள் 'பெண் சிங்கம்' வசனம் எழுதவதில் இருப்பீர்கள்.

படம் முடிந்ததும் வட்டம் மாவட்டம் எல்லாரிடம் நூறு நூறு டிக்கெட் அவர்கள் செலவிலே எடுக்க சொல்லி கொடுமை செய்வீர்கள்.'கள்ளிக்காட்டு இதிகாசம்' படித்து உச்சத்தில் இருந்த வைரமுத்து,இறங்கிக் கொண்டே இருக்கிறார்,என் மனதில்
எனக்கு உங்களை புகழும் வைரமுத்து வாலி பார்க்கும் பொழுது 23 புலிகேசி படத்தில் இருவர் புலிகேசியை பாராட்டிக்கொண்டே இருப்பார்களே அவர்கள் நியாபகம் வருகிறார்கள். நான் இப்பொழுது எல்லாம் வைரமுத்து வாலி படிப்பதில்லை.

Friday 4 December 2009

சாரு நரசிம் அரவிந்த் நான் - சாருவின் புது அடி ஆள்
























மிக பெரிய நட்சத்திர பதிவர் நரசிம் என்னை அறிமுக படுத்தியதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்கிறேன்.முதலில் என் உயிர் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் என்னை அறிமுக படுத்தினான்.அரவிந்தும் சரி நர்சிமும் சரி சாருவின் வாரிசுகள். நரசிம் ஒரு புத்தகம் வெளியிட போகிறார் அய்யனார் கம்மா. தலைவர் சாரு போல மிகப்பெரிய ஆளுமையாக வர வாழ்த்துக்கள்.நரசிம் புத்தக வெளியீடு பற்றி பார்க்க


என்ன பெரிய விஷயம் என்றால் சாரு நரசிம் சங்க இலக்கியம் பற்றி எழுதியதை அவர் பதிவில் எழுதி இருந்தார் அன்று நரசிம் என்னைப் பற்றி எழுதி இருந்தார்.இதைப் போல் உயிர் நண்பன் அரவிந்த் யோகி பற்றி எழுதி இருந்தான். அந்த யோகி பதிவில் என் பெயர் இடம் பெற்று இருந்தது.


எனக்கு முன்பெல்லாம் சாரு என்றாலே பிடிக்காது அவருக்கு இளையராஜா பிடிக்காது அதனால் பிடிக்காமல் இருந்தது. போக போக சாரு மீது ஒரு இனம் புரியாத அன்பு. மனிதர் என்றால் நேர்மை போலி இல்லாத அன்பு அப்பா வியப்பாய் இருக்கிறது.கமல் என்றால் எல்லாரும் பாராட்டுவார்கள் சாரு திட்டுவார் வெறும் விளம்பரத்திற்கு அல்ல,கமலிடம் அவர் கேட்கும் ஒரு கேள்விக்கும் கமலால் பதில் சொல்ல முடியாது."தலைவன் இருக்கிறான்" என்ற படத் தலைப்பு "உன்னைப் போல் ஒருவன்" ஆனது .

அது தான் சாருவின் ஆளுமை. existentialism fancy baniyan புத்தகம் படித்தேன்.அது சாருவின் வாழ்க்கை வரலாறு என்று வாசகனுக்கு தெரியும்.இருந்தாலும் ஓரினச்சேர்க்கை பற்றி எழுதி இருப்பார்.

பதிவு எழுதும் நான் கூட நல்லவன் என்று தான் வேஷம் போடுவேன். தன் செக்ஸ் வாழ்க்கையை பற்றி எழுத யாருக்காவது தைரியம் உண்டா.கமல் சொன்னால் அப்படியே கேட்காமல் அது தவறு என்று சுட்டிக்காட்டும் ஆளுமை உண்டா. மனுஷியா புத்திரன் என்றாலும் அவரையும் கிழிப்பார் என் சாரு. தன் புத்தகம் வெளி ஆக வேண்டும் என்று ஜால்ரா போட மாட்டார். அவருக்கு ஜால்ரா அடியாள் என்றால் நானும் சேர்ந்து கொள்வேன்.

நரசிம் பதிவு பற்றி சாரு எழுதி இருந்த போது அதில் என் அதிர்ஷ்டமாக நரசிம் எழுதிய வேறு பதிவில் நான் இருந்தேன். அதே போல் அரவிந்த் எழுதிய பதிவில் சாரு சொல்லி இருந்த பதிவில் என் பெயர் உண்டு . சாரு சொல்லித் தான் dostovesky தெரியும் வெண்ணிற இரவுகள் என்று பெயர் வைத்தேன்.சாரு பார்க்காத சாருவிடம் விடயம் கற்றுக்கொண்ட 'ஏகலைவன்'.

எவ்வளவு பெரிய எழுத்தாளர் நான் எழுதினால் அழகாய் பதில் போடுவார்,ஆனால் எனக்கு பின்னூட்டம் எழுதியவருக்கு பதில் போட கூட நேரம் இல்லை,யார் பெரிய ஆள். சாரு ஒரு ஆளுமை,அவரின் புது அடியாள் அடியேனே. ஒரு தலைக்கு வாலாக இருப்பது தப்பில்லை.
எனக்கு ராமகிருஷ்ணன் கூட பிடிக்கும் ஆனால் அவர் படிக்கும் போது மிக நல்லவர் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் சாரு ஒரு குழந்தை ஒரு காட்டாறு,சாருவை புரிந்து கொண்டாலே நீ அனைத்து இலக்கியம் படித்த மாதிரி.சாரு உலக இலக்கியத்தின் சாறு.அடியாளாக இருப்பதில் பெருமை.

சாருவை பிடிக்காதவர்கள் சாரு சொல்லும் உண்மையை ஜீரணிக்க முடியாதவர்கள் .இருந்தாலும் தினமும் அவர் வலை தளத்தை மேய்பவர்கள்.galileo வை பைத்தியம் என்று தான் சொன்னார்கள்.பாரதி அவர் சம காலத்தில் கோமாளியாகவே
பார்க்கப்பட்டார். சாரு கலியுக பாரதி. இலக்கியத்தில் அழகு என்பதை விட ஆணித்தனமான உண்மை இருக்கும்.ஒரு ஜால்ரா போட தெரியாதவனுக்கு ஜால்ரா போடுவது தப்பு இல்லை. அவரின் பெருமைக்குரிய அடி ஆள் வெண்ணிற இரவுகள் கார்த்திக்

Thursday 3 December 2009

குளிக்க முடியாத நீர் வீழ்ச்சி


விரலோரம்
நீர் வீழ்ச்சியாய் கவிதைகள் .....!
நடமாடும் நீர்வீழ்ச்சியாக
நீ மழையில்.....!

உன்னைப் பார்த்த மேகங்கள்
பொத்துக்கொண்டு வந்தது மழையாக
தன் காதலை சொல்ல...!

உன் மேல் விழுந்த நீர்
துளிகள் தரை இறங்குவது இல்லை...
நீ தட்டி விடும் வரை .......!
கோபப்பட்ட வெய்யில் நீரை
நிர்மூலம் ஆக்கியது ...!

நீர்வீழ்ச்சி பார்த்த நான் வீழ்ச்சி ....!

உணர்வு வரையும் ஓவியம்
















பெயர் நிலவன் நிலவு சூரியனின் ஒளியை உள் வாங்கி வெளுச்சம் கொடுக்கிறது.நிலவனுக்கு ராமேஸ்வரம் பார்வையற்றோர் கல்லூரி ஒளி ஊட்டிக்கொண்டிருந்தது.ஆம் அவன் பார்த்த ஒரே நிறம் கருப்பு. நிறங்களை பார்த்ததை விட உணர்ந்ததே அதிகம். சுளீர் என்று வெய்யில் அடித்தால் மஞ்சள் நிறம் உணர்வான்.மழை அடித்தால் வானத்தின் வர்ணம் கருப்பு என்று உணர்வான்.நெல் வாசம் முகர்ந்தால் பச்சை நிறம் உணர்வான். ரத்தம் வந்தால் சிகப்பு நிறம் உணர்வான். நிறத்தை பார்த்ததை விட உணர்திருந்தான்.

நிலவனுக்கு யாரவது அவனை கண் இல்லாதவன் என்று சொன்னால் பிடிக்காது. "ஐயோ பாவம் " என்ற சொல் பிடிக்காது.ஒருமுறை ஒருவர் அப்படி சொல்ல "கண் இருந்து மூலதனம் புத்தகம் படித்தாயா,ரஷ்ய இலக்கியம் தெரியுமா,எனக்கு தெரியும் " என்பான்."நான் பார்க்க மாட்டேன் உணர்வேன்,நீ உணர மாட்டாய் பார்த்து மட்டும் கொண்டிருப்பாய்" என்பான்."பார்வை இல்லாதவனுக்கு ஆயிரம் வர்ணம்" என்பான்.தத்துவங்கள் வந்து கொண்டே இருக்கும்,எழுதினால் இன்னொரு தாய் காவியம் படைக்க கூடிய திறமை அவனிடம் இருந்தது.

பார்வையற்றோருக்கான தேர்வு நாள். சூர்யா அவனுக்காக பரீட்சை எழுத வந்த பெண். ஒரு கால் ஊனம் .இலங்கை பெண்,அகதி முகாமில் இருந்து வந்த தமிழ் பெண். பெண் புலியாக சில காலம் இருந்த போது சண்டையில் அவள் கால் பரி போனது.நிலவனுக்காக பரீட்சை எழுத வந்திருந்தாள்.

பரிட்சையில் பரிச்சியம்,பின் வாரம் ஒரு முறை நிலவனை பார்க்க வருவாள். வாரம் நாட்களாக மாறின,நாட்கள் நிமிடங்களாக மாறின.நிமிடம் நொடியாய் மாறின. தினமும் நிலவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். நிலவனின் ஆளுமை அவளுக்கு பிடித்து இருந்தது. அவன் பார்வையாக மாறத் தொடங்கி இருந்தாள். அவனிடம் ஒரு நாள் " என்னைய கல்யாணம் ..." என்று ஆரம்பித்தாள். "என்னய பார்த்து பரிதாப பட்டு லவ் பண்றியா" என்றான். "இல்லை பிரமித்து தான் லவ் பண்றேன்" என்றாள்."எனக்கு பரிதாப படறது
பிடிக்காது" என்றான். "நான் பரிதாப படல லவ் பண்றேன்" என்றாள்.

இவனுக்கும் அவளை பிடித்து இருந்தது. அவளின் காலாக இவன் மாறினான், இவன் கண்ணாக அவள் மாறினாள். ஆம் நிலவிற்கு சூரியன் வெளுச்சம் கொடுத்தது.முதன் முதலாக இவன் காதல் நிறமான நீல நிறத்தை உணர்ந்தான்.அவன் உணர்வு நீலத்திலே வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தது. உணர்வு வரையும் ஓவியம் எவ்வளவு அழகானது.


பின்குறிப்பு :

இன்று "world physically challenged " நாள் அவர்களுக்கு அர்ப்பணிப்பு ....

Wednesday 2 December 2009

நண்பன் டா மாப்ள


















'நன்றி' சொன்னேன்
'பன்றி' என்றான் .....................
'மன்னித்து விடு' என்றேன் .
'இப்படி சொன்னதை மன்னிக்கவே முடியாது' என்றான் ..............
'மரியாதையாய் தானே பேசுகிறேன்' என்றேன்................
'மரியாதையாய் பேசுவது நட்பிற்கு மரியாதையை இல்லை' என்றான் ........
'உன் பெயர் என்ன ' என்று கேட்டேன்
'நண்பன் டா மாப்ள' என்றான் .....!

Tuesday 1 December 2009

நிலா சன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்























காடு அவன் வீடு.ஆம் இருள் ஒரு மலை ஜாதி வகுப்பை சேர்ந்தவன். பிறந்தது முதல் அவன் வானம் பார்த்ததை விட மேல் நோக்கி பார்த்தால் மரங்கள் பார்த்ததே அதிகம்.காட்டிலிருந்து ஒரு நாள் கூட அவன் மருத்துவனிடம் சென்றதில்லை.ஏதாவது அடி பட்டால் ஒரு இலையை பிடுங்குவான் சாரை பிழிவான்,வலி பறந்து ஓடும். ஜலதோஷம் பிடித்தால் தைல மரங்கள் இருக்கும் பகுதிக்கு செல்வான் இலையை முகர்ந்து பார்ப்பான் சரியாகி விடும். aids போன்ற பால் வினை நோய்க்கு கூட என்ன மருந்து என்று அவனால் சொல்ல முடியும்.அவனுக்கு தெரிந்த காட்டு சித்தருக்கு மூலிகைகளை ஆராய்ச்சி பண்ணுவதே வேலை . மரங்களுடன் பேசிக்கொண்டிருப்பார். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் அவரிடம் வருவார்கள்.

இருள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.இருளின் மனைவி நிலா,ஆம்
இருளுக்கும் நிலாவிற்கும் எத்தனை பொருத்தம்.மலை அவன் கடவுள்,அவன் அன்னை இவன் பிறக்கும் போது இவனை மலையிடம் ஒப்படைத்து விட்டு வான் நோக்கி சென்றால். அன்று முதல் மலை இவனை பார்த்துக்கொண்டிருந்தது.வயற்று வலி என்றால் ஓம இலை சாப்பிடுவான். முடி உதிர்ந்தால் கத்தாழை தலை மீது தேய்ப்பான்.மலையோடு சேர்ந்த மரமாக ஓட்டிக்கொண்டிருந்தான். மரம் ஒரே இடத்திலே நின்று கொண்டிருந்தது,இவன் நடந்து கொண்டிருந்தான் வித்யாசம் அவ்வளவே.

ஆம் வாழ்க்கை ஒரு கவிதையாய் சென்று கொண்டிருந்தது. அரசு சார்பாக சிலர் இருளை நோக்கி வந்தனர்.அரசு ஒரு சட்டம் போட்டிருக்கிறது,இலவச வீடு படிப்பு வேலை எல்லாம் தருகிறது,உங்கள் வாழ்க்கை தரம் உயரும் என்று சொன்னார்கள்.பக்கத்தில் உள்ள நகர் பகுதிக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள்.இவனுக்கு காட்டை விட்டு வர மனமில்லை.ஆனாலும் நிலா சொன்னாள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று,சரி என்று தலையை ஆட்டினான் .

நகர்ப்புறம் இவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரே புகை,இவனுக்கு உடம்பிற்கு ஒத்து வரவில்லை.மனிதர்களின் மனதும் புகை படிந்தே இருந்தது,அது இவன் மனதிற்கு ஒத்து வர வில்லை.மரங்கள் வளர்க்காமல் வீட்டிலே காகித பூக்கள் வளர்ப்பதை பார்த்தான் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை சுற்றி இப்போழுது மரங்கள் இல்லை,சுற்றி கட்டிடங்கள் அதற்குள் சிறை வைத்ததை போல உணர்ந்தான்.மானிடத்தின் இயற்க்கை கற்பழிப்பை மனதால்
உணர்ந்தான்.

மனிதர்கள் காலை வேலை முடித்து விட்டு அனைவரும் சிறைச்சாலைக்கு போய் ஒளிவதாக உணர்ந்தான். ஆம் அவன் சொன்ன சிறைச்சாலை பெயர் வீடு. பக்கத்தில் கொலை நடந்தால் கூட என்ன என்று கேட்காமல் வேலைக்கு செல்லும் கனவான்கள் பார்த்து வேடிக்கயாய் இருந்தது.அரசு அவனுக்கு ஆட்டோ பயிற்சி வழங்கி இலவச ஆட்டோ கொடுத்தது. இலவச வீடு, நிலா சன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.நிலாவிடம் இருளுக்கு நெருக்கம் இல்லை, இப்பொழுது எல்லாம் அவனுக்கு அம்மாவசை தான்.

இப்பொழுது எல்லாம் மருத்தவரிடம் செல்கிறான்.அவனுக்கு நோய் பல அறிமுகம் ஆகின. சிக்கன் குனியா ,swine போன்ற காய்ச்சல்களை பரப்பி விட்டு கல்லா நிரப்பிக்கொண்டிருந்தது மருத்துவத்துறை.

உடம்பு சரி இல்லை என்று நிலாவிடம் மருந்து கேட்டான். நிலா சன் டிவி பார்த்துக்கொண்டே இருந்தாள் .ஆம் இவன் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது

Saturday 28 November 2009

அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?


















அழகர்
"அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.ஆனால் காதலைச் சொன்னால் ஏற்பாளா,இல்லை நட்பாய் தான் பழகி இருப்பாளா.." என்று யோசித்துக்கொண்டிருந்தான் அழகர். "நாளைக்கு எப்படியாவது காதலை சொல்லி விட வேண்டும்" என்று முடிவு எடுத்துக்கொண்டான்.மறுநாள் காலை அவனுக்கு மட்டும் நான்கு மணிக்கே விடிந்தது.பல் விளக்கும் நேரம் முதல் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.கழிவறையில் கூட
கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
கல்லூரி சென்றான், சுடிதார் போட்டவர்கள் எல்லாமே அவளைப் போலவே தெரிந்தார்கள்.அனிச்சையாய் பார்த்தான் உண்மையிலேயே இப்பொழுது சுடிதாருக்குள் இருப்பது அவளே, பக்கத்தில் அவள் தந்தை அவன் வருங்கால மாமனார்.அவளைப் பெற்றதற்கு மனதார அவரிடம் நன்றி சொன்னான்.பக்கத்தில் சென்றான், கூடவே அவன் நண்பர்களும் சென்றார்கள். அவள் பொதுவாக எல்லாரையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்.இவனுக்கு சுருக்கென்று இருந்தது.அனைத்து நண்பர்களும் "வாங்கப்பா" என்று சொல்ல ....இவனுக்கு மனம் இல்லை என்றாலும் கிளியை போல் "வாங்கப்பா" என்றான்,மனதிற்குள் அழுது கொண்டே.......!பெண்கள் பார்வை புரியவில்லை அவனுக்கு.
ஆம் அவள் பெயர் ஸ்வேதா.

ஸ்வேதா

ஸ்வேதா தொலைக்காட்சியில் "கண்கள் இரண்டால்" பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.அந்தப் பாடலின் கதாநாயகன் பெயர் அழகர் என்பது முக்கியக் காரணம். ஆம் இவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
அவனைப் பார்க்கும் போது இவளுக்கும் வேதியியல் மாற்றங்கள்.அவள் தங்கை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர் அப்பா அலறிக்கொண்டு வந்து தங்கையை அடித்தார் "எவன் போட்டோ டீ அது" என்று அறைந்தார்.இவள் உறைந்து போய் நின்றாள்."இருபது வருஷமா வளர்த்திருகோம்,வலிக்குது டீ என்றார்" கோபத்தில் தொலைக்காட்சியை எடுத்து உடைத்தார் இவள் காதல் உடைந்து போனது .............
"அப்பா பீஸ்" என்றாள்...."நீயும் ஏதாவது காதல் கீதல்" என்றார் "இல்லை" என்றாள்..."சரி நாளைக்கு நானே வரேன்" என்றார். "சரி பா" என்றாள்.
அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அழகர் தன் நண்பர்களுடன் வந்தான். இவள் அவனை கண்ணோடு கண் வைத்து பார்கவில்லை. பொதுவாக இவர்கள் எல்லாம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.
எல்லாரும் "வாங்கப்பா" என்றார்கள் .அழகரும் சொன்னதை கவனித்தாள்.அவர் அப்பாவுக்கு சந்தோஷமாய் இருந்தது "அப்பா" என்று கூப்பிட்டது.காதல் பிரச்சனை,ஒரு காதலால் இன்னொரு காதல் உடைந்தது.அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?

Friday 27 November 2009

மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா .
















மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ...
நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்
அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்...

நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிருந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா.....ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை
encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????










முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.
கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் "வன்முறைக்கு வன்முறை தீர்வு " என்று குரல் கொடுப்பார்...................ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ...............மத்ததெல்லாம் ...........?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் ..............மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ....இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????
ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ..........
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக
உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது .எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ....என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ....!